21 Oct 2013

ஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை

நான் படித்தது மிகவும் ஸ்ட்ரிக்டான கிறிஸ்துவப் பள்ளி, அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், (பிளாஸ்பேக் எழுத ஆரம்பிக்கும் பொழுது அப்போது என்ற வார்த்தையை துணைக்கு அழைக்கையில் பிளாஸ்பேக்குடன் ஒரு மெல்லிய ஹாஸ்யமும் வந்து சேர்ந்து கொள்வதை தவிர்க்க இயலாது போகிறது)

சரி சம்பவத்திற்கு வருகிறேன். பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த காலையில் புத்தகக் கூடைக்குள் ஒளித்து வைக்கப்ட்டிருந்த ரேங்க் அட்டையை அம்மா கண்டுபிடித்தது தான் அன்றைய தினத்தின் முதல் அதிர்ச்சி (இது எனக்கு) , கண்டுபிடிக்கபட்ட ரேங்க் அட்டையில் அம்மாவின் கையெழுத்து போடப்பட்டிருந்தது இரண்டாம் அதிர்ச்சி (இது என் அம்மாவுக்கு).

இனி வரப் போவது தான் மூன்றாம் அதிர்ச்சி.

முதல் அதிர்ச்சியை தங்க முடியாத அதிர்ச்சியில் நானும், இரண்டாம் அதிர்ச்சியை தாங்க முடியாத அதிர்ச்சியில் அம்மாவும் நின்று கொண்டிருந்தோம், இதற்குப் பின்னான நிகழ்வுகளில் சேதாரம் எனக்கு மட்டுமே 'சும்மா ஒரு மணி நேரத்துக்கு அந்த பைட் கண்டின்யு ஆனது'. 'அண்ணனப் பாரு, குமாராப் பாரு, அவனப் பாரு இவனப் பாரு' என்ற வகையில் அடுத்த அரைமணி நேரத்திற்கு அட்வைஸ். 

என்ன இருந்தாலும் பெத்த மனம் இல்லையா, சிறிது நேரத்தில் அம்மா சகஜ நிலைக்குத் திரும்ப, மீண்டும் என்னை பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்தத் தொடங்கினார். 'இனி இப்படி எல்லாம் பண்ண கூடாது. நல்ல புள்ளையா படிக்கணும்' என்றபடி என்னைக் கொஞ்சி கொண்டே பள்ளிக்கு அழைத்துச் செல்கையில் மணி பத்தைக் கடந்திருந்தது. 

பள்ளியின் வழக்கப்படி 8.30 மணிக்கு பள்ளியினுள் இருக்க வேண்டும் மீறினால் எங்க ஸ்கூல் ரொம்ப ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு... எனக்கு வாய்த்த கிளாஸ் டீச்சரோ அதைவிட ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு... 

"அண்ணனப் பாரு எவ்ளோ நல்ல புள்ளையா இருக்கான், நீ மட்டும் ஏம்ல இவ்ளோ சேட்ட பண்ற" என்றபடி அம்மா புலம்பிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார், என்ன நடக்குமோ என்பதை எண்ணி, என்னை விட அம்மாவுக்கு தான் டீச்சர் மீது அதிகமான பயம் வந்திருந்தது. 

"டீச்சர் கேட்டா என்ன சொல்ல, எதுக்கு லேட்ன்னு கேப்பாங்க, ஏதாது ஐடியா கொடு"  நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்ற கவலை அவருக்கு அதிகமாகி இருந்தது.  

"அம்மா எனக்கு காச்சல்ன்னு சொல்லுங்க, நா மூஞ்ச உம்ம்ன்னு வச்சிக்றேன், தப்பிச்சிரலாம்" என்றேன் அப்பாவியாக.

அதை கேட்டு என் கழுத்தைத் தொட்டுப் பார்த்தவிட்டு, அப்படி ஒன்னும் காய்ச்சல் இல்ல, அப்புறம் பொய் சொன்னது தெரிஞ்சா இதுக்குவேற அடிப்பாங்க, பேசாம உண்மைய சொல்லிருவோமா...?"

"ம்ம்மா, அதுக்கும் அடிப்பாங்க ம்மா" என்றேன் உடைந்த குரலுடன். 

"ஆமா இந்த அறிவு கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி இருந்து இருக்கணும், டீச்சர் மட்டும் நீ பண்ணின காரியத்த கண்டு பிடிச்சாங்க டிஸி தான். நல்ல மாட்டுன போ, அடி வாங்கு, நீ பண்ணுன காரியத்துக்கு உனக்கு நல்லா வேணும்"     

இருந்தாலும் இப்போது என்னைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் அம்மா, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். நான் அடிவாங்க வேண்டும் என்பது அம்மாவின் எண்ணம் இல்லை, குறைந்தபட்சம் அம்மா முன்னிலையில் நான் அடிவாங்கக் கூடாது என்பது தான் அம்மாவின் எண்ணமாக இருந்தது.

