
"சரி நீ கவலைபடாத ஏதாவது ஒரு தியேட்டர்ல புக் பண்றோம், பாக்றோம்" , கூறிவிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய நண்பன் டிக்கெட்டும் எடுத்து விட்டான். நிற்க அவன் ஒரு தீவிர விஜய் ரசிகன்.
மேலும் தொடர்வதற்கு முன்பு ஒரு வரலாற்று நிகழ்வு...

இது போன்ற நிகழ்வுகளில் இருந்து என் தேடல் தொடங்கியது (!) அஜீத் பற்றி சிறிய துண்டு செய்தி கிடைத்தாலும் தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன், பள்ளிகளில்(!) இதன் பின் நடைபெற்ற வாக்குவாதங்களில் நானும் கலந்துகொண்டேன், நல்லவேளையாக அந்த நேரத்தில் அஜீத் அவ்வப்போது ஹிட் படங்களையும் தந்து கொண்டிருந்தார் என்பதை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என் பள்ளிக்காலம் முடியும் வரையில் ஒரு அஜீத் படம் கூட திரையில் பார்த்ததில்லை மாறாக பல விஜய் படங்கள் பார்த்துள்ளேன். கல்லூரியில் நிலைமையோ சற்று வேறுவிதம். இங்கு பாதிக்கு மேற்பட்டவர்கள் அஜீத் ரசிகர்கள். ஓரளவு "மீசை முளைத்த தடிமாடுகள்" என்று எல்லா தரப்பினரும் திட்ட ஆரம்பித்திருந்ததால் கைகலப்புகளில் எல்லாம் ஈடுபட்டதில்லை. என் திருட்டுத்தனமான பு ரட்சி ஆரம்பமாகி இருந்ததும் இந்தக் காலகட்டங்களில் தான்.
அஜீத் நடித்த எல்லா படங்களுக்கும் முதல்காட்சி செல்ல அரம்பிதேன். அஜீத் படம் வரப் போகிறதென்றாலே தனிக் கூட்டம் கூட்டி விடுவோம். அதில் எப்பாடுபட்டாவது டிக்கெட் வாங்கிவிடுவது குறித்த ஆலோசனை நடைபெறும். முதல் காட்சிக்கு செல்லும் விசயம் வீட்டிற்கு தெரியாது. எலி எத்தனை காலம் தான் பொறியில் சிக்காமல் தப்பிக்கும். திருப்பதி வடிவில் வந்தது அந்தத் திருப்பம். திருப்பதி வந்தா திருப்பம் பாடலுக்கு அரங்கமே அதிர்ந்து கொண்டிருந்தது, பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தா ஆடிக் கொண்டிருந்தார் என்பதால் நாங்களும் ஆட ஆரம்பித்தோம், திடீரென்று பாடலை விட சத்தமான ஒரு குரல் என் காதில் விழுந்தது, "ஏ ராம்சங்கர் தம்பி தான நீ", கேட்டது என் அண்ணனின் நண்பன். அந்த இருட்டிலும் என்னை கண்டுபிடித்த பெருமை அவருக்கே உரியது. அந்தோ பாவம்! என் முதுகில் விழுந்த அடிகள் மட்டும் எனக்குரியது. இதன்பின் வந்த அஜீத் படங்களுக்கும் நான் வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றதில்லை அவர்களே அறிந்து கொள்வார்கள். அதற்க்குக் காரணமும் நண்பன் ஒருவன் தான். எப்போதும் தைரியமாக வரும் நண்பன் அன்று மட்டும் பம்மிக் கொண்டே வந்தால் வீட்டிற்கு தெரிந்துவிடும் நாளை அஜீத் படம் ரிலீஸ் என்று.
இளநிலை இறுதியாண்டு படிக்கும்பொழுது பில்லா பாடல்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்ததது. நண்பனின் மொபைலில் பாடல் கேட்பதற்காக வகுப்பில் பயங்கர அடிதடி நடக்கும். அதிலும் "சேவல் கொடி பறக்குதடா" பாடலில் "வேல் குத்தி ஆடும் போது வெறியேறும்" பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் எங்களுக்குள் வெறி ஏறும், பெரும்பாலும் அந்தப் பாடல் குறித்து தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்போம். பில்லா படம் முதல்நாள் முதல்காட்சிக்கு எவ்வளவோ முயன்றும் டிக்கெட் கிடைக்கவில்லை, தென்காசி பஜாரில் சோகமாக நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு குரல் எங்களை நிறுத்தியது.
