29 Sept 2012

தாண்டவம் விக்ரதாண்டவம்


படமும் படம் சார்ந்த கதையும் :  

" தாண்டவம் படத்துக்கு போலாமா " இதை நண்பன் என்னிடம் கேட்ட அடுத்த நொடி, நான் சொல்லிய பதில் " தெரியாத மொக்க படத்துக்குலாம் நான் வார மாட்டேன். நல்ல படமா வந்தா சொல்லுங்க போகலாம்"

"லேய் அது விக்ரம் படம்ல, விஜய் டைரெக்சன், வா நாம போகலாம்". 


விக்ரமிற்காக இல்லாவிட்டாலும் விஜய்க்காகவாவது செல்லலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். தேவி சினிமாஸ். சென்னையின் மிகப் பிரபலமான மிகப் பெரிய தியேட்டர். தேவியில் படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய ஸ்க்ரீன், அதில் படம் பார்பதற்கே அவ்வளவு அருமையை இருக்கும். சிங்கம் படம் நண்பன் மணிகுமாருடன் தேவியில் தான் பார்த்தேன், பத்து ருபாய் டிக்கெட், இரண்டாவது வரிசை.. சூர்யா வண்டியில் இருந்து இறங்கினால் எங்கள் தலையில் தான் கால் வைப்பார். சண்டைக் காட்சிகளில் வில்லன்கள் அனைவரும் எங்கள் மீது தான் வந்து விழுந்தார்கள், அப்படி ஒரு அருமையான உணர்வைக் கொடுக்கக் கூடிய திரையரங்கு. தேவியும் தேவி பாரடைசும் அருமையான அரங்கங்கள். சென்னையில் படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் ஒருமுறையாவது இங்கு சென்று படம் பாருங்கள். 

தாண்டவம் 

விக்ரம் மற்றும் விஜய் படம், அனுஷ்கா, சந்தானம், ஜீ.வி, நீரவ்ஷா, அன்டோனி என்று பழைய கூட்டணி ( இந்த விஷயங்கள் அனைத்தும் பட டைட்டில் போடும் பொழுது தான் எனக்குத் தெரியும்). படம் பற்றிய சிறு விஷயம் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை மேலும் படம் மீது எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சொல்லப்போனால் சுந்தரபாண்டியன் படம் மீது இருந்த எதிர்பார்ப்பு கூட இதில் இல்லை, எங்கே எப்படி இந்த தவறு நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கணகாலமாய் நானும் சிந்தித்துப் பார்கிறேன், சடுதியில் விடையும் சிக்கமாட்டேன் என்கிறது. ( படம் பார்த்த பாதிப்பில் இது ஒன்று தான் மிச்சம் என்று நினைக்கிறன்).       

காட்சிகள் லண்டனில் விரிகிறது, ஹாலிவூட் தரத்திற்கு முயற்சித்து இருகிறார்கள், படத்தின் ஆரம்பக் காட்சிகள் மணிரத்னத்தை நினைவு கூர்கின்றன, ஆனால் மணி சார் பட வசனம் போல எதுவும் சுவாரசியம் இல்லை. சந்தானம் ஆள் மேருகேறியிருகிறார், படத்தில் காமெடி செய்வதற்கான வாய்ப்பில் வாய்ப்பூட்டு போடப்பட்டு விட்டதால், கொடுத்த காசுக்கு "அழகாக" நடித்துச் சென்றிருக்கிறார். தெய்வத்திருமகள் சந்தானத்தை தாண்டவமாட விடாமல் செய்துள்ளார் இயக்குனர் விஜய். இருந்தும் புதுமையாய் சில காமெடிக் காட்சிகளை முயற்சி செய்து பார்த்திருப்பது குஸ்காவில் கிடைத்த தக்குனூன்டு சிக்கன் பீஸ்.  

