இந்த மாதம் முழுக்க இத்தனை நாட்களில் இதுவரை ஒரே ஒரு பதிவு தான் எழுதி இருக்கிறேன், பதிவு எழுத ஆரம்பித்த மாதம் தொடர்ந்து இத்தனை காலங்களில் இல்லாத சிந்தனை வறட்சி, நிச்சயமாய் என்னால் இதனை "சிந்தனை வறட்சி" என்று தான் வகைப் படுத்த முடிகிறது. யாருடைய வலைபூவிற்கும் நான் செல்லவில்லை ஒரு வேலை நான் சென்றிருந்தாலும் சென்றதற்கான தடத்தைப் பதிக்கவில்லை. எப்போது அடுத்த பதிவை எழுதுவாய்? என்றதன் பின் தான் ஏன் என் வலைப்பூவிற்கு வரவில்லை என்ற கேள்வியைக் கேட்டனர். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, முதல் பத்து நாட்கள் தான் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தது, மீதமிருந்த நாட்கள் - சிந்தனை வறட்சி.
சென்ற வாரம், எப்படியோ ஒரு பதிவை எழுதி அதையும் மிகப் பெரிய வெற்றிக்கு கொண்டு சேர்த்து விட்டனர் நண்பர்கள். வரும் அஞ்சு பத்து கமேன்ட்டுகளையே அதிசயமாய்ப் பார்ப்பேன், வரபோகும் கமெண்ட்டுகளை ஆர்வமாய் எதிர்பார்ப்பேன், சென்ற பதிவிற்கு வந்த கமன்ட்டுகள் மூலம் முதல் முறை சதம் கடந்தேன், எனக்கே மலைப்பாய் இருந்தது, இத்தனைக்கும் கடந்த நாட்களில் நான் யார் பதிவிற்கும் சென்று இருக்கவில்லை, அவர்கள் என்ன பதிவுகள் எழுதி இருந்தார்கள் எழுதுகிறார்கள் என்பதைக் கூட அறிந்து இருக்கவில்லை, இருந்தும் என்னை மதித்து என்னை வைத்து கும்மி அடித்த அனைத்து நண்பர்களுக்கும் மகிழ்வான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து இது வரை ஒரு முறை கூட டெம்ப்ளேட்டை மாற்றி அமைத்தது இல்லை, புதிதாக எதையும் சேர்த்ததும் இல்லை குறைத்ததும் இல்லை. எனக்கே என் வலைப்பூவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. சரி எதாவது செய்வோம் என்று களத்தில் குதித்தேன்,
முதல் கட்ட ஆரய்ச்சியில் இறங்கினேன், என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் யாரிடமும் உதவி கேட்க முடியாது, என்னவெல்லாம் மாற்றங்கள் தேவை என்பதை ஆராய்ந்தேன், முதல் கட்டமாக "PAGES" என்கிற "WIDGET". நமது வலைப்பூவில் நாம் எழுதிய பதிவுகளை முறையாக ஒருங்கிணைக்கக் கூடியது, எத்தனையோ வலைப்பக்கங்களில் பார்த்து உள்ளேன், இருந்தும் எப்படி இதனை சேர்க்காமல் இருந்தேன் என்பது வியப்பாகவே உள்ளது, நீங்கள் இதுவரை உபயோகிக்க வில்லையா உடனே சேர்த்துக் கொள்ளுங்கள், மிகவும் அவசியமான விட்ஜெட்.
இதற்கு அடுத்து நான் செய்த அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் உதவி புரிந்தவர்கள் பிளாக்கர் நண்பன் நமது டெக்னிகல் நண்பன் அப்துல் பாசித் அவர்களும் அண்ணன் வரலாற்றுச் சுவடுகள் அவர்களும். இவர்கள் சும்மா ஒன்றும் எனக்கு உதவி செய்து விடவில்லை, இது கூட உனக்கு தெரியாதா? இது கூட உனக்கு தெரியாதா! என்பது போன்ற அசிங்கப்படுத்தும் கேள்விகளை எழுப்பி அசிங்கப்படுத்தி அதன் பின்னரே கற்றுக் கொடுத்தனர் என்பது ரகசியம் அல்லாத ரகசியம். " தெரியாதுன்னு தானையா உங்க கிட்ட கேக்குறேன், அப்புறம் என்ன இது கூட உனக்கு தெரியாதான்னு ஒரு கேள்வி ". இருவரும் மிக மிகப் பொறுமையாக என்னை அசிங்கப் படுத்திக் கொண்டே கற்றுக் கொடுத்ததால், அவர்களும் எரிச்சல் அடையவில்லை. பின்ன ஆடு சிக்கி இருக்கு கெடா வெட்ட வேணாமா!
