31 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஆறு


தமிழ்ப் பதிவுலகத்தின் மிக முக்கியமான சிறப்பு, எல்லாவிதமானவர்களும் ஆச்சர்யப்படத்தக்கவகையில் எழுதுகிறார்கள் என்பதுதான். இதற்குச் சிறந்த உதாரணம், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தூள் பரப்பும் நடிகர் சாருஹாசன்.

அவரை ஒரு நடிகராக, இன்னொரு பெரிய நடிகரின் அண்ணனாகமட்டுமே நாம் அறிவோம். தமிழில் இத்தனை பத்திரிகைகள் இருந்தென்ன, அவர் இத்தனை பிரபலமாக இருந்தென்ன? அவருக்கு எழுதவரும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லையே, இணையம் தந்திருக்கும் Spaceஐ அவர் அருமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

அவரைப்போல, இந்தத் தளத்தில் மிகச் சிறப்பாக இயங்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், பல துறை சார்ந்த நிபுணர்கள், ஏன், குழந்தைகள்கூட இருக்கிறார்கள். உடனுக்குடன் கிடைக்கும் Feedback இவர்களை மேலும் ஆர்வத்துடன் இயங்கச் செய்வது மகிழ்ச்சி.

பதிவுலகம்பற்றி ஓரிரு குறையும் எனக்கு உண்டு. எழுதும் அளவுக்கு இங்கே பலர் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும்கூட, மற்ற வலைப்பதிவுகளைதான் வாசிக்கிறார்கள். அது தவறில்லை, அவற்றைமட்டுமே வாசிப்பது தவறு. இந்த Spiral தொடர்ந்து ஒரு கட்டத்தில் உறைந்து நின்றுவிடும் அபாயம் உண்டு.

ஆகவே, தொடர்ந்து உற்சாகமாக எழுத விரும்புவோர், சீனியர் வாசகர்களின் உதவியோடு ஒரு reading schedule போட்டுக்கொள்வது நல்லது என்பது என் தனிப்பட்ட விண்ணப்பம்.

அதேபோல், எழுத்துப் பிழைகளைப் பலர் பொருட்படுத்துவதில்லை. அதை யாராவது சுட்டிக்காட்டினாலும் சுருக்கென்று கோபப்படுகிறார்கள். அதனால் இழப்பு அவர்களுக்குமட்டுமல்ல என்பதை உணர்ந்தால் சந்தோஷம்.

*****



பதிவுலகில் பலரும் பலதையும் எழுதிவருகிறார்கள். இதில் துறை சார்ந்து - ஜோதிடம், ஆன்மிகம், கணினி, தொழில்நுட்பம் - போன்றவற்றை எழுதிவருபவர்கள் மட்டுமே தொடர்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் பார்வையாளர் எண்ணிக்கையைப் பற்றியோ கருத்துரைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மற்ற பதிவர்களில் பெரும்பாலானோர் முகநூல் பக்கமும் கூகிள் பிளஸ் பக்கமும் சாய்ந்துவிட, எஞ்சி இருப்பவர்கள் கொஞ்சமே. இவர்களிலும் சிலர் திரட்டிகளில் முதலிடம் பிடிக்கும் முயற்சியில் இருப்பதால் பலருடைய எழுத்துக்களில் தரத்தைக் காண முடியவில்லை. பல பதிவர்களிடம் - என்னையும் சேர்த்து - consistency என்பது அறவே இல்லை. சேர்ந்தாற்போல் ஐந்தாறு பதிவுகள் எழுதுகிறார்கள். பின் மாதக்கணக்கில் முடங்கி விடுகிறார்கள். பின் மீண்டும் சில நாட்கள் கழித்து உயிர்த்தெழுகிறார்கள். பதிவு எழுதுவதற்கு சோம்பலா, அல்லது முகநூல் போன்றவற்றில் எழுதியதால் பதிவு எழுதிய திருப்தியா, தெரியவில்லை. 

சில பதிவர்கள் தினமும் முகநூலில் பதிவு எழுதுகிறார்கள், வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். அதைத் தவறு என்று சொல்லவில்லை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் நல்லது என்கிறேன். முகநூலை முற்றிலும் தவிர்க்க முடியாது என்பதால் தினம் ஒரு பதிவு எழுதட்டும். அவற்றைத் தொகுத்து வலையிலும் வெளியிடட்டும். பின்னூட்டங்களைப் பற்றி அதிகம் விவாதித்தாயிற்று என்பதால் சுருக்கமாக - ஒற்றை வார்த்தைக் கருத்துரையை முடிந்தவரை தவிர்க்கலாம். பல மூத்த பதிவர்கள் இளைய பதிவர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அவர்களும் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தலாம். முடிந்தவரை புதிய பதிவர்களின் பதிவுகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

*****



இன்றைய தமிழ்ப் பதிவுலகம் அருமையாக இருக்கிறது. பத்திரிகைகளுக்கு அனுப்பி மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் அவஸ்தையை ஒழித்தது இந்த முறை. முன்பு சுஜாதா சொன்னதாகப் படித்த ஒரு வார்த்தை ஞாபகத்துக்கு வருகிறது. "எதிர்காலத்தில் எல்லோரும் அஞ்சு நிமிஷம் பிரபலமாக இருப்பார்கள்" பதிவுலகம் அந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம். புத்தகங்கள் படிக்கும்போது, செய்தித் தாள்கள் படிக்கும்போது கிடைக்கும் அதே பயன்கள்/அனுபங்கள் பதிவுகள் படித்தாலும் வருகிறது.

பதிவுலகம் தனி மனிதத் துதிகள், தாக்குதல்களைத் தவிர்த்து மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு நல்ல விஷங்களை எடுத்துச் சொல்லி முன்னேற்றப் பாதையில் நடந்தால் மகிழ்ச்சி."

பதிவுலகம் என்பதில் முகநூல் வட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கிருப்பவர்கள்தானே அங்குமிருக்கிரார்கள்.

பதிவுலகிலும் முகநூல் வட்டத்திலும் நண்பர்கள் இணைந்து கொண்டே ஒரு குழுவாக அமைந்து கொண்டு வருவதும், சேர்ந்து திட்டமிடுவதும் (குடிமியான் மலை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பயணங்களும், வாசகர் கூடம் போன்ற தளங்களும்), இணைந்து பேசிச் சிரித்து மகிழ்வதும் (முகநூல் நண்பர்கள் அவ்வப்போது வெவ்வேறு நாடகங்களிலும், அவரவர்களுக்குள்ளேயே யாராவது ஒருவர் வீட்டிலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதும், எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்குக் கூட பல நண்பர்கள் இணைந்து சென்று வந்ததும்),சமீப காலங்களில் நடக்கும் பாஸிட்டிவ் நிகழ்வு.

*****


தமிழ் பதிவுலகம்

பல நல்ல விஷயங்கள்பதிவுலகில்நடந்து வருகின்றன. சமீபத்தில் வல்லமை குழுமத்தில் சேர்ந்ததிலிருந்து நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். தமிழ் மொழியையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றும் வகையில் பலர் பழைய கோவில்கள், கலைச்சின்னங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள்/ காணொளிகளாகச் செய்து ஆவணப்படுத்துகிறார்கள். வரவேற்கத் தக்க முயற்சி. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து இதையெல்லாம் செய்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.

