சென்னையைப் பற்றி முழுமையான பதிவொன்று எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது, சென்னையின் வேலை வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளைப் பற்றிய விளம்பரங்களின் நம்பகத் தன்மையையும் பற்றிய பதிவாக இப்பதிவை எழுதுகிறேன்.
இளநிலை முடிந்ததும் வேலைக்குச் செல்வது என்று முடிவெடுத்து, சென்னைக்கு முழுமையாக என்னை தாரைவார்த்துக் கொடுத்த இரண்டாம் நாள் நண்பன் மணிக்குமாரிடம் இருந்து ஒரு போன்.
"ஏல இப்பதான பஸ்ல ஒரு விளம்பரம் பார்த்தேன் மாச சம்பளம் பதினெட்டாயிரம் ரூபா, சனி ஞாயிறு மட்டும் வேல பார்த்தலே ஒன்பதாயிரம் ரூபா, அவங்களுக்கு போன் செஞ்சு கேட்டேன் கோயம்பேடு பக்கத்துல ஒரு ஆபிஸ்க்கு வார சொன்னாங்க உடனே கிளம்பி வா".
நான் திருவள்ளூரில் இருந்து கிளம்பி கோயம்பேடு வர வேண்டும், குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். மேலும் இது போன்ற விளம்பரங்களை சென்னையின் பல பேருந்துகளிலும், நிறுத்தங்களிலும் பலமுறைப் பார்த்துப் பழக்கபட்ட எனக்கு இவ்வேலையின் மீது நம்பிக்கை இல்லை. இருந்தும் அங்கு என்ன வேலைக்கு தான் ஆள் எடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் கிளம்பிவிட்டேன். சென்னையில் வேலை தேடி அலைந்த முதல் பயணமும் முதல் நாளும் அது தான். இருவரும் வழி தேடி அந்த அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தோம், அந்த வேலைக்கு படிப்பும் வயதும் தடை இல்லை என்பதால் வயது படிப்பு வித்தியாசமின்றி பலரையும் சந்திக்க முடிந்ததது. குறைந்தது நூறு பேராவது வந்திருப்பார்கள்.
வேலை பற்றிய சொற்பொழிவு ஆரம்பமாகியது. ஆற்றியவர் கரும்பலகையில் படம் ஒன்று வரையும் பொழுதே அது இன்ன வேலை என்று கண்டுகொண்டேன், காரணம் அப்படி படம் வரைந்து பாகம்பிரித்த ஒருவரிடமிருந்து வெகு சமீபத்தில் தான் தப்பி இருந்தேன். நீங்கள் இரண்டு பேரை சேர்த்துவிட வேண்டும், அந்த இருவர் மேலும் இருவரை , அந்த மேலும் இருவர் மேலும் மேலும் இருவரை என்று முடிவில்லாத ஒரு நீட்சியாக செல்லும். நம் கீழ் ஆட்கள் சேரச்சேர நமக்குப் பணமும் சேரும். ஆனால் நீங்கள் வெறும் எட்டாயிரம் ருபாய் முன்பணமாகக் கட்டினால் போதும். இது எல்லாம் நடக்கிற காரியமா ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று அரங்கின் வெளியில் வந்து அவனை முறைத்தேன் (இது பற்றி O4P என்று சுவையான குறும்படம் ஒன்று உண்டு) .
"எனக்கும் இப்படித் தான் நடக்கும்னு தெரியும். நாம இப்ப மவுன்ட் ரோடு போறோம், அங்க ஒரு கால் செனட்டர். மணி கூட அங்க தான் நிக்கான்" கொளுத்தும் மதியவெயில் காலை உணவு கூட உண்ணாமல் மவுன்ட் ரோடு நோக்கி கிளம்பினோம். அங்கே நண்பன் மணிகண்டன் காத்திருக்க அந்த அலுவலகத்தினுள் நுழைந்தோம். ஆனால் அது ஒரு கம்பனி போல் இல்லை கற்றுக் கொடுக்கும் இடம் போல் இருந்த்தது. நவநாகரீகமாக உடை அணிந்த மூன்று பெண்கள் ஆங்கிலத்தையே ஆடையாக உடுத்தியவர்கள் எங்களிடம் வந்தார்கள். எங்களை ஆங்கிலத்தில் ஐந்து நிமிடம் பேசச் சொன்னார்கள்.
