சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் (நந்தலாலா மிஸ்ஸிங்கா) மிஸ்கினின் எந்த ஒரு மிஷனையும் அரங்கில் பார்த்தது இல்லை. பார்க்கும்படியான சந்தர்பமும் அமையவில்லை. பின்னர் பார்த்த பொழுது அரங்கில் பார்க்கவில்லையே என்று நினைத்தது உண்டு. முகமூடி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பொதுவாகவே சூப்பர் ஹீரோ படங்கள் எனக்கு பிடிக்காது. அதனால் பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. சொல்லப் போனால் முகமூடி மொக்கையாக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் அழைத்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். அவன் ஒரு மிஸ்கின்வாதி.
வழக்கம் போல் ஒரு மிஸ்கின் படம். லோ ஆங்கிள் மற்றும் வைட் ஆங்கிள் ஷாட் இருக்கும். பின்னணி முழுவதும் இசை இருந்து கொண்டே இருக்கும். கை கால்களை அகல விரித்து வேகமாக நடக்கும் ஹீரோ அல்லது வில்லன். ஹீரோயின என்று அதிசியப் படும் அளவிற்கு ஒரு ஹீரோயின். ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடுரோடில் சீண்டு பவர்களை அனாயசமாக அடிக்கும் ஹீரோ, ரசிக்க வைக்கும் ஹீரோயிசம். வெள்ளை சட்டை அல்லது காக்கி அல்லாத சட்டை போட்ட போலீஸ். எங்கும் வியாபித்திருக்கும் கொலைகள். முகம் சுளிக்க வைக்காத சண்டை மற்றும் ஆபாசம். கனமான மனிதர்கள் இயல்பான நடிப்பு. ஆராய்ச்சி செய்ய இன்னும் இருக்கலாம் ஆனால் மேல் சொன்ன எவையும் இல்லாமல் மிஷ்கினும் இல்லை.
படம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்தே மிஸ்கின் பயணிக்கத் தொடங்கி விட்டார்..ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அத்தனையும், அத்தனை என்றால் அத்தனையும் இதில் இருக்கிறது கதை என்ற அடித்தளம் தவிர. கதை தான் இல்லையே தவிர பலமான திரைக்கதை உள்ளது. பல காட்சிகளில் வழக்கமான தமிழ் சினிமாத்தனம் தவிர்க்கப்ட்டுள்ளது. இந்தக் காட்சியின் பின் இது தான் தான் நடக்கும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது அல்லது வேறு ஒரு சமயம் நடக்கும். பார்த்துப் பழகிப் போன காட்சிகளை சற்று வேறுவிதமாக வைத்துள்ளார். அந்த உழைப்பிற்காக வாழ்த்துக்கள் மிஸ்கின் சார்.
நான்லீனியர் கதை இல்லை ஆனால் லீனியர் கதையில் நான்லீனியர் காட்சிகளை வைத்துள்ளார். பொறுமையாக நகரும் காட்சிகள். அதில் கவிதை போன்ற அழகு. முதல் பாதி சற்று நீளம், இரண்டாம் பாதி நீளமில்லாமல் இருந்தது சிறப்பு.
ஜீவா நடிப்பில் அசத்துகிறார்.பல தருணங்களில் காமிராவும் இசையும் மட்டுமே கவிதை பேசுகின்றன. இசையில் கிட்டாரின் ஆளுமை அதிகம் இருக்கிறது. படத்தில் பல குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தும் நமக்குப் பிடித்த விஷயங்கள் அதிகம் இருக்கும் பொழுது குறைகள் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை. ஜீவாவை சூப்பர் ஹீரோவாக பார்க்கவில்லை, அவர் சூப்பர் ஹீரோவும் இல்லை. சூப்பர் ஹீரோவுக்கான எந்த மாய பிக்சன்களையும் அவர் செய்யவில்லை. பின் ஏன் சூப்பர் ஹீரோ என்று விளம்பரம் செய்தார்களோ தெரியவில்லை.
