'அந்த ஆக்சிடென்ட்ல இறந்து போன பசங்க வீடியோ காமில' என்றார் அம்மா. இரண்டு நாட்களாக அந்த வீடியோவைக் காண்பிக்காமல் டபாய்த்துக் கொண்டிருந்த கோபம் என் அம்மாவின் பேச்சில் இருந்தது. அந்த வீடியோவைக் காண்பிக்காமல் இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஹிமாச்சலப் பிரதேச விபத்து வீடியோவைப் பார்த்து விட்டு எனக்கே மனசு தாங்கவில்லை. ஒருவேளை என் அம்மா பார்த்துத்தொலைத்தால் நிச்சயம் நாள் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பார். நான் சும்மாவே ஆறு குளம் என ஊர் ஊராய் சுற்றுபவன். இனி எங்கு சென்றாலும் இதையும் தன் புலம்பலில் சேர்த்துக் கொள்வார் என்ற காரணத்தாலேயே அதைக் காண்பிக்கவில்லை. இன்று வேறு வழியே இல்லை. அருகில் வந்து அமர்ந்து கொண்டார். கூடவே கெளதமும் சேர்ந்து கொண்டான். 'பார்த்துட்டு சும்மா பொலம்பக் கூடாது' என்ற கண்டிசனோடு அந்த வீடியோவைப் பேஸ்புக்கில் தேடினேன். கிடைக்கவில்லை. ஏன் பேஸ்புக்கில் தேடினேன் என்ற காரணத்தை பின்னால் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
இப்போ வேறுவழியில்லை என்றானதும் மெல்ல யுட்யுபை ஓபன் செய்து வீடியோவைத் தேடினேன். வீடியோ கிடைத்துவிட்டது. கூடவே இலவச இணைப்பாக வேறு பல வீடியோக்களும் ஓரத்தில் வந்து விழுந்தன. அத்தனையும் மிட் நைட் மசாலாவை விட மோசமான XXX வீடியோக்கள். அம்மா அதைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக ஸ்க்ரீனைப் பெரிதாக்கி தேவையான வீடியோ மட்டும் தெரியும்படி பார்த்துக்கொண்டேன். அந்த விபத்து வீடியோவைப் பார்க்கும்போது நான் எதிர்பார்த்தபடியே புலம்பத் தொடங்கினார் அம்மா. 'பொலம்பக் கூடாதுன்னு சொன்னம்லா' என்று சத்தம் போட்டதும் நிறுத்திவிட்டார். ஆனால் அதிலிருந்து சிறிது நேரம் கழித்ததும் யூட்யுப் பற்றியும் அதை யார் எல்லாம் பார்க்கமுடியும், என்னமாதிரியான வீடியோ இருக்கும், குழந்தைகளும் பார்க்கமுடியுமா என்பது குறித்தெல்லாம் விசாரித்தார். கேள்வியின் உள்ளர்த்தம் எனக்குப் புரிந்ததால் - யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்றபடி மையமாக முடித்துக் கொண்டேன். இனி என் அம்மாவின் புலம்பல்கள் எல்லாம் இந்த இணையத்தைப் பயன்படுத்தப் போகும் குழந்தைகளைச் சார்ந்ததாகத்தான் இருக்கப்போகிறது.
ஏழு கழுத வயசான பையன் இருக்கும் என் அம்மாவே கவலைப்படும்போது, இன்றைய தினத்தில் இணையம் சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் நுழைந்துவிட்ட நிலையில், இன்றைய ஜெனரேசன் பெற்றோர்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையும் கவலையை மீறிய அச்சமும்தான் ஏற்படுகிறது. காரணம் மாணாக்கர்கள் மடிவரை கணினி வந்துவிட்டது. இணையவசதி உள்ள கைபேசி அவர்களின் கைகளினுள் புகுந்துவிட்டது. பெற்றோர்களை விட பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பதாக பெற்றோரே பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இப்போது இந்த சிறுவர்கள் இணையத்தை வைத்து என்ன செய்வார்கள். நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரையையோ அல்லது தாமஸ் ஆல்வா எடிசனின் ஆராய்ச்சி தரவுகளையோ படிப்பான்/ள் என்று நம்புகிறீர்களா! இதனை இன்றைய தலைமுறை அப்பாவி அப்பா அம்மாக்கள் வேண்டுமானால் வேறு வழியில்லாமல் நம்பித்தொலைக்கட்டும். ஆனால் உண்மை வேறு மாதிரியானது. ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியது.
