15 Sept 2012

பதிவுலக அரசுப் பயங்கரவாதி ஓர் அறிமுகம்


தமிழ்மணம்.திரட்டிகள். பின்னூட்டங்கள் என்று பதிவுலகில் நடைபெறும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எழுதும் இந்தப் பதிவை மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். 

பகுதி ஒன்று 

குதி இரண்டு தான் எழுத வேண்டும் என்று தொடங்கினேன். பகுதி ஒன்றையும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பகுதி ஒன்றை படிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து இரண்டை(யும்)  படித்துவிடுங்கள்.  


லைபூ ஆரம்பித்த புதிதில் உங்களில் பெரும்பாலானோருக்கு கிடைத்த அனுபவம் தான் எனக்கும். எந்த ஒரு நண்பனையும் விட்டுவைக்க மாட்டேன். அவனிடம் கணினியும் இணையமும் இருக்கிறதென்றால், நிச்சயம் அவன் என் வலைப்பூவை படித்தாக  வேண்டும், அல்லது படித்தது போன்றவது காட்டிக்கொள்ள வேண்டும். நம் எழுத்து பலபேரை சென்று சேர வேண்டும். அதில் இரண்டு பேராவது "நல்லா எழுதி இருக்கீங்க" என்று கூறி உற்சாகப்படுத்த வேண்டும். நீங்கள் வலைபூ ஆரம்பிக்கும் பொழுது இப்படி சிந்தித்து இருந்தீர்களா என்று தெரியாது. ஆனால் நான் இப்படித் தான் சிந்தித்தேன். இந்தப் பதிவை விட அடுத்த பதிவை நன்றாக எழுத வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டும் உள்ளேன். "இப்போ எதுக்கு இந்த சுயசரிதம்" என்று கேட்கிறீகளா? 


லைப்பூ ஆரம்பித்த புதிதில் மூன்றாவது பதிவின் முடிவிலேயே என் நண்பர்கள் எரிச்சல் படத் தொடங்கினார்கள். பதிவைப் படிக்க முடியாது ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூற ஆரம்பித்தார்கள். என்னுடைய நான்காவது பதிவிலேயே வலைபூவிற்கு மூடு விழா நடத்தி விடலாம் என்று இருந்தேன். இங்கு தான் ஒரு சிறு திருப்பம். எப்படியோ என் வலைப்பூவை அறிந்து கொண்டு எனக்கும் பின்னூட்டம் இட சிலர் வந்தார்கள். கவனிக்க இந்த நேரங்களில் ஒரு திரட்டியில் கூட என்னை இணைத்திருக்கவில்லை. ஆனால் நான் படிக்கும் பதிவுகளில் என் பதிவைப் பற்றிய குறைந்தபட்ச விளம்பரம் செய்ய ஆரம்பித்தேன். பேய்கள் ஓய்வதில்லை புகழ் சுரேஷ் செய்து வருகிறாரே அவர் போல. நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார் என்று கேட்பவர்களுக்கான பதில், புதிய பதிவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் தளங்களுக்கு செல்லுங்கள். எழுத்துப் பிடித்திருந்தால் அவர்களை தட்டிகொடுங்கள். குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.    

புதிய பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தளத்திற்கு தொடர்ந்து வர நினைக்கும் உங்கள் நண்பர் வரத் தோடங்கிவிட்டார் என்றால் அவர் தளத்தில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிடுங்கள். வலைப்பூவில் பத்து நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளுங்கள், அதன்பின் விளம்பரம் செய்வதை நிறுத்திவிடுங்கள். மற்ற நண்பர்களை உங்கள் எழுத்து சம்பாதித்துக் கொடுத்து விடும். அதையும் மீறி தொடர்ந்து விளம்பரம் செய்தால் செல்லமாகக் குட்டப்படுவீர்கள். இந்த செல்லக் குட்டை பாலகணேஷ் சாரிடம் இருந்து நான் வாங்கியுள்ளேன் (இதை கூறுவதில் வருத்தப்பட ஏதுமில்லை). அதன் பின்னும் நீங்கள் திருந்தாவிட்டால் ஒதுக்கப்படுவீர்கள். சுரேஷ் சார் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரமிது. ஒருவேளை இங்கும் உங்கள் விளம்பரம் இருந்தால் !@#$%^&*. 

