சில மனிதர்களை அவர்கள் செய்கின்ற செயல்களின் மூலம் பிடித்துப்போகும். சில மனிதர்களையோ அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துபோகும். நான் கூற விரும்பும் மனிதரோ பார்த்ததுமே பிடித்துப் போகும் வகையைச் சேர்ந்தவர். பெயரிலேயே சிரிப்பை வைத்திருப்பவர். இவரை பார்க்கும் போதெல்லாம் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவது போல தெய்வீகச் சிரிப்பையா உமக்கு என்று கூறுவது உண்டு. அவர் வேறு யாருமில்லை அம்பத்தூரில் சிரிப்பரங்கமும் சிரிப்பு யோகாவும் நடத்தி வரும் சிரிப்பானந்தா அவர்கள் தான். அவரால் எனக்கு ஒரு பேரதிர்ச்சி ஏற்படப் போகிறது என்பது அப்போது வரை எனக்குத் தெரியாது. பேரதிர்ச்சி என்பதை விட ஆனந்த அதிர்ச்சி என்ற சொல் தகும்.


எனக்குள் சில கேள்விகள். என்னை விட வயதில் மூத்தவர்கள் பலர் வீற்றிருக்க நான் தலைமை ஏற்பது தகுமா? கீழே அமர்ந்திருக்கும் தோழனுக்கும் தமையனுக்கும் நானொரு காமெடி பீஸ் ஆகிவிடமாட்டேனா? சும்மாவே ஓட்டுவார்கள் இதில் இது வேறா? மேடையில் இருந்து அவர்கள் இருவரையும் பார்த்தேன். சிரிப்பாய் சிரித்து கடுபெற்றிக் கொண்டிருந்தார்கள். தாடிக்குள் முகம் புதைத்து சிரிப்பால் முகம் மலர்ந்த சிரிப்பானந்தா மெதுவாக என் காதிற்குள் முணுமுணுத்தார், "சிறந்த மூணு நகைசுவை செலக்ட் செஞ்சி வச்சிகோங்க பரிசு கொடுக்கணும்". ஞே என்று விழித்தேன். மீண்டும் தொடர்ந்தார் "தலைவரே ஒரு அஞ்சு நிமிஷம் பேசனும்". நல்ல வேளை நான் மயங்கி விழவில்லை.

மற்றவர்கள் நகைச்சுவை சொல்லிக் கொண்டிருந்த வேளையில் என்ன பேசப் போகிறோம் என்பது பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பின் நம் பொழப்பு சிரிப்பை சிரிதுவிடக் கூடாது அல்லவா. சிந்தனையைத் தூண்டும் விசயங்களை மட்டுமே என் மூளை எனக்கு உற்பத்தி செய்து கொடுத்தது. நகைச்சுவைக்கான ஹார்மோன்களோ சத்தியாகிரகம் செய்து கொண்டிருந்தன. நல்ல வேளை கையில் பேப்பர் கொடுத்திருந்தார்கள், தோன்றியதை எல்லாம் அதில் குறித்து வைத்துக் கொண்டேன். அப்போது தெரியாது அந்தத் தாள் என் காலை வாரிவிடும் என்று.
மைக்கைப் பிடித்து மேடையைப் பார்த்தேன். அரங்கம் என்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது போல் தோன்றியது. மனதிற்குள் மற்றுமொரு குழப்பம். செந்தமிழில் பேசுவதா சென்னைத் தமிழில் பேசுவதா என்று. முதலில் பேசுவோம் பின்பு செம்மையா சென்னையா என்று பார்த்துக்கொள்வோம் என்ற முடிவிற்கு வந்தேன். கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தேன் நல்ல தெளிவாக கிறுக்கி இருந்ததால், என்ன கிருக்கி இருந்தேன் என்பதை என்னாலேயே கண்டுகொள்ள முடியவில்லை. மீண்டும் ஞே தான்.
