தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெற்ற முதல் இரண்டு பதிவர் சந்திப்புகள் சென்னையில் இனிதே நடந்து முடிய மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பு இம்முறை மதுரையில்.
பதிவர் என்ற அடையாளம் உடன் வந்து ஒட்டிக் கொண்டதன் பின் இருந்தே பல புதிய அரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருக்கிறது. ஒருவேளை பதிவராக மாறாமல் இருந்திருந்தால், இந்த புதிய உலகினுள் நுழையாமல் இருந்திருந்தால் இவர்களை எல்லாம் சந்தித்திருப்பேனா, இவர்கள் மூலம் வேறுபல தளங்கள் அறிமுகமாகியிருக்குமா என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.
அட்டகாசமான மேடை அமைப்பு |
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை எந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமானவர்களாக உணர்கிறேனோ அதைப்போலவே நான் விரும்பும் பதிவர்களையும், நேசிக்கும் பதிவர்களையும் உணர்கிறேன். ஒரே வித்தியாசம் எழுத்தாளர்களின் படைப்புகள் பிரபலமான பத்திரிக்கையின் மூலம் அச்சில் ஏறி நம்முள் நுழைகிறது. பதிவர்களோ தங்களுக்கென தாங்களே அமைத்துக் கொண்ட தளத்தில் தங்கள் ஓட்டத்தைத் தொடர்வதன் மூலம் நம்மையும் அவர்களோடு இணைந்து ஓடச்செய்கிறார்கள்.
கோடம்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற அந்த முதல் பதிவர் சந்திப்பு இன்றைய தினம் வரையிலும் அதன் ஈரம் குறையாமல் அப்படியே நினைவில் இருக்கிறது. பல வருடங்களுக்குப் பின் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் களமாக மாற்றியிருந்தது அந்த சந்திப்பு. நான் அப்போதுதான் பதிவுலகினுள் நுழைந்திருந்த புதிது. எவருக்கும் என்னைத் தெரியாது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் என்னைவிட வயதில் மூத்தவர்கள் மற்றும் பல வருடங்களாக தொடர்ந்து எழுதி வரும் மூத்த பதிவர்கள் என்பதால் நானாக நெருங்கிச் சென்று அறிமுகம் செய்துகொள்ள சிறு தயக்கம். ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் களமாக மாற்றிக்கொண்டேன் அந்த பதிவர் சந்திப்பை. இருந்தும் ஒருசிலரின் அறிமுகமும் கிடைக்காமல் இல்லை.
தமிழ்வாசி உடன் ரத்னவேல் அய்யா |
இரண்டாவது பதிவர் சந்திப்பு சற்றே ஸ்பெசலானது மற்றும் நெகிழ்ச்சியானது. பதிவுலகில் கணிசமான நண்பர்கள் கிடைத்திருந்தார்கள், பிளாக்கர் நண்பனும் தீவிரவாதியும் கூட தொலைதூரத்தில் இருந்து வந்திருந்தார்கள். ஆவி பதிவர் சந்திப்பிற்கென தானே மெட்டமைத்து எழுதிய பாடலைப் பாடினார், கூடவே நாங்களும் படித்தோம். பதிவர் சந்திப்பிற்கான வேலைகளில் அரசனும் ரூபக்கும் ஓடி ஓடி ஓய்ந்திருந்தனர். அன்றைய தின நிகழ்வு முடிந்த அன்றைய மாலையில் நண்பர்களை விட்டுப் பிரியும் போது ஏதோ நெடுநாள் பழகிய நண்பர்கள் தூர தேசம் போவது போல் உணர்ந்தோம். வடபழனியின் விஜயா-மாலின் வெளிப்புறம் நின்று கொண்டு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. விட்டால் ராம்குமாரும் தீவிரவாதியும் அங்கேயே தங்கியிருப்பார்கள் போல, அவரவர் ஊருக்குச் செல்வதற்கானப் பேருந்தைப் பிடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் கலைந்து சென்றோம்.
இம்முறை மூன்றாவது பதிவர் சந்திப்பு மதுரையில். அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் நானும் வாத்தியாரும் ஸ்பையும் மதுரையை அடைந்திருந்தோம். இதமான பனி எங்களை நனைத்துக் கொண்டிருக்க தூங்காநகரம் அதிகாலையின் உற்சாகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரைக்கு உய்வளிப்பதன் நிமித்தம் முந்தைய தினமே மதுரைக்கு திக் விஜயம் புரிந்திருந்தார் ஆவி. கூடவே நாய்நக்சும் இருக்கிறார் என்பது தெரிந்த போதுதான் சற்றே திக்திக் என்று இருந்தது.
குடந்தையூர் சரவணன், கற்போம் பிரபு கிருஷ்ணா, கடற்கரை விஜயன் உடன் வானவல்லி சரித்திர நாவல் புகழ் வளரும் இளம் எழுத்தாளர் இரவின் புன்னகை வெற்றிவேலும் முன்னிரவே வந்து சேர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் மூங்கில்காற்று முரளிதரனும் அரசனும் ரூபக்கும் எங்களோடு இணைந்துகொள்ள அந்த அதிகாலையில் அங்கேயே ஒரு மினிபதிவர் சந்திப்பு அரங்கேறியது. திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு பதிவர் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்நேரத்தில் திடீர் விஜயம் செய்தார் டிடி. ஒவ்வொருவராக பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 'எலேய் சீக்கிரம் கிளம்புங்களே' என்று வாத்தியார் கையில் குச்சியை எடுத்தபோதுதான் மணி எட்டை நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது, எட்டரைக்கெல்லாம் அரங்கில் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
ஒருவழியாக குளித்துமுடித்து கிளம்பி எதிரில் இருக்கும் கடைக்குள் நுழைந்து கண்டதையும் ஆர்டர் செய்துவிட்டுப் பார்த்தால் பில் தொகை ரூபாய் நூற்றியிருபது என்று இருந்தது,. இதுவே சென்னையாக இருந்திருந்தால் நாங்கள் உண்ட உணவுக்கு ரூபாய் ஐநூறு காலியாயிருக்கும். வாழ்க மதுரை. ஒருவழியாக காலை உணவை முடித்து அரங்கினுள் நுழையும் போது மணி சரியாக ஒன்பது. காலை சூரியன் உற்சாகமாக தன் வேலையைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தான். ஒரு பெருமழைக்குப் பின்னான வெப்பம் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பதிவர்கள் ஒவ்வொருவராக அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
சீனா அய்யா தம் துணைவியாருடன் வந்திருந்தார். தமிழ்வாசி பிரகாஷ் - இந்தப் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அரங்கேற அதிகமான உடல் உழைப்பைக் கொடுத்தவர், அரங்கினுள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். ந்யுசிலாந்தில் இருந்து துளசி கோபால் வந்திருந்தார். சற்றும் எதிர்பாராத ஒருநபர் GMBwrites பாலசுப்பிரமணியன் அய்யா வந்திருந்ததுதான். பெங்களூரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து மதுரை பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தார். முதுமை அவருக்கு ஒருபொருட்டே இல்லை என்பது போல் உற்சாகமாக சுழன்று கொண்டிருந்தார். மதுரையின் மூத்த பதிவரான தருமி ஐயா அவர்கள் தன் நீண்ட கேமிராக் கண் மூலமாக வந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருக்க ஜோக்காளி பகவான்ஜீ, கில்லர்ஜீ ஆகியோரை இன்றுதான் முதன்முதலில் சந்திக்கிறேன், கில்லர்ஜீ தன் மீசைக்கு உரம் போட்டு வளர்க்கிறார் போல வீரப்பன் தோற்றுவிடுவான். பதிவர் சந்திப்பின் தொகுப்பாளரான வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களை மண்டப வாயிலிலேயே சந்தித்திருந்தோம். மற்றுமோர் இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இலக்கிய எழுத்தாளர் நா.மணிவண்ணன் அவர்கள். நெடுநாட்களுக்குப் பின் அவரை சந்திக்கறேன். மகிழ்ச்சியாய் இருந்தது. சமநேரத்தில் கடல் பயணங்கள் சுரேஷும் அரங்கினுள் நுழைந்திருந்தார்.
