20 Jun 2013

யாராவது சொல்லுங்களேன் பிரபலம் ஆவது எப்படின்னு...!


அதிகாலை பத்து மணி, நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது தான் அரசனிடம் இருந்து அந்த விபரீத போன் கால் வந்து என்னை எழுப்பியது

" யோவ் தலைவரே, எந்தியா", அரசன் குரலில் ஆகசிறந்த படபடப்பு தெரிந்தது.

இது சற்றே இலக்கிய நயம் கமழப் போகும் பதிவென்பதால் சில பல ஆகச் சிறந்தக்களையும், அவதானிப்புகளையும், பாடாவதிகளையும் இலக்கிய மொன்னைகளையும் நீங்கள் கடக்க வேண்டியிருக்கும் என்பதால் சற்றே பொருத்தருள்க.

"சொல்லுங்க தலைவரே, இப்ப என்ன பிரச்சன உங்களுக்கு" 

"யோவ் பிரச்சன நமக்கு தான்யா, எத்தன நாளைக்கு தான் வெறும் பதிவு மட்டுமே எழுதிட்டு இருக்கது, நாமளும் பிரபலம் ஆகணும்யா" 

"இப்ப அதுக்கு என்னன்றீங்க"

"நம்ம பால கணேஷ் சார், ஸ்கூல் பையன், ஜீவன் சுப்பு எல்லாரும் என் ரூமுக்கு வாராங்க, ரூம்ல லைட்டு போட்டு யோசிக்கிறோம், பிரபலம் ஆகுறோம், உடனே கிளம்பி வா"

"லைட்டா போட்டு யோசிச்சா தான் தப்பு, லைட்டு போட்டு யோசிச்சா தப்பில்லைதானே"  

அரசன் சொல்வது சரிதான் எத்தனை நாளைக்கு தான் வீட்டில் மட்டுமே திட்டு வாங்கிக் கொண்டு இருப்பது, நாலு பேர் நம்மை காய்ச்சி எடுத்தால் தானே பிரபலம் ஆக முடியும், சமுதாயத்திற்காகவே வாழ்ந்தான் என்று பெயர் எடுக்க முடியும். 

எனக்கு முன்பே முன்னவர்கள் குழுமி இருந்தார்கள், வரவேற்பும் சற்றே ஆகசிறந்ததாய் அமைந்தது.

வாத்தியார் தான் முதலில் ஆரம்பித்தார், "எலேய் நாந்தான் சீனியர், அதுனால நான்தான் மொதப் பிரபலம் ஆகணும், அப்புறம் நானே உங்கள பிரபலம் ஆக்கிருதேன்"

"அதுவும் சரிதான் தம்பி, சாருக்கு தான் கொஞ்சம் அமானுஷ்யமான முகம் கூடவே அம்சமான முகம், அப்டியே செட் ஆகும்" என்று அப்பாவியாய் ஐடியா கொடுக்க ஆரம்பித்தார் ஸ்கூல் பையன்.

"தலைவரே, இம்புட்டு அப்பாவியான முகத்த நான் பார்த்ததே இல்ல, நம்ம ஸ்கூல் பையன் கிட்ட தான் அத்தனை சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திப் போய் இருக்கு, இவர அமானுஷ் ஆக்குறோம், வாத்தியார தீவிர இலக்கியவாதி ஆக்குறோம், கூடவே நாமும் பிரபலம் ஆகுறோம், எப்புடி ஐடியா", எனது பாடாவதி ஐடியாவிற்கு கூட்டம் செவி சாய்ப்பது போல் தோன்றியது.

" சீனு, எனக்கு ஆபீஸ்ல பேஸ்புக் கட், நான் என்ன பண்றது?" என்று பூனை போல் பம்மிக் கொண்டே ஒரு குரல் ஓரமாய் இருந்து வந்தது, யார் என்று பார்த்தால் நம் ஜீவன் சுப்பு.

