10 May 2012

சென்னையில் வாங்கலாம் வாங்க


சியாவிலேயே மிகப் பெரிய பொதுநல மருத்துவமனையான சென்ட்ரல் மருத்துவமனையின் வெளியிலுள்ள பிளாட்பாரத்தில் ஐந்து ரூபாய்க்கு ரஸ்னா விற்பவனிடமும் சரி, ராயபேட்டை மல்டிப்ளெக்ஸில் ஏசி ரூமில் உயர்ரக குளிர்பானம் விற்பவனிடமும் சரி கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருக்கும். சென்னையில் எங்காவது ஒரு பொட்டிக் கடை வைத்து விட்டால் போதும் நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். காரணம் ஜன நெருக்கடி நிறைந்து இருக்கும் சென்னை மிகப்பெரிய தொழில் வணிக வியாபார நகரம், அதனாலேயே சென்னை எல்லார்க்கும் எல்லாமுமாய் விளங்குகிறது. 

சென்னைக்கு புதிதாக வருபவர்களிடம் 'எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் எது?' என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லுவார்கள் 'திநகர் ரங்கநாதன் தெரு' என்று. சென்னையை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரங்கநாதன் தெருவில் துணிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காதென்று.

வ்வொரு குறிப்பிட்ட பொருள்களும் குறிப்பிட்ட இடங்களில் தான் கிடைக்கும். காய்கறியில் தொடங்கி துணிகள், தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், வாகன உதிரிபாகங்கள் என்று ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பகுதியை சென்னை தனக்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டுவிட்டது. 

சென்னையின் மிகப் பிரபலாமான வர்த்தக மையம் திநகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் பாண்டிபஜார். இந்த மூன்று இடங்களிலுமே பெண்களுக்கான ஆடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் விற்கும் கடைகளும் சுடிதார் தைக்கும் தையலகங்களுமே அதிகம். அதனால் பெண்களின் கூட்டத்திற்கு இங்கு பஞ்சமே இருக்காது. இந்தியாவுக்கே  பஞ்சம் வந்தாலும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமே வராது. ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலைய வாசலிலேயே இருப்பதும் பேருந்து நிலையமும் நடந்து செல்லும் தூரத்திலேயே இருப்பதும் மக்களுக்கு மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சரவணா ஸ்டோர்ஸின் பெரிய பெரிய கட்டிடங்கள் தான். இந்தத் தெருவில் துணிக் கடைகளும் தையலகங்களும் அதிகம். மிகப் பெரிய பாத்திரக் கடையும் உள்ளது.    

ங்கநாதன் தெரு தொட்டுக் கொண்டிருக்கும் உஸ்மான் ரோடில் தங்க நகைக்கடைகள் அதிகம். சரவணா, ஜி.ஆர்.டி, ஓ.கே.ஜெ, ஜாய் அலுக்காஸ், தனிஷ்க், பாத்திமா, கசானா என்று பெரிய பெரிய நகைக் கடைகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர்களும் தங்கள் கடைகளை அடுக்கு மாடிகளாக அடுக்கிக் கொண்டே தான் செல்கிறார்கள். சரவணா, போத்திஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, குமரன் சில்க்ஸ் போன்ற ஜவுளிக் கடல்களும் இங்கே தான் ஒருவருக்கொருவர் போட்டியாய் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒரே ஒரு உபரி தகவல் இந்த 'எடுத்துக்கோ எடுத்துக்கோ' கடையில் மட்டும் இலவசமாக கொடுத்தால் கூட எதையும் எடுத்து விடாதீர்கள் காரணம் இங்கே பொருட்களின் விலையும் குறைவு தரமும் குறைவு. இவ்வளவு பெரிய பெரிய கடைகளுக்கு நடுவில் இருக்கும் சாலை வெகுவாக சுருங்கி விட்டதால் வாகன நெரிசலும் ஜன நெருக்கடியும் எப்போதுமே ஜெகஜோதியாய் இருக்கும்.

