26 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் மூன்று


எழுத்து என்பதை பத்திரிக்கைகள், புத்தகம் என்பதை கடந்து வாசகனையும் எழுத்தாளனாக மாற்றியது இணையம்தான். யாஹூ குழுமத்தில் பிறந்த வாசக எழுத்தாளன் கூகுள் தந்த பதிவுலகம் எனும் அறிய வாய்ப்பை மிகச்சரியாக பயண்படுத்திய காலம் ஒன்று உண்டு. பதிவுலகம் என்பது தான் பார்க்கும், தன்னை பாதிக்கும் அல்லது வியக்க வைக்கும் நிகழ்வுகளை எழுதுவதற்கும் மேலும் மாற்றுக் கருத்துகளின் விவாத களமாக இருந்த காலம் ஒரு பதிவுலக பொற்காலம். அக்காலத்தில்தான் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுக்கு இணையாக வாசகர்களும் எழுதிய காலம். முக்கியமான கட்டுரைகள், கதைகள், தொழில்நுட்ப உதவிகள் என எல்லோரிடமும் எல்லாவற்றையும் கொண்டு சேர்க்க துவங்கிய காலம். அதே நேரத்தில் அதற்கு சரி சமமாக நகைச்சுவை தளங்களும், மிகுதியாக கவிதை தளங்களும் கூட போட்டி போட்டன.

இந்த காலகட்டத்தில்தான் கருத்தியல் ரீதியாக நிறைய குழுக்கள் உருவாகி அதன் அடிப்படையில் ஒரு உலகளாவிய நட்பு வட்டங்கள் தோன்றின. இக்காலத்தில்தான் சமூகத்திற்கு பெருமளவில் எழுத்து ரீதியாக தொழில்நுட்ப ரகசியங்களை தமிழுக்கு கொடுத்தனர். மேலும் பதிவர் ஒருவரின் பிரச்சனைகளை முகம் தெரியாத வாசகன் வரைக்கும் ஒன்று சேர்ந்து தீர்த்து வைத்தனர். பெரிய அளவில் நிதி உதவிகள் செய்யப்பட்டன. கருத்து ரீதியாக எதிர் அணியில் இருந்தாலும் நேரில் சந்திக்கும்போது நீண்ட காலம் பழகியவர்களைப் போல மனம் விட்டு பேசிக்கொண்ட நிறைய நண்பர்களை நான் அறிவேன். 

ஆனால் முகநூலும், ட்விட்டரும் வந்தபின் மிகுதியானவர்கள் அதற்கு தாவி விட்டனர். 2006 ஆம் ஆண்டு முகநூல் வருவதற்கு முன்பாக ஆர்குட் ஒன்றுதான் சமூக வலைத்தளமாக இருந்தது, முகநூல் கூட ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வந்த பிறகுதான் சரேலென எல்லோர் கைகளுக்கு வந்தது.

தற்கால பதிவுலகம் என்பது மிகுதியாக வாசிப்பு அனுபவங்கள் இல்லாத நபர்களால் எழுதப்படுவதால் கிட்டதட்ட பதிவுலகம் ஒரு குறிப்பிட்ட குழுவால் அது சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமே படிப்பது, ஓட்டு போடுவது, கருத்துக்கள் சொல்வது என்று மாறிவிட்டது. இப்போதும் சினிமா விமர்சனம் எழுதும் ஒரு சிலரின் பதிவுகள் மட்டுமே அதிகம் பேரை சென்றடைகிறது.

ஆனாலும் எழுத்தை தொடர்ந்து நேசிக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ”நிசப்தம்” வா.மணிகண்டன், ”வாரியர்” தேவா, சிறுகதை போட்டிகள் நடத்தும் :வெட்டி பிளாக்கர்ஸ்” சவால் போட்டிகளை நடத்தும் “டெரர் கும்மி”  மற்றும் சமீபத்தில் வெகு சிறப்பாக இயங்கும் “வாசகர் கூடம்”  போன்ற அனைத்தும் பாராட்டுதலுக்கு உரியவை.