கவலைகள்:

இது ஒருபுறம் இருக்க, தனிநபர் குறித்த வசவுகளும், கன்னாபின்னாவென்று பின்னூட்டங்களும் சில இடங்களில் காணப்படுகின்றன. இளைஞர்கள் நிறைய எழுதுவது நல்ல விஷயம். அதிகமாக சினிமா விமரிசனம் காணக் கிடைப்பது சற்று கவலையைத் தருகிறது. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி அதுவே வாழ்க்கை ஆகிவிட்டதோ என்றும் தோன்றுகிறது. விமரிசனம் எழுதுபவர்கள் எல்லா திரைப்படங்களும் நன்றாக இருக்கின்றன என்பது போல எழுதிவிடுகிறார்கள். ஐடி துறையில் நடக்கும் குற்றங்களை எத்தனை பேர்கள் பதிவு செய்தார்கள், தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரியது. ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும், பதிவுகளில். இது நான் முன் வைக்கும் கோரிக்கை. தொடர் பதிவுகள் என்று ஏதோ ‘மொக்கை’ போடுவதற்கு பதில் கவலைக்குரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து எழுதலாம். எழுதுபவர்களும், எழுத்துக்களும் எல்லை மீறாமல் இருப்பது மிக மிக அவசியம்.

*****

rajamelaiyur.blogspot.com

பதிவுலகம் ஒரு வித்தியாசமான உலகம் . வெவ்வேறு ஊரில் , கருத்தில், கொள்கையில் இப்படி பல மற்று இருத்தாலும்அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்த பதிவுலகம் . நேரில் பார்க்காத பலரை உறவினரைவிட பாசமுள்ள சொந்தகங்களாக எனக்கு ( நமக்கு ) பெற்று தந்தது இந்த பதிவுலகம் . 

இங்கே சண்டை வருவது சகஜம் .ஆனால் அது சில நாட்கள் மட்டுமே . புத்தகம் வெளியிடும் நபர்தான் எழுத்தாளர் என்ற மாயவலையை கிழித்தது இந்த பதிவுலகம் அதனால்தான் பல எழுத்தாளர்கள் பதிவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வறுத்து எடுக்கின்றனர் . பல சமயங்களில் பெரிய எழுத்தாளர்களை விட பதிவர்கள் எழுதுவது அருமையாக இருப்பதும் ஒரு காரணம் .

மனதுக்கு பிடித்ததை , ரசித்ததை , சொல்ல விரும்பியதை , சமுக அவலங்களை தட்டிகேட்க என நமது எண்ணங்களை வெளிபடுத்த நமக்கான களம் இது. இது தான சேர்ந்த கூட்டம் . பலர் வரலாம் சிலர் போகலாம் ஆனால் பதிவுலகம் என்றும் இருக்கும் . நம் காலத்திற்கு பின்னும் நம்மை பற்றி பேச இது ஒரு டிஜிட்டல் கல்வெட்டு .

51 comments:

  1. மனதுக்கு பிடித்ததை , ரசித்ததை , சொல்ல விரும்பியதை , சமுக அவலங்களை தட்டிகேட்க என நமது எண்ணங்களை வெளிபடுத்த நமக்கான களம் இது//மிகவும் சரியான கருத்து!

    ReplyDelete
  2. இம்முறை பதிவுலகம் பற்றி கருத்து சொன்ன சொக்கன்,ஸ்கூல் பையன், சீரிராம்,ரஞ்சனி நாராயணன், ராஜா போன்றவர்களுக்கு எல்லாம் பொதுவாக "பதிவுலகம்" பற்றி சொல்லும் தகுதியே இல்லை :-))

    இதற்கு முன்னர் வந்தவர்களூம் அப்படியானவர்களே :-))

    உங்கப்பதிவில் தொடர்ந்து அக்ரசிவாக கருத்து சொல்லுறேன்னு நினைக்கலாம், இப்படியான விவாதத்தினை முன் எடுத்து செல்லும் அடிப்படை தகுதியே உங்களுக்கு இல்லை என நினைப்பதால் தான் :-))

    தகுதியை நிர்ணயிக்க நீ யார் என கேட்டால், இத்தகைய விமர்சனத்தை வைக்க நீங்க யார்னு நான் திருப்பி கேப்பேன் :-))

    ஏன் எனில் இங்கே குறைப்பாடாக சொல்லப்படும் பல செயல்களை திட்டமிட்டு குழுவாக செய்பவர்களே "கருத்தினை:" முன் வைத்து இப்படி செய்யணூம் என சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்,சொல்வதை கடைப்பிடிப்பவர்கள் எவரும் இல்லை , இனியாவது ஊருக்கு உபதேசம் செய்ய கிளம்பும் முன்னர் என்ன செய்தோம், செய்துக்கிட்டு இருக்கோம்னு என புரிஞ்சுக்கிட்டு வரவும்!

    # இப்படி கிளம்பும் பலரை முன்னரே பார்த்தவன் என்பதால் "நேர்ப்பட சொல்கிறேன்" இதில் காழ்ப்புணர்வு ஏதுமில்லை!

    இனியாவது மக்கள் திருந்தினால் சரி என்ற நல்லெண்ணமே!

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,

      இனியாவது ஒழுங்கா பதிவெழுது, அப்புறமா கருத்து சொல்ல வா! என்பது போல் இருக்கிறது - அவதானிப்பு. சரிதானா?

      பதிவுலகம் என் போன்ற சாமானியர்களால் நிறைந்தது. இப்படியிருக்க, நான் கருத்து சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? அல்லது சீனு யாரிடம் போய் கருத்து கேட்பார்?

      Delete
    2. //போன்றவர்களுக்கு எல்லாம் பொதுவாக "பதிவுலகம்" பற்றி சொல்லும் தகுதியே இல்லை :-))//

      ஏன் பாஸ் இப்படி..? திருவிளையாடல் ங்கிற படத்துல ஒரு வசனம் வரும். குறை சொல்லியே பெயர் வாங்கும் புலவர் அப்படின்னு.. அதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது.

      கழுவி கழுவி ஊத்திட்டு "காழ்ப்புணர்வு ஏதுமில்லை!" ன்னு சொல்லிட்டா சரியாயிடுமா?

      //இனியாவது ஊருக்கு உபதேசம் செய்ய கிளம்பும் முன்னர் என்ன செய்தோம், செய்துக்கிட்டு இருக்கோம்னு என புரிஞ்சுக்கிட்டு வரவும்!//

      ஒரு வாத்தியார் பசங்க கிட்ட நல்லா படின்னு சொன்னா உடனே அந்தப் பையன் வாத்தியார்ட்ட நீ நல்லா படிச்சியா ன்னு கேக்குற மாதிரி இருக்கு.. இதெல்லாம் செய்தா பதிவுலகம் நல்லா இருக்கும்ன்னு சொல்றது அவங்க கருத்து.. அத வேணும்னா எடுத்துக்கோங்க, இல்லாட்டி விட்டுட்டு போங்க.. எதுக்கு இப்படி காய்ச்சி எடுக்கணும்னு தான் புரியல.