டிடி உடன் மகேந்திரன் |
சரியாக ஒன்பதரை மணிக்கு விழா தொடங்கியது. சீனா அய்யா, அவர் துணைவியார், மதுரை சரவணன் ஆகியோர் உரையுடன் விழா தனது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தது. தோழர் பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித், வந்தேமாதரம் சசிகுமார் தமிழ்வாசி பிரகாஷ் திண்டுக்கல் தனபாலன் மற்றும் சிலருக்கு தொழில்நுட்ப பதிவர்களுக்கான சிறப்பு விருது கொடுத்து கவுரவித்தார்கள். பதிவர்களுக்கு தங்கள் வலைப்பூவை மேம்படுத்த உதவியவர்கள் என்ற அடிப்படையில் இந்த விருதினை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே மற்றோர் நிகழ்வும் அரங்கேறியது அது என் குருநாயர் சிவகாசிக்காரன் ராம்குமார் தனது திக் விஜயத்தை அரங்கினுள் நிகழ்த்தி இருந்தார், அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அய்யா ரத்தினவேல் அவர்களும் அவர் துணைவியார் சகிதம் உடன் வந்திருந்தார்.
சிறப்புப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்த தா.கோ.சுப்பிரமணியன் அவர்கள் வரமுடியாத காரணத்தால் பதிவர் மற்றும் பேராசிரியர் மதுரை சரவணன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பெற்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெருங்கூட்டம் அரங்கினுள் நுழைய யார் என்று பார்த்தால் புதுக்கோட்டையில் இருந்து அய்யா முத்துநிலவன் அவர்களின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பதிவர்கள் அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் கடந்த ஒருவருடமாகத்தான் வலையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றபோதிலும் அனைவருமே சில புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் இவர்களில் பலர் கவிஞர்கள் என்பது கூடுதல் தகவல்.
சிறப்புரைகளைத் தொடர்ந்து பதிவர்களின் அறிமுகம் அரங்கேறியது. இது நமக்கான களம் அல்லவா, களமாடத் தொடங்கினோம். நமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என அனைவரையும் கைத்தட்டி உற்சாகப்படுத்த அதுவரை அமைதியாக இருந்த அரங்கம் உற்சாகமானது.
இந்த அரசன் ஆவி ஸ்கூல்பையன் போன்ற நமக்கு வேண்டாத பதிவர்கள் மேடையேறிய போது கத்தி கூச்சல் போட்டு அவர்கள் பேசுவதை கேட்காமல் செய்ததில் ஒருவித மனதிருப்தி. போன பதிவர் சந்திப்பின் போது இத்தகைய நிகழ்விற்கு தீவிரவாதி நல்ல கம்பெனி கொடுத்தார். இப்போது ஆர்மி அவரைப் பிடித்துவிட்டதால் டில்லியில் சிக்கிக்கொண்டார். அவர் இருந்திருந்தால் விசில் அனல் பறந்திருக்கும். இருந்தாலும் அரசனும் ஆவியும் உருப்படியான கம்பெனி கொடுத்தார்கள். இப்படியாக ஒவ்வொருவர் மேடையேறும் போதும் கலாய்த்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி 'யார்ரா இவிங்க சும்மாவே இருக்க மாட்டன்றான்களே' என்றபடியே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கொஞ்ச நேரத்தில் பொறுமை இழந்தவர் 'ஏம்பா இப்படி கொடுத்த காசுக்கு மேல கூவுறீங்க' என்று அவர் கேட்க 'சார் இன்னும் மேடை ஏறல தான' என்று அவர் பெயரைக் குறித்துக் கொண்டோம். இந்தப் பதிவர் சந்திப்பின் புதிய நட்பு அவர் மூலம் அடிபோடப்பட்டது.
மேடையில் என்னை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பு கிடைத்த போது காமடி கும்மிக்கும் வாசகர் கூடத்திற்கும் ஒரு இலவச விளம்பர சேவையை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மேடையில் பேசி முடித்து கீழே இறங்கும் போது என்னை மறித்து ஒருவர் கை குலுக்கி நான் தான் அட்வகேட் ஜெயராஜ் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள எனக்கோ ஆச்சரியம் தாளவில்லை. என்னுடைய அத்தனைப் பதிவுகளையும் படித்து தொடர்ந்து ஊக்கம் அளித்துவரக் கூடியவர் அட்வகேட் ஜெயராஜ் அவரே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக்க நன்றி சார்.
தமிழ்வாசியுன் அட்வகேட் ஜெயராஜ் |
ஆவி தான் நடத்தபபோகும் 'வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை' போட்டி குறித்து மேடையில் அறிவித்தார். பதிவர்களின் அறிமுக சம்பவத்தின் போது அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்க கடல் பயணங்கள் சுரேஷ் மட்டும் கர்ம சிரத்தையாக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த பதிவர் சந்திப்பிற்குள் அவரது புத்தகத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். விரைவில் எதிர்பார்க்கலாம். மேலும் கேபிள் சங்கர் தொலைபேசி மூலம் உரையாடினார். தொட்டால் தொடரும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் வர இயலவில்லை என்றும் கூறினார்.
அதைத்தொடர்ந்து மகிழ்நிறை வலைப்பூவில் எழுதிவரும் தோழி மைதிலி கஸ்தூரி ரங்கன் மேடையேறினார். என்ன பேசப்போகிறார் என்பதை கவனித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த ஆயுதத்தைத் தூக்கி வீசினார். அவருடைய கணவர் பெயர் கஸ்தூரி ரங்கனாம், அவரும் பதிவராம், அவர் வேறு யாரும் இல்லை, இவ்வளவு நேரம் நாங்கள் யாரை ஓட்டிக் கொண்டிருந்தோமோ அவர் தான் அந்த கஸ்தூரி ரங்கனாம். இனிமே வாலாட்டுவோம். ஆங்கிலப் பதிவராக இருந்து தமிழ்ப் பதிவராக மாறியவர் மிஸ்டர் கஸ்தூரி ரங்கன் என்பதை அறிந்த போது மகிழ்வாய் இருந்தது.
