15 Jun 2012

நாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்




ரு வழக்கமான வெள்ளிக் கிழமை மாலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் சித்தப்பா மகளான என் தங்கையிடம் இருந்து போன் வந்தது, "நாளைக்கு ஊர்ல இருந்து அம்மா அத்தை எல்லாரும் வராங்க, சனி கிழமை மாமல்லபுரம், ஞாயிறு ரங்கநாதன் தெரு, ஞாயிறு  சாயங்காலமே ஊருக்கு கிளம்புராங்க". அவள் இப்படி சொல்லியதும் மூன்று பேர் கொண்ட குழு கூடியது, குழுவில் இடம் பெற்றவர்கள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை. எப்படி செல்வது என்று முடிவெடுக்க ஆரம்பித்தோம். பாஸ்ட் ட்ராக் பிரண்ட் ட்ராக் என்று கூகிள் தேடிக் கொடுத்த எல்லா ட்ராக்கிலும் விசாரித்தோம், நூறு கி.மீ சென்று வர  மூன்றாயிரம் ருபாய் கேட்டனர் அதற்கு மேல் செல்லும் கி.மீ க்கு அதிகமான பணம் கேட்டனர், ஆவடியிலிருந்து நூறு கி.மிக்கும் அதிகமான தூரத்தை கூகிள் மாப் காட்டியதால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டோம்.   

வேண்டுமென்றால் ஐம்பது ருபாய் டிக்கெட் எடுத்து போய் வரலாம் என்று சீப்பான ஒரு ஐடியா குடுத்தேன், இந்தியாவில் மலிவான ஐடியாக்கள் தான் மதிக்கப் படுவதில்லையே. அதனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. ( ஐம்பது ருபாய் டிக்கெட் என்பது சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்வதற்கான ஒரு நாள் பயணச் சீட்டு, .சி தவிர மற்ற எல்லா பேருந்துகளிலும் பயணிக்கலாம்). தமிழ்நாடு டூரிசம் வழங்கும் ஒருநாள் மாமல்லபுர இன்பச் சுற்றுல்லா திட்டத்தின் மூலம் சென்று வரலாம் என்ற முடிவில் டூரிசம் வலைதளத்தை திறந்தோம். திறந்தால் ஆச்சரியம். சனி கிழமைக்கான சுற்றுல்லாப் பேருந்தில் வெறும் இரண்டு நபர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.

மிழனின் வழக்கமான சந்தேகம் தலை தூக்கியது, யாருமே முன்பதிவு செய்யவில்லை என்றால் 'சர்வீஸ் கேவலமாக இருக்கும் போல எதுக்கும் விசாரிப்போம்' என்று கூகுளிடம் முறையிட்டோம், எங்கள் மேல் என்ன கோபமோ சரியான தகவல்களைத் தர மறுத்தது. வலைபூவிலும் தேடினேன் தகவல் கிடைக்கவில்லை, சரி நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற ஒரு நம்பிக்கையில் அடுத்த நாள் பயணத்திற்கான முன்பதிவை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அந்த நொடியில் தெரியாது நாளை சந்திக்கப் போகும் விபரீதத்தின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்று

டுத்த நாளின் ஆரம்பம் சூரியனின் வெற்றிகரமான சுழற்சியால் புலர ஆரம்பித்தது. சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருக்கும் டூரிசத்தின் தலைமை அலுவலகம் செல்ல மின்ரயில் ஏறி அமர்ந்தோம், ரயில் கிளம்பிய தருணத்தில்  சுற்றுலாவின் முதல் அணு ஆயுதத்தை எறிந்தான் என் தமையன். 'டிக்கெட் பிரிண்ட் அவுட்ட வீட்டிலையே மறந்து வச்சிட்டு வந்துட்டேன்' என்றான். வேறு வழியில்லை திரும்பி சென்று எடுத்து வர நேரமும் இல்லை. அவர்கள் அனுப்பிய குறுந்தகவல் உள்ளது சமாளித்துக் கொள்ளலாம் என்று சமாதனம் செய்து கொண்டோம்.       