      #நேர்பட பார்க்காட்டியும் வார்த்தையிலேயே குத்திக் காட்ட முடியும்னு இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். எனக்கும் காழ்ப்புணர்வு ஏதும் இல்லை..!

      இனியாவது நீங்க திருந்தினால் சரி என்ற நல்லெண்ணமே!

      Delete
    3. ஸ்கூல்பையர், & கோவை ஆவி,

      பதிவுலகம் எப்படி இருக்கணும் என அனைவரும் பொதுவாக சொன்ன கருத்தின் சாராம்சம் என்னவெனில்,

      # அதிக சினிமா பதிவுகள் ஆக்ரமித்துக்கொண்டன.

      # தரமான பதிவுகளை அனைவரும் எழுத வேண்டும்.

      # டெம்ப்ளேட் கமெண்டுகளை தவிர்க்க வேண்டும்.

      # நட்பு வட்டத்தினை தாண்டி பின்னூட்டமிடனும், ஊக்குவிக்க வேண்டும்.

      ரொம்ப நல்ல ஆலோசனைகள் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை.

      ஆனால் சீர்திருத்தம் வேண்டும் என சொன்னவர்களில் பெரும்பாலோர் என்ன செய்கிறார்கள், குறையாக முன்வைக்கப்பட்டவற்றினை தான் செய்துக்கொண்டிருக்கிறார்கள் :-))
      -----------------------

      ஸ்கூல் பையர்,

      அந்த சமானியனில் அடியேனும் ஒருவனே ,நான் சொல்ல வருவது ,எல்லாத்தப்பையும் செய்துக்கொண்டே அதெல்லாம் செய்யாதிங்கனு உபதேசிக்க முயல்வதை தான்.

      தரமாக எழுதுவது காலப்போக்கில் ஆர்வத்தினால் கைவரக்கூடும்,எனவே அதற்காக குட்டிக்கர்ணம் அடிக்கலாம் சொல்ல மாட்டேன், எழுதக்கத்துக்க தானே பிலாக்.

      ஆனால் நல்லா எழுத முயற்சிக்கும் நோக்கம் பதிவில் தென்ப்பட்டாலே நல்லது தான்,ஆனால் அதுக்கூட இல்லையே. அதப்பத்தி கவலைக்கூட இல்லாமல் அடுத்தவங்கள அப்படி எழுது இப்படி எழுது என உபதேசிப்பதில் எனக்கு விருப்பமில்லை.
      --------------------------

      ஆவி பாஸ்,

      //ஏன் பாஸ் இப்படி..? திருவிளையாடல் ங்கிற படத்துல ஒரு வசனம் வரும். குறை சொல்லியே பெயர் வாங்கும் புலவர் அப்படின்னு.. அதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது. //

      அர்த்தம் புரிஞ்சுதா?

      நான் குறை சொன்னது இருக்கட்டும், பதிவுலகம் இப்படி இருக்கணூம் என சொன்னதெல்லாமே "மொத்தமாக பதிவுலகத்தினை" பார்த்து சொன்ன குறை கூறுதல் தானே :-))

      இன்னார் என குறிப்பிடாமல் மொத்தமாக குறை சொல்லலாம் ,அப்படி குறை சொல்லியே பேரு வாங்கிக்கலாம்னு சொல்லுறிங்க அவ்வ்!

      ஒரே ஒரு கேள்வி, இங்கே கருத்து சொன்ன எத்தனைப்பேர் நட்பு வட்டம் தாண்டி வாசிக்கிறது,பின்னூட்டம் போடுவதை செய்துள்ளார்கள்?

      ஒரு சிலரை தவிர யாரும் அப்படிலாம் செய்ததே இல்லை, உதாரணமாக சொக்கன் அவர்களின் பின்னூட்டத்தினை எத்தனை பதிவில் பார்த்திருப்பீங்க :-))

      #//இனியாவது நீங்க திருந்தினால் சரி என்ற நல்லெண்ணமே!//

      தப்பு செய்திருந்தால் தண்டனையுயும் வாங்கிப்பேன் ,வேலுநாயக்கர் வசனம் தான் அவங்கள திருந்த சொல்லு அப்புறம் நான் திருந்தறேன் :-))

      நான் குறிப்பிட்டு சொன்னது கூட "ஊருக்கு உபதேசம்" செய்பவர்கள் திருந்தினால் சரி என்ற நல்லெண்ணமே ,வேறெதுவும் இல்லை :-))

      நீங்க எப்படியோ, நான் இங்க கருத்து சொன்ன அத்தனைப்பேர் பதிவையும் படிச்சிருக்கேன் , பலருக்கும் கருத்தும் சொல்லி இருக்கேன், ஆனால் சிலருக்கு சொன்னதில்லை, நாம சொல்றதுலாம் வம்பாகிடும் என்பதால் தான் வேறொன்னுமில்லை :-))

      நட்பு வட்டத்தில் மட்டுமே படிச்சு பின்னூட்டமிட்டுக்கொண்டு , டெம்ப்ளேட் கமெண்டுகளை தான் பெரும்பாலும் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலரின் கமெண்டுகள் அப்படியே மனப்பாடமாகிடுச்சு, ஹி...ஹி ஏன்னா அவங்க எல்லா கமெண்டும் அதே தானே :-))

      # பாஸ்,நல்லவன் மாதிரி நடிக்க ரொம்ப நேரமாகாது ,அதுவும் இணையத்தில ரொம்ப ஈசி,ஆனால் அதால் யாருக்குமே எந்த பயனும் இல்லை,அதுக்கு என்னப்போல "கெட்டவன்" பேர வாங்கிட்டு போயிடலாம், ஹி...ஹி ஏன்னா அதனாலும் எந்த இழப்பும் இல்லை :-))

      ஒருவரை வீழ்த்தனும் என்றால் அவரை ,இந்திரன் சந்திரன்,நல்லவன்,வல்லவன் என புகழ்ந்தால் போதும் மழுங்கி போயி , தானாக காணாமல் போயிடுவாங்க, அதை செய்ய எனக்கு விருப்பமில்லை அவ்வளவே.

      ஆவி பாஸ் நீங்க நல்லவர்,வல்லவர், நாலும் தெரிஞ்சவர் ,உங்களைப்போல எழுத யாராலும் முடியாது , இப்ப ஓகேவா :-))

      Delete
    4. வவ்வால்,

      இப்பத்தான் பாயிண்ட் பாயிண்டா கருத்து சொல்லியிருக்கீங்க. இதுக்கு முன்னாடி பொத்தாம்பொதுவா யாருக்கும் கருத்து சொல்லத் தகுதியில்லைன்னு சொன்னது தான்தபபு...

      Delete
    5. இப்ப சாராம்சமா சொன்னதை முதல் கருத்தா சொல்லியிருக்கலாம்... மன வருத்தமாவது இல்லாமல் இருந்திருக்கும்...