நம்முடைய காலத்தில் அதாவது இணையம் பிரபலமாகாத 2004க்கு முந்தைய காலத்தில் விடலையாக இருந்தவர்கள், இளவட்டங்ள், எக்ஸட்ரா எக்ஸட்ராக்கள் அனைவருக்கும் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு கில்மா தியேட்டர் இருந்திருக்கும். இப்போதும் இருக்கலாம் பாழடைந்த நிலையில். அங்கு போடுவானா மாட்டானா என்ற நிலையில் ஓட்டப்படும் பிட்டுப்படம் பார்க்க, தலையில் துண்டு போட்டுக் கொண்டு மறைந்து மறைந்து போன தலைமுறை நம்முடையது. மேலும் சிறார்களுக்கு சுவறுகளில் ஒட்டப்பட்ட பிட்டுப்பட போஸ்டரின் அந்த இடத்தில் கரி பூசப்பட்ட நாயகியின் ஸ்டில் தான் அதிகபட்ச ஆபாசமாக இருந்திருக்க வேண்டும். நாம் அந்த போஸ்டரைப் பார்ப்பதை வேறுயாரும் பார்த்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் ஓரக்கண்ணால் வெறிக்க வெறிக்க பார்த்த நாட்கள் எல்லாம் உண்டு. 'பிள்ளையோ நடமாடுற இடத்துல போஸ்டர் ஒட்டிருக்கானுவோ பாரு போஸ்டரு' என்று போஸ்டரைக் கிழித்தெறிந்த ஆட்களையும் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அதை விட ஆபாசமான போஸ்டர்கள் நாளிதழ்களில் கூட சர்வசாதாரணமாக உலவத் தொடங்கிவிட்டது என்பது வேறு விஷயம்.
அரசுப் பள்ளியில் படித்த எங்களுக்கு வாத்தியார் என்பவர் அவருக்குப் பொழுதுபோகாவிட்டால் பாடம் நடத்த வருபவர் என்று பொருள். அப்படியிருக்க எங்களுக்குப் பொழுதுபோக வேண்டாமா. பள்ளிக்கு வந்ததும் முதல் காரியமாக ஆளுக்கொரு ஆலமரத்தடியில் கூடுவோம். எங்களுக்கென வகுப்பறைகள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு மரத்தடியின் கீழும் பத்துபேர் அமர்ந்துகொள்வோம். பாக்கெட் மணியாக எங்களிடம் ஒரு ரூபாய் இருந்தாலே நாங்கள் பணக்கார்கள். தலைக்கு ஒரு ரூபாய் வசூலிப்பு முடிந்ததும் தென்காசி புதிய பேருந்து நிலையத்தை நோக்கி ஓடுவோம். மஞ்சப்பத்திரிகை வாங்குவதற்காக. எந்த கடையில் என்ன புத்தகம் கிடைக்கும் என்று எங்களுக்கு வழிகாட்டியவர்கள் எங்கள் சீனியர்கள்.
அந்த நம்பர் நடிகையின் குளியலறைக் காட்சியின் பிளாக் அண்ட் வொயிட் பக்கங்கள் அடங்கிய புத்தகம் தான் நாங்கள் முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த புத்தகம். நாட்கள் நகரநகர நாளொரு புத்தகமும் தினமொரு புத்தகமுமாய் வந்துபோய்க் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கையில். ஒருகட்டத்தில் இது மட்டுமே எங்கள் தினசரி வாடிக்கைகளில் ஒன்றாக மாறியிருந்தது. ஆலமரத்தடி புளியமரத்தடி புட்பால் கிரவுண்ட் பேஸ்கட் பால் கிரவுண்ட் மூலை முடுக்குகள் என்று பார்த்த இடங்களில் எல்லாம் புக்கும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்கள். கூடிக்கூடி புத்தகம் வாசித்தார்கள். புக்கும் கையுமாக அலைவதில் தப்பில்லை என்ன மாதிரியான புக்கும் கையுமாக அலைந்தோம் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கே இதனை ஏன் இவ்வளவு அழுத்தமாகக் குறிப்பிடுகிறேன் என்றால் சாதாரண ஒரு புத்தகதிற்கே இவ்வளவு கவர்ச்சி எனின் பால்ய வயதில் பதிவு செய்யப்பட்ட ஆபாசக் காட்சிகள் என்பது இன்னும் எவ்வளவு கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும்.
கிட்டத்தட்ட புத்தகங்களில் இருந்து இணையத்திற்கு மாறிய முதல் தலைமுறை மாணவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என நினைக்கிறன். இந்த நாட்களில் எங்கள் பள்ளியின் கம்ப்யுட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு மற்ற க்ரூப் மாணவர்கள் மத்தியில் ஒருதனி கிராக்கி உண்டு. ஏனெனில் அவர்களுக்குத் தான் கணினியைக் கையாள்வது பற்றி தெரியும். எந்த வெப்சைட்டில் என்ன இருக்கிறது என்பது தெரியும். அதிலும் கணினியில் புகுந்து விளையாடக் கூடிய மாணவர் என்றால் அவனைக் கொத்திக்கொண்டு போக ஒரு கூட்டமே காத்திருக்கும் நான் கூறுவது 2005ன் தொடக்கத்தில். நான்கு பக்கமும் அடைத்து வைக்கப்பட்ட பிரவுசிங் செண்டர்களின் காட்டில் மழையடித்தக் காலம் அது. வெறும் ஒரு மணி நேரம் பார்க்கக் கூடிய அந்த படங்களுக்காக ஒரு மாதம் துட்டு சேர்த்து வைத்தவனை எல்லாம் எனக்குத் தெரியும்.
