17 Sept 2012

புதிய பதிவரை மதிக்காத கே ஆர் பியும், மறந்த கேபிளும்


நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார் 

வாழ்கையில் ஒருமுறையாவது பைவ் ஸ்டார் ஹோட்டல் செல்ல வேண்டும் என்பது என்(எங்கள்) சிறுவயது ஆசை. அடையார் கேட் என்றழைக்கப்படும் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தான் எனது சித்தி பையன் வேலை பார்த்தான். அப்போது முதலே அவனிடம் கேட்டுக் கொண்டு இருப்போம் அவன் அழைத்துச் சென்றதே இல்லை. சரி நம் சொந்தக் காசில் தான் செல்ல வேண்டும் என்று இருந்தால் செல்லும் நாள் வரும் பொழுது சென்று கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.


நண்பனின் நண்பனின் நண்பனுக்கு திருமண வரவேற்ப்பு பார்க் ஷெரட்டனில் நடைபெறுகிறது வருகிறாயா என்று கேட்டான் எனது நண்பன். செல்லலாம் என்றாலும் ஏதோ ஒன்று தடுத்தது, அதன் பெயர் தன்மானமாக இருக்கலாம் என்பது எனது ஆகச் சிறந்த அவதானிப்பு. அன்றைய மாலை பொழுதில் பதிவர் சந்திப்பு இருந்ததால் என் நண்பனிடம் வரவேற்ப்புக்கு வரமுடியது என்று கூறிவிட்டேன். என் நண்பனுக்கு அதில் உடன்பாடு இல்லை. இறுதியில் என்னை வரவழைக்க அவன் எடுத்த முயற்சி தோல்வி அடையவில்லை. நாங்கள் சென்றது சின்னத்திரை மற்றும் குறும்படங்களில் நடித்து வரும் ஒரு நடிகரின் திருமண வரவேற்பிற்கு. பைவ்ஸ்டார் ஹோட்டல் விருந்து என்பது ஒருபுறம், திரையில் பார்த்தவர்களை தரையில் பார்க்கிறோம் என்ற ஆனந்தம் ஒருபுறம் என்பதால் இந்த வாய்ப்பை நான் இழந்து விடக்கூடாது என்பதில் நண்பன் ஆண்டோ மிகத் தீவிரமாக இருந்தார்.      

சென்று சேர்ந்தோம். மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை. இருபது நாள் ஷேவ் செய்யப்படாத தாடி சகிதம் சென்றேன். அங்கு வந்த  ஆஜானுபாகு மனிதர்கள் எல்லாரும் அவர்களைப் போலவே ஒரு ஆஜானுபாகுவான வாகனங்களில் வந்து இறங்கினார்கள். அந்த வாகனங்களையும் அதில் இருந்து இறங்கிய மனிதர்களையும்(!) கண்காட்சிப் பொருளைப் போல் வேடிக்கைப் பார்த்து நின்ற என்னை தலையில் அடித்து உள்ளே இழுத்துச் சென்றான் நண்பன் மணி. உள்ளே நுழையும் வேளை மொபைலை காட்டச் சொன்னார்கள். நோக்கியாவின் புதிய வெளியீடான 101i யை சிறிது வெட்கத்துடன் காண்பித்தேன். அடுத்தது என் நண்பனின் முறை சிரித்துக் கொண்டே தனது மொபலை எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் காண்பித்தான். அவனது மொபைல் நோக்கியாவின் தரமான வெளியீடு 1100 அதில் டிஸ்ப்ளே பேனலில் மிகப் பெரிய விரிசல் மட்டுமே இருந்தது அதனால் அதைக் காண்பிக்க அவன் வெட்கப்பட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

