பெஞ்சுக்குள் முகம் புதைத்து
மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்
அப்படி என்ன பேசுவோம் என்று யாருக்கும் தெரியாது
ஏன் சமயங்களில் நமக்கே தெரியாது...
நம்போல் இருக்க முடியவில்லையே
என்று வருத்தப்பட்டவர்களை விட
நம்முடன் இருக்க முடியவில்லையே
என்று வருத்தப்பட்டவர்கள்
அதிகம்...
பத்து விரல்களால் எண்ணிவிடலாம்
நம்மை நிற்க வைக்காத ஆசிரியர்களை
கேள்வி கேட்டு நிற்க வைப்பார்கள் இல்லையேல்
எதிர்த்து கேள்வி கேட்டதற்காக நிற்க வைப்பார்கள்...
கல்லூரி விதிமுறைகளைக் கேட்டால்
அடுத்த திகாரோ என்று எண்ணத் தோன்றும்
விதியே என்று கடைபிடித்திருந்தால்
அதுவே அதிசியம்...
யாருக்கும் பயப்பட்டதில்லை
அசைமென்ட்டா அசை போட்டுவிடலாம்
செமினாரா நார் நாராய் கிழித்து விடலாம்
வாத்தியாரையோ ஒட்டியே ஓட விடலாம்
H.O.D யா V.P யா Prince ஆ
வந்து பாருங்கள் என்று சொல்லலாம்...
இருந்தும் நாம் அனைவரும் பயப்படும் ஒரே ஒரு ஜீவன்
உண்டென்றால் அது செக்யூரிட்டி தான்
கல்லூரி வாசலை மட்டும் கடந்து விட்டால் போதும்
அன்றைய தினத்தையே கடந்து விடலாம்...
இந்த வார்த்தைகள் கடந்து போன
நம் வரலாற்றின் வாழ்க்கைகள்
வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை
வாசிக்க முடியும்...
ஆனால் இதில் இருக்கும் வாழ்கையை
மீண்டுமொரு முறை வாழ முடியுமா!
கல்லூரி வாழ்கை
வாழ்கை அல்ல
வரம்.
( இதைப் படித்துவிட்டு 'கவிதை நல்ல இருக்கே' என்று சொல்பவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்காது.
அதையும் மீறி கவிதை நன்றாக உள்ளது நீங்கள் பதிவர் சந்திப்பில் நடைபெறும் கவியரங்கில் கவிதை பாடலாம் என்று அழைப்பு விடுப்போரை தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்கவே மன்னிக்காது)
கவிதை போன்று இருக்கும் இதை எழுதிவிட்டு வெளியிடலாமா வேண்டாமா என்று நெடுநாள் யோசித்து வெளியிடும் மன தைரியம் இன்று தான் வந்தது. படித்து ரசித்த (!) உங்கள் மன தைரியத்தைப் பாராட்டுகிறேன்.
Tweet |
"கவிதை நல்லா இருக்கே"
ReplyDelete"கவியரங்கில் கவிதை பாடலாமே"
எப்படி நாங்கள் இப்போ கல்லூரி தானே..
நீங்கள் கூறியவற்றை விதியே என்று கடைபிடிக்கமாட்டோம்.. ஹி ஹி
மறக்க இயலுமா அவற்றை எல்லாம்...?
ReplyDeleteஇனிய நாட்கள் நினைவிற்கு வந்தது...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே... வந்ததே...
நண்பனே...! நண்பனே...! நண்பனே...!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே...!
வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)
கவிதை நல்ல இருக்கே' இதை நீங்கள் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தால் சொல்லுங்க..அதை ஒபாமாவுக்கு அனுப்பி உங்களுக்கு அவார்டு வாங்கிதாரேன்
ReplyDeleteநீங்க இப்பதான் புதிசா பதிவுகள் எழுத ஆர்ம்பிச்சிருக்கீங்க இப்படி கவிதை எழுத ஆரம்பிச்சீங்க வரவங்க துண்டைக்காணும் துணியை காணும் என்று ஒடிவிட்டுவார்கள்.அதனால வேண்டாம் இந்த விபரீதம்
ReplyDeleteநல்ல நினைவுகளை பகிர்ந்திருக்கும் கட்டுரை?....! (அதுசரி.. ஏன் வரிகளை மடக்கி மடக்கி எழுதியிருக்கிறீர்கள்!)
ReplyDeleteபரவா இல்லை நண்பரே.. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் கவிதை வசப்படும்.
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்.
தொடருங்கள்..
டிஸ்கி: உங்க வகுப்பறையில பொண்ணுங்கள காணோமே?..(அடடா உளறிட்டேனோ?)
பரவா இல்லை நண்பரே.. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் கவிதை வசப்படும்.
ReplyDeleteசித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்.
தொடருங்கள்..
கல்லூரினா செக்யுரிட்டியா?அடப்பாவமே...அப்படினா அது கல்லூரியே இல்லை.இருந்தாலும் கல்லூரியை நினைக்க தூண்டியதற்கு நன்றி.
கவிதையோ,கட்டுரையோ,சொன்ன செய்தி சிறப்பே.மீண்டும் வருமா அந்தப் பொற்காலம்?
ReplyDeleteஇனிய நினைவுகளை வரிகளாக்கி அசத்தியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in
கவிதை நல்லாத்தான்யா இருக்கு! என்னை ஓட்டுப்போட வச்சுருச்சுன்னா பார்த்துக்கோங்களேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)
ReplyDeleteநண்பா யு ஆர் கிரேட்டு கிரேட்டு......அப்படியே ஸ்கூலுக்குப் போனதா ஒரு பீலிங்ஸ்....
ReplyDeleteரொம்ம்ப அழகு
sako!
ReplyDeleteunmaiyil rasanai...
ஒரு நிமிடமேயாயினும் கடந்து சென்ற நாட்கள்/நேரங்கள் திரும்புவதில்லை. நினைவுகள்தான் வரம்!
ReplyDeleteகவிதை புரியும் படி இருக்கு ..அருமை. கல்லூரி வாழ்க்கை மட்டும் திரும்ப கிடைக்காது..அப்படியொரு ஆனந்தம்...
ReplyDeleteகல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வரமே.
ReplyDeleteஎனது கல்லூரி நாட்களை கிளறி விட்டது உங்கள் கவிதை தொடருங்கள்
ReplyDelete