" மிஸ்டர் ஜீவன், உங்களுக்கு பிரபலம் ஆகணுமா வேணாமா", இது ஆகசிறந்த நான்.

" ஆவணும் ஆவணும்", ஜீவன் 

"ஆமா இதுக்கு மட்டும் வேகமா தலைய ஆட்டுங்க, ஆனா பேஸ்புக் இல்ல ஆபீஸ் தொல்லன்னு சொல்லுங்க, சமீப கால உங்க கமெண்ட், பதிவு எல்லாத்தையும் பார்க்கும் போது நீங்க ஆகசிறந்த பதிவுலக இமிட்டரி ஜீவநோஸ்க்கியா வர வாய்புகள் பிரகாசமா இருக்கு. நாளையில இருந்து நீங்க பேஸ்புக்ல குதிக்கிறீங்க, லைக்குகள அல்லுறோம், படிகிறவன் பூரா பேரையும் கொல்லுரோம் அப்டியே பிரபலம் ஆகுறோம்"

" அட அட அட பிரபலம் பிரபலம் ன்னு சொல்லும்போதே எம்புட்டு சுகமா இருக்கு", ஸ்கூல் பையன்.  

" யோவ் அண்ணாச்சி பிரபலம் ஆகுற வரைக்கும் தான்யா சுகமா இருக்கும், அப்புறம் பாருங்க ஒரே ரணம் தான்", அரசன்.

இந்நேரத்தில் வாத்தியார் பால கணேஷ் "சரிப்பா இலக்கியத்துக்கு நான் தயார், அமானுஷ் ரெடி, இமிட்டரி ரெடி, நீயும் அரசனும் என்ன பண்ண போறீங்க"

" வாரேவா, இப்ப தான் பாயிண்ட புடுச்சீங்க, நீங்களும் ஸ்கூலும் போகப் போற பாத பூப்  பாத, நானும்  அரசனும் போகப் போற பாத உங்கள உரண்ட இழுக்கப் போற சிங்கப் பாத, ஜீவன் பாத என்னதுங்கறது தான் ட்விஸ்ட், இதுல முக்கியமான விஷயம் நாம போறப் பாத ஒரே பாதங்கறது யாருக்கும் தெரியக் கூடாது, முக்கியமா இந்த உலகத்துக்கு", சீனு  

"தலைவரே நமக்குள்ள இப்ப சண்ட வரணும், அதுக்கு என்ன பண்ணப் போறோம்", அரசன்   

வாத்தியார் ஆரம்பித்தார் "அடேய் கணேசா, அப்படின்னு யாராது என்ன திட்டி பதிவு போடுங்க, சீக்கிரம் சீக்கிரம் நாம பிரபலம் ஆயிறலாம்"  

"வாத்தியாரே அவசரப்படாதீங்க, மொதல்ல நாம வேளச்சேரி போறோம், அங்க ஒரு இலக்கியவாதிய உங்க கூட பேச சொல்லுவோம், அவரு என்ன பேசினாலும் நீங்க சிரிக்க கூடாது, 'சார் டீ சாப்டீங்களான்னு கேட்டா கூட' நான் எவ்ளோ பெரிய பிரபலம் தெரியுமா என்ன பாத்து நீ எப்படி அந்தக் கேள்விய கேக்கலாம்ன்னு பொங்க ஆரம்பிக்கீங்க, ரொம்ப முக்கியமான கட்டம் வாத்தியாரே, கோட்ட விட்டா நம்மால ஒன்னும் பண்ண முடியாது."

"சரிப்பா அடுத்து என்ன பண்ணும்"

"பொறுங்க வாத்தியாரே ஒன்னு ஒன்னா சொல்றோம், அந்த ஆள மீட் பண்ணினதும், 'அப்டியும் இருக்கிறார்கள்', 'வேளச்சேரியும் சிங்கிள் டீயும்'ன்னு பதிவு போடுறீங்க", இடையிடையே மொன்னைகள் நொன்னைகள் என்பன போன்ற சில பதிவுகளை வாத்தியார் எழுதி திட்டு வாங்கிட்டே இருக்கனும்.  