மணிகுமரன் பேசினான், நான் ப்பே ப்பே பேசினேன்.. மணிகண்டனோ ப்பே ப்பே ப்பே பேசினான். தலைக்கு பத்தாயிரம் ருபாய் பணம் செலுத்துங்கள் உங்களை ஆங்கில அருவிகளாக மாற்றுகிறோம் என்றார்கள். வந்ததற்கு பதிவுக் கட்டணம் ஐநூறு ருபாய் என்றார்கள். இரண்டு மணியும் சேர்ந்து இருநூறு ருபாய் கட்டினார்கள். நான் மறுத்துவிட்டேன். முறைத்து வழி அனுபினர்கள். வெளியில் வந்தததும் அவனை மேலும் முறைக்க " நீ சேர மாட்டேன்னு எனக்கும் தெரியும்ல நாங்க ரெண்டு பேரும் இங்க சேர போறோம், உன்ன கூப்டது வேற ஒரு விசயத்துக்கு" என்று கூறி ஒரு கி.மீ என்னையே நடத்தியே கூட்டிச் சென்றான் . சென்னையின் மிகப் பிரபலமான பிரமாண்டமான திரையரங்கான சத்தியம் தியேட்டர் தான் அவன் என்னை அழைத்துச் சென்ற இடம். "எதுக்கு இப்போ இங்க கூட்டிட்டு வந்ததே" என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில். "சென்னைக்கு வந்தா கண்டிப்பா சத்தியம்க்கு போகணும்னு சொன்ன அதான் நேத்தே டிக்கெட் எடுத்து வச்சிட்டேன், படத்துக்குன்னு கூப்டா திருவள்ளூர்ல இருந்து நீ வரமாட்டே அதான் இப்படி".
என் படிப்பு முடிந்திருந்த நேரம் கணினித் துறை அதாள பாதாளத்தில் விழுந்திருந்தது. மீண்டும் மூன்று வருடம் படிப்பது என்று முடிவாகியது. இங்கே தான் ராகுல் நண்பனான். இருவரும் அருகருகில் அமர்ந்திருக்கும் வேளைகளில் எல்லாம் பகுதி நேர வேலை தேடுவது குறித்து பேசிக் கொண்டிருப்போம். டெக்கான் கிரானிகிள், தினமலர், தந்தி என்று அந்த வார தினசரிகளை எல்லாம் சேகரிப்போம், வார இறுதியில் குறித்து வைத்திருந்த அலுவலகங்கள் சென்னையின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து சென்றுவிடுவோம். நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், தி நகர், அடையார், வளசரவாக்கம். ஆழ்வார்பேட், மயிலாப்பூர், வடபழனி இன்னும் இன்னும் பேருந்து செல்லும் தடங்களில் எல்லாம் வேலை தேடி பயனிதுள்ளோம், ஆனால் வேலை கிடைத்ததா என்றால் இந்த மாதிரி வேலை தேடி அலையக்கூடாது என்ற அனுபவம் மட்டுமே கிடைத்தது.
