இணையப் பெருவெளியில் மேய்ந்து கொண்டிருந்த போது ஆவி'ஸ் கிச்சன் என்ற பதிவு கண்ணில் பட்டது, 'அட ஆவிகள் கூட கிச்சன் வைத்து நடத்தும் போது, மனிதர்களான நாம் ஏன் முயலக் கூடாது' என்ற பெருத்த வினா மண்டையிலே எழுந்ததன் விளைவே இப்பதிவு மற்றும் நம் மக்களுக்கு என்ன தெரியாது? நாம் என்ன கற்றுக்கொடுக்கலாம் என்று ஆழ்ந்து யோசித்தபோது கிடைத்த பதில் 'சுடுதண்ணீர் செய்வது எப்படி?'
பெரும்பாலான மனிதர்களுக்கு சுடுதண்ணீர் செய்வது எப்படி? என்பது கூடத்தெரிவதில்லை.ஒன்று முறையான கொதிநிலையை கடப்பதற்கு முன்னரே அடுப்பை அணைத்து கடுப்பை ஏற்றுகிறார்கள் அல்லது பேஸ்புக்கில் லைக்ஸ் போடும் ஆர்வத்தில் தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்து அவதிப்படுகிறார்கள். இதற்கு வழியே கிடையாதா? இந்தத் தொல்லையில் இருந்து விமோசனமே கிடையாதா? என்று எண்ணுபவரா நீங்கள்! உங்களுக்காகவே இந்த பதிவு. ஏனென்றால் சீனு'ஸ் கிச்சனின் கடமை முறையாக வெந்நீர் போடுவது எப்படி? என்று கற்றுக்கொடுப்பதே.
தேவையான பொருட்கள்
அம்மா குடிநீர் - ஒரு புட்டி
எரிவாயு அடுப்பு - உருளையில் எரிவாயு இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும்
ஒரு பெரிய பாத்திரம் - அண்டா அளவு வேண்டாம், குண்டா அளவு இருந்தால் போதும்
ஒரு பாதரசமானி - ஏன் என்று பின்பு சொல்கிறேன்
முக்கிய குறிப்பு - மேற்கூறிய பொருட்களில் ஒன்று குறைந்தாலும் வெந்நீர் தயாரிக்கும் முயற்சியை கைவிட்டுவிடுங்கள்.
எரிவிப்பானை எடுத்து அடுப்பைப் பற்ற வைக்கவும்***. குண்டாவை நன்றாக எரியும் அடுப்பின் மீது வைத்து நீரை மெல்ல ஊற்றவும், நீரை ஊற்றும் பொழுது நீர் அங்கும் இங்கும் சிதற வேண்டாம்****. தெளிந்த அந்த நீரை நன்றாக உற்று நோக்கிக் கொண்டே இருங்கள். சிறிது நேரத்தில் நீரினுள் இருந்து சின்னச் சின்ன நீர்க் குமிழிகள் வெளிவரத் தொடங்கும். அப்படியென்றால் நீர் மெல்ல சூடாகிக் கொண்டு உள்ளது என்று அர்த்தம். சிறிது நேரத்தில் நீர் 'ஆவி'யாகும், இதனை நீராவியாதல் என்று அறிவியல் குறிப்பிடுகிறது.
உங்களுக்குத் தெரியுமா? - அந்தக்காலத்தில் அவ்வளவு பெரிய ரயிலையே நீராவி கொண்டுதான் இயக்கியுள்ளார்கள். அதனால் நம்முடைய கிச்சன் வெறும் கிச்சன் மட்டுமல்ல மாபெரும் பரிசோதனைக்கூடம்.
நீராவி வரத் தொடங்கியதும் உங்களிடம் இருக்கும் பாதரசமாணியை எடுத்து கொதிக்கும் நீரினுள் வையுங்கள். கவனமாக செயல்படுங்கள், நீரின் கொதிநிலை குறித்து சிறுவயதில் உங்கள் அறிவியல் பாடத்தில் படித்திருப்பீர்கள், இப்போது மறந்திருக்கலாம். அதனால் நியாபகப்படுத்துகிறோம். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் இதுவே காரணம் வெந்நீர் போட முயலும் பலரும் தவறு செய்யும் இடம் இதுதான்.
பாதரசமானியில் நூறு டிகிரி செல்சியசை காண்பிக்கும் வரை மிகக் நுட்பமாக கவனிக்க வேண்டும், மற்றொரு விஷயம், கொதிக்க வைத்த குடிநீர் ஒரு சிறந்த மருத்துவ நிவாரணி. இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிலும் நுண்ணுயிர்த் தொல்லை அதிகமாகிவிட்ட காரணத்தால், குடிநீரை 100டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டியது அவசியமாகிறது.உங்கள் தோள்களில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுங்கள், நீங்கள் தயாரித்துக் கொண்டிருப்பது ஒரு அருமருந்து.