தற்போது நான் புதியதாக மாற்றி அமைத்து இருக்கும் முதல் பக்கத்தை முறையாக வடிவமைக்க உதவி செய்தவர் நண்பன் பாசித். முறையாக மாற்றத் தெரியாமல் நான் செய்திருந்த தவறுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி ஒழுங்கு படுத்திக் கொடுத்தார். மிச்சம் மீதி இருந்த டிங்கரிங் வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அதை சரி செய்ய சொல்லிக் கொடுத்தவர் அண்ணன் வசு என்கிற வரலாற்றுச் சுவடுகள். "ஆங் எல்லாம் சூப்பரா வந்த்ருக்குப்பா, இனி ஒரு பிரச்னையும் இல்ல" என்று உறுதி படுத்தியவர் ஹாரிபாட்டர். பாசித் அவர்களிடம் என்ன சந்தேகம் கேட்டாலும் சிரித்துக் கொண்டே சுட்டியை அனுப்புகிறார், அதில் நம் சந்தேகம் தீர தெளிவான விளக்கப் பதிவு ஒன்றை எப்போதோ எழுதி வைத்துள்ளார். நிச்சயம் மிகப் பெரிய விஷயம். ஒரு வாரம் முழுமையாக வேண்டும் பாசித் எழுதிய பதிவுகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு.
பதவி ஆசை இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக தனக்குள் பதவி ஆசை இருப்பதை வெளிபடுத்திய அண்ணன் அரசன் அவர்களின் கைவண்ணம்.
சங்கத்து தீவிரவாதிக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அனைத்து மாற்றங்களையும் உங்கள் தளத்தில் சங்கம் தன் சொந்த செலவில் செய்து தரும். அதுவரை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடமால் இருக்க சங்கம் அன்பான வேண்டுகோள் விடுகிறது. இந்நேரத்தில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும், சதீஷ் அண்ணா இந்நிமிடம் வரை இந்த மாதத்தில் பதினான்கு பதிவுகள் எழுதி இருக்கிறார், ஒரு பதிவு எழுதவே ஒன்றும் தோன்றாத நேரத்தில் அண்ணன் விளையாடுறாரு.
விளம்பரம் :
அண்ணன் சதீஷ் அவர்கள் இந்தப் பதிவில் கேட்டிருக்கும் கேள்விக்கு நமது பதில் என்ன ?( நிச்சயமாய் உரத்த (அ) உரைக்க வேண்டிய சிந்தனை தான் )
பின் குறிப்பு : புதுபொலிவு பெற்றிருக்கும் என்னை தொடர்ந்து வலையுலகில் சந்திக்கலாம் என்பதை புதுப் பொலிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
Tweet |
நல்லது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுங்க...
ReplyDeleteமுதல் வருகைக்கு மிக்க நன்றி சார்
Delete//ரவுண்டுக்கு//
Deleteஇதில் இருந்து சீனு ஒரு "விழுந்து கிடக்கும் "குடிமகன்கள்"-கைவிடப்பட்ட குடிமகன்கள்" என்பது உறுதி ஆகியுள்ளது
ஏதோ புதுப்படம் ரிலீஸ் பண்ணின சூர்யா ரேஞ்சுக்கு அலப்பரைய கூட்டி இருக்க ..
ReplyDeleteஇது மட்டும் சங்க தலையும் , வசுவும் வரட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி ..
