26 Jun 2014

உங்கள் கேள்விக்கென் பதில் - தொடர்பதிவு

ரொம்பநாள் ஆகிவிட்டது இப்படி ஒரு தொடர்பதிவு எழுதி. பதிவுலகமும் இந்த தொடர்பதிவை மிக உற்சாகமாகவே எழுதிவருகிறது என்று நினைக்கிறன். என்னை எழுத அழைத்த வாத்தியாருக்கும் அப்புறம் இப்படி ஒரு சம்பவத்தைத் தொடங்கிவைத்த மதுரைத் தமிழனுக்கும் நன்றி நன்றி நன்றி. 



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? 

எழுதத் தொடங்கியதன் பின் பெரும்பாலான நேரம் என் கணினியுடன் தான் கழிகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் சரி வீட்டில் நாலு பேருடன் இருந்தாலும் சரி என் கணினி என் உரிமை டாட் :-) 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? 

இனிதான் எல்லாவனுக்கும் அந்த நல்ல காரியம் நடக்க போகுது.. அதுக்குள்ள எதுக்கு காரியம் அது இதுன்னுட்டு. இருந்தாலும் என் பதில் - நான் அவன் அருகில் இருப்பதே அவனுக்கு மிகபெரிய ஆறுதல் தானே!

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? 

இதுவும் எனகொன்றும் புதிதில்லை. இதுபோல் எத்தனையோ விசயங்களைக் கடந்து பக்குவப்பட்டு விட்டேன். தவறான தகவல் பரப்பிய நபர் யார் என்று தெரிந்தால் அந்த நபரைப் பொறுத்து என் செயல்பாடுகளின் அளவு மாறும். நெருங்கிய நண்பர் என்றால் சட்டை கிழியும் வரை சண்டை போட்டதெல்லாம் உண்டு. ஒருவேளை கூறியவன் எனக்குத் தேவையில்லாதவன் என்றால் தேவையில்லாதவன் தான் மொறைச்சுக்கவும் மாட்டேன் சிரிச்சுக்கவும் மாட்டேன் :-) 

 7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

என் விசயத்தைப் பொறுத்தளவில் இந்த ஒட்டு மொத்த சமுதாயமே எனக்கு அட்வைஸ் செய்யக் காத்துக் கிடக்கிறது. அதனால் நானாய் சென்று யாரிடமும் அட்வைஸ் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் நல்ல வார்த்தைகள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை. சிறுவயதில் இருந்து தங்கள் உயிரைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய என் நெருங்கிய உறவினர்கள் மற்றும் என் உயிரை எடுக்கக் காத்திருக்கும் தோழர்களிடம் இருந்து வரும் அட்வைஸ் என்றால் டபுள் ஓகே. 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்? 

என்னால் தீர்க்கமுடிந்த ஒரே ஒரு பிரச்சனை, நான் யாருக்கும் பிரச்சனையாய் இல்லாமல் இருப்பதுதான். ஆனால் அதற்கே அதிகம் பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. 

சரி பரவாயில்ல இந்த ஆன்சரையே  லாக் பண்ணிக்கோங்க கம்ப்யுட்டர் ஜீ. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?  

தெர்லயேப்பா... 

 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

மாலை வரை புத்தகவாசிப்பு. கொஞ்சநேரம் ஊர்சுற்றல். நள்ளிரவு வரை அல்லது போலீஸ் அனுமதித்தால் விடியவிடிய கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு கடலை ரசிப்பது. என் மனதிற்குப் பிடித்தவர்கள் யாரேனும் துணைக்கு இருந்தால் உத்தமம். தனியாக என்றாலும் பிரச்சனை இல்லை அதான் துணைக்குக் கடல் இருக்கிறதே (யே நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா இதையெல்லாம் வருங்காலத்துல வரலாறு பேசணும்). 

 3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக? 

யாரேனும் என்னைத் திட்டினால் கூட முதலில் முறைத்துவிட்டு பின் சிறிது நேரத்தில் சிரித்துவிடக் கூடிய ஆள் நான். அதனால் என்னிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பது திருநெல்வேலியில் சென்று அல்வா கேட்பதற்குச் சமம். இருந்தும் கூறுகிறேன். அரங்கம் அதிர அதிர சிரித்தது போனவாரமும் இன்றும் முண்டாசுப்பட்டி பார்த்த போதுதான். 

