சென்னையின் சாலை வழிகளை முதன்முதலாய் பார்ப்பவர்களுக்கு வியப்பை விட பயமே அதிகம் வரும். காரணம் எந்த சாலை எங்கு போய் விடும்? ஒருவேளை தவறான வழியில் சென்றுவிட்டால் சரியான பாதையைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பன போன்ற பல குழப்பங்களை எழுப்பிவிடும். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் பச்சையப்பன் கல்லூரியின் வலது பக்கம் திரும்பி அண்ணாநகர் அல்லது வில்லிவாக்கம் செல்லும் நியூ ஆவடி சாலையை எந்தவிதமான வழித்துணையும் இல்லாமல் கடந்துவிடுங்கள் பார்க்கலாம். அந்த சாலையில் நீங்கள் சரியான வழியை மட்டும் தவறவிட்டீர்கள் என்றால் வடிவேலு ஒருபடத்தில் சொல்வது போல 'மாப்ள எங்க சுத்தினாலும் ஒரே இடத்துக்கு தான் வந்து நிக்குது மாப்ள அவ்வ்வ்வவ்வ்வ்' என்பது போலத் தான் புலம்ப வேண்டி இருக்கும். சென்னையின் சாலை வழிகளை சுலபமாக கடப்பதற்கான வழிகளைச் சொல்வதற்காக இப்பதிவை எழுதவில்லை. அப்படி ஒருவேளை எழுதிவிட்டேன் என்றால் இப்பதிவின் தலைப்பில் இருப்பது சொற்பிழையோ அல்லது எழுத்துப்பிழையோ என்று நீங்கள் கருதியது உண்மையாகி விடும்.
அலுவல் நிமித்தம் தினசரிப் பயணிக்கும் ஒருவனுக்கு அல்லது வஞ்சிக்கப்பட்ட ஒருவனுக்கு சென்னையின் சாலை வழிகள் கொடுக்கும் வலிகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்காகத் தான் இப்பதிவு. அது என்ன சென்னையின் சாலைகள்! தமிழகத்தின் எல்லா சாலைகளும் மோசமாய் தான் உள்ளது என்று கேட்பவராயிருந்தால் உங்களுக்காகத்தான் அடுத்த வரி. எப்போது உடையுமோ என்பது தெரியாமல் அளவுக்கு அதிகமாக காற்று ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலூனிற்கும் சென்னைக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. காரணம் உங்கள் குடும்பத்தில் ஒருவரோ, உங்கள் குடும்பம் சார்ந்த ஒருவரோ சென்னையில் இல்லாமல் இருக்க வாய்ப்பும் இல்லை. அப்படியிருக்க தமிழகத்தின் இதயம் மூளை என்றெல்லாம் சொல்லப்படகூடிய சென்னைக்கே வைத்தியம் பார்க்காத அரசியல் வியாதிகள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கருதுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஆகவே சென்னையின் சாலை வலிகளை தமிழகம் தெரிந்துகொண்டு தான் ஆக வேண்டும். தமிழகம் தெரிந்து கொள்வதற்க்கான காரணத்தை இறுதியாக சொல்கிறேன். இல்லை இறுதியில் நான் சொல்ல வந்தததை நீங்களே உறுதியாகச் சொல்வீர்கள்.
தமிழகத்திலேயே அளவில் மிக சிறிய மாவட்டம் சென்னை. சென்னையின் புறநகர் சென்னையை விட மிகப் பெரியது, சொல்லப்போனால் பெரியதாகிக் கொண்டும் உள்ளது. இத்தகவலின் உதவியோடு புறவழிச்சாலைகளின் வழியாக சென்னைக்குள் நுழைவோம். தாம்பரம் ஆவடி பூந்தமல்லி செங்குன்றம் திருவெற்றியூர் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியன சென்னை புறநகர் பகுதிகளில் முக்கியமானவை. இவை இல்லாவிட்டால் சென்னை என்ற இதயத்தின் பலூன் எப்போதோ வெடித்திருக்கும். இதயம் வெடித்து விடக்கூடாது என்ற எண்ணம் மகிழ்ச்சி தான், ஆனால் புறநகர் பகுதிகளில் வசிப்போரின் நுரையீரல் வெடித்து விடக்கூடாது என்ற எண்ணம் ஏனோ அரசாங்கத்திற்கு வராமல் போய்விட்டது.
காலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணி வரை சென்னை மாநகருக்குள் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் தவிர்த்து மற்ற எல்லா புறநகர்ப் பகுதிகளிலும் கனரக வாகனங்களின் போக்குவரத்தும் இவற்றால் ஏற்படும் தூசியும் இருந்து கொண்டே இருக்கும். முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் இருந்து கொண்டே இருக்கும். சென்னைப் புறநகர் பகுதிகள் மக்கள் வசிக்க இயலாத இடமாக மாற இன்னும் வெகுநாட்கள் ஆகப் போவது இல்லை. கனரக வாகனப் போக்குவரத்தும் முறையாகப் பராமரிக்கப் படாததால் ஏற்படும் தூசியும் புழுதியும் மட்டுமே அதற்க்குக் காரணமாக அமையும். குறைந்தது புறநகர் பகுதிக்குள் நுழையும் முன் எச்சரிக்கை ஆஸ்மா நோயாளிகள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்புப் பலகையையாவது தோரணம் கட்டித் தொங்க விட்டிருக்கலாம்.
சாலைகளின் நிலை தான் இப்படி என்றால் தெருக்களின் நிலையோ படுகேவலமாக இருக்கும். அணைத்து புறநகர் பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை மற்றும் சென்னை குடிநீர் வேலை நடை பெற்றுக் கொண்டுள்ளது. பாதாளச் சாக்கடைக்காக தெருவின் வலது பக்கத்தையும், மெட்ரோ வாட்டருக்காக இடது பக்கத்தையும் தோண்டியவர்கள் நடுபகுதியை மேடாக்கி பாதி வேலை முடிந்த நிலையிலேயே விட்டுச் சென்று விட்டார்கள். ஒழுங்காக மூடியும் மூடாத குழிகள் மழைக் காலத்தில் சதுப்பு நிலப் பிரதேசம் போலவும், வெயில் காலத்தில் சகாரா பாலைவனம் போலவும் காட்சியளிக்கும். வெயில்காலஅவலத்தையாவது பொறுத்துக் கொள்ளலாம், மழைக் கால கஷ்டங்களை மட்டும் தாங்கவே முடியாது.
வேலைக்கு பள்ளி கல்லூரிக்கு போகிறவர்கள் என்ன நிற உடை அணிதிருந்தாலும் அது சேற்றின் நிறத்திற்கு மாறிவிடும். ஷூ பாலிஷ் போடும் வேலையை சேறு படிந்த தெருக்கள் பார்த்துக் கொள்ளும். வயதானவர்களின் நிலையும், நடக்க முடியாதவர்களின் நிலையும் மட்டுமே பரிதாபத்திற்குரியது, வழுக்கி கீழே விழுந்தவர்களை தூக்கிவிடுவதற்கும் விழப் போகிறவர்களை விழாமல் பிடித்துக்கொள்ளவும் அரசாங்கம் தனித் துறையை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். பாவம் என் போன்ற இளைஞர்களுக்கு அரசாங்க உத்தியோகமாவது கிடைக்கும். பிற்காலத்தில் தமிழகம் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டத்தை அரசாங்கம் செயல் படுத்தமுயலும் போது இத்துறையை தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வேலை இல்லா திண்டாட்டத்தை கணிசமான அளவில் குறைக்கலாம். பல வயதானவர்களின் விலா எலும்பு உடையாமலாவது பார்த்துக் கொள்ளலாம். திட்டம் முழுமை அடைந்ததும் இவர்கள் அனைவரையும் வேலையை விட்டு தூக்கி விடலாம், கேவலம் இவர்களும் சாலைப் பணியாளர்கள் தானே.