யோவ் ஒரு பச்சை புள்ள சிக்குனா இப்படியாயா போட்டு ஓட்டி எடுக்கிறது
Deleteயாரு இங்க பச்சை புள்ளை என்பதை சபீனா போட்டு விளக்கவும்
Deleteகடைசி வரைக்கும் சங்கத்துக்கு என்ன பெயர் என்று சொல்றாய்ங்களே இல்லையே பா
Deleteஎதுக்கண்ணே இந்த கம்மன்ட் மாடுரேசன்
ReplyDeleteஎன் உசுருக்கு ஆபத்து இருக்கு, அதான் இந்த மாடரேசன் எல்லாம் அண்ணே
Deleteவிசயத்தை என்கிட்டே சொல்லும் , நான் தீர்த்து வைக்கிறேன்
Delete//என் உசுருக்கு ஆபத்து இருக்கு, அதான் இந்த மாடரேசன் எல்லாம் அண்ணே//
Delete:)))
புதுசு கொஞ்சம் நல்லா தான் இருக்கு சீனு .. மென்மேலும் வெற்றி பெற்று ஒபாமாவை பின் தள்ளி முன்சென்று ஆட்சி கட்டிலில் அமர .. சீ கட்டிலில் உறங்க என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநா இத்தன நாலு தூங்கினது போதாதா ராசா அவர்களே
Deleteநல்ல உறக்கமோ ?
Deleteசிந்தனை வறட்சி. //
ReplyDeleteஇது பிரபல பதிவருக்கு அழகல்ல .. ஆமா சொல்லிபுட்டேன்
யோவ் யாருயா பிரபலம், அவர முதல்ல கூட்டியாங்க இன்னிக்கு பஞ்சாயத்து பண்ணியே ஆகணும்
Deleteஅந்த பயபுள்ளைய தான் நாமும் கண காலமா தேடிகிட்டு இருக்கேன்
Deleteசென்ற பதிவிற்கு வந்த கமன்ட்டுகள் மூலம் முதல் முறை சதம் கடந்தேன்,//
ReplyDeleteஇதுக்கே மூணு முறை விருந்து வைக்கணும் ..
அதான் நல்ல வந்து பொங்க வச்சீங்களே அப்பரம் என்னவாம்
Deleteநான் விருந்து கேட்டேன் , பொங்கல் வேண்டாம்
Delete//நான் விருந்து கேட்டேன் , பொங்கல் வேண்டாம் //
Deleteசெம கவுண்டர்
இருந்தும் என்னை மதித்து என்னை வைத்து கும்மி அடித்த அனைத்து நண்பர்களுக்கும் மகிழ்வான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். //
ReplyDeleteஇது எப்ப நடந்தது .. எனக்கு தெரியாமே போச்சு ..
யோவ் ஆரம்பிச்சு வச்சதே நீறு தான்
Deleteசரி எதாவது செய்வோம் என்று களத்தில் குதித்தேன்,
ReplyDeleteமுதல் கட்ட ஆரய்ச்சியில் இறங்கினேன்,//
குதித்த தூரத்தின் அகலத்தையும், நீளத்தையும் குறிப்பிட மறந்ததை சுட்டி காட்டி விடை பெறுகிறேன்
டெய்லி மின்வெட்டு இருக்கு அதையெல்லாம் சுட்டி காமிச்ச நாடாது நல்லா இருக்கும்...
Deleteநீள அகலத்த சொன்னா தீவாளிக்கு டிரஸ் எடுத்து கொடுக்கப் போறீங்கள தலைவா
கட்டாயம் சீனுவுக்கு புது சட்டை உண்டு என்ன ஒன்று மாசத்துக்கு முப்பது பதிவு போட்டு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்தணும்
Deleteஉலக பதிவர்களே சீனு ஆராய்ச்சி செய்ய புறப்பட்டு விட்டார் .. கொஞ்சம் கவனம் தேவை , ஹாரி மச்சி , வசு அண்ணே , சதீஷ் அண்ணே நீங்களும் தான்
ReplyDeleteஒன்னுகூடுரதே உங்க வேல .. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்....