அந்த விளம்பரங்களில் இருக்கும் வேலைகளைப் பற்றிய சிறுபார்வை. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன். அமெரிக்க மருத்துவர்கள் மருத்துவக் குறிப்புகளை ரெகார்ட் செய்து கொள்வார்கள். அப்படி ரெகார்ட் செய்த ஆடியோ குறிப்புகளை எழுத்துகளாக மாற்றி மீண்டும் அமெரிக்கர்களிடம் கொடுக்க வேண்டும். இதனை அம்பத்தூரில் இருக்கும் டெல் பெரோட் நிறுவனம் முழுமையாக செய்துவருகிறது நல்ல சம்பளமும் கொடுகிறது. இந்நிறுவனம் அடிக்கடி ஆள் எடுக்கும் நம்பகமான கம்பெனி. இதே வேலையை நீங்கள் வீட்டில் இருந்தும் பகுதி நேரமாக செய்யலாம் என்று விளம்பரம் கொடுப்பவர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் தான். ஒரு காலத்தில் நம்பகமான பகுதிநேரத் தொழிலாகத்தான் இவ்வேலை இருந்திருகிறது, இப்போது இல்லை என்பதே உண்மை. இவ்வேலைக்கு நாம் செலுத்த வேண்டிய முன்பணம் மிக மிக அதிகம்.
அடுத்தது கூகிள் ஆட்ஸ் (ADDS) அல்லது ஆட்வோர்ட்ஸ் (ADD WORDS).இரண்டின் செயலும் ஒன்று ஆனால் செயல்படும் விதம் வேறு வேறு. உங்களுக்கு என்று ஒரு கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து விடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியது தென்படும் கூகிள் அட்ஸ் மற்றும் வோர்ட்ஸ்களில் க்ளிக்க வேண்டியது தான். கேட்பதற்கு எளிதாக இருக்கும், ஒவ்வொரு க்ளிக்குகளும் டாலர்களாக மாறும் என்றெல்லாம் சொல்லுவார்கள், ஆனால் இவர்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பமெல்லாம் கூகிளிடம் உள்ளத்தால் இதுவும் ஏமாற்று வேலையே.
அடுத்தது புத்தகங்களை மின் வடிவத்திற்கு மாற்றும் வேலை. அந்தக் காலப் பழைய புத்தகங்களை ஸ்கேன் செய்து உங்களிடம் கொடுத்து விடுவார்கள் அவற்றில் இருக்கும் பிழைதிருத்தி எழுத்துகளாக மாற்றி மீண்டும் கொடுக்க வேண்டும். இதற்காக பல e publishing கம்பெனிகள் சென்னையில் இருந்தாலும் வீடுகளில் வைத்து பகுதி நேரமாக செய்யுங்கள் என்று சொல்லும் அனைவருமே ஏமாற்றுபவர்கள் தான். மின் புத்தகமாக மாற்றிக் கொடுப்பதாகக் கூறி எனது நண்பர்களின் முப்பதாயிரம் ரூபாயை ஏமாற்றியது தெரியவந்த பொழுதுதான் பகுதிநேர வேலை தேடுவதற்கான முற்றுப்புள்ளியை வைத்தோம்.
ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்வதற்க்கான காரணங்கள்
இவர்கள் அனைவருமே இடைத்தரகர்கள்.
நம்மிடம் வேலை வாங்கிகொள்வார்கள், நீங்கள் செய்ததது நிரகரிப்பட்டது என்று கூறி நம்மை ஏமாற்றிவிட்டு அதனால் அடைந்த லாபத்தை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
நாம் செய்தது நூற்றுக்கு நூறு சரியாக இருந்தாலும் தரக்கட்டுபாடு இல்லை அதனால் பெயில் ஆகிவ்ட்டது மேலும் பணம் கட்டுங்கள் அடுத்த ப்ராஜெக்ட் தருகிறோம் என்று மேலும் மேலும் பணம் கறக்கப் பார்ப்பார்கள்.
முன்பணம் வாங்காமல் வேலையைப் பற்றி பேசவே ஆரம்பிக்க மாட்டார்கள்.
