30 Aug 2012

அதிஷா யுவா - பதிவர் சந்திப்பைப் பற்றி வாசகன் மடல்


உங்கள் இருவருக்குமான இந்த மடலை எழுதலாமா வேண்டாமா என்ற மிகப் பெரிய மனப் போராட்டத்திற்குப் பின் எழுதத் தொடங்குகிறேன். புதிய தலைமுறை உங்கள் இருவரையும் அறிமுகம் செய்யும் முன்பே, நீங்கள் எழுதி வரும் வலைபூ மூலம் உங்களை கண்டுகொண்டேன். உங்களது தீவிர வாசகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள மாட்டேன், சொல்லப் போனால் சுஜாதா ஒருவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளர்களுக்கும் நான் தீவிர வாசகன் எல்லாம் கிடையாது. ஆனால் உங்கள் எழுத்துகள் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு. முதல் காரணம் நீங்கள் இருவருமே உயிர்மை வழங்கிய சுஜாதா விருது பெற்றுள்ளீர்கள், இரண்டாவது காரணம் அந்த விருதுகள் உங்கள் எழுத்தின் அருமைக்கு பெருமை சேர்த்தவை. 

என்னை போன்ற இளைஞர்கள் எழுத்துத்துறையை தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்று தெளிவு பெறாத நிலையில் அந்தத் துறையை துணிந்து தேர்ந்தெடுத்து அதில் அங்கீகாரமும் பெற்றவர்கள் நீங்கள். பா ராகவன் அவர்களின் நட்பு உங்களுக்கு கிடைப்பதற்கு வலைப்பூ மிகப்பெரும் அளவில் உதவி உள்ளது. எழுத்துலகில் அங்கீகாரம் பெறுவதற்கு வலைபூவும் பதிவர் சந்திப்பும் உதவி உள்ளது என்பதை உங்கள் தளங்களில் படித்துள்ளேன். அதிஷா, நீங்கள் சுஜாதா விருது பெற்றபோது பதிவர் சந்திப்பு எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றெல்லாம் எழுதி இருந்தீர்கள் ( இதை என் நினைவில் இருந்து கூறுகிறேன். இப்போது சென்று  படித்துவிட்டு வந்து கூறவில்லை). நீங்கள் இருவருமே முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதை உங்கள் பதிவுகள் மற்றும் முகநூல் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொண்டேன்.

கர்ணன் திரைப்படம் பார்த்துவிட்டு வந்து கர்ணன் ஒரு க்ளோனிங் பேபி என்று யுவா எழுதி இருந்தார், இதிகாசங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் என் போன்ற பல வாசகர்களை அது எவ்வளவு காயபடுத்தி இருக்கும் என்பதை யுவா அறிந்திருப்பாரா என்று தெரியவில்லை. "இவ்வாறு எழுதாதே என்று கூற நீ யார்?" என்று யுவா கேட்கலாம். உங்களை அவ்வாறு எழுத வேண்டாமென்று என்று கூறவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்கள் மீது வைத்திருந்த மதிப்பில் ஒரு படி குறைந்த்தது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதே நேரத்தில் ஹைடெக் ஆசிரமத்தில் சேரச்செலும் பணக்காரன் கதையை அதிஷா எழுதி இருந்தார் அதை நான் வெகுவாக ரசித்தேன். மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டினால் எவரும் ஏற்றுக் கொள்வார்கள். மூடநம்பிக்கையை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் நீங்கள் வெறுப்பதை எல்லாம் சுட்டிக்காட்டினால் எந்த ஒரு வாசகனுக்கும் அலுப்பும் எரிச்சலும் வரத்தான் செய்யும். 

மடலின் பாதை திசை திரும்பவில்லை. உங்கள் வாசகன் என்ற முறையில் உங்கள் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை முதலில் கூறினேன்.  

புதிய தலைமுறையைப் புரட்டும் பொழுது, மாலன் அவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் முன், வாசிப்பது உங்கள் இருவரின் எழுத்துக்களைத் தான். புத்தகக் கண்காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்ட பொழுது உங்களின் தேடலை எண்ணி வியந்தேன். நான் எப்போது அது போன்ற புத்தகம் எல்லாம் வாசிக்கப் போகிறேன் என்ற கேள்வியை என்னுள் கேட்டுக் கொண்டேன். யுவாவின் அழிக்கப் பிறந்தவனை படிக்கும் படி பலரிடமும் கூறிகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஒரு பதிவிலும் அதைப் பற்றி கூறி இருக்கிறேன்.  அப்படிப்பட்ட உங்களை ஒரு வாசகனாக (சக பதிவனாக இல்லை) பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். உங்களுடன் பேச வேண்டும் கைகுலுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. தூரத்தில் இருந்து உங்களை பார்க்க வேண்டும் என்ற சிறு ஆர்வம் தான். விழாவிற்கு வந்த பி கே பி அவர்களையும் அப்படித் தான் நான் ரசித்தேன்.

