23 Oct 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 23/10/2013

ஒரு தமிழ் ஆராய்ச்சி 

தமிழில் நாம் ஒன்பது என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒன்பது இருக்க வேண்டிய இடத்தில் முறையாக இருக்க வேண்டிய வார்த்தை தொண்டு, அதாவது 

தொண்டு = 9
தொண்டு + பத்து = ஒன்பது 
தொண்டு + நூறு = தொண்ணூறு 
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் 
தொண்டு + பத்தாயிரம் = ஒன்பதாயிரம் (ஒன்பது + பத்தாயிரம்)

கடந்த முறை தென்காசி சென்றிருந்த போது குமார்தான் இதுகுறித்துப் பேசினான். மேலும் இந்த தகவலை தென்காசி நூலகத்தில் இருந்த ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தாகவும்  முடிந்தால் அதனை பிரதி எடுத்து அனுப்புவதாகவும் கூறியுள்ளான், பார்க்கலாம்.  
    
ஏன் அவசரம் என்ன அவசரம்.......

ராஜாராணி திரைப்படம் பார்பதற்காக நான், வாத்தியார், ஆவி, ரூபக் மற்றும் ஸ்கூல்பையனுடன் ஐனாக்ஸ் சென்றிருந்த நேரம், படம் ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் முன் ஆவியிடம் "பாஸ் ரெஸ்ட் ரூம் போயிட்டு போயிறலாம்" என்றேன். இருவரும் நுழைந்தோம்.

யாரோ ஒரு புண்ணியவான் இயற்கை அழைப்பை ஏற்றுவந்த இடத்தில் பொழுதுபோகாமால் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. அவனிருந்த கதவினுள் இருந்து மெல்லிய சங்கீதம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்படி அவன் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பாடலைக் கேட்டதும் ஆவியே தலையிலடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

அந்த புண்ணியவான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் 

"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...?
ஏன் அவசரம் என்ன அவசரம்......."  

நமக்கு மட்டும் ஏன் ஆவி பாஸ் இப்படியெல்லாம் நடக்குது ....!

மதுரை ஆட்டோகாரயிங்க 

வைகையைவிட்டு இறங்கி மாட்டுத்தாவணி செல்வதற்காக நானும் அண்ணனும் மதுரை ரயில் நிலையத்தின் வெளியே பேருந்திற்காக கொண்டிருந்தோம். இரவு மணி பத்தைக் கடந்திருந்தது, மதுரையில் இருந்து தென்காசி செல்வதற்கு இரவு முழுவதும் பேருந்து உண்டு என்பதால் மாநகரப் பேருந்து வரும் வரை  காத்திருப்பது என்று முடிவு செய்து காத்திருந்தோம், ஆனால் பேருந்தோ வந்தபாடில்லை, இந்நேரத்தில் தான் மதுரை ஆட்டோ ஓட்டுனர்களின் அராஜகத்தைக் காண முடிந்தது.

நெல்லையைப் பொறுத்தவரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் கொஞ்சம் துடுக்காக பேசுவார்கள். வாய் கொஞ்சம் ஜாஸ்த்தி, சென்னையைப் பொறுத்தவரையில் மதிக்க மாட்டார்களே தவிர அதிகம் பேச மாட்டார்கள், ஆனால் மதுரையில் நிலைமை கொஞ்சம் வேறுவிதமாக இருந்தது.

பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டிருந்தனர், வரமுடியாது என்றவர்களை பார்வையாலேயே மிரட்டியும், தங்களுக்குள்ளாகவே அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருந்தனர். ஒருவர் இரண்டுபேர் இல்லை அன்றைய இரவில் நாங்கள் பார்த்த அத்தனை ஆட்டோ ஓட்டுனர்களும் இப்படித்தான் இருந்தார்கள்.

தமிழகத்தின் ஒரு முக்கியமான, மிக முக்கியமான மாநகரத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் இவ்வாறு நடந்துகொள்வது உண்மையில் வருத்தமளிக்கக் கூடிய விஷயம். 

ஒசக்கா ஒசக்கா 

கடந்த வாரம் நைட்ஷிப்ட் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு ஓரத்தில் இருந்து மூன்று பெண்களின் பேச்சுக் குரல் கேட்டது, சமீபத்தில் வெளியாகியிருந்த வணக்கம் சென்னை திரைப்படத்தில் வரும் ஒசக்கா ஒசக்கா பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர், அதாவது அந்தப் பாடலில் ஒரு வரியில் "எகன மொகன பாக்காம" என்ற ஒரு வரி வரும், அதைப் பற்றி தான் அவர்களது பேச்சும் இருந்தது.

