13 Jul 2012

பில்லா டூ - ரசிகனின் வேண்டுகோள்



பில்லா படத்தில் அந்த ஒரு காட்சியை பார்த்த நொடியே இந்தப் பதிவை எழுதலாம் என்று முடிவெடுத்தேன், நண்பன் ராஜுவும்  அன்பான வேண்டுகோள் ஒன்று வைத்ததால் பதிவு எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்தக் காட்சியைப் பற்றி விளக்க மனமில்லை, விளக்காமல் என் உள்ளக் குமுறலை சொல்கிறேன்.  

இன்று காலை எட்டு மணி காட்சி, சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் தான் டிக்கெட் கிடைத்தது, உள்ளே சென்று பார்த்தபின் தான் தெரிந்த்தது சென்னையில் இதை விட ஒரு மொக்கையான திரை அரங்கம் இருக்க முடியாது என்று. வாயில் பாக்கு போட்டு மென்று கொண்டிருந்தவன் குதப்பிக் கொண்டே கூறினான் "எப்பா பாக்கு சிகரெட் எல்லாம் உள்ளே கொண்டு போக கூடாது, தியேட்டர்ல பாக்கு போட்டா பைன் போடுவாங்க" , நானும் எனது நண்பர்களும் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். அரங்கம் அதிர ஆரம்பித்திருந்தது, ஏனோ தெரியவில்லை நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.


இத்தனை நாள் எதிர்பாத்துக் காத்திருந்த பில்லா டூ ஆரம்பமாகியது, நான் இயக்கி இருந்தால் கூட முதல் காட்சியை சற்று வித்தியாசமாக வைத்திருப்பேன், எடுத்த எடுப்பிலேயே இவர் தான் டேவிட் பில்லா என்று காட்டிவிட்டார்கள். அஜீத் என்ற நடிகனுக்கு உண்டான மாஸ் இங்கேயே தூள் தூளாக்கப்பட்டது போன்ற உணர்வு. இருந்தும் "என் வாழ்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது டா" என்ற வசன உச்சரிப்பினால் தல எங்களை எல்லாம் ஈர்த்துவிட்டார்.

சக்ரி டோல்டியை நம்பி எப்படி இப்படி ஒரு கதைக்கு ஒத்துக் கொண்டார் என்பது தான் புதிராக உள்ளது. உன்னைப்போல் ஒருவன் படம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் பாதியைக் கூட இப்படம் ஏற்படுத்தவில்லை, படத்தின் டைட்டிலை வித்தியாசமாக போடுவதாக எண்ணிக் கொண்டு சொதப்பி இருந்தார், அதில் தெளிவு இல்லை அவசரம் மட்டுமே இருந்தது.


இலங்கைத் தமிழன் எப்படி அகதி ஆனான், அகதி எப்படி அடியாள் ஆனான் என்பதை புகைப் படங்களாக காட்டிவிட்டு, அடியாள் எப்படி காங்க்ஸ்ட்டர் ஆனான் என்று சொல்வதற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்கி அதில் இரண்டாயிரம் பேரை நடிக்க வைத்திருகிறார்கள். 

இரத்தம் பார்க்காத  காட்சிகளே படத்தில் கிடையாது, மேலே கீழே, முன்னே பின்னே, யார் எப்போது எங்கே எப்படி திரும்பினாலும் இரத்தம் பார்க்காமல் சாவதில்லை. சென்ற படத்தில் இறுதிக் காட்சியில் மட்டும் வன்முறையை கையாண்ட இயக்குனர், இந்தப் படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. விஜயகாந்த் படத்தில் நாம் பார்க்காத வன்முறையா, தமிழன் அதை எல்லாம் பொறுத்துக் கொள்வான், ஆபாசம் அளவுக்கு மீறி இருகிறதே அதை எப்படி பொறுத்துக் கொள்வான். அதையாவது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். 

