திடிரென்று ஒரு எண்ணம் சமகால பதிவுலகம் பற்றி பதிவர்கள் என்ன நினைகிறார்கள். அனைவரும் கூறுவது போல் நிஜமாகவே பதிவுலகம் சோம்பிவிட்டதா? அல்லது முழுக்க முழுக்க பேஸ்புக்கில் தஞ்சம் புகுந்துவிட்டதா? எழுத ஆள் இல்லையா அல்லது படிக்க ஆள் இல்லையா என்றெல்லாம் எழுந்த கேள்விகளுக்கு சக பதிவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என்று நினைத்து என்னால் தொடர்புகொள்ள முடிந்த பெரும்பாலான பதிவர்களைத் தொடர்பு கொண்டேன்.
அலுவல் காரணமாக சிலரால் மட்டும் பதில் தர இயலவில்லையே தவிர முப்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் தங்கள் பார்வையை பதிவு செய்து எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி. நம் சக பதிவர்களுடைய பார்வைகள் இந்த வாரம் முழுவதும் இங்கு பதிவு செய்யப்படும். ஒரு ஆரோக்கியமான விவாதகளமாக இந்த வாரம் அமைய வேண்டும் என்பது எண்ணம்.
இனி பதிவர்களின் பார்வைகள்...!
வெற்றிவேல்
iravinpunnagai.blogspot.com
இன்றைய தமிழ் பதிவுலகம் ஆரோக்கியம் இல்லாத மாதிரி. தான் எனக்கு தோன்றுகிறது. வளர்ந்த பதிவர்கள் எம்மைப் போன்ற வளரும் பதிவர்களை வழி நடத்தவில்லை. தவறுகளை சுட்டிக் காட்டவில்லை. மனதார பாராட்டுவதிலும் கஞ்சத் தனம். வழங்கும் கருத்திலும் ஆகா அருமை என்று அதிலும் கஞ்சத் தனம். அதையும் படித்து போடுகிறார்களா அதுவும் கிடையாது... பெரும்பாலும் குழுவாகவே செயல் படுகிறார்கள்....
*****
குடந்தையூர் சரவணன்
இணையம் தந்திருக்கும் மேடை இது.இவர் தான் எழுதலாம் இதை தான் எழுதலாம் ஆசிரியரின் நிபந்தனைக்கு உட்பட்டது என்றெல்லாம் எல்லை வகுக்காமல், எழுத நினைக்கும் யாரும் எழுதலாம் யாரும் கருத்து சொல்லலாம் என்ற சுதந்திரத்தை தந்திருக்கும் உலகம் இது
பத்திரிகைகளுக்கு அனுப்பி காத்திருந்த காலங்கள் போய் எழுதிய மறு நிமிடமே பதிவேற்றி அதற்கான கருத்துரைகளை உடனே பெறும் நிலை என்பது இங்கே ஒரு வரப்ரசாதம். சிவப்பு கம்பளமிட்டு வரவேற்று படைப்புகளை உலக அரங்கில் காட்சிக்கு வைத்து அழகு பார்க்கிறது இப்பதிவுலகம்.
ஒரு பதிவு பாராட்டப்படும் போது எழுதியவருக்கு அடுத்து எழுதும் ஆர்வம் பிறக்கிறது இவர் எதை எழுதுவார் இவரது எழுத்தில் இந்த பிரச்சனை எப்படி பார்க்கபடுகிறது என்று படிப்பவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது.எழுதுபவரை வாசகர் ஆக்குவதும், வாசகரை எழுத்தாளர் ஆக்குவதும் இங்கே சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கும் சாதனை என்றால் அது மிகையல்ல.
ஆண்டிபட்டியில் எழுதுபவரை அமெரிக்காவில் இருப்பவரும் படித்து ஊக்கபடுத்தும் விந்தையும் இங்கே காணலாம். முகமறியாமலே எழுத்துக்களால் கை குலுக்கி நட்பையும் வளர்க்கலாம்
நேற்று வந்த சினிமாவுக்கும் இங்கே சுட சுட விமர்சனம் தர,பெற முடியும் சமையலறையில் செய்யப்பட்ட சமையலும் இணைய மேடையில் எழுத்து எழுத்து சுவையின் மூலம் காட்சிக்கு வைக்கபடுகிறது.சந்தோசத்தையும் துக்கத்தையும் பரிமாறி கொள்ள முடிகிறது. சமூகத்தில் நடந்த அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் நன்மையை ஆராதனை செய்யவும் கால நேரம் பார்க்காமல் செய்ய முடிகிறது. நேற்றைய அரசியல் நிகழ்வும் இன்றைய விமர்சனங்களால் விளாசப்படுகிறது. இருந்தாலும் கலாய்ப்பு கேலி கிண்டல் என்று விசயமே இல்லாமல் தேற்றப்பட்ட சில பதிவுகள் அங்காங்கே காணப்படுவதுண்டு. அதில் சில ரசித்து சிரிக்க வைக்கும். மற்றும் சில எரிச்சல் படவும் வைக்கும்.