வெறும் ஆறேழு ஆண்டுகளில் எப்படியிருந்த நாம் எப்படியாகிவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது. காமம் எவனையும் சபலப்பட வைக்கும். கற்பு காமம் என்பது மூடி போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்படும் ஒரு சமுதாயத்தில் நாம் என்னமாதிரியான நிலையை நோக்கிப் பயணிக்கிறோம். இது நம்மை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கப்போகிறது என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவேமுடியவில்லை. மறைத்து மறைத்து பார்க்கப்பட்ட ஒன்றை பாரு பாரு என்றால் அவன் பார்க்கத்தான் செய்வான். அதைதான் இன்றைய இணைய தளங்களும் செய்கின்றன. அவர்களுக்கு அது வருமானம். நமக்கு?
இந்நேரத்தில் சிறுவர்களை மட்டும் குறைசொல்லி எதுவும் ஆகபோவதில்லை. சமுகத்தில் முன்னோடிகாளக இருக்க வேண்டிய நாம் சமுகவலைதளத்தில் என்னமாதிரியான முன்னோடிகளாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் முகம்கூட இங்கு பலருக்கும் முக்கியமாயில்லை. அவளது தகவல் பக்கத்தில் அவள் பதிந்திருக்கும் FEMALE என்ற வார்த்தையே பலருக்கும் போதுமானதாய் இருக்கிறது. ஒரு பெண் புள்ளி வைத்தாலே நூறு லைக் போட சிலநூறு ஆண்கள் காத்துக்கிடக்கிறார்கள். சில பெண்களும் அதையே விரும்புகிறார்கள். இந்த விசயத்தில் பெண்களின் மீது பெண்களே பொறாமை கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்கள் ஆபரேசன் செய்து கொள்ளாமலேயே சமூக வலைதளங்களில் பெண்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் அட்டூழியம் கொடுமையிலும் கொடுமை.
இந்நேரத்தில் சிறுவர்களை மட்டும் குறைசொல்லி எதுவும் ஆகபோவதில்லை. சமுகத்தில் முன்னோடிகாளக இருக்க வேண்டிய நாம் சமுகவலைதளத்தில் என்னமாதிரியான முன்னோடிகளாக இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு பெண்ணின் முகம்கூட இங்கு பலருக்கும் முக்கியமாயில்லை. அவளது தகவல் பக்கத்தில் அவள் பதிந்திருக்கும் FEMALE என்ற வார்த்தையே பலருக்கும் போதுமானதாய் இருக்கிறது. ஒரு பெண் புள்ளி வைத்தாலே நூறு லைக் போட சிலநூறு ஆண்கள் காத்துக்கிடக்கிறார்கள். சில பெண்களும் அதையே விரும்புகிறார்கள். இந்த விசயத்தில் பெண்களின் மீது பெண்களே பொறாமை கொள்கிறார்கள். இன்னும் சில ஆண்கள் ஆபரேசன் செய்து கொள்ளாமலேயே சமூக வலைதளங்களில் பெண்களாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் அட்டூழியம் கொடுமையிலும் கொடுமை.
உலகம் முழுவதும் இதே பிரச்சனையா என்றால் நிச்சயம் இல்லை. என்னுடைய அமெரிக்கத் தோழி சமீபத்தில் தனது ப்ரோபைல் பிக்சர் மாற்றி இருந்தாள். அழகானவள். அவள் அழகைக் (அங்கங்களை மூடியும் மூடாமலும்) காண்பிக்கும் சமீபத்திய புகைப்படத்தை பதிவேற்றி இருந்தாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்தப் படத்திற்குக் கிடைத்தது வெறும் இரண்டு லைக்குகள் மட்டுமே. இரண்டுமே பெண்களிடம் இருந்து வந்தவை. இங்கே இதனைக் குறிப்பிடுவதன் காரணத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் பிரச்சனை நமது ஆண்களிடமா பெண்களிடமா இல்லை ஒட்டு சமூகத்திடமா என்று?
இணையயுகத்திற்கு முன் காமமே இல்லையா. இல்லை காம தூண்டல்கள்தான் இல்லையா என்ற கேள்வி எழலாம். இருந்தது. அப்போது லிமிடட் மீல்ஸாக கிடைத்த ஒன்று இன்று அன்லிமிட்ட மீல்ஸாக பரிமாறப்படுகிறது. எதையுமே அரைகுறையாக, நமக்குப் பாதகம் தராத வரைக்கும் நல்லது என்ற நிலையில் ஏற்றுக்கொள்பவர்கள் நாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காதல் திருமணத்தையே ஏற்றுக்கொள்ளாத ஒருசூழலில் வாழ்கிறோம். நாளை இந்த சமுதாயம் காமத்தை நேரிடையாக அறுவடை செய்யும் போது நமது நிலை என்னவாக இருக்கப்போகிறது. ஒருவேளை நீயாநானாவில் கள்ளகாதலையும் ஒரு பேசுபொருளாக சேர்த்து விடுவார்களோ?