Deleteவரட்டும் வரட்டும்
Deleteதம்பி சிங்கம் சிங்கம் சிங்கிளா வந்தாலும் சரி ஸ்ரேயா கூட வந்தாலும் சரி.. வரலாற்று சுவடுகள் விட்ட இடத்தை சீனு அவர்கள் நிரப்ப முயற்சிக்கிறார்.. கொ.பா.செ அவர்களே வ.சு கோட்சே ஆக முதல் ஆக வேண்டியதை பாருங்கள்
Deleteசதீஷ் அண்ணா இந்நிமிடம் வரை இந்த மாதத்தில் பதினான்கு பதிவுகள் எழுதி இருக்கிறார், ஒரு பதிவு எழுதவே ஒன்றும் தோன்றாத நேரத்தில் அண்ணன் விளையாடுறாரு. //
ReplyDeleteநான் பதினான்கே குறைவாக இருக்கிறது என்று வெம்மி கொண்டிருக்கிறேன் .. இதுல வந்து பதினான்கு என்று ஆச்சர்ய படுவது நல்லதல்ல
யோவ் கண்ணு போடதீருமையா அவரு பாவம்... அண்ணே நீங்க சதீஷ் அண்ணே நீங்க எழுதுங்கண்ணே
Deleteபுதுபொலிவு பெற்றிருக்கும் என்னை தொடர்ந்து வலையுலகில் சந்திக்கலாம் என்பதை புதுப் பொலிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஅதான் எப்ப னு கேக்கறோம்
சுபயோக சுபதினத்தில் சார் :-)
Deleteபதவி ஆசை இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக தனக்குள் பதவி ஆசை இருப்பதை வெளிபடுத்திய அண்ணன் அரசன் அவர்களின் கைவண்ணம். //
ReplyDeleteஇல்லாத ஒன்றை ஏனைய்யா இப்படி கெளப்புற .. ஹாரி மச்சி இதை நீங்க தான் கேட்டு ஒரு முடிவு எடுக்கணும் ..
அதெல்லாம் முடியாது சங்கம் தழைக்க உங்கள விட்டா அடி வாங்கறதுக்கு வேற ஆளு கிடையாது....
Deleteநான் அதுக்குதான் சரியா இருப்பேன் என்று யாரைய்யா உமக்கு சொன்னது
Delete>>>நான் அதுக்குதான் சரியா இருப்பேன் என்று யாரைய்யா உமக்கு சொன்னது<<<
Deleteஇதையெல்லாம் யாராவது சொல்லன்னுமான்னே... நம்ம முகரையை பார்த்ததும் கண்டுபிடிச்சிர மாட்டாய்ங்க..! பிஞ்சு மூச்சின்னே உங்களுக்கு!
தொடர்ந்து வாரும் சீனு , உங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள பெருத்த ஆவலுடன் இருக்கிறேன் ..
ReplyDeleteநிச்சயமாக மனபாடம் செய்ய வேண்டிய ஆகச் சிறந்த பாடாவதி கருத்துக்கள், என் சார்பாக வரலாறு மனபாடம் செய்து உம்மைக் கொல்லுவார்
Deleteஹா ஹா ... வரட்டும் வரட்டும் வசு அண்ணன்கிட்ட நான் பேசிக்கொள்கிறேன்
Deleteபுதுப் பொலிவு! - வாழ்த்துகள் சீனு.
ReplyDeleteரைட்டர் சீனு??? அடுத்த சுஜாதா இங்க தானா? ஆண்டவா! டிசம்பர்ல கண்டிப்பா உலகம் அழிஞ்சிடணும்!!
ReplyDeleteஹா ஹா ஆமா
Deleteசங்கத்துல நம்ம ப்ளாக்கிற்கும் ஏதாச்சு தர்மம் கிடைக்குமா?
ReplyDeleteபிரபல பதிவர் இப்படி கேட்பது அநாகரிகம்
Deleteஅப்போ கேட்காமலே சங்கத்துல செய்து தருவீங்களாப்பா?
Deleteஇல்லை, பிரபல பதிவரான நீங்கள் தான் சங்கத்திற்கு நன்கொடை வழங்க வேண்டும்!
Delete>>அப்போ கேட்காமலே சங்கத்துல செய்து தருவீங்களாப்பா?<<
Deleteஆம்...தாரை தப்பட்டை மற்றும் இதர செலவுகளை சங்கமே ஏற்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொல்கிறேன்! (எழுத்துப்பிழை இல்லை என்பதை உணர்க)
#சீனு வாய்ஸ்!
வானா சுனா கொஞ்ச நாளா எல்லாருக்கும் பாடையைக் கட்டுறதுல குறியா இருக்காப்ல...என்னா காரணமோ தெரியல.
Deleteஎன்ன பாஸூ டெரரா யோசிச்சிருக்கீங்க......
ReplyDeleteஎல்லாம் சோக்காத்தான் ஈக்குதுப்பா....