டுத்தது கமென்ட். மெட்ராஸ்பவன் சிவகுமார் என்னிடம் சொன்னார், படிக்க முடிந்தால் படித்து பின்னூட்டமிடு இல்லையேல், படிக்காதே பின்னூட்டமும் இடாதே. காரணம் நாளை உனக்கு வரும் பின்னூட்டமும் அப்படிப்பட்டதாகத் தான் இருக்கும். எங்கள் முதல் சந்திப்பில் அவர் எனக்குக் கூறிய அறிவுரை இது. நியாயமான ஒன்று. ஆனாலும் பின்னூட்டம் ஒருவருக்கு எவ்வளவு உற்சாகம் அளிக்கும் என்பது எனக்கு வரும் பின்னூட்டம் மூலம் நான் அறிவேன். நான் தொடரும் ஒவ்வொருவரின் பதிவையும் படிக்க வேண்டும் படித்தால் பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைப்பவன். உங்களையும் அப்படி இருக்கச் சொல்லவில்லை. பதிவில் இருக்கும் கருத்துக்கள் பிடித்தால் தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இங்கு இடம் பொருள் ஏவல் மிக முக்கியம். செவிமடுத்துக் கேட்பவர் யார் செருப்பெடுத்து அடிப்பவர் யார் என்றெல்லாம் இனம் காண வேண்டியது உங்கள் பொறுப்பு.  

ங்களையும் உங்கள் எழுத்துகளையும் பிடித்தவர்கள் மட்டுமே எப்போதும் வருவர். உங்களை தொடர்பவர்கள் அனைவரும் உங்களுக்கு கருதிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சிலருக்கு சினிமா, சிலருக்கு தொழில்நுட்பம்.சிலருக்கு கதைகள். இப்படி அந்த சிலருக்கான சில பதிவுகளைப் பதியும் பொழுது மட்டுமே அந்த சிலர் உங்களைத் தேடி வருவர். சில பதிவுகளை விரும்பிப் படிக்கும் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்பதை நினைவில் கொள்க. புரிவதற்குக் கடினமாக இருக்கும் இது போன்ற வாக்கியங்களை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் (எனக்கு நானே சொல்லிக்கொண்டது). உங்கள் தளத்தில் உங்கள் கருத்துக்கள் மட்டுமே இருக்கட்டும். காப்பி பேஸ்ட்டை  முடிந்த அளவிற்கு தவிருங்கள்   மற்றபடி இது உங்கள் தளம் உங்கள் களம். விளையாடுங்கள்.மேற்கூறிய அனைத்து கருத்துக்களும் எக்காலத்திற்கும் எப்பொழுதும் எனக்கும் பொருந்தும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

  *********************************************

பகுதி இரண்டு 

லைபூ துவங்கிய சிறிது காலத்திற்குள் எனக்கு அறிமுகம் ஆனவர். பதிவு எழுதுவதில் என் ஆரம்பக் கால சோர்வை நீக்கி உற்சாகம் கொடுத்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. சரியோ தவறோ வெளிப்படையாக சொல்லி விடுவார். பதிவுகளில் நான் செய்த பிழைகளை சுட்டிக் காட்டுவார், இது இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அறிவுரை கூறுவார். அதே நேரத்தில் நன்றாக எழுதி இருந்தால் இவரது பாராட்டு தனித்து நிற்கும். எனது ஆரம்பக் காலப் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் என் எழுத்துக்கள் மீது இவர் காட்டிய அக்கறை புரியும். முக்கியமான விஷயம் எனக்கும் அவருக்கும் கருத்து வேற்றுமைகள் அதிகம். எங்களுக்குள் நடந்த சொற்போர் அதிகம். அவர் பெரியார் பக்தன். நானோ பெரிய பக்தன். அவரைப் பொறுத்தவரையில் அணு உலை வேண்டாம். எனக்கு வேண்டும். இன்னும் எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.

ங்கே இவரை நான் குறிப்பிட விரும்புவதன் நோக்கம், அவர் கருத்துக்கள் பலராலும் அறியப்படாமல் சென்று சேராமல் இருக்கிறது. முதலில் அவரை யார் என்று சொல்கிறேன், பின்பு அவர் பதிவுகளைப் பற்றிக் கூறுகிறேன். தம்பி என்னும் பெயரில் வலைபூ எழுதி வரும் இவர் தன்னை அரசு பயங்கரவாதி என்று அறிமுகம் செய்துகொள்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் பயங்கரவாதிகளை அடிபணியச் செய்யும் எல்லை காவல் படையில் பயிற்சியாளராக பண்புரிகிறார். இவர் எழுத்துக்கள் மீது ஈர்ப்பும் மரியாதையும் வரக் காரணம் இந்த ஒரு விஷயம் தான். தன்னை ஒரு சமூகப் போராளியாக அடையாலப்படுதுவதையே பெரிதும் விரும்புகிறார்.

மீபத்தில் இவரது மகன் பாரதி பிறந்த தினம் வந்தது. முகப்புத்தகத்தில் "இன்று இந்த எம்டன் மகன் சே பாரதிக்கு பிறந்த நாள்..சிறந்த மனிதாபிமான மனிதனாக சக மனிதனுக்காக போராடும் போராளியாக வளர உங்கள் ஆசிர்வாதங்கள் மிக அவசியம்...ஆசிர்வதியுங்கள் !!!"  என்ற வாசகங்களுடன் தன் மகனின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். கழுத்தில் டாலர் தொங்கியது. முருகன் டாலராகவோ அல்லது விநாயகர் டாலராகவோ இருக்கும் சண்டை போடலாம் என்ற எண்ணத்தில் அவர் மகனின் கழுத்தில் இருந்த டாலரை உற்றுநோக்கினேன் ஆச்சரியம், அதில் இருந்தது சே.கு.வ.ரோவின் உருவம். வாழ்த்துக்கள் அண்ணா. நிச்சயம் பிரமித்துப்போனேன். தலை வணங்குகிறேன்.      



உங்களுக்கு சில வேண்டுகோள்கள்

மூக பிரச்சனைகள், சிறுபான்மையினர் பிரச்சனைகள், சினிமா விமர்சனம், கம்யுனிசம் எழுத என்று பலர் இந்த வலைப்பூவில் உள்ளார்கள். ஆனால் ராணுவத்தைப் பற்றி அதில் நீங்கள் படும் கஷ்டங்கள், சவால்கள், பயணங்கள் இன்ப துன்பகள் போன்றவற்றை எழுத நீங்கள் மட்டுமே இருக்கிறீகள். உங்களைப் போன்றவர்களின் அனுபவங்களை நாங்கள் அறிய ஒரு வாய்பாக இத்தளம் அமையட்டும். 

ற்ற கட்டுரைகளை எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் எல்லைப் பாதுகாப்பு படையில் உங்கள் அனுபவங்கள், உங்கள் நண்பர்கள் அனுபவங்கள் பற்றி எழுதுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த பதிவு இரண்டு எழுதினால், எல்லைப் பாதுகாப்பு படை பற்றிய பதிவு ஒன்றாவது எழுதுங்கள். திட்டியும் எழுதுங்கள், அதே நேரத்தில் சவால்களையும் சாகசங்களையும் சேர்த்து எழுதுங்கள். 


ந்தப் பதிவின் தாக்கம் இன்றும் என்னுள் இருக்கிறது அதுவும் அந்த வேலிக்குள் வேலை செய்யும் ராணுவ வீரனும் அவர்களை பற்றி நீங்கள் கூறிய கருத்துகளும் நினைத்துப் பார்க்கவே சிலிர்பாய் உள்ளது. உங்களால் தரமான எழுத்துக்களை தர முடியும் என்னும் பொழுது நான் உங்களிடம் கேட்கும் வேண்டுகோள் நியமானது தான்.


உங்கள் பதிவுகள பலரையும் சென்று சேர வேண்டும் என்று எதிர் பார்க்கும் உங்கள் தம்பி.




28 comments:

  1. நான் பதிவுகளை பொதுவாக தலைப்பு சார்ந்தும்,கண்ணில் பட்டது போன்ற சூழலில் பல பதிவுகளையும் படிக்கின்றேன்.பின்னூட்டங்களும் படித்தால் மட்டுமே.

    அபூர்வமானதல்ல...மிக அரிதும் என்று கூட சொல்ல முடியவில்லை.ஒற்றைப்படம் (Unique) என்று சொல்வேன் குழந்தையின் உடையும் செகுவாராவின் டாலரும்.

    ReplyDelete
    Replies
    1. தன் சிந்தனையுடன் செயல்ப்பாடும் இருக்கும் விதம் குழந்தையின் கழுத்தில் சே வின் டாலரை தொங்க விட்டு இருக்கிறாரே...இதை பார்த்ததும் எனக்குண்டான உணர்வுகளைத் தான் பகிர்ந்து கொண்டேன் சார்...

      வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. தம்பி செல்லத்துரை வலைத்தளம் எனக்கு ஏற்கனவே அறிமுகம் தான் என்றாலும் பாதுகாப்பு படை அவலம் பற்றிய பதிவை இப்போதுதான் வாசித்தேன் சீனு! திகைக்க வைக்கிறது! நிச்சயம் இந்த பதிவு பலரை சென்றடைய வேண்டிய ஒன்றுதான்!

    BTW, குறிப்பிட்ட பதிவின் இணைப்பை ஹைலைட் செய்ய பயன்படுத்திய நிறத்தில் கவனம் கொள்ளுங்கள் சீனு!

    ReplyDelete
  3. நீங்கள் சொன்ன விளம்பரதாரர் எனது வலைத்தளத்திலும் விளம்பரம் செய்தார் அவர் விளம்பரம் செய்ததை நான் தப்பாக எடுத்து கொள்ளவில்லை. மேலும் அவர் தளத்திற்கு சென்ற போது பல பதிவுகள் வேறுதளத்தில் படித்தது மாதிரி இருந்ததால் அவர் தளத்திற்கு செல்வதையே நிறுத்திவிட்டேன். மேலும் அவர் இடும் கமெண்டுகளையும் தடை செய்துவிட்டேன்.

    புதிய பதிவர்களுக்கு நீங்கள் மற்றவர் பதிவில் விளம்பரம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் நீங்கள் இடும்பதிவுகள் மற்றவர்களிடம் இருந்து காப்பி செய்த பதிவுகளாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் அப்படியே செய்தாலும் நீங்கள் எந்த தளத்தில் இருந்து அதை எடுத்தீர்கள் என்று சொல்லி அதற்கான லிங்கையும் கொடுங்கள் அதில் தவறே இல்லை . நிறைய படியுங்கள் நீங்கள் படிப்பதில் இருந்து சில வரிகள் உங்களை சிந்திக்கவும் எழுதவும் தூண்டும் .நீங்கள் சொல்வது தப்போ சரியோ என்று யோசிக்காதீர்கள் உங்கள் மனதில் தோன்றுவதை ஒரு நண்பரிடம் சொல்வது போல நினைத்து எழுதுங்கள்...அது மிகவும் நன்றாக வரும்...

    ReplyDelete
  4. நீங்கள் சொன்னவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே!
    உங்களிடமிருந்து வெர்சடைல் பிளாக்கர் விருது பெற்றிருக்கிறேன்.ஆலோசனைகளை தொடருங்கள்.

    ReplyDelete
  5. ஆதங்கம் புரிகின்றது.

    ReplyDelete
  6. //அவனிடம் கணினியும் இணையமும் இருக்கிறதென்றால், நிச்சயம் அவன் என் வலைப்பூவை படித்தாக வேண்டும், //

    போன் போட்டு படிக்க சொல்லி மிரட்டுனதுலாம் நியாபகம் இருக்கு.... நண்பர்களிடம் உறவினர்களிடம் மட்டுமல்லாமல் ப்ரவுசிங் சென்டர், வெஸ்டர் யூனியன் ன்னு எங்கே கொஞ்சம் நேரம் பேச டைம் கிடைச்சாலும் தாளில் என் தள முகவரி கொடுத்துட்டு வருவேன் :-)

    //உங்கள் தளத்தில் உங்கள் கருத்துக்கள் மட்டுமே இருக்கட்டும். காப்பி பேஸ்ட்டை முடிந்த அளவிற்கு தவிருங்கள் //

