அனைவருக்கும் மிக சிறப்பான வணக்கங்கள்.
பரிசுப் போட்டி குறித்த அறிவிப்பில் நீங்கள் காட்டிய உற்சாகம் சற்றும் எதிர்பாராதது. மகிழ்ச்சியானது. இந்த உற்சாகம், போட்டி முடியும் வரையிலும் சற்றும் குறையாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்தப் பதிவினுள் நுழைகிறேன்.
நடுவர்களாக பொறுப்பு வகிக்கும் பால கணேஷ் சார் , அப்பாதுரை சார் , ஸ்ரீராம் சார் மற்றும் ரஞ்சனி அம்மா இந்த நால்வரையும் போட்டு பாடாய் படுத்தி எடுத்து ஒருவழியாய் போட்டிக்கான விதிமுறைகளை தயார் செய்து விட்டேன். இவர்களின் அனுபவம் நல்ல வழிகாட்டியாய் அமைந்தது குறிபிடத்தக்கது. எனது தொடர்ந்த தொந்தரவுகளை பொருட்படுத்தாமல் தங்கள் அலுவல்களுக்கு இடையிலும் தொடர்ந்து ஒத்துழைத்த நடுவர்களுக்கு மிக நன்றிகள்.
நடுவர்களுக்கு இப்போட்டியில் இருக்கும் ஈடுபாடு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களுடனான இப்பயணம் நிச்சயம் மிகச் சிறப்பாய் அமையப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
இதுவரை 31 பதிவர்கள் மின்னஞ்சல் மூலமும் பின்னூட்டம் மூலமும் தொடர்பு கொண்டு போட்டியில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பின்னூட்டம் மூலம் தகவல் தெரிவித்த சில நண்பர்கள் தங்கள் மின்னஞ்சலை பதியவில்லை. சிலரது முகவரி என்னிடம் இருந்தது, சிலரது முகவரியை அவர்களது வலைப்பூவில் இருந்து குறித்துக் கொண்டேன், சிலரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு வாங்கிக் கொண்டேன்.
இருந்தும் கோகுல், வல்லிசிம்ஹன், சுப்பு தாத்தா, மகா லக்ஸ் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை. கவனத்தில் கொள்ளவும் :-)
விதிமுறைகளை இறுதி வடிவத்திற்கு கொண்டுவந்து தெளிவாக எழுதிக் கொடுத்த ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி.
விதிமுறைகளை இறுதி வடிவத்திற்கு கொண்டுவந்து தெளிவாக எழுதிக் கொடுத்த ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி.
போட்டிக்கான தலைப்பு :
1. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம்.
2. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்.
3. உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுதிய காதல் கடிதம்.
திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்
போட்டி விதிமுறைகள்
1. நீங்கள் எழுத வேண்டியது காதல் கடிதம்.
கருத்துச் செறிந்த, கற்பனை வளமிக்க, நயமிக்க, புதுமை கலந்த, உணர்வு ததும்பும்
காதல் கடிதம். எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலித்துக் கடிதம் எழுதலாம் – தெளிவாக – catchy யாக. ஆனால் போட்டிக்கு ஒருவர் ஒரு கடிதம் மட்டுமே அனுப்பலாம்.
2. கவிதையாகவோ, உரைநடையாகவோ, வசன கவிதையாகவோ இருக்கலாம். 500
வார்த்தைகளுக்குக் குறையாமல் 1200 வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பது நலம். பாரா பாராவாக பிரித்து எழுதவேண்டும். மொத்தமாக
எழுதப்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
3. தங்களது சொந்தப் படைப்பு என்ற உத்திரவாதம்
பதிவர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
4. லேபிளில் ‘திடங்கொண்டு போராடு – காதல் கடிதம்
பரிசுப் போட்டி’ என்று குறிப்பிட்டு எழுத வேண்டும்.
5. நிபந்தனைகள் 3 மற்றும் 4 இல்லாத கடிதங்கள்
பரிசீலிக்கப்பட மாட்டா.
6. போட்டி 2013 ஜூலை 20 இந்திய நேரம் இரவு 12 மணி யுடன் முடிவடைகிறது. இதற்குப் பின் வரும்
கடிதங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டா.
7. கலந்துகொள்ளும் படைப்பாளிகள் தங்கள் பெயர், வலைப்பூ பெயர், மின்னஞ்சல் – மூன்றும்
முக்கியம். இந்தத் தகவல்களை bsrinivasanmca@gmail.com
–க்கு அனுப்பவும்.