3A, இது தான் எனது வகுப்பறை. வகுப்பில் எனது இடம் மட்டும் வெறுமையாய் இருந்தது. வகுப்பறையின் வாசலில் என்னைக் கண்டதும் மாணவர்களிடையே மெல்லிய சலசலப்பு.  என்னை அப்பாவியாய்ப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள் எனது நண்பர்கள், காரணம் தாமதமாக வகுபிற்கு வரும் மாணவனின் நிலை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். அங்கே என்ன நடக்கப் போகிறது மேலும் எனக்கு எத்தனை அடிவிழப் போகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். 

"டீச்சர்" என்றேன்.

மூக்கின் மேல் இருந்த கண்ணாடிக்கும், கண்ணுக்கும் இடையே இருந்த இடைவெளி வழியே என்னைப் பார்த்துவிட்டு மெல்ல என் அருகே வந்தார்.

"டீச்சர்" என்று ஆரம்பித்த என் அம்மாவை இடைமறித்து "நீ சொல்லுடே உனக்கு என்னவாம், ஏன் லேட்டு, தூங்கிட்டியா, இல்ல வீட்டு பாடம் எழுதலையா, படவா, எலேய் அந்த டேபிள் மேல இருக்க ஸ்கேல எடுல"

இதெல்லாம் வழக்கமான பழகிப் போன நிகழ்வுகள் தான் என்பதால் நான் சாதரணமாக, மிகவும் சாதாரணமாக இருந்தேன், பாவம் அம்மாவின் கண்கள் தான் கலங்கிவிட்டன. இப்போது டீச்சரின் கைக்கு ஸ்கேல் வந்திருந்தது. எனக்கு அடிவிழப் போகும் அந்த நொடியைக் காண ஒட்டுமொத்த வகுப்பும் ஆவலுடன் காத்திருந்தது. ஸ்லோமோசனில் டீச்சரின் கையிலிருந்த அந்த ஸ்கேல் என்னை நோக்கி வருவது தெரிந்தது, என் மீது அது படத் தயாரான போது "டீச்சர்" என்றேன், துல்லியமான டைமிங் அடிவிழுமுன் நிறுத்திவிட்டார். ஓங்கிய கையைத் தளர்த்திவிட்டு "என்னல" என்றார்.

"டீச்சர் எனக்குக் காச்சல், டாக்டர்ட போனோம் அவரு வரல அதான் பள்ளிகூடத்துக்கு வர நேரமாயிருச்சு"

சட்டென்று ஸ்கேலை மறு கைக்கு மாற்றிவிட்டு கையைத் தொட்டு பார்த்தார், கழுத்தைத் தொட்டு பார்த்தார், சட்டையைக் கழற்றச் சொல்லி முதுகைத் தொட்டுப் பார்த்தார்.

இந்நேரத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாய் பயந்து போன எனது அம்மா "டீச்சர் அவனுக்கு லேசான காச்சல் தான், அவன உள்ள அனுப்புங்க" என்றார் பயத்துடன். 

இதைக் கேட்டதும் டீச்சரின் முகம் சட்டென கோபத்தில் சிவந்தது 

"புள்ளையா வளக்க புள்ள, மேல பாரு எப்படி தீயா கொதிக்குனு, மொதல்ல அவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போ, பாடம்லா எங்கையும் போயிராது... வீட்டுக்கு போல, நாளைக்கு வரலாம் பள்ளியோடதுக்கு" என்றபடி என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

இது தான் மூன்றாவது அதிர்ச்சி... எனக்கும் அம்மாவுக்குமாய்ச் சேர்த்து. அதிர்ச்சியில் என்னைக் கூட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.    

இந்நேரம் எனது மூளை கொஞ்சம் வேறுவிதமாக சிந்தித்து, சட்டென எனது புத்தகக் கூடையை நோண்ட ஆரம்பித்தேன், அந்த நிமிடம் நான் செய்கிறேன் என்று அம்மாவுக்கும் டீச்சருக்கும் புரியவில்லை. புத்தகப்பையில் இருந்து நிமிர்ந்த வேகத்தில் என் கையில் இருந்த ரேங்க் கார்டை டீச்சரின் முகத்தின் நேரே நீட்டி "ரேங்க் கார்ட்" என்றேன். 

அம்மாவின் முகத்தில் ஈயாடவில்லை. டீச்சரோ அதை வாங்கிப் பார்த்துவிட்டு "பையன நல்ல வளத்த்ருக்கம்மா, பையன் நல்லா வருவான். வீட்டுக்கு கூட்டிப் போ" என்றபடி தன்னிடமிருந்த சாக்லேட்டை என்னிடம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.