இனி தலைவன் உரை (ஹி ஹி ஹி ஹி அப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது)

தப்பு செஞ்சாக் கூட தடயம் இல்லாம செய்யணும்னு சொல்லுவாங்க. இந்தத் தலைவர் பதவிய ஏத்துகிட்டதே பெரிய தப்பு. அதுக்குப் பரிகாரமா கூடவே இரண்டு தடயத்த வேற கூட்டிட்டு வந்த்ருகேன். வேறு யாருமில்ல என்னோட தம்பியும் நண்பனும் தான். சும்மாவே பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன அப்பாடக்கர்னு கூப்பிடுவாங்க, இனிமேல் நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கர்னு கூப்ட ஆரம்பிச்சிருவாங்க. இப்படி சின்ன அப்பாடக்கரா இருந்த என்ன பெரிய அப்பாடக்கரா மாத்தின பெருமை சிரிப்பானந்தாவையே சேரும்.
நவரசம்ல ஒரே ஒரு ரசம் தான் ரொம்ப சுவையா தித்திப்பா இருக்கும், ஆனா நாம எல்லாரும் அதைத் தேடித் போக பயபடுறோம். எங்க அதிகமா சிரிச்சா அதிகமா கஷ்டப் படுவோமொனு நினைக்கிறோம், அப்படி இல்லை இடுக்கண் வருங்கால் கூட நகுகனு சொல்லியிருக்காங்க.
சிரிப்பு உங்களைத் தேடி வராத பொழுது
நீங்கள் சிரிப்பைத் தேடி செல்லுங்கள்
இல்லையேல்
சிரிப்பரங்கத்தைத் தேடிச் செல்லுங்கள்
நீங்கல்லாம் அம்பத்தூர்ல வசிக்கிறதால ரொம்ப புண்ணியம் செஞ்சு இருக்கீங்க. அதனால தான் சிரிப்பரங்கதுல கலந்துக்க முடியுது. நிறைய இடங்கள்ல இதுபோல் ஆரம்பிக்கணும். சிரிப்பானந்தா செய்து வரும் சேவைக்கு மனபூர்வமான நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள். இறுதியாக ஒரே ஒரு விஷயம் சொல்லி என்னுரையை முடித்துக் கொள்கிறேன்.

இடையில் அவரை நிறுத்திய தேர்வாளர், "ஏன் ஜோக் மட்டுமே சொல்றீங்க" என்றார்.
"இங்க கலக்கப் போவது யார் ஷூட்டிங் தானே நடக்குது", என்றார் அப்பாவியாக.
இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இல்லை, அவர் எப்படி மூன்றாவது சுற்று வரை முன்னேறி வந்தார் என்பதில் தான் ஆச்சரியமாக உள்ளது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பலருக்கு எங்கே எப்படிப் பேசவேண்டும் என்றே தெரியாது, இதோ இங்கு பேசிக் கொண்டிருக்கும் என்னைப் போல. அதனால் இத்துடன் என்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாய்ப்பு கொடுத்த சிரிபரங்கதிற்கு நன்றி. இவற்றின் இடை இடையே சில நகைச்சுவைகள் சொன்னேன், பதிவின் நீளத்தைக் கருதி அவற்றை தணிக்கை செய்துவிட்டேன்.
சிரிப்பானந்தா அவர்களே சிரிப்பரங்கதிற்கு என்னிலும் சிறந்த தலைவன் இருக்கிறான் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பதிவர் சந்திப்பு
ஆகஸ்ட் 19 அன்று மாணவர் மன்றத்தில் வைத்து நடை பெற இருக்கும் பதிவர் சந்திபிற்கு சிரிப்பானந்தா அவர்களையும் அழைத்தேன் மகிழ்வுடன் வர சம்மதித்துள்ளார் என்பதையும் அதே மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தொடர்புடைய பதிவு
உங்கள மனத்தில் பட்டதை சொல்லிச் செல்லுங்கள்.
Tweet |
nanpaa!
ReplyDeleteippadi oru arangam iruppathu-
ippothuthaan theriyum!
ungalin pechai kurai sollida mudiyaathu!
nantraaka thaan irukkirathu!
sonna nakaisuvaikalai aduththa pathivaaka podungalen!
vaazhthukkal!
நிச்சயமாக பதிவு செய்கிறேன். பெரும்பாலும் அது உங்களுக்கு தெரிந்த நகைசுவையகத் தான் இருக்கும்
Deleteமுதல் வருகைக்கும் சூடான இடுகைக்கும் நன்றி நண்பா
நல்ல பகிர்வு. ரசித்தேன்.