8. தாங்கள் எழுதிய படைப்புக்களை (கடிதங்களை) வெளியிட்டதன் பின்பு அந்த பதிவின் லின்க்கை எனது bsrinivasanmca@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கண்டிப்பாக அனுப்பி வைக்கவும். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருக்கும் அந்தப் பதிவுகளின் லிங்குகள் எனது மின்னஞ்சல் மூலம் பகிரப்படும்.
9. போட்டி
முடிவுகள் ஆகஸ்ட் 15, 2013 வெளியிடப்படும்.
படைப்பாளிகளுக்கு
சில குறிப்புகள்:
மதிப்பீடு
அடிப்படை:
1. கருத்து
(காதல் இருக்கிறதா கடிதத்தில்? எப்படிப்பட்டக் காதல்? ஏசுவைக்
காதலிக்கிறேன் என்பதற்கும் தன்னழகைத் தான் காணமுடியாத எதிர்வீட்டு கண்பார்வையற்றப்
உலகப் பேரழகியைக் காதலிக்கிறேன் என்பதற்கும் வித்தியாசம்.. ஹிஹி)
2. கற்பனை
(சம்பவம், உவமை, சொல்லியிருக்கும் கருத்து, ...)
3. புதுமை
(எழுத்து நடை, presentation, ...)
4. நயம் (மொழிவளம், இலக்கணம், இலக்கியம், நோ வள வள, ...)
5. உணர்வு
(நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, ...)
ஒவ்வொரு
கணிப்பிற்கும் 4 மதிப்பெண்கள்.
படைப்பாளிகள்
தங்கள் பொறுப்பை உணர்ந்து கடிதங்களை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
போட்டி முடிவு
வெளிவரும் வரை நடுவர்களுடனோ, போட்டி நடத்துபவருடனோ கடிதப்போக்குவரத்து
கூடாது.
நடுவர்களின்
தீர்ப்பே இறுதியானது.
பரிசு பற்றிய விபரம்
முதல் பரிசு - 500 ரூபாய்
இரண்டாம் பரிசு - 300 ரூபாய்
மூன்றாம் பரிசு - 200 ரூபாய்
மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா 150 ரூபாய்.
முதல் மூன்று பரிசு பெற்றவர்களது காதல் கடிதங்கள் திடங்கொண்டு போராடுவில் வெளியிடப்படும்.
பதிவர்கள் அல்லாதவர்களுக்காக :
பதிவர்கள் அல்லாதவர்கள் பங்கு கொள்ள நினைத்தால் அவர்களும் தாராளமாய் பங்கு கொள்ளலாம். அவர்கள் செய்ய வேண்டியது, தங்களுடைய படைப்பினை எனது bsrinivasanmca@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது சிறுகுறிப்புடன் அனுப்பினால் அந்த படைப்புகள் திடங்கொண்டு போராடுவில் இடம் பெறும். மற்றும் நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதனால் நீங்களும் தாராளமாய் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
போட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தவர்களின் பெயர் பட்டியல். பெயர்களின் மீது கிளிக்கினால் அவர்களது தளம் திறக்கும்...
போட்டியில் பங்கு கொள்வோர் அனைவருக்கும் உற்சாகமான வாழ்த்துக்கள்.
13. மகா லக்ஸ் ( இவரது பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை)
இப்போட்டியில் பங்கு கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். உற்சாகத்துடன் பங்கு கொள்ளுங்கள். பதிவுலகம் மறக்க முடியாத ஒரு காதல் கடிதம் படைப்போம்.
பின்வரும் படத்தினை உங்களது தளத்தில் இப்போட்டி பலரையும் சென்று சேர உதவுங்கள்.
Layout -> ADD Gadjet -> HTML/JAVA Script
<a href="http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html" target="_blank"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHNI_9cw1ZSEuPR2Fszy5-VWKDUnsu1yiuWkL20u2BJ7H4T9InBnji41HknXys6BiqK0R4dzRcXXvs5oloUkWM5o2XNPPkATxQVKmt0HPkMk8W1D26uFxygwo27XVIoQoqaJDBBXl5TwA/s1600/seenuguru.gif"/></a>
நன்றி
சீனு
Tweet |
Valthukal thala....
ReplyDeleteவணக்கம் சீனு
ReplyDeleteதனிமரம் தளத்தில் ஊடாக நானும் போட்டியில் கலந்துகொள்கின்றேன்.
விரைவில் கடிதம் எழுதிய பின் லிங்கு பகிர்கின்றேன்.
நன்றியுடன்
தனிமரம்.
குழப்பமில்லாமல் விதிமுறைகளை தெளிவாக வார்த்தைப்படுத்தியிருக்கிறாய் சீனு!
ReplyDeleteதெளிவாக இருக்கிறது. கலந்துகொள்ளப் போகும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சீனு. என் பெயரை எடுத்துவிடுங்கள்.
ReplyDeleteகடிதம் எழுத உற்சாகம் இல்லை:)
எப்படி எழுதலாம்னு கற்பனை செய்து வைத்தேன் அதை என்
பதிவில் எழுதுவேன்.
விதிகளுக்கு உட்படாது இருக்கும்.
மன்னிக்கணும்.
மிக மிகத் தெளிவாக விதிமுறைகளை விளக்கியிருக்கிறீர்கள்.... சூப்பர்...
ReplyDelete//போட்டி முடிவு வெளிவரும் வரை நடுவர்களுடனோ, போட்டி நடத்துபவருடனோ கடிதப்போக்குவரத்து கூடாது//
ReplyDeleteஹிஹி... போன்ல பேசிக்கலாமா....
விதிமுறைகளின் விளக்கம், குறிப்புகள் அனைத்தும் அருமை... அதை விட
ReplyDelete/// எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலித்துக் கடிதம் எழுதலாம்... ///
சூப்பர்...
/// பதிவர்கள் அல்லாதவர்கள் பங்கு கொள்ள நினைத்தால் அவர்களும் தாராளமாய் பங்கு கொள்ளலாம். ///
பதிவர்கள் அல்லாதவர்கள் பங்கு கொள்ள வைத்தது நன்று...
/// தாங்கள் எழுதிய படைப்புக்களை (கடிதங்களை) வெளியிட்டதன் பின்பு ///
சிறு சந்தேகம்... அவரவர் தளத்தில் தானே...? (தாங்கள் எழுதிய படைப்புக்களை அவரவர் தளத்தில் வெளியிட்ட பின், அவற்றை எனது bsrinivasanmca@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கண்டிப்பாக அனுப்பி வைக்கவும்... என்று மாற்றவும்...)
ஆஹா... இது காதல்...!
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது...
ஆனா நான் அழுது என் சோகம் அனைவரையும் தாக்கிடுமோ - அப்டினு நெனைக்கும்போது
வர்ற அழுக கூட நின்னுடுது (ஹஹஹா)
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல...
அதையும் தாண்டி புனிதமானது... புனிதமானது... புனிதமானது...
ஹிஹி... காதலுக்கு என்று தனி தளம் (!) ஆரம்பிக்க வேண்டுமென்பதால்... பதிவர்களை உற்சாகப்படுத்த எனது பதிவும் உண்டு... ஆனால் என் காதல் அல்ல...
கலந்து கொள்ளப் போகும் அனைத்து காதல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...
அன்பின் சீனு - தெளிவான விதி முறைகள் - தேவையான கால அவகாசம் = மதிப்பிடும் முறை என அத்தனையையும் அழகாகக் கொடுத்து விட்டீர்கள் - பதிவர்கள் கலக்கட்டும் - கலந்து கொள்ளும் அனைவருக்கும் வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅடியேனையும் கோர்த்து விட்டதற்கு நன்றி...என் கற்பனை ஊற்றில் ஏதாவது தென்படுகிறதா என நானும் முயற்சிக்கிறேன்....
ReplyDelete/படைப்பாளிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து கடிதங்களை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்./
ReplyDeleteபார்ரா!!!
காதலிக்கு எழுதியது மட்டுமா? காதலிகளுக்கு எழுதியதும் கூடவா? தெளிவா சொல்லுய்யா.
ReplyDeletePerfect சீனு!
ReplyDeleteபோட்டிக்கு முழுமையான உருவம் கொடுத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
@ சிவகுமார் - முதல் நிபந்தனையைப் படித்துப் பாருங்கள். தெளிவாகச் சொல்லியிருக்கிறோமே!
அட்டகாசமாக பதிவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த இந்த போட்டி நிச்சயமாக உதவும்,,,,,,, வாழ்த்துகள் சீனு...
ReplyDeleteதொழிற்களம் வாசியுங்கள்
உங்கள் லேபில் என் தளத்திலும் மின்னுகிறது பாருங்கள்!
ReplyDeleteவிதிமுறைகள் சிறப்பு சீனு பங்கு கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுலகில் புரட்சி நடத்தும் சீனுவுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஇருந்தும் கோகுல் மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை. கவனத்தில் கொள்ளவும் :-) \\
ReplyDeleteமன்னிக்க,இப்போது கொடுத்துவிடுகிறேன்
கலக்குங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதெளிவான விதிமுறைகள்...
ReplyDeleteபதிவர்களே கலக்கலாக காதல் கடிதம் எழுதுங்கள் சீனுவுக்கு
தெளிவான விதிமுறைகள்.....
