மீட்டிங் பாயிண்ட்ஸ்
1. சினிமா சினிமா ராஜ் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாக தகவல் கூறி சந்திக்க விரும்புவதாக பேஸ்புக்கில் மெஸேஜ் அனுப்பியிருந்தார், எங்காவது கூடி சந்திக்கலாம் என்று நினைத்த சந்திப்பு மினி பதிவர் சந்திப்பாக உருவெடுத்துவிட்டது.
2. தல ராஜ் 'வியாஸ்' என்னும் அழகிய ஆண்குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார், அவருக்கு காமெடி கும்மி சார்பிலும் பதிவுலகம் சார்பிலும் வாழ்த்துக்கள் 'வாழ்த்துக்கள் தல'.
3. அடம் பிடித்த ஸ்கூல் பையன திடங்கொண்டு கூட்டிட்டு போறதுக்குள்ள வாத்தியார் மற்றும் மெட்ராஸ் இடம் இருந்து ஆயிரம் போன் கால் வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆனேன். ( நேத்திக்கு வெட்டப்பட்ட ஆடு நாந்தாங்கோ...!)
4. பதிவர் சந்திப்பு பீனிக்ஸ் மாலில் இருந்து நடேசன் பார்க் வழியாக கோடம்பாக்கம் புலவர் ராமனுஜம் அய்யா வீட்டிற்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலும் என்னிடம் நம்பர் இருந்த அத்தனை பதிவர்களிடமும் தகவல் கூறிவிட்டேன், என்னைத்தவிர மற்ற அனைவரும் அலுவலக மற்றும் மற்ற வேலைகளில் பிஸியாக இருந்ததால் ஒருங்கிணைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
5. யாரும் விடுபடவில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே டி.என் முரளி சாரின் பின்னூட்டம் கண்ணில் தென்பட்டது. 'சாரி சார், உங்க போன் நம்பர் என்கிட்டே இல்ல, என் பேஸ்புக்கில் கொஞ்சம் மெசேஜ் செய்யுங்க சார்'.
6. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் அவரவர் வாழ்க்கை சுவாரசியங்களைப் பற்றி பகிர்ந்த பின்னர் இவ்வருட பதிவர் திருவிழா பற்றி கலந்தாலோசிக்கப் பட்டது. இவ்வருடம் பதிவர் சந்திப்பு நடக்காது என்று தான் நினைத்தேன். பதிவர் சந்திப்பு மீண்டும் நடத்தப்போவது பற்றி எழுந்த பேச்சு மிகவும் சந்தோசம் அளிக்கிறது.
7. இனிவரும் காலங்களில் பதிவர் சந்திப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். பதிவர் சந்திப்பு குறித்த உங்கள் பார்வையையும் பின்னூட்டிவிட்டு செல்லுங்கள். கொஞ்சம் வழிகாட்டுதலாய் இருக்கும்.
8. இதுவரை தலைமறைவாக இருந்த மிக முக்கியமான ஒரு குறும்புப் பதிவர் நேற்றைய சந்திபிற்கு வந்து எ(ன)மக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். காரணம் அவரின் தீவிர ரசிகன் நான். அவரை கண்டுபிடித்த ஆகசிறந்த பெருமை மெட்ராஸ் சிவாவையே சாரும்...! (யோவ் மெட்ராஸ் போன் போட்டு நெம்புவாயிங்க பதில் சொல்லும்யா.. எப்படியோ கோர்த்துவிட்டாச்சி.. நாலு நாளைக்கு நல்லா தூங்குவேன்). அவர் என்று தெரிந்த பின் அவரது பதிவுகளின் மீது இருந்த கிக் இன்னும் கூடியுள்ளது ( தலைமறைவு பதிவரே இதற்கெல்லாம் நான் பிராயச்சித்த பதிவு எழுத மாட்டேன்...! (க்ளு) )
9. எப்போதும் மிக உற்சாகமாக இருக்கும் வாத்தியார் பாலகணேசும் மதுமதியும் சற்றே அமைதியாய் இருந்தது புரியாத புதிர். பட்டிகாட்டான் பதிவர்களது எனெர்ஜி ட்ரின்க் (அதான் போகும் போது ரெண்டு தம்ப்ஸப்பை லவட்டிக் கொண்டு சென்றுவிட்டார்)
10. கனவு மெய்பட ரூபக்ராம் கலந்து கொள்ள இயலாதது குறித்து மிகவும் வருந்தினார், ரூபக் அவர்களே உங்களது தலைமையில் கூடிய சீக்கிரம் மற்றொரு சந்திப்பு நடத்திவிடுவோம் கவலையை விடுங்கள்.