படம் முடிந்து வெளியே வரும் பொழுது "அஞ்சாதே மாதிரி இல்ல ,மிஸ்கின் எவ்வளவோ நல்லா எடுத்து இருக்கலாம், சொதப்பிட்டான்" முகமூடியின் முதல் விமர்சனம் கூற ஆரம்பித்தான் என் அண்ணன். பல படங்களில் சொதபலகளை கண்டால் கொந்தளிக்கும் நானோ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். "படம் பார்த்த மாதிரியே இல்ல, இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல" என்றான். அது என்னவோ உண்மை தான். மிஸ்கினின் இந்தப் படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. தாக்கம் . பாதிப்பு. ஒரு திரைப்படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிறீர்களா? சிறுவயதில் ஜுராசிக்பார்க், அனகோண்டா போன்ற படங்கள் பார்த்துவிட்டு இரவு வேளைகளில் குண்டு பல்பு வெளிச்சத்தில் சாப்பிடும் பொழுது இடுப்புவரை கவ்வும் டைனோசர் எந்தப்பக்கம் இருந்து வருமோ, அந்தரத்தில் தொங்கும் அனகோண்டா விழுங்கிவிடுமோ என்றெல்லாம் தோன்றும்.
ரஜினி படம் பார்த்தால் குறைந்தது ஒரு வாரதிற்காவது ரஜினி நம்முள் இருப்பார். அங்காடிதெரு கிளைமாக்ஸ் பாதிப்பை நண்பன் கூறியதால் இன்று வரை அங்காடித்தெரு படமே பார்க்கவில்லை. சித்திரம் பேசுதடி திரைபடத்தில் பாவனா அப்பாவிற்காக சிறை செல்லும் நரேன், அந்தக் காட்சி விவரிப்பு அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். இந்தப் படம் அப்படி ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.முகமூடியில் மார்கெட்டில் நடக்கும் சண்டையை அவ்வளவு பிரமாதமாக எடுத்துவிட்டு கிளைமாக்ஸ் சண்டையை மொக்கையாக எடுத்து இருக்கிறார்.
முகமூடி. பலவகை மசாலாக்களுடன் தயாராகும் அம்மாவின் சமையல். அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும், குறைவது என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியாது. அது தான் முகமூடியின் மீதி.
முகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்
- சீனு
முகமூடி - தி மிஷன் ஆப் "மிஸ்"கின்
- மிஸ்கின்வாதிகள்
Tweet |
விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி அம்மா
Delete//லோ ஆங்கிள் மற்றும் வைட் ஆங்கிள் ஷாட் இருக்கும்.//
ReplyDelete//நான்லீனியர் கதை இல்லை//
என்னா சீனு இதுவரைக்கும் கேள்விப்படாத பெரிய பெரிய வார்த்தைல்லாம் பாவிக்கிற? இந்த சொல்லுக்கெல்லாம் அர்த்தம் என்ன?
ஹா ஹா ஹா தல நீங்க ஹாலிவூட் நான் கோலிவூட் கூட கிடையாது... சின்ன பையன் தப்பா எழுதி இருப்பன் மன்னிச்சு விட்ருங்க.. இப்படி எல்லாம் ஓட்டி தள்ளிராதீங்க :-)
Delete//முகமூடி. பலவகை மசாலாக்களுடன் தயாராகும் அம்மாவின் சமையல். அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும், குறைவது என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியாது. அது தான் முகமூடியின் மீதி.//
ReplyDeleteஇப்படியெல்லாம் எழுதிக் கலக்குறதால தான் உங்க ப்ளாக்கில சுஜாதாவே ஃபாலோயராயிருக்காரு. ;)
// இப்படியெல்லாம் எழுதிக் கலக்குறதால தான் உங்க ப்ளாக்கில சுஜாதாவே ஃபாலோயராயிருக்காரு. ;)// ஏன் ஏன் இப்படி... நல்லத் தான போயிட்டு இருக்கு...
Deletegood comment...lovely...