சரி தட்டியது போதும், தெர்மா மீட்டரில் கவனம் கொள்ளுங்கள், கொதிநிலை நூறைத் தாண்டி விடப்போகிறது. நூறைத் தொட்டதும் உடனடியாக அடுப்பை அணைத்துவிட்டு, அருகில் கரித்துணி எதுவும் இருந்தால் அதுகொண்டு மெல்ல இறக்கி வைக்கவும், வெந்நீர் எப்படி தயாராகியிருக்கிறது என்று பதம் பார்க்கும் ஆர்வம் உங்களுக்கு எழலாம் இருந்தும் நீரின் சூடு உங்கள் நாக்கை பதம் பார்த்துவிடாது இருக்க சூடு தணியும் வரை பொறுமையாக இருங்கள்.
சுடு தண்ணீரில் வைத்த பாதரசமாணியை வெளியில் எடுங்கள் என்று கிளிபிள்ளைக்குச் சொல்லித்தருவது போல் சொல்லிதரவெல்லாம் முடியாது. புரிகிறதா?
சுடு தண்ணீரில் வைத்த பாதரசமாணியை வெளியில் எடுங்கள் என்று கிளிபிள்ளைக்குச் சொல்லித்தருவது போல் சொல்லிதரவெல்லாம் முடியாது. புரிகிறதா?
ம்ம்ம் இப்போது சூடான சுவையான வெந்நீர் தயார். நீங்க சாதிச்சிட்டீங்க, எஸ் யு டிட் எ கிரேட் ஜாப்.
"நீரின்றி அமையாது உலகு' என்பது அய்யன் வள்ளுவன் மொழி
"வெந்நீரின்றி அமையாது உணவு' என்பது அடியேன் சீனுவின் புதுமொழி .
***உருளை அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எரிவிப்பானை உபயோகம் செய்யுங்கள், மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, சாட்டை போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். பொதுநலன் கருதி வெளியிடுவோர் சீனு'ஸ் கிச்சன்.
****குடிநீர் சிக்கனம் தேவை இக்கணம். சமூகநலன் கருதி வெளியிடுவோர் சீனு'ஸ் கிச்சன்.
சீனு'ஸ் கிச்சனில் அடுத்து வருவது
பார்டரில் தீவிரவாதி சப்பாத்தி கூட சுடத்தெரியாமல் கஷ்டபடுவதால் அவருக்காக சப்பாத்தி சுடுவது எப்படி? காத்திருங்கள்... விரைவில்...
படித்து விட்டீர்களா...
Tweet |
மிக மிக உபயோகமான தகவல். . .
ReplyDeleteவருகைக்கு நன்றி, தங்கள் கருதுரையால் யாம் பெரிதும் உவகை அடைந்தோம் ...
Deleteத.ம போடவில்லையே.... மறந்து விட்டீரோ :-)
அருமை அருமை பல புதிய விஷயங்கள் கற்றேன்,
ReplyDeleteஇது என்னங்க பெரிய விஷயம்... நாம கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.. இது ஆரம்பம் தானே.. makes it simple :-)
Deleteமிக மிக உபயோகமான தகவல். . .
ReplyDeleteஉங்கள் ஆர்வம் புரிகிறது தோழர் :-) ஒருமுறை சொன்னாலே எனக்குப் புரியும் :-)))))))
Delete:)))))))))
Deleteஅப்படியே இதை வீடியோ பதிவாக வெளியிட்டால் துப்ப சாரி கற்க வசதியாக இருக்கும்.
ReplyDeleteமிகச் சிறந்த ஐடியா.. பரிசீலனையில் உள்ளது... சங்கம் இதனை கவனத்தில் கொல்லும்
Deleteத.ம என்றால் தலையில் மண்ணா??
ReplyDeleteஓகே. .ஓகே. .போட்டாச்சு
//தலையில் மண்ணா??// அதைத் தான் தினமும் செய்கிறீரே..
Deleteநல்ல வோட்டு வந்துவிட்டது.. கள்ள வோட்டை எல்லாம் அள்ளி வீசும்.. இப்பதிவு மகுடம் சூட வேண்டாமா ?
