8 Oct 2012

சுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை


எச்சரிக்கை : தலைப்புகளை சுட்டுங்கள் பதிவர்கள் தளம் திறக்கும்


மீப காலத்தில் என் மனதிற்குப் பிடித்த கவிதை. என்னிடம் யாரவது கவிதைகளைப் பற்றி பேசினால் இந்தக் கவிதையை சொல்லாமலோ அல்லது ஆரம்பிக்காமலோ என் உரை முடிந்திருக்காது. நான் கவிதைகளை தேடித் தேடி படிப்பவன் அல்ல, ஆனால் விரும்பிப் படிப்பவன், அதிலும் ஒரு கவிதை பிடித்து விட்டால் மீண்டும் மீண்டும் படிப்பேன். நான் கூற விரும்பும் கவிதை விகடனில் வெளிவந்த கவிதை. தலைப்பை முதலில் படிக்காமல் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன், குழந்தையால் மனைவிக்கும் கணவனுக்கும் சண்டை நடப்பது போல இருக்கும். அந்த ஒரு வரியை என் மனது உள்வாங்கிய நேரம் என்னுள் அப்படி ஒரு சந்தோசம், சந்தோசம் என்று சொல்வதை விட இன்னதென்று அடையாளம் காணப்பட முடியாத ஒரு ஆனந்தம்.

து சற்றே பெரிய கவிதை, வார்த்தைகள் நியாபகம் இல்லை, என் நியாபகத்தில் இருந்த வார்த்தைகளைக் கொண்டு நான் கூற நினைத்த கவிதையைப் பற்றி தனி பதிவொன்று எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த கவிதையின் முடிவு இப்படியாகத் தான் என் மனத்தில் பதிந்திருந்தது. "எங்கள் வீட்டு குட்டி தேவதை நடக்க ஆரம்பித்து விட்டாள்". இந்தக் கவிதையை எழுதியவர் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறார் அவரும் ஒரு பதிவர் என்பதை அறிய வந்த பொழுதும் அந்த கவிதையை அவர் தளத்திலேயே வாசித்த பொழுதும் நான் அடைந்த உற்சாகம் அளவிட முடியாதது.   

ந்த பதிவர் வேறு யாரும் அல்ல, பதிவர் சந்திப்பில் சிறப்பாக வர்ணனை செய்த, அதே சந்திப்பில் நான் பேச வேண்டும் என்று நினைத்து பேசாமல் கடந்த ஒரு பதிவர், சுரேகா அவர்கள் தான்ஒரு வலைபூ எனக்கு பிடித்துவிட்டால் அதில் குறைந்த பட்ச ஆராய்ச்சி செய்யாமல் வெளிவருவது கிடையாது, சமீபத்தில் சுரேகா அவர்கள வலைபூவையு ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது கண்ணில் சிக்கியது அந்தக் கவிதை.  எனக்கு மிக மிக பிடித்த கவிதை, நன்றி சுரேகா சார்.      

*****************************

ஆயிரத்தில் ஒருவன் மணி - வருந்துகிறோம் 

முகப்புத்தகத்தில் சாப்பாட்டுக்கடை என்று ஒரு குழுமம் இயங்கி வருகிறது. வெகு சமீபத்தில் மணி அவர்களின் கருத்துகளை அங்கு படித்து வெகுவாக சந்தோசப்பட்டேன். பதிவர் சந்திப்பு குறித்து நடைபெற்ற கூட்டங்களில் அவர் கட்டிய ஆர்வம், சந்திப்பு அன்று அவர் செய்த பணிகள் அனைத்துமே பாராட்டத்தக்கது. சந்திப்பில் சாப்பிடும் பொழுது எனது நண்பன் ஆன்டோ கூறிய வரிகள் " உங்க அண்ணன் கல்யாணத்துக்கும் இவரையே கூப்பிடலாம் டா நல்லா செஞ்சிருகாறு". நெருங்கிய நண்பரை இழந்தது போன்ற உணர்வு. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். 

*****************************
                                                             

இந்தப் பதிவு முழுக்க முழுக்க சமகாலத்து பதிவர்களைப் பற்றிய விளம்பரமாகத் தான் இருக்கும். இதில் மாற்று கருத்துக்கள் இருப்பின் தெரிவியுங்கள் சங்கம் சார்பில் முடிந்தால் மன்னிப்பு கேட்கிறோம். சங்கத்தின் பெயர் காமடி கும்மி என்று அண்ணன் வரலாறு ஒரு flow வில் சொல்லிச் செல்ல, டெர்ரர் கும்மி அண்னண்ங்கள் வெறி கொண்டு வரலாறைத் தேடி வருவதாக உளவுத் துறை தகவல் சொல்லியது. அதற்குப் பயந்து நடுங்கிய அண்ணன் வரலாறு என்ன செய்வதென்று தெரியாமல் கீழ்க்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தற்போதைக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். 


தற்போது நான் பயின்றுவரும் உயர்கல்வி தொடர்பாக டிசம்பரில் எனக்கு தேர்வுநடக்கவிருப்பதால்… தேர்வுக்காக என்னை தயார்செய்துகொள்ளும் பொருட்டு தற்காலிகமாக சிறிதுகாலம் பதிவுலகில் இருந்து விலகியிருக்க முடிவுசெய்துள்ளேன்..!


நான் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுபவன் அல்ல, மாதத்திற்கு நான்கு பதிவுகள் எழுதினாலே ஆச்சிரியம்தான்...கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தமாக 36 பதிவுகள்தான் எழுதியிருக்கிறேன்.., இருப்பினும் Alexa (
current rank as worldwide; 395698); Indiblogger (current rank as India Level; 71) Tamilmanam (current rank, 52) போன்ற மதிப்புமிக்க தளங்களில்..., வலைத்தலங்களுக்கான தரவரிசைபட்டியலில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்! இதற்க்கு காரணம்... சர்வநிச்சயமாய் என் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள்தான் என்றால் மிகையில்லை! உங்கள் ஒவ்வொருவரின் வருகையும், கருத்துரையும், வாக்குகளும்தான் என்னை வெறும் 36 பதிவுகளில் இந்த அளவிற்கு உயரத்தை அடையச்செய்தது! 



என் எழுத்துக்களை வாசித்து, கருத்துரை வழங்கி, வாக்குகள் அளித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளை இவ்வேளையில் உரித்தாக்குகிறேன்! தேர்வை சிறப்பாய் எழுதிவிட்டு மீண்டும் உங்களை ஜனவரியில் சந்திக்கிறேன் நண்பர்களே...அதுவரை நீங்கள், எனக்காய் பொறுமையாய் காத்திருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்..!



மிக்க அன்புடன், 

இவ்வாறாக இருப்பதால், நிலைமை சீரானதும் மன்னிப்பு கேட்பதா வேண்டாமா என்பது பற்றி சங்கம் பிற்பாடு முடிவு செய்யும். அதையும் மீறி சங்கம் எங்களுக்கு மன்னிப்பு குடுத்தே தீர வேண்டும் என்று ஆசைபட்டால் நண்பன் ஹாரியின் தளம் வழியாக கேளுங்கள், பின்பு அதைப் பற்றி யோசிப்போம். இப்போது தான் மற்றுமொரு முக்கியமான விடயம் நியாபகதிற்கு வந்தது, 



தூங்கும் பொழுது கூட அடுத்த பதிவு பற்றி யோசிப்பவரா அப்படி என்றால் நீங்கள் தான் பிரபல பதிவர். ஒரு வேளை தூங்கும் பொழுது அடுத்து என்ன தளம் திறக்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால்  நீங்கள் தான் நம்பர் ஒன் பதிவர். நமது ஹாரி அப்படியாகத் திறந்த மூன்றாவது தளம் தான் கேளுங்க, என்ன கேட்கனும்னு கேக்றீங்களா எதுவேணும்னாலும் கேளுங்க. உங்க பேரு என்னனு வேணும்னாலும் கேளுங்க, உங்க கிட்ட கேட்டு அடுத்த பதிவுல உங்க பேர உங்களுக்கே சொல்லுவாரு. சங்கத்தின் நிகழ்காலத் தலைவன், எப்போது யாரால் பதவி பறிபோகுமோ என்ற பயத்தில் தூங்காமல் அடுத்த தளம் அடுத்த தளம் என்று இரவு பகலாக இயங்கிக் கொண்டிருப்பவர்.    


