28 Jan 2014

டீம் டின்னர் - நடந்தது என்ன?

ன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோதே தெரியும் டீம் டின்னர், டீம் அவுட்டிங் போன்ற இத்யாதி இத்யாதிகளை எல்லாம் எதிர்கொள்ள நேருமென்று. அவுடிங்காவது பரவாயில்லை, தனித்திறமையை வெளிப்படுத்துதல் என்றளவில் ஆடவோ பாடவோ சொல்வார்கள், குறைந்தபட்ச கான(னா)க் குரலில்பாடி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த டீம் டின்னர் இருக்கிறதே...

ர் எல்லையில் காவல் தெய்வத்தின் முன் குத்தி வைக்கப்பட்டிருக்குமே வீச்சருவா, வேல்கம்பு, சூலாயுதம், இவற்றைப் பார்க்கும்போதே கண்களில் ஒருவித திகிலும் மிரட்சியும் ஏற்படும்அதே போன்ற ஒரு உணர்வை உணவகத்தின் சாப்பாட்டு மேஜையின் மீது கிடத்தபட்டிருக்கும் ஸ்பூன், போர்க், கத்தி ஆகிய மூன்றும் ஏற்படுத்தும். எப்போது இவற்றைப் பார்க்க நேரிட்டாலும் 'அது எவனோ வெள்ளைக்காரன் யூஸ் பண்றது, நமக்குத்தான் கை இருக்கே' என்ற மனநிலையிலேயே அவற்றை கடந்துவிடுவேன்.

ருந்தும் அன்றைய தினம் அப்படிக் கடக்க முடியவில்லை மேலும் என்னவெல்லாம் நடக்கக்கூடாதென நினைத்தேனோ, அவையெல்லாம் 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்' என்ற உற்சாகத்தில் என்னை நெரு(க்)ங்கிக் கொண்டிருந்தன. (i) டீம் டின்னாரில் என் சகாக்களோடு அமர வேண்டும் என்று நினைத்தது, புஸ். (ii) குறைந்தபட்சம் சதீஷ் அண்ணனோடு உட்காரவேண்டும் என்று நினைத்தது. புஸ்ஸ்ஸ் (iii) அதிகபட்சம் அவரின் அருகில் அமரக்கூடாது என்று நினைத்தது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த சதீஷ் அண்ணன் சைக்கிள் கேப்பில் எங்கோ நகர, அதே கேப்பில் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார் மூன்றாவது புஸ்ஸில் நான் மேற்கோள்காட்டிய அவர், இந்தப் பதிவின் முடிவில் மேற்கோள்காட்டபோகும் அவர் .      

மெரிக்காவில் இருந்து மானேஜர் வந்திருந்ததால் அவருடைய ஏற்பாட்டின்படி எங்களுடைய ஒட்டுமொத்த டீமும் டின்னருக்கு தயாராகி இருந்தோம். கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பசேரா என்னும் உயர்ரக உணவகத்தில் இரவு விருந்து தடபுடலாக காத்துக் கொண்டிருந்தது எங்களுக்காக. 

ழாம் வகுப்பில் ஆரோக்கிய சார் ட்யுசனில் படிக்கும் போது 'சார்' என்று சுண்டு விரலை காண்பித்துவிட்டு நானும் குமாரும் அவசரவசரமாக கொடிமரம் நோக்கி ஓடுவோம். கொடிமரத்தில் ஒர்ரூவா பரோட்டா உண்டென்று குமார் கூறியதில் இருந்தே, வாரத்தில் இருமுறையாவது அங்கே பரோட்டா சாப்பிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டோம். பாய் சுடச்சுட போட்டு எடுக்கும் பரோட்டகளில் இரண்டை வாங்கி, ஆவி பறக்கும் சால்னாவில் அப்படியே முக்கியெடுத்து, பாதிமென்றும் பாதிமென்னாலும் முழுங்கிவிட்டு, மின்னல் வேகத்தில் இடத்தை காலி செய்வதுதான் எங்களுடைய பால்யகால டீம் டின்னர்.

