ஜஸ்ட் ரிலாக்ஸ்
இப்போதுதான் தற்செயலாய் கவனித்தேன். ஜஸ்ட் ரிலாக்ஸ் எழுதி ஐந்து மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இனி மாதம் ஒருமுறையாவது எழுத வேண்டும்.
உமா மகேஸ்வரி
சமீப காலத்தில் தமிழகத்தையும் ஐடி துறையையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார் உமா மகேஸ்வரி. அன்றைய தினம் அப்படியொரு கொடுரம் நடக்கப்போகிறது என்று நினைத்துப் பார்த்திருப்பாரா என்ன? பாவம் வாழ வேண்டிய வயது. தற்போதும் இன்னும் சில நாட்களுக்கும் இவரைப் பற்றித்தான் எனது மொத்த அலுவலகமும் பேசிக் கொண்டிருக்கும். இந்த அசம்பாவிதத்திற்குப் பின் சிப்காட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகள் மாற்றங்கள். இதுகுறித்து பின்னொரு நாளில் விபரமாக பதிவு செய்கிறேன். என்ன மாறினாலும் போன உயிர் போனது தான். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி என்று கூறுவதைத் தவிர எந்த மசுரையும் பிடுங்க முடியாத சமுதாயத்தில் தான் வாழ்கிறோம் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் பயமாய் தான் இருக்கிறது.
கொஞ்சம் தாமதித்த அறிமுகம் தான். இதற்கென தனி பதிவே எழுத வேண்டுமென நினைத்திருந்தேன், முடியவில்லை. சில மோசமான புத்தகங்களைப் படிக்கும் பொழுது காசு குடுத்து வாங்கி இப்படி அவஸ்தபடுறோமே என்றும், சில நல்ல புத்தகங்களைப் படிக்கும் பொழுது கண்டிப்பாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தோன்றும். எனது வலைப்பூவில் இந்த புத்தக விமர்சனங்களைப் பகிராமல் தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் உதித்த போது வாத்தியார் கூறிய பெயர் வாசகர்கூடம். புத்தகம் மற்றும் புத்தகம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே பகிர வேண்டும் என்ற ஒற்றை விதியைத் தவிர வேறேதுவும் இங்கில்லை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் படைப்பை vasagarkoodam@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது bsrinivasanmca@gmail.com என்ற முகவரிக்கோ அனுப்பினால் நலம்.
நீ தானே என் பொன்வசந்தம்
கௌதம் வாசுதேவ் மேனன் + இளையராஜா காம்போ. படம் வெளிவந்த நாள் முதலே பார்த்தே ஆக வேண்டும் என்று நினைத்த ஆனால் மோசமான விமர்சனத்தின் காரணமாக தவறவிட்ட ஒரு படம். இருந்தும் எனது பெரும்பாலான இரவு வேளை(லை)கள் சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா.. காற்றைக் கொஞ்சம் நிற்கச்சொன்னேன்.. சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக..பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா.. வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே பாடல்கள் இல்லாமல் கடப்பதே கிடையாது. எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் பரவாயில்லை பல்லைக் கடித்துக் கொண்டாவது பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த படத்தை ஒருவழியாய் பார்த்தே விட்டேன்.
GVM-ன் காட்சியாக்கம் குறித்து குறையே கூற முடியாது, கமாலினி முகர்ஜியை, ஆண்ட்ரியாவை, சமீரா ரெட்டியை இவரை விட அழகாக பதிவு செய்தவர்கள் வேறெவரும் இல்லை. அதிலும் வாரணம் ஆயிரத்தில் அழகு பதுமையாக வலம் வந்த சமீரா ரெட்டி ஏனைய இயக்குனர்களின் திறமையில் சமீரா ரொட்டியாகத் தான் வலம் வந்தார் என்பதில் இருந்தே கௌதம் என்னைப் போன்ற கலா ரசிகர்களுக்கு எவ்வளவு பிடித்தமானவர் எனத் தெரிந்து கொள்ளலாம் :-)
பெண்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு வெளிவந்த படங்கள் மிகமிகக் குறைவே. என் சினிமா ஞானத்திற்குத் தெரிந்தளவில் மௌனரா கத்திற்குப் பின் யாருமே பெண்ணின் உணர்வுகளை, மன போராட்டங்களை ஒரு அழகான கவிதை போல் பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அந்த குறையை நீ தானே என் பொன்வசந்தம் மூலம் GVM போக்கிவிட்டார் என்றே கூறலாம்.
