பதிவுலகம் புதுமையா! இல்லை புதிதாக வருபவர்களை தட்டிக் கொடுத்து மெருகேற்றும் பதிவுலக நண்பர்கள் புதுமையா! தெரியவில்லை. பதிவுலகில் புதிது புதிதாக நடைபெறும் ஒவ்வொரு அசைவுகளையும் இருகரம் கூப்பி வரவேற்கும் பதிவுலக நண்பர்களை தமிழ் பெற்றிருப்பது நிச்சயம் புதுமை தான்...
பதிவுலக நண்பர்களே... நமக்காக ஒரு பதிவு... என்பது நான் வைத்த தலைப்பு எதையுமே நகைச்சுவையாக பகிரும் நண்பன் ஹாரியோ இவ்விசயத்திற்கு வைத்த தலைப்பு சீரியஸ் பதிவு. ஆம் மிகவும் சீரியசாக நேர்த்தியாக வடிவமைத்து அதில் நம்மையும் பங்கெடுக்க வைக்கும் அளவிற்கு சிந்தித்த அவனது சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக முதல் நன்றிகள். அதில் பங்குபெற அழைக்கும் உங்களுக்கு என் முதல் வணக்கங்கள்.
பதிவுலக நண்பர்களாகிய நாமெல்லாம் சேர்ந்து ஒரு தொடர் கதை எழுதப் போகிறோம் அதில்வரும் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு பதிவர் எழுதப்போகிறார். ஒரு தொடர் சங்கிலி போன்ற நிகழ்வு இது. கிடைக்கும் பலன்கள்
புதிய பதிவரின் அறிமுகம்
நம் திறமையை அறிய நமக்கே ஒரு வாய்ப்பு
அதனை சகபதிவர்கள் அறியும் வாய்ப்பு
கதையை தொடரவும் தொடர்ந்து படிக்கவும் ஒரு வாய்ப்பு
பெரிய அளவில் வெற்றி பெற்றால், பதிவுலக சாதனையாகும் வாய்ப்பு
தொடர் பதிவு எழுத விதிமுறைகள்
1. இது ஒரு தொடர் பதிவு மட்டுமே.. எழுதுபவர்கள் அவரவர் பிளாக்கில் அந்த பதிவை வெளியிடல் வேண்டும்.. ஆனால் முந்தைய பகுதி லிங்குகள் கொடுக்க பட வேண்டும்.
2. கதைக்கு அந்த வாரம் எழுதும் பதிவரே வித்தியாசமான பெயர்கள் வைக்கலாம்..
3. நகைச்சுவையாக, கொலைவெறியோடு, காதலோடு, உலக சினிமா போல், கிராமத்து பின்னணியில், செவ்வாய் கிரகத்தில் எப்படியும் கதையின் பாதையை தொடரலாம்..
4. பதிவர்களின் விருப்பதிற்கு அமைய நீங்கள் இன்னும் எத்தனை கதாபாத்திரங்களைவேண்டுமானாலும் கதையில் இணைக்கலாம்.. புத்தகம், நாவல், பொது வாழ்க்கை, அரசியல் பிரபல கதாபாத்திரங்களை தெரியலாம். (ஸ்பைடர் மேன், சுஜாதாவின் கணேஷ் வசந்த், ஒபாமா)
5. அதிக கதாபாத்திரங்களை இணைத்தாலும் முக்கிய கதாபாத்திரங்களை பிரதான கதைக்குள் நகர்த்துங்கள்.
6. இங்கு கதை எழுதுபவர்கள் பல தரப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் ஆனாலும் பக்க சார்பாக எழுதமாட்டார்கள் என்பதை மற்ற நண்பர்களுக்கு கூற கடமை பட்டுள்ளேன்.(என்ன ஒரு ராஜ தந்திரம் ஹாரி அவர்களே)
7. மேலும் நகைச்சுவை, கிரைம் கலந்து எழுதினால் அடுத்த பகுதி எழுதும் நண்பருக்கு லீட் கிடைக்கும்.. அப்படி ஏனைய லீட் வைத்து எழுத கூடிய திறமைசாலிகள் அவர்கள் ஸ்டைலில் எழுதலாம்.
8. ஆனாலும் அந்த கதையில் ஒரு பதிவில் ஆரம்பமும் முடிவும் இருத்தல் வேண்டும்.. (X FILES போல அல்லது சில ஆங்கில தொடர்கள் போல)
9. இதுவரை ஓகே சொன்ன எழுத்தாள சிகாமணிகள்.. கதை முடிவில் கலைமாமணிகள் ஆனாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை..