இந்திரா சௌந்தர்ராஜன், வாத்தியார், தமிழ்வாசி |
மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, லேசாக தலைவலிப்பது போன்ற உணர்வு. வெக்கையின் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது ஜில் ஜில் ஜிகிர்ந்தண்டா, மதுரை பேமஸ் ஜிகிர்தண்டா இல்லை என்றாலும் அப்போதைய வெக்கைக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது. அனைத்து பதிவர்களும் தங்கள் அறிமுகத்தை நிறைவு செய்ய, சௌராஷ்டிரா ஸ்பெசல் சாப்பாடு தயாராக இருந்தது. சைவ சாப்பாடுதான் என்ற போதிலும் திருப்தியான சாப்பாடு. என்னவொன்று பக்கத்து மண்டப பாய் வீட்டு கல்யாணத்தில் சுடச்சுட தயாராகிக் கொண்டிருந்த சிக்கன் வறுவல் சுண்டி இழுத்த போதிலும் சுவர் ஏறிக் குதிக்காமல் கட்டுண்டு கிடந்தோம் என்பது இந்தப் பதிவுக்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் அதுவரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குடந்தை ஆர்வி சரவணன் அவர்கள் தயாரித்து இயக்கி இருக்கும் 'சில நொடி சினேகம்' குறும்படம் திரையிடப்பட்டது. ஆவியும் அரசனும் திரையில் தோன்ற அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பதிவர் இயக்க பதிவர்கள் நடித்து வெளியான படம் என்பதால் பதிவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறும்பட சுட்டி. இதைத் தொடர்ந்து இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். மதிய உணவிற்குப் பின்னான உரை என்பதால் அனைவரின் கண்களிலும் தூக்கம் சொக்க ஆரம்பித்தது என்றபோதிலும் வசீகரிக்கும் கணீர் குரல் இந்திரா சௌந்தர்ராஜனுடையது. இவரது உரையைத் தொடர்ந்து கரந்தை ஜெயக்குமார், தேன்மதுரத் தமிழ்கிரேஸ், வேலுநாச்சியார் கீதா, சட்டப்பார்வை ஜெயராஜ் ஆகியோரின் புத்தக வெளியீடு இனிதே நடந்து முடிக்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
அடுத்த பதிவர் சந்திப்பை புதுகோட்டையில் நடத்துவதாக அய்யா முத்துநிலவன் அவர்கள் உறுதி கூறியுள்ளார்கள். மேலும் புதுகேகோட்டை நம் குருநாயரின் கோட்டை என்பதால் அடுத்த பதிவர் சந்திப்பை எதிர்நோக்கி ஆவலுடன் உள்ளேன்.
என் மேல என்ன கோவம்னு தெரியல, என்னைய கூப்டல ;-) |
வெறும் இணையம் மூலம் உருவான நட்பு தான் என்றபோதிலும், இத்தனை பதிவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பயணித்து வந்து கலந்து கொண்டது மகிழ்வான விஷயம். பரந்து விரிந்த இந்தப் பதிவுலகில் நம்மால் அறிந்துகொள்ள முடிவது மிகச் சில பதிவர்களைத்தான். அவர்களில் சிலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்தப் பதிவர் சந்திப்பு என்பது எப்போதுமே தவறக்கூடாத நிகழ்வு. இதனை வெற்றிகரமாக இனிமையான ஒரு பொழுதாக மாற்றியமைத்த அத்தனைப் பதிவர் நண்பர்களுக்கும் என் நன்றி. மேலும் பல பதிவர்கள் வர நினைத்தும் கடைசி தருணத்தில் வர இயலாமல் போனதற்குக் காரணம் குடும்ப சூழல் மற்றும் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே அவர்களும் அடுத்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள், கோரிக்கை, அவா.
மேலும் ஒரு நன்றி :
இந்த படத்திற்கும் நன்றிக்கும் துளியும் சம்மந்தம் இல்லை - அரசன்,ஆவி, ரூபக் (அ) சேம்புலியன் |
கடந்த மூன்று வருடமாக பதிவுகள் எழுதிக் கொண்டுள்ளேன் என்ற போதிலும் இப்போதுதான் இரண்டாவது சதத்தையே பூர்த்தி செய்கிறேன். ஆம் இது எனது வெற்றிகரமான இருநூறாவது பதிவு. என்னை உற்சாகமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...
Tweet |
அட்ரா... அட்ரா... அட்ரா... டபுள் செஞ்சுரிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்ள் தம்பி... அசத்து...
ReplyDeleteநன்றி வாத்தியாரே...
Deleteஉன் குருநாயர் வந்ததுலருந்து கிளம்பற வரைக்கும் சென்டர் அட்ராக்ஷன் அவர்தான். அவரோட ஊர்ல அடுத்த விழாங்கறதால என்னென்ன ஸ்பெஷல் ஐட்டம் அவர் ஏற்பாடு பண்ணுவாருன்னு இப்பவே பறக்க ஆரம்பிச்சுருச்சு மனசு. இந்த விழாவை அழகா (அதிசயமா சுருக்கமா) தொகுத்துக் கொடுத்திருக்க. விழாவுக்கு வராதவங்களுக்கு சிறப்பான ஒரு முழுத் தொகுப்பு. நன்று.
ReplyDeleteஹா ஹா ஹா இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்று ஆசை தான், இருந்தாலும் இதுவே மிக நீளமாகிவிட்டது போன்ற உணர்வு...
Deleteமூன்று பதிவர் சந்திப்பிலும் கலந்து கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டது அருமை ,நான் இரண்டாவது சந்திப்பில் இருந்துதான் பதிவரானேன்
ReplyDeleteமுதல் நாளே நீங்கள் வந்திருந்தால் மட்டன் பிரியாணியுடன் ,சிக்கன் குருமாவும் மூக்கு முட்ட சாப்பிட்டு இருக்கலாம் .சந்திப்பு நடந்த மகால்,நாயகி மந்திர் என்பதால் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை !
தங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி !
த ம 1
ஆமா பகவான்ஜி அதை மிஸ் பண்ணிட்டோம், சூப்பரா இருந்ததுன்னு சொன்னங்க...