இனி...
இப்படியும் இருக்கிறார்கள்
அனைத்து பதார்த்தங்களையும் அப்பாவியாய்ப் பார்க்கும் சீனு குறித்து நோ கமெண்ட்ஸ் (இப்படியும் இருக்கிறார்கள்...!) |
அப்படியே சாப்பிடுவேன்...! வந்த வேகத்தில் கடமை ஆற்ற தொடங்கிய காமெடி கும்மி சங்கத்தின் அமானுஷ்ய குரு எங்கள் அன்பு பட்டிக்ஸ் (இப்படியும் இருக்கிறார்கள்...!) |
பொது சேவையில் பட்டிக்ஸ் உடன் அடியேன்... (இப்படியும் இருக்கிறார்கள்...!) |
நான், மெட்ராஸ், மின்னல், ஆரூர், அரசன், ராஜ் ( ஏன் இப்படியும் இருக்கிறார்கள்...!) |
ஆங்கோர் இடத்தில நமீதா என்ற சொல் கேட்டதும், சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் முகம் மாற்றத்திற்கு இணையாக எக்ஸ்பிரசன் கொடுத்த சங்கத்து அடியாள் அரசன்...(இப்படியும் இருந்துத் தொலைகிறார்கள்...!) |
அங்கே என்ன தெரிகிறது... என்ற தொனியில் லுக் விடும் பட்டிக்ஸ் முன்னே இஸ்கூல் பின்னே (இப்படியும் இருக்கிறார்கள்...!) |
நிற்பவர்கள் : ஆரூர் மூனா செந்தில், பட்டிக்ஸ் ஜெய், மின்னல் பா கணேஷ், சென்னை பித்தன், புலவர் ராமானுஜம், மதுமதி
அமர்ந்திருப்பவர்கள்
சீனு, அரசன், ராஜ், மெட்ராஸ் சிவா
|
என்னுடைய இடத்தை தட்டிப் பறித்த ஸ்கூல்பையன்... மற்றவர்கள் புன்னகை மாறாமல் அப்படியே (இப்படியும் இருக்கிறார்கள்...!) |
Tweet |
//நேத்திக்கு வெட்டப்பட்ட ஆடு நாந்தாங்கோ...!//
ReplyDeleteஎப்போதும் போல என்ற வார்த்தையை மறந்துவிட்டீர்கள்..... ;)
:)
Deleteஇவிங்க அலும்பு தாங்க முடியல டா சாமி... :-)
Deleteசூப்பர் ராஜ் சொல்லவே இல்ல.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..
ReplyDeleteயோவ் அதுக்கு நீ ஆன்லைன் பக்கம் அடிகடி வரணும்.. கொய்யாளா எக்ஸ்ட்ரா ஒருவார்த்த பேசுன கொழும்புக்கு வந்து கும்முவோம்
Deleteபதிவர் சந்திப்பு.... சொல்வதற்கு ஒன்றுமில்லை.... ஏனென்றால்..... :D :D :D
ReplyDeleteதலைவரே இப்ப மட்டும் எப்டி உங்களுக்கு நெட் கிடைச்சது... ஒரு ஆடு சிக்குனா போதுமே ஹா ஹா ஹா
DeleteNight time net available on room.... U didnt find a secret hidden in this comment....
Deleteஆஹ.. இவர் தான் ஸ்கூல் பையனா??? பார்த்தா LKG பையன் மாதிரி இருக்காரே??
ReplyDeleteநான் அடுத்த வருஷம் தான் PRE KG சேரப்போறேன்....
Deleteஏ சரியாய கேட்டப்பா.. இப்படி தான் ஊர்ல பல பெற ஏமாத்துராறு...
Delete//நான் அடுத்த வருஷம் தான் PRE KG சேரப்போறேன்....// பார்யா
Deleteஅரசன்..
ReplyDeleteஅடடே என்னா லுக்கு... நமீதா உமக்கு தான்யா.. நமிதா என்னய்யா... இப்படியே இந்த அழகு டெவெலப் ஆச்சு, குஸ்பு கலா மாஸ்டர் எல்லாரும் உமக்கு தாம்யா..
செம செம இதனை நான் வன்மையாக ஆதரித்து வழிமொழிகிறேன் :-)
Deleteவெளிநாட்டு வேலை, குட்டி குழந்தை ராஜிற்கு அப்பா, தொடர்ச்சியான சந்தோசங்கள் இன்னும் வர வர வளர எங்கள் நண்பன் ராஜிற்கு சந்தோசமாக பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்..