பதிவுலகம் இன்னும் சிறப்பாக மாற தமிழ்மணம் போல் அல்லாது ஆங்கிலத்தில் மிக சிறப்பாக இயங்கும் தளமான இண்டி பிளாக்கர் தளம் போல ஒரு சிறப்பான திரட்டியும், புதிதாக எழுத வருகிறவர்களுக்கான ஒரு வழிகாட்டுதலும், அங்கீகாரமும் தேவை. வியாபாரம், பங்கு சந்தை, விவசாயம், மகளிர் மேம்பாடு, உணவு, தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு இப்படி பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் துறை சார்ந்த பதிவுகளை எழுத முன்வரவேண்டும் அல்லது அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து எழுத ஊக்குவிக்க வேண்டும்.


*****


பத்திரிகை உலகத்தை தாண்டி பதிவுலகம் விசாலமானது விசித்திரமானது. குறிப்பிட்ட வாசக வட்டத்திற்க்குள்ளேயே சுற்றி வரச்செய்யும் சூழலை உணர முடிகிறது. உறவுகளுக்குள் மொய் விருந்து போல இன்று நாம் உன் பதிவுக்கு வந்தால் தான் நாளை என் பதிவுக்கு வருவார்கள் என்ற நிலை மாற வேண்டும் . நல்ல தரமான கருத்து, சிந்தனை, சொல்லாடல் எங்கிருந்தாலும் எழுதுவது யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். புதியவர் வருகையும் புதிய தேடலும் நம் பார்வையில் இருக்கும் வரை பதிவுகலகம் வளரும் வாழும்.
தென்றல் சசிகலா.

*****



பாஸ்ட் ரைட் கலாசாரம் 

முன்பை பார்க்கிலும் மிக அதிகமான விடயங்கள் பதிய படுகின்றன. விமர்சனம் செய்ய படுகின்றன. விவாதிக்க படுகின்றன. ஆலோசனைகள் கூறபடுகின்றன. ஆனால் அது எங்கே நிகழ்கிறது என்று ஆராயும் போது தான் பிளாக்கரை, வேர்ட் பிரஸ்ஸினை வீழ்த்தி பயங்கரமாக பேஸ்புக்கும், டுவிட்டரும் வளர்ந்து வருவது தெரிய வரும்..

பேஸ்புக் என்பது பலரை மிக இலகுவில் சென்றடையும் மீடியா. உடனடி ரிசல்ட் கிடைத்து விடும். பதிவுலகில் சிற்றரசாக இருந்த பலர் பேஸ்புக்கில் தற்போது ராஜாங்கம் நடத்தி வருவதும் அதனால் தான். ஆனால் பதிவுகளுக்கு நீண்ட ஆயுள் இருப்பதில்லை. ஏன் வாரபோக்கில் எழுதியவர் டைம்லைனுக்கே லோட் அடிக்கும். இருந்தாலும் பேஸ்புக்கின் போதை அலாதியானது தான். 

இதை இவ்வண்ணம் ஒப்பிட்டு பார்க்கலாம் என்று நினைக்கிறேன். எப்படி அச்சு ஊடகமும், இணைய எழுத்தும் மோதுகையில் அச்சு ஊடகம் பல வகையில் சுக அனுபவமோ அதே போலவே தான் பாஸ்ட் ரைட் கலாசாரத்தை பதிவுலகோடு ஒப்பிடுகையில் பதிவுலகம் சுக அனுபம் .. 