ReplyDeleteரசித்த உங்களுக்கு மகிழ்ச்சியான நன்றிகள் சார்
Deleteதங்களின் எழுத்தில் இருக்கும் நகைச்சுவையே தாங்கள்த் தலைமைத் தாங்கத் தகுதியானவர் தான் என்பதை எடுத்துரைக்கின்றன.
ReplyDeleteஐயோ அங்கு நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். வாய்ப்பு கொடுத்த சிரிபரங்கதிற்கும் சிரிபானந்தாவிற்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள்
Deleteஉங்களை தெரிவு செய்தது மிக சரி என உங்கள் எழுத்து நடை காட்டுகிறது
ReplyDeleteஉங்கள் மறுமொழிக்கு நன்றி சார்
Deleteதலைவா.... என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.. உங்க பதிவுக்ள்ல படிச்சு சிரிப்பானந்தாவை ரசிச்சிருக்கேன். பதிவர் சந்திப்புக்கு வர்றார்ங்கறது கூடுதல் மகிழ்ச்சி. நல்ல பதிவுக்கு என் நன்றி. சொல்ல மறந்துட்டேனே.. நாளுக்கு நாள் மெருகேறி வருது உங்கள எழுத்து. With full of my heart... பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteஆகா என்ன ஒரு உற்சாகமான கருத்துரைகள், அங்கே சிரிப்பனந்தாவை நிச்சயம் சந்திப்போம். உற்சாகம் அளிக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழி
Deleteசிரிப்பானந்தா பற்றி ஏற்கனவே உங்களுடைய தளத்திலோ ..பிற தளத்திலோ படித்த ஞாபகம் எனக்கு இது இரண்டாவது முறை...
ReplyDeleteகலக்கிட்டீங்க..பாஸ்...
நன்றி நண்பா ... வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
Deleteசிரிப்பு உங்களைத் தேடி வராத பொழுது நீங்கள் சிரிப்பைத் தேடி செல்லுங்கள்
ReplyDeleteஇல்லையேல் சிரிப்பரங்கத்தைத் தேடிச் செல்லுங்கள்
குருவே நீங்க சொன்ன சரியாத் தான் இருக்கும்..
Deleteஎப்பவும் சிரித்து கொண்டே இருப்பார் போல...தலைவர் பதவி எல்லாம் ஏற்று உள்ளீர்கள் உண்மையில் நீங்க பெரிய அப்பாடக்கர்(JUST FUN) தான்...பேச தெரியாது பயம் என சொல்லிவிட்டு இவ்வளவு பேசி உள்ளீர்கள்.....ரொம்ப நாள் கழித்து ஒரு ஜாலி பதிவு.....
ReplyDeleteஇந்த பதிவு ஜாலியாவ இருந்தது, அனால் உன்னுடைய கருத்துக்கள் வழக்கம் போல் ஜாலியாக இருந்த்தது நண்பா நன்றி வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
Deleteடியர் அப்பாடக்கர்... தலைவராக எந்த ப்ரிபரேஷனும் இல்லாமப் பேசியது நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள். நண்பர் சிரிப்பானந்தா சம்பத்குமாரை பதிவர் சந்திப்புக்கு நீங்கள் அழைத்ததும் அவர் வருவதாகக் கூறியிருப்பதும் மிகமிக மகிழச்சி தருகிறது. உங்களின் அக்கறைக்கு நன்றி நண்பா.
ReplyDeleteநன்றி சின்ன வாத்தியாரே, நான் பேசினனா உளறினனானு என்னாலையே கண்டுபிடிக்க முடியல. என்னை உற்சாகப் படுத்தும் உங்களுக்கு என் நன்றிகள். பதிவர் சந்திபிற்காக சிரத்தை எடுத்து தாங்கள் செய்து வரும் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
Deleteஅன்புமிக்க சீனு,
ReplyDeleteபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
நன்றி. பல விஷயங்களுக்கு!
1.சிரிப்பரங்க நிகழ்ச்சிகளை சுடச்சுட பரிமாறியமைக்கு.
