சென்னை பலவிதமான எதிர்பார்ப்புகளோடு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு மாநகரம். இதுதான் சென்னை இவ்வளவு தான் சென்னை என்று சென்னையை ஒரு எல்லைக்குள் அடைக்கவே முடியாது.
"எக்மோருக்கு எப்படி சார் போகணும்" வழி கேட்ட உங்களை வெறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் குதப்பியிருந்த பான்பராக்கை உங்கள் காலுக்குக் கீழேயே துப்பும் சென்னைவாசியை சந்திக்கும் அதே நேரத்தில் தான் "சார் ஒரு நிமிஷம், எக்மோர் தான இங்கயே நில்லுங்க 15B வரும், அதுல ஏறுனா மூணாவது ஸ்டாப் எக்மோர் தான்" எங்கிருந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து திடிரென்று ஓடி வந்து உதவும் அவரும் அதே சென்னைவாசியாகத் தான் இருப்பார்.
இப்படி பல்வேறு முகங்கள் இருக்கும் சென்னையை நாம் எந்த முகத்தோடு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சென்னையை நான் எப்படிப் பார்கின்றேன் என்பதைத் தான் இங்கே பதிவாக எழுத இருக்கிறேன். சென்னையைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்க அதில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டே கன்னத்தில் கைவைத்து நாடியை வருடும் பொழுது தான் தட்டுபட்டது அந்தத் தழும்பு.
அட இப்பொழுது தான் நியாபகம் வருகிறது. எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது நாங்கள் நான்கு மாதங்கள் சென்னையில் தான் வசித்தோம். அப்பொழுது சென்னையில் ஒரு மழைக்காலம். என்னையும் அண்ணனையும் வீட்டில் விட்டுவிட்டு அம்மா மட்டும் கடைக்குச் சென்றிருந்தார். நாங்கள் குடியிருந்தது மாடிவீடு என்பதால் மாடி படியிலிருந்து குதித்துக் குதித்து விளையாடு வது என் வழக்கம். அன்றும் அப்படித் தான் மூன்றாவது நான்காவது படியிலிருந்து குதித்து விளையாடத் தொடங்கினேன்.
மழை பெய்யும் பொழுது படியிலிருந்து குதித்தால் வழுக்கும், அடிபடும், நாடியிலிருந்து இரத்தம் வரும், தையல் போட வேண்டும் என்பதெல்லாம், இவ்வளவும் நடந்ததன் பின்பு தான் தெரிந்த்தது. சென்னை தந்த முதல் அன்புப் பரிசு அது. அந்த வயதில் நடந்த பல விஷயங்கள் நியாபகத்தில் இல்லை. இருந்தும் நாங்கள் குடியிருந்த மாடிவீடு, குளோரின் வாசத்துடன் வரும் தண்ணீர், கட்டுகட்டாக சேர்த்து வைத்த எலெக்ட்ரிக் ட்ரெயின் டிக்கெட், நாக்கில் வேல் குத்திய ஒருவர் பூசி விட்ட விபூதி, இப்படி சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே மனதிலிருந்து மறக்காமல் உள்ளது.
பதினொன்றாவது வகுப்பு விடுமுறையை கழிப்பதற்காக மீண்டும் சென்னைக்கு வந்தேன். தாம்பரம் தாண்டியதுமே புரிந்து கொண்டேன் சென்னை ஒரு சினிமா நகரம் என்று. இன்று வலைதளங்களிலும் முகப்புத்தகங்களிலும் நாம் பார்க்கும் பேனர்களையும் கட்அவுட்களையும் அன்றைய சென்னையின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் காணலாம். திரும்பிய இடங்களில் எல்லாம் விளம்பரங்கள். அவற்றில் பாதிக்கு மேல் சினிமா விளம்பரங்கள். அந்தச் சென்னையை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. பேருந்தின் ஜன்னல் வழியாக பார்வையை செலுத்தும் பொழுதே ஏதோ ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பது போல சென்னையை ரசித்துக் கொண்டிருந்தேன்.
இன்றோ பொதுமக்கள் நலன் கருதி அரசாங்கம் அவற்றை அப்புறப்படுத்தி விட்டதால் என்னுடைய பார்வையில் சென்னை கலையிழந்துவிட்டது. இருந்தும் புதிய வடிவில் விஸ்வரூபம் எடுக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள், பிரிட்டிஷ் கால புராதன கட்டிடங்கள் என்று சென்னை சென்னையாகவே இருந்து வருவது தனித்துவமிக்க விஷயம்.