சமீப காலத்தில் நான் மிகவும் விரும்பிப் படிப்பது பிரபல பதிவர் அண்ணன் சதீஷ் செல்லதுரை அவர்களின் கவிதைகள். இவர் எழுதிய கவிதைக்கு நான் சென்று கமென்ட் இட, அது எவ்வளவு பெரிய பிழை என்பதை நினைத்து  இன்றளவும் வருந்திக் கொண்டுள்ளேன். எங்கள் சங்கத்து அடிதாங்கி இடிதாங்கி எல்லாம் இவர் தான். எதிரி பதிவர்களின் சோதனைக்கு ஆளாவதில் இவருக்கு அலாதி ஆர்வம். எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காது, மீண்டும் மீண்டும் சென்று மல்லுக்கு நிற்பார்.  சிங்கம் டா என்று பாக் கிரௌண்ட் மியூசிக் எல்லாம் போடச் சொல்லுவார். எங்கள் சங்கத்து தீவிரவாதி. பீ கேர் புல்.    



சில பதிவர்களை சந்தித்து விட்டேன், சிலரின் முகங்களைப் பார்த்து விட்டேன், தற்போது நான் சந்திக்க அல்லது முகம் பார்க்க விரும்பும் இரு பதிவர்கள் ஸ்ரீராம் சார் மற்றும் ரிஷபன். எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் தற்போது எழுதி முடித்து வெற்றி பெற்றிருக்கும் கதை தான் இப்படியும் ஒரு வெற்றிபெற்ற காதல் கதை. சமீப காலத்தில் படித்த சலிப்பு தட்டாத அதே நேரத்தில் வித்தியாசமான கதைக் களம் கொண்ட காதல் கதை, ஹீரோ சினிமாத் துறையைச் சேர்ந்தவன் ஆனால் நடிகன என்பதை சொல்லாமல் விட்டதால் லாஜிக் மிஸ் ஆகவில்லை. அது என்னவென்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சமீப காலமாக கிரிகெட் பற்றி முகப் புத்தகத்தில் இவர் செய்து வரும் அக்கப்போரு கொஞ்ச நஞ்சம் அல்ல. மனிதர் நின்னு ஆடுறாரு. ரவுசு தாங்கல.



லைப்பூவில் என்னை உரிமையோடு மாணவனாக ஏற்றுக் கொண்டவர், இல்லை என்னால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டவர், நான் அவரின் ஏலகலைவன். வாத்தியார் தற்போது எழுதி வரும் முழுநீள நகைச்சுவைத் தொடர் சிரித்திரபுரம். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ஹாஸ்யம் வைத்து அசத்துகிறார். அப்படி எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுப்பதாகக் கூறினார், பாவம் இளமை திரும்புவதால் மறந்து விட்டார் போலும்( ஹி ஹி ஹி). கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டுமா நிச்சயம் இங்கே கிடைக்கும். 


சங்க ஆலோசகர், புதிய பதிவர்களையும் புதிய சங்கங்களையும் ஊக்குவிப்பதில் வல்லவர் என்பதால் எங்கள் சங்கத்து ஆள எவனும் அடிச்சா அடுத்தமுறை  அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்குவார். எதிரி பதிவர்களைக் கலவரப் படுத்துவதில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. 


எங்கள் சங்கத்திற்கு என்று இருக்கும் ஒரே ஒரு அடியாள் இவர் தான். ஆண் தமண்ணா என்று பிரபல பதிவர் மெட்ராஸ் பவனால் புகழுரை சூடப்பட்டவர் வெள்ளைச் சிங்கம். வரலாறு மனப்பாடம் செய்து கொல்லுவார் என்றால் இவர் கடிதம் எழுதியே கொல்லுவார். ஆனாலும் இவர் கடிதங்கள் வரலாற்றில் இடம் பெறக் கூடியவை. பின்னொரு நாள் சங்கம் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடும் என்பதை மிரட்டலுடன் தெரிவித்துக் கொல்கிறேன்.    



சீனு  : அது எப்படி ராசா ஒரு வரிய மடக்கி மூணு வரியாக்கி கவிதைங்கற பேருல தைரியமா வெளியிடுறீங்க.

ராசா : தலைவரே உங்கள மாதிரி பக்கம் பக்கமா எழுதி அறுத்தா ஒரு பய படிக்கச் மாட்டான், ஒரு வரிய மடக்கனும், பொழுது போகாட்டா எவனையாவது நாலாவது வரியில கோர்த்து விடனும்

சீனு  : அண்ணே சங்கத்துத் தலைவரா இருக்குற முழுத் தகுதியும் உங்களுக்கு தான்னே இருக்கு, எப்படியாவது ஹாரிய போடுறோம், உங்கள தலைவராக்குறோம்.

ராசா : தலைவரே போரூர் பக்கம் ஒரு சின்ன பைசல் இற்கு அத முடிச்சிட்டு கொழும்பு பக்கம் போவோமா?

( பிரபல பதிவர் ஹாரி தலைமறைவு )        


சங்கத்தில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளை சரி செய்ய வல்லவர், எதிரி எங்கள் வலைப்பூவை ஹாக் செய்தால் உடனடித் தீர்வு அளிப்பவர். அப்படி வலைப்பூவில் திடிரென்று ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்கு அவர் கொடுத்த அற்புதமான தீர்வு படியுங்கள். எங்காளு எங்க கூட இருக்குற வரைக்கும் ஒரு பய எங்கள தொட முடியாது, என்று சங்கத்திற்குள் ஹாரிபாட்டர் சொல்லி வருவதாக திடீர் பகீர் தகவல் கிளம்பியுள்ளது. அதை உண்மையாக்கும் விதமாக பிளாக்கர் நண்பன் நடந்து வருவது சங்கத்திற்கு தெம்பூட்டும் விதமாக இருப்பதாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தலைமறைவான வரலாறு, அண்ணாச்சி கடை அக்கவுன்ட் புத்தகத்தில் எழுதி, நன்றாக வாங்கிக் கட்டியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.     


த்தனை நாட்களாக கோலிவூட் சட்டியினுள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த என்னை ஹாலிவூட வரை கொண்டு சென்றவர் ராஜ், பின்பு அவர் கம்பி நீட்ட, என் அறிவுக் கண்ணை திறந்து வருபவர் நமது ஹாலிவூட் ரசிகன். இவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் சினிமாவைப் பற்றி மட்டும் இல்லாமல் சினிமா கலந்த விமர்சனமாக இருப்பது அருமை. தற்போது நான் அடிக்கடி செல்லும் தளம்.   