ReplyDeleteஅப்படியே எங்களது குட்டி தலைவர் "வியாஸ்" இற்கும், அண்ணிக்கும் எங்கள வாழ்த்துக்களை சேர்த்து விடுங்க ராஜ்..
நன்றி
நன்றி ஹாரி ..!!!!
Deleteஹாரி நீ இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததே இல்லபா... இனி இப்படியே பேசுபா ..(தமிழுக்கு வந்த கஷ்ட காலம் ...!)
Deleteada....
ReplyDeletepakirvukku nantri!
மிக்க நன்றி சீனி
Deleteமுரளிதரன், ரூபக்ராம் உள்ளிட்ட விடுபட்டவர்களுக்காக விரைவி்ல் தம்பி சீனுவி்ன் தலைமையில், அவரது ஏற்பாட்டில் ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிரலாம். (அடுத்த வெட்டுக்கு தயாரா இருலேய்...) எப்பவும் உற்சாகமாய் இருக்கும்.... கூர்ந்த கவனிப்புக்கு நன்றி பிரதர்! காரணம் என்னன்னா... பதிவர் திருவிழாங்கற விஷயத்துல நான் இன்னும் உள்ள வரல. அதைப் பத்தி இப்ப ஒரு போஸ்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன். பாரு...
ReplyDelete//தம்பி சீனுவி்ன் தலைமையில், அவரது ஏற்பாட்டில் ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிரலாம்.// செல்லாது செல்லாது
Delete// அதைப் பத்தி இப்ப ஒரு போஸ்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன். பாரு...// உங்கள் ஆதங்கம் புரிகிறது... இருந்தாலும் துணிந்து நில் நிமிர்ந்து செல் என்று சொன்னவன் ஒரு தமிழன் தானே
மெட்ராஸ் சிவா ஏதாவது படத்தில் நடிக்கிறாரா? நடிக்கலாமே...
ReplyDeleteநீங்க தயாரிப்பாளர் ஆகா ரெடியா ஹா ஹா ஹா
Deleteநம்மால் இருக்க முடியவில்லையே என
ReplyDeleteபதிவைப் பார்த்ததும் ஆதங்கப்பட்டேன்
பதிவர் சந்திப்பு இருக்கும் என்கிற தகவல்
மகிழ்வூட்டுகிறது,பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நிச்சயம் ரமணி அய்யா
Deleteஅன்பின் சீனு - ஒரு பதிவர் சந்தஇப்பு நடந்து முடிந்தது நன்று - நண்பர்கள் அனைவரையும் படத்தில் கண்டு மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் வருகைக்குமிக்க நன்றி அய்யா
Deleteமுகம் தெரியாத பல பதிவர்களின் முகங்களை அருகில் பார்க்க வைத்த எழுத்தாளன் சீணு....வாழ்க வழமுடன்
ReplyDelete//பார்க்க வைத்த எழுத்தாளன் // லேசா எதோ உள்குத்து இருக்க இருக்கே
Deleteபோட்டோல நான் ரொம்ப கருப்பா இருக்கேன்... என்னை இவ்வளவு அசிங்கமாக போட்டோ எடுத்த சீனுவை வன்மையாகக் கண்டிக்கிறேன்....
ReplyDelete//போட்டோல நான் ரொம்ப கருப்பா இருக்கேன்...// தமிழனின் நிறத்தை நினைத்து வருத்தபடுவதா...அய்யகோ வெட்கம் வேதனை அவமானம்
Delete( ஆமா சார் நான் கூட கொஞ்சம் கருப்பா தான் தெரியுறேன், அடுத்த தபா எங்கியாது பியுட்டி பார்லர் போயிட்டு அப்டியே போவோம் )
ராஜ் - அப்பா - வாழ்த்துக்கள்...
ReplyDelete2nd பதிவர்கள் திருவிழா விரைவில் நடக்க வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி டிடி
Deleteபோட்டோவோட ஆளுங்க பெயரை சேர்த்துப் போட்ட செம்மலே.. வாழி.
ReplyDeleteதாங்கள் வந்து வாழ்த்தியதால் யான் பாக்கியவான் ஆனேன் சுவாமி
Deleteபதிவர் விழா நடத்துங்க. இதைத் தொடர்ந்து நடத்தினா snowball effect கிடைக்கும்.