மேற்கூறிய விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த பதிவை எளிதில் தொடர முடியும். சுவாரசியம் நிறைந்த தொடராக நம்மால் மாற்ற முடியும் என்பது நிச்சயம்.
எந்த அழைப்பும் விடுக்காமல் ஹாரி என்னை பதிவெழுத அழைத்தான், நானும் சிலருக்கு அழைப்பு விடுகிறேன் அவர்கள் இத்தொடருக்கு ஊக்கம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்... நான் அழைப்பு விடுக்கும் பதிவர்களின் தளங்களில் அவர்கள் சிறுகதையை படித்துள்ள காரணத்தால் அழைக்கிறேன், நான் அழைக்காததால் உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியாது என்றில்லை, ஆர்வம் இருப்பின் உரிமையோடு வந்து கலந்து கொள்ளுங்கள் அழைப்பு வரவில்லை என்று கோபம் மட்டும் கொள்ளாதீர்கள்.
சென்னை பித்தன்
என் ஜன்னலுக்கு வெளியே நிரஞ்சனா
எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார்
பாலா பக்கங்கள் பாலா
தூரிகையின் தூறல் மதுமதி
வெங்கட் நாகராஜ்
ரிஷபன்
வெங்கட் ஸ்ரீநிவாசன்
இந்தத் தொடர்கதை பற்றிய பதிவுகள் நண்பன் ஹாரியின் தளத்தில்
அறிவிப்பு வழங்கியதோடு மட்டுமில்லாமல் நம் பயணத்தையும் தொடங்கி விட்டான்...
தொடர் கதையின் ஆரம்பக் கதை படிக்க இங்கே சுட்டுங்கள்
இந்தத் தொடர் பதிவின் அடுத்த பாகம் நான் எழுத இருப்பதால் வெகு விரைவில் என்னுடைய தளத்தில் வெளியிடப் படும் என்ற அறிவிப்பையும் சேர்த்துக் கொள்கிறேன்.
உங்கள் விருப்பத்தை நண்பன் ஹாரியிடம் சொல்லுங்கள் .
உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து செல்லுங்கள்.
Tweet |
நல்லதொரு மாறுப்பட்ட முயற்சி வாழ்த்துக்கள் ! தவறாமல் பதிவிட்டதும் எனக்கு அறியத் தாருங்கள் ... !!!
ReplyDeleteரைட்டு பட்டையை கிளப்புங்கள்!
ReplyDeleteமாறுப்பட்ட நல்ல முயற்சி வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
ReplyDeleteappudiyaa...!?
ReplyDeletemuyarchi jeyikkaattum!
ஆச்சர்யம்! இதே ஐடியாவை கடந்த சில மாதங்களாக நான் யோசித்து வைத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். தொடருங்கள். லிஸ்ட்டில் என் பெயரும் இருப்பது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும்!
ReplyDeleteவித்தியாசமான முயற்சி! தொடரட்டும்.
ReplyDeleteதொடருங்கள்...
ReplyDeleteபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
நன்றி... (த.ம. 3)
வாழ்த்துக்கள் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்
ReplyDeleteவானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ
பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ
கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ
வித்தியாசமான முயற்சி...சீனு.
ReplyDeleteபுதுசா பார்க்கிற மாதிரியே கமென்ட் பண்றது
Deleteகலக்குங்க சீனு...வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇரண்டாம் பகுதிக்கு காத்திருக்கிறேன். கலக்குங்கள்!!!
ReplyDeleteஅழகாய் இருக்கு பயமா இருக்கு....
ReplyDeleteஇந்த கான்செப்ட் புதுசா இருக்கறதால எனக்கு சரியாப் புரியலை. நீங்க அடுத்த பகுதி எழுதப் போறீங்க. ஒருத்தர் எழுதினா இன்னொருத்தரைதானே தொடரச் சொல்வார்கள்? அதை நான் தொடரணுமா.. இல்லை நீஙக குறீப்பிட்டிருக்கற அத்தனை பேரும் எழுதுவாங்களா? கொஞ்சம் தெளிவா (என் சிற்றறிவுக்கு புரியும்படி) விளக்குங்க சீனு.
ReplyDeletehttp://ideasofharrypotter.blogspot.com/2012/07/blog-post_26.html
Deleteஇந்த பதிவில் கதை எழுதபோகிறவர்களின் வரிசை உள்ளது. இது வரை பத்து பேர் உள்ளனர். நீங்கள் எத்தனையாவது நபராக இணைகிறீர்களோ, அத்தனையாவது பகுதியை எழுத வேண்டும்.