2.சுவையாகப் பரிமாறியமைக்கு
3.நல்ல தமிழில் எழுதியமைக்கு
4.என்னைப் பற்றியும் அரங்கைப் பற்றியும் நல்லவிதமாக எழுதியமைக்கு
5.தலைமைப் பொறுப்பை பொறுத்தமான முறையில் செய்தமைக்கு
6.சிரிப்பான சுறுக்கமான, சுவையான தலைமையுரைக்கு
7.தன்மையான பேச்சுக்களுக்கு
8. நண்பர், உறவினர்களை அழைத்து வந்தமைக்கு
9. பதிவர் சந்திப்பிற்கு அழைத்தமைக்கு
10. இளம் வயதில் செய்யும் பணிகளில் மிக்க ஆர்வத்தோடு ஈடுபடுவதற்கு
11.அடுத்தவர்களை மனமாரப் பாரட்டுவதற்கு
12.விடுப்பு எடுத்து வந்தமைக்கு
13.சிரிப்பின் பயனை உணர்ந்தமைக்கு, உணர்த்தியமைக்கு
14.எளிமையாக பழகியதற்கு
15.உயர்ந்த சமூக சிந்தனைகளுக்கு
16.ஆன்மீக உணர்வுகளுக்கு
அன்புடன் சிரிப்பானந்தா
தங்களது வாழ்த்துரைகள் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். உங்களது சிறப்பான சேவைகளை எடுத்துக் கூறும் ஒரு வாய்ப்பாகவே இப்பதிவைக் கருதுகிறேன். பதினாறு விஷயங்கள் கூறி என்னை நீங்கள் வாழ்த்தியது குறித்து பெருமகழ்ச்சி கொள்கிறேன். ஆனால் அவை அத்தனைக்கும் நான் பொருத்தமானவனா என்று எனக்குத் தெரியாது, உங்கள் கூற்று உண்மையாக வேண்டும் என்பதற்காக உழைக்கிறேன்
Deleteமீண்டுமொருரை உங்களுக்கு என் நன்றிகள்
God Bless U Seenu
DeleteINSTANT தலைவரே உங்களுக்கு எனது INSTANT வாழ்த்துக்கள்..அழுக வைக்க எல்லோராலும் முடியும் ஆனால் சிரிக்க வைக்க ஒரு சிலரால்தான் முடியும் அது . அப்படி செய்யும் நிகழ்ச்சிக்கு நீங்கள் தலைவராக இருந்தது மட்டுமல்லாமல் அதில் கலந்து கொள்ளும் இளைஞரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா... நிச்சயமாக எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாகவே கருதிகிறேன், வாய்ப்பளித்த சிரிப்பானந்தாவிற்கு நன்றி
DeleteReally very proud to be a friend of you. Actually tat day i was busy with some other works., else im the greatest person who enjoyed a lot with siriparangam., really missed u and tat oppertunity.
ReplyDeleteஉங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. தொடருங்கள். சிரிக்க வைப்பது சிறந்த கலை வளர்க்...
ReplyDeleteவணக்கம் சொந்தமே..!இன்று தான் முதல் தடவையாய் அறிகிறேன்...வாழ்க வளர்க அவர் பணி...இப்புதிய தகவலை தந்தமைக்காய் நன்றிகளும் பாராட்டுக்களும் சொந்தமே...!சந்திப்போம்.
ReplyDeleteநல்ல பகிர்வு.... ரசித்தேன்.... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (த.ம. 6)
ReplyDeleteநண்பா சூப்பர் நண்பா கலக்குற.. நீ போட்ட பதிவை முதல் வாசித்தது நான் தான் என்ன பின்னூட்டம் இடுவது என்று தெரியாமல் போய் விட்டேன்.. இன்று தான் ஒரு கும்பலுக்கு பின் சந்தர்ப்பம் கிடைத்தது வாழ்த்துக்கள்..
ReplyDeleteபலர் முன்னிலையில் திடீரென்று எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பேச அழைத்தால் எப்படியிருக்கும் என்ற தங்கள் மனநிலையை நன்றாக உங்கள் எழுத்தில் யதார்த்தமாகப் பிரதிபலித்திருக்கிறீர்கள் !
ReplyDelete