தமிழ் பதிவுலகம் சமூக அக்கறையுடன், மனிதத்தை வளர்க்கவும் மனிதாபிமானத்தை போதிக்கவும் நல்லவற்றை உலகுக்கு அறிவித்து பொல்லாததை புறந்தள்ளி நசுக்கி விடவும் ஏற்ற வலிமை மிகுந்த ஊடகமாக ஆகியிருக்கிறது. கையில்கிடைத்திருக்கும் கருங்கல்லை அழகான சிற்பம் செய்ய போகிறோமா அல்லது கல்லாகவே பார்த்து கொண்டிருக்க போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது
முக நூல் வந்து பதிவுலகின் கவனம் திசை திரும்ப வைத்திருக்கிறது. என்பதை மறுப்பதற்கில்லை.இருந்தாலும் நாடகத்தை சினிமா அழித்து விட முடியாத போது சினிமாவை டிவி அழித்து விட முடியாத போது இது மட்டும் அழித்து விட முடியுமா என்ன.
பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் சாப்பாடு அவசர உலகுக்கு ஏற்றது தான். இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது ஒரு அழகுணர்ச்சி இருக்கிறது. அதற்கு ஈடானது தான் இந்த தமிழ் பதிவுலகம்
நம் எழுத்துக்களால் படிப்போரின் இதயம் நிறைப்போம் வாருங்கள் பாரினில் மனிதம் வளர்ப்போம் வாருங்கள்
நாளை நமதாகட்டும்
வருங்காலம் நம் வசமாகட்டும்.
*****
அவர்கள் உண்மைகள்
ஆங்கில மொழிகளுக்கு அடுத்த நிலையில் ,இந்திய ரீஜன்ல மொழிகளிலேயே மிக அதிகமாக தமிழ் மொழியில்தான் வலைத்தளம் இருக்கின்றது அது மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து அதிக நபர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது இன்னும் ஆரம்பித்த அதே நிலையில்தான் இன்னும் வளராமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை கதை கவிதை மற்றும் எனது தளத்தில் வருவது போல உள்ள மொக்கைகள்தான் அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் எந்தவொரு பதிவுகளும் சமுக பிரச்சனைகளை பற்றி பேசுவதாக தெரிவதில்லை அப்படி ஒருரிருவர் எழுதிச் சென்றாலும் அதற்கு மத மற்றும்அரசியல் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது
ஒரு பிரச்சனையே பேசும் போது அந்த பிரச்சனையை ஆராயமல் அது என் மதத்தை அல்லது என்னை சார்ந்த அரசியல் கட்சியை இழிவு படுத்துவதாக இருக்கிறது அதனால் அதை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்போம் என்ற நிலைதான் நம் பதிவுலகில் இருக்கிறதே தவிர அந்த பிரச்சனை நம் சமுகத்தை உண்மையில் எந்த அளவில் பாதிக்கிறது என்ற உண்மை நிலையை ஆராய முற்பட முயல்வதில்லை.
சமுக பிரச்சனைகளை உணர்வுகளை வளர்ச்சியைப் பற்றி பேசாத எந்தவொரு பதிவும் என்னைப் பொறுத்தவரை குப்பையே. அந்த நிலமை முற்றிலும் மாறுபட வேண்டும். அது மாறுமா என்பது ஒரு கேள்விக் குறியே...