:D
நன்றி சீனு நம்ம கதைக்கு நல்ல PROMOTING
ReplyDeleteநல்ல முயற்சிதான்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்தியாசமான ஒன்றே..தோழர்கள் எழுதுவதை வாசிக்கிறேன்..பிறகு தொடருகிறேன்.கொஞ்சம் குழப்பம் வரும்.கதையை ஆழமாக வாசிக்க வேண்டும். பதிவுலகில் ஒருவரது பதிவை ஒருவர் முழுமையாக வாசிப்பது என்பது இல்லாமலேயே இருக்கிறது.தொடர்ந்து எழுதும் தோழர்கள்,முன் கதையை உள் வாங்கி வாசித்தால்தான் தொடர்ந்து எழுத முடியும் .முயற்சிக்கு வாழ்த்துகள்.என்னையும் பங்கெடுக்க சொன்னதால் தொடருகிறேன்..நன்றி..
ReplyDeleteஇரண்டாம் பகுதிக்கு வெயிட்டிங் நண்பா. ஹையோ ... இன்னும் கொஞ்ச நாள்ல நானும் எழுதணுமே? கதை எங்கெல்லாம் யு டர்ன் எடுக்கப்போகுதோ தெரியல. அவ்வ்வ்
ReplyDeleteகணேஷைக் கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கச் சொல்லுங்கள்.சிறிது உடல் நலக்குறைவால் கணினி பக்கமே வராமல் இருக்கிறேன்.அவரைத் தொடர்ந்து நான் எழுத வேண்டுமே!பார்த்து எழுதுங்க கணேஷ்!
ReplyDeleteவணக்கம் சகோ நல்ல முயற்ச்சி! வாழ்த்துக்கள்§§
ReplyDeleteதொடரில் எல்லாரையும் பின் தொடர்வது நேரச்சிக்கல் என்பதால் எழுதும் நண்பர்களின் லிங்குகளை இணைத்தால் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் நானும் இணைய காத்திருக்கின்றேன்! இடையில் நட்புக்கர்ம் கொடுத்தால்!
முன்பு ஒரு சிறுகதையை கல்கியில் நாங்கள் 5 பேர் எழுதினோம். பின் அதே கல்கியில் 12 வாரம்.. வாரம் ஒருவராய் எழுதினோம்.
ReplyDeleteஅருமையான முயற்சி. வாழ்த்துகள்.
அட!!!!
ReplyDeleteபுது முயற்சி!வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.நாங்கள் இருக்கிறோம் தொடர்வதற்கு!
ReplyDeleteமிகவும் வித்தியாசமான முயற்சி கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றி பெற அனைத்து இலக்கிய பதிவுகள் எழுதும் பதிவர்களின் ஒத்துழைப்பு இதற்கு அவசியம்...
ReplyDeleteரசிகனாக நான் .........
திடங்கொண்டு போராடு !
Deleteதொடர் கதைக்குப் பாராட்டுக்கள்...
மாறுபட்ட முயற்சி. கதை எழுதுவதில் ஜாம்பவான்களாகிய மதுமதி, ரிஷபன், செ.பி., கணேஷ் ஆகியோருடன் கத்துக்குட்டியாகிய என் பெயரையும் சேர்த்துள்ளீர்களே. அவர்களைப் பார்த்தாவது எழுதக் கற்றுக் கொள்ளட்டுமே என்ற எண்ணத்திலா? இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteநன்றிகள்.
எனக்கு கதைகள் எழுதறது புது விஷயம் சீனு. கத்துக்குட்டின்னுதான் சொல்லணும். இவ்வளவு பெரிய வெயிட்டைத் தாங்கற அளவுக்கு நான் வொர்த் இல்லைப்பா. தொடர்ந்து எல்லாரும் எழுதறதைப் படிக்கறேன். அது போதும். அழைச்சதுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபுதிய முயற்சி.... நம்மளையும் கோர்த்து விட்டுட்டீங்களே! :)
ReplyDeleteநமக்கும் கதைக்கும் கொஞ்சம் தூரம். - நாமெல்லாம் ரசிப்பதோடு சரி.
நமக்கு நாமே திட்டமா?? :)
ReplyDeleteநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். கதை எழுதும் அளவுக்கெல்லாம் நமக்கு திறமை இல்லை. நல்ல கதையை கெடுக்காமல் இருப்பதே சிறந்தது. இந்த வகையில் ஒரு வாசகனாக இருப்பதையே விரும்புகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே
ReplyDelete