28 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் நான்கு


பத்திரிகையுலகம் எஸ்.ஏ.பி. சாவி போன்ற திறமையான ஆசிரியர்களின் இழப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்று கூறப்பட்டாலும் இன்றளவும் வேறுவேறு திறமைகளைக் கொண்டு நன்றாக இயங்கித்தான் வருகிறது. பதிவுலகிலும் அதேபோல் திறமையாக எழுதக்கூடிய பலர் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தாலும்கூட... ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் என்று பல எதிரிகளைச் சந்தித்த போதிலும்கூட... நன்முறையில் இயங்கித்தான் வருகிறது.

பதிவுலகில் இருப்பவர்கள் தனித்தனி குழுக்களை அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது சமீபகாலமாய். குழுக்களாக இயங்குவதில் தவறில்லை என்பதே என் கருத்து. ஒரே தலைப்பில் பலர் பதிவெழுதும் தொடர்பதிவு என்றொரு விஷயம் முன்பு இருந்தது. ஒருவர் எழுதி, நான்கு அல்லது ஐந்து பேருக்கு அழைப்பு விடுத்து, அந்த நான்கைந்து பேரும் பிறிதொரு நான்கைந்து பேருக்கு அழைப்பு விடுத்து எனச் சென்ற அந்த சங்கிலித் தொடர் குழுக்களையும் ஒருங்கிணைப்பதை செம்மையாகச் செய்தது. இப்போது யாராவது அழைப்பு விடுத்தாலும், “டைம் இல்ல இப்ப... அப்புறம் கன்டின்யூ பண்றேன்” என்று சொல்லிவிட்டு பின் அதை மறந்து தன் சொந்தப் பகிர்வுகளை மட்டுமே அனைவரும எழுதும் நிலை என்பதால் அந்த சங்கிலித் தொடர் அறுபட்டுப் போய்விட்டது. மாறாக ஆளாளுக்கு தங்கள் தளத்தில் ஏதாவது ஒரு (சிலசமயம் நல்ல, சிலசமயம் அபத்தமான) போட்டியை வைத்து அதில் வெல்பவர்களுக்கு ஒரு (சிறு) பரிசு வழங்கும் கலாசாரம் தலைதூக்கி இருக்கிறது.

ஆக... பதிவுலகம் எப்படி இருந்தது, எப்படி இருக்கும் என்று கவலைப்படுவதை விடுத்து... அவரவர் தனக்குத் தோன்றுவதை அவரவர் தளத்தில் எழுதிச் சென்றாலே போதும் என்கிற நிலைதான் தொடர்வதாக என் எண்ணம். ‘உங்கள் பார்வையில் பதிவுலகம்’ என்ற கேள்வியை ஸ்ரீனிவாசன் எழுப்பியதுமே (யாரது ஸ்ரீனிவாசன்னு கேக்கறீங்களா...? நம்ம ‘காதல் இளரவசன்’ ‘ந்ள்ளிரவு நாயகன்’ சீனு தாங்க...!) அனைவரும் முன்வந்து அவரவர் கோணத்தைச் சொல்வதன் மூலமே பதிவுலகம் இன்னும் உற்சாகம் குன்றாமல் இயங்கி வருகிறது என்பதை உணரமுடிகிறதுதானே...?

*****


இன்றைய நிலை :

தமிழ்ப் பதிவுலகம் ஒருபோதும் ஒற்றுமையாய் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அதன் விரிசல் என்னவோ அதிகமாகி கொண்டு வருவது போன்ற நிலையை சமீபத்திய அமைதி உணர்த்துகிறது. கடந்த வருடத்திலிருந்து கணக்கிட்டால் புதிய பதிவர்களை விரல் விட்டு எண்ணி சொல்லும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. பழைய பதிவர்களும் தொடர்ச்சியாக இயங்காமல் தளர்ந்து போனதால் இன்றைய பதிவுலகம் சற்று தடுமாற்றத்தில் இருப்பது வெளிச்சமாகிறது நமக்கு. இப்படி தொடர்வது வருங்காலத்திற்கு நல்லதல்ல!