பிள்ளைகள் மீது ஓவராய் பாசம் வைத்து அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்க இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் சார்ந்தவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
பிள்ளைகள் மீது ஓவராய் பாசம் வைத்து அவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்க இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் சார்ந்தவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது.
சமீபத்தில் தென்காசியில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய குட்டி பையனுக்கு இணைய வசதியுடனான டேப்லட் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதைக் என் கையில் கொடுத்து எப்படி இருக்கு பார் என்றார். அதுவரை வேறு எதோ செய்து கொண்டிருந்த சிறுவன் என்னருகில் ஓடிவந்துவிட்டான். பையனின் முகம் போன போக்கு சரியில்லை. நான் அதில் என்னவெல்லாம் நோண்டுகிறேன் எங்கல்லாம் செல்கிறேன் என்பதை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தான். நம் புத்தி சும்மா இருக்குமா! நேரே ஹிஸ்டரியைத் திறந்தேன். எஸ்டிடி மிக முக்கியம் அமைச்சரே. அவ்வளவு தான் சடாரென என் கையில் இருந்து டேப்லெட்டைப் பிடுங்கினான். பிடுங்கியவன் அவனுக்கு என ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி ஓடினான். ஓடியவன் பத்து நிமிடம் கழித்து மீண்டும் என்னிடம் தனது டேப்லெட்டை நீட்டினான். ஹிஸ்டரி துடைத்து வைக்கபட்டிருந்தது. நானும் அதையேதான் எதிர்பார்த்திருந்தேன். அவன் அப்பா அதாவது என் நண்பர் கூறினார் 'எம்புள்ளக்கி எல்லாமே தெரியும். எனக்கு தெரியாதது கூட அவனுக்கு தெரியும் என்றார்' பெருமை பொங்க. யோவ் நிசாமவே உனக்குத் தெரிஞ்சத விட உம்புள்ளைக்கு நிறைய தெரிஞ்சிருக்கும்யா' என்பதை மனதில் நினைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். அந்தச் சிறுவனும் அவனுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான் இணைய வசதியுடன் கூடிய அந்த டேப்லெட்டுடன்.
Tweet |
மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். இதற்கான தீர்வு என்பது நம் கைகளை விடு என்றோ போய்விட்டது. எல்லாம் காலத்தின் கோலம்!
ReplyDeleteசில websitewebsite களுக்கு செல்ல முடியாத வண்ணம் lock சோய்ய முடியும்
ReplyDeleteஇந்த கால குழந்தைகளுக்கு அந்த லாக்கை எப்படி உடைப்பது என்பது மிக நன்றாகவே தெரியும்
Deleteஉங்களுக்கு திரிஷா என்றால் எங்களுக்கு ரிச்சா பல்லேட்.
ReplyDeleteமிக அருமையான பதிவு! ஆண்ட்ராய்ட் போன் ஆப்ஸ்கள் இன்னும் மோசம்! மொத்தத்தில் பிஞ்சிலேயே பழுத்துவிடுகிறார்கள்! அவர்கள் வயதில் நமக்குத் தெரிந்ததைவிட இப்போது அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் இதில் பெண்களும் அடக்கம்! இதனால்தான் டியுசன் செண்ட்ர் தொழிலையே கைவிட்டேன்!
ReplyDeleteமிக அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் ஒரு தரமான பத்திரிக்கைகளில் வந்த படைப்பு போல மிக அருமையாக இருந்தது. சொல்ல வந்த விஷயத்தை மிக தெளிவாக சொல்லி சென்ற விதம் மிக மிக பாராட்டுக்குரியது
ReplyDeleteகுழந்தைகள் பார்ப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஒருவேளை நாம் தடுக்க முயற்சிக்கும் போதுதான் அவர்களுக்கு அதை தாண்டி குதிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் வலுப் பெறும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதனால் அந்த விஷயங்களை மிக பக்குவமாகத்தான் கையாள வேண்டும். இதற்கு செக்ஸ் கல்வி மிக அவசியம் அதைத்தான் இங்கு ஹெல்த் பாடமாக மிக பக்குவமாக 5 ஆம் வகுப்பிலே கற்று தருகிறார்கள்.
ReplyDeleteஎன் பெயர் ராமசேஷன் படிப்பது போலவும், விகடன் கட்டுரை படிப்பது போலவும் இருந்தது. தவிர்க்க முடியாத பயங்கரம். நல்லொழுக்கங்கள் குழந்தையிலிருந்தே போதிக்கப் பட்டிருந்தால் பிழைக்கலாம்!
ReplyDeleteஎன்றைக்கு நம்மால் எடிட் செய்ய முடியாததாக தொலைக்காட்சி நம் வரவேற்பறைக்குள் வந்ததோ அப்போதே ஆரம்பித்து விட்டது இந்தப் பிரச்னை. கண்கொண்டு பார்க்க முடியாத பல விளம்பரங்களும், சேனல்களும் இருக்கத்தானே செய்கின்றன. பின்னர் வந்ததுதான் இணைய ஆபத்து. இதிலும் கொட்டிக் கிடப்பவற்றை நீ வீட்டில் மறைத்தால் வெளியில் சென்று பார்க்கத்தான் செய்வார்கள் இளைய பிஞ்சுகள். இதற்கு ஒரே வழி (எனக்குத் தெரிந்து) பெற்றோர்கள் வெளிப்படையாக இளைய தலைமுறையிடம் பேசி அவர்களை வழிநடத்துவதுதான். நல்லதொரு அலசலை முன்னெடுத்து தெளிவாக எழுதியமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் சீனு.