ந்த இரண்டு தெருக்களையும் சுற்றிவிட்டு பாண்டி பஜார் சென்றால் அங்கே பெண்களுக்கான அணிகலன்கள் மொத்தமும் விதவிதமாக அணிவகுத்து நிற்கும். அழகழகான வாட்சுகள், கம்மல்கள், வளையல்கள், கள்,கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

சாதாரண மற்றும் விடுமுறை நாட்களில் இருக்கும் கூட்டத்தைக் காட்டிலும் விழாக் காலங்களில் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் சென்னை மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள். இவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்கும் அளவிற்கு திநகரில் உணவகங்கள் கிடையாது. இங்கு உணவகங்கள் அதிகம் தான் என்றாலும் பண்டிகை தினங்களில் இருக்கும் கூட்டத்துடன் ஒப்பிடும் பொழுது சொற்பமாகவே தெரியும். அதனால் பண்டிகை நாட்களில் இங்கு வருமுன் உணவை முடித்துவிட்டு வருவது நல்லது இல்லையேல் மறந்துவிட்டு வருவது நல்லது.டுத்த இடம் ரிட்சி ஸ்ட்ரீட் அல்லது ரிச் ஸ்ட்ரீட். கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், செல்போன், செல்போன் உதிரி பாகங்களிலிருந்து பெயர் தெரிந்த தெரியாத என்னென்ன எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் இந்த எலெக்ட்ரானிக் சந்தைக்கு வந்துவிடலாம். ஹார்ட் டிஸ்க், மதர் போர்ட் தொடங்கி கம்ப்யூட்டரின் அணைத்து உதிரிபாகங்களையும் பிளாட்பாரத்தில் கடை பரப்பி வைத்திருப்பதைப் பார்த்தல் கொஞ்சம் திகிலூட்டும். காரணம் அனைத்தும் திருட்டுப் பொருட்கள். சென்னையின் வீடுகளில் இருக்கும்  எலெக்ட்ரானிக் பொருட்களில் குறைந்தது ஒரு பொருளாவது இங்கிருந்து வாங்கப்பட்டதாகதான் இருக்கும். அண்ணா சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கும் இந்தத் தெருவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் சூட்டிய பெயர் நரசிங்கபுரம் தெரு. இந்தத் தெருவிற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே சென்னையில் பலருக்கு தெரியாது. 

ங்கநாதன் தெருவிற்கு அடுத்தபடியாக மிக மிக நெரிசலான குறுகலான கூட்டம் அதிகம் இருக்கும் இடம் ரிச் ஸ்ட்ரீட் தான். ஒரே ஒரு வித்தியாசம் இங்கு ஆண்களை மட்டுமே அதிகம் காண முடியும். பெண்கள் இங்கு தனியாக செல்வது அவ்வளவு நல்லதும் இல்லை. இங்கு போலிகள் அதிகம் என்பதால் ஏமாறாமல் பொருட்களை வாங்குவது உங்கள் சாமர்த்தியம். இந்த இடத்தைப் பற்றியோ அல்லது வாங்கப் போகும் பொருளைப் பற்றியோ முழுவதுமாக அறிந்த்தவரை உடன் அழைத்துச் சென்றால் அடுத்த முறை ரிச் ஸ்ட்ரீட் வருவதற்கு நீங்கள் தயங்கமாட்டீர்கள். (நட்டு போல்ட் கார்டு ரீடர், ரிமோட் வாங்க செல்பவர்களுக்கு இது பொருந்தாது). பல எலெக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்டரும் இங்கு உண்டு. 

ந்த படிப்பிற்கு, எந்த துறைக்கு, எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் வாங்க வேண்டுமானாலும் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு அடுத்த கட்டிடமாக இருக்கும் மூர் மார்கெட். ஐஐடி புத்தகங்களிலிருந்து டிஐ புத்தகம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இளைஞர்களின் கூட்டம் அலைமோதும். இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை. பழைய புதிய பாடப் புத்தகங்களுக்கு என்றே தனிதனிக் கடைகள் இங்கு உண்டு. பழைய வார மாத இதழ்களும் கிடைக்கும். 