டம் சீரியசான படம் என்பதாலோ அல்லது சீரியசான படமாக காண்பிக்க முயல்வதாலோ, காட்சி நகர்வுகளில் வரும் அனைவருமே தங்கள முகத்தை சீரியசாய் வைத்துள்ளனர். விஜய் சார் "இயக்கம் விஜய்" என்று போட்டாலே நாங்கள்  கண்டுபிடித்து விடுவோம், படம் சீரியசான படம் என்று. இதற்காக நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாசர், அவரை அவ்வளவு புத்திசாலியாக அறிமுகம் செய்ததைப் பார்த்த பொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன், கொஞ்சம் ஓவராக நிமிர்ந்து விட்டேன் போல முதுகு வலிக்கிறது. நாசர் அறிமுகப்படுத்திய tab என்ன விலை சார், அழகாய் இருந்தது, பின்னாட்களில் வாங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதையும் அவர் மூலமாகவே கூறி இருந்தால் உபயோகமாய் இருந்திருக்கும். அடுத்த படத்தில் இது போன்ற சிறு பிழை கூட நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.   


எமி ஜாக்ஸன், ஒரு பாடலில் நடந்தார், சிறிது ஆடினார், சிறிது டமில் பேசினார், சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டார். அழகான பாத்திரப் படைப்பு. லக்ஸ்மி ராய் தாம்தூம் ரஷ்ய பயணத்தை முடித்த கையோடு அதே உடையுடன் லண்டனுக்கு பறந்து வந்துவிட்டார். வந்த வேகத்தில் கதையில் இருந்தும் பறந்து போய்விட்டார் ( கடைசி வரை உயிரோடு தான் இருப்பார் என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அனுஷ்கா, இவரைப் பார்த்தால் எனக்கு ஹீரோயின் என்ற பிரமை கூட ஏற்படவில்லை, ஆண்டி ஹீரோயின் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இவருக்கும் ஏன் இவ்வளவு சீரியசான முகபாவம் பாத்திரப்படைப்பு என்பது அனுஷ்காவிற்கே  வெளிச்சம். ஆனால் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக முதலிரவு காட்சி. ஹி ஹி ஹி படத்த பாருங்க பாஸ் என்ன நடக்கும்னு தெரியும். 

ன்னும் பல கதாபாத்திரங்கள் திரையில் உலவும். அவை அனைத்தும் நம்மைக் குழப்ப வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டு பின்னர் கதையையே குழப்பிய பாத்திரங்கள், அவை எல்லாவற்றையும் கூறி உங்களைக் குழப்ப நான் விரும்பவில்லை.ஒளிப்பதிவைப் பொறுத்தவரை  நீரவ்ஷா எனக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவில் எந்த குறையும் வைத்திருக்கவில்லை, சில சமயங்களில் சாதாரண காட்சி அமைப்புகளைத் தவிர. இசை ஜீவி, ஜீவித்திருக்கலாம், வசனம் சில இடங்களில் ஈர்க்கிறது.      

விக்ரதாண்டவம் 

டத்தின் ஹீரோ, தோன்றிய முதல் காட்சியிலிருந்து இறுதி வரை இறுக்கமாகவே வருகிறார், அளவெடுத்துத் தைத்த சட்டையை விட, அளவெடுத்து வைத்திருக்கும் அந்த மீசை மிக அழகாய் இருக்கிறது, சீயானுக்கு பொருந்திப் போகிறது. பார்வை அற்றவனாய் வரும் பொழுது செய்யும் அவரின் மானரிசன்கள் மட்டுமே படத்தின் பலம். விக்ரமின் உடற்கட்டு அசரவைக்கிறது. அனுஸ்காவை இம்ப்ரெஸ் பண்ண முயலும் காட்சிகள் கவிதை, கணவனின் தொழில் என்னவென்றே அறியாமல் இருக்கும் ஹீரோயினின் காட்சிகள் கண்கட்டு வித்தை. விக்ரம் யார் என்று அனுஷ்காவிற்கு தெரியவரும் காட்சி பற்றி என்னவெல்லாமோ கற்பனை செய்திருந்தேன், அவ்ளோ பெரிய ஆபிசரை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது ஏற்படும் அதிர்வுகள் என்னுள்ளேயே ஏற்படவில்லை, பாவம் அனுஷ்கா என்ன செய்வார். அந்தக் காட்சி விவரிப்பில் இன்னும் மிடுக்கு ஏற்றி இருக்கலாம். நீங்கள் குறைந்தது ஒரு ஹரி படமாவது பார்த்திருந்தால் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டிருக்க மாட்டீர்கள்.  