தென்காசி பழைய  பேருந்து நிலையம் அருகில் கிருஷ்ணா டூரிஸ்ட் ஹோம் என்ற ஒன்று உண்டு, அப்போதைக்கு அதுதான் தென்காசியிலேயே மிகபெரிய உணவகம். வருடத்தில் என்றாவது ஒருநாள் கார்த்தியம்மா எங்களை கிருஷ்ணாவிற்கு அழைத்துச்செல்வார். கிருஷ்ணாவினுள் நுழையும் அந்தநிமிடம் ஏதோ மிகபெரிய நட்சத்திர விடுதியினுள் நுழைந்ததுபோல இருக்கும் எங்களுக்கு. மேலும் வீட்டில் வைக்கும் சிக்கன் குழம்பு தவிர்த்து, வெவ்வேறு வகைகளிலும் சிக்கனை படுத்தியெடுக்கலாம் என்பதை அங்கு சென்றபோதே அறிந்து கொண்டேன், இது அப்போதைய டீம் டின்னரின் அடுத்த கட்டம்.

சென்னை வந்தபின் அவ்வபோது அஞ்சப்பர், ஆவடி அய்யா போன்ற உணவகங்களுக்கு சென்றிருந்தாலும், காரப்பாக்கம் ஹோலிஸ்மோக் என்னும் உயர்ரக உணவகத்தில் உணவருத்தியதுதான் என் முதல் டீம் டின்னர். 

ற்றே அதிகம் குளிரூட்டப்பட்ட அறை, சற்று குறைவான விளக்கொளி, மெல்லிய இசை, தேவைக்கு அதிகமான அமைதி. போகிறபோக்கில் 'மாஸ்டர் நாலு முட்டை, அதுல ஒண்ணு வெங்காயம், ரெண்டு முக்கா' என்றபடி ஆர்டர் எடுப்பவர்கள் எல்லாரும் பச்சை விளக்குப் பகுதிகளில் தஞ்சம் அடைந்துவிட, இங்கிருப்பவர்களோ நீட்டாக டை கட்டி, லோ டெசிபலில் பேசத்தயங்கும் துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள். முதன் முறையாக இதுபோல் ஒரு உயர்ரக உணவகத்தினுள் நுழைந்த போது மனம் ஏனோ வித்தியாசமாய் உணர்ந்தது. மேலும் இப்படி ஒரு பெரிய உணவகத்தினுள் முதல்முறை நுழைகிறேன் என்பதை என் கண்களே காட்டிக்கொடுத்தன. இன்னும் சொல்லபோனால் முதல்முறை யானையைப் பார்ப்பவன் மனநிலையில் இருந்தேன் நான்.ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது , நிச்சயமாக அது டீம் டின்னர் இல்லை, என்னைப் பொருத்தவரையில் ட்ரீம் டின்னர் என்று. 

ணவகத்தில் இருந்த பெரிய பெரிய மேசைகளின் நடுவே இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு குழியை வெட்டி வைத்திருந்தார்கள். ஹோட்டலில் இருந்த அது ஒன்று மட்டும் விளங்கவேயில்லை எனக்கு. யாரிடமாவது கேட்கலாம் என்றால், ஹீ ஹீ ஹீ அப்போ என் மனசாட்சி என்ன கேவலமா நினைக்கமாட்டான்? அதனால் பொங்கிப் பிரவாகம் எடுத்த ஆர்வத்தை மட்டுப்படுத்திக் கொண்டு விடையை எதிர்பார்த்து காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே கொதிக்கும் கங்குகளால் ஆன ஒரு பாத்திரம் போன்ற அமைப்பைக்கொண்டு அந்த குழியை நிரப்பினார்கள். மீண்டும் ஆர்வம், ஒருவேளை சினிமாவில் காண்பிப்பது போல உயிருள்ள ஒரு கோழியை அதில் தொங்கவிட்டு சாப்பிட சொல்லிவிடுவார்களோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன்.   