ReplyDeleteசீனு, முதல்ல நீங்க பதிவு செஞ்ச விதம் அருமை.. அதுக்காக மிகப்பெரிய பாராட்டுகள்..! சரி விஷயத்துக்கு வருவோம்.. (எப்பவும் போல சண்டை போட வர்றேன்னு நினைக்க வேண்டாம்) நம்ப தாத்தா காலத்துல வெறும் ட்ரான்சிஸ்டர் மட்டும் தான். அப்பா காலத்துல டிவி.. நம்ம காலத்துல கம்ப்யுட்டர், அடுத்த ஜெனரேஷன் கையடக்க கணினி.. இன்னும் தொழில்நுட்பம் வளரும்..! நீங்க பதிவு செய்த ஒரு பிரச்சனை நம்ம ஊருக்கு மட்டுமல்ல.. உலகம் முழுதும் உள்ள குழந்தைகளுக்கு உள்ள பிரச்சனை.. இது பார்க்கலாம், இது பார்க்கக்கூடாது ன்னு தடை செய்யுற உரிமைய இன்றைய தலைமுறையினர் நமக்கு குடுக்க தயாரில்லை. அப்படியிருக்க இப்படியே போனா என்ன ஆகும் நிலைமை.. மறைச்சு வைக்க வைக்க தான் அதன் மேல் உள்ள ஈர்ப்பு கூடிகிட்டே போகும்.. குங்குமத்தில் வரும் நடுப்பக்க கவர்ச்சிப் படத்தை காட்டிலும் இன்று அட்டைப்படமே கவர்ச்சியாக இருக்கிறது.. ஆனாலும் அதை அசால்ட்டாக ஒதுக்கி விட்டு போகிறான். காரணம் அவன் அதற்கும் அடுத்த படி சென்றுவிட்டான். இன்டர்நெட் போன்ற சமூக வலைத்தளங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டால் மட்டும் இதுபோன்ற விஷயங்கள் நின்று விடுமா.. நிச்சயம் நிற்காது.. வேறு ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். சுய ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை மூத்தவர்களை பார்த்து தான் கற்றுக் கொள்கிறார்கள். ஆகையால் வரும் தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறோமோ நாம் அதை பின்பற்றினாலே போதுமானது என்று நினைக்கிறேன்...!
ReplyDeleteஆவி பாஸ் நான் எதையுமே conclude செய்யவில்லை. என்னால் மட்டும் conclusion குடுக்கவும் முடியாது. உங்கள் கூற்று மிக மிக நியாயம். தடுக்க வேண்டாம் தவிர்க்க வைக்க வேண்டும். அதற்கான மாற்றம் நிச்சயம் நம்மில் இருந்துதான் வர வேண்டும் :-)
Delete"ஒருவேளை நீயாநானாவில் கள்ளகாதலையும் ஒரு பேசுபொருளாக சேர்த்து விடுவார்களோ?" அருமை அருமை
ReplyDeleteவணக்கம் காந்தி.
ReplyDeleteகாந்தீ
Deleteஅருமையான பதிவு. இன்றைய பல்வேறு பாலியல் வன்முறைகளுக்கு காரணம் இது போன்ற வரம்பில்லா விஷயங்கள் எளிதில் கிடைப்பதுதான். என் பதின்பருவ மகன் வேறு வழியில்லை அவனுக்கு கண்டிப்பாகத் தேவை லிஸ்டில் லேப்டாப்பும், நெட் கனெக் ஷனும்.. ஆனால் அவன் தனிமையில் இருக்கும் போது ஒரு தாயின் மனம் பதைத்துக் கொண்டுதான் இருக்கிறது… அதில் என்ன எனத் தெரிந்து கொள்ளும் கியூரியாசிட்டி இயல்பு. ஆனால் அதுவே தொடருமானால் ….. அவனிடம் பேசியிருக்கிறேன் ..இது போன்ற சைட்கள் ஆர்வமாய்த்தான் இருக்கும்.. ஆனால் அதனை இதில் பார்த்து உன் மனதையும் , உடலையும் கெடுத்துக்கொள்ளாதே என்பதாய் …. ஆனால் எத்தனை பெற்றோர் இதை கவனிப்பார்கள்… எனக்குப் பழக்கமான ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கு லேப் டாப்பும் ,நெட் கார்டும் எடுத்து வந்து கூடப்படிப்பவர்களுக்கு படங்களைப் போட்டு காண்பித்திருக்கிறான். மேலும் அந்த வயதிலேயே பார்ட்டைம் வேலை செய்வதால் எளிதாக அட்வான்ஸ்ட் செல்போன்கள் புலங்குகிறது’. எல்லாமே இப்போது அவன் கைவசம்… அவனுக்குச் சொல்லித் தரவும் , அறிவுரை வழங்கவும் யாருமில்லை…எப்படி இவர்களைக் கையாள்வது?