இனி தான் நம்ம ஸ்கூல் பையன் என்ட்ரி.

அது எப்படி டா ஆகசிறந்த என் தலைவனப் பாத்து அப்படிக் கேக்கலாம்ன்னு கவிதை எழுத ஆரம்பிக்கிறாரு நம்ம ஸ்கூல், 'நாலும் நாலும் எட்டு, என் இலக்கியம் தான் பெஸ்ட்டு'ன்னு முத கவித, லைக் அள்ளுது. 


இப்ப நம்ம இமிட்ரி "பிரபலங்களுடன் வாழ்வதை விட பிரபலமாய் வாழ்வதையே மனம் விரும்புகிறது"ன்னு ஸ்டேடஸ் போட நானும் அரசனும் உள்ள நுழையிறோம்...

சிங்கிள் டீ பிரச்சனைய தேசியப் பிரச்சனையா மாத்துறோம், ஒரே வெட்டு குத்து, ஒருத்தனுக்கும் ரத்தம் வராது, ஆனா படிகிறவன் மொத்த பேருக்கும் கண்ணுல ரத்தம் இல்ல கருவிழியே வெளியில வார மாதிரி சட்டைய கிழிச்சிட்டு சண்ட போடப் போறோம்.

இந்த நேரத்துல ஊரே 25 ரூபா கேன் வாட்டர் வாங்கி குடிக்கும் போது நீங்களும் ஸ்கூல் பையனும் பிஸ்லெரி வாட்டர் வாங்கி குடிக்கிறீங்க, இத நாங்க போட்டோ எடுக்குறோம்.  அப்புறம் மிரட்டுறோம், நீங்களோ தண்ணி குடிச்சே பல நாள் ஆகுது இதுல எங்க பிஸ்லேரி குடிகிறதுன்னு இலைமறை காய்மறைவா பதில் சொல்றீங்க"            

ஆதாரத்த வெளியிட்டறுவோம்னு மிரட்டுவோம், ஆனா வெளியிட மாட்டோம், நம்ம ஊரு லோக்கல் சேனல் அத்தனயிலையும் ஏற்பாடு பண்ணிட்டோம், டெயிலி ஒரு ப்ரோக்ராம், மக்கள் பிரச்சனைய பேச வாங்கன்னு கூப்பிடுவாங்க நீங்களும் போகனும் ஆனா மக்கள் பிரச்சனைய பேசுற மாதிரியே உங்க பிரச்சனையைப் பத்தி மட்டும் பேசிட்டு வரணும். 

பதிவுலக பிரபல கவிஞர்கள் இருபது பேர வச்சி 20-20 நடத்துவோம், அதுல உங்களுக்கு ஒரு வாய்ப்பு, பக்கத்துக்கு கிரகமான புளூட்டோ அதிபர பத்தி புளுகுறீங்க கூடவே புகழுறீங்க, நாங்க கடுப்பாகுறோம். இங்க தான் உச்ச கட்டப் போர்.   

"பிரபலம் ஆவது எப்படி என்னிடம் ஆயிரம் டிப்ஸ், சொன்னால் நீங்களும் பிரபலம் ஆக வாய்ப்பு இருப்பதால் பிம்பிளிக்கி பிளாப்பி" என்பது போன்ற சம்மந்தமில்லாத ஸ்டேடஸ்களை போட்டு ஜீவன் சுப்பு ஆயிரம் லைக்குகளுக்கு மேல் அள்ளுவாரு.    

இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பத்தாம் தரமான இலக்கிய இதழ்ல எழுத வாய்ப்பு வாங்கி தருவோம், அங்கையும் உங்க பிரச்சனைய எழுதிட்டு, அப்படியே அதுல எங்க பேரையும் நாங்க பண்ற அக்கப்போரையும் ஸ்க்ரீன் ஷாட்டோட எழுதணும், பக்கத்துக்கு தெரு ஆயாக்கு நியாயம் கிடைச்சது எனக்கு கிடைக்கலன்னு கண்ணீர் விடனும்.  