ல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. வடை சுட பயன்படுத்துவோமே ஒரு நீளமான கம்பி, அதுபோன்ற கம்பிகளில் சிக்கனையும் மட்டனையும் மீனையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி கபாப், தந்தூரி இத்யாதி இத்யாதி பெயர்களில் வைத்துவிட்டுச் சென்றார்கள். முழுமையாக சமைக்கப்பட்ட உணவுகளே என்றபோதும் இப்படி சாப்பிடுவதில்தான் பலருக்கும் விருப்பமாம். இதன் பெயர் பார்பிக்யு என்றார்கள்.



ஏற்கனவே டீம் டின்னருக்கு பழக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு கையில் போர்க்கையும், ஒரு கையில் கத்தியையும் ஏந்த, நானோ என்ன செய்வதெனத் தெரியாமல் விழிக்கத் தொடங்கினேன். நல்லவேளையாக எங்களில் பெரும்பாலானோருக்கு அதுதான் முதல் டீம் டின்னர் என்பதால், கைக்கு வெற்றி கிடைக்க, கை ஆளத் தொடங்கியது. அதன்பின் ஒவ்வொருமுறையும் இவர்களுடனேயே செல்வதால் போர்க் ஸ்பூன் கத்தி என எதையும் தொட்டுகூடப் பார்ப்பதில்லை.

னால் இன்றோ நிலைமை வேறு. ஒரு ப்ரொஜெக்டில் இரண்டு மூன்று பெரிய டீம் இருக்கும், ஒவ்வொரு பெரிய டீமிலும் சின்ன சின்ன டீம்கள் இருக்கும். இன்றைய டின்னருக்கு எங்களுடைய சக சின்ன டீம்கள் இணைந்த பெரிய டீமாக வந்திருந்தோம். போதாகுறைக்கு அமெரிக்காவில் இருந்து மானேஜர் வந்துள்ளார். இன்னும் போதாகுறைக்கு அவர் தான் என் அருகிலும் உட்கார்ந்திருக்கிறார். எங்களைச் சுற்றிலும் மற்ற மானேஜர்கள் லீடர்கள். 'எப்புடி வசமா சிக்கிகிட்டு இருக்கேன் பார்த்தியாப்பா' என்றான் என்னுள் இருந்த வடிவேலு. மற்றவர்கள் கூட பரவாயில்லை. அமெரிக்க மனேஜர் முன்னிலையில் எப்படி கைகளால் சாப்பிடுவது?  

சுற்றிலும் நோட்டம் விட்டேன். என் சகாக்கள் அனைவரும் ஆயுதங்களை கைகளில் எடுத்திருந்தார்கள். ஒருவர் கூட கைகளால் சாப்பிடவில்லை. பாய் கடைல பரோட்டா தின்ன பயல போர்க் யூஸ் பண்ண வச்சிருவாயிங்க போலியே என்றபடியே வலக்கையில் போர்க்கை எடுத்தேன். இல்லை போர்க் இடக்கையில் இருக்க வேண்டுமென்பது பாலபாடம். நல்லவேளை மாற்றிவிட்டேன். இருந்தும் சுற்றிலும் ஒருமுறை பார்த்தேன். எல்லாருமே இடக்கையில் தான் வைத்திருந்தார்கள்.


லக்கையில் கத்தியை எடுத்து, போர்க்கை அண்டை கொடுத்து சிக்கனை அறுத்தேன், நழுவியது. மீண்டும் சுற்றிலும் நோட்டம் விட்டேன். அனைவரும் அசால்ட்டாக அறுத்துக் கொண்டிருக்க, என் சிக்கனோ அல்வா போல் நழுவிக் கொண்டிருந்தது. எனக்கு மட்டும் முனை மழுங்கிப் போன கத்தியை கொடுத்து விட்டார்களோ என்று பார்த்தால், மற்றவர்களை விட கூர்மையான கத்தி என்னிடம்தான் இருந்தது. பேசாமல் கைகளுக்கு மாறிவிடலாமா என்று யோசித்தேன், இருந்தும் எப்போது தான் இதனை கற்றுக்கொள்வது? மெல்ல அறுக்கத் தொடங்கினேன், சிக்கனோ வேகமாக நழுவத் தொடங்கியது. என்னை சுற்றி அமர்ந்திருக்கும் அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு. சாப்பிட முடியவில்லை. அறுக்கவும் முடியவில்லை. 