இப்படி வேலை தேடி அலைந்ததால் நேரம் பணம் விரயமானது மட்டுமே மிச்சம், ஆனால் சென்னையை சுற்ற ஒரு வாய்பாய் அமைந்தது என்ற அளவில் மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான். அப்படி என்றால் சென்னையில் வேலையே கிடைக்காதா என்ற ஒரு கேள்வியும் எழலாம். முதுநிலை படிப்பு முடியும் நேரத்தில் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தேன், குறைந்த சம்பளத்தில் படித்த படிப்பிற்கு சம்மதமே இல்லாத வேலை, மிகக் குறைந்த சம்பளத்தில் கிடைத்தது. நானும் எனது மற்ற இரு நண்பர்களும் அங்கு தான் ஒரு வருடத்திற்கு வேலை பார்த்தோம். மிக அதிகமான விசயங்களைக் கற்றுக் கொடுத்த வேலை அது. தகுதியான வேலை கிடைக்கும் வரை உங்களுக்கு சற்றும் தகுதி இல்லாத வேலை பார்க்க நீங்கள் தயாரா உங்களுக்கு வேலை கொடுக்க சென்னையும் தயார். இருந்தும் வேலைஇல்லாத் திண்டாட்டம் அதிகமாகி வரும் சென்னையில் வேலை இல்லா இளைஞர்களும் அதிகமாகி வருகிறார்கள் இதற்கு அரசாங்கம் என்ன வழி செய்து கொடுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் கேள்விக் குறியாகவே உள்ளது.
வெகு நாட்களுக்குப் பின் எனது முகநூலில் நான் எழுதிய இரண்டு வரிகள்
என்னால் தோற்க முடியும் என்றால்...
வெல்லவும் முடியும்.
Tweet |
///என்னால் தோற்க முடியும் என்றால்...
ReplyDeleteவெல்லவும் முடியும். ///
உணர்பூர்வமான உண்மையான வரிகள்!
பதிவு மிக அருமை சீனு! ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துகொண்டுதான் நமக்கான வேலேயை தேட வேண்டும்! ஆரம்பத்தில் நான் பார்த்த வேலை கூரியர் சர்வீசில் லெட்டர் டெலிவரி :)
சூடான முதல் வருகைக்கும் சுவையான உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா...
Deleteநாம் செய்யும் வேலைகளை விரும்பி செய்தாலே உயர்ந்த நிலைக்கு வருவோம் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம் என்று நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது தோழா
தட்டிக் கொடுத்து பாராட்டியதற்கு நன்றி
இதை படிக்கும் பொது நான் வேலை தேடி சென்னையை சுற்றியது ஞாபகம் வருகிறது அப்படி அலைந்து நல்ல வேலையும்(HYNDAI) கிடைத்தது நான் தான் அங்கு வேலை செய்யாமல் வந்து விட்டேன்...கிட்ட தட்ட பத்துக்கும் மேலான நிறுவனதில் வேலை பார்த்தேன் வேலை செய்து கொண்டு இருக்கும் போதே வேலை பிடிக்காமல் அடுத்த நிறுவனத்திற்கு வருவேன் அங்கு சேர சில காலம் ஆகும் அப்போது தான் நானும் புரிந்து கொண்டேன் வேலை பார்த்து கொண்டு தான் அடுத்த வேலையை தேடவேண்டும் என்று....
ReplyDeleteநண்பா வேலையை விடத் துணிபவர்கள் தான் தான் பின் நாளில் மிகப் பெரிய சாதனைகள் புரிவார்கள் என்று என் வாத்தியார் சொல்லுவார்.... பெரிய மனிதனாக வாழ்த்துக்கள்
Deleteஅந்த O4B YOUTUBEல் பார்த்து இருக்கேன்..அதை போல வேலையை எண்ணி யாரும் ஏமாறவேண்டாம்
ReplyDeleteஇப்படியான அறிவிப்புகளின் பின்னணி என்னவாக இருக்கும் என்று நானும் எண்ணியதுண்டு. தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. இப்போ உங்க மூலமா விரிவாத் தெரிஞ்சுக்கிட்டேன் சீனு. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு. மேலே நண்பர் வ.சுவடுகள் குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகளும் என் மனதையும் தொட்டு அதில் இடம்பிடித்தன. நன்று.
