20 Jun 2012

சென்னையில் ஓர் ஆன்மீக உலா


ரு சிறிய தன்னிலை விளக்கத்துடன் இந்தப் பதிவை தொடங்குகிறேன். பக்தியும் ஆன்மீகமும் கோவிலும் வழிபாடும் பிடிக்கும் என்றாலும் கோவில்களை ஆராய்ந்து அங்கிருக்கும் தெய்வ உப தெய்வங்களின் சிறப்புகளை விரிவா எடுத்துரைக்கும் அளவிற்கு திறமையும் ஆன்மீக ஞானமும் எனக்குக் கிடையாது. இருந்தும் எதற்குமே ஒரு தொடக்கம் வேண்டுமென்பதால் இது என் முதல் ஆன்மீகப் பதிவு.

எண்ணங்களுக்கு உயிர் உண்டு என்று நம்பும் பலரில் நானும் ஒருவன், அந்த எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுவதில் ஆன்மீகம் மட்டுமே பெரும்பங்கு வகிக்கிறது. நிம்மதியை மனநிறைவை ஆறுதலைத் தேடும் மனிதனின் மனபலத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிறந்த கருவி என்ற அளவில் மட்டுமே பக்தியைப் பார்த்தோமானால் நம்முள் இருக்கும் சக்தியை முறையாக வெளிப்படுத்தலாம். 

ன்னுடைய ஊரிலும் கிராமபுரங்களிலும் நான் பார்த்த பக்திக்கும்,  சென்னையில் நான் பார்க்கும் பக்திக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. எங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் அதிகபட்ச பக்தியாக நான் பார்த்திருப்பது பூ மிதித்தலும் (தீ மிதித்தலும்) பூச்சட்டி (தீச்சட்டி) எடுத்தலும் மட்டுமே. வாயில் பெரிய பெரிய அலகு குத்துவதையும், முதுகில் துளை போட்டு டாட்டா சுமோ  இழுபதையும், இரண்டு மூன்று பேர் செர்ந்து வேன் இழுபதையும் இங்கு தான் நான் கண்டேன். இதன் பின்னணியில் இருக்கும் பக்தியின் அளவை ஆராய்ச்சி செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. 
கண்மூடி கடவுளைத் தேடு கண்மூடித் தனமாக கடவுளைத் தேடாதே 
என்று யாரோ ஒரு சித்தர் கூறியதை மனத்தில் நிறுத்தி வாருங்கள் சென்னைக்குள் ஓர் ஆன்மீக உலா செல்வோம்.

ருகில் மெரினா இருப்பதால் சென்னைக்கு வரும் அநேகம் பேர் செல்லும் ஓர் வழிபாட்டுத் தலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில். பாரதப்போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கும் பார்த்த சாரதியகவே காட்சியளிக்கிறார். கையில் ஆயுதம் ஏதும் ஏந்தாமல், கவச உடை ஏதும் அணியாமல் சாரதியாக பாரதப் போருக்குச் சென்றதால் போரில் அவர் பெற்ற காயத்தின் தழும்புகளை முகத்தில் காணலாம். முறுக்கு மீசையுடன் கம்பீரமாக போர் வீரனைப் போலவே காட்சியளிக்கும் இந்த பார்த்தசாரதி பறக்கும் ரயில் நிலையம் மற்றும் கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே வீற்றுள்ளார்.

திருநீற்றின் மகிமையையும் நமச்சிவாய மந்திரத்தின் பெருமையையும் எடுத்துரைக்குமாறு சிவபெருமானிடம் பார்வதி கேட்டதற்கிணங்க, சிவபெருமானும் எடுத்துகூற ஆரம்பித்தார். இநேரத்தில் அங்கே நடனமாடிக் கொண்டிருந்த மயிலின் அழகில் மெய்மறந்த தேவி சிவபெருமான் கூறும் விளக்கத்தைக் கவனிக்கத் தவறினார். இதனால் கோபம் கொண்ட பெருமான் பூமியில் மயிலாகப் பிறந்து என்னை வணங்குவாயாக என்று சாபம் கொடுத்துவிட்டார். சாபத்திற்கு கட்டுப்பட்ட தேவியும் புன்னை மரத்தடியில் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார்.

வத்தில் மெச்சிய பெருமானும் தேவியின் சாபம் நீக்கி அவ்விடத்திற்கு திருமயிலை என பெயர் சூட்டினர் என்று ஒரு வரலாறும், சிவபெருமானைப் போல் தானும் ஐந்து தலை உடையவன் என்று கர்வம் கொண்ட பிரம்மாவின் கர்வம் களைய அவரின் ஐந்து தலைகளில் ஒன்றினைக் கொய்து தன் கைகளில் கபாலம் ஏந்தியதால் கபாலீஸ்வரனாக காட்சியளிக்கிறார் என்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தலவரலாறு கூறுகிறது. இத்தலத்திற்கு சென்று வார பேருந்து நிறுத்தம் மட்டுமே அருகில் உள்ளது. இங்கு நடைபெறும் அறுபத்துமூவர் உலா பிரசித்திப்பெற்றது. இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக்குங்கள்.

தென்காசி, நெல்லை, மதுரை பகுதிகளில் பாண்டிய மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கோவில்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு சென்னையில் உள்ள கோவில்கள் அனைத்தும் அளவில் மிகச் சிறியதாகவே தெரிகிறது. ஓரளவிற்குப் பெரிய கோவிலைக் காண வேண்டுமென்றால் நாம் செல்ல வேண்டிய இடம் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு சயனத்தில் வீற்றிருக்கும் பெருமாளைப் பார்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். கோவிலின் அருகே மிகப் பெரிய தெப்பகுளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அருகிலேயே தீர்தேஸ்வரர் என்ற பெயரில் சிவனும் காட்சியளிக்கிறார் அங்கும் தவறாது சென்று வாருங்கள். 

வீரராகவப் பெருமாளின் தலபுராணத்தை தன் மின்னல் வரிகளால் எழுதியிருக்கும் கணேஷ் சார் அவர்களின் பதிவைப் படிக்க இங்கு சொடுக்குங்கள். இதே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவில் உள்ளது. கோயம்பேடு மற்றும் திருவள்ளூரில் இருந்து திருத்தணி சென்று வர பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. ரயில் வசதி கொஞ்சம் குறைவு .திருத்தணி முருகனை தரிசித்து விட்டு மேலும் மூன்று மணிநேரம் பயணித்தீர்கள் என்றால் திருப்பதி ஏழுமலையானையும் தரிசித்து விடலாம் என்பது கூடுதல் தகவல்.

திருநின்றவூரில் பகதவட்சலப் பெருமாள் கோவில் உள்ளது வருகிறாயா என்று கேட்டார் என் தந்தை, செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருக்கும் என்னை பெற்ற தாயாரை தரிசித்து வரலாம் கிளம்பு என்றார். சற்றே வித்தியாசமாய் இருந்த தாயாரின் பெயர் எனக்குப் பிடித்துப் போகவே மறுக்காமல் கிளம்பி விட்டேன் . அங்கு சென்றதன் பின் தான் தெரிந்தது அக்கோவில் 108 திவயதேசங்களில் ஒன்று என்று. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் மட்டுமே செல்ல முடியும். பேருந்து வசதி மிகக் குறைவு.இக்கோவிலின் வரலாற்றை என்னை விட இவர் தெளிவாக எழுதி உள்ள காரணத்தால் இங்கே கிளிக்கி படிக்கவும்.

திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் பச்சையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி அம்மன் கோவில்களில் ஒன்று. இங்கு வழங்கப்படும் குங்குமும் கயிறும் பச்சை நிறத்திலே இருப்பது கூடுதல் சிறப்பு. ராகவா லாரன்ஸ் எழுப்பி இருக்கும் ராகவேந்திரர் கோவில் இருப்பதும் இதே திருமுல்லைவாயிலில் தான். எனக்கு மிகமும் பிடித்த அமைதியைத் தரக் கூடிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. ராகவேந்திரருக்கு நாமே தீபாராதனை செய்யும் வாய்பு உண்டு. ராகவேந்திரரைப்  பார்த்த வண்ணம் தியானம் செய்ய இடவதியும் உண்டு.

ராகவேந்திரர் சிலையின் மாதிரியை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சென்று காண்பித்த லாரன்சிடம் ரஜினி கூறியது, ராகவேந்திரர் மிகப் பெரிய மகான், யோகா தியானங்களின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் அவருக்கு தொந்தி இருக்காது என்று கூறியதோடு நில்லாமல் அவரிடமிருந்த ராகவேந்திரரின் மாதிரியை கொடுத்து உதவி இருக்கிறார். அந்த மாதிரியின் வடிவமாய்த் தான் ராகவேந்திரர் இங்கு காட்சியளிக்கிறார். 

திநகர் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியிருக்கும் வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக கைரேகை மூலம் முன்பதிவு செய்யும் மையமும் இங்கு இயங்கி வருகிறது. மேலும் மதத்தின் முதல் ஞாயிறு அன்று இங்கே திருப்பதி லட்டு விற்பனை செய்யப் படுகிறது. அதை வாங்குவதற்கும் பெருங்கூட்டம் காத்திருக்கும். மா என்றால் பெரிய, சிவபெருமான் இங்கே  மா அம்பலத்தில் ஆடுவதால் இந்த ஊருக்கு மாம்பலம் என்று பெயர். மாம்பலம் பேருந்து நிலையதீன் மிக அருகில் சிவனும் விஷ்ணும் சேர்ந்து இருக்கும் சிவவிஷ்ணு ஆலயம் உள்ளது. 

ம்பதாயிரம் முதல் ஐம்பது லட்சம் வரை எவ்வளவு செலவழித்து வண்டி வாங்கினாலும் அதை RTOவிற்கு எடுத்துச் செல்வார்களோ இல்லையோ மறக்காமல் பாடிகாட் முனீஸ்வரனிடம் பூஜை போட எடுத்து வந்துவிடுவார்கள். பல்லவன் ஹவுஸ் பக்கத்தில் மிக மிக சிறிய அளவில் இருக்கும் இக்கோவிலில் கூடத்திற்குப் பஞ்சமே இருக்காது. காவல் தெய்வமான  முனீஸ்வரன், BODYGUARD முனீஸ்வரன் ஆனது சென்னைத் தமிழனின் தமிழ்ப் பற்றாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.(பல்லவன் ஹவுஸ் என்பது சென்னை மாநகரப் பேருந்து டிப்போவின் தலைமையகம்)  

பெசன்ட் நகர் கடற்கரையின் அருகில் அஷ்ட லக்ஷிமிகளைக் கொண்டு வீற்றிருக்கும் அஷ்ட லக்ஷ்மிக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருந்து கடலைப் பார்பதற்கும் மிக மிக அழகாக இருக்கும். கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் நடப்பதால் மூலவரையும் அஷ்ட லக்ஷ்மிகளையும் தரிசிக்க முடியாது. தையும் மீறின என்னையொப் போல் ஆவலுடன் சென்றீர்கள் என்றால் உற்சவ மூர்த்தியை மட்டுமே தரிசித்து வர வேண்டி இருக்கும். 

புட்லூர் திருவேற்காடு மாங்காடு பெரியபாளையத்தம்மன் காளிகாம்பாள் என்று அம்மன் கோவில்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை . நெல்லை மாவட்டத்தில் மாரியம்மனும் இசக்கியம்மனும் பெச்சியம்மனும் அதிகம் இருபது போல் சென்னையில் சின்னம்மனும் செல்லியம்மனும் பொன்னியம்மனும் அதிகம். வடபழனி முருகன் கோவில், அண்ணா நகர் அய்யப்பன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில் இவை நான் நெடுநாட்களாக செல்ல நினைக்கும் கோவில்கள். விரைவில் சென்று தரிசனம் பெற அந்த இறைவன் தான் அருள் புரிய வேண்டும்.

சாந்தோம் பரங்கிமலை தேவாலயங்கள், ஆயிரம் வில்லுக்கு மசூதி பிரசித்திபெற்றவை. தேவலாயங்களும் தர்காகளும் அதிகம் என்பது கூடுதல் தகவல்.


சென்னையின் ஆன்மீக உலாவில் தவறு இருந்தாலோ, தவறாகக் கூறியிருந்தாலோ எடுத்துச் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன். தவறாமல் உங்கள் கருத்துகளை உதிர்த்துவிட்டுச் செல்லுங்கள்.  

15 comments:

  1. ஏறத்தாழ சென்னையின் முக்கிய ஆலயஙகள் முழுமைக்கும் ஒரு சுற்றுலா அழைத்துச் சென்று விட்டீர்கள். அங்கங்கே மற்ற பதிவர்கள் எழுதியிருப்பதையும் சுட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சுற்றுலா. (எழுத்துக்கள் கன்னாபின்னாவென்று பிரிந்து - ஒற்று முதல் வரியில் வருகிறது - இருப்பதுதான் ஒரே உறுத்தல். சரி செய்யுங்கள் சீனு.

    ReplyDelete
  2. //உங்கள் ஆன்மீக தாகம் தீரவில்லையா உங்களுக்காகவே இருக்கிறது ஒரு வலைபூ. ராஜேஸ்வரி அம்மா அவர்கள் அழகிய புகைப் படங்களுடனும் தெளிவான கருத்துகளுடனும் செய்துவரும் ஆன்மீக உற்சவத்தில் பங்கு கொள்ளுங்கள்.//

    ஆஹா!

    முடிவுரையில் முத்திரையைப் பதித்து விட்டீர்கள். ;)))))

    தங்களின் இந்த “சென்னையில் ஓர் ஆன்மீக உலா” க்ட்டுரையும் மிகச்சிறப்பாகவே தரப்பட்டுள்ளது.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  3. ஆரம்பத்தில் கொஞ்சம் படித்தேன் அதற்கு பின்னர் படிக்கவில்லை எனக்கு கடவுள் மேல் சில சமயம் நம்பிக்கையும் பல சமயம் இல்லை என்றே ஒரு சரியான முடிவு தெரியாமல் குரங்கு போல் உள்ளேன்...அது மட்டும் இல்லாமல் கோவில் பதில் பக்தி என ஆரம்பித்தாலே அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிடுவேன் இப்பவும் அப்படியே....திடிர்னு கோவில் பத்தி எழுதுற இந்த வாரம் எங்காவது போனியா...யாரோட போன மச்சி...G.F

    ReplyDelete
  4. //முதுகில் துளை போட்டு டாட்டா சுமோ இழுபதையும், இரண்டு மூன்று பேர் செர்ந்து வேன் இழுபதையும் இங்கு தான் நான் கண்டேன். //

    அட இப்படியெல்லாம் கூடவா நடக்குது சிங்காரச் சென்னையிலே!

    நல்ல உலா.... தொடருங்கள் சீனு. எனது இன்றைய பதிவு...

    மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்...

    http://www.venkatnagaraj.blogspot.in/2012/06/blog-post_13.html [டேஷ்போர்டில் ஏனோ அப்டேட் ஆகவில்லை]... அதனால் இத்தகவல்... :(

    ReplyDelete
  5. சென்னையில் இருந்தும் பல கோவில்களை பார்த்ததில்லை.நிச்சயம் போய்ப் பார்க்கவேண்டிய கோவில்கள் என்பதை நினைவு படுஹ்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  6. சொன்னவை சில... சொல்ல இன்னும் பல.... இல்லையா? நல்லதொரு தொகுப்பு!

    ReplyDelete
  7. சென்னைக்கும் எனக்கும் வெகு தூரம் அண்ணா! இருப்பினும் சென்னையை பற்றி பல தகவல்களை தங்களது தளத்தில்அறிய முடிகிறது! இன்று ஆன்மீக உலா இனிதே முடிந்தது அண்ணா அத்தோடு மேலும் படிக்க என்று பிற பதிவுகளின் இணைப்பை கொடுத்தது மிகவும் அருமை!

    ReplyDelete
  8. /உங்கள் ஆன்மீக தாகம் தீரவில்லையா உங்களுக்காகவே இருக்கிறது ஒரு வலைபூ. ராஜேஸ்வரி அம்மா அவர்கள் அழகிய புகைப் படங்களுடனும் தெளிவான கருத்துகளுடனும் செய்துவரும் ஆன்மீக உற்சவத்தில் பங்கு கொள்ளுங்கள்.//


    ஆன்மீக உற்சவம்! உற்சாகமூட்டும் அழகிய அற்புத முத்திரையைப் பதித்த அறிமுகத்திற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் !!

    ReplyDelete
  9. ஆன்மீக உற்சவம்!ஃஃஃஃஃஃஃஃஃஅழகு!

    ReplyDelete
  10. கோடி நன்றிகள்.
    இத படிச்சதே கோவில் போயிட்டு வந்த மாதிரி இருக்கு.... :)
    எனக்கு பிடிச்ச மயிலாப்பூர் Sai Baba விட்டுடிங்கலே :(

    ReplyDelete
  11. இதை நேற்று பாதி வாசித்தேன். கொஞ்சம் நீட்ட ஆக்கமானால் தயக்கம். பாதியில் விட்டிட்டேன். பின்பு வாசித்து கருத்திடுவேன். - உங்கள் திடம் கொண்டு போராடு - என் மீது ஏற்படுத்திய சலசலப்பை இன்று என் சுவரில் காணலாம். சந்திப்பேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com/2012/06/26/32-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    ReplyDelete
  12. எண்ணங்களுக்கு உயிர் உண்டு என்று நம்பும் பலரில் நானும் ஒருவன் !!!!!!

    ReplyDelete
  13. நண்பரே,

    உங்கள் உலா எதார்த்தமாக இருந்தது. எனது வலைப்பக்கத்தையும் குறிப்பிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஸ்ரீ....

    ReplyDelete