"ஏய் கன மொகன னா என்னடி" முதலாமவள். 

"ஒசக்கானா என்னடி " இரண்டாமவள். 

"ஒசக்கானா....ம்ம்ம்ம் தெரியலையே..."

"தெரியலையா... இல்ல ஒசக்காக்கு மீனிங் இல்லையா..."

"MAY BEE"

"அதே மாதிரி தாண்டி கன மொகனயும்... அதுக்கும் மீனிங் கிடையாது"        

நல்லவேளையாக இப்போது மூன்றாமவள் பேசத் தொடங்கினாள் 

"ஹே அப்படி இல்லடி, கன மொகனனா எதுகை மோனைன்னு அர்த்தம். இது தமிழ்ல ஒரு டெர்ம்" என்றபடி அதுகுறித்து விளக்கம் கொடுத்தாள். 

மனம் நிம்மதியானது. தமிழ் வாழ்ந்த்ரும்டா கொமாரு வாழ்ந்த்ரும்... நீ கவலபடாத.

இரு பதிவுகள் 



ஜஸ்ட் கிளிக் - யாரென்று தெரிகிறதா 

பரங்கிமலையில் வைத்து வாத்தியாரை ஜஸ்ட் கிளிக்கியது அடியேன் தான். 
என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்...சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்...

29 comments:

  1. rasikkumpadi irukkirathu...

    ReplyDelete
  2. என்னை அவ்வளவு கீழருந்து அதும் க்ளோஸப்ல ஏன எடுத்தேன்னு இப்ப வௌங்குதுலே! பதில் மரியாதை செய்யலன்னா நாம டுமீலன்கள்... ஸாரி, தமிழன்கள் இல்லங்கறதால... உனக்கு ஒரு படமும், பாட்டும் தயாராயிட்டிருக்கு...!

    மூன்று பெண்களின் குரல்களை இவ்வளவு உன்னிப்பாய் கவனித்து, எழுதியதிலிருந்து நீ எவ்வளவு சின்ஸியரா ‘நைட் ஷிப்ட்’(!) பாக்கறேன்னு நல்லாத் தெரியுது. நீ நல்லா வருவடே!

    மதுரை ஆட்டோக்காரவிய்ங்க வற்புறுத்துவாங்கன்றது தெரியும்... ஆனா கெட்ட வார்த்தைல திட்டறது...? புதுசா இருக்கு... சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த என் மதுரையே...! நீயா இப்படி ஆகிப்போனாய்?

    நியாயமாப் பாத்தா ஒன்பதுங்கறது ‘தொன்பது’ன்னுதான் சொல்லப்படணும்ன்னார் பெரியார். இப்ப நீ தந்திருக்கற தகவல் எனக்குப் புதுசாத்தான்யா இருக்கு.

    குட் ரிலாக்ஸ் ஐ ஹேட்!

    ReplyDelete
    Replies
    1. தலைவர "ஹேட்" (வெறுப்பு) பண்ண வச்சிட்டியேப்பா !! டூ பேட்!! ;-)

      Delete
    2. No Veruppu (hate) AAVI! I feel happy!

      Delete
  3. மதுரையிலா இப்படி? அட !தலைவர் கணேஷ்:)

    ReplyDelete
  4. ஊருக்கு ஊர் ஆட்டோகாரர்களின் தொல்லை மாறுபடும்...

    வாத்தியாரின் விஸ்வரூபம் சூப்பர்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. வாத்யார் படம் மற்றும் அதில் எழுதியிருக்கும் வரிகள் நல்லா இருக்கு சீனு.....

    மதுரை ஆட்டோ ஓட்டுனர்கள் - கஷ்டம்....

    மற்றவர்கள் பேச்சை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சாச்சு... :)

    சிறப்பான ரிலாக்சேஷன்... தொடரட்டும்.

    ReplyDelete
  6. தொண்டு என்ற வார்த்தையையே தமிழிலிருந்து நீக்க பாக்கிஸ்தான் செய்த சதியா இருக்குமோ?