இந்த நொடியில் என்னைப் பற்றிய எனது அம்மாவின் மனநிலையை சிறிது எண்ணிப் பார்த்தேன், யாரையாவது திட்ட வேண்டுமென்றால் ராகவன் இதை அடிக்கடி சொல்வான் "சனியன் இதெல்லாம் எங்க திருந்தவாப் போகுது"    

44 comments:

  1. //பையன நல்ல வளத்த்ருக்கம்மா, பையன் நல்லா வருவான்.//

    இது அம்மாவுக்கு நான்காவது அதிர்ச்சினு நினைக்கிறேன் ..:-))

    செமையா இருக்கு சீனு. உங்களின் சின்ன வயசு குறும்பா..?

    'ஸ்கூல் பையனைப்' பற்றி எழுதியிருக்கீங்கனு முதல்ல நினைச்சிருந்தேன்...

    //அந்த நிமிடம் நான் செய்கிறேன் என்று அம்மாவுக்கும் டீச்சருக்கும்//

    இதில் 'என்ன' விடுபட்டுவிட்டது என நினைக்கிறேன்.

    முடிவு அழகா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இது என்னோட சின்ன வயசு குறும்பு தான் சார், நேற்று பதிவு எழுதுற மனநிலை இல்ல, இது பேஸ்புக்ல ஒரு ஸ்டேடஸ் போடுறதுக்காக எழுத ஆரம்பிச்சேன், அப்புறம் இவ்ளோ பெருசா எழுதினத ஏன் ஸ்டேடஸா போட்டு வீணாக்கனும்னு தான் இங்கயே பதிவு பண்ணிட்டேன்.

      அந்த வார்த்தையை திருத்தி விடுகிறேன் சார்

      Delete
  2. நான் கூட நாம ஸ்கூல் பையனை பத்திதான் ஏதோ விஷயம்னு நினைச்சேன். கதை நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்ன பண்றது நம்ம பதிவு ஹிட் ஆகணும்னா ஏதாவது ஒரு பிரபல பதிவரோட பேர தான் வைக்க வேண்டி இருக்கு :-))))))

      ஸ்பை இதில் எவ்வித உள் குத்தும் இல்லை :-))))

      Delete
    2. என்னது? பிரபல பதிவரா?

      Delete
    3. ஹி ஹி ஹி இதுக்குத்தான் மொதல்லையே சொன்னேன் இதுல உள்குத்து எதுவும் இல்லைன்னு

      ஆவி ரூபக் அரசன் ராஜா எங்கிருந்தாலும் உடனடியாக வருக குர்பானி ரெடி :-))))))

      Delete
    4. ஸ்பை, உங்க உயரம் உங்களுக்கே தெரியல.. அதை அளந்து காட்டிய சீனுவுக்கு நன்றி..

      Delete
    5. ஆவி ... சீனுவால் ஒரு உயரத்துக்கு மேல அளக்க முடியாது .... மீதிய நீர் அளப்பீராக ....!

      Delete
    6. இந்த "அளப்"பரைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே..

      Delete
  3. ரேங்க் கார்டை காண்பித்தது - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் - நான்காவது...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி டிடி

      Delete
  4. ஹா ஹா ஹா... நான் கூட என்னைப் பத்தி ஏதோ எழுதியிருப்பீங்கன்னு நெனச்சேன்....

    //மூக்கின் மேல் இருந்த கண்ணாடிக்கும், கண்ணுக்கும் இடையே இருந்த இடைவெளி வழியே என்னைப் பார்த்துவிட்டு மெல்ல என் அருகே வந்தார்.//

    நானும் மூணாம் கிளாஸ் படிக்கும்போது இதே மாதிரி பாக்கிற ஒரு டீச்சர் இருந்தாங்க... பேருதான் மறந்துபோச்சு....

    முடிச்ச விதம் சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. பின்குறிப்பில் இந்தக் கதையின் தலைப்பிற்கும் ஸ்கூல் பையனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தற்செயலே அப்டின்னு எழுதலாம்னு நினைச்சேன், ஆனா பாதி பாரு நம்ம கதையில பின்குறிப்ப படிச்சிட்டு தான் முன்குறிப்பையே படிக்கிறாங்க, சோ ஒரு வித்தியாசத்துக்கு அந்த குறிப்ப நீக்கிட்டா பதிவு பூரா காரணத்த தேடுவீங்க இல்ல... சிம்பிள் ஹா ஹா ஹா

      Delete
    2. சும்மாவே நம்ம நண்பர்கள் ஓட்டுவாங்க, இதில இது வேறயா?. அவ்வ்வ்வ்வ்...

      Delete
  5. ஸ்கூல் பையன்"ன்னு போட்டு....விருமாண்டி கதை போல ரூட்டு மாறிடிச்ச ராகவா....அசத்தல்....இந்த அனுபவம் எனக்கும் உண்டு...!