      Delete
    6. வவ்வால்,
      உங்களோட பெரும்பான்மையான கமெண்டுகளை நான் படிச்சிருக்கேன்.. இன்னும் சொல்லப் போனா நல்லாயிருக்குன்னு சொல்றவங்கள விட, எப்படி இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு சொல்றவங்கள எனக்கு பிடிக்கும். அதே சமயம் அதை சொல்ல பயன்படுத்தற வார்த்தைகள் மென்மையானதா இருக்கலாம். "பகடி" செய்யுங்க வேணாங்கல.. மூஞ்சில அடிச்ச மாதிரி "உங்க யாருக்குமே பதிவுலகம்" பத்தி கருத்து சொல்ல தகுதியில்ல ன்னு நீங்க சொன்னதை தான் என்னால ஏத்துக்க முடியல.

      சொக்கன் ஸார் மறுமொழி இடறாரா என்பது எனக்கு தெரியாது. ஸ்ரீராம் சார், ரஞ்சனி அம்மா, ஸ்கூல் பையன் இவங்க எல்லாம் பெரும்பாலும் கருத்துரையிட்டு பார்த்திருக்கிறேன். ஸ்கூல் நிறைய பெற (புது எழுத்தாளர்களை) அறிமுகப் படுத்தியிருக்கிறார்..

      உண்மைதான்.. ஒரு சின்ன வட்டத்துக்குள்ள தான் போயி படிச்சு கருத்து போடறோம். உங்க குற்றச்சாட்டை ஏத்துக்கறேன்.. ஆனா யோசிச்சு பாருங்க.. வேலைப்பளு, குடும்பம் குட்டி எல்லாம் தாண்டி கிடைக்கிற கொஞ்ச நேரத்துல எவ்வளவு பேர படிக்க முடியும்?

      //இந்திரன் சந்திரன்,நல்லவன்,வல்லவன் என புகழ்ந்தால் போதும் மழுங்கி போயி , தானாக காணாமல் போயிடுவாங்க, அதை செய்ய எனக்கு விருப்பமில்லை அவ்வளவே.//

      தலையில் குட்டுங்க.. தப்பில்ல ஆனா பிளேடால் கீறாதீங்கன்னு தான் சொல்றேன்..

      உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா, நீங்க என்னை "நல்லவர்,வல்லவர், " சொன்னதுக்காக இதை சொல்லலே.. நீங்க எந்த குரூப்பிலையும் இல்லாட்டியும் வவ்வால் போடும் கமெண்டுகள் என்றால் ஆர்வத்துடன் படிக்கும் வாசகர்கூட்டத்தில் நானும் ஒருவனாக்கும்..! :)

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. குடும்பம் குட்டி எல்லாம் தாண்டி கிடைக்கிற கொஞ்ச நேரத்துல எவ்வளவு பேர படிக்க முடியும்?// குடும்பம் குட்டிகள வைச்சிக்கிட்டு அதிகம் பேர படிக்காம எதுக்குங்க கருத்து சொல்ல வராங்க என்பது இங்கு வவ்வால் அண்ணனின் கேள்வி ... என்னோட கேள்வியும் அதே ...

      Delete
    9. நீயெல்லாம் நல்லா வருவ தம்பி..

      Delete
    10. ஆவி பாஸ்,

      //வவ்வால் போடும் கமெண்டுகள் என்றால் ஆர்வத்துடன் படிக்கும் வாசகர்கூட்டத்தில் நானும் ஒருவனாக்கும்..! :)//

      நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு...ஏன் ...ஏன் இந்த கொலவெறி ,முடியல ...அவ்வ்!

      இனிமே இவர்க்கிட்டே சூதானமா இருந்துக்கணும் ,பி கேர்ஃபுல்!... நான் என்னைய சொல்லிக்கிட்டேன் அவ்வ்!

      Delete
  3. Translate செய்யும் போது அனைவருக்கும் எழுத்துப் பிழைகள் வரும்... பதிவு எழுதுவதை விட திருத்தவும் சில பதிவுகளில் நேரம் ஆகும்... என்னதான் வீட்டில் உள்ளவர்களின் துணையோடு சில திருத்தங்கள் செய்தாலும் சில பிழைகள் இருக்கலாம்... கமா(,), புள்ளி(.) உட்பட முக்கியமான, அர்த்தம் மாறக் கூடிய எழுத்துப்பிழைகளைக் சுட்டிக்காட்டினால், எனது கருத்துரையே அந்தப் பதிவிலும் இருப்பதில்லை... திரு. சொக்கன் அவர்கள் சொன்னது போல் உணர்ந்தால் மகிழ்ச்சி தான்...

    // என்னையும் சேர்த்து // இதுவரை வந்த பார்வைகளில், இந்தப் பார்வை உங்களிடமும் + // நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.// ரஞ்சனி அம்மா அவர்களிடமும் முதல்முறையாக வந்துள்ளது... ஸ்.பை. - நீங்கள் தான் அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும்...

    டிஜிட்டல் கல்வெட்டு எனும் ராஜா அவர்களின் கருத்தும், ஸ்ரீராம் சாரின் நேர்மறை சிந்தனைகளும் சரி...

    ReplyDelete
    Replies
    1. //// என்னையும் சேர்த்து // இதுவரை வந்த பார்வைகளில், இந்தப் பார்வை உங்களிடமும் + // நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.// ரஞ்சனி அம்மா அவர்களிடமும் முதல்முறையாக வந்துள்ளது... ஸ்.பை. - நீங்கள் தான் அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும்...//// என்னையும் சேர்த்து // இதுவரை வந்த பார்வைகளில், இந்தப் பார்வை உங்களிடமும் + // நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.// ரஞ்சனி அம்மா அவர்களிடமும் முதல்முறையாக வந்துள்ளது... ஸ்.பை. - நீங்கள் தான் அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும்...//

      என்னை நானே உணர்ந்ததால் தான் அப்படிச் சொல்லியிருக்கிறேன் டிடி. கண்டிப்பாக விரைவில் பல தரமான பதிவுகள் வெளிவரும்...

      Delete
  4. சீனு, இன்றைய பதிவுலகம் எப்படி இருக்குன்னு "BATMAN" கிட்டவும் கேட்டிருக்கலாமில்ல..! :-P

    ReplyDelete
    Replies
    1. பாஸ், நான் ஊரை திருத்தலாம் கிளம்புவதில்லை ,முதலில் என்னை திருத்திக்கணும் , முடிஞ்சா ஒழுங்கா எழுதனும் என நினைப்பவன் :-))

      பதிவுலகில் இருக்கும் எந்த குழுவிலும் சேர்வதேயில்லை "I am a lone Batman"

      Delete
    2. பதிவுலகில் இருக்கும் எந்த குழுவிலும் சேர்வதேயில்லை//

      தனித்தே போட்டியிடுங்கள் ஜி எங்கள் விருப்பமும் அதே தான்

      Delete
  5. சொக்கன் சார், உங்க எழுத்துகளை பாலகணேஷ் ஸார் மூலம் கேட்டிருக்கிறேன். சாருஹாசன் அவர்களின் தள சுட்டியை கொடுத்திருக்கலாமே.. எழுத்துப்பிழைகள் நிச்சயம் யார் சொன்னாலும் திருத்திக் கொள்ளத் தான் வேண்டும்.. அதில் ஈகோ பார்க்கக் கூடாது..