சென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம், நீ சின்னப் பையன் தனியாக சென்னை செல்லக் கூடாது, என்பன போன்ற பல எதிர்ப்புகளையும் மீறி சென்னையை வந்து சேர்ந்திருந்ததில் ஒருவித இனம் புரியாத இன்பம் மனதை குளுமையாக்கியிருந்த்தது அது டிசெம்பர் மாதம் என்பதால் சென்னையும் குளுமையாகவே இருந்த்தது.
கோயம்பேடு பேருந்து நிலையம் அப்பொழுது தான் புதிதாக கட்டி முடித்திருந்தார்கள், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.
திநகர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில அப்பாவுக்காக காத்துக்கொண்டிருந்தேன், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது என்பதால் முந்தைய நாளே தகவல் பரிமாறப்பட்டு அன்று நான் நின்றுகொண்டிருந்த இடத்தில நிற்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. சொன்ன நேரத்திற்கு அப்பா அங்கு வரவில்லை. இந்த நேரத்தில் நான் ஊருக்குப் புதியவன் என்பதை சென்னை கண்டுபிடித்து விட்டது. "இன்னாப்பா வேலைக்கு வந்த்ருக்கியா", "கூடவா இட்னு போறேன்" இது போன்ற இரண்டு பேரைக் கொண்டுதான் சென்னை என்னை பரிசோதித்துப் பார்த்தது. அந்த சோதனையில் வெற்றி எனக்கே.
அப்பா வரும் வரை பொழுது போக வேண்டும் என்பதற்காக CMBT (Chennai Mofussil Bus Terminus ) என்பதன் விரிவாக்கத்தை மனனம் செய்து கொண்டிருந்தேன், முடியவில்லை. (முழுவதுமாக என்னை சென்னைக்கு தாரை வார்த்துக் கொடுத்த பின்பு தான் அதை மனம் செய்தேன் என்பது வேறு கதை). அதன் பின்பு நான் தங்கியிருந்த ஒருவாரமும் சென்னையை தனியாகத் தான் சுற்றிப் பார்த்தேன், தினமும் தவறாது நான் சென்ற இரண்டு இடங்கள் கன்னிமாரா நூலகமும் மெரினா கடற்கரையும். எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்பதற்காக ஸ்பென்சர்பிளாசா சென்று வந்தேன்.
இளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் பொழுதும் சென்னை வந்திருந்தேன், இப்போது பிரமாண்டமாக இருக்கும் லூகாஸ் பாலம் அப்போது தான் கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்குமிங்கும் குட்டியும் நெட்டையுமாக எழுபியிருந்த தூண்களைக் கொண்டு எப்படி பாலம் கட்ட முடியும் என்பதே என் நெடுநாளைய சிந்த்தனையாக இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பாலத்தின் மீது பயணிக்கிறேன் என்று நினைக்கும் பொழுதே பிரம்மிப்பாக உள்ளது.
இவை கடந்த காலத்தில் நான் கடந்து வந்த சென்னை, அடுத்த பதிவில் நிகழ்கால சென்னையின் அங்க அசைவுகளை எனக்குத் தெரிந்த வரையில் இங்கு வரைகிறேன்.
Tweet |
Avelo dhan ah !!!!சென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம்...unmai ah ??? Interesting to read
ReplyDeleteவரப்போகும் பதிவுகளில் இன்னும் அதிகமாக எழுதுகிறேன். ஏமாறுபவர்கள் அதிகம், அதனால் ஏமாற்றுபவர்களும் அதிகம். இங்கே உஷாராக இருக்க வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை.
Deleteஅதே சென்னையில் அதவி செய்பவர்களும் அதிகம். எல்லாமும் நம் பார்வையில் தான் உள்ளது
நண்பா அருமை நான் சிறியவனாய் இருக்கும் போது ஓவ்வொரு மே விடுமுறையீலும் சென்னை வருவேன் அப்போ சென்னை பார்த்த முகம் சந்தோஷம் தந்தது ஆனால் தற்போது வேலைக்கு வந்த போது ஒரு சில இடங்களில் சென்னை மேல் கடுப்பினை அடைந்தேன் ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் சென்னை பாடம் கற்று தருகிறது என பின்பு தான் உணர்ந்தேன் இதை தொடர்ந்து எழதவும் நண்பா
ReplyDeleteஇது மட்டும் இல்லாமல் தங்களின சென்னை(கசப்பு மற்றும் இனிப்பு) அனுபவங்களையும் எழதவும்
ReplyDeleteஅருமையான நினைவுகள். தொடருங்கள். சென்னைக்கும் எனக்கும் உறவு 4 வருடங்கள்தான். ஆனால் அந்த நாலு வருடங்கள் தந்த அனுபவங்கள் ஏராளம்.
ReplyDeleteஅருமை என்று பாராட்டிய உங்களுக்கு அழகான நன்றிகள். கூடிய விரைவில் அடுத்த பதிவு வெளியிடுகிறேன் சார்
Deleteசென்னைக்கு வரும் வெளியூர்க் காரர்களுக்கு இந்த ஊர் பிடித்துப் போக நிறைய நாளாகும் சீனு. ஏமாற்றுக்காரர்கள் மாதிரி பல கசப்பான அனுபவங்களையும் தர வல்லது இந்த ஊர், ஒருமுறை நான் புதிய ஏரியாவில் ஒரு முகவரிக்குச செல்ல வழி கேட்டேன். இதுவே மதுரையாக இருந்தால் தெரியாதென்றால் தெரியாது என்பார்கள், சென்னையில் ஆளாளுக்கு ஒரு வழியைச் சொல்லி குழப்பி அலைய விட்டார்கள், நன்கு பழகியபின் இப்போ ஊர் பிடித்து விட்டது, ஆனாலும் இன்னும் எனக்கு மனசெல்லாம் மதுரைதான், உங்களின் அடுத்தடுத்த பகுதிகளையும் தொடர்ந்து படிக்க ஆவல்!
ReplyDeleteவாங்க வாங்க சின்ன வாத்தியார் கணேஷ் சார்.
Deleteஅதனால் தான் பல நேரங்களில் நான் யாருக்கும் வழிகாட்டுவதே இல்லை. தெரியாவிட்டால் கேட்டு சொல்லுவேன். தவறான வழி காட்டிவிட்டால் வழி அவருக்குத்தானே.
பிறந்த ஊரின் அருமையை எந்த ஊராளும் நிவர்த்தி செய்ய முடியாது என்ற வாசகத்தை நீங்களும் உறுதி செய்துவிட்டீர்கள் மகிழ்ச்சி
விரைவில் அடுத்த பதிவை பதிவு செய்கிறேன் சார்
Niceee...
ReplyDeleteநல்லா இருக்கு ... எனக்கு எல்லாமே சென்னை தான் ...உங்க அடுத்த Post ku waiting.....thx for dis post....
ReplyDeleteநல்லா இருக்கு ... எனக்கு எல்லாமே சென்னை தான் ...உங்க அடுத்த Post ku waiting.....thx for dis post....
ReplyDeleteகண்டிப்பா டா, உன் ஆர்வம் எனக்குப் பிடிச்சிருக்கு. கூடிய சீக்ரம வெளியிற்றலாம் டா
Delete"பேருந்தின் ஜன்னல் வழியாக பார்வையை செலுத்தும் பொழுதே ஏதோ ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பது போல சென்னையை ரசித்துக் கொண்டிருந்தேன்."
ReplyDelete- அது தான் "சிங்கரா சென்னை"
ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம்
-இது chennai la இருந்தும் எனக்கு தெரியாத oru fact...
"இன்னாப்பா வேலைக்கு வந்த்ருக்கியா", "கூடவா இட்னு போறேன்" இது போன்ற இரண்டு பேரைக் கொண்டுதான் சென்னை என்னை பரிசோதித்துப் பார்த்தது. அந்த சோதனையில் வெற்றி எனக்கே.
"வெற்றி எனக்கே" - னா, neega avangala unga kuda kutitu vanthutigala? ;)
கன்னிமாரா நூலகம், மெரினா கடற்கரை - chennai city's two diversified faces...
தல seriously i expected much more, bt u said u'll continue in the next post so waiting for it, don't make my hopes go false...
To say in one word "சிறப்பு"
(your post as well as my chennai) :)
//வெற்றி எனக்கே// அதுவா வீட்ல சொல்லி அனுப்சாங்க, இப்டி யாரது வந்து கூப்டுவாங்க, நீ போயிராதன்னு, என்ன நா செஞ்சாலும் செய்வன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை.
Delete//தல seriously i expected much more // ஆகா எல்லாரும் ரொம்ப எதிர் பாக்ரீங்கலோ, கண்டிப்பா உங்க எதிர்பார்ப்ப முடிந்த அளவு நிறைவேத்றேன்... நீங்கள் தரும் உற்சாகம் தானே என்னை ஒவ்வொரு அடியாக முன்னேற்றுகிறது
//வெற்றி எனக்கே// அதுவா வீட்ல சொல்லி அனுப்சாங்க, இப்டி யாரது வந்து கூப்டுவாங்க, நீ போயிராதன்னு, என்ன நா செஞ்சாலும் செய்வன்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை.
ReplyDelete//தல seriously i expected much more // ஆகா எல்லாரும் ரொம்ப எதிர் பாக்ரீங்கலோ, கண்டிப்பா உங்க எதிர்பார்ப்ப முடிந்த அளவு நிறைவேத்றேன்... நீங்கள் தரும் உற்சாகம் தானே என்னை ஒவ்வொரு அடியாக முன்னேற்றுகிறது
ezhunga nanpaa!
ReplyDeletetheriyavendiyathu rompa irukku!
கண்டிப்பா நண்பா, தொடர்ந்து எழுதிகிறேன், தங்கள் வருகையால் மகிழ்கிறேன்
Deleteநல்ல பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி நடராஜன் சார்
Deleteநான் சிறுவனாய் இருக்கும் போது என் மாமா மற்றும் பெரியம்மா வீட்டிற்கு மே விடுமுறை என்றால் செல்வேன் அப்போ பார்த்த சென்னை மற்றும் அங்கு உள்ள அனைவரையும் பிடித்தது பின்னர் ஒரு நான்கு வருடங்கள் மேல் செல்ல வில்லை.அதன் பின்னர் தற்போது வேலைக்காக சென்ற போது பல இடங்களில் சென்னை மீது வெறுப்பு தான் வந்தது. தாங்கள் கூறியதை போல்
ReplyDelete///"எக்மோருக்கு எப்படி சார் போகணும்" வழி கேட்ட உங்களை வெறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் குதப்பியிருந்த பான்பராக்கை உங்கள் காலுக்குக் கீழேயே துப்பும் சென்னைவாசியை சந்திக்கும் அதே நேரத்தில் தான் "சார் ஒரு நிமிஷம், எக்மோர் தான இங்கயே நில்லுங்க 15B வரும், அதுல ஏறுனா மூணாவது ஸ்டாப் எக்மோர் தான்" எங்கிருந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து திடிரென்று ஓடி வந்து உதவும் அவரும் அதே சென்னைவாசியாகத் தான் இருப்பார். ////
சிலர் உதவ மாட்டார்கள் சிலர் கேட்காமல் உதவுவார்கள்
சென்னையை எல்லாருமே ஒருவித வெறுப்போடு தான் எதிர்கொண்டுளோம், அனால் இந்த ஊரை புரிய வேண்டிய விதத்தில் புரிந்து கொண்டால் நல்ல தோழன் தானே?
Deleteநண்பா தங்கள் வலைபூவில் மொபைல் வழியாக கமெண்ட் சொன்னால் வரமாட்டேன் என்கிறது.குறைவான வார்த்தை என்றால் வருகிறது அதிக அளவு வார்த்தை என்றால் தெரிய மாட்டேன் என்கிறது.
ReplyDeleteஅதை சரி செய்வது எப்படி, உதவினால் நலம் நண்பா. நன் இதுவரை மொபைலில் பார்த்தது இல்லை
Deleteஅடுத்த பதிவு சிக்கிரம் நண்பா... தங்கள் விசிறிகள் காத்து கொண்டு உள்ளோம்...
ReplyDeleteஹா ஹா ஹா விசிறிகளா, பாஸ் நான் தான் உங்கள் எல்லாரின் விசிறி. சீகிரமே அடுத்த பதிவை எதிர்பாருங்கள்... நீங்கள் கொடுக்கும் உற்சாகம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது நண்பா
Delete///// இன்று வலைதளங்களிலும் முகப்புத்தகங்களிலும் நாம் பார்க்கும் பேனர்களையும் கட்அவுட்களையும் அன்றைய சென்னையின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் காணலாம்.////////
ReplyDeleteஉண்மைதான் நண்பா அது இல்லாதது கூட ஒரு சோகம் தான்...உங்களை போல் நானும் ரசித்தது உண்டு...
எனக்குப் பிடித்த சென்னையும் அதன் வரிகளும் பிடித்துப் போனது எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது
Deleteஹும்ம்ம் சென்னை யா ..நடத்துங்க நடத்துங்க ...
ReplyDeleteநல்ல எழுதுரிங்கள் ...வாழ்த்துக்கள்
வந்து வாழ்த்தி கலக்குகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி கலை அக்கா
Delete