ReplyDelete//நன்று// என் பள்ளி ரேங்க் கார்டில் இந்த வார்த்தைகளைப் பார்த்ததே கிடையாது. எப்போதுமே சுமார் தான். வாத்தியாரே நீங்கள் நன்று என் சொல்லி இருப்பது மகிழ்வே... மிக்க நன்றி
Deleteபல பேர் அலுத்துப் போன விடயத்தைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அதுவும் அந்த இடைத்தரகர்கள் வேலை யப்பா ஆள விட்டுடுங்க........
ReplyDeleteபதிவின் ஹைலைட்டே அந்த முக நூல் இரட்டை வரிகள் தான்.....
// பல பேர் அலுத்துப் போன விடயத்தைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள் எனக்குத் தெம்பளித்த வரிகள் நண்பா... மிக்க நன்றி தங்களுக்கும் உற்சாகமூட்டும் உங்கள் வருகைக்கும்
Deleteஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
ReplyDeleteவிளக்கமாக சொல்லி உள்ளீர்கள் நண்பரே...
பாராட்டுக்கள்...
நன்றி…
(த.ம. 5)
தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்தும் உங்களுக்கு மகிழ்வான நன்றிகள் சார்
Deleteதோல்விதானே வெற்றியின் முதல் படி.... எனவே தோற்கத் துணிபவர்கள்தான் வெல்கிறார்கள்! உங்கள் அனுபவங்கள் படிப்பவர்களுக்குப் பயனுள்ளவை.
ReplyDelete// உங்கள் அனுபவங்கள் படிப்பவர்களுக்குப் பயனுள்ளவை.// பயனுள்ளவையாக இருந்த்தது என்மதில் மட்டற்ற மகிழ்ச்சி சார்... வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி
Delete/////என்னால் தோற்க முடியும் என்றால்...
ReplyDeleteவெல்லவும் முடியும். /////
உண்மையான வரிகள்.
நல்ல பகிர்வு சீனு.. வாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் என்னை உற்சாகப்படுத்திய பின்னூட்டத்திற்கும் நன்றி சார்
Delete///என்னால் தோற்க முடியும் என்றால்...
ReplyDeleteவெல்லவும் முடியும். ///
அருமை நண்பா.இந்த நம்பிக்கை தானே வாழ்தலின் பிடிப்பு.இத பார்த்ததுமே ஞாயிறு தொழில்தருனர் பத்திரிகை முன் நான் தவம் கிடப்பது அப்படியே நினைவு வருகிறது.முதலாவது படம் அருமை.சிறப்பான ஒரு விழிப்புணர்வு சொந்தமே!என் இகிய வாழ்த்துக்கள்."சென்னைச்சொக்கன்" ஐயாவின் வலைச்சரத்தில் தங்களம் தளம் கண்டேன்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.
//இந்த நம்பிக்கை தானே வாழ்தலின்// நிச்சயமாக தோழி .. சொக்கன் அய்யா தங்களையும் அறிமுகப்படுத்தியது குறித்து மகிழ்ச்சி. வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி
Deleteம்ம்ம்... சென்னையில் மட்டுமல்ல. வேலைவாய்ப்பு தேடுதலில் எல்லா இடங்களிலுமே இப்படித்தான். வியாபாரிகள் பணம் கறக்கப் பார்க்கிறார்கள். நாம் மிச்சப் படுத்தத் துடிக்கிறோம். இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் நமது வாழ்க்கையே. நல்ல பதிவு தோழா.
ReplyDelete//இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் // அருமை சார் ... அருமையான பின்னூட்டத்திற்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி
Deleteமுகநூல் வரிகள் அருமை! சென்னை அனுபவம் மிகவும்சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉற்சாகமளிக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார்
Deleteஅருமையான தொகுப்பு. எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன். O4P நானும் பார்த்திருக்கிறேன். நன்கு கலாய்த்திருப்பார்கள்.
ReplyDeleteஅனுபவப் பகிர்வு அருமைப்பா. நிறையப் பேருக்கு உங்களின் அனுபவங்கள் பயன்படும். நல்லது.