குறிப்பிட்ட பாடப் புத்தகத்திற்கு எந்தெந்த ஆத்தர்கள் புத்தகங்கள் எழுதயுள்ளர்கள், அவற்றில் எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும் என்பன போன்ற பல விசயங்களை தங்கள் நா நுனியில் வைத்திருப்பார்கள். புத்தகம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆறு வயது சிறுவனிலிருந்து அறுபது கிழவர் வரை அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் என்றால், இவர்களுக்கு குறைந்தபட்ச படிப்பறிவு கூட கிடையாது என்பது அதிசியமான விஷயம். உங்களுக்கு சென்னை பாஷை பேசத் தெரிந்திருந்ததால் புத்தகத்தை பேரம் பேசி மிகக் குறைந்த விலைக்குக் கூட வாங்கலாம். இங்கே வண்ண வண்ண மீன்களும், மீன் தொட்டிகளும், மீன் வளர்ப்பு சார்ந்த பொருட்களும் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.   

மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இருக்கும் பாரதியார் சாலை முழுவதிலும் புத்தகக் கடைகள் தான், ஆனால் இங்கே பாடப் புத்தகளை விட பழைய புதிய கதைப் புத்தகங்கள் அதிகம். கொஞ்சம் நேரமெடுத்து தேடினால் பல அரிய பழைய புத்தகங்கள் சிக்கும். பொழுது போகவில்லை என்றால் மெரினா செல்வதை விட இங்கு வருவது மிகவும் பிடிக்கும்.பாண்டி பஜாரிலும் புத்தகக் கடைகள் உண்டு. அங்கு பெரும்பாலும் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்களே கிடைக்கும். 

ன்று வந்த புதிய படத்திலிருந்து எப்போதோ வந்த பழைய படங்கள் வரை எந்த மொழி திரைப்படம் வாங்க வேண்டுமென்றாலும் பீச் ஸ்டேஷன் என்றழைகப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வாசலில் இருக்கும் பர்மா பஜார் உங்களை இருகரம் பிடித்து வலுக்கட்டாயமாக வரவேற்கும் இல்லை வலுகட்டாயமாக இழுத்து வரவேற்பார்கள். அருகில் ஹார்பர் உள்ள காரணத்தினால் கஸ்டம்சில் சிக்கும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். அதற்க்கு இந்த ஏரியாவில் ஆட்பழக்கம் அதிகம் வேண்டும். அதனால் இந்த ஏரியாவிற்கு கள்ளச் சந்தை கஸ்டம்ஸ் சந்தை என்றும் பல பெயர்கள் உண்டு. 

நீங்கள் கள்ளத்தனமாக வாங்கும் அப்பொருட்களின் ஆயுட்காலம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே உள்ளது. இந்தியாவில் முறைப்படி ஐ-பாட் விற்பனைக்கு வருமுன்பே இங்கு வந்துவிட்டது என்பது ஆப்பிள் அறிந்த விஷயம். பர்மா பஜார் பற்றி லக்கிலுக் யுவகிருஷ்ணா எழுதி இருக்கும் அழிக்கப் பிறந்த்தவன் நாவலில் இருந்து அதிக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை. இந்த இடத்திற்கு இந்தப் பெயர் சாலப்பொருந்தும். காரணம் பழைய ஸ்கூட்டரை கொண்டு சென்றால் அதை புதிய நான்கு சக்கர வாகனமாகவே மாற்றித் தரும் அளவிற்கு திறமை வாய்ந்த மெக்கானிக்குகள் இங்கு உண்டு. இங்கிருக்கும் எல்லா மெக்கானிக்குகளும் எல்லா காரையும் பார்ப்பது இல்லை. போர்ட் என்றால் நம்பி, அம்பாசிடர் என்றால் கரீம் பாய், என்று ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு திறமையான மெக்கானிக் உள்ளார். இருசக்கர வாகனத்தை பிரித்து மேய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை எனலாம். சமீபத்தில் புதுபேட்டைக்குச் சென்றிருந்த பொழுது ஒரு விளம்பரம் என்னை ஆச்சரியப் பட வைத்தது என்பதை விட அதிர்சிக்குள்ளாக்கியது. இதுதான் அந்த விளம்பரம், "இங்கு BENZ BMW AUDI கார்களுக்கு சர்விஸ் செய்யப்படும், உதிரி பாகங்கள் கிடைக்கும்".   