குடும்பத்தோடு செல்ல நினைபவர்கள் தயவு செய்து சென்று விடாதீர்கள், இல்லையேல் குடும்பத்திற்குள்ளும் வன்முறை வெடித்துவிடும். இருபது நொடிகளுக்குள் தமிழ் சினிமா இதுவரை காணாத அளவிற்கான ஆபாசத்தைக் காட்டியிருப்பது அதிர்சியளிகிறது. இயக்குனரை மட்டும் குறை கூறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை, அஜீத் தலையிட்டு அந்தக் காட்சியை மாற்றச் செய்திருக்கலாம்போலீஸ் அதிகாரி ஒருவரை கொல்லச் செல்லும் இடத்தில தான் அத்தனை ஆபாசத்தைக் காட்டியிருப்பார்கள், அந்த ஒரு  காட்சியை நீக்கினால் கூட போதும் படத்திற்கு U/A கண்டிப்பாக கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. மாஸ் ஹீரோ நடித்த படத்தில் இது போன்ற காட்சி வைத்தது ரசிகன் எதை வேண்டுமானலும் பார்ப்பான் என்ற எண்ணத்திலா  இல்லை நமது கலாச்சாரம் தான் மாறிவிட்டதா. 

அடுத்தது கதாநாயகிகள் தேர்வு, ஒருவரையும் பார்பதற்கு சகிக்கவில்லை, வெள்ளைத்தோல் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல, காட்சிக்கு காட்சி புது புது ஆட்கள் வந்து மாண்டு போகிறார்கள், இதுவும் ஏன் என்று தெரியவில்லை, பல இடங்களில் காட்சி தொங்கலில் விடப்பட்டுள்ளது.

ஒருவேளை பில்லா ஹிட் ஆகுமானால் அதற்கான காரணங்கள்

அஜீத் குண்டாகத் தான் இருக்கிறார் ஆனால் அசிங்கமாகத் தெரியவில்லை, இந்தப் படத்தில் அதிகமாக நடக்கவில்லை, பெரும்பாலும் அமர்ந்தே இருக்கிறார், இல்லை துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார், அவர் என்ன செய்தாலும் அதில் சிறப்பான நடிப்பு வெளிப்படிருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விசயம். டூயட் இல்லை, ஒபனிங் சாங் இல்லை. இவை எல்லாம் படத்திற்க்கான பிளஸ்கள். 

அஜீத் பேசுவது சில வசனங்கள் தான் என்றாலும் அனைத்தும் அருமை, வசனங்களுக்காக அதிகம் மெனகெட்டு இருகிறார்கள்  என்று தெரிகிறது, அவர் பேசும் அத்தனை வசனங்களும் ரசிக்கும் படியாக உள்ளது கைத்தட்டல்களை அள்ளுகிறது.  

"கூப்பிடரவங்களைப்  பொறுத்து", "இது பேராசை இல்ல பசி", " மத்தவங்க பயம் நம்ம பலம்" "நண்பனா இருக்க எந்தத் தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியா இருக்க தகுதி வேண்டும்". வசனங்களை அத்தனை உயிரோட்டமாக சொல்கிறார் அஜீத். கோட் சூட் கருப்பு கூலிங்கிளாஸ் அனைத்தும் அம்சமாகப் பொருந்துகிறது. இடைவேளைக்குப் பின் வரும் சண்டைக் காட்சியில் பரபரப்பைக் கூட்டி, அதன் அடுத்த காட்சியில் பில்லா தீம் மியூசிக் உடன் அஜீத் நடந்து வரும் காட்சிகளில் நிமிர்ந்து நிற்கும் பில்லா டூ சொத்தப்பலான திரைக்கதையால் அடுத்த காட்சியிலேயே படுத்து விடுகிறது. 

இறுதிக் காட்சியில் ஹெலிஹாப்டரில் தொங்கிக் கொண்டு செய்யும் ஸ்டண்டில் அஜீத்தின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. விறுவிறுப்பை அதிகப்படுத்தி ஆபாசத்தையும் இரத்தத்தையும் குறைத்திருந்தால்  அஜீத் என்ற பேஸ்மெண்டை கொண்டு எழுப்பிய பில்டிங் ஸ்ட்ராங்காக வந்திருக்கும். 