"தல தல"
"சொல்லு தல" இது என் நண்பன்.
"டிக்கெட் எல்லா இடத்துலையும் முடிஞ்சிருச்சு ஒரு எடத்துலயும் கிடைக்காது", அந்த புதிய தல.
" ஆமா தல, எங்கிட்டயும் இல்ல" என்னை பண்றதுன்னு தெரியல.
" நீ வருத்தபடாத தல, வழக்கமா படத்துக்கு வாரவங்கள எங்களுக்கு தெரியும், நீங்க மன்றத்துல இல்லாட்டாலும் உங்களுக்காக அஞ்சு டிச்ஜெட் எடுத்து வச்சிருக்கோம், உங்க போன் நம்பர் என்கிட்டே இல்லை, எப்படியும் நீங்க நாளைக்கு வருவீங்க கொடுக்கலாம்னு நினைச்சேன். நல்ல வேள இங்கயே பாத்துட்டன்" கூறிவிட்டு என் கைகளில் ஐந்து டிக்கெட்டை சொருகினான்.
"இப்ப காசு இல்ல நா நாளைக்கு வந்து வாங்கிகிறேன்".
"அஜீத் ரசிகன பத்தி எனக்குத் தெரியும் தல, நாளைக்கு குடு போதும்" எப்படியோ டிக்கெட் கிடைத்தது.
பில்லா அஜீத்தைப் பார்க்கும் ஆவலை விட சேவல் கொடி பாடலைப் பார்க்கும் ஆவல் தான் அதிகமாக இருந்தது. படம் பிரமாண்டமாய் ஆரம்பித்து பாடலும் ஆரம்பித்தது துள்ளிக் குதித்து வெறியோடு ஆடுவதற்கு எழுந்தால் பெருத்த ஏமாற்றம். அந்தப் பாடலில் அஜீத் அவருக்கு தெரிந்த உடற்பயிற்சியை எல்லாம் செய்துகாட்டிக் கொண்டிருந்தார். ஒரு நல்ல பாடலை(?) அஜீத் கெடுத்துவிட்டார். இருந்தும் படம் சூப்பர். தலைவரின் பெயரைக் கெடுக்காமல் இருந்ததே பெரும் பாக்கியம். அதன் பின் வந்த கிரீடம் முதல் காட்சி. அதிலும் விளையாடு விளையாடு பாடலின் விளையாட்டையும் நம்பி ஏமாந்தோம். படம் எங்களுக்கு பிடிக்கவில்லை, அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்தால் மட்டும் போதுமா? திருப்பி அடிக்க வேண்டாமா? திருப்பி அடிக்கவில்லை அதனால் எங்களுக்கும் பிடிக்கவில்லை. படம் லேட்பிக்கப் என்பது வேறு விஷயம்.
சென்னைக்கு வந்ததன் பின்பு சொல்லிகொள்ளும்படி எந்த ஒரு அஜீத் படமும் வரவில்லை. நான் பார்க்கவும் இல்லை. நான்கு வருட பசிக்கு தீனி போடும்படியாக வந்தது மங்காத்தா, பாடல்களும் நல்ல ஹிட். இந்த படத்திற்கு அஜீத்தின் நடிப்பை நம்பி செல்லவில்லை, வெங்கட்பிரபுவின் இயக்கத்தை மட்டுமே நம்பி சென்றேன், அதிகாலை ஐந்து மணிக்கு முதல் காட்சி, மங்காத்தா எ வெங்கட்பிரபு கேம் இல்லை. முழுக்க முழுக்க அஜீத் ஆடிய மங்காத்தா, இரண்டு பாடல்களுக்கு சூப்பராக ஆடியிருந்தார், அதிகமாக நடக்கவில்லை நடித்திருந்தார். அஜீத் ரசிகர்கள் என்று இல்லை அனைத்து தரப்பினரும் ரசித்த படம், படம் முழுவதும் புகை தான் அதிகம், அப்படி ஒரு அஜீத்தை நான் விரும்பவில்லை.
இனி பில்லா டூ

படம் பார்த்து விமர்சனம் எழுதப் போகிறவர்களுக்கு மட்டும் ஒரு சிறிய விண்ணப்பம். கதையின் விமர்சனம் மட்டும் எழுதுங்கள், தயவு செய்து விமர்சனமாக கதையை எழுதிவிடாதீர்கள்.