சுற்றிலும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் போராடத் தொடங்கினேன். கொஞ்சம் பழகி இருந்தது. ஆனால் நான் ஒன்றை சாப்பிடுவதற்குள் அவர்கள் பலவற்றையும் காலி பண்ணியிருந்தார்கள். மனம் தளரவில்லை. சிக்கனும் மனம் தளராமல், நழுவிக் கொண்டே இருந்தது. கார்த்திக்கெல்லாம் இட்லி தோசையைக் கூட அசால்ட்டாக போர்க் வைத்து சாம்பாரில் முக்கி சாப்பிடுவார், கார்த்திகைப் பார்த்தேன், சிக்கன் அவரிடம் போராடிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தேன். நான் சிக்கனுடன் போராடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் தட்டில் இருந்த ஒரு சிக்கன் பறந்து போய் வெளியில் விழுந்தது, நல்லவேளை என்னைத் தவிர யாரும் அதனைப் பார்க்கவில்லை. இன்னும் சிலநிமிடங்கள் போராடிக் கொண்டிருந்தால் அந்த இடமே அலங்கோலமாகிவிட வாய்ப்பு இருந்ததால் என் மீது நானே நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.    

தில்மேல் பூனை போல் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த இடைவெளியில் என் அமெரிக்க மானேஜரை கவனிக்காமல் விட்டிருந்தேன். கவனித்த எனக்கோ அதிர்ச்சி + ஆச்சரியம். அந்த கூட்டத்திலேயே அவர் ஒருவர்தான் சத்தம் இல்லாமல் கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நொடி என்னிடம் உத்தரவு வாங்காமலேயே நானும் கற்காலத்திற்கு மாறியிருந்தேன் டாட்.

45 comments:

  1. ஆமாம் அந்த மானேஜர் அமெரிக்காவில் இருந்து வந்த இந்திய மானேஜரா?

    ReplyDelete
  2. சீனு நீ சிக்கன் எல்லாம் சாப்பிடுவியா? அய்யயயயயயய்

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வர்றிங்க. 'ஐ' or 'ஐய' வா. ஏற்கனவே தேசம் கொதித்துப் போய் கிடக்கிறது.

      Delete
  3. சீனு உன் தளத்திற்கு சைவம் சாப்பிடுபவர்கலெல்லாம் வருகிறார்கள் அதனால் சிக்கனை இப்படி திறந்து வைத்தால் நல்லாவா இருக்கு. மூடி வைச்சிருக்க கூடாதா?

    ReplyDelete
  4. இடது கையில் போர்க் என்பதெல்லாம் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் விட்ட கப்ஸா.

    ReplyDelete
  5. போர்க் எடுத்து நடு சிக்கன்ல குத்தி அமுக்கி வைத்து விட்டு அருக்கனும்ய்யா...!

    ஆக...சிக்கன் போயிந்தி.

    ReplyDelete
  6. 'சுவை'யான அனுபவம்தான்!

    அவர்கள் உண்மைகள் (அவன் பின் தலையில் ஒரு தட்டு தட்டு) யோசனைகளை ரசித்தேன்.

    //திரும்பிப் பார்த்தால் அமெரிக்க மானேஜர் கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்//

    எனக்கு இது 'அவன் ஒரு சரித்திரம்' காஞ்சனாவை நினைவு படுத்தியது!