    ReplyDelete
  7. //"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...?
    ஏன் அவசரம் என்ன அவசரம்......." //

    சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி பாட்டு கேக்கறதுக்கு நம்ம ஆளுகள விட்ட வேற கிடைக்காது!!

    ReplyDelete
  8. //தமிழகத்தின் ஒரு முக்கியமான, மிக முக்கியமான மாநகரத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் இவ்வாறு நடந்துகொள்வது உண்மையில் வருத்தமளிக்கக் கூடிய விஷயம். //

    "தமிழ்வாசி" பிரகாஷ்- நீங்க இருக்கற ஊர்ல இப்படி நடக்குதா? ஐ திங்க் யு வேர் ஸ்லீபிங்!!

    ReplyDelete
  9. //கடந்த வாரம் நைட்ஷிப்ட் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு ஓரத்தில் இருந்து மூன்று பெண்களின் பேச்சுக் குரல் கேட்டது,//

    தமிழ் வாழுதோ இல்லையோ நீர் வாழரீரு!! வீட்டுப் பக்கம் ஆந்திரா கோங்குரா, ஆபீஸ்லே தமிழ்நாட்டு பப்பாளி.. ம்ம் ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. //"ஹே அப்படி இல்லடி, எகன மொகனனா எதுகை மோனைன்னு அர்த்தம். இது தமிழ்ல ஒரு டெர்ம்" என்றபடி அதுகுறித்து விளக்கம் கொடுத்தாள். // இந்த பதிலைச் சொல்லக் கூடிய திறமை சீனுவுக்கு மட்டுமே இருக்கு. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.

      Delete
    2. அட !! இப்படியும் நடந்து இருக்க கூடலாம் அல்லவா :)

      Delete
  10. ஒரு பொண்ணு பேச்சை கேட்டாலே தலை சுத்தும். இதுல மூணு பொண்ணுங்க பேச்சை கேட்டிருக்கீங்களா!? அதுலயும் நைட்ல!! சூப்பரப்பு

    ReplyDelete
  11. ஆட்டோக்காரங்கன்னாலே அடாவடிக்காரங்கதானே! இதுல எந்த ஊராய் இருந்தால் என்ன!?

    ReplyDelete
  12. கணேஷ் அண்ணா தொப்பைதான் இந்த படத்துல ஹைலைட்டே! இது உங்க தலைவரை இன்னும் அழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்கா காட்டுது!!

    ReplyDelete
  13. கணேஷ் அண்ணா தொப்பைதான் இந்த படத்துல ஹைலைட்டே! இது உங்க தலைவரை இன்னும் அழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்கா காட்டுது!!


    நான் வழி மொழிகிறேன்...

    ReplyDelete
  14. உங்களைப் போன்றே தமிழ் ஆராய்ச்சி முன்பு நானும் செய்துள்ளேன் ..இதோ அது >>.தொளையுண்ட நூறை தொண்ணூறு என்பார்கள் ...ஒருவன் வேண்டுதலுக்காக நாவில் சிறு வேலினால் அலகு குத்திக் கொண்டானாம் ,வேலினை வெளியே எடுத்துவிட்டுப் பார்த்தால் நாவில் தொளை நிரந்தரமாக தங்கிவிட்டதாம் ,அவனால் சரியாகவே பேச முடிய வில்லையாம் தொளையுண்ட நா 'தொணா'ஆகிவிட்டது ! தொல்காப்பிய தமிழ் இலக்கணப்படி ,தொணாஎன்பது இரட்டைக்கிளவியாகி தொணதொணாஎன்றாகிவிட்டது !இப்போது நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் ....தொணா வந்த வரலாறை தக்க சான்றுகளுடன் தெளிவாக அறிந்துகொண்டோம் ...தொணா என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை,அர்த்தமில்லாப் பேச்சை தொணதொணப்பேச்சு என்று சொல்வதன் அர்த்தம் புரிஞ்சுதா கூடல் பாலா அவர்களே ! .டாக்டரேட் வாங்கும் அளவிற்கு என்னை தமிழ் ஆராய்ச்சி செய்ய வைத்ததற்கு நன்றி ! on தின 'சிரி ' ஜோக்!புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?
    த,ம 5

    ReplyDelete
  15. ஆட்டோக்காரர்களின் அராஜகம்.....:((

    விஸ்வரூபமும் வரிகளும் அருமை...:))

    மூணு பொண்ணுங்க பேச்சை கேட்டு எங்களுக்கு விளக்கியதிலிருந்தே நல்லா வேலை செய்யறீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்....:)

    ReplyDelete
  16. சுவாரஸ்யமான விஷயங்கள். பு.ப கோணம் அருமை.

