வீரம் எனக்கு நூறு சதம் மனநிறைவைத் தரவில்லை என்ற நிலையில், நாவலூரில் இருந்து திருவான்மியூர் கணபதிராம் நோக்கி பயணிக்கத் தொடங்கினோம் ஜில்லாவிற்காக உடன் நண்பர்களும், சகபதிவர்கள் ஆவியும் ரூபக்கும்.
நாவலூர் ஏ.ஜி.எஸ்ஸில் ஐந்து நிமிடத்திற்கு முன்பே திரைப்படத்தை ஆரம்பித்த நிலையில் கணபதிராமிலோ நிலைமை தலைகீழ். இரண்டு மணிக்கே அரங்கம் போய் சேர்ந்தபோதும் கூட இரண்டரை மணிக்கு ஆரம்பிப்பதாய் இருந்த காட்சி மிகச்சரியாக மிகத் துல்லியமாக ஆரம்பித்த போது மணி மூன்றரை.
என்ன தைரியத்தில் கணபதிராமில் டிக்கெட் முன்பதிவு செய்தேன் என்று தெரியவில்லை. சென்னை வந்த புதிதில் வாரணம் ஆயிரம் இங்குதான் பார்த்தேன். ஒருவேளை அது சென்னை வந்த புதிது என்பதால் அந்த அரங்கம் எனக்கு ஆகோ ஓகோ என்று தெரிந்திருந்தது போல, ஆனால் இன்று தான் தெரிந்தது கணபதிராம் எவ்வளவு குப்பை தியேட்டர் என்று.
அடித்துப் பிடித்து அங்கிருந்த போலீசாரிடம் அடிவாங்கமால் அரங்கினுள் நுழைந்தால், ஸ்க்ரீன் குவாலிட்டி, சவுண்ட் குவாலிட்டி, சீட் குவாலிட்டி எந்த மண்ணாங்கட்டி குவாலிட்டிகளையும் எதிர்பார்க்கக் கூடாத திரையரங்கம் என்று புரிந்தது. முன்பொரு காலத்தில் தென்காசி திரையரங்குகளில் நல்ல வளைந்த திரைகளை கட்டி தொங்க விட்டிருப்பார்கள், எழுத்துக்கள் அனைத்தும் பூதக் கண்ணாடியில் பார்த்தால் எப்படி வளைந்து நெளிந்து தெரியும் அப்படியொரு நிலைதான் இங்கும். தண்ணீர் இல்லாத காலி தண்ணீர்த் தொட்டியில் நின்றுகொண்டு "வணக்கம் சார் எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா" என்று பேசினால் எப்படி கேட்குமோ அப்படி ஒரு சவுண்ட் குவாலிட்டி, சேரில் உட்கார்ந்தால், உட்கார்ந்தது சேரா இல்லை தரையா என்று மெஸ்மரிசம் செய்யும் சீட் குவாலிட்டி. பத்து வருடத்திற்கு முன்பு எடுக்கபட்ட வானத்தைப் போல திரைப்படத்தை இப்போது அரங்கில் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஸ்க்ரீன் குவாலிட்டி. நல்லவேளை என் சகாக்கள் என்னை அடிக்கவில்லை.
புகைக்கும் புகையிலை போடும் கனவான்களை திருத்த இனி முகேஷ் வரமாட்டார் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. முகேஷின் ரசிக சிகாமணிகளின் தொல்லை தாங்கமால் அவருக்கு பதில் இனி இவர் என்று வேறொருவரை அழைத்து வந்துவிட்டனர். சரி அதுவா முக்கியம் ஜில்லாவிற்கு வருவோம்.
விஜய் துப்பாக்கியில் இருந்ததை விட ஹான்ட்சம்மாக இருக்கிறார். வீரம் படத்திலாவது கிராமத்து கெட்டப் அது இது என்று அரசால் புரசலாக படம் குறித்து எதாவது தெரியும். ஜில்லாவிலோ சுத்தம், கதை எதை நோக்கி பயணிக்கப் போகிறது என்பது தெரியாமலேயே படம் பார்க்க அமர்ந்தோம். ஆரம்ப காட்சியில் மோகன்லால் ஒரு வசனம் பேசுகிறார் 'நான் கொன்னா நீ கோழை, நீயா குத்திட்டு செத்தா வீரன், வீரனா சாக ஆசைபடுறியா இல்லை கோழையா சாகனுமா' என்கிறார். புரிந்து விடுகிறது. மோகன்லால் கெட்டவர், கெட்டவர் தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளை இளையதளபதி. (தீனா நியாபகத்தில் வந்தால், சங்கம் பொறுப்பில்லை). படம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆரம்பித்தது. பக்கா லோக்கல் அரங்கு என்பதால் முதல் நாள் முதல் காட்சி பார்த்த எபெக்ட் இன்னும் நினைவில் நிற்கிறது.
விஜயின் நக்கல் கலந்த நடிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும், கில்லியில் சில இடங்களிலும் போக்கிரியில் முக்கால்வாசி இடங்களிலும் அதே போன்றொரு நடிப்பை வழங்கிய விஜய், ஏனோ இப்படம் முழுவதுமே நக்கல் கிண்டல் கேலி கலந்தே நடித்துள்ளார். எங்கே அதுவே ஓவர்டோசாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. போலீஸ் விஜய், தன் ரவுடி அப்பா மோகன்லாலிடம் வந்து பேசும் காட்சி உருக்கமான செண்டிமெண்ட் சீன் போல் இருக்கப் போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தால், நம் கணிப்பை உடைத்து, விஜய்யின் நக்கல் கலந்த தொனியில் வசனம் பேச வைத்து வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர். ஆனால் அதையே படம் முழுவதும் செய்திருப்பது, மனதில் ஒட்டவில்லை ப்ரோ. கதை என்று ஏதோ கொஞ்சமாவது இருக்கிறது. அதையெல்லாம் அரங்கில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் வசனங்கள். பல இடங்களில் வசனம் நன்றாக இருந்தது. ' நெருப்பையும் பகையையும் விட்டுவைக்கக் கூடாது, மொத்தமா அழிச்சிரனும்', 'உயிரும் வார்த்தையும் ஒன்னு', போன்ற வசனங்கள் உ.தா. 'என் அப்பன திருத்தப் போறேன்' என்று ஒரு காட்சியில் விஜய் கோபமாக சொல்வது ஏதேனும் குறியீடா எனத் தெரியவில்லை. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை, இருந்தும் கேமெரா, இசை பற்றி எல்லாம் எதுவும் சொல்ல இயலாது காரணம் நான் பார்த்த திரையரங்கம் அப்படி.
மோகன்லாலை இமிடேட் செய்து அவர் போலவே நடந்து காட்டும் போதும் சரி , தன் அப்பாவே தன்னைக் கொல்ல ஆள் அனுப்பி விட்டாரோ என்பதை நினைத்து வருந்தும் போதும் சரி, காஜல் அகர்வாலை முதன்முறை பெண்பார்க்கப் போகும் போதும் சரி, வில்லாய் வளைந்து சண்டை இடும் போதும் சரி துப்பாக்கித் திரைபடத்திற்குப் பின் விஜய்க்குக் கிடைத்த கச்சிதமான படம். என்ன திரைகதையை நேசன் சார் நாசம் பண்ணிவிட்டார். போதாகுறைக்கு முந்தைய காட்சியில் வீரம் பார்த்திருந்த எபெக்டா என்று தெரியவில்லை விஜய் நடந்து வரும் போதெல்லாம் பின்னணியில் 'ரதகஜ துரக பதாதிகள்' பாடலின் இசை காதில் கேட்டதை தவிர்க்க முடியவில்லை. போதாகுறைக்கு காஜல் அகர்வாலை காஞ்சு போன அகர்வாலாக அலைய விட்டதில் இயக்குனருக்கு அப்படியென்ன கலாதாகமோ!
வீரம் படம் பார்க்கும் போது, ஜில்லா இத விட நல்லா இருந்தா சூப்பரா இருக்குமே என்று நினைக்கவைத்த என்னை ஜில்லாவுக்கு வீரமே எவ்வளவோ மேல் என்று நினைக்க வைத்துவிட்டது இந்த ஜில்லா. இரண்டுபடங்களிலுமே திரைக்கதை கொஞ்சம் சொதப்பல் தான், வீரம் படத்தில் அஜீத்தின் மாஸ் மாஸ் மாஸ் மட்டுமே, ஜில்லாவிலோ ஆட்டம் பாட்டம் அடிதடி ரகளை என்று மாஸ் தாண்டிய பல விஷயங்கள் இருந்த போதும் மொத்த படமும் கொஞ்சம் மசமசவென்று ஆகிப்போனதால்... இது நிச்சயமாக தலப் பொங்கல் தான் ப்ரோ...
வீரம் விமர்சனம்
Tweet |
சிறப்பானதொரு திரை விமர்சனப் பகிர்வுக்கு மிக்க நன்றி .