காட்சியமைப்பு, இசை மற்றும் வசனம் படத்திற்கு மிகப்பெரிய பலம். காதலிப்பவர்களுக்கு/காதலித்தவர் களுக்கு இந்த படம் அளவுக்கு அதிகமாக பிடித்துப் போகலாம் என்பது என் அவதானிப்பு. பெரும்பாலான காட்சிகளில் துளி கூட பின்னணி இசை இல்லாமல் நகர்வதுதான் பின்னணி இசையின் பெரும்பலம் என்று நினைக்கிறன். சில நேரங்களில் மௌனத்தை விட சிறந்த இசை வேறேதும் இல்லை தானே!
தான் செய்வது மட்டுமே சரி என்று நினைக்கும் ஒவ்வொரு ஆணும் பார்க்க வேண்டிய படம். ஆனால் தான் செய்ததே சரி என்று ஒரு ஆணாக GVM கிளைமேக்சில் சொதப்பி விட்டாரோ என்று நினைக்க வைக்கிறது. தன்னுடைய சூழ்நிலையை சரியாக கடத்தத் தெரியாத நாயகன் ஜீவா இறுதிக்காட்சியில் பெரிய பருப்பு போல் பேசுவதைப் பார்க்கும் போது கோவம் வருகிறது. ஆண் எனக்கே இவ்வளவு கோபம் வரும்பொழுது பெண்கள் நிச்சயம் கடுப்பாகியிருப்பார்கள் என்றே நினைக்கிறன்.
எனக்கென்னவோ நிஜ வாழ்க்கையிலும் சில ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. Yes of-course பெண்கள் தரப்பிலும் சில தவறுகள் இருக்கலாம் ஆனால் இதப்போய் இவகிட்ட சொல்லனுமா என்பது போன்ற எண்ணம்/ஈகோயிசம் ஆண்களிடம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றே நினைக்கிறன். ஒரு கட்டத்தில் ஜீவா i don't want this shit எனும் போது ஆண்கள் என்றால் பொய்யா பொய்தானா என சமந்தா பாட வேண்டிய நேரத்தில் அப்படியே உட்டாலக்கடியாக பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா என்று பாடுகிறார் அதே ஜீவா. seriously i dint expect this shit :-) `
வழக்கம் போல் பெண்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாத ஓர் ஆணாக ஜீவாவையும், வீக் ஜெண்டராக பெண்களையும் காட்டியிருக்கும் மற்றுமொரு படம். கிளைமேக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. பெண்களின் மன உணர்வுகளை, கிளைமேக்ஸில் ஜீவா செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் படியான காட்சியமைப்பு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பதைத் தவிர it is GVM's psychological + maestro's musical treat. Don't miss it...
6174
எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி அவர்களுடன் அரசன் மற்றும் வேடியப்பன் |
ஒரு மாலையை டிஸ்கவரியில் கழித்துக் கொண்டிருந்தபோது வேடியப்பன் எங்களை அழைத்து இவர் தான் சுதாகர் கஸ்தூரி. 6174ன்னு ஒரு நாவல் எழுதி இருக்கார் என்று அறிமுகம் செய்து வைத்தார், அன்றுதான் அவரைப் பற்றியும் அவருடைய நாவலைப் பற்றியும் தெரியும். நாவல் விலை 300 ருபாய். விலையைப் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனேன், அரசனோ 'நல்ல இருக்கும்ன்னு மனசு சொல்லுது தலைவரே' என்றபடி வாங்கிவிட்டார். எனக்கோ ஆச்சரியம். ஆனால் அவர் புத்தகம் வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை விற்பனையில் இந்த நாவல் சக்கை போடுபோடுகிறது. சீக்கிரம் படிக்க வேண்டும்.