உங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்கள் வரவில்லை, உங்கள் அலுவல் அப்படி. அதில் தலையிடும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. வருகிறார்களா என்று கேட்டேன். வரவில்லை என்றார்கள். ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வில்லை. ஆனால் கூகிள் பிளசில் உங்கள் எழுத்துகளைப் படித்த பொழுது மிக மிக வருத்தமாக இருந்தது. முற்போக்கு சிந்தனையை கொஞ்சம் விசாலமாக்கி இருந்தீர்கள் என்றால் அது ஹைபட்ஜெட்டா இல்லை அவ்வளவு பெரிய சந்திப்பை மிகச் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தி காசை நேரத்தை விரயம் செய்யாத அளவில் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்டா என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். 

சந்திப்பு நடக்க மண்டபம் தேவை, ஒரு முழு நாள் விழா என்பதால் மதிய உணவு தேவை. மூத்த பதிவர்களுக்கு மரியாதையை செய்யும் விதமாக நினைவுப் பரிசு தேவை என்றெல்லாம் ஒவ்வொரு பதிவருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டுமா. நாங்கள் மெரீனாவில் நூறு நூத்தைம்பதுக்கு தான் சந்தித்தோம் நீங்கள் அப்படி சந்தித்திருந்தால் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? எல்லாரும் எல்லா நேரங்களிலும் ஒரே வழிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமா? அந்த பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவலாம் என்று கூறுகிறீகள். ஏழைகளுக்கு உதவலாம் என்று சந்திப்பு நடத்துவதற்கும் ஒரு சந்திப்பு தேவை என்பது தெரியாதா? மேலும் அன்று நடந்த அந்த சந்திப்பில் ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது. 

என் போன்ற புதிய இளைய பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம்  எவ்வளவு உற்சாகமான தினம் தெரியுமா? நான் ஒவ்வொரு தனிப் பதிவரையும் ஊர் ஊராக சென்று சந்திப்பதை விட அத்தனை பேரையும் ஒரே இடத்தில சந்திபதற்கு எனக்கு ஆன செலவு மிகச் சொற்பமே.எத்தனை பேரின் வழிகாட்டுதல் இந்தப் பதிவின் மூலம் எனக்குக் கிடைத்தது தெரியுமா? ஜெய் மிக நேர்மையாக வரவு செலவு காட்டி இருக்கிறார். ஆனால் பணம் விஷயம் என்றால் கலவரத்தில் தான் முடியும் என்று நீங்களே கலவரம் உண்டு பண்ணுகிறீர்கள். பணம் என்ற ஒன்று மட்டுமே உங்களுக்கு பிரதானமாகத் தெரிகிறது. இதற்காக உழைத்தவர்கள் யாருமே உங்களுக்கு தெரியவில்லை. யாருக்கும் தனிப்பட்ட அழைப்பிதழ் எல்லாம் கிடையாது. நாம் நடத்தும் சந்திப்பு நமக்கேன் அழைப்பிதழ் என்ற எண்ணத்தில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டார்கள் அதில் தானே இருக்கிறது இந்த சந்திப்பின் வெற்றி. 