பதிவுலகு அட்டையில்லா, திறபட்ட டைரி போலானது. பேஸ்புக் எப்படி எமது கட்டுப்பாட்டிற்குள் இருக்காதோ அவ்வளவு தூரம் பிளாக் எமது கட்டுக்குள் இருக்கும். நாலு பேர் தான் வாசித்து இருப்பினும் எமது 2 வருட முற்பட்ட சில எழுத்துக்களை பார்க்கும் போது எமது நினைவுகளின் ஆனந்தம் அலாதியானது. ஏன் இன்று சில பிளாக் பக்கங்களின் பழைய பதிவுகளின் தேதி இலக்கம் கூட பதிவின் தாக்கத்தில் ஞாபகம் வைத்து இருக்கிறேன். குறிப்பிட்டவரின் பிளாகிற்குள் சென்று குறைந்த கிளிக்கிற்குள்ளாய் நான் நினைத்ததை அடைந்து விடுகிறேன். 

இன்னும் தெளிவாக சொல்ல போனால் சில தனிநபர் பிளாக்கிற்கு இருக்கும் கட்ஸ், கெத்து எந்த ஒரு தனி நபர் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்திற்கும் இது வரை கிடையாது. வருட கால இடைவெளிகளில் அவை மறைந்து போய் கிடக்கும் அல்லது மறந்து போய் கிடக்கும்
*****

ப்ளாக்ல இப்போலாம் பலரும் சினிமா & சினிமா விமர்சனம் தான் எழுதிட்டு இருக்காங்க...பொதுவான விசயங்களை எழுதுபவர்களும் சரி, வாசிப்பவர்களும் சரி குறைந்து கொண்டே வருகிறார்கள். இதனாலேயே பொதுவா எழுதுற நெறையா பேரு இப்ப எழுதுறதே இல்ல..

சினிமாவைத் தாண்டி எல்லோரையும் எழுத வைக்க ஏதாவது செய்ய வேண்டும்.. அதற்கென்று ஒரு சங்க்ம் ஆரம்பித்து இதைப்பண்ணலாம்.. அதாவது மும்பையில் குறிப்பிட்ட சாலைகளில் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.. அது போல் நாமும், குறிப்பிட்ட மாதங்களில்/நாட்களில் ஒரு சில விசயங்களை எழுத வேண்டாம் என அந்த சங்கம் மூலம் சொல்லலாம்..

சினிமா விமர்சனம் எழுதுபவர்களிலும் பலருக்கும் விமர்சனம் என்றாலே என்னவென்று தெரியவில்லை.. கதையை முழுதாக எழுதுகிறார்கள்.. அப்புறம், படத்தின் பாடல், இசை, சண்டைக்காட்சி, கேமரா போன்றவற்றை குறிப்பிட்டு முடித்துவிட்டு அதை விமர்சனம் என்கிறார்கள். இதையெல்லாம் படித்தால் அது நல்ல படமாகவே இருந்தாலும் அதன் freshness போய்விடுகிறது.. படம் பார்க்கும் ஆர்வமும் குறைந்துவிடுகிறது.. அதனால் விமர்சனம் எழுதும் ஆட்கள் வெள்ளிக்கிழமையே விமர்சனத்தை எழுதிவிடாமல், அட்லீஸ்ட் திங்களுக்கு பிறகாவது எழுதலாம்... நல்ல படம் என்றாலும் கெட்ட படம் என்றாலும், நாம் விமர்சனம் எழுதாமல் இருப்பதால் அந்த ரெண்டு நாட்களுக்கு ஒரு 100 பேராவது தியேட்டருக்கு போவார்கள்.. நம் புண்ணியத்தில் தியேடர்க்காரன் ஒரு 1000ரூபாய் எக்ஸ்ட்ரா சம்பாதிப்பான்..
வலைசரத்தில் இன்றைய பதிவு

கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்



25 comments:

  1. அப்புறம், படத்தின் பாடல், இசை, சண்டைக்காட்சி, கேமரா போன்றவற்றை குறிப்பிட்டு முடித்துவிட்டு அதை விமர்சனம் என்கிறார்கள். இதையெல்லாம் படித்தால் அது நல்ல படமாகவே இருந்தாலும் அதன் freshness போய்விடுகிறது.. படம் பார்க்கும் ஆர்வமும் குறைந்துவிடுகிறது.. அதனால் விமர்சனம் எழுதும் ஆட்கள் வெள்ளிக்கிழமையே விமர்சனத்தை எழுதிவிடாமல், அட்லீஸ்ட் திங்களுக்கு பிறகாவது எழுதலாம்... நல்ல படம் என்றாலும் கெட்ட படம் என்றாலும், நாம் விமர்சனம் எழுதாமல் இருப்பதால் அந்த ரெண்டு நாட்களுக்கு ஒரு 100 பேராவது தியேட்டருக்கு போவார்கள்.. நம் புண்ணியத்தில் தியேடர்க்காரன் ஒரு 1000ரூபாய் எக்ஸ்ட்ரா சம்பாதிப்பான்..//இதே பார்வைதான் எனக்கும்!ம்ம்

    ReplyDelete
    Replies
    1. //
      ப்ளாக்ல இப்போலாம் பலரும் சினிமா & சினிமா விமர்சனம் தான் எழுதிட்டு இருக்காங்க...//

      இதெல்லாம் பொதுவா தானே சொன்னீங்க ;-)

      Delete
    2. ஆளப்போல சும்மா இரும்யா ஆவி,தானா போயி தலய கொடுக்காதீங்க ....

      Delete
    3. பொதுவாத்தான் சொன்னேன்... :P

      Delete
  2. கே.ஆர்.பி அண்ணே, புட்டு புட்டு வச்சுட்டீங்க..

    தென்றல் சசிகலா அவர்கள் எழுதியது கொஞ்சம் சின்னதா போச்சு.. அதுக்கு காரணம் ஒரு உள்நாட்டு சதின்னு கேள்விப்பட்டேன்.. ஹிஹிஹி :)

    ஹாரி பாட்டர்- எதார்த்தம்.. குறிப்பாக கடைசி வரிகள்..

    சிவகாசிக்காரன் - நானும் "திரை விமர்சனம்" எழுதறேங்கிற முறையில சொல்றேன். இதுவரை யாரும் என்னிடம் வந்து உங்க விமர்சனம் படிச்சதால இந்தப் படத்துக்கு போகாம விட்டுட்டேன்னு சொன்னதில்ல.. மாறா சில பேர் விமர்சனம் நல்லா இருக்குன்னு சொல்லி படம் பார்க்கச் சென்றவர்கள் இருக்காங்க..அவங்களுக்காக எழுதணும் தானே?

    தவிர விமர்சனம் சுருங்க இருந்தால் நல்லது. சில "பள்ளிச் சிறுவர்(கள்)" விமர்சனம்னு சொல்லி முழு கதையையும் சொல்லிடுவாங்க. அது ஒரு சில சமயம் அரங்கிற்கு செல்லாமல் தடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.. ;) :) :)

    ReplyDelete
    Replies
    1. யோவ் ஆவி, சில பெரிய விமர்சகர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிடறாங்க, நாமெல்லாம் எம்மாத்திரம்? நான் எழுதிய ஆரம்பம் விமர்சனத்தைப் படித்து ஒரு பத்திரிகையாளர் "தேர்ந்த விமர்சன எழுத்தாளர் பாணியில் அழகாக உள்ளது" என்று எனக்கு முகநூல் உள்டப்பியில் சொல்லியிருந்தார். அதுக்கு என்ன சொல்றீங்க?

      Delete
    2. ஆமா உங்க விமர்சனம் நல்லாயிருக்குன்னு நானே சொல்லியிருக்கேனே.. இங்கயும் சொல்றேன்.. சில நேரங்களில் முழு கதையும் சொல்லிவிடுவதால் படம் பார்க்கும் ஆர்வம் குறைய வாய்ப்புண்டு ன்னு தான் சொல்ல வந்தேன்.. :) no offence!!