    ReplyDelete
    Replies
    1. அப்போ அதையும் எழுதிருங்கன்னே...

      என்னது விருமாண்டியா இதோ பின்னாடி அப்பாதுரை சார் வந்துட்டே இருக்காரு மீ எஸ்கேப் :-)))))))))

      Delete
  6. ராகவன் யாரு.. கொஞ்சம் கன்ப்யுஸ் ஆயிட்டேன்.. ஆங்ங்ங்ங்ங்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது ஆனந்தவிஜய ராகவன் இல்லை, ஸ்ரீனிவாச ராகவன்...

      Delete
  7. Replies
    1. த.ம 1 எனக்கு நானே போட்டதாக்கும் :-)))))))))

      Delete
    2. அது வேற பண்ணலாமா? இது தெரியாம போச்சே!!

      Delete
  8. நிஜம்தான்! இதெல்லாம் எங்க திருந்த போகுது!? அன்னிக்கு ஆரம்பிச்ச அந்த அப்பாவி லுக்கை இன்னும் மாத்திக்கலை போல!?

    ReplyDelete
  9. எத்தனை அதிர்ச்சி... அவ்ளோ நல்ல பிள்ளையா நீங்க???

    ReplyDelete
  10. நீங்க ரொம்ப நல்ல பையன் தான் போல.....:)))

    ReplyDelete
  11. பதிவு ஸ்பை பற்றி இல்லைன்னு தெரிஞ்சது அஞ்சாவது அதிர்ச்சி சீனு!

    மற்றபடி நல்ல ஜாலியாக இருந்தது படிக்க!

    ReplyDelete
  12. ஹஹா... நீங்க அப்பவே அப்படியா?

    ஆனாலும் அம்மா தான் பாவம்

    ReplyDelete
  13. இவ்வளவு சிறிதாக சீனுவிடமிருந்து ஒரு பதிவா ....?
    இது தான்யா ஆகப்பெரிய அதிர்ச்சி ...! அதிர்ச்சி ...! அதிர்ச்சி ....!

    ReplyDelete
  14. மூணாவது தாம்லே செம அதிர்ச்சி ...

    ReplyDelete
  15. ஜீவன் சுப்‌பு அண்ணனின் கருத்த்த்தை வழி மொழிகிறேன்

    ReplyDelete
  16. உன்னைய பாக்கும்போதெல்லாம் ஒரு சந்தேகம் வரும்ல ... அது இப்போ கிளியர் ஆச்சி...

    ReplyDelete
  17. ரசித்தும் சிரித்தும் மகிழ்ந்தேன். நாங்க எல்லாம் அப்பவே அப்படி! அப்படிங்கிற வசனம் தான் காதோரமா கேக்குது. அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா கொடுத்து அசத்திட்டீங்களே! டீச்சர் பண்ணின காமெடி கலக்கல் நண்பா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. முளைச்சு மூனு இலைவிடும்போதே இவ்ளோ வேலை பார்த்மிருக்கீங்களா

    ReplyDelete
  19. இத்தால் சகலருக்கும் தெரிவிக்கப் படுவது என்னவெனில் இக்கதையை நாம் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திராததே நான்காம் அதிர்ச்சியாகும்.

    எனது தளம்:
    http://newsigaram.blogspot.com/2013/09/kandasaamiyum-sundaramum-01.html

    ReplyDelete
  20. After reading this, I just cannot avoid remembering one incident similar to this when I was studying in sixth standard. Due to some reasons, the class was conducted underneath a big tree and it was about 4.00 p.m. That time, one policeman entered our class (?) and started beating a student by removing his belt. We were also taken aback for a moment and the student was running around the tree and the policeman chasing after him. After this drama was over, we came to know that the student was the son of this policeman and he has forged the signature of his father in the rank card which was detected by the class teacher and duly informed to the parents.

    ReplyDelete
  21. Welcome : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

    ReplyDelete
  22. அந்த வயசுலேயே என்ன ஒரு தைரியம்?

    ReplyDelete
  23. சார் நானும் தென்காசிகாரன்தான். நீங்க ஆர்.சி ஸ்கூலில் படித்தீர்கள்னு நினைக்கிறேன்.சரியா?

    ReplyDelete
  24. என்னுடைய பள்ளிகால நினைவுகளை நியாபகபடுத்திவிடீர்கள் .வழக்கம்போல அருமையான எழுத்து , கூடவே பயணிப்பது போன்ற தோற்றம் .

    ReplyDelete
  25. ஆஹா! அருமையான கதை. சின்ன வயசுக் குறும்புகளைப் பிற்பாடு நினைக்கும் போதுதான் ஒவ்வொருவர் மனநிலையும் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடியும்.

    ReplyDelete