ReplyDeleteபோட்டி பற்றிய தகவலை எனது பக்கத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்.
வணக்கம் சீனு
ReplyDeletesangeetha RG தளத்தில் ஊடாக நானும் போட்டியில் கலந்துகொள்கின்றேன்.
விரைவில் கடிதம் எழுதிய பின் லிங்கு பகிர்கின்றேன்.sangeethasanyal@gmail.com
நன்றியுடன்
Sangeetha
நானும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரசரப்பட்டு பரிசை யாருக்கும் கொடுத்துவிடாதீர்கள் சீணு
ReplyDeleteமார்கழிமாதம் இருபத்தைந்தாம் திகதிக்கு ஒரு நாள் இருநாள் முன்னதாக
Deleteஅனுப்பினால் போதும் சகோ அவசரம் ஒன்றுமில்லை .பரிசு நிட்சயமாக
உங்களுக்குத் தான் :)))
நானும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரசரப்பட்டு பரிசை யாருக்கும் கொடுத்துவிடாதீர்கள் சீணு avargal_unmaigal@yahooooooooooo.commmmmmmmmmmmmmmmmmmmmm
ReplyDeleteஹஹா...வாழ்த்துக்கள்..:)
Deleteமனிதகுலத்தின் மகிழ்ச்சிக்கு வித்திடும் போட்டி அருமை பாராட்டுகளும் .நிச்சயம் அனைவரும் அவர்களின் இன்பமான நாட்களை மீட்டுக்கொள்ள இந்த போட்டி உதவும் நானும் அவசியம் கலந்துகொள்கிறேன்
ReplyDeleteஇதோ 32 வது நபராக அம்பாளடியாள் என்று இணைத்துக் கொள்ளுங்கள்
ReplyDeleteஅன்புச் சகோதரரே .விரைவில் இதன் மிகுதித் தொடரையும் எழுதி அதன்
லிங்கை இங்கே இணைத்து விடுகின்றேன் .வாழ்த்துக்கள் சகோதரா உங்கள்
முயற்சி தொடரட்டும் .
http://rupika-rupika.blogspot.com/2013/06/blog-post_282.html
இதிலும் விறுவிறுப்பைக் காட்டும் சீனுவுக்கு சீக்கிரம் நல்ல காதல் கடிதத்தை எழுதி அனுப்புங்கள்.சீக்கிரம் காதலித்து அவர் கல்யாணமும் செய்ய வேண்டும்.அவசரம்.அவசியம் எல்லோரும் பங்குபெறுங்கள்.வாழ்த்துக்கள் சீனு
ReplyDeleteசீனு நல்ல பிள்ளை .அவர்களுக்கு அறிந்த நன்கு தெரிந்த மணப் பெண்ணை
Deleteபெற்றவர்களே தேடிக் கண்டு பிடித்துக் கொடுப்பார்கள் நீங்கள் கவலை
கொள்ள வேண்டாம் சகோதரரே :)))))
அப்போ காதலிக்குறாவங்க காதலிச்சவஙகளாம் நல்ல பிள்ளை இல்லையா?!
Deleteபோட்டிக்கான கடிதத்தின் இரண்டாவதும் இறுதிப் பகுதியும்
ReplyDeleteமுற்றுப் பெற்று விட்டது சகோதரரே :) வாழ்த்துக்கள் தங்களால்
ஓர் ஆக்கபூர்வமான ஆக்கத்தை எழுதி முடித்த பெருமையுடன்
விடைபெறுகின்றேன் .(சொக்கா... பரிசு கிடைத்தால் அம்பாளடியாள்
சுவிஸ் வங்கிக் கிளைக்கு எந்நேரமும் அனுப்பி வையுங்கள் :)))) )
http://rupika-rupika.blogspot.com/2013/06/2.html
http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post.html
ambaladiyal@hotmail.ch
ReplyDeleteநாங்களும் எழுதலாமோ...
ReplyDeleteயார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் நண்பரே
Deleteநானும் கலந்து கொள்கிறேன்.
ReplyDeleteநானும் போட்டியில் கலந்துகொள்கின்றேன்.
ReplyDeleteநன்றியுடன்
புதுவைப்பிரபா
எனது பதிவு.. http://subadhraspeaks.blogspot.in/2013/07/blog-post.html
ReplyDeleteநானும் இந்தப் போட்டியில் கலந்துகொள்கிறேன். இதில் கலந்துகொள்ள எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன் மற்றும் KG கௌதமன் இருவருக்கும் எனது நன்றி.
ReplyDeleteகடிதத்தை இங்கே காணலாம்
http://mosibalan.blogspot.in/2013/07/blog-post_20.html