ஜஸ்ட் க்ளிக்
கங்கைகொண்ட சோழபுரம் |
Tweet |
//அரசனோ 'நல்ல இருக்கும்ன்னு மனசு சொல்லுது தலைவரே' என்றபடி வாங்கிவிட்டார். எனக்கோ ஆச்சரியம். ஆனால் அவர் புத்தகம் வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை விற்பனையில் இந்த நாவல் சக்கை போடுபோடுகிறது. //
ReplyDeleteஅப்போ அரசன் வாங்குனதால தான், புக் ஹிட்டா? அநியாயம்யா!
அரசன் உட்கார குவார்ட்டர் விழுந்த கதையா இல்லே இருக்கு..!
Delete:))))))))))))))))))
Deleteசெங்கோவி அண்ணே வணக்கம் ... இதுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை ...
Deleteஆவி பாஸ் சின்ன திருத்தம் குவார்ட்டர் இல்லை பால் புட்டி ...
Deleteஇன்னும் சொல்லபோனால் சுதாகர் அவர்கள் அரசனுக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
Deleteவாசகர் கூடம் நல்ல முயற்சி... போரடித்து பாதியில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDeleteநீதானே என் பொன்வசந்தம் வெளிவந்தபோது நான் அந்தமானில் இருந்தேன்... அதனால் பார்க்க முடியவில்லை... பதிவிறக்கி வைத்திருக்கிறேன்... ஆனால் இன்றுவரை பார்க்க நேரம் கிடைக்கவில்லை...
கலாவையே ரசிப்பவர்கள் கண்ணுக்கு சமீரா ரொட்டி ஆழகாக தெரிவதில் ஆச்சரியமில்லை...
நீங்கள் சுதாகரை பார்த்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்ததோ... அந்த புத்தகம் ஆறு மாதமாகவே நன்றாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்...
தம்பி ரொம்ப ரிலாக்ஸ்டா ஒரு ஆறேழு மாசத்துக்கு அப்புறம் போட்ட போட்டோ அது..நீங்க டென்சன் ஆவாதீங்க பாஸு!
Deleteநன்றி பிரபா...
Deleteபுத்தகங்கள் போரடித்து விடாத வரை வாசகர் கூடம் போரடித்து விடாது என்று நம்புகிறேன்.. நீங்களும் உங்களுடைய ஒன்றிரண்டு பங்களிப்பைத் தாருங்கள் :-)
//கலாவையே ரசிப்பவர்கள் கண்ணுக்கு சமீரா ரொட்டி ஆழகாக தெரிவதில் ஆச்சரியமில்லை...// :-)
சுதாகரை சந்தித்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த புத்தகம் பலருக்கும் தெரியவர அதிஷாவும் ஒரு காரணம்.. தமிழகத்தின் டான் பிரவுன் என்று அவர் எழுதிய 6174 விமர்சனம்`பலரையும் வாங்கத் தூண்டியது.. அந்த விமர்சனத்திற்குப் பின் டிஸ்கவரியில் நடந்த 6174 அளவளாவல் தினத்தில் சுதாகர் அவர்களை நானும் அரசனும் சந்தித்தது தற்செயலே...