      Delete
    3. பொதுவாக விமர்சனத்தை திங்கள் கிழமை எழுதினால் நல்லது என்று தான் சொல்கிறேன்.. விமர்சனம் படிக்கும் போது படம் பார்க்கும் ஆர்வம் நிச்சயம் குறைந்துவிடுகிறது நான் கேட்டு அறிந்த வரை.. ஒரு விமர்சனம் படித்துவிட்டவுடன், “ஓ இது தான் படமா? (இவ்வளவு தான் இந்த படமா?)” என்று தோன்றிவிட்டாலே அவ்வளவு தான், படம் பார்க்கும் ஆர்வம் பாதியாகிவிடும்.. இன்னொரு விசயம், விமர்சனம் மட்டுமே எத்தனை பேர் தான் எழுதுவது? ஒரு படத்திற்கு பாதிக்கும் மேற்பட்ட ப்ளாக்கர்கள் விமர்சனம் எழுதுகிறோம். அனைத்தையும் படிக்கும் ஒருத்தன் செத்தாலும் தியேட்டர் பக்கம் போக மாட்டான்.. கொஞ்ச நாட்களுக்கு முன் நானும் சீனுவும் தவிர்க்க முடியாத, முக்கியமான படங்களை தவிர்த்து வேறு படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டாம் என்று மானசீகமாக முடிவெடுத்துக்கொண்டோம் என்று இங்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்..

      அதற்காக மற்றவர்களும் அப்படி செய்ய வேண்டும் என சொல்லவில்லை.. அட்லீஸ்ட் வெள்ளி ரிலீஸ் ஆகும் படத்திற்கு அடுத்த திங்கள் கிழமை விமர்சனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன்.. படம் எப்படி என்பதை நம் நண்பர்கள் நம் ப்ளாக்கை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.. ஃபோனிலோ, ஃபேஸ்புக்கிலோ சொல்லிவிடலாம்.. ஆனால் ப்ளாக்கில் எழுதும் போது யாரென்றே தெரியாத ஆட்களை கூட அது பாதிக்கும் என்பது என் கருத்து, அவ்வளவு தான்.. மற்றபடி இதை நான் வன்மையாக கண்டிக்கவெல்லாம் இல்லை மக்கழே..

      Delete
  3. இன்னாரது எழுத்துக்களைப் படித்து இத்தனாம் தேதியிலிருந்து திருந்தி விட்டேன் என்று எந்த வாசகரும் சொன்னதாக சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லாததைப் போல, இணையத்தில் விமர்சனத்தைப் படித்துவிட்டுத்தான் படம் பார்க்கப் போனேன் என்று எந்த ஒரு வாசிப்பாளரும் கூறியதில்லை என்பது அனைவரும் அறிந்த நிதர்சனமான உண்மை. (எவ்ளவ் நீளமான வரிடா!) ஆயின் விமர்சனம் எழுதுபவர்களில் பலர் வரம்பு மீறி (சிலசமயங்களில் அபத்தமாகவும்) எழுதத்தான் செய்கிறார்கள். அவையும் ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டுமே, அவையும் தேவைதான் என்பதே என் எண்ணம்.
    கே,ஆர்,பி,யின் அலசல் நன்றாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. இல்ல வாத்யாரே ,திருந்தி விட்டேன் என்று சொல்லல ..ஆனா பார்வைகளை மாற்றியது உண்டு .இணையத்தில் விமர்சனம் படிச்சிட்டு படத்துக்கு போறது உண்டு.நானே அப்படி சிலவற்றை தவிர்த்துள்ளேன்.பைசா மிச்சம் ஆகியுள்ளது .விமர்சனம் பார்க்காம சுண்ணாம்பு ஆனதும் உண்டு.

      Delete
  4. KRP அவர்கள் சொன்னதில் இண்டி பிளாக்கர் பல போட்டிகளை வைத்து ஊக்குவிப்பதில் முதல் திரட்டி... அதில் பலரும் பதிவை இணைப்பதில்லை... இணைத்தாலும் Rank அட்டையை தளத்தில் இணைக்க மட்டுமே...! போட்டி எல்லாம் அப்புறம்...!