படியேறி முதல் மாடி செல்ல வேண்டும். படியேறி தான் முதல் மாடி செல்ல வேண்டும் என்பது  கூடவா எங்களுக்கு தெரியாது  என்று நீங்கள் நினைக்கலாம். இங்கே தான் அடுத்த ட்விஸ்ட் நடந்தது. படியேறும் போது ஒரு அழகு மங்கை கீழிறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அடுத்த கணம் ஸ்லிப் ஆகியம் மனம் இல்லை மானம். ஆமாம் ட்விஸ்ட் ஆகியது கதையில் இல்லை என் காலில். வழுக்கி விழப் பார்த்தேன். தோள் கொடுத்தான் நண்பன். இல்லையேல் என் மானம் இல்லையேல் தான். அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு வழக்கமான திருமண வரவேற்பு சம்பவங்கள் தான். அவற்றை சொல்லி உங்கள் பொன்னான பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. காரணம் அந்த பொன்னான தருணங்களில் நாங்களும் கலந்து கொள்ளவில்லை. சாப்பாடு தான் மிக முக்கியம் நமக்கு. முதல் துண்டு சிக்கனை வாயில் வைக்கும் பொழுது நான் எண்ணியது 

நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார் 

                                                         *******************************
இன்றைய பதிவுலக செய்திகள் வாசிப்பது, வாசிப்பது வேறு யாரும் இல்லை நீங்கள் தான்( ஆமாங்க எழுதினது தான நானு, வாசிப்பது நீங்க தானங்க)     

புதிய பதிவரை மதிக்காத கே ஆர் பி 

டீ நகர் நடேசன் பூங்காவில் ஜீரோ பட்ஜெட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற்றது. நான் சிவா மதுமதி ஜெய் பாலகணேஷ் சார் மோகன் குமார் சார் எனது நண்பன் மணிகுமார் உடன் பதிவுலக நாட்டமை கே ஆர் பியும் கலந்து கொண்டார். கேஆர்பி வருவதற்கு முன்பு வரை பதிவர் சந்திப்பாக நடந்து கொண்டிருந்தது, அவர் வருகைக்குப் பின் சந்திப்பின் திசையை மாற்றி புதிய பதிவர்  ஒருவரை மதிக்காமல் ஓரம் கட்டிவிட்டார். ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்க முடியாமல் அந்த பதிவர் வெளிநடப்பு செய்தார் என்பது தனிகதை. 

(மேற்கூறிய என் கருத்துக்களுக்கும் மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்). 

புதிய பதிவரை மறந்த கேபிள் 

வெளிநடப்பு செய்த பதிவர், நேரே சென்ற இடம் அடையார் கேட் என்றழைக்கப்படும் பார்க் ஷெராட்டன். பைவ் ஸ்டார் ஹோட்டலையே அதிசயமாக பார்த்தபடி சுற்றித் திரிந்த நமது பதிவர், பதிவுலக சூப்பர் ஸ்டாரை கண்டு கொண்டார். அவரைக் கண்டதும் "கேபிள் சார் எப்படி இருக்கீங்க, என்னைத் தெரியுதா?" என்று கேட்கவும், " உங்களை எங்கயோ பார்த்த மாதரியே இருக்கு" என்று பல்பு கொடுத்தார். "இன்னா சார் பதிவர் சந்திப்புல தோள் மேல எல்லாம் கைப் போட்டு போட்டோ எடுதுகினோம்        , என்னப் போயி மறந்துட்டேன்னு சொல்டீங்களே" என்று புதியவர் செண்டிமெண்டாக, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இவன் நம்மை மெண்டல் ஆகிவிடுவான் என்று "ஹல்லோ தம்பி அந்த பொக்கே எங்கே?" என்று எங்கோ பறந்து சென்று ஏமாற்றம் அளித்தார்.

(மேற்கூறிய என் கருத்துக்களுக்கும் மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் சத்தியமா எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்).

நன்றி 

சென்ற பதிவில் பதிவர் சுரேஷ் பற்றி கருத்து ஒன்று கூறியிருந்தேன். அதற்க்கு அவர் என்னுடன் சண்டை போடுவார் என்று எதிர்பார்த்தேன் , ஆனால் அவர் எனக்கு அளித்த பதில் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவரையா இப்படி சொல்லிவிட்டோம் என்ற அளவுக்கு என்னை சிந்திக்கச் செய்தது. இருந்தும் என் கருத்துகளை மதித்து உங்களை மாற்றிக் கொண்ட உங்களுக்கு நன்றி. சுரேஷ் எனக்களித்த கமேன்ட்டை கீழ்காணும் இந்த படத்தில் க்ளிக்கி கண்டிப்பாகப் படியுங்கள்.