//நீங்க டென்சன் ஆவாதீங்க பாஸு!// :-)
Delete///இந்த அசம்பாவிதத்திற்குப் பின் சிப்காட்டில் ஏகப்பட்ட கெடுபிடிகள் மாற்றங்கள். ///
ReplyDeleteஇந்த பாதுகாப்பு மாற்றங்களுக்கு கொடுத்த விலை(உயிர்) மிக அதிகம் தான்
ஆமா மதுரைதமிழன் .. அதை நினைத்தால் தான் வருத்தமாய் இருக்கிறது
Deleteபுத்தகங்களை வாங்கி படிப்பவர்களுக்கு வாசகர் கூடம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteசிறுவயதில் இருந்து அமெரிக்கா வரும் வரை புத்தகப் புழுவாக இருந்த நான் இப்போது நான் அடியோடு மாடிவிட்டேன். இப்பொது நான் படிப்பது எல்லாம் தகவல்கள்தான் கதைகளுக்கும் எனக்கு ரொம்ப தூராமாகிவிட்டது
புத்தகங்களை வாசிப்பதற்கு காலகெடு என்ற ஒன்று இல்லாத போது மீண்டும் கதைகள் நாவல்கள் வாசிப்பதை முதலில் இருந்தே தொடங்கலாமே...
Deleteஉண்மைய அப்படியே சொல்லணும்னா எனக்கும் நீ.எ.பொ.வ பிடிச்சது.. சில கிளிஷே காட்சிகள தவிர..
ReplyDeleteஎனக்கு கௌதம் மூவிஸ்ல பிடிச்சது அவரோட ஷார்ப் டயலாக்ஸ், குறிப்பா -- "உன் கண் வழியா அவங்க என்னை பார்க்கல"ன்னு ஜெஸ்சி சொல்றது.. "அவ பேரு ஜெஸ்சி, ஜெஸ்சி" ன்னு கார்த்திக் சொல்றது.
இந்தப் படத்துல "அந்த ஊர்ல எனக்கொரு பொண்ண தெரியும்" ங்கிற டயலாக் ரொம்ப சாதாரணமா தெரியும். ஆனா கல்லூரிப் பருவத்தில் இந்த வசனத்த யார்கிட்டவாவது பேசினவங்களுக்கு நிச்சயம் மனசுக்குள்ள சாரல் அடிச்சிருக்கும்..
//ஆண் எனக்கே இவ்வளவு கோபம் வரும்பொழுது//
சில விஷயங்கள் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அதுல ஒண்ணு அந்த காட்சி..
கிளைமாக்ஸ்.. படத்தை முடிக்கனும்னகறதுக்காக எடுத்த மாதிரி இருந்தது. சொதப்பல்..
கௌதமின் மற்ற நாயகிகள் எல்லாம் எனக்கும் பிடித்திருந்தது.. குறிப்பா சமீரா.. பட், டு பீ பிராங்க் சமந்தா அவ்ளோ அழகா பீல் பண்ண முடியல..
நான் ரொம்ப ரசித்த காட்சி, விடிவி கதையை சந்தானம் சொல்லும் அந்த காட்சி.. சிம்ப்ளி ஆவ்ஸம்..!
எனக்கும் நீ.எ.பொ.வ இருக்குற சில நாடகத்தனமான காட்சிகள் பிடிக்கலை.. நாடகத்தனம்னு சொல்றதுக்கு காரணம் எந்த எக்ஸ்ட்ரா எபெக்டும் இல்லாம நாடகம் பாக்குற மாதிரியா பீல் கொடுத்ததால.. அரங்குல பார்த்த பலருக்கு கொட்டாவி வந்த்ருக்கும்...
Delete////ஆண் எனக்கே இவ்வளவு கோபம் வரும்பொழுது//
சில விஷயங்கள் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அதுல ஒண்ணு அந்த காட்சி.. //
அப்படி ஜஸ்ட் லைக் தட்டா சொல்லிற முடியாது பாஸ்.. பிகாஸ் முந்தின வரியா கவனிசீங்களா... //தன்னுடைய சூழ்நிலையை சரியாக கடத்தத் தெரியாத நாயகன் // ஜீவா ஏன் MBI படிக்க போகணும்ன்ன்றதுக்கான வலுவான காரணம் இருந்தாலும் அத கன்வே பண்ற காட்சி அமைப்புகள் இல்ல.. ஒருவேள அப்படி நடந்து அதுக்கு அப்புறமும் சமந்தா ஜீவாவே கதின்னு சுத்திருந்தா அவ மேல பழி போடலாம்.. ஆனா எனக்கு தெரிஞ்சு மையமே அது ஒன்னு தான்னு தோணுது.. அதுக்கு அப்றமா எனக்கு நித்யாவ புடிச்ச அளவுக்கு வருண புடிக்கல.. and ஜீவாக்கு பதிலா சிம்புவே நடிச்சிருந்தா இன்னும் அருமையா இருந்த்ருக்கும்...