ரியான நேரத்திற்கு டூரிசம் வந்து சேர்ந்தோம், ஆடிக் கொண்டு இருக்கும் என்று நினைத்தால், அங்கே சரியான கூட்டம், வெளிநாட்டுப் பயணிகளும் அதிகமாக இருந்தனர். டிக்கெட் எடுத்து வர மறந்து விட்டோம் என்ற எங்களை சுட்டெரிப்பது போல் பார்த்தார் அந்த சீனியர் ஆபிசர், டிக்கெட் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, மேலும் உங்கள் பெயர் பயணிகள் லிஸ்டில் வரவே இல்லை, டிக்கெட் கொண்டு வா என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தார். வேறு வழியில்லை வாலாஜா சாலையில் வலம் வர வேண்டுமென்று அக்னி தேவன் விரும்பி விட்டான் போல் கொளுத்தும் பத்து மணி வெயிலில் அண்ணனுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தேன். ( சுற்றுல்லாப் பேருந்து புறப்படும் சரியான நேரம் மணி பத்து என்பது கூடுதல் தகவல்)  ஒரு வழியாய்  இணைய உலவி மையத்தைக் கண்டுகொண்டோம். அங்கே அடுத்த மின்அதிர்ச்சி வரவேட்றது. அந்த தொழிலதிபர் 'கரென்ட் இல்லப்பா அப்பால வா' என்றான் தன்கையில் இருந்த தற்காலிக விசிறியை விசிறிக் கொண்டு

நிலைமையை டூரிசதில் இருந்த அந்த சீனியர் ஆபிசரிடம் விளக்கினோம், அவர் எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. தங்கையின் ஆண்ட்ராய்ட் கைபேசி மூலம் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கைபேசி வழியாகவே காண்பித்தோம். பின்பு தான் அவர் விஷயத்தை தெளிவாக்கினார். முன்பதிவு செய்ய உதவும் வலைதளம் ஒழுங்காக வேலை செய்யாதாம், மேலும் பயணிக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே முன்பதிவு நிறுத்தப் பட்டுவிடும் உங்களால் மட்டும் எப்படி பதிவு செய்ய முடிந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை      என்று புலம்ப ஆரம்பித்தார். இதில் மற்றுமொரு கொடுமை என்னவென்றால் அங்கு வேலைபார்பவர்கள் அனைவருக்கும் போன் வந்தவண்ணம் இருந்தது, எங்கள் பிரச்சனையை கண்டுகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை. நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வேறு கிளம்பிவிட்டது, இனி பேருந்தும் கிடையாது

காபலிபுரம் போனது போகட்டும் ஆறு பேறுக்காக செலுத்திய பயணத் தொகை இரண்டாயிரம் ரூபாய்க்கு விடை என்ன? இவர்கள் இறுதியாக ஒரு பதில் சொன்னால் வேறு எங்காவது செல்லலாம், இப்போது அதற்கும் வழி இல்லை. கேள்விகள் மட்டுமே எங்களிடம் விடை அவர்களிடம், விடை தர வேண்டியவர்கள் எங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் விடை கொடுத்துக் கொண்டிருந்தனர். கோபம் எல்லையைக் கடந்து விட்டது, எங்கள் பிரச்சனையை யாரோ ஒரு உயரதிகாரியுடன் போனில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அதனால் மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தோம். காரணம் அவர்களுக்கும் என்ன முடிவெடுப்பது என்றே தெரியவில்லை.  பதினோரு மணிக்கு எங்களிடம் வந்தார் "கார் வர சொல்லியிருகோம், நீங்க அதில் போகலாம்" என்றார். முதல் முறையாக அவர் புன்னகைத்தது அப்போதுதான்.         

ரி எப்படியோ கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்களே அது வரைக்கும் சந்தோசம். நாம் செலுத்திய தொகைக்கு அதிகமாக கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அவர் கூறியதிலிருந்து அரைமணி நேரம் கழித்து 'கார் வந்துவிட்டது நீங்கள் செல்லலாம்' என்று கூறினார். வெளியில் சென்று பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.

மிழ்நாடு அரசாங்கத்திற்கு சொந்தமான அரசாங்க சுமோ அது. அதிஷ்டம் எங்களை அரசாங்க விருந்தினர்களாக மகாபலிபுரம் சுற்றுல்லாவிற்கு அழைத்துச் செல்ல தயாராக்கியது. அந்த வாகனத்தின் ஓட்டுனரும் குடும்ப நண்பரைப் போல் எங்களிடம் பழகினார். சுற்றுல்லாத் துறையில் வேலை பார்ப்பதால் பல தெரியாத புது தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டே வந்தார். கிழக்குக் கடற்கரைசாலையில் இருக்கும் சுங்கச் சாவடிகளிலும் சுற்றுல்லா இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான தொகையையும் அவர் செலுத்தவே இல்லை, காரணம் நாங்கள் பயணிப்பது தான் அரசாங்க வாகனமாயிற்றே. மதிய சாப்பாடு நாங்கள் வீட்டிலிருந்தே எடுத்து வந்ததால், சாப்பிடுவதற்காக ஹோட்டல் தமிழ்நாடு உணவகத்தில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். சென்னைக்குத் திரும்பியதும் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வந்து இறக்கிவிட்டு தான் சென்றார். நாங்கள் எதிர்பார்க்காததை விட மிக உற்சாகமான பயணமாக அமைந்தது இந்த மாமல்லபுர இன்பச் சுற்றுல்லா.    
   
பின் குறிப்புக்கள் 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்து ஆரம்பித்து மகாபலிபுரம் வரை சென்று மீண்டும் உங்களை வாலாஜா சாலையிலேயே இறக்கி விடுவார்கள். செலும் வழியில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு கூட்டிச் செல்கிறார்கள்

சிறப்பான பயண ஏற்பாடுகளை செய்வதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.  டூரிசம் மூலம் செல்வதால் நுழைவுக் கட்டணங்களில் சிறப்புச் சலுகையும் உண்டு.  

குளிரூட்டப்பட சிற்றுந்தில் தான் பயணம், அதனால் சென்னை வெயில் உங்களைத் தாக்காது. காஞ்சிபுரம் பாண்டிச்சேரி திருப்தி போன்ற இடங்களுக்கும் சுற்றுல்லா ஏற்பாடுகள் உண்டு. திருப்தியில் சனிகிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் சிறப்பு தரிசனம் செய்ய வசதிகள் உண்டு.      

நேரமிருந்தால் சென்று வாருங்கள் தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும் நன்றாகவே உள்ளது

54 comments:

  1. அட இது கனவா/
    நிஜமா?

    நல்ல தகவல்!

    ReplyDelete
    Replies
    1. கனவே இல்லை நிஜம் தான் நண்பா, தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள்

      Delete
  2. ஆரம்பம் சோதனையாக அமைந்தாலும் இனிய சுற்றுலாவாக கண்டு களித்து வந்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் சொன்னதை வைத்து எனக்கும் ஒருமுறை சென்று பார்க்கும எண்ணம் தோன்றி விட்டது. நான் இதுவரை மகாபலிபுரம் போனதே இல்லை. நல்ல பகிர்வு சீனு. Thanks.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சென்றுவாருங்கள் நிரஞ்சனா, நாம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம். தமிழனின் கலைத் திறமை பாதுகாக்கப்படும் ஓர் இடம். தங்கள் வருகைக்கு இந்த நட்பின் மகிழ்வான நன்றிகள்

      Delete
  3. Replies
    1. ரொம்ப நன்றி முரளி சார். தங்கள் வரவால் மகிழ்ந்தேன்

      Delete
  4. முதலில் கஷ்டம் வந்து பின்னர் பஸ் பயணத்தை விட சொகுசான பயணம் ரொம்ப என்ஜாய் பண்ணி இருப்பிங்க...இது உண்மையில் நடந்தது தானே ஒன்னும் உங்க கற்பனை இல்லையே...சிக்கிரம் திரட்டி மற்றும் subscription box வையுங்க ரொம்ப நேரம் ஆகுது மச்சி ஒரு பத்து நிமிஷம் தான் ஆக போகுது...என்னோட மெயில் அட்ரஸ்க்கு ஒரு மெயில் அனுப்புங்க chinnamalai7@gmail.com

    ReplyDelete
    Replies
    1. சந்தேகமே வேண்டாம் இது நிஜம் தான்.

      நண்பா நானும் இன்று இராண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று இறங்கி விட்டேன். அணைத்து திரட்டிகளையும் வைத்து விட்டுத் தான் மறு வேலை.
      உன் உத்தரவிற்காக காத்திருக்கிறேன்

      Delete
  5. ANDROID எப்படி எல்லாம் வேலை செய்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நல வேலை கைபேசி கை கொடுத்தது. இல்லை அன்று நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்

      Delete
  6. உங்கள் பதிவும் சுவாரஸ்யமாக இருந்தது. சுற்றுலா உங்களை சுற்ற வத்துவிட்டது போலும். இறுதியில் இன்பமாகத்தானே சென்றது.

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றத்தைத் தருமோ என நினைத்த சுற்றுல்லா அது விச்சு சார். தங்கள் வருகைக்கும் சுவாரசியம் என்று பாரடியமைக்கும் மிக்க நன்றி

      Delete
  7. உபயோகமான பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஸாதிகா

      Delete
  8. உன்னோடு வந்த ஓட்டுனர் அண்ணா படத்தையும் போட்டு விடுப்பா....அனுபவி ராஜா அனுபவி.!

    ReplyDelete
  9. அவர் படம் இருக்கிறது. சரி அண்ணா போட்டு விடலாம், அது ஆவடியில் இருக்கும் எனது கணினியில் இருக்கிறது. நான் தற்போது இருப்பது மேடவாக்கம். அங்கு சென்றதும் செய்து விடலாம்

    ReplyDelete
  10. this information is true only.......... i was also a member of the trip........service was really good......good work seenu.....useful information for others.......v enjoyed a lot....the whole trip was fantastic.....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தங்கள வருகையால் மகிழ்ந்தோம்

      Delete
  11. சுவையான அனுபவப் பகிர்வு!பல ஆண்டுகளுக்கு முன் நான் தமிழ்நாடு டூரிசத்தில்,உடுப்பி,பேளுர் ,ஹளபேடு ,கொல்லூர்,சிருங்கேரிமுதலிய ஊர்களுக்குச் சுற்றுலா சென்று வந்தேன்.சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா, உங்கள் வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள்

      Delete
  12. நல்ல அனுபவம். தமிழகச் சுற்றுலாத் துறையின் தளம் ஒழுங்காக வேலை செய்தால் நன்றாக இருக்கும். நானும் சில முறை அந்தத் தளத்தில் பிரச்சனைகளைச் சந்தித்ததுண்டு.....

    அடுத்த முறை சென்னை வந்தால் செல்ல நினைத்திருக்கும் இடம் மஹாபலிபுரம். உபயோகமாக இருக்கும் நீங்கள் கொடுத்த தகவல்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் சார் உங்களுக்கும் இருந்ததா அந்தப் பிரச்னை, நான் மாட்டும் தானோ என்று நினைத்தேன். மகாபலிபுரம் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். தவறாது பாருங்கள்

      தங்கள் வருகையால் மகிழ்ந்தேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  13. துன்பத்தில் தொடங்கினாலும் இன்பத்தில் முடிந்தது மகிழ்ச்சிதானே!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வருகை தந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அய்யா

      Delete
  14. உங்கள் பதிவும் பயண அனுபவமும் சுவாரஸ்யமாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மதுரைத் தமிழன் அவர்களே

      Delete
  15. தொடக்க சோதனை அப்புறம் பனிபோல் மறைந்து இன்பம் கிடைத்ததில் சந்தோஷம். அதே போல நாங்களும் பஸ்ஸை விட்டுத் தனியாகக் காரில் செல்ல எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும்?!!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நானே கூட இன்னொரு முறை முயற்சி செய்யலாமா என்று நினைத்தேன், இணைய முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக பேசிகொண்டார்கள், அப்படி ஒருவேளை வைப்பு கிடத்தல் சொல்லுங்கள் சேர்ந்தே சென்று வருவோம்

      Delete
  16. இணையத் தளத்தில் இதுபோன்ற பிரச்னை வருகிறதென்றால் அதை மூடிவிடி வேண்டும் அவர்கள். சரிசெய்த பின் நடத்துவதுதான் முறை. எப்படியோ... ஆரம்பம் நிறையக் கஷ்டம் நிறைந்ததாக அமைந்தாலும் இனிய பயணம் உங்களுக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. அதை எங்களுடன் அழகாய்ப் பகிர்நதது இன்னும் மகிழ்ச்சி. மகாபலிபுரம் பற்றிய நூல் ஒன்றை வடிவமைத்த மகிழும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. நான் ரசித்த, ரசிக்கும் இடங்களில் மகாபலிபுரமும் ஒன்று. படித்தததில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கணேஷ் சார், நடை வண்டியில் அந்தப் புத்தகத்தை பற்றி நீங்கள் கூறியதைப் படித்து விட்டு தேடி அலைந்தேன் கிடைக்க வில்லை. நான் கண்டிப்பாக படிக்க விரும்பும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. கூடிய விரைவில் வாங்கி படித்து விடுவேன் வாத்தியாரே

      Delete
    2. தேடி அலைய வேண்டாம் சீனு. உங்களுக்காக நான் ஒன்று வாங்கி வைத்து விடுகிறேன். அடுத்தமுறை சந்திப்பு ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. தகவல் தருகிறேன். வாருங்கள். புத்தகம் தருகிறேன்.

      Delete
    3. நிச்சயமாக வாத்தியரே அந்த நாளுக்காகவும் புத்தகத்திற்காகவும் காத்திருக்கிறேன். சீக்கிரம் பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள். கலந்து கொள்கிறோம். வெள்ளி சனி என்றால் தயங்காமல் வந்துவிடுவேன், ஞாயிறு எனக்கு அலுவலகம் உண்டு. நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன். நன்றி வாத்தியரே என் மீது தங்கள் கொண்ட அக்கறைக்கு

      Delete
  17. So far I have read only adverse reports about TN tourism facilities.You have reported very well and fluently.


    I am glad it was a good experience for you. Hope more bloggers will share their experiences about these tour operators, so that we can get the real picture and , not get carried away by their advertisements.

    Thanks for sharing.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி, எனக்குத் தெரிந்த வரை குறைகூறும் படியாக எதுவும் நடக்க வில்லை. என்ன ஒன்று அரசாங்க அலுவலகம் என்பதால் வேலைகள் அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன

      Delete
  18. இறைவன் என்மீது கொண்ட இரக்கத்தின் வெளிப்பாடே என்னை அவன் சோதனையில் ஆழ்த்துவது..பின்னர் எப்படி சொகுசான பயணத்தி ஏற்பாடு செய்து தந்தான் அந்த இறைவன் முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லு நண்பா...:)

    இல்லாவிட்டால் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு வேறயாக நீ செலவு செய்திருக்க வேண்டுமல்லவா,,,,

    ReplyDelete
    Replies
    1. நண்பா சாதனையோ சோதனையோ ஆதி பகவன் அவனை நினைக்காமல் அடுத்த அடியை எடுத்து வைப்பதில்லை. தங்கள் கூற்றால் என் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவிக்கிறேன் நண்பா. வருகைக்கு நன்றி

      Delete
  19. மன்னிக்கவும் என் மீது என்பதை எம் மீது என்று வாசிக்கவும் நண்பா..நமக்கு இப்படித்தான் அடிக்கடி ஸ்பெல்லிங் மிசுடேக்கு வரும் அதெல்லாம் கண்டுக்கப்படாது;;;)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே தொல்லை தான் நண்பா. நானும் திருத்த வேண்டும்

      Delete
  20. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறை நன்றிகள் சார்

      Delete
  21. ரொம்ப நல்ல பதிவு...உங்கள் அனுபவம் படிக்க ரொம்ப சுவாரிசியம்மா இருந்தது..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா, நேரம் இருந்தால் கண்டிப்பாக சென்று வரவும்

      Delete
  22. தமிழ்நாடு டூரிசம் பற்றி அறிய ஒரு வாய்ப்பு கிடைத்தது! அருமையான தகவல் அண்ணா! ஆரம்பம் சோர்வளித்தாலும் பயனம் சுபமாய் அமைந்ததில் சந்தோஷம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி யுவா, நல்ல வேளை சுபமாக அமைந்தது இல்லை எங்கள் கதி அதோ கதி தான்

      Delete
  23. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பா

      Delete
  24. அருமையான தகவல் !நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நிலாமகள் அவர்களே

      Delete
  25. எதிர்பார்க்காததை விட மிக உற்சாகமான பயணமாக அமைந்தது இந்த மாமல்லபுர இன்பச் சுற்றுல்லா.
    சிறப்பான ஏற்பாடு அருமையான தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அம்மா

      Delete
  26. நல்ல அனுபவம்.. நன்றி நண்பா..

    ReplyDelete
  27. ஆரம்பம் கொஞ்சம் சொதப்பினாலும் முடிவு நல்ல இருந்துச்சு.
    But, my comment abt the article is totally opposite to all tat is given above. Since it is a article abt chennai i expected alot differently lik ur previously put up articles. But this seemed to be more lik ur personal story telling.
    because நீங்க பார்த்தத சொல்லாம விட்டது என்னக்கு குறையா பட்டுது. cos on seeing the title நீங்க tourist spots பத்தி சொல்லுவிங்க i thought, but at last TTDC(TanilNadu Tourism Development Corporation) experience பத்தி narrate பண்ணிடிங்க...
    :(

    ReplyDelete
    Replies
    1. சென்னை டூ சென்னை என்ற பதிவை நீ இன்னும் படிக்கவில்லை. அதனால் வந்த குழப்பம் தான் இது. அந்தப் பதிவில் ECR முலோதும் சுற்றிவிட்டதால் இதில் என் பயண அனுபவத்தை மட்டும் கூறியுளேன்

      Delete