16 Aug 2012

சீரியசாய் ஒரு பதிவு...


இந்த நல்ல நாளிலே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் தங்களுக்குக் கிடைத்த விருதை நூற்றியெட்டு பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துணை பதிவர்களின் பெயருடன் மட்டும் நில்லாது லிங்கையும் இணைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஒருபதிவில் லிங்க் இணைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. இவ்வளவு சிரத்தை எடுத்து தான் பெற்ற விருது நாமும் பெற வகை செய்த  அய்யா அவர்களுக்கு மீண்டுமொருமுறை மகிழ்ச்சி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தொழிற்களம் அறிவுப்பு கண்டு அவர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பி இருந்தேன், மகிழ்வுடன் என்னைத் தங்கள் தளத்தில் எழுதுவதற்கு அனுமதித்து உள்ளார்கள். நான் பதிவு எழுத ஆரம்பிபதற்கு முன்பு சில தளங்களில் எழுதும் வாய்ப்பு கேட்டு முயன்றுள்ளேன், நிராகரிக்கப் பட்டுள்ளேன். தொழிற்களம் நிராகரிக்காமல் என்னை ஏற்றுக் கொண்டது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் எழுதும் அளவிற்கு திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் கணினி தேடலைத் தவிர்த்து வேறு எதிலும் ஈடுபாடு காட்டியதில்லை இருந்தும் ஒரு ஆர்வம், முயற்சி. 

பதிவர் சந்திப்பு. பதிவு எழுத ஆரம்பித்த சம காலத்தில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல அனுபவத்தை படிப்பினையை ஆர்வத்தைத் தரும் என்ற ஆர்வத்துடன் மகிழ்வோடு பதிவை சந்திப்பை எதிர்நோக்கிக் காத்துள்ளேன்.

நான் செய்யும் தவறுகளை திருத்தி, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து வரும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான நன்றிகள்

இன்று இந்த நாளில் தான் என்னடைய இருபத்தி ஐந்தாவது பதிவை எழுத வேண்டுமென்று கடந்த மாதம் நினைத்திருந்தேன். ஆனால் அதன் பின் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் அடிகடி பதிவுகள் எழுதி குறைந்த காலத்தில் அதிகமான பதிவுகள் எழுதி விட்டேன். இதன் பின் வரும் ஒவ்வொரு பதிவுகளையும் குறைந்தது ஒரு வாரம் அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி கொடுத்து எழுதலாம் என்று இருக்கிறேன். 'எவ்வளவு பதிவுகள் எழுதுகிறாய் என்பது முக்கியம் இல்லை, அதில் எத்தனை பயனுள்ள விசயங்களைப் பகிர்கிறாய் என்பதே முக்கியம்' என்று முன்னொரு நாளில் மூத்த பதிவர் ஒருவர் எனக்கு ஆலோசனை வழங்கி இருந்தார். அந்த ஆலோசனை வழி நடக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.  

இந்த நாளை நல்ல நாள் என்று சொல்லுவதற்கும், இந்தப் பதிவை இத்தனை சீரியசாய் எழுதியதற்கும், இருபத்தி ஐந்தாவது பதிவை இந்த நாளில் எழுதி இருக்கலாம் என்று நான் நினைத்தற்கும் காரணம் ஒன்றே... அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்... 


37 comments:

  1. Congratulation SriNi Thala ...'எவ்வளவு பதிவுகள் எழுதுகிறாய் என்பது முக்கியம் இல்லை, அதில் எத்தனை பயனுள்ள விசயங்களைப் பகிர்கிறாய் என்பதே முக்கியம்' >>> Great

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குருவே ஹி ஹி ஹி

      Delete
  2. இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  3. விருது கிடைத்ததற்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்... (TM 2)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. இதயம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  5. நாளை நமதே என்ற உற்சாகத்துடன் இன்று போல என்றும் வாழ்க, பல்லாண்டு வாழ்க! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்

      Delete
  6. வாழ்த்துக்கள் நண்பா
    //////////
    குழந்தைகள் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவமானம்.
    /////////

    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா ??????? ஹி ஹி ஹி

      Delete
  7. அடியாத்தி பிறந்த நாளாமே.......
    வாழ்த்துக்கள் இரட்டை சந்தோஷம் போல......ஸ்வீட் கொடுங்க பாஸ்.. 4

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  8. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்களுக்கும் தங்கள் வருகைக்கும்

      Delete
  9. //எவ்வளவு பதிவுகள் எழுதுகிறாய் என்பது முக்கியம் இல்லை, அதில் எத்தனை பயனுள்ள விசயங்களைப் பகிர்கிறாய் என்பதே முக்கியம்//

    இன்றைக்கு மழை வரும் போல.. மேகம் எல்லாம் இருட்டி போயிட்டு..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா எனக்கு அப்படி ஒன்று தோன்ற வில்லையே உயர் திரு பிரபல பதிவர் அவர்களே

      Delete
  10. //வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் தங்களுக்குக் கிடைத்த விருதை // DOUBLE HAPPY, DOUBLE WISHES FOR U MACHI

    ReplyDelete
    Replies
    1. உன்னை எல்லாம் நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா

      Delete
  11. பிறந்த நாள்வாழ்த்துக்கள்! சிறப்பான பகிர்வுகள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
    Replies
    1. என்னது அடுத்த காதலியா இதோ வந்து பார்கிறேன்

      Delete
  12. நான் இப்போது விரும்பிபடிக்கும் தளங்களில் உங்களது தளமும் ஒன்று. மிக நன்றாக எழுதுகிறிர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களைக் கேட்பதற்கே மிக மிக உற்சாகமாய் உள்ளது மிக மிக நன்றி நன்றி சார்.

      Delete
  13. ம‌கிழ்வும் உற்சாக‌மும் நிலைத்திருக்க‌ இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் சீனு!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி

      Delete
  14. விருது பெற்ற உங்களுக்கு ரொம்ப சந்தோஷததோட என் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி

      Delete
  15. மிக்க நன்றி அம்மா

    ReplyDelete
  16. விருதினை அன்புடன் ஏற்று சிறப்பித்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
    என் மனமார்ந்த நன்றிகள்.

    மற்ற தகவல்களும் அருமை தான். பாராட்டுக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  17. எவ்வளவு பதிவுகள் எழுதுகிறாய் என்பது முக்கியம் இல்லை, அதில் எத்தனை பயனுள்ள விசயங்களைப் பகிர்கிறாய் என்பதே முக்கியம்' என்று முன்னொரு நாளில் மூத்த பதிவர் ஒருவர் எனக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்.

    அருமையான ஆலோசனை.. உங்கள் பதிவுகள் சிறக்க என் நல் வாழ்த்துகளும்

    ReplyDelete
  18. பிறந்தநாள் வாழ்த்துக்கள்§ விருதுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  19. மிக்க மகிழ்ச்சி நண்பா.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பல..!!!!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
  20. அய்யா VGK அவர்களிளின் கையால் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.கலக்குங்கள் நண்பரே..

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் சீனு...நீ தொடர்ந்து எழுது ராசா....தொடருகிறோம்.இப்படில்லாம் எழுதலாம்னு நீ சொல்லித்தான் தெரியுது எனக்கு.வாழ்த்துக்கள் சீனு..

    ReplyDelete
  23. மிக நல்ல பதிவு


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete