21 Aug 2012

சென்னையின் சாலைவலிகள் : மரண வாக்குமூலம்


சென்னையின் சாலை வலிகளைப் பற்றி நான் எழுதும் இரண்டாவது மரண வாக்குமூலம் இது. மரண வாக்குமூலமா? யாருக்கா? சென்னையின் சாலையில் பயணிப்பவரா நீங்கள்...? புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன். முன்பெல்லாம் சாலைகள் எனக்கு வலிகளை மட்டுமே தந்து கொண்டிருந்தன, ஆனால் இப்போதெல்லாம் உயிர் பயத்தையும் சேர்த்துத் தரத் தொடங்கிவிட்டன. 


லுவலகம் முடிந்த இரவுகளில் பதினோரு மணிக்கு மேல் பயணம் செய்யும் சுதந்திரப் பறவை நான். பகல் பொழுதில் கொடிய அரக்கனைப் போல் அட்டுழியம் செய்யும் சென்னையின் சாலைகள், இரவில் தன் முகத்தை அப்படியே மாற்றி இருக்கும். பகல் எல்லாம் ஆடிக் களைத்த களைப்பில் அசந்து தூங்குகின்ற குழந்தையைப் போல் உறங்கும். சென்னை என்னும் குழந்தை உறங்கும் சமயங்களில் தான் எனது பயணமும் இருக்கும். வாகன நெரிசல் இல்லாத நாற்கர சாலை என்பதால் பைக்கின் வேகம் எப்போதுமே அறுபதிற்கு குறைந்திருக்காது.சமயங்களில் எண்பதையும் தொடும்.       

சென்ற வாரம் சோளிங்கநல்லூரில்  இருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். நல்ல இருட்டு, அரசு நட்ட மின் கம்பங்களுக்கு மின்சாரம் பாய்ச்ச ஆள் இல்லாத காரணத்தால் இரவின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்தன. சாலையின் நடுவில் நாய்கள் மற்றும் நடுநிசி நாய்கள் படுத்திருந்தால் கூட கண்டுகொள்ள முடியாது. வண்டி திடிரென்று பயங்கரமாக அதிர்ந்தால், வண்டியை ஏதேனும் பள்ளத்தில் விட்டேனா இல்லை ஜீவராசிகளைக் கொன்றேனா என்று கூட கண்டுபிடிக்க முடியாது. 

ஹெட்லைட் வெளிச்சத்தில் இரண்டு அடிகளுக்கு மேல் என்னால் பார்க்க முடியாது. அந்த இரண்டு அடி தூர வெளிச்சத்தை மூளை உள்வாங்கி கட்டளை பிறப்பிக்கும் நேரத்தில் குறைந்தது பத்தடியைத் தாண்டியிருப்பேன். இந்த கொடிய சாலைகளில் பயணிக்கும் பொழுது ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டேன். அறுபதிற்க்கு மேல் நான் இருக்க வேண்டுமானால் வண்டியின் வேகம் நாற்பதிற்கு மேல் கூட இருக்கக் கூடாது என்ற ஒன்று தான் அது.  

உசுரு பயம்னா என்னன்னு தெரியுமா 

ன்றும் அப்படித்தான், மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த கும்மிருட்டில் தூரத்தில் ஏதோ அசைவது போல் தோன்றியது. இப்போதெல்லாம் இருளுக்கும், இருள் நிறைந்த அந்த சாலைகளுக்கும் கண்கள் தன்னைப் பழகிக் கொண்டுவிட்டது. தூரத்தில் ஏதேனும் அசைகிறதா இல்லை அசைவது போன்ற மாயையா எனபதை அந்த இருட்டில் இனம் காண முடியாமல் மூளை விழித்துக் கொண்டிருந்தது. வேகத்தைக் குறைத்துவிட்டேன். இப்போது எதுவும் அசைவது போல் தெரியவில்லை.  தூக்கக் கலக்கமாக இருக்கும் என்று வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். வேகம் அறுபதைக் காட்டியது. அந்த ஏதோ ஒன்றை நெருங்க நெருங்க மூளைக்கு முன் மனம் முழித்துக் கொண்டது. வேகத்தை மீண்டும் குறைக்க ஆரம்பித்தேன். பத்தடி தூரத்தில் கண்டுகொண்டேன் அசைவது போல் தோன்றியது ஒரு பெரிய வாகனம் தான் என்று. எட்டடி தூரத்தில் கண்டுகொண்டேன், வண்டியின் பின்னல் ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டப்படாத டிராக்டர் என்று. ஆறடி தூரத்தில் தான் முக்கியமான விசயத்தைக் கவனித்தேன், அந்த டிராக்டர் செல்லவில்லை நடுரோட்டில் நின்று கொண்டுள்ளது எனபதை. 

டுத்த நான்கு அடிகளும் வண்டியின் டயர் தேயும் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. எனக்கும் டிரக்டருக்கும் நூல் அளவு மட்டுமே இடைவெளி. (இரண்டடி குறைகிறதா? மூளை பிரேக்கிற்கு செய்தி அனுப்பும் முன், அந்த இரண்டு அடிகளை கடந்து இருந்தேன்). நான் வந்த வேகத்தில் டிராக்டரின் மேல் இடித்து இருந்தேன் என்றால், நிச்சயம் சின்னாபின்னம் ஆகியிருப்பேன். அந்த நொடியை இப்போது நினைத்தாலும் பயமாகத் தான் உள்ளது. நல்லவேளை எந்த சேதாரமும் இல்லாமல் தப்பித்தேன். வண்டியின் இண்டிகேட்டரை ஆன் செய்துவிட்டது  போர்க்களதிற்குப் புறப்பட்டேன்.

"யோவ் வண்டிய இப்படியா நடு ரோட்ல நிப்பாட்றது, வாறவன் அடிபட்டு சாகுறதுக்கா?" 

" இல்ல தம்பி, லைட்டு எதுவும் வேல செய்யல, அதான் இன்னா பிரச்சனன்னு பாத்துனு இருக்கேன்" 

" ஓரமா நிறுத்திப் பாருன்னே" 

ரு கார் டயர் தேயும் சத்தம் கேட்டது. காரும் இன்னும் இரண்டு பைக்சாரிகளும் என்னுடன் சேர்ந்து அவனை திட்டவே, ஏதோ வேண்டா வெறுப்பாக சாலையின் ஓரத்திற்கு டிராக்க்டரைக் கொண்டு சென்றான்.    

டந்த ஒரு மாதகாலமாகே இந்த சாலையிலும் சரி, வேளச்சேரி மேடவாக்கம் நாற்கர சாலையிலும் சரி மின்கம்பங்கள் உயிரற்றுத் தான் கிடக்கின்றன. அதிலும் கிண்டி - வேளச்சேரி - மேடவாக்கம் நாற்கர சாலையில் வண்டி ஊட்டுவதற்கு தனி தைரியம் வேண்டும். இந்த சாலையில் ஐம்பது கி .மீ வேகத்திற்கு குறைவாக வண்டி ஓட்டினால் வண்டி ஓட்டுவது கஷ்டம். ஐம்பது கி .மீ வேகத்திற்கு அதிகமாக்கினால் உயிர் வாழ்வது கஷ்டம். காராணம் அவ்வளவு நாற்சக்கர வாகனங்கள் டயரில்றெக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருப்பார்கள். 

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. திடிரென்று யாரவது நடுரோட்டில் புகுந்தால் நிலைமை என்னவாகும். இருட்டில் சாலையைக் கடப்பவனை அடையாளம் கூட காண முடியாது. இருள் இருள் இருள் எங்கும் இருள்.வாழ்வது கலிகாலத்திலா கற்காலத்திலா? ஒன்றும் விளங்கவில்லை.  பல சென்டர் மீடியன்களில் ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் இல்லாத காரணத்தால் வாகனங்கள் இடித்து உடைபட்டு பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. அவைகளால் நிச்சயமாக பெரும் விபத்து நடக்கும் என்பது திண்ணம். ஒட்டுப் போட்ட சாலைகளில் டயர் உருளும் போதெல்லாம் எங்கே சரிக்கி விழுந்து விடுமோ என்ற பயத்தில் வயிற்றிற்குள் ஏதோ உருளுகிறது.  சிறு வயதில் ட்யுஷன் முடிந்து வரும் இரவு வேளைகளில் மின்சாரம் போய்விட்டால் செய்வதறியாது அந்த இடத்திலேயே நின்று விடுவேன். யாரேனும் டார்ச் அடித்துக் கொண்டு அந்த வழி வந்தால் அந்த வெளிச்சத்திலேயே அவர்கள் செல்லும் தூரம் வரை செல்வேன். இப்போது வண்டியும் அப்படித் தான் ஓட்ட வேண்டியுள்ளது. ஏதேனும் கார் வந்தால், கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் தைரியமாக ஓட்டுகிறேன். மற்ற நேரங்களில் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டுகிறேன்.

இந்திய அரசியவாதிகளுக்கு 

மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெறும் சாலைகள் தவிர்த்து சென்னையின் அனைத்து சாலைகளும் அழகாக அருமையாக உள்ளன, காரணம் அரசியல்வாதிகளான நீங்கள் அங்கே வசிக்கிறீர்கள். ஓட்டுபோட்ட சாலைகளை அடையாறிலும் பெசன்ட் நகரிலும் அண்ணா நகரிலும் போர்ட்கிளபிலும் பார்க்க முடியவில்லை. வேறு இடங்களில் ஒட்டுப் போட்ட சாலைகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. ஓட்டு போட்டது ஒரு குற்றமா. கருணையே இல்லாமல் எங்களைக் கொலை செய்வதற்கு நீங்கள் தேர்ந்ததெடுத்த துறைகள் மின்சாரத்துறையும், நெடுஞ்சாலைத் துறையுமா? மின்சாரத்தை நிறுத்துவதற்குப் பதிலாய் நெடுஞ்சாலைகளை மூடிவிடுங்கள். பல உயிர்களாவது சந்தோசமாய் வாழும். சென்னையின் புறநகர் என்ன பாவம் செய்ததது உங்களுக்கு. தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என்று சொல்லும் தேர்தல் ஆணையமே, ஒழுங்கான அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் இணங்காண முடியாதா? 

இந்தியப் பொதுமக்களுக்கு சென்னையின் சாலை வலிகள் வழிகளாக மாறும் வரை இந்தக் கட்டுரை தொடரும். இப்படி ஒரு தொடர் கட்டுரை எழுத வாய்ப்பளித்த இந்திய பொதுமக்களுக்கு நன்றிகள். எத்தனை காலம் தான் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்றி சொல்லிக் கொண்டிருப்பது.

சென்னையின் சாலைவலிகளைப் பற்றி கூறிய எனது முந்தைய கட்டுரை 


29 comments:

 1. நல்ல பதிவு நண்பா! (TM 2)

  ReplyDelete
 2. அடக்கடவுளே:(

  கவனமாக இருங்கள்.

  ReplyDelete
 3. உங்களின் வலிகளின் மொத்த பிரதிபலிப்பு இந்த வரிகளில் கண்டேன் ..
  இது உங்களின் வலி மட்டுமல்ல பலரது வலிகள் உங்களின் பதிவாக எனக்கு தோன்றுகிறது சீனு ...
  நிலைமாற நாமும் முயற்சி செய்வோம் ..

  ReplyDelete
 4. ஒரு வித திகில் படிக்கும் போதே வந்து விடுகிறது. கும் இருட்டும் அந்த ஏதோ ஒன்று நகர்வது போன்ற உணர்வும் உணரத்தோன்றுகிறது அப்படி ஒரு எழுத்து நடை அசத்தல்.

  ReplyDelete
 5. வெளிச்சம் குறைவா இருந்தா வேகத்தை குறைச்சுங்கங்க..., மத்தபடி இந்த குறைகளை பத்தி எழுதுரத கண்டினியூ......

  ReplyDelete
 6. உயிர்வலி புரிகிறது நண்பா.பார்த்து பத்திரம்.
  சின அண்ணா நாம சிவனேன்னு போனாலும் தன்னால ஆபத்துல மாட்டிப்போம்.நீங்களும் அறுபது தாண்டும் எண்ணத்தோடு நாற்பதில் போங்கள்.வலிகள் மறையுமா????மறைந்தால் சந்தோசமே!சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
 7. நல்ல பதிவு நண்பா பதிய வேண்டியவர்களின் மனதில் சரியாக பதிந்தால் வலி தீரும்

  ReplyDelete
 8. கவனமா இருக்கணும் போலே... நன்றி...(TM 6)

  ReplyDelete
 9. //அறுபதிற்க்கு மேல் நான் இருக்க வேண்டுமானால் வண்டியின் வேகம் நாற்பதிற்கு மேல் கூட இருக்கக் கூடாது // சரியான கணிப்பு... தவிப்பு...

  ReplyDelete
 10. என்ன கொடுமை சரவணன் இது.. என்று வேரூரார் கேட்பார்கள்..சென்னையின் தலைவிதி இது..

  ReplyDelete
 11. வேகம் விவேகம் அல்ல என்பது தாங்கள் அறியாத தல்ல!என்னைப் போல எண்பதையும் தாண்டி வாழ வேண்டும்! கவனம் தேவை!

  ReplyDelete
 12. மிகச்சிறந்த அனுபவ பதிவு! இந்த டிராக்டர் காரன்க அட்டூழியம் தாங்க முடியாது! ஒரே லைட்டை போட்டுகிட்டு வருவாங்க! எங்க பக்கமும் இப்ப் ஆறுவழி சாலையா மாறிகிட்டு இருக்கறதுனாலே நிறைய சங்கடங்கள்! அதுவும் இப்பத்தான் நான் கியர் வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன்! ரொம்பவே கஷ்டப்படறேன்!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete
 13. மயிரிழையில தப்பிச்சிருக்கீங்க போல... நம்ம சிங்கார சென்னையோட நிலைமை அப்படியிருக்கு...