    ReplyDelete
    Replies
    1. அவர் பேஸ்புக் பேஸ்புக் ன்னு மாங்கு மாங்குன்னு சொல்றாரே சொன்னது காதில் விழலையா ஜி ...

      Delete
    2. சரியப்பா, அதுக்கும் ஒரு சுட்டி இருக்குமே..

      Delete
  6. ஸ்பை.. சரியா சொன்னீங்க.. உங்க அடுத்த பதிவு எப்போ? ;-)

    ReplyDelete
    Replies
    1. ஆவி,

      அடுத்து வருவது - ஆசி-ஒரு சகாப்தம்
      தொடர்ந்து வருவது- திருடா, திருடா (சிறுகதை)
      அதையும் தொடர்ந்து- மனம் மயக்கும் மூணாறு

      இன்னும் நிறையவே இருக்கிறது...

      Delete
    2. ஆசி அல்ல, ஆச்சி என்று திருத்தி வாசிக்கவும்...

      Delete
    3. ஆவி ஒரு சகாப்தம் ன்னு எழுதப் போறீங்கன்னு பார்த்தா.. ஆச்சியா.. ஒக்கே ஒக்கே..

      ரிலீஸ் பண்ண தியேட்டர் ஸ்க்ரீன்ஸ் கிடைக்கலையா.. ஒய் தாமதம்.. அவுத்து விடுங்க..!

      Delete
    4. பதிவை ரிலீஸ் பண்ணும்போது பகல்ல பண்ணுங்க.. ராத்திரில பறவைகள் நடமாட்டம் அதிகமா இருக்கும்.. :) :) :)

      Delete
  7. ஸ்ரீராம் ஸார், இங்கயும் பாசிடிவ் விஷயங்கள்.. அருமை.. உங்க ப்ளட் குரூப் என்ன ஓ பாசிடிவா?? :) :)

    ReplyDelete
  8. ரஞ்சனி அம்மா- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு விடுமுறைகள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு பதிவிட நேரம் உள்ளது.. தவிர நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தில் பகுதிதான் நமக்கு இருக்கு.. அக்கறை பச்சை என்பது சரிதானோ?

    ReplyDelete
  9. //நேரில் பார்க்காத பலரை உறவினரைவிட பாசமுள்ள சொந்தகங்களாக எனக்கு ( நமக்கு ) பெற்று தந்தது இந்த பதிவுலகம் . //

    உண்மைதான் ராஜா..

    ReplyDelete
  10. வவ்வால் கடந்த சில நாட்களாக நீங்கள் எனக்கு இடும் பின்னூட்டங்களை கவனித்து வருவதன் மூலம் ஒன்று புரிகிறது, ஒரு பதிவில் இருக்கும் நேரடியான பொதுக்கருத்துக்களை எடுத்துக் கொண்டு அதன் மீது உங்கள் வாதங்களை வைக்கின்றீர்கள்.. சில கருத்துக்களில் நான் எதிர்பாராத உங்கள் ஆழ்ந்த அறிவு வெளிப்படும் , பலவற்றில் உங்கள் அனுமானங்களைத் தான் புகுத்த உட்படுகிறீர்.. உங்களைப் போல வரிக்கு வரி கமெண்ட் போட என்னிடமும் வாதம் இருக்கிறது என்ன முறையான இணைய இணைப்பு இல்லை, இந்த இந்த மோசமான இணைய இணையப்பால் சரிவர இயங்க முடியவில்லை..

    நீங்கள் என்ன வேண்டுமானால் கருத்து தெரிவித்துக் கொள்ளுங்கள் வவ்வால்..

    என்ன எண்ணத்தில் நான் இந்த கருத்துக் கணிப்பு நடத்தினேன் என்பது எனக்கு தெரியும்.. என்னளவில் இது ஆத்ம திருப்தியே...

    மேலும் நான் ஏதோ பதிவுலகத்தை உய்விக்க வந்தது போல் நடந்து கொள்வதாகவே உங்கள் சமீப கால கருத்துகளில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்... அப்படி நினைத்தால் அது என் தவறு அல்ல...

    ReplyDelete
    Replies
    1. வவ்வால் பாஸ், சீனு சின்னப் பையன், ரொம்ப அடிக்காதீங்க பாவம்..! கிரியேட்டிவா ஒரு விஷயத்தை யோசிச்சு செயல்படுத்தும் போது நீங்க போடுற இந்த மாதிரி கமென்ட் அடுத்த முறை கருத்து சொல்ல வர்றவங்களையும் வர விடாம தடுத்திடும்.. "Why so Serious?" - இதை பேட்மேனின் எதிரி "ஜோக்கர்" கேட்பார்.. இதை நான் கேட்பதால் என்னையும் உங்கள் எதிரியாக அவதானிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. :)

      Delete
    2. யோவ் அவரே ஆவி பறக்க சூடேறி பறந்துட்டு இருக்காரு இதுல சின்ன பையன் அது இதுன்னு ஏத்தி விடாதீருமைய்யா.. எனகென்னவோ நீறு வவ்வால்க்கு மறைமுகமா சிக்னல் கொடுக்கா மாறியே இருக்கே :- )))) ஹா ஹா ஹா

      Delete
    3. சீனு,

      //பலவற்றில் உங்கள் அனுமானங்களைத் தான் புகுத்த உட்படுகிறீர்.. //

      இப்போ பதிவுலம் தேய்ஞ்சு போச்சு, இப்படியாச்சு அப்படியாச்சு என சொல்வதெல்லாம் கூட அனுமானமாக சொல்வது தானே , எதாவது ஆய்வுகள் செய்து "சாலிட் ஃபேக்ட்" இருக்குனு காட்ட முடியுமா?

      //நீங்கள் என்ன வேண்டுமானால் கருத்து தெரிவித்துக் கொள்ளுங்கள் வவ்வால்..

      என்ன எண்ணத்தில் நான் இந்த கருத்துக் கணிப்பு நடத்தினேன் என்பது எனக்கு தெரியும்.. என்னளவில் இது ஆத்ம திருப்தியே... //

      ஹி..ஹி இந்த எண்ணம் எனக்கு எப்பவுமே உண்டு ,யார் என்ன நினைத்தால் என்ன ,நினைத்துக்கொள்ளட்டும், நான் என்ன எண்ணத்தில் கருத்து சொன்னேன் என எனக்கு தெரியும், சரியான கருத்தை தான் சொல்லி இருக்கிறேன் என ஆத்மதிருப்தி எனக்கு இருக்கும்!

      # சுகர் கோட்டட் வேர்ட்ஸ் சொல்லி இனிமையாக பேசி செல்வது என்ன கஷ்டமான காரியமா? கெட்டப்பேரு வரும்னு தெரிஞ்சும் ,எதுக்கு இப்படி சொல்லப்போறேன்.