மாதத்துல் ஏற்கனேவே ஒரு பதிவு போட்டிருக்கு அதனியும் நான் மிஸ்ஸிங்க......
ReplyDeleteஇதுக்கெல்லாம் கட்டயத் தூக்க வேணாம்
படிச்சிட்டு வந்திடுறேன்
>>>மாதத்துல் ஏற்கனேவே ஒரு பதிவு போட்டிருக்கு அதனியும் நான் மிஸ்ஸிங்க<<<
Deleteஅதான் இம்புட்டு தெளிவா பேசுறீங்க....உங்க நல்லதுக்கு சொல்றேன்....இப்பிடியே ஓடிருங்க....இல்ல அந்த பதிவையும் படிச்சுட்டுதான் 'போவேன்'ன்னு சொன்னா உங்க விதியை மாத்த யாரால முடியும்!
உங்கள் இறுதி பயணத்திற்கு என் பிரார்த்தனைகள்..ஆமென்!
ஆங்,,,,,,,,,, இது வேறயா சரி சரி நான் படிச்ச விசயத்த யாரிட்டயும் சொல்லிடாதீங்க
Deleteஇனி பதிவுகள் எதிர்பார்க்கலாம் என்பது நல்ல விஷயம். கொண்டாடுங்க... கொண்டாடிகிட்டே இருங்க!
ReplyDeleteகடந்த பதிவில் சதமா? வரலாறும் சங்கமும் நோ பாலா வீசினா புல்லா ப்ரீ ஹிட்டுதான் ...இன்னைக்கு பாரு உனக்கு சளைக்கமா பால் போட்டுருக்கு நம்ம சனாதிபதி அரசன்..இன்னும் வரலாறு,ஹாரி தல..எவ்வளவு இருக்கு பாக்கி?ஒரு புண் சிரிப்போடையே பதிவ படிக்க வைச்சிடுரே...அதுக்கப்புறம் பின்னூட்ட கொடுமைகள் வாய் திறந்து சிரிக்க வைக்கின்றன....
ReplyDeleteநான் ஜம்மு போறதுக்கு முன்னாடி எவ்வளவு எழுதனுமா அவ்வளவு எழுதிடுறேன்...நூறாவது பதிவுக்கு உனக்கும் சங்கத்து நண்பர்களுக்கும் நடுவுல ஒத்த ரூபா காசை போட்டு லா லா லா பாடனும்..(ஒத்த ரூவாய நான்தான் எடுப்பேன்)
அப்துல் பாசித் தான் என்னோட பிளாக்கையும் எப்சி செய்து கொடுத்தாரு..பயபுள்ளைக்கு உடம்பெல்லாம் மூளை...:)
பதினாலு பதிவு.....எழுதுறது ஒரு மாதிரி போதையா இருக்கு சீனு தப்பா சரியா தெரியலை.....எவ்வளவு நாள் முடியுதோ அவ்வளவு நாள் ஓடட்டும்...
இன்னைக்கு அரசன் போட்ட நோ பாலெல்லாம் சிக்ஸ்சராகுது....அடி ராசா அடி..அவரும் சளைக்கமா போடுறார் பாரு...
ReplyDeleteநீ என்ட்ட முகநூலில் சொன்னதெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டேன்....புதுப் "பொலி"வோடு சீக்கிரம் வா ராசா.....
ReplyDeleteஎன்ட்ட எந்த கேள்வியும் கேட்காம பொறுமையா அப்துல் மாத்தி கொடுத்தார்...இத மட்டும் நான் வெளில சொன்னா சீனு எவ்வளவு கஷ்டப்படுவான்? எவ்வளவு பேச்சுக்கள் வாங்கி சீர் செய்த பொலிவான தளத்தில் நான் ஏன் விசத்தை தெளிப்பானேன்?அதனால எனக்கு பிளாக்கர் நண்பன் திட்டாமல் அசிங்கபடுத்தாமல் கேவலப்படுத்தாமல் என் தளத்தை சரி செய்து கொடுத்ததை நான் சீனுவிடம் சொல்லி வெறுப்பேற்ற மாட்டேன் என்று இந்த பின்னூட்டம் மூலம் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.....ஆமென்.
ReplyDeleteஅய்யய்யோ... அசிங்கப்படுததலாம் இல்லைங்க...