என்ன சாதித்தோம் என்று கேட்கிறீர்கள் ஒரு நாளில் ஒரு சந்திப்பில் சாதனை நிகழுமா? எந்த வில்லங்கமும் இல்லாமல் அனைவரும் மகிவாய் இனிதாய் கூடி பேசியதே நம்மைப் பொறுத்தவரை சாதனை தானே? பலரின் எழுத்துகளை மட்டுமே பார்த்தவன் அவர்களின் அணுகுமுறையைப் புரிந்து கொள்ள எனக்குக் களம் அமைத்துக் கொடுத்த இந்த சந்திப்பு சாதனை தானே? இல்லை எப்படி முடிந்த்திருந்தால் இதை சாதனையாக ஏற்றுக் கொண்டிருபீர்கள் என்று புரியவில்லை. விதை ஊன்றி இருக்கிறோம், பலனை எதிர்பாப்போம். பலமான பேனா முனை உங்களுடன் இருக்கிறது. உங்களால் இன்னும் இன்னும் ஆக்கபூர்வமணா செயலில் ஈடுபட முடியும். புதியவர்களை உற்சாகப்படுத்த முடியும். அதை விடுத்தது இவ்வளவு காட்டமாக உங்கள் கருத்தை கூறுகிறீர்கள், முன் நின்று நடத்திய மூத்த பதிவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதா?  நீங்கள் கவனிக்கப்படாதவரை மட்டுமே உங்கள் கருத்துக்களை எல்லாரும் எல்லா நேரங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அறியாதவரா நீங்கள்?


சமஸ் மற்றும் திருமாவேலன் மீதும் அதிகமான மதிப்பை வைத்துள்ளேன், அவர்கள் எழுத்தின் வேகம் மிக மிக அதிகம். உங்களின் எழுத்துக்களையும் அந்த இடத்தில பார்க்க வேண்டும் என்ற சாதாரண வேண்டுகோளுடன் இந்த மடலை முடிக்கிறேன்.  

இப்படிக்கு 
உங்களின் வாசகன் 



43 comments:

  1. ஐயோ பாவம் அப்பாவிப் புள்ள... இன்னும் அவங்களை நம்பிட்டிருக்குதே.... என்னமோ போப்பா..!

    ReplyDelete
  2. ஹாட்ஸ் ஆஃப் சீனு. நீங்கள் குற்றம் சொன்ன இருவரை பற்றி புகழ்ந்து பேசவோ இல்லை தூற்றவோ நான் இங்கு பின்னூட்டமிடவில்லை.

    உங்களது எழுத்து நடைக்காகவே வந்தேன். மிகப்பிரமாதமாக எழுதுகிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் காலம் எழுதி வந்தால் நீங்கள் மிகப்பெரிய எழுத்தாளர் ஆகப்போகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் உங்களது எழுத்தின் ரசிகன் ஆகிவிட்டேன்.

    உண்மையிலேயே சும்மா நச்சென்று எழுதுகிறீர்கள். அத்துடன் துணிச்சலும் கூட சேர்ந்திருக்கும் போது கேட்கவா வேண்டும். வாழ்த்துக்கள் சீனு.

    ReplyDelete
  3. தல, ரொம்ப சீரியஸ் ஆகிட்டேங்க போல. எல்லா விரலும் ஒரே சைஸ்லையா இருக்கு ??? ப்ரீயா விடுங்க பாஸ்..

    ReplyDelete
  4. யாருக்கும் தனிப்பட்ட அழைப்பிதழ் எல்லாம் கிடையாது. நாம் நடத்தும் சந்திப்பு நமக்கேன் அழைப்பிதழ் என்ற எண்ணத்தில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டார்கள்// உண்மை ..

    ReplyDelete
  5. அட,,, சீனு,,

    நீ தானா இப்டியெல்லாம் கூட எழுதுவியா..?

    ReplyDelete
  6. //என் போன்ற புதிய இளைய பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம் எவ்வளவு உற்சாகமான தினம் தெரியுமா? //
    எனக்கும் தான்!
    //...என்ன சாதித்தோம் என்று கேட்கிறீர்கள்... //
    நானும் யுவா வின் எழுத்துக்களின் ரசிகன் ,அதனால் அவர்கள் சொல்லும் எல்லாம் சரியாக இருக்கும் என்றெல்லாம் கிடையாது
    அவர் சொல்லும் இந்த கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை.

    ReplyDelete
  7. தற்போது என் வலைப்பூ உங்கள் கணினியில் திறக்கிறதா??

    ReplyDelete
  8. தம்பி

    முதல் லேபிள் சூப்பர்

    ReplyDelete
  9. அன்புள்ள சீனு,

    நீங்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை நெகிழவைக்கிறது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக வளர முயற்சிக்கிறோம்.

    அன்புடன்
    யுவகிருஷ்ணா

    ReplyDelete
  10. delete key என்று சில keyboard-ல் பெரிதாக இருக்கும்... மனதில் உள்ள delete key-யை அமுத்துங்க பாஸ்...

    திடங்கொண்டு போராடு... நன்றி...