Delete//சந்திப்பு நடந்த மகால்,நாயகி மந்திர் என்பதால் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை// அதை நாங்களே புரிந்து கொண்டோம்.. :-)
பதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள் . உங்க போட்டோவை காணோமே சீனு
ReplyDeleteமணிமாறன் சார் நீங்கள் தான் இந்தியா பக்கம் வந்தால் கூட தலையைக் காண்பிக்க மாட்டேன்கிறீர்கள்.. ;-)
Delete//உங்க போட்டோவை காணோமே சீனு// அதுக்கு தான் பேஸ்புக் இருக்கே சார், இங்க நோ போட்டோஸ் ;-)
மிக்க மகிழ்ச்சி சீனு! படிக்கும்போது கடந்த வருட பதிவர் சந்திப்பு நினைவுகள் வந்து போகுது. இந்த தடவை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். எனக்கும் விருது கொடுத்ததற்கு விழாக் குழுவினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! எனக்காக விருதை வாங்கிய அரசன் அண்ணனுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஎனக்கும் நண்பா... அந்த சந்திப்பு மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு, அதே போல் ஒரு சந்திப்பு இன்னொருமுறை நிகழ வேண்டும் நாமெல்லாரும் கூடி கும்மியடிக்க வேண்டும் :-)
Delete//எனக்காக விருதை வாங்கிய அரசன் அண்ணனுக்கும் மிக்க நன்றி!// அரசன் அண்ணே உங்களுக்கு தான்
பதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடந்ததில் மகிழ்ச்சி. முதல், இரண்டு, மூன்று என்று சென்னையிலும் மதுரையிலும் நடந்ததை மட்டும் அனைத்து பதிவர்களும் எழுதுகிறார்கள். அதற்கு முன்பாக மூன்று ஆண்டுகள் ஈரோடு நகரில் வெற்றி கரமாக நடந்த பதிவர் சந்திப்புகளைப் பற்றி யாரும் எதுவும் எழுதாத தடித்தனத்தை எண்ணி வியக்கிறேன்.
ReplyDeleteஅன்புள்ள அமர பாரதி அவர்களுக்கு வணக்கம்,
Deleteஇங்கே முதல் இரண்டு மூன்று என்று குறிப்பிடுவது தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்ற பெயரில் நடைபெற்ற பதிவர் சந்திப்புகளை மட்டும் தான். மேலும் ஒரு விஷயம் எனது பதிவிலேயே //பல வருடங்களுக்குப் பின் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் களமாக மாற்றியிருந்தது அந்த சந்திப்பு.// என்று ஒரு வரி குறிபபிட்டுள்ளேன், அது எனக்கு பதிவுலகம் பரிட்சியமாக ஆவதற்கு முன்பு நிகழ்ந்த அத்தனை சந்திப்புகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதே. மேலும் ஈரோடு பதிவர் சந்திப்பு நிகழ்ந்த போது எனக்கு பதிவுலகம் என்ற ஒன்றே பரிட்சியமாகி இருக்கவில்லை.
OK. Carry on. I know that you are kind of new to the Tamil blogger works but others also write like that. Thank you for your reply. All the best.
Deleteதடித்தனம் என்று குறிப்பிட்டுள்ள தங்களின் ‘நாகரீகமான’ சொல்லாடலை வியக்கின்றேன். அந்த சந்திப்புகள் நடந்து முடிந்ததும் சம்பந்தப்பட்ட நீங்கள் எல்லாம் எழுதாமல் விட்டுட்டீங்க போல அமரபாரதி... பாவம்...
Deleteநன்றி வாத்தியாரே...!
Deleteஎழுதாமலேயே விட்ட உங்கள் "நாகரீகத்தை" எண்ணி எண்ணி வியக்கிறேன். தடித்தனத்தை அப்படித்தானே குறிப்பிட வேண்டும் அய்யா? நான் எதையும் என்றும் எழுதுவதில்லை. மேலும் நானும் சம்பந்தப் பட்டவந்தான். எனக்காக பாவப்படும் உங்கள் பெருந்தன்மையை எண்ணியும் வியக்கிறேன்.
Deleteமேற்கண்ட பதில் எழுதாமல் விட்ட அனைவருக்காகவும் தான். சீனுவுக்கான பதில் அல்ல.
Deleteஈரோடு சந்திப்பை புறக்கணித்த அண்ணாச்சிகளா!
Deleteஅமர பாரதி ரொம்பக் காலமா பதிவுலகில் இருக்காருங்க. அவர் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்யுது. காமராஜர்னா யாருனு கேக்கிறமாதிரி இருக்கு "இந்த ஆத்தாகாலத்தில்" இருக்கும் "எம் எல் ஏ" சீனு, பாலகணேஷ் போன்றவர்கள் . :)))!
நாளைக்கு மதுரை சந்திப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, ராமேஸ்வரம் பதிவர் சந்திப்பைப் பத்தி ஆஹா ஓஹோனு பேசும்போது உங்களுக்கு அவருடைய ஆதங்கம் புரியும்.
யாரோ சீனுவாம், யாரோ பால கணேசாம்! அவங்கதான் மதுரையில் தமிழ் வளர்த்தாங்களாம். பெரிய மேதைகளாம்..அவங்களே சொல்லிக்கிட்டு திரிகிறாங்கனு னு சொல்லுவ்வாங்க "நாளைய பதிவுலக சிறுவர்கள்" . :)
நன்றி வருண். இதில் பால கணேஷ் பெரிய மனிதராகத்தான் இருக்க வேண்டும். அரசனின் பதிலும் அருமை.
Deleteவருண்.... நான் கீழே அரசனுக்கு அந்த சந்திப்புகளை புறக்கணிக்கக் கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறேன். இப்போது நடந்ததைப் பற்றி எழுதும் போது அவற்றை ஏன் குறிப்பிடணும்? என்பதுதான் என்க்குத் தோன்றிய கேள்வி. மற்றபடி நான் யாருக்கும் எதிராக இல்லை. அமரபாரதி ஸார்... நான் பெரிய மனிதன் தான் - உருவத்தில் மட்டுமே... ஹி... ஹி... ஹி..
Deleteவணக்கம் வருண்,
Deleteஅமரபாரதி அவர்கள் குறித்த முன் அறிமுகம் எனக்கு இல்லை என்றபோதிலும் ஈரோடு பதிவர் சந்திப்பு குறித்து பேசியதால் நிச்சயம் மூத்த பதிவராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவருக்கு உரிய மரியாதையோடு விளித்தேன்... நான் அவரை எங்குமே காயபடுத்தியதாய் தெரியவில்லை, ஒருவேளை அவரோ நீங்களோ அப்படி உணர்ந்திருந்தால் அதற்கு அமரபாரதி அய்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...
இங்கே ஈரோடு பதிவர் சந்திப்பை யாரும் ஒதுக்கவில்லை, காரணம் இது அதைப் பற்றிப் பேச வேண்டிய களம் இல்லை, நாளை ராமேஸ்வரத்தில் பதிவர சந்திப்பு நடந்தால் அங்கு மதுரை பதிவர் சந்திப்பு குறித்து யாரேனும் பேச வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அதில் கலந்து கொண்டவர்கள் வேண்டுமானால் முந்தைய பதிவர் சந்திப்புகளை பற்றி குறிப்பிடலாம் குறிப்பிடாமலும் போகலாம், அது அவரவர் விருப்பம்...