ReplyDeleteஇணையத்துக்கு முந்தைய பரவலை நியாயப்படுத்துவது இணைய வளர்ச்சியா? உங்கள் வளர்ச்சியா?
ReplyDeleteஇணையத்துக்கு முந்தைய பரவலையும் நியாயப்படுத்தவில்லை. நாங்கள் பள்ளியில் செய்த ஆர்வக்கோளாறுகளையும் நியாயப்படுத்தவில்லை. அப்போது எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை உதாரணம் காட்டியுள்ளேன் அவ்வளவுதான். சில உதாரணங்கள் என் வாழ்வில் இருக்கும் போது நான் ஏன் வேறு எங்கோ செல்ல வேண்டும்...
Deleteஇன்றைய சமுதாயம் நேற்றைய சமுதாயத்தை விட மேம்பட்டது. இதை ஒரு விதியாகவே வைத்துக் கொள்ளலாம். உலகத் தொடக்கதிலிருந்து இந்த விதியை apply செய்து பார்த்து நிரூபித்துக் கொள்ளலாம்.
ReplyDeleteமகாபாரதத்தில் திருப்பாவையில்... இல்லாத'அடல்ட்ஸ் ஒன்லி' இணையத்தில் இருக்கிறதா? இளைய சமுதாயம் கெட்டுப்போகிறதா?
//இன்றைய சமுதாயம் நேற்றைய சமுதாயத்தை விட மேம்பட்டது. இதை ஒரு விதியாகவே வைத்துக் கொள்ளலாம். உலகத் தொடக்கதிலிருந்து இந்த விதியை apply செய்து பார்த்து நிரூபித்துக் கொள்ளலாம்.// நிச்சயம் யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை...
Delete//மகாபாரதத்தில் திருப்பாவையில்... இல்லாத'அடல்ட்ஸ் ஒன்லி' இணையத்தில் இருக்கிறதா? இளைய சமுதாயம் கெட்டுப்போகிறதா?//
மகாபாரதத்தையும் திருப்பாவையையும் தற்போதைய சூழ்நிலையில் எத்தனை பேர் படிக்கிறார்கள் அப்பா சார். அப்படியே படித்தாலும் எத்தனை பேர் நீங்கள் புரிந்த அந்த மூல விளக்கங்களுடன் படிக்கிறார்கள்.
இணையத்தைப் பார்த்துதான் சமுதாயம் கெட்டுப் போகிறதா என்றால் இணையமும் ஒரு காரணம். மிக முக்கிய முதல் காரணம் என்று தோன்றுகிறது...மேலும் இன்டர்நெட் மாஸ் மீடியா இத்யாதி இத்யாதி காரணங்களை அடுக்கலாம்.
கிட்டத்தட்ட பலபேரின் புலம்பல்களைக் கேட்டிருக்கிறேன். வரி வடிவத்தில் அதிக கிளர்ச்சியா இல்லை ஒளி வடிவத்தில் அதிக கிளர்ச்சியா என்றால் என் வயதையொத்தவர்கள் எழுத்து என்பார்கள். ஆனால் பருவத் தொடக்கத்தில் இருப்பவர்களை கேட்டுப் பார்த்தோமானால் ஒளி வடிவம் என்பார்கள். அறிந்து கொள்ளுதலின் சுவாரசியம்.
இங்கே இந்தியாவில் இன்றைய இணைய தலைமுறைக்கே (என்னையும் உள்ளடக்கி) இணையத்தை எப்படி உபயோகிப்பது எனத் தெரியவில்லை. அப்படியிருக்க சிறுவர்களிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும். நமது கணினியின் ஹிஸ்டரியைப் பார்க்கத் தெரியாத பெற்றோர்களைக் கொண்ட முதல் தலைமுறை நாம் என்ற ஒரு பேமஸான SMS வாசகம் உண்டு.
கடந்த ஆண்டு டீச்சர் ட்ரெயினிங் முடித்த எனது தோழியை வில்லிவாக்கம் அருகே ஒரு அரசுப் பள்ளியில் மூன்று மாத பயிற்சிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த மூன்று மாதம் அவள் வாழ்வின் நரகத்தில் இருந்த நாட்கள் என்றாள். அங்குள்ள மாணவர்கள் பார்த்த பார்வையும், பேசிய வார்த்தைகளையும் நினைத்தால் தனக்கு இந்த வேலையே வேண்டாம் என்றாள்.பள்ளி நிர்வாகத்திடம் கூறி அழுதிருக்கிறாள். கையை விரித்துவிட்டார்கள். தமிழக அரசு சட்டப்படி மாணவர்களை அடிக்கக் கூடாது அவர்களாலும் என்ன செய்ய முடியும்.