விக்ரம் என்ற நடிகன் உங்களுடன் இருந்ததால் தப்பித்தீர்கள், விக்ரம் வரும் காட்சிகளை வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். உங்கள் அடுத்த படத்திற்கு விமர்சனம் படிக்காமல் செல்வது இல்லை என்று முடிவெடுத்துவிட்டேன். என்னை போன்ற தமிழ் சினிமா ரசிகர்கள் உங்கள் படங்களையும் நம்பிப் பார்க்க ஆரம்பித்திருகிறார்கள். நீங்கள் தாண்டவமாடாவிட்டாலும் பரவாயில்லை ருத்திர தாண்டவம் ஆடாமல் இருந்தால் சரி. 

விளம்பரம் :


பின்குறிப்பு : தாண்டவம் படத்தில் ஹீரோவின் பெயரும், விளம்பரத்தில் இருக்கும் ஹீரோவின் பெயரும் சிவகுமார் தான் என்பது தற்செயலாக நடந்த விசயமே அன்றி யாம் ஒன்று அறியோம் பராபரமே  

தாண்டவம் விக்ரதாண்டவம்

நீங்கள் வந்து சென்ற எஸ் டி டி மிக முக்கியம் அமைச்சரே (வசனஉதவி : அண்ணன் எஸ்-டி-டி சுவடுகள்


51 comments:

  1. 'சூர்யா வண்டியில் இருந்து இறங்கினால் எங்கள் தலையில்தான் கால் வைப்பார்'.... ஹா ஹா ஹா..!
    'குஸ்காவில் கிடைத்த தக்கனூண்டு சிக்கன் பீஸ்'.... அட, என்ன உவமை!
    படத்தில் சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. //படத்தில் சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லையா?!!//

      படத்தில் சொல்லிக் கொள்ள சின்ன சின்ன விஷயங்கள் உள்ளது சார்... முழு படமாகப் பார்க்கும் பொழுது அவையும் மனதில் ஒட்டவில்லை ... ட்ட்வியில் போட்டால் கண்டிப்பாக பாருங்கள் சார்.. நிச்சயம் சின்னத் திரையில் பார்க்க வேண்டிய படம் :-)

      Delete
  2. அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ...

    250 ரூவா போச்சே ... அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. //250 ரூவா போச்சே ... அவ்வ்வ்வ்வ்// என்னது 250ஆ என்ன கொடும நண்பா...

      Delete
  3. //எமி ஜாக்ஸன்//
    அஞ்சு பைசாவுக்கு பெறாத ஃபிகருக்கெல்லாம் ஒரு பத்தி எழுதி ஏன்யா நேரத்தை வீணடிக்கிறீங்க??? இதுக்கு அனுஷ்காவின் தங்கச்சியா வர்ற பொண்ணு பற்றி சரி ஒரு ரெண்டு வரி எழுதியிருக்கலாம். :)

    இனிமே முதல்ல விமர்சனம் படிக்காம தியேட்டர் பக்கம் போறத நிப்பாட்டணும். நம்ம ஊர்ல 3 மாசத்துக்கு ஒருவாட்டி தான் தமிழ்படமே ரிலீஸ் பண்ணுவான். அதையும் இந்த மாதிரி வேலாயுதம், மாசி, தாண்டவம்னு ரிலீஸ் பண்ணினா நாங்கல்லாம் ஹாலிவுட்ரசிகனா இருக்கமா வேற எப்படி இருக்கிறது???

    ReplyDelete
    Replies
    1. // நாங்கல்லாம் ஹாலிவுட்ரசிகனா இருக்கமா வேற எப்படி இருக்கிறது???// குட் கொஸ்டின் மச்சி.. எல்லா படமும் அங்க ஆகாதா... இலங்கையின் சினிமாத் துறை பற்றி ஒரு கட்டுரை கூட நன் படித்தது இல்லை, எதாவது லிங்க் இருந்தால் கொடுக்கவும்... சமகாலத்து பதிவாக இருக்க வேண்டும்.. இல்லை என்றல் நீங்கள் யாரவது எழுதுங்களேன்... அறிந்து கொள்ள வசதியாய் இருக்கும்

      Delete
    2. இல்லப்பா ... அனேகமான படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனா கொழும்பு, மட்டக்களப்பு போல தமிழர்கள் அனேகமாக இருக்கும் இடங்களில் தான். நம்மூர்ல இருக்கிற “கொட்டாயில்” எல்லாம் அநேகமாக ஒரு சிங்களப்படம் மாதக்கணக்கா ஓடும்...திடீர்னு மனசு வந்து ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுவான். நல்லதோ..கெட்டதோ...அப்போ பாத்துகிட்டாத் தான் வாசிக்கிற விமர்சனங்களுக்கு ஏதாவது சொல்லாம். இல்லாட்டு “கண்டிப்பா பார்க்கிறேன்” “நல்ல வேளை நேரத்தை மிச்சப்படுத்திட்டிங்க” கமெண்ட் தான் போடலாம். :)

      Delete
  4. உங்கள் பாணியில் விமர்சனம்...