அடுத்த நாள் காலையில ஆள் கும்மி பாய்ஸ் உங்களைப் பத்தி தான் எழுதி இருக்கேன், உடனே நாதஸ்வரம் கெட்டிமேளத்துடன் போய் வாங்குங்கன்னு ஸ்டேடஸ் போடணும்.  

ஊரே நம்மள பத்தி தான் பேசும். நமக்கு பேக்ரவுண்ட் சாங் எல்லாம் உண்டு.  

லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம்     
லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம் 

ஆகுறண்டா உலகத்துல பேமஸ் ஆளு 

லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம்     
லைக்கு கமெண்ட்டு ஷேரு... பலம் பலம் 

கமெண்ட்டு ஷேரு ஷேரு....கமெண்ட்டு ஷேரு ஷேரு...
கமெண்ட்டு ஷேரு ஷேரு...கமெண்ட்டு ஷேரு ஷேரு...

ஆகுறண்டா உலகத்துல பேமஸ் ஆளு

"ஆனாலும் சீனு எனக்கொரு டவுட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு நாதாரித்தனம் பண்ணியும் நாம பிரபலம் ஆகாட்டா என்ன பண்றது?" ஸ்கூல் பையன் முகத்தில் எங்கே பிரபலம் ஆகாமல் போய் விடுவோமோ என்பதற்கான பய ரேகைகள் தெரிந்தது.

"கவலைப் படாதீங்க மிஸ்டர் ஸ்கூல் பையன், 'என் அருமையான தயிர் சாதங்களே தயிர் சாதத்தை சாப்பிடு, ஊறுகாயை எதிர்பார்க்கதேன்னு' சாது சாத்தப்பன் பவர் டிவியில நமக்காகவே சொல்லி இருக்காரு. சோ தயிர் சாதம் தான் முக்கியம் ஊறுகாய் இல்லன்னு ஜீவன் சுப்புவ ஸ்டேடஸ் போட சொல்லுவோம், அதுக்கு விழுற லைக்குல நாம ஆகுறோம் பிரபலம்"

அரசன் மண்டையை சொரிந்து கொண்டே, "யோவ் இப்ப என்னய்யா சொன்ன, ஒண்ணுமே புரியலையே" 

"இப்டி புரியாத மாதிரி ஸ்டேட்டசும் சண்டையும் போட்டாலே போதும், கண்டிப்பா நாம பேமஸ் தான்"

அந்நேரம் எங்கள் அண்ணன் மெட்ராசிடம் இருந்து போன் " சீனு பவர் டிவியில உங்களில் யார் அடுத்த பிரபல தாதா காண்டஸ்ட் நடக்குது சீக்கிரம் வாங்க, அப்ப்ளிகேசன் பார்ம் காலியாகப் போகுது என்ற தகவல் வந்ததும் எங்கள் மொத்த கூட்டமும் அலறி அடித்துக் கொண்டு பவர் டிவியை நோக்கி ஓடியது

சம்பவ இடத்தில மெட்ராஸ் அருகில் நின்று கொண்டிருந்த பட்டிக்ஸ் பவர் டிவியை மொய்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பார்ரா மொத்த டேஸ்போர்டும் இங்க தான் வந்து நிக்குது என்று பேஸ்புக்கில்  ஸ்டேடஸ் போட அதைப் படித்து மொத்த கூட்டமும் பட்டிக்ஸ் மீது கொந்தளிக்க யாருமே எதிர்பாரா வண்ணம் பட்டிக்ஸ் ஒரே ஸ்டேடஸ் ஓகோன்னு பிரபலம் என்று பிரபலமாகி விடுகிறார்.