பாதாள சாக்கடை மற்றும் சென்னை குடிநீர் திட்டம் நிறைவடையாததன் காரணம் ஒப்பந்ததாரர்களிடம் இருக்கும் நிதிப் பற்றாகுறை. அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கவில்லை அது தான் காரணம் என்பார்கள், பாவம் அவர்களாலும் என்ன செய்ய இயலும் அரசு ஒதுக்கும் நலத் தொகை அவர்களின் நலனிற்கே போதவில்லை. ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று கேட்டால் மக்களின் வரிப் பணம் போதவில்லை, இலவசங்கள் அளித்தே வரிப் பணம் முழுவதும் தீர்ந்து விட்டது என்பார்கள். ஆக குறை அரசின் மீதும் இல்லை கான்ட்ராக்ட்காரர்கள் மீதும் இல்லை. இலவசம் பெற வரிப் பணம் செலுத்தி விட்டு ரோடு போட ரோட்டின் அடியில் சாக்கடை போட வரி செலுத்தாத மக்களே இது அனைத்திற்கும் காரணம். இவ்வளவையும் செய்துவிட்டு அரசியல்வாதிகளை திட்டி என்ன பயன். கடந்த நான்கு வருடங்களாக சென்னையில் மழையின் அளவு குறைவதற்கும் புறநகர்வாசிகள் தான் காரணம், தாங்கள் சேறு சகதியில் நடக்கக் கூடாது என்பதற்காக வருண பகவானின் வேலையையும் செய்ய விடாமல் தடுக்கும் இம்மக்களை என்னவென்று சொல்வது. இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் அரசியல்வாதிகளின் நிலை தான் பரிதாபமாக உள்ளது, நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பார்களா இல்லை நீர்ப் பற்றாக்குறையை சமாளிப்பார்களா?.
தெருவிற்கே ரோடு போட நிதி இல்லை இவர்களா சாலையை பராமரிக்க நிதி ஒதுக்கப் போகிறார்கள். பூந்தமல்லியில் இருந்து குன்றத்தூர் வழியாக தாம்பரம் செல்லும் புறவழிச் சாலைதான் சென்னையிலேயே மிக மிக குறுகலான சாலை. இங்கே இடையில் எதாவது ஒரு வாகனம் பழுதுபட்டு நின்றாலோ இல்லை எதிரில் வந்த வாகனத்துடன் மோதி விபத்து நேரிட்டு நின்றாலோ அன்றைய தினம் பயணம் முழுவதையும் அந்தச் சாலையிலேயே கழிக்க வேண்டியது தான். பத்து நிமிட நேரத்தில் குறைந்தது ஐந்து கி.மீ தூரத்திற்கு குறையாமல் வாகனகளின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை எல்லாம் விட முக்கியமான அல்லது வருத்தமான விஷயம் பேருந்து ஓட்டுனர்களின் நிலை தான்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குள் அரைமணி நேரம் வண்டி ஓட்டினாலே கைகள் வலியெடுக்க ஆரம்பித்துவிடும், அடிகின்ற வெயிலில் மூளை குழம்பி விடும். எப்போது எவன் குறுக்கே பாய்வான் என்று தெரியாது, எந்த லாரிக்காரன் முந்தும் பொழுது கண்ணாடியை உடைப்பான் என்று தெரியாது, எவனெல்லாம் ஊட்ல சொல்லிகினு வருவான்னும் தெரியாது அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு வாகனம் ஓட்டும் மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் தான். நல்லவேளையாக அவர்களுக்கு சம்பளம் தரவாவது அரசாங்கத்திடம் நிதி உள்ளதே அதை நினைக்கும் பொழுது சற்று ஆறுதலாகவே உள்ளது.