திவுலகில் எங்கள் மூத்தவர் சங்கத்தை வழிநடத்த மற்றும் சங்கம் ஒன்று பட எருமை மாடாக உழைத்தவர். எங்களை ஒன்று சேர்த்தவர். இன்று அன்னாரின் வலைபூவிற்கு ஒன்றாவது பிறந்த நாள். தற்போது அலுவல் காரணமாக சற்று ஒதுங்கி  இருந்தாலும் நீகுழாய் ( யு ட்யுப்) மூலம்புதிய பரிணாமம் எடுத்து உள்ளார். எங்கள் அண்ணா திறந்த புதிய தொலைக்காட்சியை (சேனல்) இந்த சுட்டியின் மூலம் சென்று சேரலாம். சங்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் லிப்ட்டாக உழைப்பவர் என்பதை இங்கு பெருமையுடன் கூறிக் கொல்கிறேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



தொழிற்களம் தளத்தில் முகநூல் பற்றிய முழு வரலாறு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது, சீரிய முறையில் சிறந்த ஒரு தொடராக எழுத வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்க்கு உங்கள் ஆதரவும் உற்சாகமும் வேண்டும். கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த மாத இறுதியில் முதல் கட்டுரை வெளிவரும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளிவரும். முகல் தொடர் கட்டுரைக்கு நல்ல தலைப்பு ஒன்று கொடுத்தால் சந்தோசப்படுவேன்.        


126 comments:

  1. தற்போது நான் சந்திக்க அல்லது முகம் பார்க்க விரும்பும் இரு பதிவர்கள் ஸ்ரீராம் சார் மற்றும் ரிஷபன்.

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரிஷபன் சார்

      Delete
  2. //முகல் தொடர் கட்டுரைக்கு //

    தேவை இல்லாமல் கூகுளில் தேட வைச்சுட்டயே சீனு,,,

    குறிப்புகளுக்காக புத்தகங்களை வாங்கி, அதுல முகநூலை முகல் னு சொல்லலாமோனு தேடியும் பார்த்தோம்... சீக்கிரம் சொல்லுமையா..

    ( இந்த பின்னூட்டத்தை பகிராதே)

    ReplyDelete
    Replies
    1. //( இந்த பின்னூட்டத்தை பகிராதே)//

      அவர் பகிரவில்லை, பப்ளிஷ் கொடுத்துவிட்டார்!

      :D :D :D

      Delete
    2. இந்த பையன் இப்படிதாங்க,, சொன்ன பேச்சை கேட்கவே மாட்டேங்குறா,,

      Delete
    3. >>இந்த பின்னூட்டத்தை பகிராதே<<

      To சீனு..,

      நீ தாம்யா தமிழன்! இதை பார்க்கும் போது..எனக்கு ஒரு விளம்பரம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது!

      ****

      இங்கே விளம்பரம் செய்யக்கூடாதுன்னு எந்த சுவத்திலாவது எழுதியிருந்தா 'OK' எழுதி போஸ்டர் ஓட்டிட்டு போவானுகளே அந்த விளம்பரம் தான் ஞாபகத்துக்கு வருது!

      Delete
    4. //தொழிற்களம் குழு//

      முதல் என்பது முகல் என்று மாறி விட்டது சொற்பிழையை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சங்கம் சார்பில் தொழிற்களம் அமைபிற்கு அன்பான மிரட்டல் விடப் பட வேண்டும் என்று வரலாறு கூறிக் கொண்டுள்ளார். சங்கம் முடிவு செய்தே தீர வேண்டும்

      //Abdul Basith8

      அவர் பகிரவில்லை, பப்ளிஷ் கொடுத்துவிட்டார்! //

      சங்கத்திற்குள் கூச்சல் குழப்பம் அதிகம் ஆகும் என்று தெரிகிறது

      Delete
    5. //தொழிற்களம் குழு9 October 2012 11:47
      இந்த பையன் இப்படிதாங்க,, சொன்ன பேச்சை கேட்கவே மாட்டேங்குறா,,//

      குழு என் மீது வைத்திருக்கும் மேலான உயர்ந்த கருத்துக்களுக்கு சங்கம் தலை வணங்க வேண்டும்

      Delete
    6. //வரலாற்று சுவடுகள்//
      //To சீனு.., //

      //நீ தாம்யா தமிழன்!// என்னை தமிழன் என்று ஏற்றுக் கொண்டமைக்கு தமிழ் என்ன என்ன பாக்கியம் செய்ததோ

      Delete
  3. தொழிற்களம் உரிமையுடன் சீனுவிற்கு தனது எழுத்துரு படத்தை பகிர கேட்டுக்கொள்கிறது,,,

    நல்ல நண்பர்களை பகிர்ந்தமை நன்று சீனு,,

    வரலாறுவிற்கு வசந்தகாலம் வரை வாசனை கொஞ்சமாகத் தான் வீசும்..

    காரணம் வரலாற்றுசுவடு வருங்கால வரலாறு.. பதிந்துவைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்!

      Delete
    2. //வரலாறுவிற்கு வசந்தகாலம் வரை வாசனை கொஞ்சமாகத் தான் வீசும்..//

      //வாசனை கொஞ்சமாகத் தான் வீசும்// இதன் மூலம் குழு சொல்ல வருவது அப்பட்டமாக புரிகிறது. வெளியுரவுச் செயலாளர் வரலாறு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது குளிக்க வேண்டும் என்று சங்கம் கடுமையான உத்தரவு பிறப்பிகிறது

      Delete
  4. அடியேய் உனக்கு இருக்கு டி.. கொஞ்சம் வேலையா இருக்குறேன்.. ரெண்டு மணி நேரத்துக்கு பிறகு வந்து வைச்சுகிரேன்..

    ReplyDelete
    Replies
    1. மச்சி சீனு பார்த்தீயா... ஹாரி பயபுள்ள எங்கேயோ நல்லா அடி வாங்கியிருக்கு ...அரை மணி நேரம் வச்சு துவச்சிருக்காய்ங்க...அதான் பயபுள்ள ரெண்டு மணி நேரம் ரெஸ்டு கேக்குது!

      உடம்பு தேருன பிறகு பொறுமையா வா ஹாரி!

      Delete
    2. //அடியேய் உனக்கு இருக்கு டி.. // சர்வாதிகாரத் தலைமை... இப்படி ஒரு அடிதடி தலைவன் நமக்கு வேண்டுமா என்று "அன்பின் ராசா" புதிய தலைவராகும் தகுதி உடையவரே நீங்கள் சபீனா போட்டு விளக்க வேண்டும்

      Delete
    3. //அரை மணி நேரம் வச்சு துவச்சிருக்காய்ங்க.//

      வரலாறு அவர்களின் ஆகச் சிறந்த கருத்துக்கள் மகிழ்ச்சி அளிகிறது. சங்கத்தின் உள் மட்டும் ரவுடி யாக இருக்கும் நமது தலைவன் வெளி இடங்களில் அடிக்கி வாசித்திருக்க வேண்டும். பாவம் பச்சை புள்ள எவ்வளவு அடி தான் தாங்குமோ...

      யோவ் ராஜ் தலைவன் உயிர்க்கு ஆபத்து எதுவும் வரமால் பார்த்துக் கொல்லவும் ( சத்தியமா எழுதப் பிழை இல்ல )

      Delete
  5. சீனு எங்களை வைத்தே பதிவா? நான் மிக குறைவாகத்தான் வாசிக்கிறேன்..தெரியாத பல தளங்களை தெரிஞ்சிகிட்டேன்..ஆமா இந்த வரலாறு எங்கே?ஆராய்ச்சி ,அன்னாச்சினு கடலுக்குள்ள போய்ட்டாரா?