ReplyDeleteநிச்சயமா.. ஆனா நீங்களும் வரணும்.. வருவீங்களா
Deleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteஅட நீங்க இல்லாமலா
Deleteமற்ற எல்லாரையும் படித்திருப்பதாக நினைக்கிறேன். பட்டிக்ஸ் எழுதுகிறாரா? எழுதும் பதிவின் பெயரென்ன?
ReplyDeleteபட்டிகாட்டான் பதிவுலக ஆண்ட சராசர வெளியைத் தாண்டி பேஸ்புக் டிவிட்டர் ப்ளஸ் என்று உலக மகா லைக்கர் ஆகிவிட்டார்.. இருந்தாலும் அவ்வபோது அவர் எழுதுவதாக நினைக்கும் அனைத்தையும் தன பேஸ்புக்கில் எழுதி விடுகிறார்...
Deletehttp://pattikattaan.blogspot.in/
என்னை விட்டுட்டு மீட் பண்ணிட்டீங்க.. இல்லை.. பாத்துக்கறேன்.:)
ReplyDeleteஐயையோ தெய்வகுத்தம் ஆய்ருசே... கேபிள் என்ன மன்னிச்சு...
Deleteயோவ் சிவா இதுக்கு நா பழிவாங்காம விடமாட்டேன்...
மேல் பின்னூட்டம் என்னுதுதான்
ReplyDeleteகேபிள்சங்கர்
மிக்க நன்றி கேபிள் சார் ... நீங்கள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாதே
Deleteயாரு தம்பி அந்த பாலு மகேந்திரா?
ReplyDeleteபல மகேந்திராக்கள் உண்டு சார்
Deleteஆரூர் மூனா செந்தில், பட்டிக்ஸ் இருவர் முன்னாலும் ஃபேண்டா பாட்டிலா என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்
ReplyDeleteஹா ஹ அஹா அந்த குழந்தைகள் ஐயோ பாவம் தான்
Delete/ரூபக் அவர்களே உங்களது தலைமையில் கூடிய சீக்கிரம் மற்றொரு சந்திப்பு நடத்திவிடுவோம் கவலையை விடுங்கள். /
ReplyDeleteஅப்ப இனி பில்லை ரூபக் தலைல கட்டிற வேண்டியதுதான்.
//அப்ப இனி பில்லை ரூபக் தலைல கட்டிற வேண்டியதுதான்.// நீங்க தெய்வம்னே தெய்வம்
Deleteஹா ஹா. Never. உங்க உள் நாட்டு சதியில இந்த ஆடு சிக்காது.
Delete
ReplyDelete/புலவர் அய்யா தட்டில் ஒழிந்து கிடந்த வேர்கடலையைக் கூட விடாமல் பொது சேவை ஆற்றும் எங்கள் பட்டிக்ஸ். /
வீட்டு பக்கத்துல இருக்குற புள்ளைங்க திங்கற தேன்மிட்டாய கூட விட்டு வக்கிறதில்ல.
ஹா ஹா ஹா மிக சரி... என்னா வேகம் என்னா லாவகம்
Deleteஎன் இல்லம் வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி புலவர் அய்யா... தன்மை நவிற்சி அணிக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அற்புதம்
Delete//தன்மை நவிற்சி அணி// கேள்விப்பட்டதில்லை, எனக்கு விளக்கினால் நலம்.
Deleteஉற்சாகமா இருக்கு. வாழ்க வளமுடன்!
ReplyDeleteமிக்க நன்றி கவுதம் சார்.. இந்த ஸ்ரீ ராம் சார கூட்டிட்டு எப்டியாது பதிவர் சந்திப்புக்கு வந்துருங்க சார்
Deleteஸ்கூல் பையனா எங்கங்க அப்படி யாரும் இல்லையே அங்க ?
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இருக்கேன்.... நல்லா பாருங்க....
Deleteஸ்கூல் பையன் தொப்பி தொப்பி தொப்பி
Deleteஸ்கூல் பையன் என்றால் பேக் மாட்டிக்கிட்டு இருக்கிற சின்ன பையனா எதிர்பார்த்தேன் அப்படி யாரும் இல்லையே ?
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனு..பதிவர்களை ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்...
ReplyDeleteஉங்களால் ஒரு அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது மிக்க நன்றி தல
Delete:-)
ReplyDeleteகரிக்டா சொல்லிடீங்க சார்.. இந்த பசங்க நெல்லைப் பக்கம் வராமலா போயிருவாங்க நல்ல வீச்சருவாவா எடுத்து வைங்க..