படம் முடிந்து வெளியே வந்த பொழுது நண்பன் சொன்னான் "விட்ரா மச்சான் இது என்ன நமக்குப் புதுசா, வின்ன விட லாஸ் தான் நமக்குப் பிடிக்கும், அடுத்த படத்துல பாத்துக்கலாம்", இப்படிப்பட்ட ரசிகர்களை மீண்டும் மீண்டும் அஜீத் ஏமாற்றாமல் சிறந்த கதைகளில் நடிக்க முயற்சித்தால், முயற்சித்தால் இல்லை முயற்சியுங்கள் என்பதே  உங்கள் ரசிகனின் வேண்டுகோள்ஏதோ ஒரு நம்பிக்கையில் பில்லா டூ வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறேன் 

நன்றிகள் 

இப்பதிவு எழுதுவதற்காக உற்சாகம் அளித்த சினிமா சினிமா ராஜ் அவர்களுக்கு ( இதைப் படித்த பின் ஏன்டா இவனை எழுதச் சொன்னோம் என்று கடியாகி இருந்தீர்கள் என்றால் தயவு செய்து மன்னிக்கவும் )

என்ன தான் தல ஹிட் கொடுக்கா விட்டாலும் அஜீத் அவர்களைப் பற்றி நான் எழுதிய தல போல வருமா (டூ) பில்லா டூ இந்தப் பதிவு செம ஹிட். 700 ஹிட்ஸ் பெற்றுள்ளேன், அதில் எத்தனை பேர் முழுவதுமாக படித்தார்கள் என்று எனக்குத் தெரியாது, இருந்தும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதற்க்கு முந்தைய என் பதிவுகள் அனைத்தும் நூறு ஹிட்சைத் தாண்டினால் அதுவே அபூர்வம். அதற்காக ஸ்பெஷல் தேங்க்ஸ் பார் யு தல.   

29 comments:

  1. அந்த ஒரு ஆட்சியை நீக்கினால் கூட போதும்
    -ஆட்சியா. காட்சியா சீனு? இந்த வம்புக்குத்தான் நான் எப்பவும் முதல்நாள் எந்தப் படமும் பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணிருக்கேன். வன்முறையும் ஆபாசமும் உங்களையே இவ்வளவு குமுற வெச்சிருக்குன்னா... அஜித்தை ரசிக்க விரும்பி முதல் நாள் வந்த பெண்களின் நிலை...? ஐயோ பாவம்ப்பா..!

    ReplyDelete
    Replies
    1. முதல் நண்பராக வந்தமைக்கு என் நன்றிகள், ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் உள்ளன, இதோ திருத்தி விடுகிறேன் தோழி.
      //ஐயோ பாவம்ப்பா..// அதே அவர் நிலை பரிதாபம் தான்.

      Delete
  2. படத்தில் வன்முறை ஆபாசம் அதிகம்தான். அதே போல மங்காத்தா மாதிரி ஒரு ட்ரீட்டை எதிர்பார்த்து வந்தால் இதில் ஏமாற்றமே மிஞ்சும். மற்றபடி தல என்னை ஏமாற்றவில்லை. (ஆபாசம் வன்முறை ஆகியவைகளை பல படங்களில் பார்த்து புளித்துவிட்டதால்). உங்கள் விமர்சனத்துக்கு நன்றி தல

    ReplyDelete
    Replies
    1. எனக்கு படம் தான் பிடிக்கவில்லை அஜீத்தை பிடித்துள்ளது. மங்காத்தா மாதிரி இன்னொரு படம் தல பண்ணினா சூப்பரா இருக்கும், நன்றி பாலா அண்ணா

      Delete
  3. நான் எதிர் பார்த்தது தான் இருந்தாலும் படம் பார்க்க வந்து விட்டோம் என்பதற்காக ரகளை செய்துவிட்டு தான் வந்தோம் சத்தியமா ட்ரைலர் பார்த்து பலரும் ஏமாந்து விட்டார்கள் தலக்கு இது மிகபெரிய மொக்கை அண்ட் ப்ளாப் செம்ம கடுப்பு படம் என்ன செய்ய சீனு புருனா பிகினி வரலை என்றால் இன்னும் கடுப்பு ஆகிஇருப்பேன்...ஆபாசம் காட்டியவது ஓட வைத்துவிடலாம் என்று தான் மச்சி...தல படத்துக்கு செலவு செய்ய கவலை பட மாட்டேன் இந்த படத்திற்கு 2000 செலவு கூட வந்த friends எல்லாருக்கும் ஸ்பான்சர் நான் தான்....திருட்டு vcd கூட படம் பார்க்க மனம் வராது......