    ReplyDelete
  11. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி நண்பா. என் மனதில் பட்டதை மட்டுமே சொன்னேன். அதோடு பதிவர் மாநாட்டை வாழ்த்தியும்தான் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சிலருடைய பின்னூட்டங்கள் என்னுடைய எதிர்வினைக்கு தப்பான கற்பிதங்களை அளித்துவிட்டன. இந்தப்பதிவுலகமும் இந்தப்பதிவர்களும்தான் என்னை வளர்த்தனர்.அவர்களை என்றைக்குமே தூஷிக்க நினைக்க மாட்டேன். மற்றபடி என்னுடைய கருத்தினை எப்போதுமே மறைக்காமல் சொல்லுவதே என் பாணி. அதில் உங்களுக்கு மாற்று கருத்துகளிருக்கலாம். இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை சொல்லிவிட்டேன். தட்ஸ் ஆல்

    ReplyDelete
  12. இது போன்ற சந்திப்புகள் அவசியம்தான்.,

    எதிர்விவாதங்கள் வருவது பதிவுலகில் சகஜம் :)

    ReplyDelete
  13. நல்ல விரிவான மடல் சீனு....
    அவர்கள் நேற்று கூகுல் பிளசில் போட்டிருந்ததை நானும் பார்த்தேன் ...
    காயம் ஏற்படுத்தும் விதமாகத்தான் இருந்தது ...
    எல்லாம் தெரிந்தும் அனுபவம் இருந்தும் இவர்களே இப்படி காயப்படுத்தினால்
    மற்றவர்கள் என்ன செய்வார்கள் .. நல்ல பதிவு சீனு .. நன்றி

    ReplyDelete
  14. இதுவும் நியாயமாத்தான் இருக்கு! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

    ReplyDelete
  15. பின்னணி புரியாததால் முழுதும் புரியவில்லை!

    ReplyDelete
  16. சீனு,நல்லதொரு நடையில் எவரையும் புண்படுத்தாத வண்ணம் வரையப்பட்ட மடல்.

    ReplyDelete
  17. பயபுள்ள பாலிடிக்ஸ்ல இறங்குது.. ஆனால் ரஜினி போல பேசுது.. அதாங்க யாரையும் பகைச்சுக்க கூடா என்று..

    ReplyDelete
  18. ippadiyumaa nadakkuthu.....

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு. அவர்கள் எழுதியது படிக்கவில்லை சீனு...

    ReplyDelete
  20. உங்களின் சிந்தனையும் எழுத்து நடையும் சொல்ல வந்ததை மிக தெளிவாக சொல்வதும் மிக அருமை...சபாஷ் இப்படியே நீங்கள் உங்கள் எழுத்தை தொடர்ந்தால் எழுத்துலகில் பெரிய ஜாம்பவான் கள் என்று கருதுபவர்களை தூக்கி சாப்பிட்டுவிடுவீர்கள் எப்படி இசை துறையில் எம்.எஸ் க்கு அப்புறம் இளைய ராஜா அதற்கு அப்புறம் ரகுமான் வந்தாரோ அது போல நீங்களும் வருவீர்கள் & வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...தொடருங்கள்....நாங்களும் தொடர்கின்றோம்

    ReplyDelete
  21. உன்னை தம்பி என சொல்வதில் மூத்த பதிவர்கள் அனைவருமே பெருமை படுவோம் ! என்னா தெளிவு ! ஹாட்ஸ் ஆப் ! என்னை போல் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாய் சொன்னாய் வாழ்க !

    ReplyDelete
  22. எழுத்து நடை விறுவிறுப்பாக இருந்தது சார்! ஆனாலும் ரொம்ப காயப்பட்டீங்கதான் போல!

    ReplyDelete
  23. //ஐயோ பாவம் அப்பாவிப் புள்ள... இன்னும் அவங்களை நம்பிட்டிருக்குதே.... என்னமோ போப்பா..!//

    பதிவில் துண்டு போட்டு முதல் பின்னூட்டம் போட்டிருக்கும் அன்புள்ள திரு. பாலகணேஷ் அவர்களே!