விரும்பும் மாற்றங்கள்:

1) நண்பர்களுக்கு இணையம் பற்றியும், அதில் எப்படில்லாம் இயங்க முடியும் என்று விளக்கலாம். (எல்லோருக்கும் இது பொருந்தாது ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு மட்டுமே )

2) நமக்கு நாமே குரல் குடுக்கவில்லை எனில் வேறு எவர் நமக்காக குரல் கொடுப்பார். பதிவு செய்யப்பட்ட சங்கம் மிக அவசியமாய் தேவைப் படுகிறது!

3) சிறு சிறு சந்திப்புகள் நடத்தி, சக பதிவர்கள் பதிவில் செய்யும் தவறுகளை சுட்டி காட்டலாம், (அருமை, அட்டகாசம் போன்ற இன்னபிற மானங்கெட்ட கருத்துக்களை தவிர்ப்பது நலம்) மூத்தப் பதிவர் போன்ற போட்டி மனப்பான்மைகள் குறைய வாய்ப்பு இருக்கும்.

4) வலைத்தளம் தவிர்த்து ஏனைய சமூக தளங்களினால் தான் நசிவு ஏற்பட்டுள்ளது என்பது ஒரு காரணியாக இருந்தாலும் அது மட்டுமே தான் காரணி என்று சொல்ல முடியாது. இயங்கவேண்டும் என்று நினைத்து இயங்கினால் நிச்சயம் எழுச்சி பெறலாம்!

5) நம் கையில் கிடைத்திருக்கும் நல்ல ஒரு மீடியத்தை ஜல்லியடிக்க பயன்படுத்தாமல் வலுவாக, தரமாக பதிவு செய்தாலே போதும் புதியவர்கள் வருவர் என்பது என் நம்பிக்கை.

***** 


தமிழில் வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதுபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றது.பதிவர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து செல்கின்றமையும் வலைப்பூக்களில் தம் எழுத்தாற்றலை திறம்பட வெளிப்படுத்தி பத்திரிகைகளில் வேலைவாய்ப்பு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதும் தமிழ்ப் பதிவுலகின் வளர்ச்சியையே எடுத்தியம்பி நிற்கின்றன.அத்துடன் ஆண்டுதோறும் நடைபெறும் பதிவர் சந்திப்புகள் பதிவர்களிற்கிடையேயான நட்பு இணையத்தைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் தொடர்வதற்கு வழிவகுக்கின்றன.இத்தகைய பதிவர் சந்திப்புகள் பதிவர்கள் உற்சாகமாக பதிவுலகில் செயற்பட ஊகமருந்தாக அமைகின்றன.

பதிவுலகில் நான் அவதானித்த குறைபாடுகளில் முக்கியமான இரு விடயங்கள் தொடர்பில் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலாவது கருத்துரைகள் தொடர்பானது.வலைப்பதிவுகளில் இடுகையிடப்படும் கருத்துரைகளில் 99%மானவை அருமை,நன்று,சூப்பர் என்பவையாகவே அமைந்திருக்கின்றன.இதனைத் தாண்டி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கும் இயல்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.அடுத்ததாக அண்மைக்காலத்தில் என்னை அதிகம் கவலைப்படுத்திய விடயம் தமிழ்மண வாக்குகள் இடப்படும் முறை.கருத்துரைகளில் ”அருமை,த.ம 1” என்ற புதிய டிரென்ட் உருவாக்கப்பட்ட பின்பு தரமான இடுகைகள் அதிக வாக்குகளைப் பெறுகின்றனவோ இல்லையோ மேற்கூறிய அமைப்பில் கருத்துரை இடுவோரின் இடுகைகள் அத்தனையும் அதிக வாக்குகளை அள்ளுகின்றன.சில பதிவுகளை வாசிக்கும் போது இதற்கெல்லாம் போய் எட்டு ஒன்பது பேர் வாக்களித்திருக்கிறார்களே என்று எண்ணத்தோன்றும்.அதே நேரம் பிரபலமாகாத ஒரு பதிவர் எழுதிய அருமையான பதிவுகள் கவனிப்பாரற்று கிடக்கும்.பதிவின் தரத்தைப் பற்றிக் கவலைப்படாது நபருக்காக வாக்களிக்கும் தன்மை பதிவுலகிற்கோர் சாபக்கேடு.இந்த நிலை விரைவில் மாறவேண்டும் எனபதே என் அவா. 