      நானாவது என்ன நினைச்சேன் என சொல்லிவிட்டேன் ,எத்தனைப்பேரு "இவங்கலாம்" ஆலோசனை சொல்ல கிளம்பிட்டாங்க ,விளங்கிடும் என மனசுக்குள் நினைத்துக்கொண்டு ஒதுங்கி போயிருக்க கூடும், அப்படி போனவர்களை விட நான் 1000 மடங்கு பெட்டர்னு எனக்கு நானே பாராட்டிக்கிரேன் அவ்வ்!

      ஆலோசனை சொல்லுறது பெரிய மேட்டர் இல்லை அதை கேட்க ,பின்ப்பற்ற யாராச்சும் இருக்கணும்,யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்த அவ்வ்!

      //நான் ஏதோ பதிவுலகத்தை உய்விக்க வந்தது போல் நடந்து கொள்வதாகவே உங்கள் சமீப கால கருத்துகளில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்... அப்படி நினைத்தால் அது என் தவறு அல்ல...//

      ஹி...ஹி நான் தான் பதிவுலகை உய்விக்க வந்தேன்னு நினைச்சுப்பேன் :-))

      அட நிசமாத்தாங்க ...நானெல்லாம் இல்லைனா தமிழ்ப்பதிவுலமே இருண்டு போயிடாதா :-))
      ---------------------

      ஆவி பாஸ்,

      //உங்கள் எதிரியாக அவதானிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. :)
      //

      எதிரி என்பதெல்லாம் பெரிய வார்த்தை ,அதெல்லாம் சண்டைக்காரங்க தான் பயன்ப்படுத்தனும் :-))


      நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்கலையே , எதா இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும், நானும் கோட்டை தாண்டி வரமாட்டேன் நீங்களும் தாண்டி வரக்கூடாது அவ்வ்!

      நாம மனசுல இருக்கிறத அப்பக்கி அப்ப இறக்கி வச்சிடுவோம், ஏற்றி வைத்துக்கொள்வதில்லை,நான் இறக்கி வச்சிட்டேன் ,நீங்க தான் இறக்கி வைக்காம இருக்கிங்க!

      Delete
  11. இப்படியான விவாதத்தினை முன் எடுத்து செல்லும் அடிப்படை தகுதியே உங்களுக்கு இல்லை என நினைப்பதால் தான் :-))//

    வணக்கம் வவ்வால் அண்ணே ...

    யாரும் எதுவும் செய்ய முன்வராத போது , பதிவுலகம் பற்றிய பார்வை சக பதிவர்களிடம் எப்படி இருக்கிறது என்று சீனு கேட்க முனைந்திருப்பதில் தவறு ஒன்றுமில்லையே....


    ReplyDelete
    Replies
    1. கோட்டு போட்ட உடனே கோபிநாத் ஆயிட முடியுமா.. இது மாதிரி நாலஞ்சு விவாதங்கள் நடத்தினா தானே வளர முடியும்.. வளர விடுங்க வவ்வால் அண்ணே!!

      Delete
  12. இனியாவது மக்கள் திருந்தினால் சரி என்ற நல்லெண்ணமே!//

    மக்கள் எப்படிண்ணே திருந்துவார்கள் ... நீங்கள் பதிவுலகத்திற்கு வந்ததில் இருந்து இன்றுவரை பார்த்திருப்பீர்கள், தரமான பதிவர்களை விட கலவையாக ஜல்லியடித்து எழுதுபவர்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்திருக்கும். ஆட்கள் வேண்டுமானால் மாறலாம், அப்படி பட்ட பதிவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் மட்டும் தான் சீனியர், ஜூனியர் பாகுபாடில்லை.

    ReplyDelete
  13. சீனு,சே.அரசன்,கோவை.ஆவி,ஸ்கூல் பையர்,

    அனைவருக்கும் வணக்கம்,பொதுவாகவே சொல்லிவிடுகிறேன்,

    எதுவுமே தப்பு சரினு இல்லை, அவரவர் பார்வையில் மாறுபடும்.

    நான் சொல்ல வருவதெல்லாம் இதான் , நாம "அடுத்தவங்கள " இப்படி செய்யணும் எதிர்ப்பார்ப்பதை நாமே செய்யாமல் அடுத்தவங்க அதை செய்யணும் என எதிர்ப்பார்ப்பது சரியா?

    உபதேசிக்க மற்றவர்களுக்கு தகுதி இல்லைனு சொன்னாப்போல எனக்கும் தகுதியில்லை என்பதாலேயே "பதிவுலகம்" எப்படி செயல்ப்படனும் என உபதேசிக்க முற்படுவதில்லை :-))
    ----------------------

    அரசன்,

    //யாரும் எதுவும் செய்ய முன்வராத போது , பதிவுலகம் பற்றிய பார்வை சக பதிவர்களிடம் எப்படி இருக்கிறது என்று சீனு கேட்க முனைந்திருப்பதில் தவறு ஒன்றுமில்லையே.... //

    யாருமே செய்ய முன்வராத நிலையில் செய்யலாம், ஆனால் என்ன செய்யனும் என சொல்வதை நாமும் கடைப்பிடிச்சிட்டு செய்யலாமே என்பதே நான் சொல்ல வருவது.

    சீனுவும் நட்பு வட்டத்துக்குள் தான் இயங்குகிறார் ,அதில் ஒன்னும் தப்பில்லை, ஆனால் ஆலோசனை என்ன வருதுனா, நட்புவட்டத்தில் என்று மட்டும் படிக்க கூடாது ,நல்லப்பதிவுகளை படிச்சு ஊக்கு விக்கணும் ,நகைமுரணாக இல்லையா?

    அதை தான் சுட்டிக்காட்டினேன்.

    தெளிவாகவே சொல்லிடுறேன், சினிமா, பொழுதுப்போக்கு என தவிர்த்து "கொஞ்சம் தீவிரமாக" எழுதப்படும் பல பதிவுகளில் "இங்கே ஆலோசனை சொன்னவர்கள், முன்னெடுத்த சீனு "முதல் யாருமே பின்னூட்டமிட்டு நான் பார்த்ததில்லை. எல்லாருமே காம்பஸ் வச்சு வட்டம் போட்டுக்கிறிங்க, அப்புறம் அடுத்தவங்களுக்கு பொத்தாம் பொதுவாக சொல்றிங்க.

    அப்படி இருக்கும் போது , இந்த ஆலோசனைகள் எல்லாம் அரசு அதிகாரிகள் போடும் கலந்தாய்வு போல வச வசனு தான் இருக்கென எனக்கு தோன்றியது.

    ஆவி அனைவருக்கும் வேலையிருக்கு என சொன்னதற்கு நீங்களே ,நான் என்ன நினைத்து சொன்னேன் என சொல்லிவிட்டீர்கள் ,அதுவே தான் எனது கருத்தும்.

    #//தரமான பதிவர்களை விட கலவையாக ஜல்லியடித்து எழுதுபவர்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்திருக்கும். ஆட்கள் வேண்டுமானால் மாறலாம், அப்படி பட்ட பதிவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் மட்டும் தான் சீனியர், ஜூனியர் பாகுபாடில்லை.//

    இது எப்பவும் உள்ளது தான் "ஆனால் ஜல்லியடிப்பவர்கள்" ஜல்லியடிக்காதிங்க என அடுத்தவர்களுக்கு சொல்வதை தான் மறுக்கிறேன்.