ஒரு பைக்காரன் குறுக்கே வந்து விழ திடிரென பிரேக் போட்ட லாரியின் பின்னால் தொடர்ந்து வந்த நான்கு லாரிகள் சொருகிக் கொண்டு நின்ற காட்சியை ஆவடியில் பார்த்துள்ளேன். அதற்குக் காரணம் குறுகலான சாலையும், கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசலும், ஒழுங்காக வண்டி ஓட்டத் தெரியாத முட்டாள்களுமே ஆவர். சென்னையின் புறநகரில் தான் இந்த நிலை என்றால், மெட்ரோ ரயில் வேலைகளால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும் சென்னை மாநகரமோ இன்னும் பரிதாபமாய் உள்ளது. ஊருக்குள் மாற்றப்பட்ட வழித் தடங்களால் எத்தனை தடங்கல் ஏற்படும் என்பது ஒட்டுபவனுக்கே தெரியும். சென்னையின் பூர்வகுடிகளுக்கே புதிய சாலை வழிகள் குழப்பத்தை உண்டு பண்ணும் நிலையில் புதிதாய் செல்லும் நமக்கெல்லாம் எம்மாத்திரம் .
இதுபோன்ற வரிசையான பிரச்சனைகள் பலவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம், இதெற்கெல்லாம் தீர்வு இல்லாமல் இல்லை, ஆனால் அவை எல்லாம் வோட்டு போடும் நமது விரல்களிலும் நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளிடமும் மட்டுமே உள்ளது. சென்னை சென்னை என்று எல்லா தொழில் வணிக வியாபார வளர்ச்சிக்கும் சென்னையைத் தேர்ந்தெடுக்கும் மத்திய மாநில அரசுகள் சென்னையை விடுத்து நெல்லை மதுரை கோவை திருச்சி நகரங்களைச் சுற்றியுள்ள இடங்களில் கவனத்தை செலுத்தினால் சென்னையின் சுமையை வெகுவாகக் குறைக்கலாம். நெல்லைக்காரன் திருச்சிக்காரன் மதுரைக்காரன் என்பது போன்ற உணர்வு சென்னைக்காரனுக்கும் இல்லாமல் இல்லை, நாமெல்லாம் சேர்ந்து இல்லாமல் செய்துவிட்டோம். அரசாங்கமே தொழில்நுட்பப் பூங்கா கட்டினால் மட்டும் போதாது அங்கே தொழிலும் நடப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாட்டில் ஒரு பகுதியை மட்டும் வளர்த்து வீங்கச் செய்யாமல் ஒவ்வொரு பகுதியையும் வளர்த்துவிட்டால் ஜன நெருக்கடியும் ஏற்படப் போவதில்லை, போக்குவரத்து நெரிசலும் ஏற்படப்போவதில்லை, சென்னையின் சாலைகளால் வலியும் ஏற்படப் போவதில்லை. சென்னையின் சாலைக்கும் நமக்கும் நல்ல வழி பிறக்க நம்பிக்கை இருந்தால் கடவுளை வேண்டுங்கள் இல்லையேல் நம்பிக்கை வைத்த அரசியல்வாதியை வேண்டுங்கள். நல்லது நடந்தால் நல்லது.
ஒருநிமிடம் உங்கள் கருத்துகளையும் பதித்து விட்டுச் செல்லுங்கள்.
Tweet |
அருமையான பதிவு.
ReplyDeleteவலிகளை நினைச்சாலே நெஞ்சு நடுங்குது.
தோண்டத் தெரிந்த கரமே உனக்கு மூடத்தெரியாதா?
அதென்ன அப்படியப்படியே விட்டுட்டுப்போறது:(
ஒரே இடத்துலே எல்லாம் குவிஞ்சால்..... வீக்கம்தான்:(
முதல் வருகையை வந்து உற்ச்கம் கொடுத்ததற்கு மனம் நிறை நன்றி
Deleteஇந்தாங்க சீனு கர்சீப்... கண்ணைத் துடைச்சுக்கங்க... கடவுளை நம்பி வேண்டினாலும் பிரயோஜனம் இருக்கும். இந்த அரசியல்வாதிகளை நம்பறதுல பைசாவுக்குப் பிரயோஜனமில்ல. அதனால நான்...
ReplyDeleteஎல்லாரோட ஆதங்கத்தையும் பிரதிபலிச்ச உங்கள் குரலுக்கு ஒரு சபாஷ்!
ஹா ஹா ஹா என்னோட கண்ணீரதை துடைக்க கர்சீப் குடுத்துடீங்க, மொத்த சென்னைக்கும் குடுக்க நம்மாள முடியாதே... அரசியல்வாதிகளை நம்ப முடிவதில்லை, ஆனால் இனி ஒரு விதி செய்ய நம்மில் யாரேனும் துணிந்தால் நலமே
Deleteநல்லது நடந்தால் நல்லது.
ReplyDeleteவருகைக்கு நன்றி அம்மா
DeleteChennai is not planned for this much population and also not in plan to accommodate future influx.
ReplyDeleteTown planning is a huge subject which requires support from all Govt departments.
Today laid load is being excavated next day,roads doesn't have standard level, sewer cover not in level with road,no surface drain.....blah blah
By a chennai road user. :-)
உங்க பேச்சில கொஞ்சம் கிண்டல் தெரியுதே ஹா ஹா ஹா என்ன செய்வது தோழா நாமெல்லாம் புலம்புகிறோமே தவிர புரட்சி செய்ய தயாராக இல்லையே
Deleteஇந்த குண்டும் குழியும் ரோடு உள்ள படங்கள் சென்னை தானா அது....இந்த பதிவை வைத்து அரசு வேலை வாங்கி விடலாம் என நினைக்குறிங்க போல வேலை கிடைத்தால் சொல்லுங்க...சென்னையில் இருக்கேன் என்பதை மீண்டும் நிருபித்து விட்டீங்க.....
ReplyDeleteநண்பா நானே எனது mobilil எடுத்த படங்கள், கடந்த நான்கு வருடங்களாக நான் பார்க்கும் சாலையில் எந்த மாற்றமும் இல்லை
Deleteசென்னையைப் பற்றி விளக்கமான பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Deleteரொம்பவே அனுபவித்து, ஆராய்ந்து எழுதி இருக்கேங்க......
ReplyDeleteஇதே நிலைமை தான் இந்தியாவின் எல்லா பெருநகரிலும் இருக்கும்.... வாழ பழகி கொள்ள வேண்டும்.. :)
வாழப் பழகிக் கொண்டோம் தோழா, ஆனாலும் மாற்றம் வேண்டும் ஏமாற்றம் இல்லை
Deleteஉங்கள் தமிழ்மனம் பிரச்சனை இன்னும் தீர வில்லை என்றே நினைக்கிறன்..
ReplyDeleteIt could be a problem with your "Feedburner"..Try this link for solution..
http://www.bloggernanban.com/2010/12/blog-post.html
கண்டிப்பாக நானும் என்னவெல்லாமோ பகீரதப் பிரயத்தனம் செய்துவிட்டேன் .. மீண்டும் ஒருமுறை முயன்று பார்கிறேன்... நீங்கள் கூறியது போல் FEEDil தான் பிரச்னை
Deleteமழை பெய்யும் நேரத்துச் சென்னை பார்த்தாலே பயம் தான்...
ReplyDeleteஅனுபவிச்சு! எழுதி இருக்கீங்க!
பலபேருக்கும் அதில் தான் பயம் சார். சென்னையின் குண்டும் குழியுமான சாலைகள் என்றால் எவருக்கும் பயம் தான்
Deleteஎனது கனவுலகம் பதிவைப் படியுங்கள். உங்கள் புலம்பல்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்.
ReplyDeleteநிச்சயமாகப் படிக்கிறேன் அய்யா
Deleteenna boss!
ReplyDeletepirichi meynthu vitteerkal!
குறைகளை உங்களிடம் தானே நண்பா pulamba முடியும்
Deleteசூப்பர் நண்பா
ReplyDeleteநன்றி தோழா
Deleteநம் செயலுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்பது என் கருத்து ஆதங்கப்பட மட்டுமே நம்மால் முடியும் எல்லாம் அரசியல் படுத்தும்பாடு....பார்ப்போம் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.
ReplyDeleteகடவுளிடம் என்னவெல்லாமோ கேட்கிறோம் இதையும் கேட்டுத் தான் பார்ப்போமே, வருகைக்கு நன்றி தோழி
Deleteஇப்பதிவின் தலைப்பில் இருப்பது சொற்பிழையோ அல்லது எழுத்துப்பிழையோ என்று நீங்கள் கருதியது உண்மையாகி விடும். ////////////
ReplyDeleteஇல்லை பாஸ் ஆரம்பத்திலே வலிகூடிய பதிவாக இருக்குமென்றே நினைத்தேன் அப்படியும் தான்......