    ReplyDelete
  7. கடைசியில் இப்படித்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.
    டீம் டின்னரை விவரித்த விதம் உண்மையில் அருமை. வாழ்த்துக்கள் சீனு

    ReplyDelete
  8. வலது கையால் ஃபோர்க்கை எடுத்தாலும் சரி... இடது கையால் ஃபோர்க்கை எடுத்தாலும் சரி... வாயில் போட்டுத்தான் சாப்பிட வேண்டுமென்கிற அடிப்படை ரூல்ஸ் மாறப் போவதில்லை. தப்பிச்ச! ஹி... ஹி...! அனுபவம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. மகத்தான தஹித்துவம். அடடா!

      Delete
  9. பார்பிக்யு உணவுகளை கம்பியிலிருந்து பிரித்தெடுப்பதற்கு இரண்டு முட்கள் மட்டுமே கொண்ட போர்க் கொடுப்பார்கள். நான் அது மட்டும்தான் பயன்படுத்துவேன். கை சுடாதுல்ல.... மற்றபடி எவ்வளவு பெரிய ஹோட்டலுக்குப் போனாலும் கை தான்....

    ReplyDelete
    Replies
    1. கம்பெனிக்கு ஒன்றிரண்டு பேர் இருந்தா பிரச்சனை இல்ல. நாம மட்டும் தனியாளா எப்படி சாப்பிட முடியும்!

      Delete
  10. என்ன ஒரு போராட்டம்...!

    அப்பாடா...! அமெரிக்க மானேஜருக்கு நன்றி...

    ReplyDelete
  11. // போர்க் இடக்கையில் இருக்க வேண்டுமென்பது பாலபாடம்.//

    அவசியமில்லை சீனு.. விஷயம் என்னன்னா வலுவான கைகளில் கத்தியையும், மற்றையதில் போர்க்கையும் பிடிக்க வேண்டும். லெப்ட் ஹேன்ட் பழக்கம் உள்ளவர்கள் கத்தியை லேப்டிலும், போர்க்கை ரைட்டிலும் பிடிப்பர்..

    ReplyDelete
  12. ஒரு மத்திய தர வகுப்பிலிருந்து முதல்முறை இதுபோன்ற கலாச்சார மாற்றம் நிறைந்த ஒரு சூழலுக்கு செல்லும்போது ஏற்படும் ஒரு அதிர்வை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்.. முதல்முறை அமெரிக்காவில் ஒரு டீம் லஞ்ச் சென்ற போது என் அனுபவமும் இதுபோலத்தான் இருந்தது. படிக்கையில் நான் எப்போதும் உங்களிடம் சொல்வது போல் "என் அனுபவத்தையே" மீண்டும் படிப்பதை போல் உணர்ந்தேன்..

    ReplyDelete
  13. முடிவு நன்று!

    ReplyDelete
  14. அருமையானான அனுபவம் சீனு எனக்கும் இந்தமாதிரி அனுபவம் நேர்ந்திருக்கிறது ஆனால் முதலில் ஒரு தயக்கம் இருந்தாலும் நான் உடனே கைகளால் சாப்பிட ஆரமித்துவிடுவேன் சாப்பிட்டு முடியும் வரை யாரையும் பார்ப்பதில்லை என்ற சபதத்தோடு உணவை உண்டபின் மற்றவர்களை பார்த்தால் முதலில் போர்க் மற்றும் கத்திகளை எடுத்தவர்கள் கடைசியில் நான் சாப்பிடுவதை பார்த்து கைகளால் சாப்பிட ஆரமித்திருப்பார்கள்...........உங்கள் அனுபவ வார்த்தை சுவாரஸ்யம் நிறைந்து இருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. neenga holy smoke-le paarthirukalame...andha barbeque setup-a sonnen....