ReplyDeleteநீங்களும் வந்தே ஆகனும்.. அட்வான்ஸ் இப்ப வேணா நேர்ல பாக்கும் பொது நாம தனியா டீல் பன்ணிபோம்
ReplyDeleteநீங்க என் கூட பேசல உங்க பேச்சி கா
ReplyDeleteஎன்ன ஒரு வில்லத்தனம்... ஆபிசர் யு டிட் எ கிரேட் ஜாப்... நீங்க நல்ல காரியம் பன்னிருகீங்க
ReplyDeleteஇதெல்லாம் ரொமப் ஓவர். இதெல்லாம் நான் குறிச்சு வச்சுக்கிட்டேன். இந்த படத்துல வர்ற அயிட்டம்லாம் ஆகஸ்ட்ல நடக்குற பதிவர் மாநாட்டுல எனக்கு வந்தாகனு, இல்லாட்டி நடக்குறதே வேற!
ReplyDeleteஆமாம் சீனு மிச்சம் மீதி இருக்கிறதை புலவர் ஐயாகிட்ட சொல்லி எடுத்து வையுங்க சகோ வந்ததும் கொடுத்துடுங்க
Deleteசீனு3 June 2013 11:24
ReplyDelete//போட்டோல நான் ரொம்ப கருப்பா இருக்கேன்...// தமிழனின் நிறத்தை நினைத்து வருத்தபடுவதா...அய்யகோ வெட்கம் வேதனை அவமானம்
( ஆமா சார் நான் கூட கொஞ்சம் கருப்பா தான் தெரியுறேன், அடுத்த தபா எங்கியாது பியுட்டி பார்லர் போயிட்டு அப்டியே போவோம் )
>>
இந்த கமெண்டை அப்படியே அவங்கவங்க வீட்டுக்கு ஸ்கீரீன் ஷாட் எடுத்து அனுப்பி வைக்கப்படும். (பியூட்டி பார்லர் போயி பள பளான்னு வந்தா அப்புறம் மக்ளிர் அணியின் கதி?! நாங்க பளபளக்க வேணாமா?!)
பதிவர் திருவிழாவுக்காக ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கேன்
ReplyDeleteNaan rompa azhakaa Youtha irukkennu yaarum kannu potraathinga makkale...
ReplyDeleteEthukkum veetla suthipoda sollanum :-)))
Deleteபட்ட்டிகாட்டான் நான் உங்கள புகைப்படத்தை பார்த்து பரிதாபபட்டு கொண்டிருக்கும் போது (ஃபேண்டா பாட்டிலுக்கு முன்பு பாவமா உட்கார்ந்து இருப்பதை பார்த்துதான்) என் கூட வேலை செய்யும் ஸ்பானிஷ் பொண்ணு யார் இவரு ரொம்ப அழகாக இருக்காருன்னு கேட்டுச்சி நான் உடனே உங்க படத்தை மறைச்சிட்டேன் காரணம் கல்யாணமானவர் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில்தான்
Sunday 09-06-2013,
ReplyDeleteDiscovery book palace
k.k.nagar.
@ 3:45pm 1st Doscussion meet for forthcoming '2vathu Tamil valaipathivarkal maanaadu.
ALL Bloggers are welcome.
Ippadikki
vizha kuzhu
அப்பாவான திரு ராஜ் அவர்களுக்கும் குழந்தை சிரஞ்சீவி வியாஸ் - க்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகூடிய விரைவில் பதிவர் மாநாட்டில் எல்லோரையும் சந்திக்க ஆசை!
விழா குழு கூட்டத்திற்கு வர இயலாது ஆனால் விழாவிற்கு நிச்சயம் வருவேன்.
அருமை
ReplyDeleteஎன்னை அழைத்தமைக்கு நன்றி சீனு நான் தான் லீவ் எடுத்துட்டேன்
ReplyDeleteஅட அட அழகு...
ReplyDeleteநம்மளல்லாம் யாருமே கூப்புட மாட்டங்கறாங்க...
அவ்வப்போது இப்படி குட்டிச் சந்திப்புகளை ஏற்படுத்தி நட்பைப் புதுபித்துக்கொள்ளும் அருமையான சூழல் அமைவதே ஒரு வரப்பிரசாதம்தான்.. சந்திப்பு கலகலப்பாக அமைந்திருந்தது உங்கள் எழுத்திலே தெரிகிறது சீனு..
ReplyDelete