    நாங்கள் என்னவோ உங்களை ஈமு வளர்ப்புத் திட்டத்தில் சேர்த்துவிட்டு மோசடி செய்திருப்பதான தொனியில் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களே, நீங்கள் யார் என்னவென்பதே எங்களுக்கு தெரியாது. உங்களை சந்தித்திருப்பதாகவும் நினைவில்லை. உங்கள் குடி முழுகிப்போகுமளவுக்கு நாங்கள் அப்படியென்ன பெரிய நம்பிக்கை மோசடி செய்திருக்கிறோம் என்று விளக்கினீர்களேயானால் உங்கள் நம்பிக்கைக்கும் பாத்திரமாக முயற்சிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. யுவக்ருஷ்ணா அவர்களே பாலகணேஷ் சார் உங்களுக்கு வேண்டுமானால் தெரியாதவராக இருக்கலாம்... என்னை நன்கு அறிந்தவர், பிழை நேரும் பொழுது சுட்டிக் காட்டுபவர்....

      //பதிவில் துண்டு போட்டு முதல் பின்னூட்டம் போட்டிருக்கும்// இந்த வார்த்தைகளை நான் வன்மையாக எதிர்கிறேன்... காரணம் உங்களை பற்றி யாரவது தூற்றுவார்கள் நாம் சென்று பின்னோட்டம் இடுவோம் என்கிற தொனியில் அவரைப் பார்கிறீர்கள். அப்படி என்றால் உங்களுக்கு முதல் பின்னூட்டம் இடுபவர்கள் எல்லாம் துண்டு போட்டு சொல்கிறவர்களா... நீங்கள் அதை ஏற்றுக் கொண்டாலும் நான் அதை ஏற்றுக் கொள்ள தயாரில்லை.

      //இன்னும் அவங்களை நம்பிட்டிருக்குதே.// ஈ மு திட்டம் மட்டும் தான் ஏமாற்றும் என்று அவசியம் இல்லை.

      //பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். // நான் எழுதிய இந்த வரிகளுக்கான பதிலைத் தான் அவர் எனக்கு கூறி இருந்தார்.

      Delete
    2. தோழர் யுவகிருஷ்ணா... பதிவர் சந்திப்பு என்று எல்லாரின் பதிவுகளிலும் விரிவான தகவல்கள் வந்திருப்பது உங்களுக்கு நன்கு தெரியும். மூத்த பதிவர் என்ற முறையில் நீங்கள் வந்திருந்து வழிகாட்டியிருந்தால் மிக மகிழ்ந்திருப்போம். அதை விடுத்து ஒரு எழுத்தாளராக இருந்து சந்திப்பு முடிந்ததும் அதை போஸ்ட்மார்ட்டம் செய்வது வேதனை தருகிறது. சீனு போன்ற சிறியவனின் பதிவைப் படித்து நீங்கள் உங்கள் கருத்தை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்ததால்தான் இந்த வார்த்தைகளை சொன்னேன். எங்கும் துண்டு போட்டு இடம் பிடிக்கும இழிநிலைக்கு நான் இன்னும் வரவில்லை ஐயா. நன்றி.

      Delete
  24. சீனு சார்,

    உலகம் உய்ய நீங்கள் நடத்திய உலகத்தமிழ் பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் உங்களை எல்லாம் ஏமாற்றிய குற்றத்துக்காக என்னை நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுத்துவிடுங்கள். என்னாலேயே என் குற்றத்தை தாங்கமுடியவில்லை :-(

    // உங்களை பற்றி யாரவது தூற்றுவார்கள் நாம் சென்று பின்னோட்டம் இடுவோம் என்கிற தொனியில் அவரைப் பார்கிறீர்கள்.//

    ஏங்க.. அவரு யாருன்னே தெரியாதுன்னு சொல்றேன். அவரை நான் அப்படிப் பார்க்கறேன், இப்படிப் பார்க்கறேன்னு நீங்களா யூகிச்சிக்கிட்டு எதையாவது சொல்லிக்கிட்டுத் திரியாதிங்க.

    நீங்க அவ்வளவு பெரிய நடுநிலை பீரங்கியா இருந்தா இங்கு பின்னூட்டங்களில் பலவற்றுக்கும் கண்டனம் சொல்லியிருக்கணும்.

    //இந்த மாதிரி வெண்ண வெட்டி கதைகளை எழுதுற நேரத்துல//

    இப்படி எவரோ ஒரு விருந்தாளி போட்ட பின்னூட்டத்தை நீங்க மாடரேட் பண்ணியிருக்கணும். இல்லைன்னா ஒருவேளை இந்தப் பின்னூட்டத்தை நீங்களேதான் அனானி பேருலே போட்டீங்களா? :-(

    ReplyDelete
  25. //என்னாலேயே என் குற்றத்தை தாங்கமுடியவில்லை // அப்படியா நீங்கள் குற்றமாகப் பார்கிரீர்களா... நான் அப்டிச் சொல்லவில்லை எழுதவும் இல்லை....

