29 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஐந்து


சில நினைவுகள் மட்டுமே நம் சாவின் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மோடு இருக்கும். தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களால் அவர்களின் கடைசி காலம் வரைக்கும் தமிழ் பதிவுலகம் மறக்க முடியாதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தைப் போல இங்கும் இரண்டு பிரிவினர்கள் உண்டு. அவர்களால் மட்டுமே நாள்தோறும் பதிவுலகம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கை என்பது ரசித்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று கொண்டாட்ட மனோநிலை கொண்டவர்களாலும், ரசிப்பதோடு சிந்திக்கவும் கூடியதாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்பவர்களாலும் நாள்தோறும் பதிவுலகத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே இருக்கின்றது. 

பதிவுலகத்தின் பலமென்பது எந்த துறையென்றாலும் பட்டவர்த்தனமாக சிதறு தேங்காய் போல உடைத்து தேவைப்படுபவர்களுக்கு பொறுக்க்கிக் கொள் என்று சொல்லலாம். சமூகத்தில் கணவான் வேடம் போட்டுக் கொண்டிருப்பவர்களை கலங்கடிக்க வைக்க முடியும். அதேபோல கடைசி வரைக்கும் வாசிப்பவனை சிந்திக்கத் தெரியாத வெறும் விடலையாக, பொறுக்கியாகவே வைத்து விடவும் முடியும். 

தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தி வைப்பதில் காட்டிய தேக்க நிலையினால் 2000 ஆண்டு சரித்திரத்தில் பாதி பக்கங்கள் மட்டுமே இன்று வரையிலும் உள்ளது. மீதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற நிலையில் தான் உள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பதிவுலகம் அறிமுகமான பிறகு எது தேவை எது தேவையில்லை என்பதையும் தாண்டி இங்கே அனைத்தும் ஆவணமாக மாறிக் கொண்டிருக்கின்றது. காலம் தீர்மானிக்கும். தேவையான விசயங்கள் தேவையான நபர்களுக்கு காலம் கடந்தும் அவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இங்கே உள்ள நவீன வளர்ச்சி நாள்தோறும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

உங்களால் தினந்தோறும் அரை மணி நேரம் ஒதுக்க முடியும் என்ற சூழ்நிலையில் உங்களைச் சுற்றியுள்ள, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவத்தை எழுதத் தொடங்குகள். அது உங்களுக்குப் பின்னால் இணையத்தில் புழங்கப் போகின்றவர்களின் பார்வையிலும் படப் போகின்றது என்ற அக்கறையுடன் எழுதிப் பழகுங்கள். 

*****


தமிழ் பதிவுலகம் இன்று:

இளைஞர்களும் முதியவர்களும் வயது வித்தியாசமில்லாது போட்டி போட்டுக்கொண்டு தமிழ் பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை எத்தனை பதிவர்கள் தங்களது அனுபவங்களை, படைப்புகளை வலைப்பூ எனும் சிறப்பான ஒரு ஊடகத்தின் வாயிலாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல் தமிழகத்தினை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு இந்த வலைப்பூ ஒரு வரப்பிரசாதம். இன்னமும் தமிழை மறக்காது இருக்கவும் பதிவுலகம் உதவி செய்கிறது என்று கூடச் சொல்லுவேன்! சினிமா, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, அரசியல், நகைச்சுவை என இங்கே இல்லாத விஷயமே இல்லை.

புதியதாய் பல நட்பு வட்டங்களை உருவாக்கும் இந்த தளத்தில் சில இடையூறுகளும் இல்லாமல் இல்லை! பதிவுலகில் சில சமயங்களில் தனி நபர் தாக்குதல்களும், தேவையற்ற விவாதங்களும் நடப்பதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தம் தான். மற்றவரின் பதிவுகளை படிக்கும் அனைவருக்கும் கருத்துச் சொல்லும் உரிமை இருந்தாலும், அந்த கருத்து, பதிவினை எழுதியவரின் மனதை புண்படுத்தாது இருந்தால் நலம்.

*****


"சமூக இணையதளங்கள் இன்று இணைய மக்களிடையே பரவலாக பிரபலமடைந்து வருகிற சமயத்திலும், வலைப்பூக்கள் புதிது புதிதாய் பூத்துக் கொண்டுதான் உள்ளது. நமது எண்ணங்களை, சுற்றி நடக்கும் நிகழ்ச்சி மற்றும் சம்பவங்களை எழுத்துக்களாக ஆவணப்படுத்த வலைப்பூக்கள் பெருமளவு பங்கு வகிக்கிறது. அவற்றை மற்றவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் கருவியாகவும், அவர்களின் கருத்துகளை அறியவும், நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கவும், பலதரப்பட்ட விமர்சனங்களை சந்திக்கவும் வலைப்பூக்கள் உள்ளன.....

