ரொம்பநாள் ஆகிவிட்டது இப்படி ஒரு தொடர்பதிவு எழுதி. பதிவுலகமும் இந்த தொடர்பதிவை மிக உற்சாகமாகவே எழுதிவருகிறது என்று
நினைக்கிறன். என்னை எழுத அழைத்த வாத்தியாருக்கும் அப்புறம் இப்படி ஒரு சம்பவத்தைத் தொடங்கிவைத்த மதுரைத் தமிழனுக்கும்
நன்றி நன்றி நன்றி.
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
எழுதத் தொடங்கியதன் பின் பெரும்பாலான நேரம் என் கணினியுடன் தான் கழிகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் சரி வீட்டில் நாலு
பேருடன் இருந்தாலும் சரி என் கணினி என் உரிமை டாட் :-)
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இனிதான் எல்லாவனுக்கும் அந்த நல்ல காரியம் நடக்க போகுது.. அதுக்குள்ள எதுக்கு காரியம் அது இதுன்னுட்டு. இருந்தாலும் என் பதில் - நான் அவன் அருகில் இருப்பதே அவனுக்கு மிகபெரிய ஆறுதல் தானே!
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இதுவும் எனகொன்றும் புதிதில்லை. இதுபோல் எத்தனையோ விசயங்களைக் கடந்து பக்குவப்பட்டு விட்டேன். தவறான தகவல் பரப்பிய நபர் யார் என்று தெரிந்தால் அந்த நபரைப் பொறுத்து என் செயல்பாடுகளின் அளவு மாறும். நெருங்கிய நண்பர் என்றால் சட்டை கிழியும் வரை சண்டை போட்டதெல்லாம் உண்டு. ஒருவேளை கூறியவன் எனக்குத் தேவையில்லாதவன் என்றால் தேவையில்லாதவன் தான் மொறைச்சுக்கவும் மாட்டேன் சிரிச்சுக்கவும் மாட்டேன் :-)
7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் விசயத்தைப் பொறுத்தளவில் இந்த ஒட்டு மொத்த சமுதாயமே எனக்கு அட்வைஸ் செய்யக் காத்துக் கிடக்கிறது. அதனால் நானாய் சென்று யாரிடமும் அட்வைஸ் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் நல்ல வார்த்தைகள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்வதில் தப்பில்லை. சிறுவயதில் இருந்து தங்கள் உயிரைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய என் நெருங்கிய உறவினர்கள் மற்றும் என் உயிரை எடுக்கக் காத்திருக்கும் தோழர்களிடம் இருந்து வரும் அட்வைஸ் என்றால் டபுள் ஓகே.
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
என்னால் தீர்க்கமுடிந்த ஒரே ஒரு பிரச்சனை, நான் யாருக்கும் பிரச்சனையாய் இல்லாமல் இருப்பதுதான். ஆனால் அதற்கே அதிகம் பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது.
சரி பரவாயில்ல இந்த ஆன்சரையே லாக் பண்ணிக்கோங்க கம்ப்யுட்டர் ஜீ.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
தெர்லயேப்பா...
4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
மாலை வரை புத்தகவாசிப்பு. கொஞ்சநேரம் ஊர்சுற்றல். நள்ளிரவு வரை அல்லது போலீஸ் அனுமதித்தால் விடியவிடிய கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு கடலை ரசிப்பது. என் மனதிற்குப் பிடித்தவர்கள் யாரேனும் துணைக்கு இருந்தால் உத்தமம். தனியாக என்றாலும் பிரச்சனை இல்லை அதான் துணைக்குக் கடல் இருக்கிறதே (யே நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா இதையெல்லாம் வருங்காலத்துல வரலாறு பேசணும்).
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
யாரேனும் என்னைத் திட்டினால் கூட முதலில் முறைத்துவிட்டு பின் சிறிது நேரத்தில் சிரித்துவிடக் கூடிய ஆள் நான். அதனால் என்னிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பது திருநெல்வேலியில் சென்று அல்வா கேட்பதற்குச் சமம். இருந்தும் கூறுகிறேன். அரங்கம் அதிர அதிர சிரித்தது போனவாரமும் இன்றும் முண்டாசுப்பட்டி பார்த்த போதுதான்.
(யோவ் மதுர, கடைசியாக என்று போட்டுள்ளீரே வாத்தியார் இன்னுமா இதைக் கண்டு பொங்காமல் இருக்கிறார் :-)
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
என்னைவிட யாரெல்லாம் எதையெல்லாம் சிறப்பாக செய்கிறார்களோ அதையெல்லாம் நானும் சிறப்பாகச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஆட பாட ஓட எல்லாம் முயலமாட்டேன். எனக்கு எதுவெல்லாம் முடியுமென்று என்னிடம் ஒரு வரைமுறை உண்டே. அவ்வகையில் இவ்விருப்பம் வரமுறைக்கு உட்ப்பட்டதே!
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
முதல் கேள்வியே கொஞ்சமும் சாத்தியம் இல்லாத கேள்வி. தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையின் புற அகக்காரணிகள் நம் வாழ்நாளை பாதியாகக் குறைக்க ஆரம்பித்துவிட்டன. (ரொம்ப சீரியஸா போறனோ. ரைட்டு டாட்). இதை முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கேள்வியாய் அணுகினால், ம்ம்ம்ம் எம்புட்டோ யோசிச்சிட்டேன் பதில் சொல்லத் தெரியல. இருந்தும் யோசிச்சதுல மொதல்ல வந்த பதில், சந்திராயன்ல பயணித்துக் கொண்டே பதிவர் திருவிழா கொண்டடானும்ன்றது தான்.
*****
யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவர்கள் :
ஹாரி - அடேய் நீ மட்டும் எழுதல ஸ்ரீலங்கா வந்து அடிப்பேன்
செங்கோவி - உங்க மேல எனக்கு நம்பிக்க இருக்கு (எப்புடி கோர்த்துவுட்டேன்)
அப்துல்பாசித் - விகடன்ல மட்டும்தான் எழுதுவேன், இதையெல்லாம் கண்டுக்க மாட்டேன்னு அடம் புடிக்கக் கூடாது
வரலாற்றுச் சுவடுகள் - யோவ் வசு உங்க ரீ என்டிரியை இங்கிருந்து ஆரம்பிக்கவும்
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
அப்பா சார் - உங்களை மிரட்டல்லாம் முடியாது அதுனால சமத்தா எழுதிருங்க ( ஆனாலும் உங்களை எழுதச்சொல்ல எனக்கொரு தனி மனதைரியம் வேணும் :-) )
*பெயர்களைச் சுட்டினால் அவர்கள் வலைப்பூவை அடையலாம்