(யோவ் மதுர, கடைசியாக என்று போட்டுள்ளீரே வாத்தியார் இன்னுமா இதைக் கண்டு பொங்காமல் இருக்கிறார் :-) 

 2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 

என்னைவிட யாரெல்லாம் எதையெல்லாம் சிறப்பாக செய்கிறார்களோ அதையெல்லாம் நானும் சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஆட பாட ஓட எல்லாம் முயலமாட்டேன். எனக்கு எதுவெல்லாம் முடியுமென்று என்னிடம் ஒரு வரைமுறை உண்டே. அவ்வகையில் இவ்விருப்பம் வரமுறைக்கு உட்ப்பட்டதே! 

 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்? 

முதல் கேள்வியே கொஞ்சமும் சாத்தியம் இல்லாத கேள்வி. தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையின் புற அகக்காரணிகள் நம் வாழ்நாளை பாதியாகக் குறைக்க ஆரம்பித்துவிட்டன. (ரொம்ப சீரியஸா போறனோ. ரைட்டு டாட்). இதை முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கேள்வியாய் அணுகினால், ம்ம்ம்ம் எம்புட்டோ யோசிச்சிட்டேன் பதில் சொல்லத் தெரியல. இருந்தும் யோசிச்சதுல மொதல்ல வந்த பதில், சந்திராயன்ல பயணித்துக் கொண்டே பதிவர் திருவிழா கொண்டடானும்ன்றது தான். 

*****

யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவர்கள் :

மொ.ரா @ மொக்க ராசு-  யோவ் மொக்க எழுதல கண்ணீர்விட்டு அழுதுருவேன் சொல்லிபுட்டேன் ஆமா 

ஹாரி - அடேய் நீ மட்டும் எழுதல ஸ்ரீலங்கா வந்து அடிப்பேன் 

செங்கோவி - உங்க மேல எனக்கு நம்பிக்க இருக்கு (எப்புடி கோர்த்துவுட்டேன்)  

அப்துல்பாசித் - விகடன்ல மட்டும்தான் எழுதுவேன், இதையெல்லாம் கண்டுக்க மாட்டேன்னு அடம் புடிக்கக் கூடாது 

வரலாற்றுச் சுவடுகள் - யோவ் வசு உங்க ரீ என்டிரியை இங்கிருந்து ஆரம்பிக்கவும் 

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் 

அப்பா சார் - உங்களை மிரட்டல்லாம் முடியாது அதுனால சமத்தா எழுதிருங்க ( ஆனாலும் உங்களை எழுதச்சொல்ல எனக்கொரு தனி மனதைரியம் வேணும் :-) ) 

 *பெயர்களைச் சுட்டினால் அவர்கள் வலைப்பூவை அடையலாம்

46 comments:

  1. //சந்திராயன்ல பயணித்துக் கொண்டே பதிவர் திருவிழா கொண்டடானும்ன்றது தான். //

    ராஜா உன்னைய 100 வயசுல என்ன பண்ணுவ என்று கேட்கல.. 100 ஆவது பொறந்த நாளை எப்படி கொண்டாடுவ என்று கேட்கிறாய்ங்க..

    ReplyDelete
    Replies
    1. நூறாவது பொறந்தநாள் அன்னிக்கு பதிவர் திருவிழா கொண்டாட கூடாதா தலைவரே :-)

      Delete
  2. //2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    அவ்வகையில் இவ்விருப்பம் வரமுறைக்கு உட்ப்பட்டதே! //

    அப்படி தான் பின்னேரம் கமல் படம் பார்த்ததோ.. கடைசி வரைக்கும் பதில் சொல்லுதா பாரு பக்கி

    ReplyDelete
    Replies
    1. //என்னைவிட யாரெல்லாம் எதையெல்லாம் சிறப்பாக செய்கிறார்களோ அதையெல்லாம் நானும் சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். // யோவ் அப்போ இதைஎல்லா பதிலா ஏத்துக்க மாட்டீங்களா :-)

      Delete
  3. //கடைசியாக என்று போட்டுள்ளீரே வாத்தியார் இன்னுமா இதைக் கண்டு பொங்காமல் இருக்கிறார்//

    ஹி ஹி

    ReplyDelete
  4. //என்னால் தீர்க்கமுடிந்த ஒரே ஒரு பிரச்சனை, நான் யாருக்கும் பிரச்சனையாய் இல்லாமல் இருப்பதுதான். ஆனால் அதற்கே அதிகம் பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. //

    ப்ப்பாஆ எங்கையா இருந்த இவ்ளோ நாளா??