"யாராவது சொல்லுங்களேன் பிரபலம் ஆவது எப்படின்னு" என்று ஸ்கூல் பையன் அங்கலாய்க்க பிரபலம் ஆக முடியா வருத்தத்தில் 'என்னவோ போடா மாதவா' என்று சொல்லிக் கொண்டே எங்கள் கூட்டம் கலைந்தது.  

49 comments:

  1. அடங்க கொக்கா மக்கா... ஏன்யா என்னைய சொல்லிட்டு நீங்க கிளம்பிட்டிங்க..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எங்களுக்கும் அசை இருக்காதா என்ன

      Delete
  2. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ! நானும் அதுதான் தேடுகின்றேன் முகவரி இருந்தா சொல்லூங்க சாமீஈஈஈஈஈஈஈஈஈஈக்ளா!ஹீ கமடிப்பதிவுகூட சீனுவுக்கு வருகின்றதே!ம்ம் இன்று தான் பார்த்தேன் சீனு சின்னவர் என்று!ஹீ இனி சார் இல்லை டேய் என்று வரும்!ஹீ

    ReplyDelete
    Replies
    1. காமெடி பதிவு நமக்கு அவ்வளவா வராது, கொஞ்சம் ஒக்கையா இருந்தாலும் பாராட்டுன உங்களுக்கு நன்றிண்ணே

      //ம்ம் இன்று தான் பார்த்தேன் சீனு சின்னவர் என்று!ஹீ இனி சார் இல்லை டேய் என்று வரும்!ஹீ// இப்ப தான் ஒரு கூட்டம் எனக்கு ஏகப்பட்ட பெயர் கொடுத்து கவிரத பண்ணிருக்கு, அடுத்து சின்னவர் பட்டமா..ரைட்டு கிளப்புங்க :-)

      Delete
  3. உங்க கூட்டத்துக்கு கூப்ட என்ன மறந்துட்டீங்களே!!! ரொம்ப நாளா எனக்கும் இந்த டவுட்... அன்ன பிரபலம், பிரபலம்ன்னு சொல்றீங்களே!!! இந்த பிரபலம் எந்த கடைல விக்கிதுன்னு மட்டும் சொல்லவே மாட்டங்குரீங்களே!!! கடல்லையே இல்லையாம்னா, பார்த்துக்குங்களேன்!!!

    கலகலன்னு இருக்கு பதிவு!!! நம்ம அரசன் அண்ணனுக்கு இவ்ளோ பெரிய விபரீத ஆசை எதுக்குன்னுதான் தெரியல!!!

    ReplyDelete
    Replies
    1. //உங்க கூட்டத்துக்கு கூப்ட என்ன மறந்துட்டீங்களே!!! // மன்னிச்சு நண்பா... இனி வரும் கூட்டங்களுக்கு உங்களை நிச்சயம் அழைக்கிறேன்... நீங்களும் தவறாது கொள்ளுங்கள்.. விரைவில் பதிவர் சந்திப்பு பற்றிய பேச்சு வார்த்தைகள் தொடங்கும் அந்தக் கூட்டங்களுக்கு வாருங்கள்

      //இந்த பிரபலம் எந்த கடைல விக்கிதுன்னு மட்டும் சொல்லவே மாட்டங்குரீங்களே!// இப்போதைக்கு பேஸ்புக்ல கிடைகிறது நாளைக்கு கட மாறினாலும் மாறலாம் :-)

      //நம்ம அரசன் அண்ணனுக்கு இவ்ளோ பெரிய விபரீத ஆசை எதுக்குன்னுதான் தெரியல!!!// அரசன் ஆச வந்தாலே விபரீதம் தானே :-)

      Delete
  4. செம டைமிங் காமெடி :):) நீங்க சொல்லுற ஐடியா எல்லாம் ஏற்கனவே ஏற்கனவே பிரபலம் ஆனவங்களுக்கு ஒத்து வருமா ??