    நான் ஏதோ சீனுவை டார்கெட் பண்ணி மடக்கிரேன் என சிலர் நினைத்துக்கொள்ளலாம்,உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை,இதே போல முன்னர் கும்மியடித்த சிலர் "பதிவுலகம் முன்னப்போல இல்லை, வெறும் கும்மியாகிடுச்சு ,இதெல்லாம் மாறனும் என இதே போல ஆலோசனைகளை வாரிவிட்டப்போதும் ,இப்ப என்ன சொன்னேனோ அதை தான் சொன்னேன் :-))

    இதே வேலையாவே திரியிறானேனு சிரிப்பீங்களே அவ்வ்!

    ReplyDelete
  14. சொக்கன் அண்ணாச்சியையும் கூட்டிட்டு வந்து நாற்சந்தியில் நிக்க வச்சிட்டீங்களேப்பா...!

    ReplyDelete
  15. சீனு இவங்க கிட்டல்லாம் கருத்துக் கேட்டதால அவங்க மதிச்சு சொல்லியிருக்காங்க. அதுல சொன்னவங்க தப்பு எங்கருந்து வந்தது. இங்க நடந்த வாதப் பிரதிவாங்கள்லாம் போகட்டும்... ‘தரமான பதிவு’ ‘தரமான பதிவு’ன்னு எல்லாரும் மாறி மாறி சொல்றீங்களே... எது தரம்? அதுக்கான அளவுகோல் என்னன்னு யாராவது ‘விம்’மினா நல்லா இருப்பீங்க...

    ReplyDelete
    Replies
    1. பால கணேஷர்,

      என்ன இப்புடி கேட்டுப்புட்டிங்க, எனக்கு தெரிஞ்சு மின்னல்வரிகள்னு ஒரு வலைப்பதிவு இருக்கு ,நல்லா தரமான படைப்புகளா இருக்கும், யாரோ புதுசா கணேஷ் பாலானு ஒரு பதிவர் தான் எழுதுறாராம்,ஒரு தடவைப்படிச்சிப்பார்த்தாலே விம்மாமலே புரியும்!

      Delete
    2. பாலண்ணா ...! நீங்க கேட்ட அதே சந்தேகம் தான் எனக்கும் ச்சியர்ஸ் ....!
      அப்பிடியே ஆகச்சிறந்த பதிவிற்கும் அர்த்தம் கேளுங்கோண்ணா ...!


      Delete
    3. அடாடா... அவ்வளவுக்கு நான் வொர்த் இல்லீங்க வவ்வால்... சில சமயங்கள்ல மொக்கைன்ற லேபிள்ல கொல வெறியோட நானும் மொக்கை போடறவன்தான். இருந்தாலும்... உங்க அன்புக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  16. எப்படியோ ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியிருச்சு இந்த பதிவினால! களை கட்டட்டும்! நன்றி!

    ReplyDelete
  17. கமென்ட் போடலைன்னா , படிக்குராணுக பின்னூட்டம் போட மாட்டீங்குரானுங்கன்னு சொல்றீங்க , சரின்னு கமென்ட் போட்டா , ஒத்த சொல்லுல போடுரானுங்கோ ன்னு சொல்றீங்க , முடிவா என்னதான்யா சொல்ல வாறீங்க ....

    டெம்ப்ளேட் கமெண்ட்னு தெரிஞ்சா ஒதுக்கி தள்ளிட்டு போகவேண்டியது தானே ...


    மாத்தி மாத்தி முதுகுல சோப்பே போட்டுகினு இருக்காம , அப்பப்ப நாலு சாத்து சாத்தினாதான்யா நல்லாருக்கும்....

    //உங்கள் எதிரியாக அவதானிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. :)
    //

    வவ்வால் மதிப்பிற்குரிய எதிரியய்யா ...! எதிரி இல்லாம வாழலாம் , அனா வளர முடியாது .... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ் ...!


    வலையுலக எடிட்டர் வவ்வாலின் கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன் .....!

    ReplyDelete
    Replies
    1. ஜீவன் சுப்பு,

      //கமென்ட் போடலைன்னா , படிக்குராணுக பின்னூட்டம் போட மாட்டீங்குரானுங்கன்னு சொல்றீங்க , சரின்னு கமென்ட் போட்டா , ஒத்த சொல்லுல போடுரானுங்கோ ன்னு சொல்றீங்க , முடிவா என்னதான்யா சொல்ல வாறீங்க ....//

      வாங்க, உங்களப்பார்த்த எல்லா நியாயங்களும் தர்மங்களும் தெரிந்தவராத்தான் இருப்பீங்கனு நல்லா தெரியுது, நீங்களே இதையும் கேளுங்க, கூடவே என்னப்போலவும் பின்னூட்டம் போடக்கூடாதாம்,அப்புறம் என்னதான் சொல்லணுமாம் ஒன்னியும் பிரியலை அவ்வ்!

      நேர் நேர் தேமா ,நிரைநேர் புளிமா, பரோட்டாவுக்கு ஊத்து குருமானு எதாச்சும் எழுதி வச்சுட்டு அப்படியே திரும்பிப்பார்க்காம ஓடிறனும் போல இருக்கு அவ்வ்!

      //அப்பப்ப நாலு சாத்து சாத்தினாதான்யா நல்லாருக்கும்....//

      ஹி...ஹி இந்த டீலிங்க் , எனக்கு ரொம்ம்ப்ப பிடிச்சிருக்கு (நம்பியார் போல கையில கஞ்சா கசக்கிட்டு படிக்கவும்)

      //வவ்வால் மதிப்பிற்குரிய எதிரியய்யா ...! எதிரி இல்லாம வாழலாம் , அனா வளர முடியாது .... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ் ...!//

      அது ...! இதத்தான் நான் எப்பவும் சொல்வது , இனிப்பாக பேசிப்பாராட்டுவது வளர்க்காது நல்ல விமர்சனமே மேம்ப்படுத்தும் என!

      எடிட்டரா அவ்வ்,ஆனாலும் நீங்க என்ன ரொம்ப புகழுறீங்க, எல்லாப்புகழும் "கூகிளாண்டவருக்கே" ..ஜெய்ஹோ!

      Delete
  18. @ வவ்வால்


    //நேர் நேர் தேமா ,நிரைநேர் புளிமா, பரோட்டாவுக்கு ஊத்து குருமானு எதாச்சும் எழுதி வச்சுட்டு அப்படியே திரும்பிப்பார்க்காம ஓடிறனும் போல இருக்கு அவ்வ்!//

    ROFL

    //தரமாக எழுதுவது காலப்போக்கில் ஆர்வத்தினால் கைவரக்கூடும்,எனவே அதற்காக குட்டிக்கர்ணம் அடிக்கலாம் சொல்ல மாட்டேன், எழுதக்கத்துக்க தானே பிலாக்.//

    200 % CORRECT JI ...! நம்மாளுங்க எல்லாரும் MTS விளம்பர தாக்கத்திலையே பேசுறாங்க ...