பதிவுலகத்தின் பலமே பலவீனமாகிக் கிடக்கிறது. நட்பு வட்டாரமே பலம், ஆனால் அதுவே புதிய வாசகர்களை அன்னியப்படுத்தும். ஓரளவு அனுபவமும், வாசகர் வட்டமும் உள்ள பதிவர்கள் நட்பு ரீதியிலான பாராட்டு கமெண்ட்டுகள் கொடுப்பது, வாங்குவதை, ஓட்டளிப்புகளை தவிர்க்கலாம்.


பேஸ்புக்கில் நன்றாக எழுதுபவர்களிடம் வலைப்பூக்களின் முக்கியத்துவத்தை கூற வேண்டும். பேஸ்புக்கில் ஒரு விஷயத்தை பகிர்ந்து விட்டு சில மாதங்கள் கழித்து அதை நாம் தேடினாலும், மற்றவர்கள் தேடினாலும் எளிதில் கிடைக்காது, ஆனால் வலைப்பூக்களில் எப்போது வேண்டுமானாலும் தேடி உடனடியாக பார்க்க, பகிர முடியும். அதே போல பேஸ்புக்கில் நாம் பகிர்வது பெரும்பாலும் நம் நண்பர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு மட்டுமே சென்று சேரும். பயனுள்ள பதிவுகளை வலைப்பூக்களில் எழுதுவதன் மூலம் இணையத்தில் எல்லோருக்கும் அது சென்று சேரும், அத்தோடு கூகுள், பிங் போன்ற தேடுபொறிகளில் தேடும் போதும் கிடைக்கும். இதற்கு நாம் இலவசமாக பயன்படுத்தும் பிளாக்கர் வசதியை அவர்களை பயன்படுத்த சொல்லலாம்.

நாளைய பதிவில் 

ஜோதிஜி 
வெங்கட்நாகராஜ் 
தமிழ்வாசி பிரகாஸ் 
இலக்கியசெம்மல் 
தனிமரம் 

இன்றைய வலைசரத்தில் 

  

12 comments:

  1. நாந்தான் மொத ஆளா, தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. ஃபேஸ்புக்கின் பலவீனமாக பிரபுகிருஷ்ணா சொல்வது மிகச் சரி எனபதை சமீபத்தில் உணர்ந்தேன். அவரும் ப.கு.ரா.அண்ணனும் சொன்ன கருத்துக்ள் நன்று.

    ReplyDelete
  3. முகப்புத்தகத்தில் நாம் போடுகிற ஸ்டேட்டஸே சில சமயங்களில் கிடைப்பதில்லை... :)

    நல்ல கருத்துகள்.

    ReplyDelete
  4. அரசன், பிரபு கிருஷ்ணா, தினேஷ்சந்த், ப.ரா எல்லாருடைய கருத்துகளிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது..