    பின்குறிப்பு தற்செயல் தான்... தற்செயல் தான்...

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் பாணியில் விமர்சனம்...// ரொம்ப ரொம்ப நன்றி சார்.. உங்கள் உற்சாகமான கருத்துக்களுக்கு

      Delete
  5. கொஞ்சம் ஓவராக நிமிர்ந்து விட்டேன் போல முதுகு வலிக்கிறது//

    டைரக்டர் நல்லா பெண்டு நிமித்திட்டார் போல.,

    ReplyDelete
    Replies
    1. //டைரக்டர் நல்லா பெண்டு நிமித்திட்டார் போல.,// கொஞ்சம் நஞ்சம் இல்ல மச்சி, நிமித்தோ நிமிதுன்னு நிமிதிட்டாறு

      Delete
  6. தம்பி நீ சின்ன பையன். அனுஷ்கா உனக்கு அழகாக தெரிய மாட்டார்

    ReplyDelete
    Replies
    1. //தம்பி நீ சின்ன பையன். அனுஷ்கா உனக்கு அழகாக தெரிய மாட்டார் //

      ஹா ஹா ஹா என் வயசுல தெரிஞ்ச தப்பு இல்ல சார், ஆமா இந்த வசனம் உங்க ஹவுஸ் பாஸ்க்கு தெரியுமா ?

      Delete
  7. தம்பி கடசியா தமிழ் சமுகத்துக்கு என்ன சொல்ல வாரிங்க..?

    ReplyDelete
    Replies
    1. //தம்பி கடசியா தமிழ் சமுகத்துக்கு என்ன சொல்ல வாரிங்க..?//

      நான் சொல்ல நினைத்ததை ஹாலிவூட் எளிதாக சொல்லிவிட்டார்

      Delete
    2. அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ... அய்யோ ...


      :-) :-) :-) :-) :-) :-)

      Delete
  8. தேவியில் படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்

    எனக்கும் பிடிக்கும் நிறைய படங்கள் அங்கே தான் பார்த்தேன்


    என்னை போன்ற தமிழ் சினிமா ரசிகர்கள் உங்கள் படங்களையும் நம்பிப் பார்க்க ஆரம்பித்திருகிறார்கள்.

    அப்ப பார்க்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. //அப்ப பார்க்கலாமா ?//

      யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், நீங்க போய் நிச்சயமா பார்க்கணும் சார்

      Delete
  9. தல நாசர் யூஸ் பண்ற Tab IPAD ன்னு நினைக்கிறன்..
    உங்க ஸ்டைல் விமர்சனம் சூப்பர்..உங்களுக்குனு ஒரு ஸ்டைல் Form ஆகுது..அப்படியே Maintain பண்ணுங்க..

    ReplyDelete
    Replies
    1. //ஒரு ஸ்டைல் Form ஆகுது..அப்படியே Maintain பண்ணுங்க..// நன்றி தல, சினிமா என்னோட ஏரியா இல்ல தல, என்னோட பதிவுல எதுவும் தொழில் நுட்ப கோளறு இருந்தால் திருத்துங்க தல

      Delete
  10. காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. //காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்..!//
      உங்கள் அவதானிப்பை எண்ணி வியக்கிறேன், நன்றி நண்பா

      Delete
  11. காசு கொடுத்தோ, கொடுக்காமலோ.. தியேட்டரிலோ, திருட்டி வீடியோவிலா பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்..!