நீங்கள் நினைக்க விட்டாலும் நினைக்கச் செய்ய வேண்டியது என் வேலை ஆயிற்றே தோழா, தொழில் ரகசியத்தை வெளிப் படுத்தாதீர்கள்... ஹா ஹா ஹா
Deleteநானும் தலைப்புதான் தவறு என்று முதலில் நினைத்தேன். ஆனால் வலியைத்தரும் சாலையைப்பற்றி படித்தபின்தான் புரிந்தது. நல்ல விரிவான அலசல்.
ReplyDeleteநல்ல வேலை நீங்களாவது புரிந்து கொண்டீர்களா.... எங்கே ஒருவரும் புரியாமல் சென்று விடுவார்களோ என்று நினைத்தேன்
Deleteசூப்பர் நண்பா
ReplyDeleteஓஓஓஓஓஓ..இவ்வளவு சிக்கலா சென்னையின் சாலைலகள்????வாழ்த்துக்கள் சொந்தமே...இப்பகிர்விற்காய.சந்திப்போம்.
ReplyDeletehttp://athisaya.blogspot.com/2012/07/blog-post.html
ஆம் தோழி, சிக்கலான சாலை என்று சொல்வதை விட பள்ளமான சாலைகள் என்பது தகும்
Deleteமிகவும் அருமையாக அலசி எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteபடித்தாலே வலிக்குதே, நேரில் போய் சென்னையில்
மாட்டிக்கொண்டால் என்ன ஆவது?
அதனாலேயே சென்னைக்கு அடிக்கடி இப்போதெல்லாம் செல்வதில்லை.
தினமும் அங்கேயே தங்கி பயணிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் பாடு மிகவும் கஷ்டம் தான்..... பாவம்.
ஆம் அய்யா பலருக்கும் சென்னையின் மீது தீராத பயம் தான்... வாழ்க்கையின் வலிகளும் சென்னையின் வலிகளும் ஒன்றுதானோ என்னவோ
Deleteசென்னை மட்டும் என்ன? தமிழகம்.. இல்லை இந்தியா முழுவதும் இதே நிலை தான்.
ReplyDeleteநம்மில் இருக்கிறது தப்பு.
தாங்கள் சொல்வது முற்றும் உண்மை!
ReplyDeleteசா இராமாநுசம்
சில நாட்கள் வந்து போகிற எங்களுக்கே
ReplyDeleteதாங்கவில்லை
.சென்னைவாசிகள்
எப்படித்தான் தாங்கிக் கொள்கிறார்களோ ?
அப்படியே இந்தப் பதிவை உயர்
அதிகாரிகளின் பார்வைக்கு
கொண்டு செல்லலாம்
அத்தனை தெளிவுடன் சென்னை மக்களின்
அவஸ்தையை பதிவு செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
சென்னை வாசிகளின் தலைஎழுத்து இதைப்போல மோசமான சாலை(?)களை அனுபவிப்பது என்று நினைத்திருந்தேன் உங்களைப் போல் நானும, பின்னூட்டங்களைப் படிக்கையில் எல்லா ஊரிலும் இத்துன்பம் உண்டென்பது புரிகிறது. துன்பப்பட்ட பலரின் குரலாய் ஒலித்திருக்கிறது இங்கே உங்கள் குரல். மாற்றம் நடந்தால் நல்லது. அதுதானே நம் அனைவரின் விருப்பமும்.
ReplyDeleteமிகப் பொருத்தமான தலைப்பு.சென்னை புற நகர மக்களின் எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.
ReplyDeleteத.ம 5
மிகப் பொருத்தமான தலைப்பு.சென்னை புற நகர மக்களின் எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.
ReplyDeleteத.ம 5
மிகப் பொருத்தமான தலைப்பு.சென்னை புற நகர மக்களின் எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.