    ReplyDelete
  5. புதியவர்கள் நட்பு வட்டம் இருப்பதை அறிந்து கொண்டாலோ தெரிந்து கொண்டாலோ அந்த தளத்தில் கமெண்ட் போட்டு அவர்களோடு இணைய ஏன் தயங்கனும் ? நண்பர்கள் தாமாக வரலயின்னா நாமாக தேடி செல்வதில் என்ன தப்பு. பேஸ் புக்கில் அப்படித் தானே நட்பு அழைப்பு கொடுக்கப் படுகிறது சேர்ந்துக்கிறாங்க. அது போலத்தான் வலையும். நட்பு வட்டம் தான் உங்கள் எழுத்தை செம்மைப் படுத்தும் வலையில் தொடர்ந்து இயங்க ஆர்வத்தை எப்போதும் கொடுக்கும். எல்லா சமயங்களிலும் நட்பு தானா அமையாது நாம் தேடிச் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  6. // அந்த சங்கிலித் தொடர் அறுபட்டுப் போய்விட்டது // வாத்தியார் அவர்களே - நீங்கள் ஒரு தொடர்பதிவு அழைத்த பிறகு (கணினியில் முதல் அனுபவம்), எந்தப் பதிவு எழுதினாலும் அந்த ஞாபகம் இருக்கும்... சிறிது வித்தியாசமாக பாடல்களுடன் எழுதத்தான் தாமதம் ஆனதே தவிர, தப்பிக்க நினைக்கவில்லை... ஆனால் அதே "முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே" பதிவில் யாரையும் சிக்க வைக்க விரும்பவில்லை... முதலில் தகவல் அனுப்பினேன்... பிறகு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதி செய்தவுடன் தான் மற்றுமொரு தொடர் பதிவை அந்தப் பதிவில் தெரிவித்தேன்... அதில் சிலர் தொடரவும் இல்லை... அவர்களின் சூழ்நிலை மாறி இருக்கலாம்... அவ்வளவே... மற்றபடி குழு எல்லாம் அவரவர் மனதில் உள்ளே குழுவைப் பொறுத்து...!

    // நட்பு வட்டாரமே பலம், ஆனால் அதுவே புதிய வாசகர்களை அன்னியப்படுத்தும்.. // ராமசாமி அவர்களின் கேள்விற்கு....

    /// புதியவர்கள் நட்பு வட்டம் இருப்பதை அறிந்து கொண்டாலோ தெரிந்து கொண்டாலோ அந்த தளத்தில் கமெண்ட் போட்டு அவர்களோடு இணைய ஏன் தயங்கனும் ? ///

    கலாகுமரன் அவர்களின் "நாம் தேடிச் செல்ல வேண்டும்" பதிலும் சரி... அட கருத்துரையே இட வேண்டாம்... தளத்தில் உள்ள followers, facebook fan page, email subscription, g+ followers, - இவைகளில் இணைத்தாலே போதுமே... அதுவும் புதியவர்களுக்கு(ம்) ஊக்கம் தானே...?

    பிரபுகிருஷ்ணா அவர்கள் சொன்னது மிகவும் சரி...

    தினேஷ்சந்த் அவர்களுக்கு, "நமது திரட்டி" என்ற இனி எழுதப் போகும் பதிவில் (எழுதும் வரை இணைய தொடர்பு இருக்க வேண்டும்... எனது சூழ்நிலை - அது வேறு "கதை") உங்களுக்கான பதில்கள் இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. டியர் டி.டி. தொடர்பதிவு பற்றி எழுதும் போது நான் தனிப்பட்டு எவரையும் குறிப்பிடவில்லை. பல தொடர்கள் பாதியில் நின்றதைக் கவனித்ததன் விளைவாப பொதுவாகச் சொன்னதுதான் அது.

      Delete
  7. பதிவர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை தான்.

    நிறைய பேர் முகப்புத்தகத்தில் தான் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். நாலு வரி எழுதி போட்டால் போதுமென்று..

    ReplyDelete
  8. (அருமை, அட்டகாசம் போன்ற இன்னபிற மானங்கெட்ட கருத்துக்களை தவிர்ப்பது நலம்)//

    வன்மையாக கண்டிக்கின்றேன் அரசா ...! இதிலென்ன மானங்கெட்டு இருக்கு ...?

    ReplyDelete
    Replies
    1. அடி த் தூளு, பின்னீட்டீங்க... கிழி...கிழி....கிழி. இப்படி எல்லாம் இருக்கனுமோ ஜீவன்

      Delete
  9. சிறப்பான கருத்துக்கள்! அனைத்தும் ஏற்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது! நன்றி!