    ReplyDelete
    Replies
    1. //ஏற்கனவே பிரபலம் ஆனவங்களுக்கு ஒத்து வருமா ??// அவிங்க தான் அல்ரெடி ஆயிட்டாங்களே அப்புறம் எதுக்கு தல.. நமக்கு ஒத்து வருமான்னு தான் பாக்கணும் :-)

      Delete
  5. கலக்கல் இப்படித் தான் ரூம் போட்டு யோசிச்சு எல்லோரும் பிரபலமாயிட்டாங்களா ?!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆமா வாங்க அடுத்து நாமளும் தயார் ஆவோம்

      Delete
  6. புரியாத மாதிரி ஸ்டேட்டசும் சண்டையும் போட்டாலே போதும், கண்டிப்பா நாம பேமஸ் தான்"

    -சரியான பாயிண்ட்டைப் புடிச்சு நீ ஏற்கனவே பிராப்ளம்... ஸாரி, பிரபலம்ங்கறத நிரூபிச்சுட்டியே தம்பீ!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி பதிவுகள ஒரு சாதாரண பதிவரால போட முடியாது. நிச்சயம் பிற பல சாரி பிரபல பதிவரால மட்டும் தான் போட முடியும்..

      Delete
    2. வாத்தியாரே இப்படியே பேசிக் கொண்டு போனால் நம்மால் பிரபலம் ஆக முடியாது... சீக்கிரம் சண்டையைத் தொடங்க வேண்டும்... உங்களது பதிவுகளை நோண்டி உங்களைக் குறிவைத்து தாக்கப் போகிறேன்... தயார் :-)

      Delete
    3. ஆக்க்ஹா ஆவி ரூட்ட மாத்துதே

      Delete
    4. //சரியான பாயிண்ட்டைப் புடிச்சு நீ ஏற்கனவே பிராப்ளம்..நிரூபிச்சுட்டியே தம்பீ!//

      ஹா ஹா ஹா ...!

      Delete
  7. ஸ்டேட்ஸ்களை போட மட்டும் ஜீவனை பயன்படுத்திக் கொள்வதை கடுமையாக ஆட்சேப்பிக்கிறேன்...!!!

    ReplyDelete
    Replies
    1. ஜீவன் தான் சகல கலா வல்லவர் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் :-)

      Delete
    2. ஏன்யா ஏன் ...! ஏற்கனவே ஜீவநாடி அறுபட்டு நானே நொந்து போயி கெடக்கேன் என்னைய ஏன்யா ஊறுகாபோடுறீங்க ...! மீ பாவம் ...!

      Delete
  8. ஏம்பா நாங்கெல்லாம் பிரபலம் ஆக வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. சீனு, தானா ஒரு ஆடு வந்து சிக்கிருச்சு.... பேரு வேற வில்லங்கமா இருக்கு.... அடுத்த பதிவுல பிரியாணி போட்டுருவோம்...

      Delete
    2. யாருப்பா அது... ஓ ஆவியா... நான் கூட எதோ புது ஆடோன்னு நினைச்சேன் :-)

      Delete
    3. ஹா ஹா ஹா ஸ்கூல் பையன் சார் ஆவி பறக்க பிரியாணி வேணும்னு பிரியப்படுறீங்க.. ஆவி வேற கவிதை எல்லாம் எழுதி இருக்கு... கெடாவெட்டு விரைவில் கும்மியில நடத்திருவோம்...

      Delete
    4. லேட்டாத்தான் நமக்கு புரிஞ்சது ! ஆவி அதான் கெட்டப்ப மாத்திட்டாரு!

      Delete
    5. //சீனு, தானா ஒரு ஆடு வந்து சிக்கிருச்சு.... பேரு வேற வில்லங்கமா இருக்கு.... அடுத்த பதிவுல பிரியாணி போட்டுருவோம்...//

      ஸ்கூல் பையன் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு இருக்குறாரு ....! அட பிர"பலமாப்பா" ...! செம செம செம கமெண்ட் ஸ்கூல் பையா ...!

      Delete
  9. ஓ, இவ்வளவு தானா... அப்படின்னா இப்பவே களத்துல குதிச்சிற வேண்டியதுதான்....