    // ஒருவேளை இந்தப் பின்னூட்டத்தை நீங்களேதான் அனானி பேருலே போட்டீங்களா? // இதுவும் ஒருவகையான ஊகம் இல்லையா... என்னுடைய பதிவில் நானே அனானி கமென்ட் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை... உங்கள் பதிவில் வந்த கமென்ட் போடிருந்தலும் என்னுடைய பெயர் கொண்டே போட்டிருப்பேன்....


    பெரிய பதிவர்கள் எழுத்தாளர்கள் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறன்... பதிவர் சந்திப்பு எனது முதல் பார்வை என்ற சென்ற பதிவிலும் அதையே அழுத்தமாக கூறி இருக்கிறேன்...

    பலர் என்னை வாழ்த்தியும் தான் பதில் போட்டிருந்தார்கள், நான் அவர்களுக்கு எல்லாம் இன்னும் நன்றி கூட சொல்ல வில்லையே... அப்படி இருக்க எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்ல வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கலாம்.....

    ReplyDelete
  26. பின்னணி தெரியவில்லை. அதற்குச் சுட்டி ஏதாவது தந்திருக்கலாமே...

    ReplyDelete
  27. //அப்படி இருக்க எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்ல வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கலாம்..... //

    பாருங்க. உங்களாலேயே எல்லாத்துக்கும் ‘பதில்’ சொல்ல முடியலை. ஆனா பிரபல பதிவர்கள் சொல்லணும்னு எதிர்ப்பார்க்கறீங்க. இது முரண் இல்லையா?


    //// ஒருவேளை இந்தப் பின்னூட்டத்தை நீங்களேதான் அனானி பேருலே போட்டீங்களா? // இதுவும் ஒருவகையான ஊகம் இல்லையா... என்னுடைய பதிவில் நானே அனானி கமென்ட் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை... உங்கள் பதிவில் வந்த கமென்ட் போடிருந்தலும் என்னுடைய பெயர் கொண்டே போட்டிருப்பேன்...//

    ஏன்னா, பாலகணேஷ் சாருக்கு எதிரான லேசான நையாண்டிக்கே பொங்கியெழுதவரு ஒரு வன்மமான பின்னூட்டத்தை அனுமதிச்சிருக்கீங்களே என்கிற அங்கலாய்ப்புதான் சார் :-)

    ReplyDelete
    Replies
    1. சார் நீங்க என் பதிவில் வந்து கமென்ட் போடுவீங்கன்னு நான் எதிர்பார்கவில்லை... நான் முரண்படவும் இல்லை... காரணம் என் மனதை பாதித்த பதிவுகளுக்கு மட்டுமே பதில் கொடுப்பேன், அவர்களிடம் இருந்து பதில் எதிர்பார்த்து காத்திருப்பது எல்லாம் கிடையாது... வேலை அலுவல்கள் பொருத்து எல்லாருக்கும் என் பதிவில் பதில் கொடுப்பேன். கணினி மூலமாக மட்டுமே இணையத்துடன் இணைய முடியும்.. அலுவலகத்தில் அனுமதி இல்லை.. தடை செய்யப்பட்டுள்ளது...

      //அங்கலாய்ப்புதான் சார் // சார், உங்களுக்கு கணேஷ் சார் பற்றி தெரியாது என்று சொல்லி இருந்தீர்கள்... நான் ஒரு குழந்தை எனில் கை பிடித்து வழி நடத்தி செல்லும் ஆசான்... ஆசான் மீது நையாண்டி தொடுப்பின் சிஷ்யன் பதில் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் குறிப்பிட்டேன்....

      நான் உங்களுக்கு எழுதிய மடலுக்கு நீங்கள் பின்னூட்டம் அளித்தது குறித்து மகிழ்ந்தேன் என்பதை தான் அங்கே குறிப்பிட நினைத்தேன்... இதை இங்கே குறிப்பிடும் படி நேரிட்டுவிட்டது.... :-)

      Delete
    2. சீனு,

      அந்த ‘வெண்ணைவெட்டி பின்னூட்டம்’ குறித்து உங்களுக்கு மறுப்போ, எதிர்ப்போ இல்லையென்றே வைத்துக் கொள்கிறென் :-)

      வேறெதுவும் சொல்வதற்கில்லை :-(

      Delete
    3. கருத்து சுதந்திரம் என்ற ஒன்றை நம்புபவன் நான்.... அனானி கருத்துகளை என் பதிவில் தடுக்க அவற்றை நீக்கி விடும் படி முன்பே நண்பர் கூறி இருந்தார்... அவற்றை எடுத்து விடுகிறேன்...... இந்த கருத்துகளை அழித்து விடுகிறேன்... எதிர்ப்பா மறுப்பா ஆதரவா என்ற பேச்சுக்கு எழுத்துலகில் தடை இல்லை என்பது தெரியும்... அதில் தானே இருக்கிறது கருத்து சுதந்திரம்...

      ஆனால் முகம் என்ற ஒன்று நிச்சயமாக தேவை... நன்றி :-)

      Delete
    4. தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்

      Delete
  28. //தோழர் யுவகிருஷ்ணா... பதிவர் சந்திப்பு என்று எல்லாரின் பதிவுகளிலும் விரிவான தகவல்கள் வந்திருப்பது உங்களுக்கு நன்கு தெரியும். மூத்த பதிவர் என்ற முறையில் நீங்கள் வந்திருந்து வழிகாட்டியிருந்தால் மிக மகிழ்ந்திருப்போம். அதை விடுத்து ஒரு எழுத்தாளராக இருந்து சந்திப்பு முடிந்ததும் அதை போஸ்ட்மார்ட்டம் செய்வது வேதனை தருகிறது.//

    அன்புள்ள பாலகணேஷ்,

    நண்பர் என்றாலும் அதிஷாவின் ப்ளஸ்ஸில் அவருக்கு மாற்றுக்கருத்து சொல்லி, பதிவர் சந்திப்புக்கு ஆதரவான பின்னூட்டங்களையே இட்டிருக்கிறேன். அதை நீங்களும், சீனுவும் படிக்கவில்லை என்று கருதுகிறேன். மேலும் அப்பதிவிலேயே வரமுடியாத சூழல் என்னவென்றும் சொல்லியிருக்கிறேன்.

    பதிவர் சந்திப்பு குறித்த முழுமையான விபரங்கள் எனக்கு தெரியாது. ஏனெனில் நான் வழக்கமாக வாசிக்கும் பதிவுகளில் அதுபற்றிய விரிவான தகவல்கள் ஏதும் வரவில்லை. பதிவர் சந்திப்புக்கான முன்னோட்ட ஏற்பாடுகள் குறித்த சந்திப்புகளுக்கு எனக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் நடைபெற்றதையே கூட சில பதிவுகளில் வாசித்துதான் தெரிந்துக் கொண்டேன்.

    பிரச்சினை அதுவல்ல. உங்கள் சந்திப்பு பற்றிய நேர்மறையான எண்ணம் கொண்டிருந்தும் கூட ஏதோ பெரிய மோசடி செய்துவிட்டதைப் போல ‘இன்னுமா அவர்களை நம்புகிறீர்கள்?’ என்று நீங்கள் பின்னூட்டம் இட்டிருப்பது சரியல்ல.

    தெளிவாக இன்னொரு முறை சொல்கிறேன். “பதிவர் சந்திப்புகள் வரவேற்கக் கூடியது. முகம் தெரியா நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது ஆரோக்கியமானது”

    அதே நேரம் ’தமிழ் வலைப்பதிவர் குழு’ ‘சென்னை வலைப்பதிவர் சங்கம்’ மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப் படுமேயானால், அதற்காக நிறைய நண்பர்களை கலந்தாலோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு 2004ல் இருந்து பதிவு எழுதிக் கொண்டிருக்கும் பத்ரி போன்றவர்கள் சென்னையில்தான் வசிக்கிறார்கள். அவரைப் போன்றவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சென்னை பதிவர் குழுமம் என்று எங்குமே சொல்லவில்லை... வலைப் பதிவர் குழுமம் என்று தான் சொல்லப்படுகிறது...

      //உதாரணத்துக்கு 2004ல் இருந்து பதிவு எழுதிக் கொண்டிருக்கும் பத்ரி போன்றவர்கள் சென்னையில்தான் வசிக்கிறார்கள். அவரைப் போன்றவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்.// இது போன்ற ஆரோகொயமான அறிவுரைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்...