Deleteதிரட்டியை காணோம் என்று சொன்னார், "பக்கத்துல போலிஸ் ஸ்டேசன் இருக்கா?" என்று கேட்டேன். அப்புறம் நிறைய தடவை "ஹிஹிஹிஹி" என்று சொன்னேன். அவ்ளோ தான்!
ஹிஹிஹிஹி....
கலக்குங்க கலக்குங்க! காத்திருக்கோம்!
ReplyDeleteரெண்டு மூணு விட்ஜட் சேர்த்தா அது புதுபொலிவா? என்ன கொடுமை ஹாரி இது?
ReplyDeleteஇந்த பிளாக்கர் நண்பனின் தன்னடக்கத்தை மனப்பாடம் செய்துக்குறேன்...
Deleteஅங்க வந்து அசிங்கப் படிதினது போதாதா, இங்கயும் அசிங்கப் படுத்தணுமா....
Deleteநம்ம தலைவர் எம்.ஜி.ஆர் முகத்தில் ஒரே ஒரு பருவை ஒட்டி வைத்துவிட்டு மாருவேசம் என்று சொல்லுவார்.. அதையெல்லாம் கைதட்டி ரசித்த மக்கள் கூட்டம் இன்று கலாய்க்க வருவது வேதனை!
ReplyDelete#சீனு வாய்ஸ்!
யோவ் வரலாறு எலிக்கு ஒரு குகை கிடைச்ச புலிக்கு ஒரு குகை கிடைக்காமலா போயிரும் :-)
Delete
ReplyDeleteபுதுப்பொலிவுடன் திடங்கொண்டு போராடு?? - பாண்ட்ஸ் டப்பா வாங்கி இருக்கீங்களா??
அரசன் சோப்..ரொம்ப ரொம்ப நல்ல சோப்!!
ReplyDeleteஏன்னே அவரு தான் சபீன போட்டு விளக்கு விளக்குன்னு விளக்குராருன்னா நீங்க அவர நல்ல சோப்பு ன்னு வேற சொல்றீங்க, இன்னும் எப்படி எல்லாம் விளக்குவாரோ தெரியலையே
Delete>>>இருந்தும் என்னை மதித்து என்னை வைத்து கும்மி அடித்த அனைத்து நண்பர்களுக்கும் மகிழ்வான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்<<<
ReplyDeleteங்கொய்யாலா அடிச்ச அடில பத்து நாளா பெட்டுல இருந்து எந்திரிக்க முடியாமகிடந்திட்டு..அதை எவ்வளவு அருமையா சமாளிக்கிறீர்...உம்ம ராசதந்திரம் தமிழின தலைவர் கருணாநிதிக்கு கூட வராதுய்யா! (சீனு எப்பிடி சமாளிக்கிறார் என்பதை கீழே பார்க்க...)
>>>>எப்போது அடுத்த பதிவை எழுதுவாய்? ஏன் என் வலைப்பூவிற்கு வரவில்லை? என்று என்னிடம் அனைவரும் கேள்வி கேட்டனர். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை....முதல் பத்து நாட்கள் தான் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தது, மீதமிருந்த நாட்கள் - சிந்தனை வறட்சி<<<<
>>>>சென்ற பதிவிற்கு வந்த கமன்ட்டுகள் "மூலம்" முதல் முறை சதம் கடந்தேன்<<<<
ReplyDeleteஉடனடியாக நல்ல சித்த வைத்தியர் ஒருவரை அணுக சங்கம் ஆணையிடுகிறது!
எங்கே பலநாளாய்க் காணவில்லையே என்று பார்த்தேன்!
பதுப் பொலிவோடு வந்துள்ளீர்! திடங்கொண்டு போராட!
வருக!
>>>ஆங் எல்லாம் சூப்பரா வந்த்ருக்குப்பா, இனி ஒரு பிரச்னையும் இல்ல" என்று உறுதி படுத்தியவர் ஹாரிபாட்டர்<<<
ReplyDeleteஆமா...ஹாரி பெரிய ஐநா சப லீடரு...சீனு அமெரிக்க சனாதிபதி.....அவரு உறுதிப்படுத்துறத இவரு செயல்படுத்துவாறு...யோவ் முதல்ல ரெண்டு பேரும் போய் பல்ல நல்லா விளக்குங்கப்பா...நாத்தம் தாங்க முடியலைடா சாமி!