    ஏலேய்... யாருலே எங்க காதல் இளவரசனைக் கலாய்க்கிறது.....

    ReplyDelete
    Replies
    1. காமெடி பண்ணாதீங்க இஸ்கூல் நீங்க தான் எங்களோட அமானுஷ் ஆச்சே... நல்ல ஷாம்பூ லா போட்டு முடிய வளர்த்துடுங்க... நமக்கு ரியாலிட்டி முக்கியம்... உலகம் நம்மபியே ஆகணும் :-)

      Delete
  10. நடத்துங்க நடத்துங்க... அப்ப நீங்க எல்லாம் ப்ராப்ல பதிவர்களா ? மன்னிச்சு... பிரபல பதிவர்களா ?

    ReplyDelete
    Replies
    1. நாங்கல்லாம் பதிவர்களான்னே தெரியல # தசாவதாரம் எபெக்டு :-)

      Delete
  11. நாலு பேர் காய்ச்சி எடுத்தால் பிரபலம் ஆக முடியும்?

    ReplyDelete
  12. செம காமெடி!
    லைட்டா போட்டு .... லைட்டைப் போட்டு....நல்ல டைமிங்!
    நடத்துங்க, நடத்துங்க....!

    ReplyDelete
  13. நீங்க இதுக்கு மேலயுமா பிரபலம் ஆகணும் சீனு?

    ReplyDelete
  14. ஹா ஹா,காமெடியாலேயே நம்ம எழுத்துலக பிரபலங்கள் பலரை வாரி இருக்கிறீங்க.சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. //எழுத்துலக பிரபலங்கள் பலரை//

      இதுக்கு பேருதான் உள்குத்து ஊமக்குசும்புங்குறது ...!

      Delete
  15. நானும் இதெல்லாம் முயற்சி செய்ய போறேன்... :) :P

    ReplyDelete
  16. சும்மா இருந்த பலபேருக்கு பிரபலம் ஆகணும்கிற ஆசைய உண்டாக்கிட்டீங்களேப்பா

    ReplyDelete
  17. தலைவரே நமக்குள்ள இப்ப சண்ட வரணும், அதுக்கு என்ன பண்ணப் போறோம்//

    ஆமா , இதுவரைக்கும் சண்டை தொடங்கல /// அது எப்பவோ தொடங்கியாச்சி என்பதை நான் வெகு சீற்றத்துடன் தெரிவித்து கொள்கிறேன் மிஸ்டர் சீனு

    ReplyDelete
  18. அடி, உதை இதில் எதை வாங்கியாவது நான் பிரபல பதிவன் ஆவேன் என்று கங்கணம் கட்டியாச்சி ... இப்ப வாங்க ஒன்டிக்கி ஒண்டி மோதி பார்த்துடலாம் என்று உள்ளுக்குள் ஒரு பெரும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது

    ReplyDelete
  19. யோவ் முதல்ல நான் ஒரு கவிதை புத்தகம் போட்டு உங்களை எல்லாம் பீல்டு அவுட் பண்ணல ... அதையும் ஒரு ஆளு கையுல கொடுத்து வாங்குற மாதிரி படமெடுத்து உங்களையெல்லாம் அலற வைச்சி கடைசியா உங்க விக்கட்ட காலி பண்றேன் ...

    ReplyDelete
  20. ஐயோ சீனு.... இதுக்கு எங்கிட்ட ஐடியா
    கேட்டிருக்கக் கூடாதா...?
    ஒன்னுமே இல்லைப்பா. தலைப்பை இப்படி எழுதிடுங்க.

    “சீனுவை ஆவி அடித்து விட்டது“

    இப்போ நீங்க ஏதாவது மொக்கையை எழுதிவிட்டு
    கடைசியில் சீனுவை அடித்தது கோவை ஆவி கிடையாது.
    சுடுதண்ணீர் ஆவி அடித்துவிட்டது என்று முடியுங்கள்.

    அப்புறம் பாருங்கள்... நீங்கள் பிரபலம் தான்!