ReplyDeleteவாங்க அக்கா இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு
Deletegood one...lovely comment
ReplyDeleteவிமர்சனம் 'நச்'
ReplyDeleteநச் பின்னூட்டத்திற்கு நன்றி சார்
Deleteதல,
ReplyDeleteமிக மிக அற்புதமான analysis..ரொம்ப அழகா உங்க அனுபவத்தை சொல்லி இருக்கேங்க..உங்க எழுத்து நடை சான்சே இல்ல..செம..
நிறைய பேர் மிஷ்கின் மேல இருக்கிற வெறுப்புல படத்தோட குறைகளை மட்டுமே பெருசா எழுதி இருந்தாங்க. நீங்க ஒரே பாராவுல படத்துல என்ன இல்லை என்கிறதை சரியா சொல்லிட்டீங்க..
தல உண்மைய சொல்லனும்னா நான் தேர்ந்த விமர்சகன் எல்லாம் இல்லை... உன்னை போல் ஒருவன் படத்துல உலக நாயகன் சொல்லுவாரே காமன் மேன், அந்த காமன்மேன் விமர்சனம் தான். திரைகதைல சில இடங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது. படிச்சு ரசிச்ச உங்களுக்கு நன்றி தல...
DeleteVery good review Seenu. Well done !
ReplyDeleteமிக்க நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
Deleteலோ ஆங்கிள் வெயிட் ஆங்கிள் இதெல்லாம் எனக்கு என்னவென்றே கண்டு பிடிக்கத் தெரியாது! அதே போல கதைக்கும் திரைக்கதைக்கும் கூட... பயங்கர டெக்னிகல் வார்த்தை எல்லாம் போட்டு விமர்சனம் தூள் கிளப்பியிருக்கிரீர்கள்! எப்படியும் படம் நானும் பார்த்து விடுவேன். உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக... 'விஜய்' யிலோ 'சன்' னிலோ சீக்கிரம் போடாமலா போவார்கள்...! :)))))
ReplyDeleteஐயோ சார் சத்தியமா சொல்றேன் இதெல்லாம் நான் புதுசா கத்துகிட்ட வார்த்தைகள் தான்... லீனியர் நான் லீனியர் ஸ்டோரினா என்னனு எங்கேயும் எப்போதும் படம் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்...
Delete# ஆமா சைடு கேப் ல என்ன ஓட்டலையே... :-)
வேலை செய்யுனு கொடுத்தா.. வெங்காயம் அறியறது.. இல்லைனா படம் பார்க்க ஓடியர வேண்டியது,,,
ReplyDeleteஇப்படியே பன்னு சீனு...
ஆனா விமர்சனம் நல்லா எழுதி மார்க் வாங்கிட்டே,,
சார் ஏன் ஏன் ஏன் இப்படி.... ஒரு பச்சபுள்ளைய இப்படியா பந்தாடறது ஹி ஹி ஹி :-)
Deleteஅட பயபுள்ள விமர்சனம் எல்லாம் போட ஆரம்பிசுரிச்சு.. நல்லா இருக்கு நண்பா கலக்கு
ReplyDeleteஹி ஹி ஹி சும்மா தான் நண்பா... உனக்குப் போட்டியா தரவரிசை பட்டியல் கூட வெளியிடலாமன்னு யோசிக்கிறேன்....
Deleteஅதை சீக்கிரம் செய்யுங்க சீனு, படம் வேண்டும்னா ஹாரி ப்ளாக்லேயே சுட்டுடலாம், யாராச்சும் கேட்டா "இன்ஸ்பிரேஷன்" என்று சொல்லிடலாம்...
Delete:D :D :D
பிளாக்கர் நண்பன் அவர்களே இன்றைக்கு நீங்க கொடுத்த ஐடியா தான் செம ஐடியா... அந்தப் பதிவ அப்படியே காப்பி பண்றேன் இன்ஸ்பரேசன் ஹாரி ன்னு டைட்டில்... ஹாய்லைட்டு என்னன்னா அவனுக்கு வந்த கமெண்ட்ஸ்சையும் சேத்து காப்பி பண்ண போறேன்
Deleteபிளாக்கர் வரலாற்றில் முதல் முறையாக ஹி ஹி ஹி
ஹா..ஹா..ஹா.. செய்யுங்க...