#கவுண்டமணி வாய்ஸ்
அவ்வளவு சத்தமாவா கேட்குது
Deleteபுதுப் பொலிவுடன் தொடர்ந்து கலக்குங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
// புதுபொலிவு //
ReplyDeleteநல்ல பொலிவு... இங்கே நைட் விடிய விடிய பொழிந்தது.... நான் மழையைச் சொன்னேன் :-)))
// முகப்புத்தகத்தில் எனது பக்கம், விருப்பம் இருந்தால் லைக்குங்கள்... //
தம்பி...கொஞ்சம் காசு செலவாகும் பர்வாயில்லையா தம்ப்ரீ.....:-)))
// ரெண்டு மூணு விட்ஜட் சேர்த்தா அது புதுபொலிவா? என்ன கொடுமை ஹாரி இது? //
அதானே ங்கொய்யாலே சும்மா ஊரை ஏமாத்தக்கூடாது....
// என்ன பாஸூ டெரரா யோசிச்சிருக்கீங்க...... //
ம்க்கும் இந்த ஒத்த கமெண்ட்ல சீனு காமடி பீசாயிட்டாம் :-)))
// யோவ் யாருயா பிரபலம், அவர முதல்ல கூட்டியாங்க இன்னிக்கு பஞ்சாயத்து பண்ணியே ஆகணும் //
புதுச் செம்ப்பா பளபளாங்கு :-))))
// சங்கத்துல நம்ம ப்ளாக்கிற்கும் ஏதாச்சு தர்மம் கிடைக்குமா? //
கிடைக்கும் கிடைக்கும் பெரிய தட்டா ஏந்துனா சான்ஸ் இருக்கு....:-)))
// தொடர்ந்து வாரும் சீனு , உங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள பெருத்த ஆவலுடன் இருக்கிறேன் .. //
அரசன் ஒருத்தன் போதும் போலயே... சீனுப்பய உடம்பை ரணகலம் ஆக்குறதுக்கு :-)))
அண்ணே இந்த கமெண்டையே ஒரு பத்து கமெண்டா பிரிச்சு இருந்தா, பயபுள்ள அசால்ட்டா ரெண்டாம் சதம் கடந்திருப்பாப்ல
Delete// கவிதை வீதி... // சௌந்தர் //17 October 2012 19:24
ReplyDeleteநல்லது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுங்க... //
யோவ் வாத்தி.... சீனு பாவம்யா... விட்ரு... இல்லைனா அழுதுடுவாம்....:-)))
ஆமா அது என்ன ரவுண்டுனு சொல்லவே இல்லியே.... :-)))
புதுப் பொலிவுடன் பாக்கறதுக்கு நல்லாவே இருக்கு. தொடர்நது அடிச்சு ஆடுய்யா. பல சமயங்கள்ல எனக்கும மண்டை காய்ஞ்சு போய் அடுத்து என்ன எழுதறதுன்னு தெரியாம முழிச்சிருக்கேன். (ட்ராப்ட்ல எதும் சொத்து சேத்து வெக்கற பழக்கமே கிடையாது நம்மட்ட) இதுவும் கடந்து போகும். (மனக்குரல்- நீதான் இப்டின்னா உனக்கு வாய்ச்ச சிஷ்யப்புள்ளையும் இப்படியேவா...?)
ReplyDeleteஇதையே ஒரு பதிவா கொடுத்தாச்சு...வாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இனிமே அடிச்சு ஆடுங்க!
ReplyDelete//சென்ற பதிவிற்கு வந்த கமன்ட்டுகள் மூலம் முதல் முறை சதம் கடந்தேன், //
ReplyDeleteரெண்டாம் சததுக்காக எனது முதல் பங்களிப்பு
81 (comment moderation சதி பண்ணினா நான் பொறுப்பில)
உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்
ஏதோ சங்கத்துக்கு என்னாலான ஒரு கமெண்ட் :)
Deleteஆனா ... இந்த கமெண்ட் மாடரேஷன் கருமத்தை தூக்காட்டி, இனிமேல் இந்த மாதிரி பங்களிப்புகள் வழங்கப்பட மாட்டாது.
Deleteபுதுப்பொலிவுடன் வலைப்பக்கத்திற்கு வாழ்த்துகள்..
ReplyDelete