    ReplyDelete
  21. யோவ் பாண்டியராஜன் மாதிரி இருக்கன்னு பாசிட்டிவ் நோட்ல தான்யா சொன்னேன் ...!அதுக்கு ஏன்யா என்னைய புடிச்சு ஓட்ற...! நா வேணும்னா அத வாபஸ் வாங்கிக்கிறேன் ..!ஆளவிடுங்கப்பா ...!

    //ஆகசிறந்த பதிவுலக இமிட்டரி ஜீவநோஸ்க்கியா //

    என்னய்யா புரியாத பாஷைல ல்லாம் ஓட்றீங்க..! கூகுள் ல போயி சர்ச் பண்ணி பாத்தா ...பாத்தா ...! கருமம் மறுபடியும் அது இங்க வந்துதான்யா நிக்குது .


    எனிவே நல்லா வயிறு வலிக்க சிரிச்சேன் ...! குறிப்பா ....

    //சாருக்கு தான் கொஞ்சம் அமானுஷ்யமான முகம் கூடவே அம்சமான முகம், அப்டியே செட் ஆகும்" என்று அப்பாவியாய் ஐடியா கொடுக்க ஆரம்பித்தார் ஸ்கூல் பையன்.

    "தலைவரே, இம்புட்டு அப்பாவியான முகத்த நான் பார்த்ததே இல்ல, நம்ம ஸ்கூல் பையன் கிட்ட தான் அத்தனை சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திப் போய் இருக்கு, இவர அமானுஷ் ஆக்குறோம், வாத்தியார தீவிர இலக்கியவாதி ஆக்குறோம், கூடவே நாமும் பிரபலம் ஆகுறோம், எப்புடி ஐடியா",//

    சூப்பர் ...! பாத்து சீனு ரெம்ப பிராப்ளம் ஆகிடாத ...!

    ReplyDelete

  22. ஹா..ஹா..நல்லாத்தான் கலாய்ச்சியிருக்கீங்க...இப்ப பேஸ்புக் ல இந்தப் பிரச்சனைதான் நடக்குது சீனு.... இதுல யார் பிரபலம்னு சண்டை வேற... யாரையாவது வம்புக்கு இழுத்து அவர் நம்மை திட்டி ஏதாவது ஸ்டேடஸ் போட்டால் நாம கூட பிரபலமாகிவிடலாம்னு சில பேர் பண்ற அக்கப்போரு தாங்க முடியில... முன்னெல்லாம் பிளாக்கரில் தான் இதுபோல சண்டை நடக்கும்...இப்ப பேஸ்புக் ரத்த பூமியா இருக்கு... அங்கங்க சில இடங்களில் சிரிக்க வச்சிடீங்க..

    ReplyDelete
  23. ஆகசிறந்த பதிவை மிகுந்த ஆராய்ச்சிக்கு பின் அறிவுலவாதிகளுகாக அர்ப்பணித்து இருக்கிறீர்கள் இதை படித்ததில் புண்ணாகி போன வயிற்றுக்கு மருத்துவ பதிவு ஒன்றை அவசியம் பதித்து செல்லுங்கள் பிரபல .........பதிவர் அவர்களே

    ReplyDelete
  24. ஏற்கனவே காதல் கடிதம் போட்டி வச்சி இப்ப பேப்பரும் கையுமா யோசிக்க விட்டீங்க அதுவே இன்னும் முடிஞ்சா பாடில்ல அதுக்குள்ள பிரபலம் ஆவது எப்படின்னு ஒரு கேள்வியோட பதிவு பதிவுலகில் தீயா வேலை செய்யறீங்க சீனு

    ReplyDelete
  25. r.v.saravanan கருத்து ஒரு ஐடியா குடுக்குது. அடுத்தாப்புல திட்டுற கடிதப் போட்டி ஒண்ணு நடத்துங்களேன் சீனு?

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. இன்னும் தூங்கலையா?

    ReplyDelete