    ReplyDelete
    Replies
    1. அந்த அரங்கைப் பார்த்ததுமே ரகளை செய்ய தோணவில்லை சின்னா, // இந்த படத்திற்கு 2000 செலவு கூட வந்த friends எல்லாருக்கும் ஸ்பான்சர் நான் தான்... // அடப் பாவி, தெரிஞ்சிருந்தா நானும் உன் கூட வந்து இருப்பேனே...
      //திருட்டு vcd கூட படம் பார்க்க மனம் வராது.// ஹா ஹா உன் பீலிங் எனக்குப் புரியுது

      Delete
  4. தமிழ்மணம் 3 machi

    ReplyDelete
  5. //700 ஹிட்ஸ் பெற்றுள்ளேன்//

    பலர் விரும்புகிறதை உங்கள் ரசனையில் எழுதியதால் உங்களுக்கு ஹிட் கிடைத்து இருக்கிறது..

    வாசிக்கிற அளவுக்கு எனக்கு ஏதோ டைப் பண்ணுவது ஆவதில்லை.. ஆனால் சுய கருத்துக்களை பக்க சார்பிலாமல் சொல்பவர்களை நான் அதிகமாக விரும்பி படிபேன். ஆங்காங்கே எழுத்து பிழைகள் இருக்கிறது நண்பா.. சரி செய்து கொள்..

    ReplyDelete
    Replies
    1. இதோ திருத்தி விடுகிறேன் நண்பா, என் எழுத்துக்களை பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி

      Delete
  6. அருமையான விமர்சனம் நண்பா, தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  7. //"எப்பா பாக்கு சிகரெட் எல்லாம் உள்ளே கொண்டு போக கூடாது, தியேட்டர்ல பாக்கு போட்டா பைன் போடுவாங்க"//

    இவனுக்கெல்லாம் ஒரு சுகாதார உணர்ச்சியோ, அழகுணர்ச்சியோ கிடையாதா?

    ஃபைன் போடறதுக்குப் பதிலா, 2 கசையடி அந்த ஸ்பாட்டிலேயே கொடுக்கணும்.

    ReplyDelete
  8. Thanks for ur post..
    I ll try to watch this, then will compare with ur feelings..

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம். முதல் நாள் முதல் ஷோ.... என்றெல்லாம் தில்லியில் முடியாது நண்பரே. மொத்தமே மூன்று தியேட்டர்களில் தான் தமிழ்ப் படங்கள் வெளியாகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலை. அதனால் பெரும்பாலான படங்கள் பார்ப்பதே “இந்தியத் தொலைகாட்சிகளில் முதல்முறையாக” வரும்போதுதான்!

    த.ம. 4

    ReplyDelete
  10. தலயான பகிர்வு ஹிட்தான்!

    ReplyDelete
  11. பாஸ் படத்தை பூரா சொல்லிட்டீங்க இனி எங்க படம் பார்க்க ஆசை வரப்போகுது..
    இந்த பதிவ படிக்காம இருந்திருந்தா படமாவது பார்த்திருப்பேன் இப்போது இரண்டு மனது பார்ப்பதா இல்லியா...?

    ReplyDelete
  12. மொக்கை படம் பாஸ்

    ReplyDelete
  13. அட, சுடச்சுட விமர்சனம் போட்டு விட்டீர்கள்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்தானா!!

    ReplyDelete
  14. சீனு,
    உங்களை படம் கவர வில்லை என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் தான். சில காரணங்கள் எனக்கு தோன்றுகிறது.
    நீங்கள் பார்த்த தியேட்டர் ஒரு காரணம் என்பேன்... இது செம ஸ்டைலான படம். ரொம்ப நல்ல தியேட்டரில் பார்த்து இருக்க வேண்டும். நான் இங்கே CINEMAX யில் பார்த்தேன். அந்த ஆயுத வியாபாரி வில்லன் இருக்கும் மாளிகை கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போன்று இருந்தது....
    நான் போகும் போது படம் 10 நிமிஷம் கடந்து விட்டது. அஜித் இன்ட்ரோ சீன் பார்க்க வில்லை...
    அப்புறம் கேங் ஸ்டார் படத்தை கண்டிப்பாய் வன்முறை இல்லாமல் எடுக்க முடியாது.
    எனக்கு 80 களில் வந்த ஹாலிவுட் கேங் ஸ்டார் படங்கள் ரொம்ப பிடிக்கும்.. பில்லா கூட அதே மாதிரியான படம் தான்.....அதனால் இந்த படமும் ரொம்பவே பிடித்து இருந்தது. அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது ... :)
    அப்புறம் என்னோட கோரிக்கையை ஏற்று விமர்சனம் எழுதியதற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  15. ///எத்தனை பேர் முழுவதுமாக படித்தார்கள் என்று எனக்குத் தெரியாது, ////