      தனிப்பட்டநபர் முயற்சியல்ல.... ஒன்றுபட்டால் சாத்தியமாகும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபடலாம்... வலையுலகில் பதிவர் சந்திப்பு பற்றி பல பதிவுகள் வந்தும் உங்கள் கண்ணில் படமால் போனது குறித்து வருத்தமாக இருக்கிறது சார்

      Delete
    2. சீனு, அலுப்பாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது :-(

      சென்னையில் பிரபல/பிரபலமில்லாத/பழைய/புதிய பதிவர்கள் பலரிடமும் என்னுடைய கைப்பேசி எண் இருக்கிறது. இப்படியொரு சந்திப்பு நடத்தப் போகிறோம். ஒரு கலந்தாலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது என்று எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.கூட வரவில்லை. மேலும் நிச்சயமாக லக்கி பதிவர் சந்திப்புக்கு வரமாட்டார் என்று ஒரு பிரபலப் பதிவர் பட்டிக்காட்டான் ஜே என்கிற பதிவரிடம் சொல்லியிருக்கிறாராம். அவருடைய எதிர்ப்பார்ப்பை நாம் ஏன் வீணடிக்க வேண்டும்?

      பதிவர் சந்திப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மோகன்குமார் மட்டும் ஃபேஸ்புக் தனிமடலில் என்னை அழைத்திருந்தார்.

      யாருக்குமே போன் செய்து கூப்பிடவில்லை என்றெல்லாம் டுபாக்கூர் விடவேண்டாம். ஏனெனில் அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் சிலர் “என்னை கூப்பிட்டாங்களே, உன்னை கூப்பிடலியா?” என்று நேற்று என்னிடம் தொலைபேசி சொல்லியிருக்கிறார்கள்.

      ஒருவேளை பதிவர்சந்திப்பில் கலந்துகொள்ளும் லெவலுக்கு நானெல்லாம் ஒர்த்தான பதிவர் இல்லை என்று விழாக்குழுவினர் நினைத்திருக்கலாம். அல்லது விழாக்குழுவில் யாரோ ஓரிருவர் நினைத்திருக்கலாம்.

      Delete
    3. மன்னிக்கவும் யுவகிருஷ்ணா ஸார். உங்களை காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. அந்த வார்த்தைகள் உங்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிக்க. போன் செய்து அழைத்தது என்பது அவரவர் நண்பர்களான பதிவர்களை உரிமையாக நீ வாய்யா என்று சிலர் அழைத்திருக்கலாம். விழாக் குழுவின் சார்பாக நீ வராட்டி நல்லாயிருக்காது என்று யாரையும் அழைததிருக்க வாய்ப்பில்லை ஸார். சங்கம் அமைப்பது என்ற விஷயத்தில் நீங்கள் செர்ல்லியிருப்பவை நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும்.

      Delete
  29. என்னுடைய ஒரு பின்னூட்டம் மிஸ்ஸிங். அதை வெளியிட்டுவிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.

    ReplyDelete
    Replies
    1. அது ஸ்பாமில் இருந்தது .. மேலும் உங்கள் பின்னூட்டங்கள் பல ஸ்பாமிற்கு செல்கிறது... காரணம் நீங்கள் மொபைல் வழியாக கூட கமென்ட்டி இருக்கலாம்...

      Delete
  30. உருக்கமாக மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறீர்கள்....
    எழுத்து நடையில் மிக மிக நாகரீகம் பேணியிருக்கிறீர்கள்
    உண்மையில் விரைவில் நீங்கள் ஒரு சிறந்த பிரபல எழுத்தாளராக வாய்ப்புக்கள் இருக்கின்றது நண்பா...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. //பதிவர் சந்திப்பு குறித்த முழுமையான விபரங்கள் எனக்கு தெரியாது. ஏனெனில் நான் வழக்கமாக வாசிக்கும் பதிவுகளில்//

    அண்ணே உங்கள் நம்பிக்கைக்குறிய பதிவர்களான ஆரூர் மூனா மற்றும் ப்ரபாகரன் பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது :)

    ReplyDelete
  32. மதுமதியின் காரசாரமான பதிவு பார்த்து ஏதோ குறை சொல்லியிருக்காங்கன்னு மட்டும் புரிஞ்சது! என்னன்னு பின்னணி புரியல... இப்ப புரியுது!

    ReplyDelete