    ReplyDelete
  5. //நான் அவன் அருகில் இருப்பதே அவனுக்கு மிகபெரிய ஆறுதல் தானே!
    // அத அவன் சொல்லணும் ராசா!!

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி... நீ எங்கியாது தொலஞ்சு போனாலும் ஆறுதல்ன்னு சொல்ற பயலுவளும் இருக்கானுவோ என்ன பண்றது.. உற்ற தோழர்கள் ஆச்சே :-)

      Delete
  6. //கடைசியாக என்று போட்டுள்ளீரே வாத்தியார் இன்னுமா இதைக் கண்டு பொங்காமல் இருக்கிறார்//
    அதெல்லாம் பொங்கிட்டார்..

    ReplyDelete
    Replies
    1. செல்லாது செல்லாது.. சிரியஸ் இஸ் நாட் பொங்கல் :-)

      Delete
    2. நம்ம பசங்கன்னு உரிமையுள்ளவங்ககிட்ட, சொன்னா திருத்திக்கறவங்ககிட்டதான் பொங்கணும் சீனு. அத வுட்டுட்டு எல்லார்ட்டயும் பொங்கிட்டிருந்தா கன்ஃபர்ம் பண்ணிருவாங்க - லூசுன்னு... ஹி.. ஹி... ஹி..

      Delete
  7. /// அல்வா கேட்பதற்குச் சமம்... /// ஹா... ஹா...

    /// என்னிடம் ஒரு வரைமுறை உண்டே... /// அப்படிச் சொல்லுங்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. சந்திராயன்ல பயணித்துக் கொண்டே பதிவர் திருவிழா கொண்டடானும்ன்றது தான்.
    /
    நீங்க ஒரு மெட்ரோபாலிட்டன் விஞ்ஞானி பாஸ்

    ReplyDelete
  9. என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தொடர் பதிவிற்கு கூப்பிட்ட சீனுவிற்கு முதற்கண் நன்றி! நாளைக்கு வரவேண்டிய தொடர் பதிவு ஒன்று உள்ளதால் இப்போதைக்கு என் பதில்களை உங்க கமென்ட்லயே போட அனுமதி கோருகிறேன்.

    ReplyDelete
  10. 1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

    நூறு இல்ல பாஸ், அதுக்கும் மேல வாழறதுதான் என் நோக்கம். எந்த ப்ளேனும் இல்ல, நூறின்போது பார்த்துக்கலாம்!

    ReplyDelete
  11. 2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    தற்போதைக்கு ஆரோக்கிய சமையல்!

    ReplyDelete
  12. 3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

    பத்து நிமிஷத்துக்கு முன்ன, ஆதித்தியா பார்த்தப்போ!

    ReplyDelete
  13. 4.24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

    போனில் கேம்ஸ் விளையாடுவேன்

    ReplyDelete
  14. 5. Interesting Question. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

    பேசிக்கலி, நம்ம பதிவர்களின் இந்த பத்து கேள்வி பத்து பதில் பதிவில் இந்த கேள்விக்கான பதிலத்தான் நான் ரொம்ப ஆர்வமா படிச்சேன். ஏன்னா, அவுங்க சொல்லுற ஒவ்வொரு அட்வைஸும் எனக்கு பிற்காலத்தில் ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். “தட் கொழந்தையே நான்தான் மொமென்ட்ஸ்”

    ReplyDelete
  15. 6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

    உடனடியா, பெண்ணியம், பெண்ணாதிக்கம்!

    ReplyDelete
  16. 7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

    நான் மதிப்போரிடம். மத்தபடி யாரு அட்வைஸ் பண்ணாலும்,”குப்பன் சுப்பன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்யா” ஃபீல்லையே இருப்பேன்.