ReplyDeleteஎன் தளத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன் இது உங்கள்
பார்வைக்கும் http://rupika-rupika.blogspot.com/2014/01/blog-post_9.html
//மோகன்லாலை இமிடேட் செய்து அவர் போலவே நடந்து காட்டும் போதும் சரி , தன் அப்பாவே தன்னைக் கொல்ல ஆள் அனுப்பி விட்டாரோ என்பதை நினைத்து வருந்தும் போதும் சரி, காஜல் அகர்வாலை முதன்முறை பெண்பார்க்கப் போகும் போதும் சரி, வில்லாய் வளைந்து சண்டை இடும் போதும் சரி துப்பாக்கித் திரைபடத்திற்குப் பின் விஜய்க்குக் கிடைத்த கச்சிதமான படம். // good one... atleast u said this
ReplyDeletesuper film bro... it's jilla pongal...
ReplyDelete"மோகன்லாலை இமிடேட் செய்து "
ReplyDeleteஓஒ.. அது மோகன்லாலை இமிடேட் செய்த காட்சியா.. திடீர்னு இந்தப்பய எதுக்குடா ஷோல்டர விறைப்பா தூக்கிகிட்டு காக்கா வலிப்பு வந்தமாதிரி நடக்குராப்புலையே ன்னு பார்த்தேன்.. இதுதான் மேட்டரா?
அட, தலைப்பைப் பார்த்து ஜில்லா படத்தை நல்லா இருக்குன்னு சொல்லிடப்போறானோன்னு மனசை திடப்படுத்திக்கிட்டு வந்தா இங்கயும் ஆவரேஜ் மார்க்தானா!? ரைட்டு டிவில கிளிப்பிங்க்ஸ் போடும்போது பார்த்துக்குறேன்.
ReplyDeleteஒண்ணுமே சரியில்லை போல...
ReplyDeleteஎனக்கு என்னமோ விரம் விட ஜில்லா கொஞ்சம் தேவலை என தோணுது இன்னும் ஜில்லா பாக்கலை //என் அப்பன திருத்தப் போறேன்' என்று ஒரு காட்சியில் விஜய் கோபமாக சொல்வது ஏதேனும் குறியீடா எனத் தெரியவில்லை//super
ReplyDeleteரெண்டு பாட்டு நல்லா இருக்கே சீனு... காஞ்சுபோன அகர்வால்... ஹாஹாஹா!
ReplyDeleteவிமரிசனத்திற்கு நன்றி! இனிமே தான் இரண்டையும் பார்க்கணும்! அநேகமா டீவியில அடுத்த தீபாவளிக்குன்னு நினைக்கிறேன்! நன்றி!
ReplyDelete'என் அப்பன திருத்தப் போறேன்' என்று ஒரு காட்சியில் விஜய் கோபமாக சொல்வது ஏதேனும் குறியீடா எனத் தெரியவில்லை.//
ReplyDeleteஅருமையான விமர்சனம்..!
//இது நிச்சயமாக தலப் பொங்கல் தான் ப்ரோ//
ReplyDeleteஅது........
/சரி அதுவா முக்கியம் ஜில்லாவிற்கு வருவோம்./
ReplyDeleteபரவால்ல. பொறுமையாவே வாங்க.
/நெருப்பையும் பகையையும் விட்டுவைக்கக் கூடாது, மொத்தமா அழிச்சிரனும்/
ReplyDeleteஎம்.ஜி.ஆர். காலத்துலேயே போகிக்கு போட்டு எரிச்ச பஞ்ச். இது நல்ல வசனமா?? ராஸ்கோல்.
அடிபட்ட வலி அதிகம் போலதளபதியிடம்!ஹீ
ReplyDeleteநல்ல வேளை.. இதையெல்லாம் நான் பார்க்க வேண்டியதில்லை.
ReplyDeleteவிஜய் ஹேன்ட்சமா? பாவங்க நீங்க.
//போலீஸ் விஜய், தன் ரவுடி அப்பா மோகன்லாலிடம் வந்து பேசும் காட்சி உருக்கமான செண்டிமெண்ட் சீன் போல் இருக்கப் போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தால், நம் கணிப்பை உடைத்து, விஜய்யின் நக்கல் கலந்த தொனியில் வசனம் பேச வைத்து வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர்.//
ReplyDeleteபடத்துலேயே கேவலமான ‘நடிப்பு’ அந்த சீன் தாம்யா..எவ்வளவு சீரியஸான சீன்..டைரக்டர் கண்ட்ரோல்ல நடிகர் இல்லேன்னா, இப்படித்தாம்யா ஆகும்.
தமிழில் நடிகைகளே செத்துப்போய் விட்டார்களா..அப்படி என்னதான் இருக்கிறது இந்த காஜலிடம் தெரியவில்லை..
ReplyDeleteஒரே நாளில் இரண்டு சினிமாவா சீனு.... எப்படி முடியுது உங்களால! :)
ReplyDeleteஒரு சினிமா பார்க்கவே எனக்கு பொறுமையில்லை!