மற்றபடி நாங்கள் ஒரு ஓராமாய் எங்களுடைய விருப்பங்களை எழுதி கொண்டுள்ளோம், எங்களுக்கு பதவியும் வேண்டாம் பட்டோடாபமும் வேண்டாம்... இதற்கு மேல் இதில் நானும் விவதிப்பதாய் இல்லை
நன்றி
எனக்கு அமர பாரதியை ரொம்பநாளா, இல்லை ஆண்டுகளாகத் தெரியும். முக்கையமாக என்னை மாதிரி வெட்டிச் சண்டை எல்லாம் போட மாட்டார். பின்னூட்டங்களில் வந்து தன் கருத்தைப் பொறுப்பாக சொல்லிவிட்டுப் போவார். பல முறை என்னையும் உரிமையுடன் கடிந்து கொண்டு போயிருக்கிறார். அவரைத் தெரியும் என்பதால், அவர் தரம் தெரியும் என்பதால், அவர் சொல்வதை நான் "நல்ல முறையில்" எடுத்துக்கொள்வேன். உங்களில் பலருக்கு அவரை தெரியாது என்பதால் அன்னியமாகவும், கலகக்காரராகவும் தோனலாம். அதனால் என் தலையீடு இங்கே. எனை வைத்து அவரை எடைபோட வேண்டாம். :) அவருடைய ஆதங்கம் ஏதோ சண்டை இழுப்பதாகக் கூடத் தோனலாம். நீங்க நினைப்பதுபோல் "என் வகையை" சேர்ந்தவர்ள் அல்ல அவர். :))) தமிழ்மணம் ஆரம்பித்த காசி அவர்கள் வந்தால் கூட அவரைப் பரிச்சயமில்லாதவர்கள் கொஞ்சம் அன்னியமாகத்தான் நினைப்பார்கள். தெரியாதவர்களிடம் அவருக்கு மரியாதை அவ்ளோதான் கிடைக்கும். அதேபோல்தான் அமர பாரதியின் நிலைமையும். இதே கருத்தை உங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட "மூத்தவர்" சொல்லியிருந்தால், (இதே வார்த்தைகளால் வாக்கியம் அமைத்து) நீங்கள் இதுபோல் எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
Deleteஎனக்கு அவரை பல வருடங்கள் தெரியும் என்பதாலும், அவர் தரமும் தெரியும் என்பதாலும் நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர் ஆதங்கத்தை வார்த்தைகளை நான் "குதற்கமாக" எடுத்துக் கொள்ளவில்லை! எனக்கும் ஈரோட்டுக்கும், எனக்கும் மதுரைக்கும் உள்ள சம்மந்தத்தைவிட ரொம்ப கம்மிதான்.
இதெல்லாம் உங்க வாழக்கையிலும் நடக்கத்தான் செய்யும். தெரிந்த "மூத்தவர்" என்றால் அவர் சொல்வதெல்லாம் "அன்பில்" "உரிமை"யில் என்று எடுப்பீர்கள். அதே நபர் தெரியாதவர் என்றானால், இதுபோல் "இவர் என்ன சொல்வது, உழைத்தவர்கள் நாங்கள், வந்துட்டாரு இவரு" என்று "ரியாக்ட்" செய்வீர்கள். அவ்வளவுதான்.
நாளை இதே நிலைமை உங்களுக்கும் வரத்தான் செய்யும். இன்றைய குமரி, நாளைய கிழவி. மரியாதை எப்போவுமே குமரிக்குத்தான்..இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்தானே? நான் சொல்லணுமா என்ன?
வழக்கம்போல பதிவர் சந்திப்புக்கு அப்புறம் ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சுருச்சு.
வாழ்க தமிழர்கள்! வளர்க தமிழ்!
Thank you very much Varun. Your words explain it very well.
Deleteவருண் மற்றும் அமர பாரதி அவர்களே மற்றும் யாராக இருந்தாலும் தொடர்பு கொள்க...
Delete+91 9944345233
பதிவர் சந்திப்பை படம் பிடித்து காட்டிய எழுத்து ! 200 க்கு நல்வாழ்த்துகள் !
ReplyDeleteமிக்க நன்றி ரிஷபன் சார்
Deleteகுறைந்த புகைப்படங்கள்; நிறைந்த விவரங்கள்.
ReplyDeleteசாப்பாட்டில் சைவம்தானா? மதுரையில் வேறென்னென்ன பார்த்தீர்கள்?
ஆமா சார் மதுரைய விட்டுக் கிளம்பும்போதுதான் அசைவத்தையே கண்ணுல காமிச்சாங்க.. அதுவரை பட்னிதான் ;-) சைவம் சாப்பிடுவது எல்லாமே உண்ணாவிரத்ததில் தானே சேரும் :-)
Deleteவாழ்த்துக்கள் சீனு! மிக அருமையாக இருந்தது பதிவர் சந்திப்பின் தொகுப்புரை! மதுரைக்கு வரவேண்டும் என்று நினைத்தும் வர முடியாத சூழலில் சிக்கிக்கொண்டேன்! அடுத்த முறையாவது கட்டாயம் ஆஜர் ஆகவேண்டும் என்ற அவா இருக்கிறது! பார்ப்போம்! நன்றி!
ReplyDeleteநன்றி தளிர்.. புதுகோட்டையை தவறவிட்டு விட வேண்டாம் :-)
Delete//புதுக்கோட்டை நம் குருநாயரின் கோட்டை//
ReplyDeleteசீனு! சொல்லவே இல்லையே! யார் அந்த குருநாயர்?
200 க்கு வாழ்த்துக்கள்
என் குருநாயர் பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சொல்லகூடாது என்று அவர் கட்டளை இட்டிருக்கிறார் சார் :-)
Deleteபதிவர் திருவிழா நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் உங்கள் பதிவினை படித்ததனால் சற்றே குறைந்துள்ளது. அடுத்த பதிவர் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அதிகரிக்கின்றது
ReplyDeleteநீங்கள் வருவேன் என்று எதிர்பார்த்திருந்தேன் சார்... அடுத்தமுறை தவறவிடாதீர்கள்...
DeleteWell done seenu..
ReplyDeleteஉங்களை சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை :-)
Deleteவாழ்த்துக்கள் சீனு..
ReplyDeleteநன்றி கருண் :-) ஆமா நீங்க ஏன் வரல
Deleteபதிவர் சந்திப்பு மூலமாக அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. பகிர்வினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களைச் சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அய்யா...
DeleteCongrats for 200th Blog post and wishing you to reach the 500 mark very soon !! Thanks for the wonderful writing Seenu, you have made a real good content of what happened on that day, anybody can visualize it !!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்... இந்த உலகத்தை உய்விக்க 500 போதுமா :-)
Deleteஅன்றைய தினம் முழுக்க நீங்கள் அனைவருடனும் இருந்தது மகிழ்வான தருணங்கள் :-)
உற்சாகமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!
ReplyDeleteநன்றி அம்மா :-)
Deleteத.ம.9 ( தமிழ்மணத்தில் பதிவை இணைத்த இரண்டு நாட்களுக்குள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வந்தேன். மீண்டும் வருவேன்.)