//காதலிப்பவர்களுக்கு/காதலித்தவர்களுக்கு இந்த படம் அளவுக்கு அதிகமாக பிடித்துப் போகலாம் என்பது என் அவதானிப்பு.//
ReplyDeleteம்......
6174 பற்றிய விமர்சனங்கள் முகநூல் உட்பட எல்லா இடங்களிலும் படித்தேன்.
வாசகர்கூடம் சுவாரஸ்யமான தளம். பாராட்டப் படவேண்டிய தளம். படிக்கப்படவேண்டிய தளம். வாழ்த்துகள்.
கங்கை கொண்ட சோழபுரம் படம் அருமை.
மிக்க நன்றி ஸ்ரீராம் சார்... 6174 விரைவில் உங்களுக்குக் கிடைக்கக் கடவது :-)
Deleteஅடடா...! இப்போது தானே வாழ்வில் பொன் வசந்தம்...?!
ReplyDeleteஅரசன் அவர்களுக்கு நன்றி...!
வாசகர் கூடம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி டிடி :-)
Deleteரூபாய் முன்னூறு என்று போட்டு இருப்பது பயமுறுத்துகிறது.
ReplyDeleteஒரு நூறு ரூபாய்க்குள் இருக்குமானால், இப்பொதே அங்கு (டிஸ்கவரி பாலசுக்கு ) வந்து வாங்கிகொண்டு விடலாம்.
இல்லையென்றால், இரண்டு சாய்ஸ் தான்.
ஒன்னு,
இது மலிவுப் பதிப்பாக வரும் வரை காத்திருக்கவேண்டும்.
காலன் காத்திருப்பானா ? சந்தேகம் தான்.
இல்லையென்றால்,
ஆவிப்பா, செல்லப்பா மாதிரி ஒரு புண்யாத்மா புதுசாவோ,அல்லது தான்
படிச்சப்பறம், அதை எனக்கு ஒ சியாக
படிக்க தரவேண்டும்.
சீனு என்ன செய்வார் தெரியல்லையே ?
முடிக்குமுன்னே ஒரு வார்த்தை.
பதிவு மனசிலே பதியும்படியாக இருக்கிறது.
உங்களுடைய இந்தப் பதிவு.
சுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.in
வணக்கம் சுப்பு தாத்தா.. ஏன் இப்படி சொல்றீங்க.. உங்களுக்காக காலம் காத்திருக்கும்..
Delete//ஆவிப்பா, செல்லப்பா மாதிரி ஒரு புண்யாத்மா புதுசாவோ,அல்லது தான்
படிச்சப்பறம், அதை எனக்கு ஒ சியாக
படிக்க தரவேண்டும்.// ஹா ஹா ஹா இதனை ஆவி கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் :-))))))
//சீனு என்ன செய்வார் தெரியல்லையே ?// சீனு செய்யபோவது சஸ்பென்ஸ் :-)
மிக்க நன்றி சுப்புத்தா.. உற்சாகமான உங்கள் கருத்துக்கு
Visit : http://wallposterwallposter.blogspot.in/2014/03/12032014.html
ReplyDeleteநன்றி டிடி இப்போதுதான் அந்த பதிவை படித்தேன்...
Deleteவாசகர் கூடம் நல்ல தலைப்பு நல்ல பகிர்வுகளும் இருக்கும் என நம்புகிறேன்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிச்சயமாக நீங்கள் எதிர்பார்ப்பது போல் நல்ல பகிர்வுகள் இருக்கும்...
Deleteஏம்லே இப்படி அந்த வரியை மாத்தும் ...