இந்த அவசரமான யுகத்தில் மாணவர்கள் காமத்தையும் அவசர அவசரமாக கடந்து போக சாத்தியம் இருக்கிறது. இது சரியா தவறா என்றால் அதற்கான விடை அவரவர் பார்வையில் அவரவர் கோணத்தில் விட்டுவிடுகிறேன் :-)
சீராக இருக்கிறது எழுத்து. சுவாரசியமான புலம்பல்.. பதிவு.
ReplyDeleteஅவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில். இணையம் உட்பட
Deletearumai sir. itharkku thirvaaka kovai avi sir sonnathu pola nadanthu kondal pothum
ReplyDeletearumai sir. itharkku thirvaaka kovai avi sir sonnathu pola nadanthu kondal pothum
ReplyDeleteகோவை ஆவியின் கருத்தில் உடன்படுகிறேன்
ReplyDeleteஉண்மைதான் சீனு:(
ReplyDeleteயூ ட்யூபில் எதையாவது தேடலாமுன்னு நுழைஞ்சதுமே தமிழ்நாட்டு வில்லேஜ் டான்ஸ் பொட்டுத்துணி இல்லாமன்னு கேவலமா வந்து கொட்டுது:(
இதென்னடா கேடுகாலமுன்னு நினைக்கறேன்.
தமிழ்நாட்டு மக்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள் டீச்சர்
Deleteஇன்றைய பாலியல் குற்றங்கள் பெருக இதுதான் முக்கியக் காரணம் அண்ணா..
ReplyDeleteசிறப்பாக உள்ளதை உள்ளபடி பகிர்ந்துள்ளீர்கள். பாராட்டுகள்...
கஷ்ட காலம்...
இதுவும் கடந்து போகும் அண்ணா...
ReplyDeleteதம்பி, நீ வருங்காலத்துல ஒரு விவேகானந்தரா வர்றதுக்கு எல்லா அறிகுறியும் தெரியுது..
Deleteசிந்திக்க வேண்டிய விஷயங்களை அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க...வெல்டன்..!
ReplyDeleteகண்டிப்பா ஒரு conclusion வர முடியாத பிரச்சினை மட்டுமில்ல, தீர்வும் சொல்ல முடியாத பிரச்சினை இது.. நீங்க சொன்னாமாதிரி அடுத்து என்னன்னு யோசிக்கவே முடியாது! ஆனா, கண்டிப்பா இப்போதைய நிலைமைய விட பயங்கரமா இருக்கும்!
ReplyDeleteபிள்ளைகளை தனியாய் இணையத்தில் விட்டு வர முடியல. அதைவிட கொடுமை என் மொபைல்ல யூடியுப்ல கிளாத் கிராஃப்ட்ன்னு சர்ச் குடுத்துட்டு நான் போய்ட்டேன். அதுல ஏதோ கண்றாவி பக்கம்லாம் காட்டி இருக்கு. சின்ன பொண்ணு என்னை தப்பா நினைக்குது. அப்புறம் பெரியவ சொல்லி அம்மா மேல தப்பில்லன்னு சொன்னப் பிறகுதான் சமாதானம் ஆச்சு!
ReplyDeleteநான் சுத்தமா குழம்பிட்டேன் அக்கா.. அது அடல்ஸ் ஒன்லி தானே.. அப்படியே நீங்க பார்த்தாலும் என்ன தப்பு..? ;-)
Deleteபிள்ளைகளைப் பொறுத்தவரை தன் அப்பா அல்லது அம்மா போல யோக்கியவான்கள் ஊரில் இல்லன்னு நினைச்சுகிட்டு இருக்கும். இதுப்போன்ற தளத்தை பெத்தவங்க பார்க்குறாங்கன்னு அது உணரும்போது அதுங்க மனசிலிருந்து ஒரு படி நாம கீழிறங்கிப் போவது நிஜம். அப்பா பார்ப்பதைக்கூட ஏத்துக்குவாங்க. ஆனா, அம்மா பார்த்தால் கதை அவ்வளவுதான். அதுக்கு காரணம் நம்மீது இருக்கும் மதிப்பும், அன்பும்தான்.
Deleteசின்னவ அந்தளவுக்கு இணையம் வர மாட்டா. அதனால, இதில் அந்த மாதிரி விசயங்களும் வரும்ன்னு முதல் முறை உணரும்போது அவளுக்கு ஒரு அதிர்ச்சி. அவ்வளவுதான்.
அற்புதம் ராஜி
Deleteநண்பரே,
ReplyDeleteஇன்றுதான் உங்கள் வலிப்பூவினை கண்டேன்... முதலில் திறந்த புத்தகமாய், எந்த தயக்கமும் இன்றி இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றிகளும் வாழ்த்தும் ! ( " சரோஜாதேவி " படித்ததையும், பிட்டுபடம் பார்த்ததையும் எத்தனை பேர் ஒத்துகொள்வார்கள் என தெரியவில்லை ! அப்படி ஒத்துகொள்ளதவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது வேறு விசயம் !! )
" கிட்டத்தட்ட புத்தகங்களில் இருந்து இணையத்திற்கு மாறிய முதல் தலைமுறை மாணவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என ..."