    ம்ம்... பெரும்பாலும் ஒருவர் என்றேனும் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு போட்டாலும் அதன் பின் அவரின் எல்லா பதிவுகளும் காப்பி-பேஸ்ட் பதிவுகளாகவே பார்க்கிறேன்.. இத்தகைய தளத்திற்கு போவதையும் நிறுத்திவிடுகிறேன். நமக்கென்று திறமை இருக்கும் போது நாம் ஏன் மற்றவரின் உதவியை நாட வேண்டும்... நல்ல பாய்ன்ட் தம்பி

    ReplyDelete
  7. தம்பி சதீஷ் செல்லத்துரையின் காஷ்மீர் பற்றி துணிச்சலான கட்டுரைகள் சான்சே இல்ல... அவரை போன்ற துணிச்சலானவர்களை காண்பது ரொம்பவே சொற்பம்... மிகமிகமிக பாராட்டுக்குரியவர்!

    // எல்லைப் பாதுகாப்பு படை பற்றிய பதிவு ஒன்றாவது எழுதுங்கள். திட்டியும் எழுதுங்கள், அதே நேரத்தில் சவால்களையும் சாகசங்களையும் சேர்த்து எழுதுங்கள். //

    ஏற்கனவே இது போன்ற பதிவுகளும் பல சவால்களுக்கு மத்தியிலும் எழுதிக்கொண்டு தானே வருகிறார் சீனு?

    அவரின் பதிவுகள் நிச்சயம் பலரை சென்றடைய வேண்டும்...

    உங்கள் பதிவு அருமை.. வாழ்த்துகள் தம்பி

    ReplyDelete
  8. நல்ல கருத்துகளை நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்துள்ள லிங்க் கிளிக்கியுள்ளேன். படிக்கிறேன்.

    ReplyDelete
  9. இவரது சுதந்திரதின பதிவை மட்டும் படித்து இவரை தவறாக நினைத்து விட்டேன்.....


    நோக்கம் சரியானதாக இருக்கும் பட்சத்தில் இனி எல்லாம் நலமே:)

    ReplyDelete
  10. இடம் பொருள் ஏவல் மிக முக்கியம்

    ReplyDelete
  11. அருமையான கருத்துக்கள். அவசியம் அனைவருக்கும் பயன்படும் விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சீனு.

    ReplyDelete
  12. நல்ல கருத்துகள்...உங்கள் பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  13. அருமையான ஆலோசனைகள் சீனு

    உங்களையும் உங்கள் எழுத்துகளையும் பிடித்தவர்கள் மட்டுமே எப்போதும் வருவர்

    இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று

    ReplyDelete
  14. பதிவெழுதுற ஆரம்பகட்டத்துல இப்படி நாலு பேர் கிண்டலும், நாளு பேரோட ஊக்கமும் கலந்துதான் சீனு , எல்லாருக்கும் கிடைக்குது.... ஒரு கட்டத்துல எல்லாருக்கும் புரிதல் வந்து சமநிலையா போய்ட்டஇருக்கும். இங்கே எல்லாரும் எல்லாருடைய பதிவும் படிக்கிறதில்லை... படிக்கவும் கண்டிப்பா நெரம் இருக்காது... ஏன்னா பதிவுலகம் வரது எல்லாருக்கும் ஒரு எக்ஸ்ட்ரா ஹாபி தான்.

    எனக்கு பள்ளி, கல்லூரி, பணியிடங்களுக்கு அடுத்து அருமையான நண்பர்கள் வட்டத்தை குடுத்தது இந்த பதிவுலகம்தான். இது எல்லோருக்கும் கிடைச்சிருக்கும்.

    சில நேரங்களில் சிலர் மேல் எரிச்சல் ஏற்படலாம் ஆனால் அது காலவட்டத்துல அது நட்பா மாறவும் வாய்ப்புகள் இருக்கு.

    அப்படி இல்லைனாலும் ஒன்னும் இழப்பு ஏதும் இல்லை.

    நீங்க போர பாதைல போய்ட்டே இருங்க தன்னால கூட நாலு பேர் கூட வருவாங்க..

    ஆல் த பெஸ்ட்.

    ReplyDelete
  15. செல்லத்துரை அவர்களின் பதிவை படித்திருக்கிறேன். ராணுவத்தில் இருந்துக் கொண்டு அங்கு நடக்கும் அவலங்களை பதிவு செய்வதற்கு நிச்சயம் துணிவு வேண்டும்!