ReplyDeleteஆயிரம் ஊவா செலவு ஆகும் பரவால்லியா :-))))
Deleteஉமா மகேஸ்வரிக்கு நேர்ந்த கொடுமை இன்னும் பல வருடங்களுக்கு மனதில் முள்ளாய் குத்தும்.
ReplyDeleteநீதானே என் பொன் வசந்தம் பார்க்க ஆரம்பித்து, தாங்கமுடியாமல் எழுந்து வந்துவிட்டேன். உங்கள் விமரிசனம் பார்த்தபின் கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. (ரொம்பவும் வயதாகிவிட்டதோ? - எனக்கு!)
சுதாகர் கஸ்தூரியின் புத்தகம் பற்றி ஆவி எழுதியிருப்பதைப் படிக்கிறேன். அரசனை மட்டுமே அறிந்த எனக்கு யார் சுதாகர் என்று தெரியவில்லை. படத்தில் கொஞ்சம் குறிப்பிடுங்களேன், ப்ளீஸ்.
கங்கைகொண்ட சோழபுரம் புகைப்படம் மிகத் தெளிவாக இருக்கிறது. அருமை!
நீ தானே என் பொன் வசந்தம் ஒருவேளை உங்கள் மலரும் நினைவுகளை மீண்டும் பூக்கச் செய்யலாம் அம்மா.. ஆனால் கொஞ்சம் அசாத்தியப் பொறுமை வேண்டும்.. தொடர்ந்து பார்த்தால் தூங்கினாலும் தூங்கிவிடுவோம்.. கொஞ்சம் கொஞ்சமாக பாருங்கள்...
Deleteவேடியப்பன் மற்றும் அரசன் ஆகியோருக்கு நடுவில் இருப்பவர் சுதாகர்
பேசாம நீ தானே என் பொன் வசந்தத்துக்கு தனியே விமர்சனமே எழுதி இருக்கலாம் .. அதுதான் பதிவுல தனியா தெரியுது ...
ReplyDeleteயார் என்ன சொன்னாலும் அந்த படம் எனக்கு புடிச்சிருந்தது ....
தனியே தான் எழுதனும்னு நினைச்சேன்.. சினிமா விமர்சனத்த கம்மி பண்ணனும்னு தான் ஜஸ்ட் ரிலாக்ஸ்ல சேர்த்துட்டேன்.. ஜஸ்ட் ரிலாக்ஸோட விதிகள்ள அதுவும் ஒன்னு தானே (எனக்கு பிடித்த படங்களின் விமர்சனமும் வரும் என்று )
Deleteவாசகர் கூடம் - நல்ல முயற்சி! வாழ்த்துக்கள் சீனு!
ReplyDeleteபடித்து விட்டு ரிலாக்ஸ் ஆனேன் சீனு
ReplyDeleteசிப்காட்டில் நடந்த கொடூரம் என்ன உலகத்தில வாழறோம் என்று எரிச்சலடைய வைக்கிறது
நீ தானே என் பொன் வசந்தம் படம் வந்த போதே பார்த்து விட்டேன் எனது ஸ்வீட் காரம் காபியிலும் சில வரிகள் எழுதியிருக்கிறேன் இன்னும் கொஞ்சம் திரைகதையை செப்பனிட்டு இருந்தால் சிறப்பான ஒரு படம் தான்
6174 படிக்க வேண்டும் படிக்கிறேன்
ஒரு தொடர்கதையும் எழுதினீங்க அந்த ரகசியத்தை சொல்ல விரும்பலையோ நீங்க! ஒரு காலத்தில் நிறைய புத்தகங்கள் (நாவல்கள்) வாசித்து சேமித்தும் வைத்திருந்து காயலான் கடையில் போட்டுவிட்டேன்! இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்துள்ளேன்! சமிபத்தில் புத்தகத்திருவிழாவில் வாங்கிய மூன்று புத்தகங்கள், நந்திபுரத்து நாயகி, இளமைஎழுதும் கவிதை நீ, மீண்டும் ஜுனோ வாசித்து முடித்துள்ளேன். ஜுனோ நாவலின் பிரமிப்பு இன்னும் அகலவில்லை! சினிமாவுக்கு எனக்கும் ரொம்ப தூரம்! அதனால எஸ்கேப்!