    சங்கத்து தலைவரிடம் ஒரு கேள்வி...ஒரே ஒரு தளத்தை வைச்சிக்கிட்டு நான் படும் அவஸ்தை...தலைவா எப்படி தலைவா அது தலிவர் கருணா மாதிரி மூணு தளம்?

    சங்கத்து தீவிரவாதி? இதுக்கு நீ கைப்புள்ள னு நேர சொல்லியிருக்கலாம்...கேர் புல்
    (என்னை சொன்னேன்)(வீட்ல இருந்த நண்பர்கள்,மனைவி அனைவரையும் சிரிக்க வைத்து விட்டாய்)

    பால கணேஷ் அண்ணன் உன் பதிவு மூலமா தெரியும்.அவரோட நகைச்சுவை தொடரை தொடர்கிறேன்.

    அப்துல் பிளாக்கர் நண்பன் ..நண்பன் மட்டும் இல்லைனா "தம்பி" காணாம போயிருப்பான்.நன்றி நண்பா..காலுக்கு கீழே ஒத்த ரூவா கிடக்குது பாரு..எடுத்துகிட்டேன்(லா லா லா லா லா )

    தொழிற்களம்...என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களில் ஒருவர்.

    ஆனந்த விகடனில் தொடர் எழுத மதனை கேட்டது மாதிரி....வாழ்த்துக்கள் தம்பி..கண் முன்னாடி ஒரு முன்னேற்ற பாதையில் தம்பியின் எழுத்துக்கள் விரிகிறது.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..

    சங்கத்து ஆளுக்கெல்லாம் பேர் இருக்கு சங்கத்துக்கு பேரென்ன?

    ReplyDelete
    Replies
    1. >>>>ஆமா இந்த வரலாறு எங்கே?ஆராய்ச்சி ,அன்னாச்சினு கடலுக்குள்ள போய்ட்டாரா?<<<

      நம்ம பய ஒருத்தனுக்கு நேபால் பர்ஸ்...ச்சே இப்போ பார்த்து ரோலிங் ஆகுது பாரு...ஆங்.. நோபல் பரிசு விழுந்திருக்குய்யா அதை வாங்குரதுக்காக இப்போ ஆப்ரிக்கா வந்திருக்கேன்!

      Delete
    2. வரலாறு வரலாறு படைக்கட்டும்......வாழ்த்துகள்.மறக்காமல் ஆப்ரிக்கா டான்ஸ் மனப்பாடம் பண்ணிட்டு வாங்க...

      Delete
    3. //சதீஷ் செல்லதுரை//

      நமது சங்கத்தின் "தம்பி அண்ணா" அவர்களை சொற்பொழிவு கலை இலக்கிய கவிதா (கவிதை) துறையை கவனித்துக் கொல்ல பணிகிறோம். நீண்ட நெடிய கட்டுரைகள் எழுதி கலைஞரின் கை வண்ணத்திற்கு ஆப்பு அடிக்கும் முழுத் திறமையும் பெற்ற கைப்புள்ள இவர் தான் என்பதை சங்கம் மனபாடம் செய்ய வேண்டும்

      Delete
    4. //கடலுக்குள்ள போய்ட்டாரா?// வரலாறு எப்ப பாரு ஒரு மார்க்கமா தான் சுத்துது... யோவ் கடலுக்குள்ள என்ன மீனா புடிகிரீறு, அப்போ தரையில் ரம்பா ஊர்வசி எல்லாம் புடிபீரா

      Delete
  6. ஆமா, சங்கம்..சங்கம்ன்னு சொல்லுறீங்களே..சங்கத்துக்கு பேரு ஒன்னும் இல்லையா..???? இல்ல பேரு வைக்கலையா..??

    ReplyDelete
    Replies
    1. ஆமா மச்சி கொள்கை பரப்பு செயலாளர் இப்போ தான் சங்கம் ஒன்று இருப்பாதா அறிவித்துள்ளார் சீக்கிரத்தில் பெயரையும் வெளிவிடுவார் என்று எதிர் பார்க்கலாம்

      Delete
    2. பொருளாளர் யாருப்பா?....சீக்கிரம் கொடி டிசைன் பண்ணுங்க,கொள்கை பரப்பு செயலாளர் அடுத்த பதிவில் கொள்கைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.சீனு அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி...

      Delete
    3. //ராஜ்
      இல்ல பேரு வைக்கலையா..??// இப்படி சங்கத்தை தாழ்வாக எடை போட வேண்டாம்.. நாமெல்லாம் தன்மான சிங்கங்கள்.

      //ஹாரி பாட்டர்
      ஆமா மச்சி கொள்கை பரப்பு செயலாளர் //

      தலைவர் என்னை கொ பா சே ஆகியதற்கு சீகிரமே ஒரு ஒரு பாராட்டு விழ நடத்தப் படும்

      ///சதீஷ் செல்லதுரை
      பொருளாளர் யாருப்பா?....சீக்கிரம் கொடி டிசைன் பண்ணுங்க,கொள்கை பரப்பு செயலாளர் அடுத்த பதிவில் கொள்கைகளை அறிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.//

      சங்கம் சீரிய வழியில் நடக்க பதை அமைத்துக் கொடுக்கும் நமது தம்பி அண்ணா அவர்களை சங்கம் வாழ்த்துகிறது

      Delete
  7. தல...நிறைய இடத்துல லிங்க் குடுக்க மறந்துடீங்க..

    ReplyDelete
    Replies
    1. //தல...நிறைய இடத்துல லிங்க் குடுக்க மறந்துடீங்க..//
      ஹன்ட் போர் ஹின்ட் விளையாடாதீங்கன்ன கேக்றீங்களா

      Delete
  8. //ஒரு வேளை தூங்கும் பொழுது அடுத்து என்ன தளம் திறக்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் தான் நம்பர் ஒன் பதிவர்///
    முழிச்சு இருக்கும் போது அடுத்த தளம் பத்தி யோசிச்சா, நீங்க எந்த நம்பர் பதிவர்..?? # மொக்கை..

    ReplyDelete
    Replies
    1. //முழிச்சு இருக்கும் போது அடுத்த தளம் பத்தி யோசிச்சா, நீங்க எந்த நம்பர் பதிவர்..// கடினமான கேள்விகளுக்கு சங்கம் பதில் அளிக்காது

      Delete
  9. தொழிற்களம் தளத்தில் முகநூல் பற்றிய முழு வரலாறு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது,


    இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //தலைபோல வருமா - சின்னா எங்கள் அண்ணா ----பதிவுலகில் எங்கள் மூத்தவர்//
    இவரு தான் பதிவுலகின் புரட்சி கலைஞர் விஜயகாந்த்.

    ReplyDelete
  11. சங்கத்தில் என்னை ஏன் சேர்க்கலை ? :))

    ReplyDelete
    Replies
    1. சார் சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்களை அகில உலக சங்க தலைவராக மாற்ற முயற்சிக்கிறோம், சங்க பொதுக் குழு விரைவில் கூட இருக்கிறது

      Delete
  12. மன்னிப்பு - வரலாறுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை!

    :D :D :D

    ஹாரி "கேளுங்க"னு ஆரம்பிச்சா, நாம "கேட்காதீங்க"னு ஒரு ப்ளாக் ஆரம்பிப்போம். என்ன சொல்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஆமா மச்சி உட்காருங்க நில்லுங்க தள்ளுங்க இப்படி வரிசையா தளங்கள் திறக்கலாம் என்று ஐடியா

      அப்பிடியே நீங்களும் உட்காராதிங்க, தள்ளாதிங்க, நிக்காதிங்க என்று வரிசையா திறந்துடுங்க

      Delete
    2. கண்டிப்பா... சங்க பொருளாளர் சீனு இருக்கும்போது எத்தனை வேணும்னாலும் நாங்க தொடங்குவோம்...