    நான் முழுவதும் படித்துவிட்டேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்....உங்கள் பதிவு படித்ததினால் எனக்கு 3 டாலர் மிச்சம் டிவிடி வாங்குவதைதான் சொன்னேங்க எங்க ஊருல புதுபட டிவிடி 3 டாலர்தானுங்க

    ReplyDelete
  16. இருபது நொடிகளுக்குள் தமிழ் சினிமா இதுவரை காணாத அளவிற்கான ஆபாசத்தைக் காட்டியிருப்பது அதிர்சியளிகிறது. இயக்குனரை மட்டும் குறை கூறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை, அஜீத் தலையிட்டு அந்தக் காட்சியை மாற்றச் செய்திருக்கலாம். ….இந்த விசயத்தை தைரியமாக கூறிய உங்களை மனமார வாழ்துகிறேன் .... Salute U

    ReplyDelete
  17. //உன்னைப்போல் ஒருவன் படம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் பாதியைக் கூட இப்படம் ஏற்படுத்தவில்லை//
    உன்னைப் போல ஒருவன் ஒரு சமூக விழிப்புணர்வு ரீதியிலான படம்.. படத்தின் இறுதியில அழுத்தமான மெசேஜ் இருக்கு.. அதுனால அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ஆனா பில்லா 2 ஒரு கேங்ஸ்டரின் கடந்த காலம் பற்றிய படம் இல்லையா.. படத்தின் லீட் ரோலே நெகட்டிவ்வானது.. இதில் எங்கிருந்து தாக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்??

    ஒரு வேளை படம் முடிவில் அஜித் இறந்து, "கத்தியெடுத்தவன் கத்தியாலே தான் சாவான்"னு மெசேஜ் போட்டிருந்தா உங்களுக்கு தாக்கம் கிடைத்திருக்கும் போல..

    ReplyDelete
  18. //இரண்டு மணிநேரம் ஒதுக்கி அதில் இரண்டாயிரம் பேரை நடிக்க வைத்திருகிறார்கள். //
    இது ஒரு குறையா.. ஒரு சர்வதேச டான் ஆகப்போகிறவனை படத்துல 8 பேரை மட்டும் மீட் பண்ணி, 20 பேரை மட்டும்கொல்லும் ஒருவனாக காட்ட முடியுமா என்ன?
    ஆனாலும் படத்துல முக்கியமான கதாப்பாத்திரங்கள் (அண்ணாச்சி, அப்பாஸி, கோடி, ரஞ்சித், ஜாஸ்மின், டிமித்ரி) இவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்காதவிடத்து, படத்தின் கேரக்டர்கள் அதிகமானதில் பிழையே இல்லை..

    //இந்தப் படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது.//
    பில்லா பாகம்-1 நினைவிருக்கிறதல்லவா... அதில் பிரபு பில்லாவின் எழுச்சி பற்றி பில்டப் பண்ணும் சீன்களையும், அஜித் படத்தில் காட்டப்படும் லெவலையும், அவரது சொர்க்க மாளிகையும், அங்கு திரியும் கவர்ச்சி நாயகிகளையும், இருந்தும் அவர்கள் மீதும், நயனின் மீதும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாமல் விலகிச் செல்வதையும், அவர் பின்னால் காட்டப்பட்ட அடியாள் பலத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..

    இல்லாத இவை அனைத்தையும், உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு டோல்டி தலையில் விழுந்திருக்கிறது.. அவ்வளவு முக்கியமாக காட்டப்படும் பில்லா, அவனது எழுச்சிப் பாதையில் அதிகமான வயலன்ஸையும், அதிகமான கவர்ச்சியையும் பார்க்காமலா வந்திருப்பான்??..

    அகதியாக வந்த ஒருவனுக்கு எடுத்த எடுப்பிலேயே இன்டர்நேஷனல் டானாக முடியாது.. படிப்படியாக அவன் முன்னேறுவதைக் காட்டுவததற்கு அதிகப்படியான சண்டைக்காட்சிகள் தேவையே! சண்டைக்காட்சிகள் அலுப்படிக்கிறது என்பதற்காக படத்தின் நீளத்தை கூட்டி காமெடி சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் போட்டிருந்தால் அது கேங்க்ஸ்டர் படம் என்று குறிப்பிடுவத்கே தகுதியற்றதாக மாறிவிட்டிருக்கும்!

    தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. பொங்கியெழுவார்கள் என்பதற்காக கடைசி வரை இந்த மாதிரி படங்கள் வந்து விடாமலா போய்விடும்? குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், இளகிய மனம் கொண்டவர்ககள், வயது குறைந்தவர்கள் பார்க்க வேண்டாம் என்பதற்குத்தான் "ஏ" சேர்ட்டிஃபிகேட் இருக்கே..
    எல்லாரும் பார்ப்பதற்காக அல்ல என்று சொன்ன பின்னும் போய் பார்த்துவிட்டு படத்தை 'அதற்காக' குறை கூறுபவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

    படத்துக்கு A ரேட்டிங் கொடுத்தால் அது படம் வசூல் குவிப்பதற்கான நிகழ்தகவைக் குறைத்துவிடும்தான். ஒத்துக்கொள்கிறேன்.. மாறாக படத்தை U/A ஐ நோக்கி எடுத்திருந்தால், அது படத்தின் கதைக்கு தேவையான intensityஐ குறைத்துவிட்டிருக்கும்!

    ReplyDelete
  19. //பல இடங்களில் காட்சி தொங்கலில் விடப்பட்டுள்ளது.// இந்த கன்டினியுட்டி இல்லாமையும், சில லாஜிக் மிஸ்டேக்குகளையும் விட்டுப் பார்த்தால் பில்லா 2 எனக்கு திருப்தியளித்த படமே!

    * அதிகமா சீன் போடுறேன்னு நினைச்சுக்கிட்டீங்கன்னா சாரி, நண்பா! படம் தமிழில் வித்தியாசமான அட்டெம்டாக இருந்தும், சில அஜித் ரசிகர்களே "தேறாது"ன்னு முகத்தை தொங்கப்போட்டு போவதை நினைத்தால் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.. :)

    ReplyDelete
  20. நேத்திக்கு நான் போட்ட கருத்து வந்து சேரலைன்னு தெரியுது சீனு. பில்லா 2 நிறையப் பேருக்கு ஏமாற்றத்தையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் தந்திருக்குன்னு புரியுது. என்னைப் பொறுத்த வரையில டிவிடில வர்ற காலத்துல வாங்கிப் பாத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். உங்க விமர்சனம் நல்லா இருந்தது. நன்றி.

    ReplyDelete
  21. சொந;தமே!படம் இன்னும் பர்க்வில்லை.அதனால் சரி பிழை சொல்ல வரவில்லை.விமர்சனம் நன்றாக தொடர்கிறது.வாழ்த்துக்கள்.
    சந்திப்போம்.:)
    ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

    ReplyDelete
  22. வித்தியாசமானப் பார்வை ....நல்ல எழுதிருக்கீங்க....

    ReplyDelete
  23. உண்மைதான் பாஸ்...சினிமாப்பற்றிய பதிவென்றால்தான் அதிக ஹிட்ஸ் கிடைக்கிறது...

    ReplyDelete
  24. இன்னும் இதை பற்றி வித்தியாசமான சினிமா என்று சொல்லும் ரசிகர்களை என்ன சொல்ல?நீ மாங்கு மாங்கு எழுதினாலும் படம் போட்ட பணத்தை எடுத்துரும்...ஆனா ஒன்னு இனிமே ரிசல்ட் பாக்காம படத்துக்கு போக கூடாதுடா தம்பி.உன்னோட முந்தின பதிவை படிச்சிகிட்டேதான் படத்துக்குள் போனேன்.வெளிலே வந்ததும் உன்னையதான் தேடினேன்...பரவாயில்லை இந்த பதிவு மூலமா பரிகாரம் தேடிகிட்டே.நல்லா இரு.நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  25. //சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் தான் டிக்கெட் கிடைத்தது, உள்ளே சென்று பார்த்தபின் தான் தெரிந்த்தது சென்னையில் இதை விட ஒரு மொக்கையான திரை அரங்கம் இருக்க முடியாது என்று//

    கோபிகிருஷ்ணா,ரோஹிணி தியேட்டர் கூட இந்த லிஸ்ட்ல வரும்ணா!

    ReplyDelete