    சமீபமாக , பாலண்ணா தளத்திலும் , பிபி தளத்திலும் தான் உம்மை காண முடிகிறது ... வேறெந்த தளங்களில் பின்னூட்டம் உற்சவம் நடைபெறுகிறது என்று சொன்னால் ஒரு நடை போய் வரலாம் .


    ஆமா , ஏன் இப்பல்லாம் தேவியர் இல்லத்திற்கு வருவதில்லை ...?

    ReplyDelete
    Replies
    1. டி.என்முரளிதரனின் மூங்கில்காற்று தளத்திலும் வவ்வால் பறப்பதைப் பார்க்கலாம் ஜீவன்.

      Delete
    2. ஜீவன் சுப்பு,

      உங்களூக்கு நல்ல நகைச்சுவை உணர்வு!

      #எம்டிஎஸ்,காம்ப்ளான் என விளம்பரம் பார்த்தே "கருத்தாக்கம்" கொள்கிறார்கள் அவ்வ்!

      #//சமீபமாக , பாலண்ணா தளத்திலும் , பிபி தளத்திலும் தான் உம்மை காண முடிகிறது ... வேறெந்த தளங்களில் பின்னூட்டம் உற்சவம் நடைபெறுகிறது என்று சொன்னால் ஒரு நடை போய் வரலாம் .//

      சமீபமாக நீங்க வேறெந்த பதிவும் படிக்கலையோ,அதாவது நட்பு வட்டம் தாண்டி?

      பலப்பதிவுகளும் படிச்சிட்டு தான் இருக்கேன் ,நேரத்தினை பொறுத்து பின்னூட்டுவது, மூங்கில்காற்று முரளிதரன் பதிவைக்கூட கவனிக்கிறதில்லையோ,பாலகணேஷர் நல்ல கவனம் கொண்டவர் ,எப்படி கவனிச்சு வச்சிருக்கார் பாருங்க.

      ஆனால் எல்லாருமே அவங்க அவங்க படிப்பது தான் பதிவுகள் என நினைச்சிட்டு இருக்கோம் (என்னையும் சேர்த்து தான்),நிறைய பேரு எழுதிட்டு இருக்காங்க, அதுவும் சில "நல்லவங்க" ஆசைப்பட்டு சொன்னாங்களே "தரமான" பதிவுகள் என அதைப்போல எழுதுறாங்க, நாம(அடியேனும்) தான் சரியா கவனிக்காம "எல்லாமே இருண்டுப்போச்சு என நினைச்சிக்கிறோம் அவ்வ்.

      நாம படிக்கும் சிலப்பதிவுகள், நீங்க ஆசைப்ப்பட்டு கேட்டதால் பட்டியலிட்டுள்ளேன், விடுபட்டவை நிறைய ,எனவே அவங்களாம் சொல்லமறந்துட்டேன் என சண்டைக்கு வரப்படாது அவ்வ்.

      நான் பெரும்பாலும் "பரிந்துரைக்கும்" வேலையெல்லாம் செய்வதில்லை ஏன்னா நாம அந்தளவுக்கு பெரிய ஆளில்லை, ஏதோ கிடைச்ச நேரத்தில் புடிச்சத படிச்சு வைக்கிறோம் அவ்வளவே.

      தரமான பதிவுகள் காணோம், நட்புவட்டம் தாண்டி பின்னூட்டமிடனும் சொன்னப்பலர் கீழ்க்கண்ட பதிவுகள் பக்கமெல்லாம் எட்டிக்கூட பார்த்ததில்லை,உங்க பின்னூட்டங்களை "அபிலாஷ் சந்திரன்" பதிவுகளில் கூடப்பார்த்துள்ளேன்.

      சமயத்தில் பின்னூட்டமிடுவேன் , எதாவது சொன்னால் வருத்தப்படுவாங்களோனு நினைப்பவர்களின் பதிவுகளை படிச்சுட்டு கடந்திடுவேன்.
      (பட்டியல் வரிசை புக்மார்க்கில் இருந்து திறந்த ஆர்டரில் உள்ளது )

      http://dharumi.blogspot.in/

      http://amudhavan.blogspot.in/

      http://parvaiyil.blogspot.in/

      http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in

      http://govikannan.blogspot.in/

      http://suvanappiriyan.blogspot.com/2013/09/blog-post_16.html


      http://aatralarasau.blogspot.in

      http://www.samudrasukhi.com

      http://tamilfuser.blogspot.in

      http://www.madrasbhavan.com

      http://www.greatestdreams.com/

      http://masivakumar.blogspot.in

      http://krpsenthil.blogspot.in

      http://www.gnani.net/

      http://thiruttusavi.blogspot.in/

      (இத்தனை சுட்டிகளை போட்டதுக்கு "கடைஉரிமையாளர்" சீனு கோச்சுக்கப்படாது, ஜீவன் கேட்டுட்டாப்படி, அதே சமயத்தில் இப்பதிவுகளையும் பகிர்ந்த்துக்க வாய்ப்பா நினைச்சு ,பட்டியலிட்டுவிட்டேன், தவறென நினைத்தால் நீக்கிவிடவும்)

      #//ஏன் இப்பல்லாம் தேவியர் இல்லத்திற்கு வருவதில்லை ...?//

      ஏனுங்ணா ,அதெப்படி இத்தனைப்பேர் இருக்கிறப்போ என்னைப்பார்த்து இந்த கேள்விய கேட்கப்போனிங்க? அவ்வ்!(சொப்பன சுந்தரி டைப்பில் வாசிக்கவும்)

      பொதுவாக "புகழ்போதையில்" மிதப்பவர்கள் பக்கம் செல்வதில்லை!

      Delete
  19. //சமீபமாக நீங்க வேறெந்த பதிவும் படிக்கலையோ,அதாவது நட்பு வட்டம் தாண்டி?- //

    சமீபத்தில் இல்லை பெரும்பாலும் படிப்பதில்லை .

    //உங்க பின்னூட்டங்களை "அபிலாஷ் சந்திரன்" பதிவுகளில் கூடப்பார்த்துள்ளேன்.//

    அப்பப்ப சூரியனுக்கு டார்ச் அடிப்பதுண்டு,நான் கவனிக்கப்படவேண்டுமென்பதற்காக :)

    ஏற்கனவே ஒரு முறை காரிகன் அவர்கள் தளத்திற்கு போய், பதிவை scroll பண்ணி பார்த்துட்டு பி.கா.பி.தெ ஓடியாந்துட்டேன் .

    சுட்டிகளுக்கு நன்றி ...!

    டிஸ்கி : வவ்வாலோடு சாவகாசம் வச்சுக்குட்டா CUG Strength கம்மியாகிடும்போலயே .. ! ஆஆஆஆஆஆவ்வ்வ்வவ்வ்வ்வ்.

    ReplyDelete
  20. சீனு உங்கள் பதிவுகளை மின் அஞ்சல் வழியாக பெற முடிவதில்லை. அது சிக்கல் என்று ஏதோ காட்டுகின்றது. கவனிக்கவும்.

    ReplyDelete