    ReplyDelete
  12. நல்ல விமர்சனம். பார்க்க நினைத்திருந்த படம் - ஆனால் பார்க்கப்போவதில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. //நல்ல விமர்சனம். பார்க்க நினைத்திருந்த படம் - ஆனால் பார்க்கப்போவதில்லை! :)//

      நல்ல முடிவு சார், நல்ல படம் வந்தால் நிச்சயம் சொல்கிறேன், ஆனால் இந்தப் படத்தில் டெல்லியை கான்பிதுள்ளர்கள், நீங்கள் தினமும் தரையில் பார்க்கும் டெல்லியை திரையில் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு

      Delete
  13. >>>அனுஷ்கா, இவரைப் பார்த்தால் எனக்கு ஹீரோயின் என்ற பிரமை கூட ஏற்படவில்லை<<<

    தாய்குலத்தை அவமரியாதை செய்யும் பெண்ணுரிமைக்கு எதிரான கருத்துக்கள் இவை, உங்களின் இந்த கருத்து குறித்து அனைத்துல மகளிர் சங்க பேரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது! தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள மகளிர் உங்களது தளத்தை புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்கள்! அந்த மகிழ்ச்சியான செய்தி என் காதுகளில் தேன் போல் வந்து பாய்ந்து தித்திப்பை ஏற்படுத்தியது!

    ReplyDelete
    Replies
    1. யோவ் "எஸ் டி டி" நீர் இப்போ "ஐ எஸ் டி" தான...

      //தாய்குலத்தை அவமரியாதை செய்யும் பெண்ணுரிமைக்கு// ஓ அனுஷ்கா தாய்குலமா, உங்கள் அவதானிப்பை எண்ணி எண்ணி வியக்கிறேன், அவரை அத்தைக் குளமாக வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்கிறேன், அத்தை என்பதை ஆண்டி என்று அவதானித்து செய்து தொலைக்க...

      //மகளிர் உங்களது தளத்தை புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்கள்! அந்த மகிழ்ச்சியான செய்தி என் காதுகளில் தேன் போல் வந்து பாய்ந்து தித்திப்பை ஏற்படுத்தியது!//
      ரொம்ப நல்ல விசயமா நல்ல விஷயம், ஆமா உலக மகளிர் எப்போ சீரியல் பாக்குறத விட்டுட்டு என் தளத்த படிக்க வந்தாங்க...

      # ஆல் லேடீஸ் ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ அலோன், அம் எ குட் பாய், ப்ளீஸ் கம் டு மை ப்ளாக், ப்ளீஸ்...

      எப்புடி பொண்ணுங்களுக்கு புரியற மாதிரி மன்னிப்பு கேட்டுட்டேன் பாத்தீரா... ராசா தந்திரங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்து வைத்துள்ளோம்


      Delete
    2. தங்களின் ராச தந்திர திறனை கண்டு செயலற்று நிற்கிறேன் மேலும் வியப்பு மேலீட்டால் என்ன எழுதுவது என்று தெரியாமல் விழிக்கிறேன்!

      ஆங்..ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. கரைத்து குடித்ததும் மறக்காமல் இனிமா மாத்திரை ஒன்று சாப்பிடவும்!

      புரிதலுக்கு நன்றி!

      Delete
    3. நானும் ISD தான்...நானும் ISD தான்...

      Delete
  14. >>>குறிப்பாக முதலிரவு காட்சி. ஹி ஹி ஹி படத்த பாருங்க பாஸ் என்ன நடக்கும்னு தெரியும்<<<

    அடல்ட் வார்த்தை பயன்பாடு.... +15 போடாததை கண்டித்து உங்கள் பதிவுகளை புறக்கணிக்கும் செய்யும் திட்டம் ஹாரி தலைமையில் பாஸித் பாய் முன்னிலையில் துவங்குவது குறித்து தீவிர செயல்வீரர்கள் கூட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. //அடல்ட் வார்த்தை பயன்பாடு.... +15 போடாததை கண்டித்து//

      ஓ அடல்ட் என்றால் 15+ ஆ, எங்க ஊர்ல 18+ ன்னு சொல்லிடாங்க, ச இது தெரியாம மூணு வருசத்த வேஸ்ட் பண்ணிட்டேனே...
      இந்தப் பாடாவதி வரலாறு தெரியாததால் எவ்வளவு கஷ்டமாய் உள்ளது பார்த்தீர ஓய்...

      // தீவிர செயல்வீரர்கள் கூட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!// செயல்வீரர்களே என் பதிவைப் புறக்கணித்தால் உங்கள் பதிவுகளை நான் புறக்கணிக்க மாட்டேன், மாறாக பேக் ஐ டி ஒன்று உருவாக்கி உங்களின் சுய ரூபத்தை படம் பிடித்துக் காட்டி விடுவேன் என்பதை தாழ்மையுடன் மிரட்டிக் கொல்கிறேன் ( இதில் எழுதப் பிழை இல்லை என்பதை அறிக )

      Delete
    2. பேக் ஐ டி... ஃப்ரண்ட் ஐ டி என்று எந்த ஐ டி உருவாக்கினாலும் கேமரா உதவியின்றி படம் பிடிக்க முடியாது என்பதை உணர்க!

      Delete
    3. //+15 போடாததை கண்டித்து உங்கள் பதிவுகளை புறக்கணிக்கும் செய்யும் திட்டம் ஹாரி தலைமையில் பாஸித் பாய் முன்னிலையில் துவங்குவது குறித்து தீவிர செயல்வீரர்கள் கூட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!//

      ஆமா அது என்ன பிரச்சினை என்றாலும் என்னையே தலைம தாங்க சொல்றது நல்லா அடி வாங்குவான் என்றா? ஏன்னே போட்டோ பார்த்திங்கல்ல.. அதுவும் போன வாரம் உண்ணாவிரதம் வேற.. குளிக்ற போராட்டம் வேற..இருந்தாலும் ஹாரிபாட்டர் போன்ற கண்ணியமான தளங்களே தங்கள் பதிவுக்கு 15 + போடும் போது சீனு அவர்கள் போட வேண்டும் என்று வரலாறு கேட்பது நியாயம் தானே

      Delete
  15. இது ஒரு சீரியஸ் பதிவு என்பதால் காமெடி கும்மி நண்பர்கள் (சீனு, அரசன், ஹாரி, அப்துல், STD) யாரும் கருத்து தெரிவிக்கலாகாது என்பதை பணி வெம்புடன் தெரிவித்துக்கொல்கிறேன்

    மீறி கருத்து தெரிவித்தால் உங்கள் பதிவுகள் அனைத்தும் செயல்வீரர்களை கொண்டு கொடூரமாக மனப்பாடம் செய்யப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொல்கிறேன்!

    இப்படிக்கு.,
    உங்கள் நலம் விரும்பி

    ReplyDelete
    Replies
    1. //இது ஒரு சீரியஸ் பதிவு என்பதால் காமெடி கும்மி நண்பர்கள்// இயக்குனர் விஜய் ன்னு போட்டப்பவே என் பதிவு சீரியஸ் பதிவாகி விட்டது, படம் பார்த்த எத்தனை பேர் இன்னும் சீரியஸ் ஆகப் போகிறார்களோ தெரியவில்லை...

      //சீனு, அரசன், ஹாரி, அப்துல், சதத்// பீ கேர் புல்... நா என்னச் சொன்னேன்....

      //காமெடி கும்மி நண்பர்கள்// ஆமா இது டேர்றோர் கும்மி நண்பர்களுக்கு தெரியுமா, நண்பர்கள் வந்து மனனம் செய்து அண்ணன் எஸ்டிடி யின் ஐ எஸ் டி செலவை எகிற வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ....

      //உங்கள் பதிவுகள் அனைத்தும் செயல்வீரர்களை கொண்டு கொடூரமாக மனப்பாடம்// யோவ் வீரனாய நீங்க, ஒரு ஊராம பொழப்பு நடத்துற புள்ளப் பூச்சிய சீண்டி பக்ரீங்கலே நீங்க வீரனா...

      வீரண்ணா யாரு தெரியுமா ( மச்சி டயலாக் மறந்த்ருச்சு ஹரி படம் பார்த்ததும் சொல்றேன் )

      இப்படிக்கு
      என் நலம் விரும்பி

      Delete
    2. >>டேர்றோர் கும்மி<<

      ஆஹா ஆஹா... இலக்கிய தரமிக்க தங்களின் இந்த வார்த்தை பயன்பாடு என்னை வியக்கவைக்கிறது! எனக்கு தெரிந்து கம்பருக்கு பிறகு இத்தனை இலக்கியத்திரன் எவருக்கும் இருந்ததில்லை என்றே அறிகிறேன்!

      Delete
    3. >>>யோவ் வீரனாய நீங்க, ஒரு ஊராம பொழப்பு நடத்துற புள்ளப் பூச்சிய சீண்டி பக்ரீங்கலே நீங்க வீரனா<<<

      அருமையான சொல்லாடல்...ஆழ்ந்த கருத்துக்கள்....பொழுது சாய்வதற்குள் இவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும்!

      Delete
    4. >>>வீரண்ணா யாரு தெரியுமா<<<

      நான் பெரியன்னாவை அறிவேன்... மாயன் கலாச்சாரம் பற்றி எடுக்கப்பட்ட சீன மொழிப்படமான இதில் கேப்டன் நடித்திருப்பார், அருமையான கருத்துக்கள் நிறைந்த படம்!

      வீரண்ணா-என்ற திரைப்படம் பற்றி நான் தெரிந்திருக்கவில்லை, தயை கூர்ந்து தாங்கள் கோபால் பல்பொடி போட்டு விளக்கவும்! நன்றி!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. // இப்படிக்கு,
      அகில உலக சி.பி. ரசிகர் மன்றம்!
      (அண்ணன் சி.பி ரசிகர் மன்றம் :)
      அவரின் மீது நிறைய மரியாதை உண்டு! )

      //

      அட

      Delete
    7. //வீரண்ணா//

      இது வந்து நெப்போலியன் நடிச்ச படம்..

      Delete
    8. //மச்சி டயலாக் மறந்த்ருச்சு ஹரி படம் பார்த்ததும் சொல்றேன்//

      நான் எப்போ படம் எடுத்தன்.. உடனே டிரெக்டர் ஹரியா சொன்னேன்ப.. அப்புறம் வீரன் என்றா என்றதுக்கு ஏன் வீரண்ணா என்று போட்ட என்று நாங்க கேட்டுபுடுவம் சாக்கிரத..

      Delete
    9. //யாரும் கருத்து தெரிவிக்கலாகாது என்பதை பணி வெம்புடன் தெரிவித்துக்கொல்கிறேன்
      //

      ஐயையோ.. இது தெரியாம கம்மென்ட் போட்டுட்டேன்... இருங்க அழிரப்பர் வாங்கிட்டு வந்துடுறேன்...

      :D :D :D

      Delete
  16. நல்லவேளை... நான் பிழைத்துக் கொண்டேன். ஹா... ஹா....

    ReplyDelete
  17. யோவ் வரலாறு,சின்ன பையனை ஏன்யா இப்படி கொடுமை படுத்துறீர்?கேஸ் மேல கேஸ் போடுறீங்க?கேக்க ஆளில்ல்லைன்னு நினைப்பா?அவரு மாதிரி கொஞ்ச பேரு படம் பார்த்து தாண்டவம் ஆடுறதாலதான் நம்ம பாக்கெட் பழுக்காம இருக்குது தெரியும்லா?...சின்ன பயனை மிரட்டுற கேசில உங்களை வரலாறை உள்ள தள்ளனும்......###படத்தை விட தியேட்டர் விமர்சனம் சூப்பர் தம்பி....அப்ப இதுவும் ராஜபாட்டைதானா?ஏன்னா நாங்க விகாரம் நடிப்பை பாக்க விரும்பலை.நல்ல படம் பார்க்க விரும்புறோம்.

    ReplyDelete
  18. "நீங்கள் தாண்டவமாடாவிட்டாலும் பரவாயில்லை ருத்திர தாண்டவம் ஆடாமல் இருந்தால் சரி. "
    தெய்வதிருமகன் , மத்ரசபடினம் போன்ற படங்களை எடுத்தவர் இப்படி சொதப்புவார் என்று நினக்கவில்லை

    ReplyDelete
  19. அனுஷ்கா நாய்களின் மீதும் புறாக்களின் மீதும் காட்டும் பாசத்தை விக்ரம் மீது காட்ட தயங்குவதேன்?
    அருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் எப்படி புரிந்து கொள்வது? இயக்குனருக்கே வெளிச்சம்.......

    ReplyDelete
  20. அப்போ தாண்டவமும் சொதப்பலா........
    என்னப்பா நம்ம ஆளு தொடர் சொதப்பலா குடுக்குறாரு...பேசாம என் படத்துல அவர சேர்த்துக்கப் போறன்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    பகிர்வுக்கும் விமர்சனத்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. ஆக தாண்டவம் தப்பான ஆட்டம்னு சொல்றீங்க:)

    ReplyDelete
  22. அண்ணா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பக்கத்திற்கு அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/2012/09/1.html

    ReplyDelete