"நீர்-ஆவி " க்கு மகுடம் சூட்டாமல் விடமாட்டீர் போலிருக்கு?? ;-)
Deleteகுளுருக்கு ஏத்த பதிவு, அப்படியே ஹாம்லெட் ...சாரி ஆம்லெட் போடுவது எப்படி ன்னு தெரிஞ்சிக்க ஆ. .வலா இருக்கோம்
ReplyDeleteஅது மிகவும் கஷ்டமான விஷயம் சார்.. ஆம்லெட்டை முறையான பயிற்சி இல்லாமல் கற்றுத் தர முடியாது.. எனவே கட்டணம் வசூலிக்கப்படும் :-)
Deleteகட்டணம் வசூலிக்கப்படும்....ஏற்கனவே சுடு தண்ணியா நா வெச்சு தர்ரேன்னு வீட்டமினிக்கு கிட்ட சொன்னது தப்பாயிட்டு... குண்டாவுக்கு பதில் அண்டா குடுத்திட்டாங்க... அதவே கொதிக்க வெச்சு முடியலா அடுத்தது இதா ? ஏன்னா அண்டான்னா இந்தீல முட்ட தானே !!
Delete// உருளை அடுப்பை பற்ற வைக்கும்
ReplyDeleteபொழுது //
உருளை அடுப்புதான் வேனுமா? இந்த வெறகு அடுப்பு, கல்லு அடுப்பேல்லாம் கூடாதா??
முக்கிய குறிப்பை போய் படியும்... நீர் எல்லாம் ஒரு வாத்தி.. வெட்கம் வேதனை அவமானம்
Delete// உங்களுக்குத் தெரியுமா - அந்தக்காலத்தில்
ReplyDeleteஅவ்வளவு பெரிய
ரயிலையே நீராவி கொண்டுதான்
இயக்கியுள்ளார்கள்.///
இதை ஒரு கல்வெட்டில் செதுக்கி உங்க ஆபிஸ் வாசலில் வச்சுட்டு பக்கத்துல உட்காந்துக்குங்க. உங்களுக்கு பின்பு வரும் சந்ததிகள் தெரிந்துகொல்லட்டும்.
அடடே நான் எழுதிய வரிகளை என்டர் கவிதை ஆக்கிவிட்டீரே நீர் கவிஞரையா :-)
Delete// இணையப் பெருவெளியில்
ReplyDeleteமேய்ந்து கொண்டிருந்த போது. .//
நீங்க வழக்கமா ஊர்தானே மேய்விங்க. . .????
வணக்கம்
ReplyDeleteபதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
இவ்வளவு நாட்களாக வெந்நீர் வைப்பது எப்படி என்று மிகுந்த குழப்பத்தில் இருந்த என் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள். இதை நானும் முயற்சி செய்தேன். மிகுந்த சுவையாகவும் அற்புதமாகவும் இருந்தது. என் குடும்பத்தினரும் நண்பர்களும் சாப்பிட்டு பார்த்துவிட்டு இது புது வித டிஷ் ஆக இருக்கிறதே... இதை எப்படி கற்றுக்கொண்டீர்கள் என பாராட்டினர்...
ReplyDeleteஅடுத்ததாக அவிச்ச முட்டை செய்வது எப்படி என்று விரிவான பதிவிட்டு என் போன்றோரின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள் என நினைக்கிறேன்..
இவரும் சேர்ந்து கலாய்க்கறாராமாம்!
Deleteஎவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteநல்ல வேளை போட்டிக்கு ஆண்ட்ரியா தண்ணி கொதிக்க வைக்கிற மாதிரி போடலையே.. அந்த விஷயத்துல கோட்டை விட்டுட்டே தம்பி.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ;-)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete????????
Deleteதங்கள் செய் முறை குறிப்புகள் ‘அராத்து கதை’ மாதிரியே ‘அட்டகாசமா’ இருக்கு!
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகமுங்க...
ReplyDelete// குண்டாவை நன்றாக எரியும் அடுப்பின் மீது வைத்து...//
இத எப்படிங்க கண்டுபிடிக்கிறது?
உடனடியாக நீர்த்து... அட ச்சீ... தீர்த்து வைங்கப்பு.
அருமையான பதிவு! சீனு! இதுவரை எவரும் எழுதாத நிலையில் நீங்கள் முதலிடம் பெற்றுவிட்டீர்கள்! எனவே மதிப்பெண் போடாமல் போகலாமா! த ம 4
ReplyDeleteஅருகில் கரித்துணி எதுவும் இருந்தால்
ReplyDelete>>
எங்க வீட்டுல கரியில்லாம தான் துணி இருக்கு. என்ன செய்யலாம் சீனு!? சீக்கிரம் சொல்லுங்க அடுப்புல தண்ணி வச்சிருக்கேன்.
"aahaa....!"
Deleteஓட்டு போட்டாச்சு!