ReplyDeleteபயனான பதிவு நிறைய நண்பர்களின் பணமும் நேர விரயமும் தவிர்க்கப்படும்.நானும் ஒரு முறை என் நண்பனுக்காக சென்றேன் same blood..என் படிப்புக்கு நான் தேடியது திருப்பூர் கோவை விளம்பரங்கள்..ஆனால் போகவில்லை. கடைசி வரி நச்.
ReplyDelete//என்னால் தோற்க முடியும் என்றால்...
ReplyDeleteவெல்லவும் முடியும். //
சூப்பர் நண்பா.. கலக்குற..
அனுபவங்களால் கற்றுக் கொண்டவற்றை ,மற்றவர்க்கும் பயன்படும் விதத்தில் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.முகநூல் பகிர்வு சூப்பர்
ReplyDelete//என்னால் தோற்க முடியும் என்றால்...
ReplyDeleteவெல்லவும் முடியும். //
தங்களது முக நூல் பகிர்வு அருமை அண்ணா!
அருமையான பகிர்வு அண்ணா! பகிர்வுக்கு நன்றி!
நானும் ஒருமுறை இதில் அனுபவப்பட்டிருக்கிறேன்! இப்படி பகுதி நேர வேலை வாய்ப்பு செய்தியை பார்த்துவிட்டு ஒருமுறை நான் எனது தோழிகளுடம் அந்த அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்! வேலை என்னவென்றால் பல்வேறு நிறுவனத்தின் விளம்பரத்தை பலருக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும் எவரேனும் அவ்விளம்பரத்தை சொடுக்கி பதிவு செய்தால் நமது கணக்கில் பணம் சேரும்! இதற்கும் முன்பணமாய் 2000 ரூபாய் கேட்டார்கள்! ஆனால் சென்னையில் அல்ல எனது ஊரில்!
same to you அண்ணா... சென்னைக்கு வந்து இதே அனுபங்களை பெறும் பல இளைஞர்களில் நானும் ஒருவன்...ஒரு மாதத்துக்கு முன் நானும் என் நன்பர்களும் (மூன்று பேர்)சென்னைக்கு வந்த புதிதில் இப்படித்தான் இதே பகுதிநேர வேலைகளை தேடி வெறுத்து. ஒரு வழியாக ஒரு நல்ல வேலை கிடைத்து கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளோம். ஒரு மாதத்திற்கு முன் உங்கள் வலைப்பூ அறிமுகமாயிருந்தால் சென்னையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள நோட்டீசுகளை படித்து வெட்டியாக சுற்றியிருந்திருக்க மாட்டோம்...
ReplyDeleteசூப்பர் பதிவு.. இது சென்னையில் மட்டும் இல்லை, எல்லா ஊரிலும் எல்லா அரசு பேருந்துகளிலும் இந்த மாதிரி விளம்பரம் இருக்கும்.. பொழுதுபோகலைனா நானும் உங்கள மாதிரி இப்படி ஒரு மீட்டிங்குக்கு போலாம்னு இருக்கேன்.. “பணக்காரனாவது எப்படி?”னு வடிவேலு ஒரு படத்தில் மீட்டிங் வைப்பாரே அது மாதிரி ஒரு மீட்டிங் :P
ReplyDelete
ReplyDeleteஎன்னால் தோற்க முடியும் என்றால்...
வெல்லவும் முடியும்.
Chance illa machi superr line ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்ன மாதிரியே நீயும் அனுபவ பட்டிருக்க நண்பா நானும் நீ எழுதி இர்ருக்கிற எல்லாமே பண்ணி இருகன் நா மட்டும் இல்ல நெறைய பேர் இப்படி தான்
ReplyDeleteஎன்ன மாதிரியே நீயும் அனுபவ பட்டிருக்க நண்பா நானும் நீ எழுதி இர்ருக்கிற எல்லாமே பண்ணி இருகன் நா மட்டும் இல்ல நெறைய பேர் இப்படி தான்
ReplyDelete