காய்கறி வாங்க கோயம்பேடு  மார்க்கெட், fresh fish வாங்க எண்ணூர், மதுரவாயல் மார்கெட். மளிகை சாமான்கள் வாங்க பாரிஸ், மூக்குக் கண்ணாடி, கல்யாண பத்திரிக்கை,  எழுதும் நோட்டு, பட்டாசு, வாங்க BROADWAY. என்று ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஏரியாவை பிரித்து அழகு பார்க்கிறது சென்னை. என் அறிவுக்கு எட்டியதை விட என்று சொன்னால் அது பொய், நான் ஊர் சுற்றி அறிந்து கொண்ட இந்த இடங்களைத் தவிர எனக்குத் தெரியாத சில இடங்களும் இருக்கலாம். அவற்றை நான் அறிந்த பின்பு உங்களுக்கும் அறிவிக்கிறேன்.  

சென்னையை பற்றிய சென்ற பதிவு சிறியதாகிவிட்ட காரணத்தால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக இப்பதிவு சற்றே பெரியதாகி விட்டது. அடுத்த பதிவு சென்னையின் சுற்றுலாத் தளங்களைப் பற்றியது, சென்னையை சுற்ற தயாராக இருங்கள்.   

58 comments:

 1. நல்ல பதிவு. இதை நீங்கள் ஆங்கிலத்தில் போட்டால் ஆங்கிலம் தெரிந்த அனைவருக்கும் சென்னையை பற்றி அறிந்து கொள்ளமுடியும். அழககாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

   //ஆங்கிலத்தில் போட்டால் ஆங்கிலம் தெரிந்த அனைவருக்கும் //

   பாஸ் அதுக்கு எனக்கு மொதல்ல ஆங்கிலம் தெரிந்திருக்கனுமே அவ்வ்வ்வவ்வ்வ்வவ் உங்க கதை வடிவேலு மாதிரி என் கதை ஆய்ருசே

   Delete
 2. Thank For Lovely information

  ReplyDelete
  Replies
  1. நன்றி லாய், சீக்ரம் சென்னைக்கு வாருங்கள்

   Delete
 3. சென்னையை அழகா சுத்திக்காட்டிட்டீங்க. இதை பிரிண்ட் அவுட்டும் எடுத்து வைத்து கொண்டேன். அடுத்த முறை சென்னைக்கு ஷாப்ப்பிங் போனால் உபயோகப்படுமே. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. // இதை பிரிண்ட் அவுட்டும் எடுத்து வைத்து கொண்டேன்.//

   இதைவிட ஒரு வெகுமதியும் பாராட்டும் உண்டா!. மிக்க நன்றி ராஜி . வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நீங்கள் அளித்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 4. சீனு சார். கட்டுரைகள் நன்கு எழுத பழகி கொண்டுவிட்டீர்கள். வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது. உங்கள் அப்ஸர்வேஷன்ஸ் மெருகேயிருக்கின்றன. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் உங்கள் அசீர்வாதங்கள் நடராஜன் சார். உங்கள் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்னை பாராட்டுவதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் இன்னும் முயல்கிறேன்.

   Delete
 5. சூப்பர் நண்பா

  ReplyDelete
 6. மொபைல் வழியா COMMENT போட்டதால் விரிவாய் சொல்ல முடியவில்லை LAPTOP வழியாய விரிவாய் சொல்லறேன்

  ReplyDelete
 7. சிறப்பான தகவல்கள். என்னை போன்ற வெளியூர்காரர்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் வருகை தந்திருக்கும் அண்ணன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்

   Delete
  2. என்னாச்சு அடுத்த பதிவு?விரைவாக ஒரு பதிவை போடுங்க பாஸ்...

   Delete
 8. நல்ல சொல்லி இருகீன்கள் சீனு ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலை உங்கள் வருகைக்கும் பாராட்டியதற்கும் நன்றி

   Delete
 9. woooooowwwwwwwwwwwwwwww......... :-O
  wat more to tell???
  too good...
  i'm excited on reading it, i read all the lines twice and wanted to read again.
  now u've made my hopes high so i expect really something much more the next time... :)

  P.S:pondy bazar la இருக்க books எல்லாம் pirated editions மட்டும் தான்

  ReplyDelete
  Replies
  1. ஜனனி நல்ல வேள தப்பிச்சன், ஏன்னா சென்னை என்னைய விட உனக்குத் தான் நல்ல தெரியும். 'பாஸ் அது எப்டி பாஸ் நீங்க அப்டி சொல்லலாம்' னு கேட்ருவியோனு நினைச்சன் நல்ல வேலை நல்லா இருக்குனு சொல்லிட்ட.

   இன்னும் இன்னும் அதிகம் எழுத உற்சாகப் படுத்தும் உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
  2. Teynampet la home decorative lamps shops
   vadapalani 100 feet road la tiles, marbles and mosaic and all other flooring furnishes shops
   Pantheon road la good quality screen and curtain cloths
   sowcarpet la all north indian clothes and accessories
   all these are also chennai's faces..

   and spl mention to ur description abt Ritchi st, puthepet and moore market, too good boss.... :)

   Delete
  3. பாத்தியா சென்னைவாசின்னு நிருபிச்சிட்ட. இந்த இடங்களுக்க் எல்லாம் நான் போனது கிடையாது. சௌகார்பேட் கேள்வி பட்ருக்கேன், போனது இல்லை. பல புதிய தகவல்கள் சொல்லிருக்க வாழ்த்துக்கள்

   Delete
 10. தெளிவாகவும் எளிதாகவும் சென்னைய பற்றி அறிய உன் பதிவை விட வேறு வழிகாட்டி தேவை இல்லை நண்பா!!!! வாழ்த்துக்கள்..........

  ReplyDelete
 11. தெளிவாகவும் எளிதாகவும் சென்னைய பற்றி அறிய உன் பதிவை விட வேறு வழிகாட்டி தேவை இல்லை நண்பா!!!! வாழ்த்துக்கள்..........

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா. சென்னையை என் மனம் படம் பிடிப்பதை விட உன் கேமரா தான் அதிகம் படம் பிடிகின்றது

   Delete
 12. சென்னையைப் பற்றிய அருமையான தகவல்களை
  மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
  எங்களைப் போன்ற வெளியூர் வாசிகளுக்கு
  இந்தத் தகவல் அவசியம் தேவை
  எத்தனை முறை வந்தாலும் சரியான தகவலின்மையால்
  ஏமாந்துதான் போகிறோம்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி ரமணி சார். நீங்கள் அனைவரும் எனக்களிக்கும் உற்சாகத்தோடு அடுத்த பதிவை தொடர்கிறேன் சார்

   Delete
 13. ரொம்ப நல்லாவே ஊர் சுத்திப் பாத்திருக்கீங்க சீனு. பாத்ததோட நிக்காம அழகா, தெளிவா எடுத்துச் சொன்னதும் சிறப்பு. ரங்கநாதன் தெருவுல டிரஸ் வாங்கி, பாண்டி பஜார்ல அணிகலன்கள் வாங்கி,‌ ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, மூர் மார்க்கெட்லயும், கண்ணகி சிலை கிட்டயும் பழைய புத்தகங்கள் வாங்கி சந்தோஷப்பட எனக்கு ரொம்பத்தான் ஆசை... (சிவாஜி ஸார் மாடுலஷேன்ல) ஆனா பணம் வேணுமேப்பா, பணம்... எங்கப்பா போறது..? அடுத்ததா சுற்றுலாவா... இப்பவே செலவில்லாம உங்ககூட சுத்திப் பாக்க ரெடியாயிட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. // (சிவாஜி ஸார் மாடுலஷேன்ல) ஆனா பணம் வேணுமேப்பா, பணம்...//

   காமெடி கீமடி பனாதீங்க கணேஷ் சார் (சிவாஜி ரஜினி சார் மாடுலஷேன்)
   ஐம்பது ரூபா டிக்கெட் வாங்கினோமா, எல்லாத்தையும் நல்ல சுத்தி பாத்தோமா வீட்டுக்கு வந்து அம்மா கையாள நல்ல சாப்பிடோம்மானு இருக்கணும். சென்னைல அனாவசியமா காசு செலவு பண கூடாது.

   //இப்பவே செலவில்லாம உங்ககூட சுத்திப் பாக்க ரெடியாயிட்டேன்!//
   ஹா ஹா ஹா தயாரா இருங்க சார் சென்னைல வெயில்ன்றதால சென்னைய சுத்திக்காட்டும் போது ஏசி ரூம் ல உக்காந்து வாசிங்க அப்போ தான் வெயில் தெரியாது.

   வந்து வாழ்த்தி இச்சிறுவனை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சின்ன வாத்தியாரே

   Delete
 14. சென்னையில் இவ்வளவு இருக்கா ? நல்ல பதிவு நன்றி

  ReplyDelete
 15. ரிச்சி ஸ்ட்ரீட் ஒரு முறை சென்றேன் .. யப்பா .. எல்லா மின்போருளும் மலிவாக கிடைக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ராஜா, ரிட்சி ஸ்ட்ரீட் செல்ல நாமும் ரிச் ஆக இருக்க வேணும் என்பது தனி கதை :-) :-) :-)

   Delete
 16. nanpaa'

  netrre naan padiththu iruppen-
  sila kaaranangalaal -
  mudiyavillai!

  aanaal-
  intru padithen!
  enpathai vida!
  chennaiyai sutri paarthen enpathu-
  thaan- unmai!

  ivvalavu visayangal irukkaa!?
  aachariyam!
  ungalin ezhuthu nadal!
  arputham!

  innu ezhuthungal -
  naanum padikkanum-
  illai chennayai sutri paarkkanum!

  ReplyDelete
  Replies
  1. சென்னைக்குள் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இன்னும் இருக்கிறது வாருங்கள் சேர்ந்து சுற்றுவோம். வருகைக்கு சீனி

   Delete
 17. innu ezhungal!
  azhakaana sutriya

  ReplyDelete
 18. சென்னையைப் பற்றி அழகாகக்கூறியுள்ளீர்கள். ஒவ்வொரு இடத்தை பற்றியும் விரிவாகவும் உள்ளது.அதற்கேற்ற புகைப்படமும் பொருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி விச்சு... புகைப்படம் சில நண்பர்கள் கொடுத்தது

   Delete
 19. // நட் போல்ட் கார்டு ரீடர் வாங்குபவர்களுக்கு பொருந்தாது // ithu than highlight.... இது எனக்கு பிடிச்ச வரிகள் ... ரிச்சி ஸ்ட்ரீட் பெயர் , புதுபேட்டை விளம்பர பலகை ,கள் கள் என அடுகிட்டே போலாம் ....super ah irukku....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா பரவாஇல்ல பாயிண்ட புடிசிட்டியே

   Delete
 20. // நட் போல்ட் கார்டு ரீடர் வாங்குபவர்களுக்கு பொருந்தாது // ithu than highlight.... இது எனக்கு பிடிச்ச வரிகள் ... ரிச்சி ஸ்ட்ரீட் பெயர் , புதுபேட்டை விளம்பர பலகை ,கள் கள் என அடுகிட்டே போலாம் ....super ah irukku....

  ReplyDelete
 21. "மெட்ராசைச் சுத்திப் பார்க்கப் போறேன்..." பாடலை இணைத்திருக்கலாம்... ஊர் முழுக்கக் கிட்டத் தட்ட சுற்றிப் பார்த்தாச்சு. அதுக்காக துள்ளாத மனமும் துள்ளும் காமெடியன் மாதிரிக் காசு கேட்டுடப் போறீங்க! :))

  ReplyDelete
  Replies
  1. காசு எல்லாம் வேண்டாம் ஸ்ரீராம், நீங்க வந்தா மட்டும் போதும் , வந்தா மட்டும் போதும். வருகைக்கு நன்றி

   Delete
 22. என்ன நண்பா இப்படி பிரிச்சு மேன்சிட்ட...::)

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் தெரிஞ்சிக்கணும் தான் நண்பா

   Delete
 23. அடேங்கப்பா...இவ்வளவு இடங்களா!!! நான் நான்கு வருடம் சென்னையில் இருந்திருக்கிறேன்.நீங்கள் சொன்ன இடங்களில் பாதிகூட போனது கிடையாது.சென்னையையே ஓசில ஒரு ரவுண்டு வந்த மாதிரி இருக்கு.நைஸ்...

  ReplyDelete
 24. சென்னைக்கு போகும் வாய்ப்பு கிடைத்ததில்லை
  எனினும் போய் வந்த நிறைவை தருகிறது இந்த பதிவு!
  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சென்னையைப்பற்றி எவ்வளவு தகவல்கள் அடுத்த தடவை போகும்போது மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி

   Delete
 25. Haiyo...! ரொம்ப ரொம்ப ‌லேட்டாயிட்‌டனே... Sorry! பாண்டி பஜார் ஷாப்பிங் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். ரிச்சி ஸ்ட்ரீட்க்கு ஒருதடவை மாமாவோட போயிருக்கேன். ஐபாட் வாங்கினோம். எனக்கென்னமோ அது நல்லாவே ஒர்க் பண்ணிட்டிருக்கு. மூர் மார்க்கெட், திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகள்ல நான் இதுவரை வாங்கினதில்லை. ட்ரை பண்ணிப் பாத்துடறேன். இப்படி தெரியாதவங்களும் நிறைய இடங்களைத் தெரிஞ்சுக்கற மாதிரி எழுதறது ரொம்ப நல்ல விஷயம் Friend! Continue பண்ணுங்க... ஸீ யு!

  ReplyDelete
 26. நண்பா சீனு இந்த கட்டுரையை நான் நீங்கள் பதிவு இட்ட அன்றே படித்து விட்டேன் ஆனால் மொபைல் வழியாக கமெண்ட் போட்டதால் PUPLISH ஆகவில்லை.

  ReplyDelete
 27. அருமையான கட்டுரை நண்பா ஆனால் ஒரு கவலை சென்னை பெண்களை பற்றி எழுத வில்லை நண்பா அடுத்த பதிவில் எழுதுவீங்க நம்புறேன்...

  ReplyDelete
 28. நான் இந்த இடங்களுக்கு எல்லாம் இன்னும் முழுசா செல்ல வில்லை சிக்கிரம் போகணும் நீங்களும் உடன் வாங்க...

  ReplyDelete
 29. இனி கமெண்ட் போட பதிவு போட்ட கொஞ்ச நாள் ஆகும் நண்பா

  ReplyDelete
 30. சென்னை சுற்றி காட்டியதற்கு நன்றி...

  ReplyDelete
 31. மே 20 மெரீனா கடற்கரையில் ஈழ படுகொலைக்கு இன அழிப்புக்கு எதிராக நடக்கும் நினைவேந்தலில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

  ReplyDelete
 32. அண்ணா உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன் ...விருதை வாங்கிக் கொண்டால் ரொம்ப சந்தோசம் கொள்வேன் ...

  ReplyDelete
 33. Good wealth of information. Wish someone put a book/website with all this information so it will help the masses.

  ReplyDelete
 34. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_25.html) சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete
 35. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

  உங்களின் தளம் வலைச்சரத்தில் மீண்டும் திரு. சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_3.html) சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete
 36. சென்னையில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒரு தெரு ..ரிட்சி ஸ்ட்ரீட் ! குறைந்த விலை என்பதோடு, இங்கு கிடைக்காத எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களே இல்லை என்பதால் மிக பிரபலம்! இந்த தெருவிற்கென தனி இணைய தளம் இப்போது வந்துள்ளது.

  http://www.ritchiestreet.co.in/ என்கிற இந்த தளத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் பெயரும் அங்கு கிடைக்கும் பொருள்கள் அவற்றின் விலை என்ன என்பதும் அறிய முடிகிறது. நீங்களும் இந்த தகவலை பயன்படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன்

  ReplyDelete