      Delete
    3. //"கேளுங்க"னு ஆரம்பிச்சா, நாம "கேட்காதீங்க"னு//
      இது போன்ற உற்சாகமான கருத்துகளை சங்கம் வரவேற்கிறது
      //சங்க பொருளாளர் சீனு இருக்கும்போது எத்தனை வேணும்னாலும் நாங்க தொடங்குவோம்...//
      என்னைப் பொருளாளர் ஆகிய உங்களுக்கு இந்தியப் பெருங்கடல் அடியில் நூறு ஏக்கர் நிலம் ஒதுக்கப் படுகிறது. சங்கம் உங்களை விரைவில் கவுரவிக்கும்

      Delete
  13. puthiya arimukangal irunthathu-
    pakirvukku mikka. nantri!

    ReplyDelete
  14. பேஸ்புக் பற்றிய தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பா!

    ஒரே ஒரு ஆலோசனை, தயவு செய்து "பேஸ்புக்" என்றே குறிப்பிடுங்கள்.

    முகநூல், மூஞ்சிபுத்தகம் என்றெல்லாம் மொ'லி'பெயர்ப்பு செய்ய வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழை வளர்க்க சீனு போராடும் பொழுது ஏன் தடை போடுகிறீர்கள்

      Delete
    2. இப்படித் தான் தமிழை வளர்க்க வேண்டுமானால், நான் ரெடி!

      முதல் வேலையா ஹாரி பாட்டர் என்ற பெயரை "தொல்லைப்படுத்து(ம்) குயவன்" என்று மாற்றிவிடுவோம்.

      சங்கத்தில் பெயர் மாற்றுவதற்கான படிவத்தை பூர்ர்த்தி செய்து கொடுக்கவும்.

      :D :D :D

      Delete
    3. //பேஸ்புக் பற்றிய தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பா!//
      //தமிழை வளர்க்க சீனு போராடும் பொழுது ஏன் தடை போடுகிறீர்கள்//

      பேஸ்புக் = முகநூல்

      கண்டுபிடித்தவன் சொன்ன பெயரை அப்படியே உபயோகிக்கலாம்.. தமிழில் மொழி பெயர்ப்பதை காட்டிலும் தமிழில் பயன்பாடுகளை உருவாக்க முயற்சிப்போம்..

      தொழிற்களம் ஆமோதிக்கிறது.

      Delete
    4. காசா பணமா மொழி பெயர்க்கட்டுமே தவறென்ன?தெரிந்த வரை நல்லதுதானே...இப்பவே பல திசைகளில் சங்கம் படையெடுப்பது சரியில்லையே....

      Delete
    5. //தமிழில் மொழி பெயர்ப்பதை காட்டிலும் தமிழில் பயன்பாடுகளை உருவாக்க முயற்சிப்போம்..//

      அட 'வொர்க்-பீல்ட்' பஞ்ச் எல்லாம் பேசுறாப்ல.. நான் சும்மா ஜாலிக்கு சொன்னேங்க..

      Delete
    6. //Abdul Basith//

      இப்போ டப்ட் வெர்சன்ல இருகிறபடியால ஹாரி பாட்டர் தான்.. ரீமேக் வெர்சன் வரும் போது பார்த்துக்கலாம்.. :-)

      Delete
    7. //பேஸ்புக் பற்றிய தொடருக்கு வாழ்த்துக்கள் நண்பா!// நீங்க தான் தல பெஸ்ட்டு, இப்படி கருது சொல்லுங்கன்னா யாராவது சங்கம் சார்பா உருப்படியா சொல்றாங்களா..
      நாம கண்டிப்பா தமிழ வளக்கணும் தல...

      //.இப்பவே பல திசைகளில் சங்கம் படையெடுப்பது சரியில்லையே....//
      " தம்பி அண்ணாவின்" தீவிரவாத குணம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று தலைவர் ஆசைப் படுகிறார் ஹா ஹா ஹா சத்தியமா சிறிப கன்ட்ரோல் பண்ண முடியல

      Delete
    8. //"தொல்லைப்படுத்து(ம்) குயவன்" என்று மாற்றிவிடுவோம்.// அதே அதே சபாபதே

      Delete
  15. எங்களைச் சொல்லி சுட்டி கொடுத்து பாராட்டியதற்கு நன்றி. ஏகப்பட்ட தளங்கள் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது. தேர்வு சிறப்பாக எழுத வாழ்த்துகள். முகநூல் பற்றிய கட்டுரை வெளியாகும் இடம் எது என்று சுட்டி கொடுத்தால் பார்க்க, படிக்க ஏதுவாயிருக்கும். சமீபத்தில் 'எங்கள்' பக்கம் உங்களைக் காணோமே சீனு!

    ReplyDelete
    Replies
    1. >>>தேர்வு சிறப்பாக எழுத வாழ்த்துகள்<<<

      நன்றி!

      Delete
    2. //சமீபத்தில் 'எங்கள்' பக்கம் உங்களைக் காணோமே சீனு!// இனி உங்கள் பக்கம் அடிகடி என்னை பார்க்கலாம் சார்.. கட்டுரை வெளியாகும் பொழுது உங்களுக்கு சுட்டி தருகிறேன் சார்

      Delete
  16. பதிவர்கள் அறிமுகம் அருமை, அனேகம் பேரை நான் வாசித்து வருகின்றேன். மணி அவர்களின் மறைவு அறிந்து வருந்துகின்றேன் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  17. சங்க நண்பர்களின் 'லேட்டஸ்ட்' தகவல்கள்...!!!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  18. சினிமா சினிமா - "அடி"யாள் எப்பிடி ஒரு நாலடி இருப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. ஆகச்சிறந்த கருத்துரை...அந்தி சாய்வதற்குள் இவற்றை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும்!

      Delete
    2. மனப்பாடம் செய்றேன், மனப்பாடம் செய்றேன் என்று ப்ளாக்ல மனப்பாடம் செய்ததையெல்லாம் தேர்வில் எழுதிடாதீங்க...

      Delete
    3. சங்கத் தலைவர் நம்மை வம்புக்கு இழுப்பது அவரது பதவிக்கு நல்லதல்ல, ஆப்பு அடிக்கப்படும்....

      Delete
    4. >>>மனப்பாடம் செய்றேன், மனப்பாடம் செய்றேன் என்று ப்ளாக்ல மனப்பாடம் செய்ததையெல்லாம் தேர்வில் எழுதிடாதீங்க<<<

      கடைசியா அதுதான் நடக்கும் போல் இருக்கு..,

      பதிவு எழுதாம இருக்கலாம்னு பார்த்தா இந்த சீனு விடமாட்டாப்ல போல் இருக்கு!

      Delete
  19. சிங்கக் குட்டிகள் கூட்டமா கிளப்பிருச்சேய்ய்ய்ய்ய்ய்...
    இனி என்ன நடக்குமோ...ஏது நடக்குமொ...

    அரசன் வெள்ளைத் தன்னாவா??....சொல்லவே இல்லை!!!!!

    வரலாறு.... அகல்வாராய்ச்சிக்கு போய்ட்டாப்லயா...

    எலேய் பசங்களா சங்கக்கூட்டம் நடத்தும்போது ஏதும் தீனி வாங்கி சாப்பிட்டா என் பங்கை பார்சல்ல அனுப்பிருங்கலே...இல்லைனா...ஆட்டத்தை கலைச்சிருவோம்.... ஜாக்க்க்கிறதை....:-))))

    ReplyDelete
    Replies
    1. உறுப்பினர் கட்டணம் 50 ஆயிரத்தை அனுப்பிடுங்கண்ணே!

      :) :) :)

      Delete
    2. நாளாந்த சந்தா வெறும் 500 /- தான்..

      Delete
    3. என்னாது உறுப்பினர் கட்டணம் 50 ஆயிரமா... அப்போ சங்கத்து பொருளாளர் பதவியை எனக்கே கொடுத்துருங்கய்யா.... எனக்கு வீடு கட்டவேண்டியதிருக்குது!

      Delete
    4. வரலாறு அண்ணே, நான் உங்க உதவியாளன்....மனப்பாடமா இருக்கட்டும்.

      Delete
    5. //பட்டிகாட்டான்
      சிங்கக் குட்டிகள் கூட்டமா கிளப்பிருச்சேய்ய்ய்ய்ய்ய்...ஆட்டத்தை கலைச்சிருவோம்.... ஜாக்க்க்கிறதை....:-)))) //

      சீனியர் நம்ம ராக் செய்கிறார் இதை தடுக்க தகுந்த நடவடிக்கை ஈ பி கொ சார்பில் எடுக்கப் பட வேண்டும்...


      //உறுப்பினர் கட்டணம் 50 ஆயிரத்தை அனுப்பிடுங்கண்ணே!// நாந்தான் பொருளாளர் நாந்தான் பொருளாளர் நாந்தான் பொருளாளர்

      Delete
  20. தம்பி என் சீட்டுக்கு அடில இம்மாம் பெரிய குண்டு வச்சதன் பின்னணி என்ன? அது என்ன சங்கத்து ஆளு? ஐ ஆம் ஆல்வேஸ் சுயேட்சை.

    ReplyDelete
    Replies
    1. அதாவது யார கேட்டு இந்த சங்கத்தில என்ன இத்தாந்த என்னு கேட்கிறாப்ல

      Delete
    2. //ஐ ஆம் ஆல்வேஸ் சுயேட்சை.// சங்க ஆலோசகர் நமக்கு கொடுத்த முதல் ஆலோசனை, கடுமையாகக் கடை பிடியுங்கள், என்கு சென்றாலும் சுயேட்சையாக செல்லுங்கள், நமக்கு அடி கிடைச்சாலும் அடுத்தவன் பாத்ர கூடாது

      சிவா இது போன்ற அருமையான ஆலோசனைகள் வரவேற்கப் படுகிறது

      Delete

  21. @சதீஷ்
    // சங்கத்து தீவிரவாதி? இதுக்கு நீ கைப்புள்ள னு நேர சொல்லியிருக்கலாம் //

    நல்லா மறுபடியும் ஆழமா படிங்க... சீனு உங்களைவச்சி பயங்கரமா காமிடி பண்ணி...கந்தர்கோலம் ஆக்கிருக்கான்....நீங்க யார்னு காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு....வீடாதீங்க அவனை.....ஏக் மார் தோ துக்கடா...

    (அப்பாடா கோர்த்து விட்டாச்சு.... ஏதும் ரணகளம் ஆனா சந்தோசம்...)

    ReplyDelete
    Replies
    1. இல்லை பாஸ் நான் ரொம்பபப... நல்லவன்.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்...

      Delete
    2. >>>ஏக் மார் தோ துக்கடா..<<<

      அண்ணே ஏக்-க்கு பிறது தோ-தான்னே...இடையில மார் வராது! ஏக்., தோ, தீன்., சார்...இப்பிடி போயிகிட்டே இருக்கும்!

      #எங்களுக்கும் மலையாளம் தெரியும்!

      Delete
    3. ஏக் காவ் மே ஏக் கிஷான் ரகு தாத்தா .....மனப்பாடம் செய்யவும்..இது மலையாளம் அல்ல.

      Delete
    4. அதாவது கிஷான் என்பவர் ரகுவின் தாத்தா என்று சொல்றீங்க... அப்படி தானே?

      Delete
    5. //(அப்பாடா கோர்த்து விட்டாச்சு.... ஏதும் ரணகளம் ஆனா சந்தோசம்...)// என்னை ஒரு சந்தோசம், சங்கத்தை கலைக்க நடைபெறும் சூழ்சிகள் கண்டு நமது தீவிரவாதி ஆவேசப் படக் கூடாது என்று சங்கம் அறிவுறுத்துகிறது

      Delete
    6. //வரலாற்று சுவடுகள்//

      //ஏக்., தோ, தீன்., சார்...இப்பிடி போயிகிட்டே இருக்கும்! //
      ஏக்., தோ, தீன்., சார் மட்டும் தன் போவாங்களா மேடம் போக மாட்டங்களா... வரலாறு நீங்கள் முறையாக தெலுங்கு கற்று வர சங்கம் ஆணை இடுகிறது

      Delete
  22. இப்படி ஒரு பதிவ எழுத எத்தன நாள் எடுத்து கொண்டைய்யா சீனு ...

    ReplyDelete
    Replies
    1. இதையும் பதிவுன்னு ஒத்துக்கிட்ட உங்க மனோ தைகிரியத்தை பாராட்டி... அந்த காலத்து கனவுக்கன்னி நடிகை சரோஜாதேவி உபயோகிச்ச பழைய சோப்பு டப்பா உங்களுக்கு ஃபிரீ!

      #இனிமேலாவது குளிங்கய்யா

      Delete
    2. //இப்படி ஒரு பதிவ எழுத எத்தன நாள் எடுத்து கொண்டைய்யா சீனு ...//

      நாட்கணக்கில் பதிவு எழுத சங்கம் இதுவரை உருப்படியாக ஒன்றும் சாதித்து விடவில்லை. வெறும் இரண்டு மணி நேரமே எடுத்துக் கொண்டேன் தலைவரே

      Delete
  23. ஒரு தளத்துக்குப் போனால் அந்தத் தளத்தின் பழைய சுவாரஸ்யங்களையும் படித்துப் பதிவிடும் உன் பழக்கம் கண்டு வியந்து மகிழ்ந்திருக்கிறேன் சீனு. பாராட்டினால் ஐஸ் வைப்பதாக கூறுவார்களே என்று குறிப்பிட்டதில்லை. இங்கே சுரேகாவின் கவிதையில் நீ குறிப்பிட்டதால் இப்போது மகிழ்வுடன் பாராட்டுகிறேன். சுரேகாவின் கவிதை அருமை. தம்பி ஹாரியிடமிருந்த தப்பிக்க இப்போதே முதுகைச் சுற்றி தலையணைகளை கட்டிக் கொள்ளவும். என் மாணவனுக்கு நகைச்சுவை வகுப்பெடுக்க வாத்தியாரின் இளமை திரும்பல் காரணமல்ல தம்பீ... நேரமின்மைதான். சீக்கிரமே வாய்ப்பு அமையாமலா போய்விடும்? பார்ப்போம். ரசித்த சங்கத்து ஆட்கள் அனைவரையும் பற்றி படித்து மகிழ்ந்தேன். தொடரட்டும் வம்பு... ஸாரி, தொண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா அதி பயங்கரமான நியுக்ளியர் பாம்களை ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன்.. பயபுள்ள நேர்ல சிக்கட்டும்