    சகோதரி சுருக்கமாக எழுதினாலும், வலையுலகை "தட்டி எழுப்ப" முயற்சி செய்து விட்டார்கள்... (இணைப்பு :veesuthendral.blogspot.in/2014/03/blog-post_25.html)

    ஹாரிபாட்டர் "தனது முந்தைய பதிவு (1) தனக்கு முதல் பிடிக்க வேண்டும்... (2) ரசிக்க வேண்டும்... (3) சந்தோசப்படுத்த வேண்டும்..." சிறப்பான எண்ணத்திற்கு ஜே... ஜே...

    இனிய நண்பர் ராம்குமார் : விமர்சனங்களை பிறகு பார்ப்போம்... படத்திற்கு செல்வது உட்பட அனைத்தும் நம் கையிலா உள்ளது...? துணைவி அல்லது குழந்தைகள் விருப்பம் தான்... (கேள்வியே தவறோ...?) ஆமா எப்போ விசேசம்...?

    ReplyDelete
    Replies
    1. இண்டி பிளாக்காரில் கணக்கு தொடங்கியதோடு சரி, உள்ளே எட்டிப் பார்த்தது கூட கிடையாது. பதிவுகளை இணைப்பதற்கு நான் ரெடி. உதவ நீங்க ரெடியா டிடி?

      Delete
    2. ம்... கண்டிப்பாக... தொடர்பு கொள்கிறேன்... போட்டியின் தகவலையும் அனுப்புகிறேன்... உங்களுக்கு தகவல் (Mail) வரும்படியும் செய்கிறேன்...

      Delete
  5. நாம திரை விமர்சனம் எழுதறதால யாரும் படம் பாக்காம இருக்கப் போறதில்லன்னு இல்லை. சில பெரிய பதிவர்கள் கூட சினிமா விமர்சனம் எழுதும்போது நல்ல படத்தை குப்பைன்னும் குப்பை படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தும் எழுதிடறாங்க. அது அவரவர் விருப்பம், மனநிலையைப் பொறுத்தது. ஆனா நான் திரை விமர்சனம் எழுதறது ஹிட்சுக்காக மட்டுமே. சாதாரணமா ஒரு பதிவு எழுதினா ஐநூறு பேர் வருவாங்க, ஆனால் சினிமா விமர்சனம் எழுதினா ஆயிரம் பேர் வர்றாங்க. சைலன்ட் ரீடர்சை நம்ம பக்கம் வரவைக்க அது ஒரு டிரிக். அவ்வளவே. கொஞ்சூண்டு ஊறுகாய் வைத்து நிறைய தயிர் சாதம் சாப்பிடறதில்லையா, அதே மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.. என் ஒட்டு ஸ்பை க்கே..

      Delete
  6. நல்ல கருத்துகள்..... ஒவ்வொருவரின் பார்வையிலும் பதிவுலகம்..... தொடரட்டும் சீனு.

    ReplyDelete
  7. சினிமா விமர்சனம் பலர் எழுதுகிறார்கள். ஒரே சமயத்தில் ஒரே படத்தை பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. முழு கதையை யும் எழுதுவது விமர்சனம் ஆகாது. அதை பொதுவில் அதிகம் விரும்பப் படுவது இல்ல . வியூகங்கள் அமைத்து எழுதும் சினிமா விமர்சனங்களே நல்ல வர வேற்பை பெறுகிறது. வார சஞ்சிகை களை விடவும் ஆர்வமாக வலையில் வரும் சினிமா விமர்சனங்கள் வர வேற்ப்பை பெறுகின்றன. என் பதிவுகள் சினிமா விமர்சனங்களை தாங்கி இருக்காது. ஹிட்சுக்கு அதை எழுத விரும்புவது இல்லை. ஆனாலும் எனது தளத்திற்கு என்று விருப்பப் பட்டு பல புதியவர்கள் வருகிறார்கள். நான் சொல்ல வருவது ஹிட்சுக்காக சினிமாவை பத்தி எழுதுகிறேன் என்ற போக்கு மாற வேண்டும்.