சிறிய விளம்பரம்
பெரிய விளம்பரம்
நான் தான் விமர்சனம் எழுதவில்லை. பதிவு பற்றிய விமர்சனத்தை நீங்களாவது பதித்து விட்டுச் செல்லுங்கள்
Tweet |
sir!
ReplyDeleteavar velaiyai paakkuraar-
naama namma pozhappa paarppom!
ezhuthu nadai-
ethaartham!
அதுவும் உண்மை தான்... இருந்தும் தமிழனின் ரத்தத்தில் ஊறிப் பொய் விட்டதே என்ன செய்வது... முதல்வராக வந்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழா
Delete//படம் பார்த்து விமர்சனம் எழுதப் போகிறவர்களுக்கு மட்டும் ஒரு சிறிய விண்ணப்பம். கதையின் விமர்சனம் மட்டும் எழுதுங்கள், தயவு செய்து விமர்சனமாக கதையை எழுதிவிடாதீர்கள்.//
ReplyDeleteபில்லா படத்துல கதை இருந்தாதானே எழுதுறதுக்கு,, சும்மா காமெடி பண்ணாதீங்க,,
ஹா ஹா ஹா நான் இந்த ஒரு திரைப் படத்துக்கு மட்டும் சொல்ல, பொதுவா சொன்னேன்
Deleteரிலீசான அன்றே நான் பார்த்த ஒரே திரைப்படம் 'அண்ணன் ஒரு கோவில்'! அதுவும் உறவுகளின் வற்புறுத்தலால்! இப்போதெல்லாம் திரையரங்கங்கள் பக்கமே செல்வதில்லை!! :))
ReplyDelete//அண்ணன் ஒரு கோவில்// என்னது அண்ணன் ஒரு கோவிலா! நல்ல படங்களை சென்று பாருங்கள் சார், திரை அரங்கில் பார்ப்பதும் ஒரு தனி சுகம் தானே
Deleteபாஸ்,
ReplyDeleteஉங்களுக்கு எழுத்து அற்புதமாய் வருது...முதல இருந்தது கடைசி வரைக்கும் சுவாரிசியம் குறையமா உங்க அனுபவத்தை சொல்லி இருக்கேங்க...
நீங்க கண்டிப்பா பில்லா-2 படத்தை பத்தி உங்க அனுபவத்தை எழுதியே ஆகணும்...இது என்னோட வேண்டுகோள்...
தல பண்ணுற கேட் வாக், பேசுற பஞ்ச் டயலாக், பத்தி எல்லாம் நீங்க கண்டிப்பா எழுதி ஆகணும்...
நன்றி நண்பா, பதிவு எழுதிவிட்டேன், தங்கள் படித்து அங்கும் தங்கள் கருத்துக்களை கூற வேண்டியது தான் மிச்சம்
Deleteநான் ஒரு சிறந்த விமர்சகன் இல்லை. எழுதினாலும் கண்டிப்பாக மோசமாக எழுதப் போவது இல்லை.
ReplyDeleteநன்றாகவே எழுதுறிங்க.
திரைப்படத்தைப் பற்றி மோசமாக எழுத மாட்டேன் என்று கூறினேன், அதில் சிறிது சொற்பிழை ஏற்பட்டு என் எழுத்துக்களை நானே பெருமை யடித்துக்கொள்வது போல் ஆகிவிட்டது, தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி தோழி
Deleteஎங்க திரும்பினாலும் பில்லா பத்தின பேச்சு தான்..'தல' யே சுத்துது போங்க.
ReplyDelete//அடல்ட் ஒன்லி படம் என்பதால் மட்டுமே கொஞ்சம் வருத்தமாக(!) உள்ளது.// அநியாயதுக்கு நல்லவரா இருக்கீங்க. :))
என்ன செய்வது நண்பா, திருவிழா போல் தான் இருந்தது
Deleteவாலி, வில்லன், சிட்டிசன், வரலாறு என்று வித்யாசமான முயற்சிகளும் செய்வது தான் அவர் தொடர்ந்து இருப்பதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteபதிவு நல்ல தொய்வில்லாத நடையில் இருக்கிறது.