      Delete
    2. வாத்தியரே விரிவான மகிழ்ச்சியான கருத்துரைக்கு மிக்க நன்றி... சீகிரமே வகப்பு எடுக்க வேண்டுகிறேன்... சங்கத்தின் மீது வரும் குற்றச் சாட்டுகளை சமாளிக்க விரிவான பதிவுகள் எழுத அவசியம் தேவைப் படும்

      Delete
    3. // நியுக்ளியர் பாம்களை // குயவன் அவர்களே உங்கள் பதவி மீது எனக்கு துளியும் ஆசை இல்லை, நான் கோட்சே ச்சே ச்சே கொ ப சே மற்றும் பொருளாளராக மட்டும் இருந்து கொல்கிறேன்

      Delete
  24. வரலாறு அண்ணன் உயர்கல்வி படிப்பதாக சொல்லி வேறு வேலையாக சென்று இருக்கிறார் என்பதை சீனு சொல்ல மறந்த இந்த வரிகளையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆம் மச்சி அவர் வீட்ட அவருக்கு பொண்ணு பார்க்காங்கலாம்.. அந்த மேட்டர மட்டும் சொல்லிடாதிங்க.. அப்புறம் சீனுவோட கவிதா மேட்டரயும் சொல்ல வேண்டிய நிலை வந்துடும்..

      Delete
    2. அண்ணே உங்களுக்கு டைனோசர் மூக்குன்னே.... எவ்ளோ தூரத்துல இருந்தாலும் கரிக்கிட்டா மோப்பம் பிடிச்சிர்றீங்க பாருங்க!

      Delete
    3. கருத்துக்கள் எதுவும் கூறப் படவில்லை கீழே செல்லலாம்

      Delete
    4. >>>ஆம் மச்சி அவர் வீட்ட அவருக்கு பொண்ணு பார்க்காங்கலாம்.<<<

      'பார்க்காங்கலாம்' & 'வீட்ட'

      அருமையான சொல்லாடல்கள்...இவற்றை தீவிரமாக மனப்பாடம் செய்யும்படி செயல்வீரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

      Delete
  25. அடுத்து என்ன தளம் திறக்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் தான் நம்பர் ஒன் பதிவர்//

    எம்மாம் பெரிய உள்குத்து ... இதெற்கெல்லாம் தலைவர் தகுந்த தண்டனை வழங்குவார் இல்லையெனில் நான் வழங்குவேன்

    ReplyDelete
    Replies
    1. ஆம் மச்சி பயபுள்ளை சிக்கட்டும்

      Delete
    2. >>>தலைவர் தகுந்த தண்டனை வழங்குவார்<<<

      என்ன தண்டனை குடுக்கலாம்னே..பயபுல்லையை டெய்லி பல் விலக்க சொல்லீருவோமா?

      Delete
    3. //டெய்லி பல் விலக்க சொல்லீருவோமா?//

      என்ன கெட்ட பழக்கம் இது எங்கிருந்து வந்துச்சு?

      இல்ல
      எப்படி சீனுவ பார்த்து இந்த வார்த்தை?
      எப்படி கேட்க மனசு வந்துச்சு..
      ஐயோ இத வாசிச்சாலே அவன் செத்துடுவானே

      சீனு இதை வாசிக்காதே நண்பனின் அன்பு மடல்

      Delete
    4. சங்கத்திற்கு பதிலளித்து நான் சோர்வடைந்து விட்டேன்.. மீண்டும் சந்திப்போம்

      Delete
  26. என்பதால் எங்கள் சங்கத்து ஆள எவனும் அடிச்சா அடுத்தமுறை அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்குவார்//

    அடி விழுந்த பிறகு தானே ஆலோசனை வழங்குவார் .. அதற்காக அவரை நம்ம சங்கத்து கவுரவ முதன்மை ஆலோசகரா நியமிக்க தலைவரை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  27. பக்கம் பக்கமா எழுதி அறுத்தா ஒரு பய படிக்கச் மாட்டான், ஒரு வரிய மடக்கனும், பொழுது போகாட்டா எவனையாவது நாலாவது வரியில கோர்த்து விடனும்//

    வெளிய சொல்லாத ரகசியம் ரகசியம் என்று சொன்னதை இப்படியா போட்டு உடைப்பாய்...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ மனசுல நினைச்சன் மகராசி அப்பிடியே ஒப்பிசுட்டா - "கிரீடம் "படத்துக்காக விவேக் பேசிய வசனம் இது

      Delete
  28. அண்ணே சங்கத்துத் தலைவரா இருக்குற முழுத் தகுதியும் உங்களுக்கு தான்னே இருக்கு, எப்படியாவது ஹாரிய போடுறோம், உங்கள தலைவராக்குறோம்.//

    ஹாரி தான் என்றும் தலைவர் ... என்பதை தெளிவுபடுத்தி எனக்கு பதவி ஆசை துளியுமில்லை என்பதை விளக்கிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. பிளிச்சிங் பவுடர் போட்டுத்தானே விளக்கினீர்கள்! நன்று!

      Delete
  29. தலைவரே போரூர் பக்கம் ஒரு சின்ன பைசல் இற்கு அத முடிச்சிட்டு கொழும்பு பக்கம் போவோமா?//

    அந்த போரூர் மர்மம் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. கவிதா கவிதா

      ஆதாரங்களோடு எனக்கு சமர்ப்பித்தவர் தம்பி சதீஷ் அண்ணா (கூப்பிடும் போது எம்புட்டு குழப்பம் வருது பாருயா) அவர்கள்.. அவரது தளத்திலே இந்த தகவல் சிக்கியது..

      //
      சீனு4 அக்டோபர், 2012 6:33 pm
      கவிதா கவிதா ரொம்ப நல்ல இருக்குன்னா....
      தாமத வருகைக்கு பொருத்தருள்க....//

      அதாவது சீனுவின் தோழியா / காதலியா / மனைவியா என்று தெரியாத அந்த மர்ம நபர் பாராட்டியதாக அந்த குறிப்பு கூறுகிறது.. இது குறித்து பல்லு துலக்கி துப்ப.. மனிச்சூ.. துப்பு துலக்கி தர நண்பர் வரலாறு அவர்களை அணுகப்பட்டது.. ஒத்து கொண்டு ஆரம்பித்த வ.சு. ஆனாலும் விசாரணை பற்றிய எந்த வித தகவல்களும் அனுப்பாத படி தலை மறைவான படியால் இவருக்கும் சம்பவத்தில் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என அறியபடுகிறது.. போரூர் பஸ் ஸ்டேன்டிலே வரலாற்று சுவடுகளை இறுதியாக கண்டதாகவும், அப்போது அவரது கையிலே "கவிதாவின் அக்கா நமிதா" என்று பச்சை குத்தி இருந்ததாகவும் கூறபடுகிறது..

      மர்மம் என்ன? இப்படியான அமானுஷ்ய விடயங்களுக்கு காரணம் என்ன?

      நடந்தது என்ன? ஒரு சிறு இடை வேலைக்கு பிறகு..

      Delete
    2. ஹாரி நண்பா,மன்னிக்க ..தலைவரே, இது குறித்த விரிவான பதிவொன்றை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

      தம்பி சதீஷ் என்றே அழைக்கலாம்..(கைப்புள்ளய விட இது தேவலாம்)

      Delete
  30. நீகுழாய் ( யு ட்யுப்) //

    சத்தியமா தாங்க முடியல .. பொறவு நடக்கும் பஞ்சாயத்துக்கு நான் பொறுப்பல்ல

    ReplyDelete
  31. சீனுவும் தொழிற்களமும் - ஒரு சின்ன விளம்பரம் //

    வாழ்த்துக்கள் சீனு....