    ReplyDelete
  16. //கார்த்திகைப் பார்த்தேன், சிக்கன் அவரிடம் போராடிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தேன். நான் சிக்கனுடன் போராடிக் கொண்டிருந்தேன்// :) ஆனா, நானும் உங்க கட்சி தான் - இதுக்குத் தான் தெளிவா போன் லெஸ் சிக்கன் ஆர்டர் பண்ணனும்! ;)

    ReplyDelete
  17. கையால் சாப்பிட்டாதான் சாப்பிட்ட மாதிரி இருக்கு. இல்லைன்னா சண்டை போடவே நேரம் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  18. ஸ்பூன், ஃபோர்க்லாம் வேற யாராவது யூஸ் பண்ண முடியும், நம்ம கைகள் நாம மட்டுமே யூஸ் பண்ணமுடியும். அதனால, இனி இப்படி சொல்லி மனசை தேத்திக்கோங்க. அடுத்த டீம் மீட்டிங்க்ல சைனீஸ் உணவு வரப்போகுது. ரெண்டு குச்சில எப்படி சாப்புட்டீங்கன்னு பதிவு போடுங்க.

    ReplyDelete
  19. பதிவை படிக்கும்போது உங்களை நினைச்சி பரிதாபம்தான் வந்தது..... கடைசியில் முடிக்கும்போது வாய் விட்டு சிரிச்சேன் !!

    ReplyDelete
  20. அருமையான டீம் டின்னர்..

    ReplyDelete
  21. திடங்கொண்டு போராடு சீனு ,போராடு !
    த ம 1 1

    ReplyDelete
  22. அருமையாச் சொல்லியிருக்கீங்க... என்றென்றைக்கும் நம்ம கைகள் தான் சிறந்தது...:)

    ReplyDelete
  23. அருமையா விளக்கியிருக்கீங்க..நம்மில் அனைவருக்கும் இப்படி ஒரு போர்க், கத்தியுடனான முதல் அனுபவம் இருக்கும்..

    ReplyDelete
  24. நான் ஸ்கூல் படிக்கிற காலத்தில்(1978-1982) TPS சொக்கலால் விளம்பர பலகை வைத்திருக்கும் புரோட்டா கடை ரொம்ப ஃபேமஸ். நடு பெட்ரோல் பங்க அருகில் இருந்தது அந்த கடை. இப்போது நிறைய கடைகள்.....அந்த பழைய சுவை எந்த கடையிலும் இல்லை...

    ReplyDelete
  25. மிகவும் அருமையாக பழக்கமில்லாத ஒன்றை பழகிகொண்டதை சுவையாக சொல்லியுள்ளீர்கள்! தன் கையே தனக்குதவி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. நம்ம கையிலேயே சாப்பிட்டு சாப்பிட்டு ஃபைன் மோட்டார் ஸ்கில் இல்லாமல் போய்விட்டோமோ என்கிற கவலை எனக்கு உண்டு.ஸ்பூன் ஃபோர்க்கை விடுங்க, சைனீஸ் எல்லாம் ரெண்டு குச்சியை வைத்துக்கொண்டு சூப்கூட குடிக்கிறாங்க. என்ன ஒரு ஸ்கில் இருக்கணும் இதுக்கு!! என்ன சொல்லுங்க நம்மளமாதிரி சோம்பேறிகள் உலகிலேயே கெடையாதுனுதான் என்னைப் பற்றி நான் நெனச்சுக்குவேன்! :)

    ReplyDelete
  27. சீனு,

    போஸ்ட் செமயா வந்திருக்கு... இந்த போஸ்டை நானே எழுதியிருக்கக் கூடாதா என்று எண்ணுமளவிற்கு பொறாமையாக உள்ளது... இந்த பதிவில் குறிப்பிட்ட கிட்டத்தட்ட எல்லா விஷயங்களும் எனக்கும் நடந்திருக்கிறது....

    ReplyDelete
  28. இந்த விஷயம் தில்லியில் எனக்கும் நடந்திருக்கு..... புலாவ் ஃபோர்க் வைச்சு சாப்பிடுவாங்க! பார்க்கும்போது எப்படி முடியுதுன்னு தோணும். :)

    நல்ல பகிர்வு சீனு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. Nice one...
    Though I can eat with fork n knife, i would like to eat with hands only...
    I never mind to do so when I am in India...
    But when I went to Europe an Indian colleague advised in a team party with the Europeans, that I cannot do so and the same will be considered as a disrespect to the culture of their land...
    I also learned a lot of other table manners...
    was very interesting...