நிச்சயமாக சார் உங்கள் கருத்துகளை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன், சோதனை முயற்சி செய்வதில் தயங்காதவர்
Delete3மணிக்கே எழுதி விட்டீர் போல நானும் மூணு மணிக்கே படித்து விட்டேன் பதிவின் அடியில் பெரிய விளம்பரம் தேவையா அது....வெங்கட்பிரபு நம்பி மங்காத்தா போனேன் என சொன்னீங்களே சத்தியமா செம்ம காமெடி வெங்கட்பிரபுவே தலய நம்பி தான் படம் எடுத்தார் நீங்க மட்டும் எப்படி....பில்லா2 பார்த்தாச்சா நான் கடுப்பு ஆகிவிட்டேன் எனக்கு அப்பவே தெரியும் தல ஒரு ஹிட் கொடுத்தால் அடுத்தது ப்ளாப் என்று அதே போல நடந்து விட்டது....எப்பபா என்னமோ திருவிழா மாதிரி எங்க பார்த்தாலும் பில்லாவை பற்றி தான் பேச்சு நான் கூட திருவிழா எபக்ட் தான் இருந்தேன்...
ReplyDeleteஅப்போ நீ கூட முழிச்சு தான் இருந்தேன்னு சொல்லு, வெங்கட் பிரபு படத்துல கமேடிக்காகவாவது படம் ஓடும் நம்பிக்கைல போனேன் சின்னா
Deleteசொல்ல மறந்துட்டேன் தமிழ்மணத்தில் மூணாவது ஓட்டு போட்டுவிட்டேன்.....
ReplyDeleteஎன்னா பாஸ் ஓடி வந்தே பில்லா எப்பிடி இர்ப்பார் என்னு பார்க்க... :(
ReplyDeleteஆனாலும் நல்ல சுவாரஷ்யமா எழுதியிருக்கிறிங்க
நல்ல இருக்கு...
த. ம.4.
பில்லாவிர்க்கான தனி பதிவும் போட்டாச்சு நண்பா, படித்துப் பாருங்கள்
Deleteநண்பரே நீங்கள் ஒரு நேர்மையான ரசிகர் என்பதை உங்கள் எழுத்தின் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள். உங்கள் கதையிலேயே ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. எல்லா பயலுகளும் விவரம் தெரியாத வயதில் விஜய் ரசிகனாக உள்ளார்கள். கொஞ்சம் வயது வந்து விவரம் தெரிந்தவுடன் அஜித்தை ரசிக்க தொடங்கி விடுகிறார்கள். :)
ReplyDelete// உங்கள் கதையிலேயே ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது.// ஐயையோ அண்ணா இது கதையல்ல நிஜம்......
Delete//வயதில் விஜய் ரசிகனாக உள்ளார்கள். கொஞ்சம் வயது வந்து விவரம் தெரிந்தவுடன் அஜித்தை ரசிக்க தொடங்கி விடுகிறார்கள். :)// அப்படி மாறியவர்கள் பலரை நானும் பார்த்துள்ளேன்
//அந்தப் பாடலில் அஜீத் அவருக்கு தெரிந்த உடற்பயிற்சியை எல்லாம் செய்துகாட்டிக் கொண்டிருந்தார்.//
ReplyDeleteஹா ஹா ... ஆனா நம்ம பாக்கியராஜ் சாரை மிஞ்ச ஆள் இருக்கா?
உங்க எழுத்து நடை நல்லாயிருக்கு. பில்லா டூ நாளை பார்க்க ப்ளான் இருக்கு. அதனால இன்னும் ஒரு விமர்சனமும் படிக்கல.
உங்க முதல் வருகைக்கு நன்றி நண்பா, படம் பாருங்கள், விமர்சனம் எதுவும் படித்து விடாதீர்கள் . பின்பு படம் பார்க்கும் எண்ணத்தைக் கை விட்டுவிடுவீர்கள்
Deleteசூப்பர் ஆரம்பம்.ரசனைமிக்க எழுத்து நடை.கடைசில சொல்லாமலே விட்டீங்களே....!
ReplyDeleteபில்லா 2 எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பார்ப்போம்.
ReplyDeleteதல பத்தி நல்லா எழுதி இருக்கிங்க
த.ம. 5
ReplyDeleteபில்லா 2 எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பார்ப்போம்.
ReplyDeleteதல பத்தி நல்லா எழுதி இருக்கிங்க
நல்ல பகிர்வு. நமக்கு எல்லா நடிகர்களுமே ஒண்ணுதான்! :)
ReplyDelete