    நல்ல பிகரோட முகநூலை விளக்கவும் நான் காத்திருப்பேன் ...

    ReplyDelete
  32. பக்கம் பக்கமா எழுதி அறுத்தா ஒரு பய படிக்கச் மாட்டான், ஒரு வரிய மடக்கனும், பொழுது போகாட்டா எவனையாவது நாலாவது வரியில கோர்த்து விடனும்//

    இதுலே இவ்வளவு இருக்கா

    நீகுழாய் ( யு ட்யுப்)

    எப்படிலாம் தமிழ்படுத்தறாங்க

    ReplyDelete
  33. தங்கள் திறமைக்கு நடுவே எல்லாம் மிகச்சாதாரணம் தம்பி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. சுரேகா சார் கவிதை படிச்சேன் மச்சி ரியலி....சூப்பர்!

    ReplyDelete
  35. >>>வரலாற்றுச் சுவடுகள் - தப்பியோட்டம் <<<

    யோவ்..நாங்கெல்லாம் வான்ட்டடா வந்து வண்டியில ஏறி ரவுடின்னு நிரூபிக்கிற ஆளுங்க..எங்களுக்கேவா?

    ReplyDelete
  36. மெட்ராஸ் பவன் : சங்க ஆலோசகர்

    #அடுத்த சாணக்கியர்! :)

    ReplyDelete
  37. >>>ஹாலிவூட் ரசிகன் - என் அறிவுக் கண்ணத் தொரந்தவரு........ தற்போது நான் அடிக்கடி செல்லும் தளம்<<<

    மச்சி..உனக்கு அடிக்கடி Diarrhea வந்து நீ ஆஸ்பிட்டல்ல அட்மிட்டாகுற ரகசியம் இப்போத்தான் எனக்கு பிரியிது!

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ... என் எழுத்துக்கு இப்படி ஒரு மகிமையா? ஆண்டவா!

      Delete
  38. யோவ் நீர் மட்டும் மரியாதையா Comment moderation-ஐ அடுத்த பதிவுக்குள்ள எடுத்துவிடல...கலைஞர் கதைவசனம் எழுதுன எல்லா படத்தையும்..கந்துவட்டிக்காவது பணம் வாங்கி உமக்கு பார்சலில் அனுபிவச்சிருவேன்..ஜாக்கிரதை!

    ReplyDelete
  39. கமாண்டு போட்டுட்டு அது வருமா வராதான்னு ரெப்ரெஷ் பன்னி ரெப்ரெஷ் பன்னி பார்கிரதைவிட பால்டாயில் அடிச்சிரலாம் போலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் தன் ஹிட்ஸை அதிகரித்து, அலெக்ஸா ரேங்கிங், தமிழ் மண ரேங்கிங்கில் உங்களை முந்த சீனுவின் தந்திரோபாயங்கள்! ஏமாந்துடாதீங்க!!! :)

      Delete
    2. factu factu factu ....பாவி பசங்க நானும் சுதந்திரமா இருந்தேன், இப்போ நானும் Comment moderation வைச்சிக்கிட்டு இருக்கிற நிலை ஆயிடுச்சு...பூச்சி பூரான்லாம் விடுரானுங்க ...எமகாதகர்கள் ..

      Delete
  40. அய்யய்யோ .... சொல்லாம கொள்ளாம திடீர்னு சங்கம் அது இதுன்னு பீதியக் கௌப்புறாய்களே பயபுள்ளக? நம்மள வேற கோர்த்துவிட்டிருக்கானே இந்த சீனுப் பய! அலார்ட்டாகிக்கடா கைப்புள்ள ... சீக்கிரம் எங்கேயோ பெரிசா அடிவிழப்போகுது. அவ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. கைப்புள்ள காப்புரிமை எனக்கு மட்டுமே என்பதால் ஹாலிமர காத்தாடி வேறு நல்ல ஆங்கில பெயரை தேடுமாறு கேட்டுகொள்ளப்டுகிறார்.உதாரணத்திற்கு hand child...தமிழில்தான் வேண்டுமென்றால் வலது கைப்புள்ளைனு வைச்சிகோங்கோ...அடிப்பட்டவன் நானு பேரு எனக்குதான் சொந்தம்..

      Delete
  41. //என் அறிவுக் கண்ணை திறந்து வருபவர் நமது ஹாலிவூட் ரசிகன்.//

    ம்ம்க்கும்...நானே என்னத்த எழுதறதுன்னு தெரியாம ரெண்டு பந்தி கதையை எழுதிட்டு, நடிப்பு சுமார்..டைரக்டர் பின்னிட்டாரு..எடிட்டர் சொதப்பிட்டாருன்னு கதை விட்டிட்டு இருக்கேன்.

    நான் அறிவுக் கண்ணை தொறக்கிறேனாம்!!! மக்களே! நம்பாதீங்க!

    ReplyDelete
  42. சிறப்பான பகிர்வு சீனு.... தொழிற்களம்... வாழ்த்துகள்....

    ReplyDelete
  43. //தற்போது நான் அடிக்கடி செல்லும் தளம்.//
    ஓ ... என்னோட தளத்திற்கு டெய்லி கிடைக்கும் அந்த 10 பேஜ் வியுஸ் நீங்க தானா? :) :)

    ReplyDelete
  44. //தூங்கும் பொழுது கூட அடுத்த பதிவு பற்றி யோசிப்பவரா அப்படி என்றால் நீங்கள் தான் பிரபல பதிவர். ஒரு வேளை தூங்கும் பொழுது அடுத்து என்ன தளம் திறக்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் தான் நம்பர் ஒன் பதிவர்.//

    ஹா ஹா .... 100% ஆமோதிக்கிறேன். :D

    ReplyDelete
    Replies
    1. இவரும் பாதிக்க பட்டு இருக்காரு

      Delete
  45. இந்த மாதிரி பதிவர்களுக்கு இன்ட்ரோடக்ஸன் கொடுக்கும் போது, அதிகபட்சமா ஐந்து பதிவர்கள் வரை அறிமுகப்படுத்தலாம் சீனு.. உங்க பதிவை படிக்கும் வரும் நபர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர் தளத்திற்கும் சென்றுவர அது ஏதுவாக இருக்கும்...உங்களோட நோக்கம் அதுதான்னா இந்த ஐந்துங்ற எல்லையை உபயோகியுங்கள் இந்த விஷயத்தை தாண்டி இந்த பதிவு ஜெமஜாலியா இருந்ததுங்கிறது வேறு விஷயம்!

    அப்புறம்... தொழிற்களத்துக்கெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா...அப்ப சீனு பிரபல பதிவர் ஆகியாச்சுன்னு சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. பரீட்சையை விட நண்பர்கள் தான் முக்கியம் என்று பல அரிய பயனுள்ள உபயோகமான கருத்துக்க்களை இட வந்திருக்கும் உங்களுக்கு என் நன்றி!

      சீனு ஏற்கனவே பிரபலம் ஆகிவிட்டார்! அமைச்சர் முக்கியம் வரலாறே!


      :) :) :)

      Delete
  46. சங்கம் முழங்கட்டும்

    ReplyDelete
  47. இந்த சாக்கில் என்னை எருமை மாடுன்னு சொல்லி புட்டீங்க பிரபல பதிவரே.....என்னோட லிங்க் எல்லாம் கொடுத்து வைத்து இருக்கீங்க ரொம்ப நன்றி பிரபலமே இப்பவெல்லாம் கண்டுகொள்வதே இல்லை போன் செய்வது இல்லை....

    ReplyDelete