    ReplyDelete
  10. //பேஸ்புக்கில் நன்றாக எழுதுபவர்களிடம் வலைப்பூக்களின் முக்கியத்துவத்தை கூற வேண்டும். பேஸ்புக்கில் ஒரு விஷயத்தை பகிர்ந்து விட்டு சில மாதங்கள் கழித்து அதை நாம் தேடினாலும், மற்றவர்கள் தேடினாலும் எளிதில் கிடைக்காது, //

    முகநூல்,துவித்தர் இவற்றில் பதிவிடும் அனைத்துமே 90 நாட்கள் வரையிலே பொதுவாக இருக்கும் பின்னர் அவற்றின் சர்வர்களில் பேக் அப்பில் மட்டுமே இருக்கும், பொதுவில் அழிக்கப்பட்டு விடும், எனவே தேடினாலும் கிடைக்காது.

    இதில் கவனிக்க வேன்டியது என்னவெனில் ,துவித்தர் 90 நாள் அல்லது 3200 துவித்துகள் மட்டுமே சேகரிக்கும். முகநூலுக்கு ஃபைல் சைஸ் கணக்கு அல்லது 90 நாள் என இருக்கு அதற்கு மேல் server data base ல் இருக்கும் ,நமக்கு தேடினால் கிடைக்காது. செர்ஷ் ஆப்ஷன் "API" இல் இல்லாமல் உள்ளது அல்லது சரியாக சர்ச் ஆப்ஷன் வைக்கவில்லையாம்.

    இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் செர்வரை வேகமா இயங்க வைக்கிறார்கள்.

    அப்படியே தேடிக்கிடைப்பதெல்லாம் , "கூகிள் கேஷ்" பக்கங்களே.

    துவித்தர் ,முகநூல் ,பக்கங்களில் நாம் வெளியிட்டதை அவ்வப்போது ஆர்க்கைவ்ஸ் ஆக டவுன் லோட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    துவித்தர்களை சேகரிக்க தர்ட் பார்ட்டி கிளையண்ட்ஸ் இருக்கு,அதில் பதிவு செய்துக்கொண்டால் எல்லாம் சேகரிக்கும்.

    பொதுவாக இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில் முகநூலோ , துவித்தரோ , செர்ச் வசதியை அதன் செர்வர் டேட்டாபேசில் வைத்திருக்கவில்லை தேடினால் காட்டாது.

    # ஒரு பாடகியின்,சைபர் கிரைம்" விவாகரத்தின் போது பல விவரங்களை தேடினேன் ,அப்போ எனக்கு கிடைச்ச அனுபவத்த வச்சு சொல்கிறேன் ,இப்போ முகநூல் ,துவித்தரில் பழைய தகவல்கள் எளிதில் கிடைக்குதானு தெரியலை!
    -----------------------------

    பிலாக்கரோ , வேர்ட் பிரஸ்ஸோ , எழுதி 15 நாட்கள் கழித்து அழித்தால் வே பேக் மெஷினில் கிடைத்து விடும்.

    கூகிள் கேஷ் பக்கங்கள் ,அந்த பதிவு இண்டெக்ஸ் ஆனால் மட்டுமே சேகரித்திருக்கும்.இன்டெக்ஸ் செய்ய குறைந்த பட்சம் 24 மணி முதல் ஒருவாரம் ஆகும். சமயத்தில் கூகிள் இன்டெக்ஸ் செய்யாமல் விட்டுவிடும் அவ்வ்!

    எனவே பிலாக்கர் அல்லது வேர்ட் பிரசோ மூடிக்கொண்டு போகும் வரையில் இருக்கும் ,அப்படியே போனாலும் தகவல் "கூகிள் கேஷ்,வே பேக் மெஷின் " என இருக்கும். ஆனால் முகநூல் அல்லது துவித்தரில் இருக்காது ஏன் எனில் அவையே குறைவான நாட்களூக்கு தான் சேமிக்கின்றன.
    -----------------------

    ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மொக்கையாக டெம்ப்ளேட்டாகத்தான் இப்பதிவில் கருத்தினை தெரிவித்திருக்கிறார்கள், ஒரு வேளை பதிவுக்கு கருத்து கேட்டதுலாம் "நட்பு வட்டம்" என்பதலா?

    ஆனால் அவங்களே நட்பு வட்டம் என பின்னூட்டம் போடக்கூடாது என சொல்லி இருப்பது "முரண்நகை" :-))

    ReplyDelete