12-08-2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லாமல் இருந்திருந்தேன் என்றால் பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் பற்றிய பல விசயங்களை அறிந்து கொள்ளாமல் இருந்திருப்பேன். எத்தனையோ கேள்விகள், பதில்கள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள், விளக்கங்கள். இவை எல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரு விழா நடத்த முடியாது என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டேன். சென்னை தவிர்த்து பிற பகுதகளில் இருந்து பெரும்பான்மையான பதிவர்கள் வர இருப்பதால் அவர்கள் தங்கும் வசதி பற்றியும் விருந்து உபசாரம் பற்றியும் காரசாரமான உரையாடல் நடைபெற்றது.
(புலவர், மின்னல் வரிகள், கவிஞர், வடபஜ்ஜி)
எவ்வளவு பெரிய விழாவாக இருந்தாலும் முறையான பட்ஜெட் என்ற ஒன்று இல்லாவிட்டால் ஆட்டம் காண்பது ஒட்டுமொத்த விழா மேடையாகத் தான் இருக்கும். தங்கள் முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே பட்ஜெட் குறித்து முறையாக முடிவெடுத்த போதிலும், பற்றாகுறை எப்போதுமே தன் இருப்பைக் கட்டிக்கொள்ளத் தான் முயலும். யாரிடமும் பணம் எதிர்பார்க்கவில்லை, பணம் வேண்டுமென்று அறிக்கை அளிக்கவுமில்லை. ஆனாலும் அறிவிப்பு இல்லாமலேயே பதிவுலக நண்பர்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். பணமாக மட்டுமில்லாமல் தங்கள் நிலையிலிருந்து என்ன செய்ய முடியுமோ அத்துணையும் பதிவுலக நண்பர்கள் செய்து வருவதை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் தொகை சிறியது என்றாலும் மிக மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
(வடபஜ்ஜி மெட்ராஸ் பவன், பட்டிகாட்டான்)
பதிவுலக சந்திப்பை நாம் எதிர்பார்கிறோமோ இல்லையோ, புலவர் ராமனுஜம் அய்யா மிக மகிழ்வுடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டுள்ளார். அந்த விழாவிலே அவர் நமக்காக வெளியிட இருக்கும் அறிவிப்பைக் கேட்டதும் சொல்வீர்கள், "ஆம். இது நமக்கான, நம் நன்மைக்கான அறிவிப்பு தான்" என்று. பதிவர் சந்திப்பிற்கு வர முடியாதவர்கள் காணும் விதமாக நிகழ்ச்சியை நேரலை செய்வது குறித்த விவாதம் நடைபெற்றது. சாத்தியமாயின் அதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
மதுமதி, சிவகுமார், கசாலி, சிராஜ் ஜெய் மற்றும் அரசன் ஆகியோர் தங்களது கருத்துக்களைக் கூறும், விவாதிக்கும் சமயங்களில் எல்லாம் இளமையைப் பேசவிட்டு இறுதியில் ராமனுஜம் அய்யாவும் கணேஷ் சாரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். புதிய பதிவனாய் இருந்த காலத்தில் தான் பெற்ற அனுபவங்களையும், அது வேறொரு புதிய பதிவனுக்கு நிகழக் கூடாது என்பதில் இருந்த அக்கறையும் குறித்து சிவா கூறிய கருத்துக்கள் அனைத்தும், புதிய பதிவர்களே அவற்றை நீங்கள் அந்த இடத்தில இருந்து கேட்டிருந்தீர்கள் என்றால் எவ்வளவு உற்சாகம் அடைந்திருப்பீர்கள் தெரியுமா!
புலவர் ராமனுஜம் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மின்னல் வரிகள் பாலகணேஷ் சார்,கவிஞர் மதுமதி, மெட்ராஸ் பவன் சிவகுமார், பட்டிகாட்டான் ஜெய், பதிவுலக அரசியல் நிபுணர் கசாலி, வடபஜ்ஜி கடை ஓனர் சிராஜ், கரைசேர அலை அரசன் மற்றும் உண்மைத் தமிழன் போன்றோர் கலந்து கொண்டனர். அடுத்த ஞாயிறு மதியம் இறுதி கட்ட ஆலோசனை நடைபெற இருக்கிறது, கலந்து கொள்ள நினைப்பவர்கள் தவறாது கலந்து கொள்ளுங்கள்.. இடம் டிஸ்கவரி புக் பேலஸ்.