  ReplyDelete
 14. இந்த பயம் நானும் பல முறை உணர்ந்துள்ளேன் நல்ல பதிவு சீனி

  ReplyDelete
 15. vethanaiyaana -
  valikal konda pathivu!

  ReplyDelete
 16. கவனமாகப் பயணிக்கவும்.. this is bizarre.

  ReplyDelete
 17. நம் சாலை அமைப்புகளும் கட்டுக்கடங்காத வாகனங்களும் மிகப் பெரிய பிரச்சைனையாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன

  ReplyDelete
 18. இந்த பதிவை-
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

  வருகை தாருங்கள்!
  தலைப்பு ; படித்தவர்கள்.....

  ReplyDelete
 19. தோழர் சீனா அவர்களின் அறிமுகம் மூலம் உங்கள் பதிவை கண்டேன், இது என் முதல் வருகை! உங்களின் பதிவுகள் அருமை!
  "விடை தேடும் காதல்" .......
  காதலிக்கும் அனைவருக்காகவும்... காதலை நேசிப்பவருக்கும்... காதலின் விடை தேடும் காதலி எழுதும் கவிதை இது....
  உங்களை என் வலைக்கு அன்புடன் வரவேற்கிறேன்...

  ReplyDelete
 20. வேகம் வேண்டாம். கவனமாகப் பயணிக்கவும். முக்கியமாக போக்குவரத்தற்ற சாலைகளில் அதுவும் முக்கியமாக இரவு நேரங்களில்.

  ReplyDelete
 21. அப்படினா சீனு இங்கே ஜோத்பூர்,அகமதாபாத் வந்து பாருங்க...எவ்ளவோ தேவலாம்...ஆனா இது ஒரு அவசியமான பதிவு.பணம் உள்ள இடத்தில்தான் சாலைகளும் நன்றாக இருக்கின்றன.மெதுவாகவே போகவும்..எப்படியோ தீனி கிடைச்சிட்டு அனுபவி நாங்களும் அனுபவிக்கிறோம்....

  ReplyDelete
 22. உங்க வயது வேகமாகத்தான் போகச் சொல்லும்.ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் பிரசினைகளை மனத்தில் கொண்டு கவனமாகச் செல்லுங்கள்!

  ReplyDelete
 23. உண்மையான பதிவு


  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 24. உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை, பல நேரங்களில் என்னுடைய வண்டி விளக்கு Low Beam யில் தான் இருக்கும், நம் பார்வைக்கு கஷ்டம் என்றாலும் எதிரே வருபவர்கள் நலம் கருதி இப்படி செய்வேன்.இப்படி நான் போவதே சில நேரங்களில் விபத்து ஏற்பட காரணமாகிவிடுகிறது. ஒரு முறை எருமையை சில அடி தூரத்தில் கண்டு பிரேக் அடித்தேன் மற்றொரு நாள் பர்கா போட்ட பெண் மீது மோத பார்த்தேன்.இருட்டு சாலையில், சாலையை கடக்கும் போது பர்கா போட்ட பெண்களே கவனம் தேவை.இரவு பயணம், பெரும்பாலான வாகனமோட்டிகள் முழு கவனம் கொண்டிருப்பதில்லை அதோடு We are partially blind too.

  ReplyDelete
 25. அட , நம்ம ஊரா.... வாங்க, இன்னும் கொஞ்ச நாளில் followers வைத்து விடுகின்றேன்,
  நீங்க இந்த இணைப்பில் சென்று முழுமையாக படித்து, அங்கே உறுப்பினர் ஆகி போட்டியில் கலந்து கொண்டுள்ள எனக்கு ஓட்டு போடுங்க சகோதரா... உங்கள் நண்பர்களையும் எனக்கு ஓட்டு போடா சொல்லுங்களேன்....
  இணைப்பு இதோ...
  http://kavithai7.blogspot.in/2012/08/blog-post_1008.html

  ReplyDelete
 26. எனக்கு விருது கொடுத்துருக்காங்க... அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..
  என் தளத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. நூறு சதவிகிதம் உண்மையான பதிவு. சமீபத்தில் சென்னை வந்திருந்தபொழுது,
  இதே மார்க்கத்தில் என்னை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்ற என் தம்பி இதை
  சொன்னது ஞாபகம் வருகின்றது. இந்த இருட்டுப் பகுதிகளில் தெருவிளக்கு
  எரியச் செய்வது, அரசின் / நகராட்சியின் மிக அவசரமான, அத்தியாவஸ்யமான
  கடமையாகும்.

  ReplyDelete