கோட்டான கோடி நன்றி 


நூறு பாலோவர்களை பெற்றுகொண்டேன். என்னை மென்மேலும் உற்சாகப்படுத்தும் உங்களுக்கு கோட்டான கோடி நன்றிகள்.  




47 comments:

  1. தூங்காம பதிவு எழுதுறியே சீனு..சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. முதலில் வருகை தந்து என் பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சார். விடுபட்ட உங்கள் பெயரை சேர்த்துக் கொண்டேன்...

      //தூங்காம பதிவு எழுதுறியே சீனு// என்ன சார் பண்றது!. நான் இப்போலாம் பதிவு எழுதுறதே இரவு வேளைகளில் தான்

      Delete
  2. 100 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா! சீக்கிரம் 1000 ஆகட்டும்!

    ReplyDelete
    Replies
    1. // 100 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா! சீக்கிரம் 1000 ஆகட்டும்!//

      வரலாறு அவர்களே ஆசைப் படலாம் பேராசைப்படக் கூடாது என்று சங்க இலக்கியத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் கண்டிப்பாக ஒரு புலவர் கூறி இருப்பார். இருந்தும் என் பேராசையைத் தோண்டிவிடும் வரலாறு அவர்களே உங்களை (தாக்க) வாழ்த்த வயதில்லை

      Delete
  3. எனக்கும் கேபிளிடம் இதே அனுபவம். உண்டு.அவர் ஆயிரக் கணக்காண நண்பர்களை உடையவர்.ஒரு நாள் பார்த்த நம்மை நினைவில் வைத்துக் கொள்வது கடினம்தான்.டேக் இட் ஈசி

    ReplyDelete
    Replies
    1. // ஒரு நாள் பார்த்த நம்மை நினைவில் வைத்துக் கொள்வது கடினம்தான்.டேக் இட் ஈசி// ஹா ஹா ஹா அவர் என்ன மறந்து போயிருப்பாருன்னு தெரியும், பெரியவர்களை நாமே தானே தேடி சென்று வணக்கம் வைக்கணும் (நாம் பல்ப் வாங்கினாலும் கூட) இந்த விசயத்தில், நான் மனம் தளராத விகிரமாதித்தன்....

      அவரோட அறிமுகம் கிடைக்காம இருந்திருந்தா கண்டிப்பா எட்ட நின்னு தான் சார் பார்த்திருப்பேன்

      Delete
  4. தோல்வி அடையவில்லை, திரையில் பார்த்தவர்களைத் தரையில் பார்ப்பது, வாசிப்பது நீங்கதான்.... ஆஹா...
    ஹோட்டலில் நுழையும்முன் செல்லை ஏன் காண்பிக்கச் சொல்கிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. //ஹோட்டலில் நுழையும்முன் செல்லை ஏன் காண்பிக்கச் சொல்கிறார்கள்?//

      ஒரு வேளை மொபைலில் பாம்ப எதுவும் வைத்து இருக்கிறோமா என்று பார்கிறார்கள்.. ஹெட்செட் மொதக்கொண்டு செக் செய்கிறார்கள் சார்.

      Delete
  5. என்றாவது ஒருநாள் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணிக்குப் பின்னர் "கேப்பச்சினோ" என்றழைக்கப்படும் காபி ஷாப்புக்குச் சென்று ஜன்னலோரமாக அமர்ந்து ஒரு காபி மட்டும் சாப்பிடுங்கள். நீங்கள் காபி சாப்பிட்டதைப் பற்றி(!) 10 பதிவுகள் எழுதலாம். நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்று புரிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. //காபி சாப்பிட்டதைப் பற்றி(!) 10 பதிவுகள் எழுதலாம். //

      சத்தியமா எனக்கு புரியல சார்... கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்....

      //ஜன்னலோரமாக அமர்ந்து ஒரு காபி மட்டும் சாப்பிடுங்கள்// ஒருவேளை நீங்கள் சொல்ல வருவதை நான் புரிந்து கொண்டேன் என்றால் நான் வேளை பார்ப்பது ஐடி கம்பெனியில் தான் அதனால் நான் இங்கு எங்கு நின்றாலும் பல பதிவுகள் எழுதும் அளவிற்கான சம்பவங்கள் கிடைக்கும் .. :-)

      Delete
  6. //நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார்//
    பஞ்ச் ... நீங்க யோசித்ததா?

    100 ஃபாலோயர்ஸ்...குட் ஜாப். :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தல சில சமயம் பஞ்ச டையலாக் லா பஞ்சமே இல்லாம வரும்....

      //குட் ஜாப். :)// நன்றி தல

      Delete
  7. தல,
    நண்பனின் நண்பன் பார்ட் நல்லா இருக்கு...ஆனா பதிவுலக செய்திகள் ஒண்ணுமே புரியல.. :(

    ReplyDelete
    Replies
    1. //ஆனா பதிவுலக செய்திகள்// ஹா ஹா ஹா எஞ் சோகக் கதைய அக்கறையா கேக்குறதுக்கு நீங்களாவது இருக்கீங்களே நன்றி தல...

      நேத்து ஜாலியான ஒரு சந்திப்பு நடசியன் பார்க்கில் நடந்தது... அது வரைக்கும் பதிவர்கள் கலவரமும் நிலைவரும் பற்றி போயிட்டு இருந்த சந்திப்பு கே ஆர் பி வந்ததும் பிசினஸ் விஷயங்கள் பேச ஆரம்பிச்சிட்டாங்க... நமக்கு தலையும் புரியல வாழும் புரியல இதப் புரிஞ்சிகிட்ட சிவா எனக்கு ஒரு தலைப்பு சஜ்ஜெஸ்ட் செஞ்சாரு...கேபிள் பத்தின தலைப்பு நானா சேர்த்து கொண்டது

      Delete
  8. செம ! சிரித்தேன். ஆங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு சரி பார்க்கவும்.

    நான் 101 !

    ReplyDelete
    Replies
    1. //ஆங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு சரி பார்க்கவும். // கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன் சார்....
      //நான் 101 // சட்டம் தான் கடமையைச் செய்தது ஹா ஹா ஹா நன்றி சார்

      Delete
  9. 101 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா! சீக்கிரம் 1001 ஆகட்டும்!

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. //101 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா! சீக்கிரம் 1001 ஆகட்டும்!//

      நீங்களும் வரலாறும் ஒரு அப்பாவியை பேராசைப் பட வைகிறீர்கள் பதிவுலகச் சட்டப் படி இது மாபெரும் தண்டனை யாகும்... ஆதலால் இன்றிலிருந்து நீங்கள் பிரபல பிரபல பதிவர்கள் என்ற பட்டம் பெற தகுதியானவர்கள் ஆகிறீர்கள்

      Delete
    2. நீங்க தான் மைனஸ் ஓட்டெல்லாம் வாங்குறீங்க... அப்ப நீங்க தான் பிரபல பிரபல பதிவர்...!

      ;) ;) ;)

      Delete
    3. >>>அப்ப நீங்க தான் பிரபல பிரபல பதிவர்<<<

      உண்ம உண்ம :)

      Delete

  10. //மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை.//

    மடிச்சி விட்டா அப்பறம் அது எப்படி முழுக்கை சட்டை ஆகும்?

    ReplyDelete
    Replies
    1. //முழுக்கை சட்டை ஆகும்?// தமிழனின் பதிலளிக்க முடியா கேள்விகளில் இதுவும் ஒன்று... தங்கள் கேள்வி என் சிந்தனையை எழுப்பி விட்டது..சிந்திக்கிறேன் :-)

      Delete
    2. >>சிந்திக்கிறேன்<<<

      சிந்திக்கிறேன் என்று தவறாக கூறாதீர்கள் சீனு...அருமையான கருத்துக்கள் மனப்பாடம் செய்கிறேன் என்று கூறுங்கள்! :D

      Delete
    3. ஆகச் சிறந்த உங்கள் அவதானிப்பின் படி வந்த பாடாவதி கருத்துக்களை நானும் மனபாடம் செய்ய முயல்கிறேன் நன்றி

      வரலாறே எப்புடி.... விழுந்து விழுந்து மனப்பாடம் பண்ணிருக்கேன் :-)

      Delete
  11. //உங்களை எங்கயோ பார்த்த மாதரியே இருக்கு" என்று பல்பு கொடுத்தார்.//

    அடுத்த முறை அவரை பாக்கும்போது இதே டயலாக் அடிங்க.