(கசாலி, திடங்கொண்டு போராடு, கரைசேர அலை)
எந்த ஒரு விசயமும் ஒதுங்கி நின்று பார்க்கும் வரை எளிதாகத் தான் இருக்கும். களத்தில் இறங்கி கலப்பையைத் தூக்கினால் மட்டுமே அதன் வலி புரியும். வழிகாட்டுபவர்களும் வழி நடப்பவர்களும் இருக்கும் வரை விழாவை சாமன்யன் நடத்தினாலும் அது சாதனைத் திருவிழாவாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
Tweet |
//புதிய பதிவர்களே அவற்றை நீங்கள் அந்த இடத்தில இருந்து கேட்டிருந்தீர்கள்//
ReplyDeleteமிஸ் பண்ணிடன் போல.. என்ன சொல்ல முடியும் வழமை போல.. கலக்குங்க
முடிவில் அற்புதமாக சொன்னீர்கள் நண்பா...
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...நன்றி... (TM 2)
பகிர்வுக்கு நன்றி தல..
ReplyDeleteகலந்து கொள்வோம். தங்கள் இறுதியாக முடித்த விதம் அருமை.
ReplyDelete90% புத்தக தள்ளுபடி தரும் டிஸ்கவரி புக் பேலஸ் அதிபர் வேடியப்பன் வாழ்க.
ReplyDelete
ReplyDeleteஅன்பரே!
கண்டவர் மகிழும் வண்ணமும் காணாதவர் பாராட்டும்
வண்ணமும், பதிவர் சந்திப்பு அமைய வேண்டுமென்பதே என
ஆசை!அதற்கு, உங்களைப் போன்றவர் ஒத்துழைப்பு மிக்க
உறு துணையாக இருக்குமென்று நம்புகிறேன்
நிச்சயம் எதிர்ப்பார்ப்புகளுடன்
ReplyDeleteநிச்சயம் எதிர்ப்பார்ப்புகளுடன்...
ReplyDeleteரொம்ப மிஸ் பண்றேன் நண்பா!
ReplyDelete//வழிகாட்டுபவர்களும் வழி நடப்பவர்களும் இருக்கும் வரை விழாவை சாமன்யன் நடத்தினாலும் அது சாதனைத் திருவிழாவாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.//
ReplyDelete:)
ReplyDeleteஅருமை சீனு. வாரந்திர கூட்டத்துக்கு சில காரணத்தால் வராவிடில் கூட அனைத்து தகவல்களும் நண்பர்கள் மூலம் அறிகிறேன் நன்றி விரைவில் நேரில் சிந்திப்போம்
ReplyDeleteபாஸ் சிறப்பாக எழுதி இருக்கீங்க ... உங்களின் பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஅனைவரும் இணைந்து ஒரு கலக்கு கலக்கிடலாம் ...
என்னை ஏனோ ஒதுக்கி வைத்தான் இறைவன்?
ReplyDeleteபின்னை வரும் ஞாயிறாவது முடியுமா?
அவன் அருள்,
பகிர்வுக்கு நன்றி சீனு.
விழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பானபகிர்வு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
nice man..
ReplyDeleteதிருவிழா சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையாகப் பகிர்ந்து இருக்கிறீர்கள். என்னாலும் கலந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். பெயர் மட்டுமே தெரிந்த பல முகங்களைப் பார்க்கலாமே.
ReplyDeleteசாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்.
வழிகாட்டுபவர்களும் வழி நடப்பவர்களும் இருக்கும் வரை விழாவை சாமன்யன் நடத்தினாலும் அது சாதனைத் திருவிழாவாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.///
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா!
அன்புடையீர்,
ReplyDeleteவணக்கம்.
தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
அன்புடன்
vgk
மிக்க நன்றி சார் இந்த நல்ல நாளிலே என்னுடன் விருது பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
DeleteUr Always Great Thala
ReplyDeleteஅன்புள்ள சீனு,
ReplyDeleteஉங்களை சென்ற வாரப் பதிவர் விழாவில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி!
ஒவ்வொருவராக நினைவு படுத்திக்கொண்டு நன்றி கூறி வருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
என் வலைபதிவு: ranjaninarayanan.wordpress.com
அன்புடன்,
ரஞ்ஜனி