    ReplyDelete
  8. சினிமா விமர்சனம் குறித்த ராமின் பார்வை சரியானதே ....விமர்சனங்கள் ரசனையை பொறுத்து ,மூடை பொறுத்து மாறுபட்டாலும் கலெக்சன் விகிதத்தை நிர்ணயிக்கிறது என்பது உண்மையே ....

    ReplyDelete
  9. //சாதாரணமா ஒரு பதிவு எழுதினா ஐநூறு பேர் வருவாங்க,//

    நீர் அசாதாரணமான ஆளுய்யா ....!

    நானல்லாம் அசாதாரணமா ( அ.கு குள்ள கே.கு வெல்லாம் போட முடியாது ) எழுதுனாகூட அம்பத தாண்ட முடியல ...

    ReplyDelete
  10. அல்லோ ஆவி , டெம்ப்ளேட் போட்டு சி.வி போடாதய்யான்னு நா அப்பவே அடிச்சு சொன்னேன் கேட்டியா ... இப்பா பாரும் ராம் சங்கம் ஆரம்பிக்க சொல்றாப்புல ...

    ReplyDelete
  11. கே.ஆர்.பி அவர்களின் கருத்துக்கள் மிகவும் உண்மை! ராம்குமார் சொல்வது போல சினிமா தகவல்களுக்கு அதிக பார்வைகள் கிடைக்கிறது அதனால் நிறைய பேர் விமர்சனம் எழுதுகிறார்கள்! விமர்சனம் படிப்பதாலேயே எல்லோரும் தியேட்டருக்கு போகிறார்கள் என்பது உண்மையல்ல! உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொண்டால் சினிமாவை தவிர்க்க முடியாமல் பார்ப்பவன் நான்.

    ReplyDelete
  12. என்னை முகநூல் பக்கமும் அனுப்பிய பெருமை கே.ஆர் .பி அவர்களையே சாரும்!

    ReplyDelete
  13. உறவுகளுக்குள் மொய் விருந்து போல இன்று நாம் உன் பதிவுக்கு வந்தால் தான் நாளை என் பதிவுக்கு வருவார்கள் என்ற நிலை மாற வேண்டும் . நல்ல தரமான கருத்து, சிந்தனை, சொல்லாடல் எங்கிருந்தாலும் எழுதுவது யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்த வேண்டும். புதியவர் வருகையும் புதிய தேடலும் நம் பார்வையில் இருக்கும் வரை பதிவுகலகம் வளரும் வாழும்.//

    இந்தக் கருத்தை நாங்கள் சொல்ல வந்த போது அதையெ தென்றல் சசிகலா அவர்கள் சொல்லியிருப்பதால், அதையே அப்படியே எடுத்து இங்கு சொல்லிவிட்டோம்! சசிகலா அவர்களுக்கு நன்றி!

    இன்று என் இடுகைக்கு வந்தீர்கள் என்றால் நான் உங்கள் இடுகைக்கும் வந்து ஓட்டு போடுவேன் என்ற ஒரு நிலை இருக்கத்தான் செய்கின்றது!

    ReplyDelete
  14. ஸ்கூல் பையன் கலக்கிட்டிங்க! நாங்களும் ஏதாவது ஒரு சினிமா விமர்சனம் போட்டா அதுக்கு நீங்க சொல்றா மாதிரி ஹிட் ஆகுது உண்மையே!

    //சைலன்ட் ரீடர்சை நம்ம பக்கம் வரவைக்க அது ஒரு டிரிக்.//

    ஆமாங்க, நம்ம வலைப்பூ அப்படியாவது அவங்க கண்ணுல பட்டு, மத்த இடுகைகளையும் வாசிக்க மாட்டாங்களா என்ற ஒரு நப்பாசைதான்!

    ReplyDelete
  15. கேஆர்பி செந்தில் அவர்களின் கண்ணோட்டம் மிக ஆழமாக உள்ளது! நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளார்!

    அதுவும் இறுதி பாரா நல்ல யோசனையாகத் தோன்றுகின்றது!

    ReplyDelete