    ReplyDelete
    Replies
    1. // இதே டயலாக் அடிங்க.//

      தலைவா நேத்தே அவருக்கு வெறி தலைக்கு ஏறி இருக்கும்...அடுத்த தடவ பார்க்கும் போது அவரு என்ன அடிக்காம இருந்த சரி

      Delete
  12. யோவ் சிவா... எவ்வளவு செலவாச்சு...

    ReplyDelete
    Replies
    1. கேளுங்க பிரபா... இந்த அநியாயத்த நீங்க கேளுங்க... இதுல ஜெய் காமிரா எல்லாம் கொண்டு வந்திருந்தாரு என்ன ஒரு போட்டோ கூட எடுக்கல

      ஜெய் : நீங்க இப்படி செஞ்சதே இலையா சார் :-)

      Delete
  13. இரவெல்லாம் விழித்திருந்து அதி அதிகாலை 2:53 க்கு பதிவு போட்ட சீனுவின் கடமை உணர்ச்சியை பாராட்டி...., "நீங்க இப்படி செய்ததே இல்லையா சார்"(இயக்கம், இயக்குனர் ஆல்ப்ஸ்- கேஇள் சங்கர்) குறும்படத்தின் திருட்டு விசி-டியை ஆணழகன்,சிகப்பழகன், முன்சிலிர்க்கும் முடியழகன் என்ற பட்டப்பெயர்களோட வலம்வரும் மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்கள் தன் இத்துப்போன கரங்களால் சீனுவுக்கு வழங்குவார். பதிலுக்கு சீனு அவர்கள் கிளிப்பச்சை கலர் குச்சி முட்டாய் ஒன்றும், நமத்துப் போன குருவி ரொட்டி ஒன்றையும் மெட்ராஸ்க்கு வழங்கி கவுரவிப்பார்... மேலும்.......................................................

    ReplyDelete
    Replies
    1. //அதி அதிகாலை 2:53 க்கு பதிவு போட்ட சீனுவின் கடமை உணர்ச்சியை பாராட்டி....// ஹா ஹா ஹா ஜெய் அண்ணே என்னனே பண்றது...

      எங்கள சிங்கம் எங்கள் தங்கம் அவர்களை வஞ்சப் புகழ்ச்சியில் புகழ்ந்து இருப்பது வருத்தம் அழிக்கிறது இதற்க்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்காவிட்டால் உங்கள் அணைத்து பதிவுகளையும் மனப்பாடம் செய்ய வேண்டிய நிலை வரும் என்பதை ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

      Delete
  14. //
    யோவ் சிவா... எவ்வளவு ...
    //

    சிங்கிள் டீ கூட வாங்கித்தரலை. ஏதோ, பார்க் பெருசா வாக்கிங்க போக செளகரியமா இருந்தது.... அதுவும் சீனுப்பய சீகிரம் வந்ததால 5 வது ரவுண்ட் பாதியிலே கட் :(((

    ஏழைபதிவர்கள் மீட்டிங்க விட கேவலமாப் போச்சி.....

    வரும்போது வாட்டர் பாட்டில் என் கைகாசுல வாங்கி குடிச்சேன்....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பில் நன்கு ரவுன்ட் அடித்த பிரபலம்...இது தான் அடுத்த தலைப்பாக இருக்கும் ஜெய் அவர்களே எதற்கும் பதிவுலகில் உஷாராக நடமாடுங்கள்

      Delete
  15. //வரும்போது வாட்டர் பாட்டில் என் கைகாசுல வாங்கி குடிச்சேன்//

    சுவை.

    ReplyDelete
    Replies
    1. "சுவை"யான கருத்துக்கு நன்றி சார் :-) ஹா ஹா ஹா

      Delete
  16. பார்கிலே விசில் அடிச்சு எல்லாரையும் துரத்தி விட்டாங்க. அது வரைக்கும் பேசினாங்க சார். வெளியே வந்து அரை மணி நேரம் நின்னுக்கிட்டே பேசுனாங்க. பக்கத்துல தாங்க சின்ன ஸ்நாக்ஸ் கடை இருந்தது. ஜெய் அந்த பக்கம் திரும்பணுமே. ஊஹும் சரி கிளம்பலாம்ன்னு வண்டி எடுக்க போயிட்டு அங்கே நின்னுகிட்டு 15 நிமிஷம் பேசுறாங்க. இவங்களை எல்லாம் என்ன பண்ணலாம் சொல்லுங்க ?