வலைப்பூவில் பதிவுகள் எழுத நம்மில் பலரும் அவர்களுக்குள்ளேயே பல வரைமுறைகள் வைத்திருப்பதாலும், நேரமின்மை காரணமாகவும் பதிவுகள் வெளியாவது குறைகிறது. தமிழ் வலைப்பூக்களுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த தள ட்ராபிக் இன்று இல்லை. பதிவர்கள் பதிவெழுதுவதை குறைத்ததால் இந்நிலை. மேலும் வாசிப்பவர்களும் குறைந்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம், தமிழ் வலைபூக்களை பலரிடமும் கொண்டு செல்ல உரிய திரட்டிகள் இல்லையென்பதும் மிகப்பெரும் குறை....

எழுதி வெளியிட்ட பதிவுகளை பலரிடமும் கொண்டு செல்ல நிறைய திரட்டிகளிலும், சமூக இணைய தளங்களிலும் இணைக்க வேண்டியிருப்பதாலும் சில சமயங்களில் எரிச்சலடைய செய்கிறது. தமிழ்மனம்ம் தமிழ்வெளி திரட்டிகள் போல ஒரே சொடுக்கில் பதிவை இணைக்கும் வசதி மற்ற திரட்டிகளிலும் இருந்தால், பதிவுகள் நிறைய இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆங்கில வலைப்பூக்களுக்கு தருகிற கூகுளின் பல செயல்பாடுகள் (உம்: ஆட்சென்ஸ்) தமிழுக்கும் அதிகாரப்பூர்வமாக கிடைத்தால் வலைப்பூக்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை....

*****


பதிவுலகம் இன்று ஏதோ ஹிட்சு படம் கொடுக்காத ஹீரோ போல இருக்கின்றது. முன்னம் பல ஜம்பாவான்கள் இயங்கி உலகம் பதிவுலம் .இதில் மதவாதம் /மற்றும் திரட்டிகளின் ஹிட்சு /தர/செயல்பாடுகள் காரணமாக இன்று பதிவுலகம் ஒரு ந்ல்லாட்சி கிடைக்கும் என்று ஏங்கும் சாமானிய் ம்க்க்ள் போல் நல்ல் பகிர்வுகள் வரும் என்று எதிர்பார்க்கும் வாசகர்கள் பல்ர்! ஆனால் இன்று சினிமா புதுப்பட் வெளியீடு தினத்தில் மட்டும் பல போட்டிப்ப்கிர்வு சூப்ப்ர் மொக்கை என்று ஆனால் அர்சியல் /விளையாட்டு /சமூக/கலைக்கலாச்சார் பகிர்வை ஏனோ தேடிப்பெறுவது என்பது அவசர,உலகில் பதிவுலகில் ஹிட்சு இல்லை இன்று ம்ற்றைய் மொழியுட்ன் ஒப்பீடு செய்யும் போது! பிரெஞ்சு ஆங்கிலம் சிங்கள்ம் பேசும் ப்திவாள்ர்க்ளிட்ம் நாம் இன்னும் சினிமாவில் ஹீரோவைதேடும் விட்டில் பூச்சிகளா இந்த நிலை விரைவில் மாறும் என்ற் நம்பிக்கையில்!தனிமரம் !!பதிவுலகில் கற்றதன் அனுபவம் இது! 

*****


ஆறு வருடங்களாகிவிட்டன பதிவுகள் ஏற்ற ஆரம்பித்து. முந்தை, அதாவது 2008 லிருந்து 2010 வரையான காலம் பதிவுலகின் வசந்த காலம் என்பேன்.

அரசியல், சினிமா, இலக்கியம், போட்டிகள் எனக் கலந்து கட்டி மொத்தப் பதிவுலகமும் இயங்கிய காலமது. நேர் நேர் தேமா வகை நிலைப்பாடுகளைக் கொண்டவர்களும், வெள்ளைக் காக்காய் ரிவர்ஸ்ஸில் பறக்குமென்பவர்களும் இயங்கிய காலகட்டம். டோண்டுவுக்கு ஒரு ரசிகாஸ் பட்டாளமெனில், வாலுக்கும், ராசனுக்கும் ஒரு பட்டாளம். திரட்டிகளில் பதிவுகளைத் தேடித்தேடிப் படித்த காலம். வடைகள் வாங்கக் காத்திருந்த காலம். நேரந்தவறாமல் ஒரு நாளில் ஆறு பதிவுகள் போடும், பிட்டுப் படங்களுக்கெல்லாம் மெய்வருத்தி சிபி எழுதிய காலம். 

சமீப காலங்களில், சினிமா பதிவுகள் தவிர, ஏனைய தளப் பதிவுகளின் எண்ணிக்கைகள் குறைந்துவிட்டன. எனினும், வலைப்பதிவர்கள் சந்திப்பு, போட்டிகள், பதிவர்கள் மேலுயர்ந்து புத்தகங்கள் எழுதுதல், சினிமாத் துறைகளில் பங்காற்றுதல், பத்திரிகை துறை என மனமுவக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியே வருகின்றன. கேபிள், வா.மணிகண்டன் போன்றோர் உதாரணங்கள்.