ReplyDeleteத.ம 5
சென்னையின் சாலைகளை இப்படி கிழிச்சியிருக்கீங்க....எந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான் இருக்கும் போல...
ReplyDeleteசென்னை சரியாகத் திட்டமிட்டு வளரவில்லை என்பதுதான் முதல் காரணம். கடந்த 20-25 வருடங்களில் பெரிய அளவில வளர்ந்த பகுதிகளில் அண்ணாநகரைத் தவிர்த்து மற்ற் இடங்களில் சாலை என்பதே 80 அடிகளுக்கும் குறைவானவைதான். அவற்றில் ஆக்ரமிப்புகள் வேறு. கேகே நகரின் சாலைகள் ஒருகாலத்தில் (எனது பள்ளிப் பருவத்தில் அதாவது 80களில்) அகலமானவைகளாகத் தோன்றியவை இன்று ஆக்ரமிப்புகளாலும் வணிகமயமாக்கத்தாலும் மிகச் சிறிய சந்துகள் போலத் தோன்றுகின்றன. அதை ஒட்டிய நெசப்பாக்கம் போன்றவற்றில் மிகப் பெரிய முக்கிய சாலைகளே அகலத்தில் 20-30 அடிகள் தான் இருக்கும். ஆற்காடு ரோடு என்பது ஒரு நெடுஞ்சாலை. அதன் அகலமே 80 அடி கூட இருக்காது. ஆக்ரமிப்புகளால் அது 50 அடிதான் போக்குவரத்திற்கு உபயோகத்திலுள்ளது. நடைபாதை என்பதே எங்கும் காணமுடியவில்லை. மிக முக்கியமான அண்ணாசாலையே கத்திபாரா-கிண்டி-சைதை இடையில் மழைக்காலத்தில் (நீர்தேக்கத்தால்) கடப்பது கடினம் தான்.
ReplyDeleteசாலைகளை அகலப்படுத்துவது என்பது கடினம் தான். ஆனால், ஆக்ரமிப்புகளை அரசு நினைத்தால் தடுக்கமுடியும். சாலைசீரமைப்பு என்பது மற்றத் துறைகளுடன் (மின்வாரியம், தொலைபேசி) இணைந்து செயல் படுத்த வேண்டும். உதாரணமாக இவற்றின் கம்பிகளை மூடி போட்ட சிமெண்ட் குழிகள் வழியாகச் செலுத்துவது என திட்டமிட்டால் சாலைகளைத் தோண்ட வேண்டியிருக்காது. ஆனால், செலவு சற்று அதிகமாகும்)
நல்ல அலசல்
நம்பிக்கை இருந்தால் கடவுளை வேண்டுங்கள் இல்லையேல் நம்பிக்கை வைத்த அரசியல்வாதியை வேண்டுங்கள். நல்லது நடந்தால் நல்லது. Unmai
ReplyDeleteஎல்லா சாலைகளும் கோட்டையை நோக்கியே.
ReplyDeleteகோட்டைக்கு செல்லும் சாலையை தீர்மானிப்பது
விலையற்ற பொருள், நிர்வகிப்பது டாஸ்மக் கடை.
அறம் பிழைத்தோரின் ஆளுமை
தரமறியாதவனுக்கு தானே அமையும்.
வயித்தெரிச்சலை , மன வலியை எவ்வளவு அழகாக, நக்கலாக , படிப்பவர்களுக்கும் வயத்தெரிகிறா மாதிரி, உண்மையை, எழுதி இருப்பது பாராட்டுக்கு உரியது.
ReplyDeleteசென்னை மட்டுமல்ல, பங்களூரு, ஹைதையும் இதே மாதிரி தான். கடவுளை வேண்டுகிறோம் , இன்னும் கண் திறந்த பாடில்லை
Hello, just wanted to mention, I loved this article.
ReplyDeleteIt was helpful. Keep on posting!
Here is my page :: montaż rekuperator
Hello There. I discovered your weblog the usage of msn. This is an extremely smartly written article.
ReplyDeleteI'll make sure to bookmark it and return to read extra
of your useful information. Thanks for the post. I will definitely return.
Feel free to surf to my blog klimatyzacja