Deleteதலைப்பு "படவரிசை பத்து" என்று கூட வைக்கலாம்..
:D
சீனு அப்பவே சொன்னேன் மிஸ்கின் படத்துக்கு போகாத.. ஏதும் ஒன்னுகடக்க ஒன்னு ஆயிடும்னு. இப்ப பாரு.. என்னவோ எல்லாம் பேசுற.. ஹி ஹி..
Deleteஅடங்க கொக்க மக்க இதுல பாசித் வேற கூட்டா..
சீனு பிண்ணுரீங்க! கைதேர்ந்த எழுத்தாளரின் எழுத்துநடை தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதுல எதுவும் உள்குத்து இல்லையே... அவ்வவ்வ்வ்வ்
Deleteமிக்க நன்றி தல
உள்குத்தெல்லாம் வச்சு எழுதுற அளவுக்கு நம்ம மூளை வொர்த் இல்லை ஹி ஹி ஹி!
Deleteappudiyaa....!?
ReplyDeleteஆமாம் தோழா
Deleteவிமர்சனத்தின் இரண்டாவது பாரா வியக்க வைத்த வரிகள்....அப்படியே மிஷ்கின் படங்களை காட்டிய வரிகள்....அப்படில்லாம் இனிமே நீ எழுதி ஒரே வட்டத்திற்குள் மாட்ட கூடாதுன்னு இப்படி எடுத்திருக்கலாம்.கதையே சொல்லலை...நல்ல பழக்கம்.இல்லை கதையே இல்லையா? அப்புறம் லீனியர் அது இதுன்னு என்னலாமோ எழுதுறே..பதிவர் சம்திப்புல யாராவது சொல்லி கொடுத்தன்களோ?இப்படில்லாம் எழுதுனா நீ பிரபல பதிவரப்பா.....வாழ்த்துக்கள்.இதில் எந்த உள்குத்தும் இல்லை மக்களே###
ReplyDeleteஹா ஹா ஹா படத்தில கதை இருந்தாலும் கதை கூற கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்... எல்லா கதையும் இங்க படிச்சிட்டா அப்புறம் அரங்கத்துல போய் என்னத்த பார்க்கிறது அண்ணா...
Delete//இதில் எந்த உள்குத்தும் இல்லை // ஓங்கி நாலு குத்து குத்திட்டு உள்குத்து இல்லையா.. மக்களே இதுக்கும் எனக்கும் எந்த சம்ந்தமும் இல்லை.....
//அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும்,//
ReplyDeleteசரியான வார்த்தைகள் நண்பா! முதல் அரைமணி நேரத்தில் சூப்பர் ஹீரோ படம் பார்க்கும் உணர்வைத் தந்தது, அதன் பின் சொதப்பிவிட்டது. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சி படு மோசம்.
முகமூடி - சாகசம் செய்யாத சாதா ஹீரோ
விமர்சனம் நல்லா இருக்கு! ஆனா என்னால பார்க்கதான் முடியாது! இங்க ஒரே ஒரு தியேட்டர்ல வந்தது - அது 35 கிலோமீட்டர் தூரத்தில்! :)
ReplyDeleteத.ம. 8.
விமர்சனமெல்லாம் பண்ணுவீங்களா...?
ReplyDeleteபண்ணுங்க. பண்ணுங்க.
(அங்காடி தெருவைப் பார்த்துவையுங்கள். நல்ல கதை)
யப்பா... எனக்குத் தெரியாத ஏரியாவுல வூடுகட்டி அடிக்கறியே... நீ நிச்சயம் பிரபலம் தாம்ப்பா. சந்தோஷத்தோட கூடிய என் வாழ்த்துக்கள் சீனு.
ReplyDeleteuseless film, waste of time and waste of money, even the leaner of short film directors will not take such a type of film
ReplyDeleteI am ashamed of this movie
this film is a useless film, waste of time, waste of money, only i got headache
ReplyDeletethe Leaners of short film director will not take this type of stupid movie.