பிடிஎப் புத்தகங்கள் வெளியிட்டுக் கலக்கி வருகிறார்கள் பதிவர்கள் (செங்கோவி, வசந்த், ஜோதிஜி போன்றோர்). 

தேட்டரீதியில், அன்றைய பதிவுலகத்தின் காட்டம் இன்றைய பதிவுலகில் இல்லை. முன்பெல்லாம், நம் பதிவுகளை பகிர உபயோகிக்கப்பட்ட மற்ற சமூக வலைத்தளங்கள் இப்போது அத்தகைய கருத்துகளையும், படங்களையும் தாங்கிச்செல்கின்றன. 

பதிவுகளின் எண்ணிக்கை நாளும் குறைந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில், ஏனைய சமூக வலைதளங்களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. இதைத் தலைமுறை மாற்றமேன்றே கொள்ளலாம்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் தற்போதைய பதிவுலகம்.

நாளைய பதிவில் 

என்.சொக்கன் 
எங்கள்பிளாக் ஸ்ரீராம்  
ரஞ்சனி நாராயணன் 
 ஸ்கூல்பையன்

இன்றைய வலைசரத்தில்

வழிகாட்டிகள்

8 comments:

  1. சில நினைவுகள் மட்டுமே நம் சாவின் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மோடு இருக்கும். தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களால் அவர்களின் கடைசி காலம் வரைக்கும் தமிழ் பதிவுலகம் மறக்க முடியாதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். !!அருமையான கருத்து!

    ReplyDelete
  2. ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் தங்கள் பார்வையில் வழங்கியிருக்கும் கருத்துக்கள் நன்றாக இருக்கின்றன. அனைவரின் கருத்தும் முடிந்ததும் “நாட்டாம.. தீர்ப்பச் சொல்லு...”ங்கற மாதிரி ஒரு தொகுப்புரை நீங்க தருவீங்களா சீனு?

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

      Delete
  3. திரட்டிகளே ஒரு வருடமோ, இரு வருடமோ தான் உள்ளன... இதுவரை 30 திரட்டிகள் "காணாமல் போய் உள்ளன..." இருக்கும் திரட்டிகளும் பதிவை இணைக்க, தமிழ்வாசி சொன்னது போல் இருந்தால் எளிதாக இருக்கும்... என்றாவது ஒருநாள் கண்டிப்பாக புதியவர்கள் பார்வையில் படும் என ஜோதிஜி அவர்களின் கருத்தும், மனதை புண்படுத்தாத பின்னோட்டம், கழுதை தேய்ந்து கட்டெறும்பான ஆதங்கமும், விரைவில் மாறும் என்ற நம்பிக்கையும் - என அவரவர் பார்வையில் கருத்துகள் சரி...

    ReplyDelete
  4. என்னாது முப்பது திரட்டியா ?கிர்ர்ர்ர்.....விடலையாகவும் வைத்திருக்க முடியும் என்ற கருத்தை சுலபமாக கட்ந்து செல்ல இயலாது .மிக கூர்மையான கருத்து அது.குமுதம் போன்று ஆவி போன்ற வாரப்பத்திரிக்கைகள் இயக்கத்தையும்,விடலையையும் கொடுக்கும் அளவுக்கு எதிர்க்க்கேள்விகளை எழுப்ப தூண்டுவது மிக குறைவே ...அதே வேலையை பதிவரும் செய்யணுமா என்ன? பதிவர்கள் ஒரு விடயத்தை பொதுவாக ஊடகம் அணுகுவதை போல அல்லாமல் தம் தம் பார்வையில் அணுகுவர் என்பதுதான் பலம் ....அதை தவிர்த்து விடலை பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பயனில்லை .விடலைப்பேச்சுகளும் வாழ்வில் ஒரு அங்கம்தான் ஆனால் அதே பேச்சாக இருப்பதில் பயனில்லை ...

    ReplyDelete
    Replies
    1. இரக்கத்தை என்பது இயக்கத்தை என தவறாக டைப்பாகி விட்டது ...

      Delete
  5. ஜோதிஜியின் கருத்துக்கள் அருமை! உங்களை பாதித்தவைகளை எழுதுங்கள்! என்ற ஆலோசனை வறவேற்கத்தக்கது! திரட்டிகள் இல்லாத நிலையும் அதன் கட்டுப்பாடுகள் குறித்த தமிழ்வாசியின் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.வெங்கட் நாகராஜின் கருத்து பூத்தூவி செல்கையில் நேசன் ஹிட்ஸ் இல்லாத ஹீரோ! என்ற புதிய பரிமாணத்தை தர வெளங்காதவனின் கருத்துக்கள் ஆதங்கத்தை உணர்த்துகின்றன! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. சீனுவிடம் எழுத்துப்பிழையை சரி பாருங்கள் என்று சொன்னால் இப்படியா தண்டிப்பது.ஹீ

    ReplyDelete