    அடுத்த முறை சாப்பிட எதுவும் வாங்கி தரா விட்டால் பொருளாளரை மாத்திட வேண்டியது தான் :))

    ReplyDelete
  17. //வரவேற்ப்புக்கு வரமுடியது //

    சீனு ஒரு பிரபல பதிவர்.... கன்பார்ம்ட் !

    பெரிய " ற்" பக்கத்தில் மெய் எழுத்து ( ப், க்) வரக்கூடாது ! முடியது அல்ல .. முடியாது !

    ReplyDelete
  18. 'நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே" என்கிற பாலிசியை நேத்தே சொல்லிருந்தா உங்க ஜோதியில் நானும் ஹோட்டல் வந்து ஐக்கியம் ஆகியிருக்கலாம் :))

    "வெளியே சாப்பிடு" றேன் என நானே சொன்னதால் ரோட்டோர கடையில் சாப்பிட்டு "வீடு திரும்பல்" ஆக வேண்டியதா போச்சு.

    ReplyDelete
  19. 101 Followers - மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. நல்ல வேளை நான் வரவில்லை ...........

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் சீனு ...
    இந்த வாழ்த்து எதுக்கு ஒன்று நீங்க கொஞ்ச நேரம் யோசித்தாலும், ரொம்ப நேரம் யோசித்தாலும் அர்த்தம் வெளங்காது ..
    ஏனென்றால் அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ஆகச்சிறந்த வாழ்த்து,,,

    எப்படியோ ஒரு கருத்த சொல்லியாச்சு .. இனி நிம்மதியா போய் தூங்கலாம் ...

    நேற்று நடந்த சந்திப்புக்கு வந்திருக்கலாம் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதான் வரமுடியவில்லை ...
    பார்க் ஷெரட்டன் அட்டகாசம் ..

    ReplyDelete
  22. இதுக்கு யாரையா மைனஸ் வோட்டு .. போட்டது .. நல்லா இருங்க சாமிகளா ?

    ReplyDelete
  23. சச்சின் மாதிரி இல்லாம திக்காம திணறாம 100 அடிச்ச தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.கடந்த பதிவு என்னை பற்றி என்பதால் அதில் உள்ள வார்த்தை விளையாட்டுகளை ரசிக்க மட்டும் செய்தேன்.சொல்ல வில்லை.இந்த பதிவிலும் தொடரும் திரை,தரை,ஆஜானுபாகு மனிதர்கள்,ஆஜானபாகு கார்கள்,நண்பனின் நண்பனின் நண்பன்,செய்திகள் வாசிப்பது.....இப்படியான வார்த்தை விளையாட்டுக்கள் குறையாத வரை மேல் சொன்ன நண்பர்கள் அன்பர்கள் வாழ்த்தோடு கட்டாயம் 1000 பெற முடியும் என்று நம்பலாம்.

    சுரேஷ் அன்பரை பற்றி குறிப்பிட்டது நெகிழ்ச்சி.அவரும் நல்லவரா இருக்காரு,நீயும் நல்லவரா இருக்கிறே......நல்லா வருவீங்க...(கிண்டலா சொல்லலை).

    ReplyDelete
  24. பய புள்ள மைனஸ் வோட் எல்லாம் வாங்குது.. நண்பனுக்கு தெரியாம நீ பெரிய பிரபல பதிவர் ஆகிட்ட போ..

    ReplyDelete
  25. // நூறு பாலோவர்களை பெற்றுகொண்டேன்... //

    44 பதிவில் நூறு பாலோவர் சாதனைதான்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  26. பசிகுமார் மேட்டர் சூப்பர் நண்பா....
    அப்புறம் நூறாவது மனச்சாட்சிக்கு வாழ்த்துக்கள்/.... அட சீ நூறாவது பாலோவர்ஸ் பெற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. நூறு பாலோவர்களை பெற்றுகொண்டேன்.//


    இனிய வாழ்த்துகள் !!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் நண்பரே ! நூற்றில நானும் ஒன்னு அப்படின்னு சொல்றதுல பெருமை அடைகிறேன் !

    ReplyDelete