நானும் உங்கள்தலைமுறைதான் நண்பரே !
"வெறும் ஆறேழு ஆண்டுகளில் எப்படியிருந்த நாம் எப்படியாகிவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது.... "
உண்மையாண ஆதங்கம் !
" இப்போது சொல்லுங்கள் பிரச்சனை நமது ஆண்களிடமா பெண்களிடமா இல்லை ஒட்டு சமூகத்திடமா என்று? "
சத்தியமாய் பிரச்சனை சமூகத்திடம் தான் தோழரே ! ( தயவு செய்து எனது " பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் " கட்டுரையை படியுங்கள்.
http://saamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html
எனது பார்வை சரிதானா என்பதை பின்னூட்டமிடுங்கள்.நன்றி )
நமது சமூகத்துக்கு மிகவும் தேவையான பதிவு.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
நல்லதொரு பதிவு சீனு! அதை மிகவும் அழகாகவும் எழுதி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteமனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை இருக்கத்தானே செய்கின்றது! ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடுகின்றதே அல்லாமல் நிகழ்வில் மாற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை சீனு! மே பி, இப்போது எல்லாமே விரல் நுனியில் கிடைப்பதால், அதுவும் எளிதில் கிடைப்பதால் பிஞ்சிலேயே பழுத்த பழங்களாக பெரும்பாலான பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று வேண்டுமானல் சொல்லலாம். அக்காலத்திலும் இருந்தார்கள் ஆனால் % குறைவாக இருந்திருக்கலாம். இப்போது பெற்றோர்களும் ஒரு காரணம்தான். காரணமாகிவிட்டு பயப்படுவதில் அர்த்தமில்லையே! அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது போல, பெற்றோர் எவ்வழி அவ்வழி பிள்ளைகளும்! பெரியவர்கள், பெற்றோர் நடந்து கொள்ளும் விதத்தில்தான்..அதாவது நல்லொழுக்கம் என்பது சொல்லிப் புரிய வைப்பதை விட பெரியவர்கள் செயல்களிலும், நடந்துகொள்ளும் விதத்திலும் தான் இருக்கின்றது பிள்ளைகள் கற்றுக் கொள்வது!
பெற்றோர்கள் நல்ல நண்பர்களாய் இருந்தால் பிள்ளைகளுக்கும் கவலை இல்லை...பெற்றோருக்கும் கவலை இல்லை....பயம் இல்லை!
சிந்திக்க வேண்டிய ஒரு பதிவு!
பெற்றோர்கள் நல்ல நண்பர்களாய் இருந்தால் பிள்ளைகளுக்கும் கவலை இல்லை...பெற்றோருக்கும் கவலை இல்லை....பயம் இல்லை!
Deleteஇதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.
நல்ல பதிவு சீனு. உங்கள் ஆதங்கத்தினைச் சொல்லி விட்டீர்கள்....
ReplyDeleteஇணையத்தில் எல்லாமே இருக்கிறது. நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளும் திறன் தான் வேண்டும் - இளைஞர்களுக்கும் அதை புரிய வைக்க பெற்றோர்களுக்கு பக்குவம் வேண்டும்.
மிக மிக முக்கியமான தேவையான பதிவு. பலர் எழுத யோசிக்கும் நிலையில் தாங்கள் இவ்வாறு எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதைவிட தவறாகப் பயன்படுத்துவதுதான் அதிகம். தங்களின் பதிவில் அதனைப் பற்றி மிகவும் தெளிவாக விவாதித்துள்ளீர்கள். தம் குழந்தைகள் மீது அபாரமாக நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்கள் இப்பதிவைப் படித்தால் சற்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். எது சரி எது தவறெனப்புரிந்துகொள்ளும் மன நிலை நமது இளைய தலைமுறையினருக்கும் கூடிய விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ReplyDeleteபிட்டு படம் பார்க்கிறவன் எல்லாம் கெட்டழிஞ்சு போனதுமில்லை.பொத்தி பொத்தி வளர்த்தவர்கள் எல்லாம் சாதிச்சு கிழிச்சதுமில்லை.எல்லாம் அவரவர் கையில். பதினைந்து-பதினாறு வயது வரை பிள்ளைகளை அனாவசியமாக இணையத்தில் உலவ விடுவது நல்லதற்கல்ல. அதற்காக பாலியல் வன்கொடுமைகளுக்கு எல்லாம் இணையத்தை காரணம் காட்டிவிட முடியாது.சுஜாதாவின் பிலிமோத்சவ் சிறுகதை வாசித்திருக்கிறீங்களா? (எஸ்.ராவின் சிறந்த நூறு சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெறுள்ளது).காம இச்சை எல்லோருக்கும் இருக்கின்றது தான் ஆனால் விபச்சாரியை நாடிச்செல்வத்ட்கோ கற்பழிப்பதற்கோ முக்கால்வாசி ஆண்களுக்கு துணிச்சல் இல்லை என்கிறது சைக்கொலாஜி.இதை அடிப்படையாக வைத்து எழுதப்பட சிறுகதை.ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.
ReplyDelete