    ReplyDelete
  17. தமிழ் ஆராய்ச்சி! புதிய தகவல், ரெஸ்ட் ரூமில் கேட்ட பாட்டு கலகல! மூணு பேர்ல ஒருத்தருக்காவது எகன மொகன தெரிஞ்சதே! நல்ல விசயம்தான் சுவையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  18. ரிலாக்ஸ் ஆயிட்டோம் சீனு. வாத்தியாரின் பேனர் சூப்பர்

    ReplyDelete
  19. உடலை வைத்து கணக்கீடு உண்டு. முழுமை, அரை (இடை),கால் அது போல பத்து அதுக்கு குறைந்த எண் தொள்+பத்து. தொள்+து - தொண்டு. தொள் என்றால் குறை . கொங்கு பேச்சு வழக்கில் தொண்டு என்ற வார்தை இருக்கு. பின்னாளில் இது வசவு வார்த்தை. தொள்+பத்து - 9 - தொண்பது பின்னாளில் தொன்பது, அதன் பின் ஒன்பது. தெலுங்கில் தொன்பது (9) தொம்மிதி. கன்னடத்தில் ஒம்பத்து . தொள்+நூறு - தொண்ணூறு. சீனி உங்கள் நண்பர் சொன்னது சரி தான்.

    ReplyDelete
  20. தமிழ் ஆராய்ச்சி அறிந்து கொள்ள ஆவல் சீனு ... பிரதி வந்தால் எனக்கும்ஒரு பிரதி ...
    நீ எப்ப பார்த்தாலும் எதுக்கையா இளம்பெண்களை சீண்டிக்கொண்டே இருக்கீர் ...

    ReplyDelete
  21. ஒன்பது, பத்துக்கு ஒன்று குறைவு என்று அர்த்தம் சொல்கிறதா இந்த வார்த்தை...?? தமிழுக்கு தாம் செய்யும் "தொண்டு" நன்று.கொமாரு ஆதாரம் அனுப்பினாருனா பதிவுல பகிரவும். , //இளாம் பெண்கள்,நைட் ஷிப்ட், பேச்சுச்சத்தம்,..எகன..,மொகன.. // தமிழ் வளந்துரும்லே !! கொமாரு :) , நம்ம புத்தக குறிப்புகள் பற்றி பகிர்ந்துகொண்டமைக்கு Thanks ங்கண்ணா.., வாத்யாரின் விஸ்வரூபம் கேமராவுக்குள் முழுசா பிடபடலை போல !! .... :)

    ReplyDelete
  22. தொண்டைப் பிடிச்சிட்டிருந்தா சுருளி ஜோக் காணாமப் போயிருக்கும். நல்ல வேளை.
    யாரு கமலா.. தொண்டுபா.. அஹ.. சரிவரலிங்க.

    பகவான்ஜியின் பின்னூட்டம் சுவை.

    சுவாரசியமான பதிவு.

    ReplyDelete
  23. /தொண்டு = 9 //

    இது சிக்கலான அந்த பாலினத்தை குறிக்க பயன்படுத்துவார்களே... இனிமேல் தொண்டு என தூய்மையாக அழைக்கலாம் :-)))

    ReplyDelete
  24. // "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...?
    ஏன் அவசரம் என்ன அவசரம்......." //

    இது மரியான் படம் பார்த்துவிட்டு எப்போடா முடியும் என நொந்து போய் உட்காந்திருக்க, ஒரு வழியாக படம் முடியும் வேளையில் இந்தப்பாட்டு வந்தது. எடுத்ததுதான் ஓட்டம்....:-)))

    பரங்கிமலையில இதெல்லாம் நடந்ததா... ?

    சீனு எங்கள் ஊரில் 'ஒசக்க' என்கிற ஒரு பதம் உண்டு. அதன் அர்த்தம் 'மேலே.. ' . மாடிக்கு போ என்று சொல்வதற்கு ஒசக்க போ என்று சொல்வார்கள்.. நீங்கள் சொல்லும் ஒசக்கா ஒருவேளை இதுவா...?

    ReplyDelete