ReplyDeleteஉங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
//” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!// மிக்க நன்றி அய்யா
Deleteதமிழ் வலைப்பதிவர் சந்திப்பு என்ற பெயரில் ஈரோட்டில் நடந்ததாக எனக்கு நினைவில்லை அமர பாரதி சார்
ReplyDeleteதெரிந்து சொல்கிறீர்களா அல்லது தெரியாமல் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. அதற்குப் பெயர் ஈரோடு சங்கமம். ஆனால் அது வலைப் பதிவர் சந்திப்பு தான். அடுத்த வருடம் ஒருவர் தமிழக வலைப் பதிவர் சந்திப்பு என்று நடத்தினால் அதுதான் முதல் வருடம் என்று வைத்துக் கொள்ளலாமா?
Deleteதாராளமாக வைத்துக் கொள்ளலாம் மிஸ்டர் அமரபாரதி. நாங்கள் யாரும் வம்புக்கு வர மாட்டோம். ஈரோடில் நடந்த சந்திப்புகள் மிகப் ‘புகழ்பெற்றவை‘ அரசா. அவை நாம் களமாடுவதற்கு முன்பே சீனியர்கள் நிகழ்த்திய அற்புதங்கள். அவற்றைப் புறக்கணித்துவிட இயலுமா என்ன...?
Deleteஈரோடு சங்கமம் என்ற பெயரில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பை எப்படி, எந்த ஒரு குறிப்பிட்ட பெயரையும் தாங்காமல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு என்று நடைபெறும் நிகழ்வோடு இணைத்துக் கொள்வது ?
Deleteபத்ரி அவரது நண்பர்கள் குழாமுடன் இணைந்து சென்னையில் ஒருநாள் பதிவர் பயிற்சி முகாம் நடத்தியதே தமிழின் முதல் பதிவர் சந்திப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று வவ்வால் ஒருமுறை கூறியிருந்தார் (அ) எங்கோ படித்ததாக நியாபகம்.
Deleteஅதன் பின் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் சங்கமம் என்ற பெயரில் மூன்று சந்திப்புகள் நடைபெற்றது என்று நினைக்கிறேன்.
மேலும் இடைப்பட்ட காலங்களில் சென்னையில் கேபிள் சங்கர், கே.ஆர்.பி, மெட்ராஸ் பவன் சிவா மற்றும் நண்பர்கள் இணைந்து யூத் பதிவர் சந்திப்பு என்ற பெயரில் இரண்டு சந்திப்புகளை நடத்தினார்கள்.
மேலும் 2012-ல் திருப்பூரைச் சேர்ந்த தொழிற்களம் குழுமம் ஒரு சிறிய பதிவர் சந்திப்பை நிகழ்த்தியது. அந்த வருடமே அவர்கள் தங்கள் குழுமத்தைக் கலைத்து விட்டதால் தொடர்ந்து நடத்தவில்லை.
அதற்கு அப்புறம் நெல்லையில் ஒருமுறை பதிவர் சந்திப்பு நடந்ததாக நியாபகம், தெரியவில்லை எனக்கு
இவையெல்லாம் போக 2012ம் ஆண்டில் இருந்து தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் தொடர்ந்து பதிவர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் வலைப் பதிவர் குழுமத்தின் நோக்கம் ஒரே இடத்தில் ஒரே ஊரில் நடத்தபடமால் அனைத்து ஊர்களில் இருக்கும் பதிவர்களின் பங்களிப்புடன் எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பதே..
இப்படி பல்வேறு குழுமங்கள் பல்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் சந்திப்பை நிகழ்த்திக் கொண்டுள்ளன. இவை நான் அறிந்த வரையில் மட்டுமே, வேறு யாரும் கூட நிகழ்த்தி இருக்கலாம். இனியும் வேறு யாரேனும் வேறு ஏதேனும் பெயரில் நடத்தலாம். Brand வேறு வேறு ஆனால் நோக்கம் ஒன்று.
சோ இங்கே வெறும் ஒன்று இரண்டு மூன்று என்று போட்டது தான் பிரச்சனை என்றால் பதிவின் முதல் வரியை இவ்வாறு மாற்றிவிட்டேன்.
//தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெற்ற முதல் இரண்டு பதிவர் சந்திப்புகள் சென்னையில் இனிதே நடந்து முடிய மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பு இம்முறை மதுரையில். //
இனி யாருக்கும் இந்தப் பதிவின் மூலம் குழப்பம் இருக்காது. எந்த ஒரு brand நிகழ்த்திய சந்திப்பையும் மூடி மறைக்கும் நோக்கம் அல்லது தடித்தனம் யாருக்கும் இங்கு இல்லை.
நன்றி
அமர பாரதி ரொம்பக் காலமா பதிவுலகில் இருக்காருங்க. அவர் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்யுது. காமராஜர்னா யாருனு கேக்கிறமாதிரி இருக்கு "இந்த ஆத்தாகாலத்தில்"!
Deleteநாளைக்கு மதுரை சந்திப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, ராமேஸ்வரம் பதிவர் சந்திப்பைப் பேசும்போது உங்களுக்கு அவருடைய ஆதங்கம் புரியும்.
யாரோ சீனுவாம், யாரோ பால கணேசாம்! அவங்கதான் மதுரையில் தமிழ் வளர்த்தாங்களாம். அவங்களே சொல்லிக்கிட்டு திரிகிறாங்கனு நாளைய சிறுவர்கள் சொல்லுவாங்க. :)
நன்றி வருண். இதில் அரசனின் பதிலும் அருமை.
Deleteசந்திப்புகள் நிறைய இருக்கிறது சீனு. ஆனால் மேலும் இங்கு இதைப் பற்றி எழுத விருப்பமில்லை. வெற்றி கரமாக நடந்த நிகழ்வுக்கு வாழ்த்துக்கள்.
Deleteமதுரையில் பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது என முதல் பதிவிலேயே மூன்றாம் வலைபப்திவர் திருவிழா என்றே போட்டிருந்தோம்... அப்போதே தோணாத கேள்வி நடந்து முடிந்த பின் தோணுவதேன்?????
Deletehttp://www.tamilvaasi.com/2014/08/261014.html
ஆஹா விரிவான பதிவு..கைதட்டுனது புதுக்கோட்டைக்குத்தானா...அடுத்த முறை இங்கதானே வரப்போறீங்கபா...
ReplyDeleteநல்ல விரிவான பதிவு வாழ்த்துகள்..
ஹா ஹா ஹா எல்லாம் நம்ம பங்காளி மொத்த பேருக்கும் தான் :-)
Deleteவர முயற்சித்தும் இயலவில்லை :(
ReplyDeleteஆனாலும் பரவாயில்லை உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன் அப்து அண்ணே :-)
Deleteநல்ல சொல்ரப்பா டீடைலு...
ReplyDeleteவிரிவான பதிவு...
பதிவர்களின் லிங்க்கை அவர்கள் பெயரில் தந்திருக்கலாமே..
நன்றி கஸ்தூரி ரங்கன் சார்..