ReplyDeleteகங்கை கொண்ட சோழபுரம் பார்க்கனும்ன்னு வெகுநாள் ஆசை சீனு!
ReplyDelete//தமிழகத்தின் டான் பிரவுன் என்று அவர் எழுதிய 6174 விமர்சனம்`பலரையும் வாங்கத் தூண்டியது..//
ReplyDeleteஎன்னது தமிழகத்தின் 'டான்' பிரவுனா? என்னைக்கி இருந்தாலும் பிலாசபி தாய்யா டான். மைன்ட் இட்.
ஹஹஹா..
Deleteநீதானே பொன் வசந்தம் எனக்கு அதிகம் பிடிக்கும் அது ஜீவா போல ஒரு பாத்திரத்தை நேரில் பார்த்த உணர்வு கூட!!ம்ம்
ReplyDelete6174 நாவல் இனித்தான் தேட வேண்டும் பாரிசில்!
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் ஜஸ்ட் ரிலாக்ஸ்.... அருமை.....
ReplyDeleteகங்கை கொண்ட சோழபுரம் க்ளிக் - மிக அருமை.....
உமா மகேஸ்வரி, நிர்பயா என தொடர்ந்து பல பெண்களை இப்படி பலாத்காரம் மூலம் இழந்து கொண்டிருக்கிறோம். என்று முடியும் இந்த அவலம்!
உமா மகேஸ்வரியின் இறப்பு, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் தான் இந்த மாதிரி ஒரு நிகழ்வா என்று அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது!!
ReplyDeleteகௌதம் மேனன் எங்கள் ஃப்ளாட்டுக்கு அடுத்துதான் இருக்கிறார்! அவர் எல்லா படங்களிலும் இடம் பிடித்து விடும் அவரது வீடு! ஆம் நாங்கள் அவரது ஷூட்டிங்க் இங்கு நடக்கும் போது பார்ர்கும் வாய்ப்பு கிடைக்கும்!-கீதா
நல்ல ரிலாக்ஸ் உமா தவிர.....
பகிர்வுக்கு நன்றி!
நான் முதலில் வேலை செய்த கம்பெனியில் இரவு தாமதமானால் அனைவருக்கும் கார் வசதி உண்டு. பெண் இருந்தால் அவரது மேனேஜர், அப்பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டுதான் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. வீடு என்றால் வீடு, தெரு முக்கு, காலனி கேட் என்றெல்லாம் இல்லை. மேனேஜர் வீடு கிழக்கிலிருந்தாலும் பெண்ணை மேற்கே சென்று விட்டுவிட்டு தான் போவதுண்டு.
ReplyDeleteஏதோ ஐ.டி துறையிலிருக்கும் பெண்களுக்குத்தான் ஆபத்து என்பது போல பாய்கின்றனர், அனைத்து துறையினருக்கும் இப்பிரச்சினை உண்டு. சிப்காட்டில் பத்து மணி ஊருறங்கும் நேரம் என்றால், ஒரு சில இடங்களில் அது ஆறு மணிக்கே ஆவதுண்டு. பெங்களூரில் அதிகாலை நான்கு மணிக்கு கூட்டமாக பெண்கள் தனியாக ஆளில்ல ரோட்டில் இறங்கி ஆட்டோ பிடித்து போகின்றனர். பார்க்க பயமாகத்தான் இருக்கின்றது.
6+ ஓசியில் படிக்க வேண்டிய புத்தகம் என்று மனதில் படுகின்றது. புத்தகம் வாங்குவது செலவு அல்ல, இன்வெஸ்ட்மெண்ட். செலவை விட இன்வெஸ்ட்மெண்டில் கவனம் தேவை :)