    ReplyDelete
  30. சீனு எப்படி இதெல்லாம்...!
    நானும் இதே மாதிரி ரொம்ப சங்கடப்பட்டு இருக்கேன்...சமீபத்தில நீங்க அமெரிக்க மேனேஜர் பக்கத்துல மாட்டின மாதிரி நான் ஜப்பான் மேனேஜர்க்கு முன்னாடி! என் நிலைமை ரொம்ப மோசம்... கடைசியா போர்க் கூட போர் புரிய முடியாம அரைகுறையா சாப்பிட்டேன் .. பக்கத்துல இருந்தவன் கேட்டான்.. "என்ன டயட்டன்னு" ....கொடுமைய என்னசொல்ல.....

    ReplyDelete
  31. #பாய் கடைல பரோட்டா தின்ன பயல போர்க் யூஸ் பண்ண வச்சிருவாயிங்க போலியே என்றபடியே வலக்கையில் போர்க்கை எடுத்தேன். #

    நானும் உங்க சாதிதான் பாஸ். எங்கேயும் எப்போதும் கைலயெதான் சாப்புடுறது..!!

    நம்மாளுக சில பேரு.. நுடுல்சை சாப் ஸ்டிக் -ல் சாப்பிடுவாய்ங்க .. என்னால கரண்டிலயெ அத அல்ல முடியாது..

    ReplyDelete
  32. நம்மாளுக தான் சும்மா பிலிம் காட்டுறானுக.. அமெரிக்க காரனே கைல சாப்டுவானாம், இவனுகளுக்கு போர்க்காம்...

    ReplyDelete
  33. ஸ்பூனால சாப்பிட்டால் கையல வாடை இருக்காது. சிலருடைய கையில் ஒட்டிக்கொள்ளும் உணவின் நிறங்கள் பொதுவாக மஞ்சளும் சிகப்பும் அவ்வளவு விரைவில் போகிவிடாது. அப்புறம், சிலர் கையில் ஒழுகும் கிரேவியை நக்கும் போது அருவெருப்பாக இருக்கும். ஸ்பூனில் சாப்பிட்டு பழகறது கஷ்டம் இல்லை. எங்களுக்கு சோம்பல்

    ReplyDelete
  34. WOW just what Ι was loking fօr. Came here by searching foг Payday Loans

    Also visit my web site - payday loans lender

    ReplyDelete
  35. After I initially commented Ι appear to hаve clicked on the -Notify
    mе wnen new comments aree aɗded- checkbox and nօw eveгy time a сomment is
    added Ӏ receive 4 emails ԝith the ѕame comment. Is tɦere
    a means yօu ϲaո remove mе fгom that service?
    Τhanks a lot!

    my blog payday loans option

    ReplyDelete
  36. Heya i'm for the first time here. I came across this board
    and I find It really useful & it helped me out much.
    I hope to give something back and help others like you aided me.



    My blog post ... Dr Oz Garcinia Cambogia

    ReplyDelete
  37. A motivating discussion is definitely worth comment.
    There's no doubt that that you should write more about this
    issue, it may not be a taboo subject but usually
    people do not speak about such subjects. To the next!
    Cheers!!

    Look into my web blog quick loans

    ReplyDelete
  38. Excellent way of explaining, and good paragraph to obtain facts about my
    presentation subject, which i am going to convey in college.


    my web blog ... Garcinia Cambogia Dr. Oz

    ReplyDelete
  39. ரசித்தேன். :-) என் பிரச்சினை சாலட். முழுசுமுழுசா இருக்கிற இலைகளை மடித்து முள்ளுக்கரண்டியில் சொருகி வாய்க்குக் கொண்டு போக முன் அது விரிந்துவிடும். :-)

    ReplyDelete