Delete//பதிவர்களின் லிங்க்கை அவர்கள் பெயரில் தந்திருக்கலாமே..// ஒரு சின்ன சோம்பேறித்தனம் தான் என்ற போதிலும் அதற்கான முயற்சியை எடுக்கிறேன்
எழுதுக இன்னொரு ஆயிரம் பதிவு
ReplyDeleteஆயிரம் போதுமா தலைவா :-)
Deleteசிறப்பான தொகுப்பு!
ReplyDelete200-க்கு வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி நிஜாமுதீன்... :-)
Deleteஉற்சாகம் தரும் பதிவு சீனு... நன்றி...
ReplyDeleteஉற்சாகத்திற்கே உற்சாகமா டிடி ;-)
Deleteபதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொண்டதாய் உணர்கிறேன் பதிவை வாசித்தபின்.
ReplyDeleteநல்லது இப்படியான சந்திப்புகள் இப்போது ஓய்விலிருக்கும் மூத்த பதிவர்களுக்கும் ஒரு உற்சாகத்தைக் கொடுத்து மீண்டும் எழுதத் தூண்டும் என் எண் ணுகிறேன்.
நிகழ்வு சிறப்புற உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் வாழ்த்துகள்.
௨00 கண்டிருக்கும் சீணுவுகும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஆத்மா, சீக்கிரம் இலங்கலையில் ஒரு சந்திப்பை நடத்துங்கள், அங்கேயும் வந்த்விடுவோம் ;-)
Deleteசீனு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ உங்களது ஆரம்ப கால பதிவுகளை படித்து நான் இட்டு கருத்துக்கள் உங்கள் எழுத்து நடையும் சிந்தனையும் சொல்வதை மிக தெளிவாக சொல்வதும் அருமையாக இருக்கிறது என்பது மாதிரிதான் அதை இன்னும் மிக தெளிவாக அதே நேரத்தில் எளிமையாக நீங்கள் சொல்லி செல்லும் பாங்கு மிக பாராட்டுக்குரியது.
ReplyDeleteஒரு விழாவில் கலந்து கொள்ளாமலே அதில் கலந்து கொண்ட ஒரு உணர்வு உங்கள் பதிவை படித்த பின் தோன்றுகிறது பாராட்டுக்கள் சீனு வாழ்க வளமுடன்
ஆரம்ப காலத்தில் இருந்து தொடர்ந்து என்னை கவனித்து வருபவர் நீங்கள் மதுரைத் தமிழன்... நீங்கள் கூறிய கருத்துகளை என்னால் எப்படி மறக்க இயலும்..
Deleteதொடர்ந்து என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி :-)
தங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்வினை அளித்தது நண்பரே
ReplyDeleteஎனக்கும் ஜெயக்குமார் சார்...
Delete200-க்கு வாழ்த்துக்கள் சீனு
ReplyDeleteநன்றி டிரக்டர் சார் :-)
Deleteஅன்புள்ள சகோதரர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி! சொன்னது போல் மீண்டும் வந்து விட்டேன்.
ReplyDeleteஉங்கள் பதிவினில் பழைய வலைப்பதிவர்கள் சந்திப்புகளை மலரும் நினைவுகளாகச் சொல்லிவிட்டு , மதுரை சந்திப்பு நிகழ்ச்சியை உங்களுக்கே உரிய நடையில் சொனனதற்கு நன்றி! நீங்கள் மேடையேறிய போதுதான் உங்களை முதன் முதல் பார்த்தேன்.
தொழில்நுட்ப பதிவர்களுக்கான சிறப்பு விருது கொடுத்த போது அப்துல் பாசித் வரவில்லை. அதே போல முற்பகல் சிறப்பு சொற்பொழிவாளர் வராத சூழ்நிலையில் அந்த இடத்தில் புதுக்கோட்டை ஆசிரியர் அய்யா முத்துநிலவன் அவர்கள்தான் சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டார்.
பதிவர்கள் பலரையும் (குறிப்பாக சென்னைப் பதிவர்கள்) சந்திக்க வேண்டும் என்பதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து காலையிலேயே வண்டியூர் தெப்பக்குளம் வந்து விட்டேன். திண்டுக்கல் தன்பாலனை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்தசமயம் அவர் எடுக்கவில்லை. நீங்களும் மற்றைய நண்பர்களும் முதல் நாளே வந்து மதுரையில் தங்கியிருந்தது எனக்கு தெரியாது. தெரிந்து இருந்தால் காலையில் வந்தவுடன் நேரே அங்கு வந்து இருப்பேன்.
வண்டியூர் தெப்பக்குளம் வடக்கு வீதி ரோட்டில், காலை டிபன் சாப்பிட நடந்து திரிந்ததுதான் மிச்சம். அந்த பகுதியில் டிபன் கடைகள் எதுவும் திறந்து இருக்கவில்லை. எனவே டிபன் சாப்பிட மதுரை அண்ணா நகருக்கு ஷேர் ஆட்டோவில் சென்று வர வேண்டியதாயிற்று. ( இது தனிக் கதை )
உங்களையும் நான் நீங்கள் மேடையேறிய போதுதான் முதன் முதலில் பார்த்தேன் இளங்கோ சார், உங்கள் தொலைபேசி எண் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அழைத்திருப்போம்.
Deleteநான் சேர்க்காமல் விட்ட சில தகவல்களையும் சேர்த்து விளக்கமான பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி
தங்களது 200 ஆவது வலைப் பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்! நீங்கள் மட்டும் எழுதாமல் உங்களது நண்பர்கள் பலரையும் வலைப்பக்கம் எழுதச் சொல்லுங்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா.. நிச்சயம் சொல்கிறேன் :-)
Deleteசீனு மிக அழகான தொகுப்புரை! உங்கள் பாங்கான நடையில்!
ReplyDeleteஆவி பதிவர் சந்திப்பிற்கென தானே மெட்டமைத்து எழுதிய பாடலைப் பாடினார், கூடவே நாங்களும் படித்தோம்// பாடாட்டி என்ன படிச்சீங்களே அதுவே பெரிய விஷயம்...ஹஹஹஹ்
சே! மேடையேறி உங்கள் குழுவின் விசிலையும், கலாய்ச்சலையும் நாங்கள் தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம்...ம்ம்ம்
சீனு! மலர்தரு மது தான் அந்த கஸ்தூரிரங்கன் என்பதை எப்படி மிஸ் பண்ணினீங்க!!!?
மைதிலி சகோதரிக்கு நன்றி! எதுக்கா? இவிங்களை வாலாட்ட வைச்சதுக்கு!
உங்கள் தொகுப்பை மிகவும் ரசித்தோம் சீனு! மிஸ் பண்ண வேண்டியதாகிப் போனதே என்ற வருத்தத்தில்.....
உங்கள் இருவரையுமே எதிர்பார்த்தோம்.. சந்திப்பின் காலையில் தான் தெரியும் உங்கள் இருவராலும் வர இயலவில்லை என்ற தகவல்.
Deleteமலர்தரு அவர்களை அந்த சந்திப்பின் போதுதான் அறிந்து கொண்டேன்.. சுவாரசியமான மனிதர் :-)
பதிவர் திருவிழா பற்றிய சிறப்பு பதிவு நான் எழுதலாம் என எண்ணியிருந்தேன்... இப்பதிவை வாசித்த பின்னர் இந்த லிங்க் மட்டும் பகிரலாம் என எண்ணியுள்ளேன்...
ReplyDelete200 congrats
ஹா ஹா ஹா மிக்க நன்றிண்ணே, ஆனாலும் நீங்களும் எழுதுங்கள் :-)
Deleteஅசத்தல் சகோ. விழாவை நேரில் கண்டு களித்தமகிழ்வை தந்தது பகிர்வு.
ReplyDeleteமிக்க நன்றி :-)
Deleteகடந்த இரண்டு சந்திப்புகளிலும் கவிதை வாசித்து வ்லாவை சிறப்பித்த நட்சத்திரப்பதிவர் இம்முறை வராததுக்குறித்து எந்த ஒரு மனிதச்சங்கிலியோ, கலவரமோ அல்லது atleast தற்கொலையோ கூட நடந்ததாக தங்கள் பதிவில் சொல்லாத தடித்தனத்தை என்னவென்று சொல்வது?
ReplyDeleteசொன்னால் நம்ப மாட்டீர்கள் மயிலன் இன்றைக்கு தான் உங்களைப் பற்றி நினைத்தேன், வலையிலும் காணோம் பேஸ்புக்கிலும் காணோம் எங்கே அப்ஸ்கேன்ட் ஆகிவிட்டீர்களோ என்று. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தான் உங்களை இங்கே இழுத்து வந்துவிட்டது போலும் :-)
Deleteகடந்த வாரம் பதிவர் ரஞ்சனி அம்மா அவர்களுடம் தொலைபேசியபோது கூட உங்கள் கவித்திறனைப் பற்றி கூறினார்... நீங்கள் தான் தற்காலிக வேலை நிறுத்தத்தில் இருக்கிறீர்கள் போலும் :-)
//தற்கொலையோ கூட நடந்ததாக தங்கள் பதிவில் சொல்லாத தடித்தனத்தை என்னவென்று சொல்வது?// அதற்கும ஆள் ஏற்பாடு செய்திருந்தோம். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்சனை வந்துவிடும் என்று மொன்னைத் தனமாக ஒருவர் மிரட்டியதால் முயற்சியை கைவிட்டு விட்டோம் :-)
யோவ் 200 ஆ?? நூறுக்கே மூனு வருசமா முக்கிட்டு இருக்கேன்.. :(
ReplyDelete//யோவ் 200 ஆ?? நூறுக்கே மூனு வருசமா முக்கிட்டு இருக்கேன்.. :(// முத்துக்கள் அரிதாகத்தான் ஜனனம் எடுக்குமாம் :-)
Deleteஹல்லோ டெஸ்ட்டிங் டெஸ்ட்டிங்
ReplyDeleteவொர்கிங் வொர்கிங் ஓவர் ஓவர்
Deleteமதிப்பிற்குரிய சீனுவும் நானும் சமகால கட்டத்தில் எழுத(!) ஆரம்பித்தாலும் அவர் இருநூறாவது பதிவிலும் நான் 99லும் இருக்கிறோம் என்பதால் மிகுந்த பொறாமையுடன் சீனுவை வாழ்த்துகிறேன். :)
ReplyDeleteமிச்ச கமெண்ட்டை சாயங்காலமா வந்து எழுதுறேன் ..இப்ப கடமை கடமை கடமை பேஸ் புக் ,ப்ளாக் பார்க்காம கூப்புடுது .அப்பால வர்றேன்.
நிகழ்காலத்தில் நீங்கள் புரட்சிப் போராளி ஆகிவிட்ட காரணத்தால் தங்களுக்கும் சேர்த்தே நான் இங்கே கலை சேவையை ஆத்திக் கொண்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மன்னா ;-)
Deleteதங்களின் இந்த பதிவை படித்தவுடன்,இந்த விழாவை நேரில் கண்டு களித்த திருப்தி ஏற்பட்டது எனக்கு.
ReplyDeleteஏற்கனவே, இந்த சங்கமத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருந்திக்கொட்னு இருந்தேன். இதை படித்தவுடன் அந்த வருத்தம் இன்னும் அதிகமாகிவிட்டது.
அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சொக்கன் சார் :-)
Deleteநேரில் வந்து ரசித்து, மகிழ்ச்சியடைய வேன்டிய ஒரு நிகழ்வை அருமையான தொகுப்பாய் கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள். வர இயலாத குறை தீர்ந்து விட்டது. அதற்கும் தங்களின் இருநூறாவது பதிவிற்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி :-)
Deleteஇருநூறாவது பதிவா? கைகொடுங்கள் சீனு! (நேர்ல பாத்தப்ப பச்சப் புள்ளையாட்டமா இருந்தீங்க... எழுத்துல பாத்தா இளமையுடன் முதிர்ச்சியும்ல இணைஞ்சி நிக்குது?!!)
ReplyDeleteஇன்றுமுதல் உங்கள் தளத்தைத் தொடர்கிறேன். இணைந்து பயணிப்போம். நன்றி
//இணைந்து பயணிப்போம். நன்றி// ஆகா மிக்க நன்றி அய்யா :-)
Deleteஅந்த ரெண்டாவது படத்துல நம்ம தமிழ்வாசிக்கு ரத்னவேல் அய்யா பொன்னாடை போத்துறத பாத்துக்கிட்டு அங்கிட்டு நிக்கிறது நாந்தானுங்கோ.. நன்றி
ReplyDeleteஹா ஹா ஹா உங்களுக்கு அறிமுக கொடுக்கக் கூடிய ஒரே நபர் உங்கள் நடுவர் மட்டுமே :-)
Deleteஈரோடு வலைப்பதிவர் சந்திப்புதான் முதல் பதிவர் சந்திப்பு, அது எங்களுக்கு முதற் காதலைப் போன்றது...எத்தனை வருடமாகினும் மறக்க முடியாதது.
ReplyDeletehttp://veeedu.blogspot.in/2011/12/blog-post_18.html
நிச்சயமாக நாம் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பு மிக முக்கியமானது, அதில் கலந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை எழுத்தில் வடிக்க இயலாது. நேற்றைக்கே உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன்... :-)
DeleteUnforgettable Moments at Erode.
DeleteCongrats Seenu ! for Double CENTURY
Wish you Good Luck
Tks
Sambath
www.tamilparents.com
200-வது பதிவு வாழ்த்துகள் சீனு......
ReplyDeleteமேலும் பல நூறு பதிவுகள் எழுதிட எனது வாழ்த்துகள்.....
வாழ்த்துகள் நண்பரே..
ReplyDelete\\ இதுவே சென்னையாக இருந்திருந்தால் நாங்கள் உண்ட உணவுக்கு ரூபாய் ஐநூறு காலியாயிருக்கும். வாழ்க மதுரை \\
ReplyDeleteமதுரையை மையங்கொண்ட தங்களது இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
- சித்திரவீதிக்காரன்
http://maduraivaasagan.wordpress.com/2014/11/04