ReplyDelete"ஆ.வி"க்க்கு போட்டியாக ஆவி (நீராவி) தயாரிக்கும் செயல்முறை விளக்கத்தை பதிவிட்டு விட்டீர்களே !.நல்லதொரு சமையல் + அறிவியல் + பொது அறிவுப் பதிவு :).
ReplyDelete//***உருளை அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எரிவிப்பானை உபயோகம் செய்யுங்கள், மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, சாட்டை போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.//
ReplyDelete:D
//அம்மா குடிநீர் - ஒரு புட்டி //
இந்த டிகிரி நீரை அரசு குடிநீர் புட்டியில் தான் அவசியம் செய்ய வேண்டுமோ !! :( எங்க ஊர்ல அது கிட்டவில்லை சகோ
தம்பி நீங்க நேரில் இந்நேரம் இருந்திருந்தால் கட்டி பிடித்து பாராட்ட வேண்டுமென்று பெருத்த அவா ... என்ன செய்ய ?
ReplyDeleteமாபெரும் பரிசோதனைக்கூடம்.// உண்மைதான் , இதில் சிக்கி இருக்கும் எலிகளாக நாங்கள் ... எங்களுக்கும் ஒரு காலம் வரும் பிரதர் ...
ReplyDeleteஅம்மா குடிநீர் எங்கே கிடைக்கும்? டாஸ்மாக்கிலா?
ReplyDeleteஹா ஹா ஹா.. அப்பா சார் இது தமிழகத்தில் தொடங்கபட்டிருக்கும் புதிய திட்டம்.. அம்மா குடிநீர், அனைத்து பேருந்து நிலையகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களிலும் கிடைக்கும். RS.10/-
Deleteஅப்பாதுரை தெளிவாக இருக்கிறார்! :))))))))))
ReplyDeleteதில்லியில் அம்மா குடிநீர் கிடைக்காது சீனு.. சீக்கிரமாக இரண்டு பெட்டி அம்மா குடிநீர் தில்லிக்குப் பார்சல் ப்ளீஸ்.....
ReplyDeleteமுன்பு சேட்டை அண்ணா, சுடு தண்ணீர் வைப்பது எப்படின்னு ஒரு பதிவு எழுதியதாக நினைவு.......
கலக்கல்!
என்னமோ கெமிஸ்ட்ரி லேபுக்குள்ள போயிட்டு வந்த மாதிரியே ஒரு ஃபீலிங்....
ReplyDeleteஇந்த சுடுதண்ணீர் சமையல் குறிப்பை அனைவருக்கும் பதிவின் வழியே கற்றுக்கொடுத்ததால், உங்களுக்கு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்ப்பாக, "வாழ்நாள் சுடுதண்ணீர் சமையலாளர்" பட்டம் கொடுக்கிறோம்...வாழ்க..உமது பணி...வளர்க உமது தொண்டு..!
ReplyDeleteபாஸ் உங்க பாணியில் நான் போட்ட பதிவு ...
ReplyDeleteபாத்திரம் கழுவுவது எப்படி ? கிங்’ஸ் கிச்சன்
எங்கூட்டுல பாதரசமானி,கண்ணாடி பாத்திரம் இல்லைங்கோ....
ReplyDeleteவாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteமச்சி நீ கெளப்பி விட்ட புயல் ஓயாம அடிச்சு கிட்டு இருக்கு..
ஒரே நொடியில் சுடுதண்ணீர் சமைப்பது எப்படி?!
ReplyDeleteதேவையான பொருட்கள்:
ஒரு குண்டா சுடுதண்ணீர் (சூடாக)
இப்போது சூடான சுவையான சுடுதண்ணீர் ரெடி! :)
எமது அடுத்த பதிவு:
சுடுதண்ணீரை குடிப்பது எப்படி?
பதிவின் ட்ரைலர்:
//குழாய் நீரை கையில் ஏந்தி குடிப்பது போல சுடுதண்ணீரை குடிக்க முயற்சிக்க வேண்டாம்!//
anna yaruney ithey motha motha kandu pudichithu
ReplyDeleteஹாஹா ராஜி புண்ணியத்தில் இந்தப் பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..
ReplyDeleteஅடுப்பில் வைக்கக்கூடிய கண்ணாடிப் பாத்திரம் என்பதையும் பொதுநலன் கருதி சொல்லிவிடுங்கள் :)
உங்க வழிகாட்டுதலின்படி சுடு தண்ணீர் போடுவதற்கு நான் ரெடி... ஆனால் இந்த "விடியல் ஆட்சியில்" நீங்கள் குறிப்பிட்டுள்ள "அம்மா குடிநீருக்கு" நான் எங்கே போவேன் பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே... ஆமென்.
ReplyDelete