    ReplyDelete
  16. சதீஷோட சுதந்திர தின பதிவுதான் அவருக்கு அதிகமான ஆதரவையும், அதிக எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் குடுத்தது.

    எனக்கு அவர் அந்த பதிவின் மூலம் அறிமுகம். ஆனால் நான் அந்த பதிவுக்கு எதிர் கருத்திட்டிருந்தேன்.

    :-))))

    ReplyDelete
  17. தம்பி உனது பதிவு எல்லாவற்றையும் நான் மிக பொறுமையாக படிக்கிறேன். அப்படி படிக்க வைக்கிறாய்

    சதீஷ் செல்லத்துரை சார்: சென்னை வரும்போது சொல்லுங்கள் சீனுவுடன் சேர்ந்தே சந்திக்கிறேன்

    ReplyDelete
  18. நல்லா சொல்லி இருக்கீங்க சகோ.சீனு. நன்றி..!

    ReplyDelete
  19. நல்ல கருத்துகள் சீனு...

    சதீஷ் செல்லதுரை அவர்களின் பகிர்வுகள் படித்ததில்லை. படிக்கிறேன்....

    ReplyDelete
  20. 'தம்பி'யின் பதிவுகளை ஆரம்பம் முதலே படித்து வருகிறேன் சீனு.உங்கள் சிறுகதைகளை படிக்கச்சொல்லி என் தளத்தில் கேட்டுக்கொண்ட பின்பே உங்கள் வலைப்பூவை அறிந்துகொண்டேன்.உணர்வுப் பூர்வமாக எழுதக்கூடியவர்...

    ReplyDelete
  21. ஆலோசனைக்கு மிக்க நன்றி சீனு! உங்களுடைய கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கிறது! இனி விளம்பரத்தை குறைத்துக் கொள்கிறேன்! என் பதிவில் (நூறாவது பாலோவரும் கொன்றைவானத்தம்பிரானும்)உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது! மூன்று நான்கு சீனுக்கள் இருப்பதால் வந்த குழப்பம்! காப்பி- பேஸ்ட் தவிர்த்து வருகிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  22. ஒரு வேளை இங்கும் உங்கள் விளம்பரம் இருந்தால்! உங்கள் தளம் வரும் வரை இருந்தது! உங்கள் பதிவை படித்தபின் நிறுத்திவிட்டேன்! சதீஷ் செல்லதுரை நான் தொடர்ந்து செல்லும் தளங்களில் ஒன்று! சிறப்பாக எழுதி வருகிறார்! சில கருத்துக்கள் கடவுள் மறுப்பு தவிர மற்றபடி நல்ல பதிவர்! அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  23. நெஞ்சார்ந்த நன்றி சீனு தம்பி....மிகவும் நம்பிக்கையாக உணர்கிறேன்.இந்த பதிவுக்கு நன்றியை தவிர எதுவும் எழுத தோணவில்லை.ஆதரவளிக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மிகவும் நன்றி.

    மோகன் சார்...கட்டாயம் நானும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.விரைவில் சந்திப்போம்.என்னை சார் என்று அழைப்பதை தவிர்க்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்.தம்பி என்றோ சதீஷ் என்றோ அழைக்க அழைக்கிறேன்.

    ReplyDelete
  24. கவனித்தீர்களா..... 100 followers..... குறுகிய காலத்தில் நல்ல ரீச்... அப்பிடியே இது 1000 ஆகட்டும்..இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா... இப்பிடி வாழ்த்து தெரிவிப்பது ரொம்ப டிஸ்டன்ஸா தெரியுது சீனு....

    அதுனாலா என்னென்னா.... மச்சி நீ கலக்குற...அப்பிடியே போட்டுத்தாக்கேய் :):):)

    ReplyDelete
  25. உண்மையில் அழகான பல விடயங்களை அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருக்கிறீர்கள்..
    சிறந்ததொரு பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  26. நிறைய ஆலோசனைகள் கொடுத்ததற்கு நன்றி நண்பரே ! நல்ல கருத்துக்கள் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  27. அலசலும் அலோசனைகளும் மற்றும் சதீஷ் செல்லதுரை அவர்களின் வலைப்பதிவின் அறிமுகமும் அருமை அண்ணா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete