Showing posts with label பிரபல பதிவர். Show all posts
Showing posts with label பிரபல பதிவர். Show all posts

8 Oct 2012

சுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை


எச்சரிக்கை : தலைப்புகளை சுட்டுங்கள் பதிவர்கள் தளம் திறக்கும்


மீப காலத்தில் என் மனதிற்குப் பிடித்த கவிதை. என்னிடம் யாரவது கவிதைகளைப் பற்றி பேசினால் இந்தக் கவிதையை சொல்லாமலோ அல்லது ஆரம்பிக்காமலோ என் உரை முடிந்திருக்காது. நான் கவிதைகளை தேடித் தேடி படிப்பவன் அல்ல, ஆனால் விரும்பிப் படிப்பவன், அதிலும் ஒரு கவிதை பிடித்து விட்டால் மீண்டும் மீண்டும் படிப்பேன். நான் கூற விரும்பும் கவிதை விகடனில் வெளிவந்த கவிதை. தலைப்பை முதலில் படிக்காமல் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன், குழந்தையால் மனைவிக்கும் கணவனுக்கும் சண்டை நடப்பது போல இருக்கும். அந்த ஒரு வரியை என் மனது உள்வாங்கிய நேரம் என்னுள் அப்படி ஒரு சந்தோசம், சந்தோசம் என்று சொல்வதை விட இன்னதென்று அடையாளம் காணப்பட முடியாத ஒரு ஆனந்தம்.

து சற்றே பெரிய கவிதை, வார்த்தைகள் நியாபகம் இல்லை, என் நியாபகத்தில் இருந்த வார்த்தைகளைக் கொண்டு நான் கூற நினைத்த கவிதையைப் பற்றி தனி பதிவொன்று எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த கவிதையின் முடிவு இப்படியாகத் தான் என் மனத்தில் பதிந்திருந்தது. "எங்கள் வீட்டு குட்டி தேவதை நடக்க ஆரம்பித்து விட்டாள்". இந்தக் கவிதையை எழுதியவர் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறார் அவரும் ஒரு பதிவர் என்பதை அறிய வந்த பொழுதும் அந்த கவிதையை அவர் தளத்திலேயே வாசித்த பொழுதும் நான் அடைந்த உற்சாகம் அளவிட முடியாதது.   

ந்த பதிவர் வேறு யாரும் அல்ல, பதிவர் சந்திப்பில் சிறப்பாக வர்ணனை செய்த, அதே சந்திப்பில் நான் பேச வேண்டும் என்று நினைத்து பேசாமல் கடந்த ஒரு பதிவர், சுரேகா அவர்கள் தான்ஒரு வலைபூ எனக்கு பிடித்துவிட்டால் அதில் குறைந்த பட்ச ஆராய்ச்சி செய்யாமல் வெளிவருவது கிடையாது, சமீபத்தில் சுரேகா அவர்கள வலைபூவையு ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது கண்ணில் சிக்கியது அந்தக் கவிதை.  எனக்கு மிக மிக பிடித்த கவிதை, நன்றி சுரேகா சார்.      

*****************************

ஆயிரத்தில் ஒருவன் மணி - வருந்துகிறோம் 

முகப்புத்தகத்தில் சாப்பாட்டுக்கடை என்று ஒரு குழுமம் இயங்கி வருகிறது. வெகு சமீபத்தில் மணி அவர்களின் கருத்துகளை அங்கு படித்து வெகுவாக சந்தோசப்பட்டேன். பதிவர் சந்திப்பு குறித்து நடைபெற்ற கூட்டங்களில் அவர் கட்டிய ஆர்வம், சந்திப்பு அன்று அவர் செய்த பணிகள் அனைத்துமே பாராட்டத்தக்கது. சந்திப்பில் சாப்பிடும் பொழுது எனது நண்பன் ஆன்டோ கூறிய வரிகள் " உங்க அண்ணன் கல்யாணத்துக்கும் இவரையே கூப்பிடலாம் டா நல்லா செஞ்சிருகாறு". நெருங்கிய நண்பரை இழந்தது போன்ற உணர்வு. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். 

*****************************
                                                             

இந்தப் பதிவு முழுக்க முழுக்க சமகாலத்து பதிவர்களைப் பற்றிய விளம்பரமாகத் தான் இருக்கும். இதில் மாற்று கருத்துக்கள் இருப்பின் தெரிவியுங்கள் சங்கம் சார்பில் முடிந்தால் மன்னிப்பு கேட்கிறோம். சங்கத்தின் பெயர் காமடி கும்மி என்று அண்ணன் வரலாறு ஒரு flow வில் சொல்லிச் செல்ல, டெர்ரர் கும்மி அண்னண்ங்கள் வெறி கொண்டு வரலாறைத் தேடி வருவதாக உளவுத் துறை தகவல் சொல்லியது. அதற்குப் பயந்து நடுங்கிய அண்ணன் வரலாறு என்ன செய்வதென்று தெரியாமல் கீழ்க்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தற்போதைக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். 


தற்போது நான் பயின்றுவரும் உயர்கல்வி தொடர்பாக டிசம்பரில் எனக்கு தேர்வுநடக்கவிருப்பதால்… தேர்வுக்காக என்னை தயார்செய்துகொள்ளும் பொருட்டு தற்காலிகமாக சிறிதுகாலம் பதிவுலகில் இருந்து விலகியிருக்க முடிவுசெய்துள்ளேன்..!


நான் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுபவன் அல்ல, மாதத்திற்கு நான்கு பதிவுகள் எழுதினாலே ஆச்சிரியம்தான்...கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தமாக 36 பதிவுகள்தான் எழுதியிருக்கிறேன்.., இருப்பினும் Alexa (
current rank as worldwide; 395698); Indiblogger (current rank as India Level; 71) Tamilmanam (current rank, 52) போன்ற மதிப்புமிக்க தளங்களில்..., வலைத்தலங்களுக்கான தரவரிசைபட்டியலில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்! இதற்க்கு காரணம்... சர்வநிச்சயமாய் என் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள்தான் என்றால் மிகையில்லை! உங்கள் ஒவ்வொருவரின் வருகையும், கருத்துரையும், வாக்குகளும்தான் என்னை வெறும் 36 பதிவுகளில் இந்த அளவிற்கு உயரத்தை அடையச்செய்தது! 



என் எழுத்துக்களை வாசித்து, கருத்துரை வழங்கி, வாக்குகள் அளித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளை இவ்வேளையில் உரித்தாக்குகிறேன்! தேர்வை சிறப்பாய் எழுதிவிட்டு மீண்டும் உங்களை ஜனவரியில் சந்திக்கிறேன் நண்பர்களே...அதுவரை நீங்கள், எனக்காய் பொறுமையாய் காத்திருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்..!



மிக்க அன்புடன், 

இவ்வாறாக இருப்பதால், நிலைமை சீரானதும் மன்னிப்பு கேட்பதா வேண்டாமா என்பது பற்றி சங்கம் பிற்பாடு முடிவு செய்யும். அதையும் மீறி சங்கம் எங்களுக்கு மன்னிப்பு குடுத்தே தீர வேண்டும் என்று ஆசைபட்டால் நண்பன் ஹாரியின் தளம் வழியாக கேளுங்கள், பின்பு அதைப் பற்றி யோசிப்போம். இப்போது தான் மற்றுமொரு முக்கியமான விடயம் நியாபகதிற்கு வந்தது, 



தூங்கும் பொழுது கூட அடுத்த பதிவு பற்றி யோசிப்பவரா அப்படி என்றால் நீங்கள் தான் பிரபல பதிவர். ஒரு வேளை தூங்கும் பொழுது அடுத்து என்ன தளம் திறக்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால்  நீங்கள் தான் நம்பர் ஒன் பதிவர். நமது ஹாரி அப்படியாகத் திறந்த மூன்றாவது தளம் தான் கேளுங்க, என்ன கேட்கனும்னு கேக்றீங்களா எதுவேணும்னாலும் கேளுங்க. உங்க பேரு என்னனு வேணும்னாலும் கேளுங்க, உங்க கிட்ட கேட்டு அடுத்த பதிவுல உங்க பேர உங்களுக்கே சொல்லுவாரு. சங்கத்தின் நிகழ்காலத் தலைவன், எப்போது யாரால் பதவி பறிபோகுமோ என்ற பயத்தில் தூங்காமல் அடுத்த தளம் அடுத்த தளம் என்று இரவு பகலாக இயங்கிக் கொண்டிருப்பவர்.    


சமீப காலத்தில் நான் மிகவும் விரும்பிப் படிப்பது பிரபல பதிவர் அண்ணன் சதீஷ் செல்லதுரை அவர்களின் கவிதைகள். இவர் எழுதிய கவிதைக்கு நான் சென்று கமென்ட் இட, அது எவ்வளவு பெரிய பிழை என்பதை நினைத்து  இன்றளவும் வருந்திக் கொண்டுள்ளேன். எங்கள் சங்கத்து அடிதாங்கி இடிதாங்கி எல்லாம் இவர் தான். எதிரி பதிவர்களின் சோதனைக்கு ஆளாவதில் இவருக்கு அலாதி ஆர்வம். எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காது, மீண்டும் மீண்டும் சென்று மல்லுக்கு நிற்பார்.  சிங்கம் டா என்று பாக் கிரௌண்ட் மியூசிக் எல்லாம் போடச் சொல்லுவார். எங்கள் சங்கத்து தீவிரவாதி. பீ கேர் புல்.    



சில பதிவர்களை சந்தித்து விட்டேன், சிலரின் முகங்களைப் பார்த்து விட்டேன், தற்போது நான் சந்திக்க அல்லது முகம் பார்க்க விரும்பும் இரு பதிவர்கள் ஸ்ரீராம் சார் மற்றும் ரிஷபன். எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் தற்போது எழுதி முடித்து வெற்றி பெற்றிருக்கும் கதை தான் இப்படியும் ஒரு வெற்றிபெற்ற காதல் கதை. சமீப காலத்தில் படித்த சலிப்பு தட்டாத அதே நேரத்தில் வித்தியாசமான கதைக் களம் கொண்ட காதல் கதை, ஹீரோ சினிமாத் துறையைச் சேர்ந்தவன் ஆனால் நடிகன என்பதை சொல்லாமல் விட்டதால் லாஜிக் மிஸ் ஆகவில்லை. அது என்னவென்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சமீப காலமாக கிரிகெட் பற்றி முகப் புத்தகத்தில் இவர் செய்து வரும் அக்கப்போரு கொஞ்ச நஞ்சம் அல்ல. மனிதர் நின்னு ஆடுறாரு. ரவுசு தாங்கல.



லைப்பூவில் என்னை உரிமையோடு மாணவனாக ஏற்றுக் கொண்டவர், இல்லை என்னால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டவர், நான் அவரின் ஏலகலைவன். வாத்தியார் தற்போது எழுதி வரும் முழுநீள நகைச்சுவைத் தொடர் சிரித்திரபுரம். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ஹாஸ்யம் வைத்து அசத்துகிறார். அப்படி எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுப்பதாகக் கூறினார், பாவம் இளமை திரும்புவதால் மறந்து விட்டார் போலும்( ஹி ஹி ஹி). கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டுமா நிச்சயம் இங்கே கிடைக்கும். 


சங்க ஆலோசகர், புதிய பதிவர்களையும் புதிய சங்கங்களையும் ஊக்குவிப்பதில் வல்லவர் என்பதால் எங்கள் சங்கத்து ஆள எவனும் அடிச்சா அடுத்தமுறை  அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்குவார். எதிரி பதிவர்களைக் கலவரப் படுத்துவதில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. 


எங்கள் சங்கத்திற்கு என்று இருக்கும் ஒரே ஒரு அடியாள் இவர் தான். ஆண் தமண்ணா என்று பிரபல பதிவர் மெட்ராஸ் பவனால் புகழுரை சூடப்பட்டவர் வெள்ளைச் சிங்கம். வரலாறு மனப்பாடம் செய்து கொல்லுவார் என்றால் இவர் கடிதம் எழுதியே கொல்லுவார். ஆனாலும் இவர் கடிதங்கள் வரலாற்றில் இடம் பெறக் கூடியவை. பின்னொரு நாள் சங்கம் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடும் என்பதை மிரட்டலுடன் தெரிவித்துக் கொல்கிறேன்.    



சீனு  : அது எப்படி ராசா ஒரு வரிய மடக்கி மூணு வரியாக்கி கவிதைங்கற பேருல தைரியமா வெளியிடுறீங்க.

ராசா : தலைவரே உங்கள மாதிரி பக்கம் பக்கமா எழுதி அறுத்தா ஒரு பய படிக்கச் மாட்டான், ஒரு வரிய மடக்கனும், பொழுது போகாட்டா எவனையாவது நாலாவது வரியில கோர்த்து விடனும்

சீனு  : அண்ணே சங்கத்துத் தலைவரா இருக்குற முழுத் தகுதியும் உங்களுக்கு தான்னே இருக்கு, எப்படியாவது ஹாரிய போடுறோம், உங்கள தலைவராக்குறோம்.

ராசா : தலைவரே போரூர் பக்கம் ஒரு சின்ன பைசல் இற்கு அத முடிச்சிட்டு கொழும்பு பக்கம் போவோமா?

( பிரபல பதிவர் ஹாரி தலைமறைவு )        


சங்கத்தில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளை சரி செய்ய வல்லவர், எதிரி எங்கள் வலைப்பூவை ஹாக் செய்தால் உடனடித் தீர்வு அளிப்பவர். அப்படி வலைப்பூவில் திடிரென்று ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்கு அவர் கொடுத்த அற்புதமான தீர்வு படியுங்கள். எங்காளு எங்க கூட இருக்குற வரைக்கும் ஒரு பய எங்கள தொட முடியாது, என்று சங்கத்திற்குள் ஹாரிபாட்டர் சொல்லி வருவதாக திடீர் பகீர் தகவல் கிளம்பியுள்ளது. அதை உண்மையாக்கும் விதமாக பிளாக்கர் நண்பன் நடந்து வருவது சங்கத்திற்கு தெம்பூட்டும் விதமாக இருப்பதாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தலைமறைவான வரலாறு, அண்ணாச்சி கடை அக்கவுன்ட் புத்தகத்தில் எழுதி, நன்றாக வாங்கிக் கட்டியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.     


த்தனை நாட்களாக கோலிவூட் சட்டியினுள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த என்னை ஹாலிவூட வரை கொண்டு சென்றவர் ராஜ், பின்பு அவர் கம்பி நீட்ட, என் அறிவுக் கண்ணை திறந்து வருபவர் நமது ஹாலிவூட் ரசிகன். இவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் சினிமாவைப் பற்றி மட்டும் இல்லாமல் சினிமா கலந்த விமர்சனமாக இருப்பது அருமை. தற்போது நான் அடிக்கடி செல்லும் தளம்.   



திவுலகில் எங்கள் மூத்தவர் சங்கத்தை வழிநடத்த மற்றும் சங்கம் ஒன்று பட எருமை மாடாக உழைத்தவர். எங்களை ஒன்று சேர்த்தவர். இன்று அன்னாரின் வலைபூவிற்கு ஒன்றாவது பிறந்த நாள். தற்போது அலுவல் காரணமாக சற்று ஒதுங்கி  இருந்தாலும் நீகுழாய் ( யு ட்யுப்) மூலம்புதிய பரிணாமம் எடுத்து உள்ளார். எங்கள் அண்ணா திறந்த புதிய தொலைக்காட்சியை (சேனல்) இந்த சுட்டியின் மூலம் சென்று சேரலாம். சங்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் லிப்ட்டாக உழைப்பவர் என்பதை இங்கு பெருமையுடன் கூறிக் கொல்கிறேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



தொழிற்களம் தளத்தில் முகநூல் பற்றிய முழு வரலாறு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது, சீரிய முறையில் சிறந்த ஒரு தொடராக எழுத வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்க்கு உங்கள் ஆதரவும் உற்சாகமும் வேண்டும். கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த மாத இறுதியில் முதல் கட்டுரை வெளிவரும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளிவரும். முகல் தொடர் கட்டுரைக்கு நல்ல தலைப்பு ஒன்று கொடுத்தால் சந்தோசப்படுவேன்.