    ReplyDelete
  17. 8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

    மூணாவது கேள்விக்கு பதிலா, இதை சொல்லுவேன்.

    ReplyDelete
  18. 9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

    சீனுவின் பதிலே எனதும்.

    ReplyDelete
    Replies
    1. எம்பேரப் பார்த்ததும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்... நல்லவேள :-)

      Delete
  19. 10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

    கேம்ஸ், பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக், பிட்னெஸ் தளங்கள், இரவு நேரம்னா, எதாவது பிட்டு பிட்டா செஞ்சிகிட்டு இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த தொடர்லயே மிகவும் ஆபாசமான கேள்வி இதுதான். வயசுப்பசங்கக்கிட்ட கேக்கற கேள்வியா சார் இது.

      Delete
  20. //2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    தற்போதைக்கு ஆரோக்கிய சமையல்! // வீட்ல பொண்ணு பார்க்கிறாங்களோ!

    ReplyDelete
    Replies
    1. இல்லன்னே, இவருதான் பார்க்கலாமா வேணாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்காரு.

      Delete
  21. //நள்ளிரவு வரை அல்லது போலீஸ் அனுமதித்தால் விடியவிடிய கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு கடலை ரசிப்பது. என் மனதிற்குப் பிடித்தவர்கள் யாரேனும் துணைக்கு இருந்தால் உத்தமம்.//

    நாள் பூரா பீச்சுல ஒக்காந்து கடலை போடுவேன்னு எம்புட்டு நாசுக்கா சொல்லுது பாரு பயபுள்ள.

    ReplyDelete
  22. ///என்னை எழுத அழைத்த வாத்தியாருக்கும் அப்புறம் இப்படி ஒரு சம்பவத்தைத் தொடங்கிவைத்த மதுரைத் தமிழனுக்கும் நன்றி நன்றி நன்றி. ///

    நன்றி நன்றி நன்றி. என்று சொல்லிட்டா அப்படியே விட்டுடுவோமா இன்னும் 10 கேள்வியை அனுப்புவோம்ல..

    ReplyDelete

  23. தொடருக்கான அழைப்பை வித்தியாசமான முறையில் தந்து இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது . சீனு என்றால் வித்தியாசம்தானோ

    ReplyDelete
  24. 5. தெர்லயேப்பா.....

    ஹா ஹா ஹா.... மதுரைத்தமிழனிடம் கேளுங்கள் சீனு “ குழந்தைகளுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கனும்ன்னு....”

    உங்களின் பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது சீனு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. Answer any 5 questions, 8 questions - ippadi yethuvum illaya boss?

    ReplyDelete
  26. நூறாவது பிறந்தநாளுக்கு சந்திராயன்ல பயணித்துக்கொண்டே பதிவர் சந்திப்பா? அப்பா நூற்றைமபதாவது பிறந்தநாளுக்கு செவ்வாயில பதிவர் சந்திப்பு நடத்துவீங்க போல :p

    ReplyDelete
  27. பத்திலிருந்து கேள்விகளுக்கு பதில் சொல்லி வித்தியாசம் காட்டுறாராம்!!!

    ReplyDelete
  28. போலீஸ் அனுமதித்தால் விடியவிடிய கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு கடலை ரசிப்பது. என் மனதிற்குப் பிடித்தவர்கள் யாரேனும் துணைக்கு இருந்தால் உத்தமம்.
    >>
    ஹே! காண்ணாடி தம்பி காதலில் விழுந்திட்டியா!?

    ReplyDelete
  29. இதை முகநூளில் எழுதுகிறேன்!

    ReplyDelete
  30. வித்தியாசமான முறையில் பதில் அளித்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. ரிவர்ஸ்ல வந்ததே நல்ல டெக்னிக் தான்:)
    பதில் ஒவ்வொன்னும் சூப்பர்!!! அதிலும் அந்த ஆறாவது பதில் சான்சே இல்லை. இப்படி ஒரு தெளிவு எல்லாருக்கும் வந்துட்டா அப்புறம் ஏன் பிரச்சனை வரபோகுது! nice சகோ!

    ReplyDelete
  32. வித்தியாசம் - வரிசையிலும்.....:)

    ReplyDelete