------------------------------ -----
இன்னும் நிறைய எழுதாலாம் சொல்லலாம் பதிவின் நீளம் குறிட்து கட்டுபாடு இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.. இது பற்றி ஒரு முழுப் பதிவு விரைவில் வெளியிடுகிறேன்
மதுரைத்தமிழன்
*****
இம்ரான் மூஸா - ஆத்மா
காத்திரமான படைப்புக்களை காட்டிக் கொடுப்பதால் பதிவுலகம் விலைமதிப்பிட முடியாத ஒன்றாகிவிட்டது. பதிவுலக நட்பானது பதிவர்களின் சின்ன சின்ன ஒன்றுகூடல்கள் மூலமாக திருவிழாவாக மாறியிருப்பது எதிர்காலத்தில் மிகச் சிறந்த படைப்புக்களுக்கு உரமிடும் என்பதுமட்டுமல்லாமல் அறிமுக பதிவர்களுக்கு சிறந்த களமமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று வலைச்சரம், பதில் போன்றவற்றின் பணி மிகவும் பாராட்டப்படவேண்டியது. மதம், கடவுள் கொள்கைகள், மூடநம்பிக்கைக்களை கழைதல் போன்றவற்றில் அநாகரீமான விவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும், முக்கியமாக பெயரில்லாமல் வந்து கருத்திடுதலும் தொடர்வது கவலையே
முகஸ்த்துதிக்கான பின்னூட்டங்கள் வேண்டவே வேண்டாம், மேலும் பரபரப்புக்காகவும், வலைத்தள தர வரிசைகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பதிவிடுபவர்கள் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டினால் நன்று.
நன்றி
-ஆத்மா-
நாளைய பதிவில்
கோவைஆவி
கே.ஜி.கௌதமன்
விஜயன் துரைராஜ்
ராஜபாட்டை ராஜா
Tweet |
நல்ல முயற்சி ..!
ReplyDeleteநல்ல ஆழமான கருத்துக்கள் ..!
நன்றி...
தமிழ் நண்பர்களுக்கு எண் வனக்கங்கள்,
ReplyDeleteஇந்த ஒரு பதிவை தான் இத்தனை நாள் எதிர்பர்த்தது போன்று இங்கு னைவரும் கருத்து சொல்லி இருப்பதில் இருந்து எந்த அளவிற்கு இதே கேள்வி அனைவருக்குள்ளும் இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.சரி நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் .
சீனு குரு, குடந்தையூர் சரவணண் ஆகியோர் சொன்னமாதிரி பேஸ்புக் மற்றும் முகநூல் ஆகியவற்றின் தக்கம் இருப்பது உண்மை.ஆனால்......
சில உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள். பேஸ்புக் மட்டும் தான் இனி என்பது உண்மையானால் வாட்ஸ் அப்பை 99,000கோடி கொடுத்து வாங்க காரணம்? பதில்.பேஸ்புக்கின் எதிரி என வர்ணிக்கப்படும் டிவிட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பேஸ்புக்கை விட குறைவு . ஆனால், அதன் வளர்ச்சி பேஸ்புக்கை விட அதிகம். ஏன்னா டிவிட்டர் பயன்படுத்தப்படுவது கருத்திட மற்றும் பதிவு இட.ஆனால் பேஸ்புக் ஒரு chat தளம் மட்டுமே. இதை பேஸ்புக் தாமதமாக உணர்ந்துகொண்டது. அதன் விளைவு தன்னிடம் வேலை கேட்டு வந்து இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட பிரையன் ஆக்டன் உருவாக்கிய வாட்ஸ் அப் நிறுவனத்தை வங்கியது. ஏன்னா chat தளமான பேஸ்புக்கின் உண்மையான போட்டியே இன்னொரு chat தளமான வாட்ஸ் அப் தான். எனவே பேஸ்புக் ஆனது பதிவுலகத்திற்கு போட்டி என்பதில் உண்மை இல்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பேஸ்புக் மூலம் ஒரு பக்கத்தை பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் உறுப்பினராகி இருக்க வேண்டும் அதோடு ஒவ்வொரு முறையும் log in ஆக வேண்டும். இதை சொல்ல காரணம் நம் பதிவுலக நண்பர்கள் பேஸ்புக் கண்டு சோர்ந்து போய்விட கூடாது என்ற நோக்கமே. சரி..இவ்வளவு சொல்கிறீர்களே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்? என நீங்கள் கேட்கலாம். பதில்....பொதுவாகவே தமிழ் தளம் என்றால் பழமையாக இருக்கும் , அழுக்கு படிந்ததாக இருக்கும், common people பயன்படுத்துவது போன்று இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. உலக தரத்தில் , நவீன தொழில் நுட்பத்தில் ஒரு தமிழ் தளம் உருவானால்...அதுவும் எளிய மக்கள் பயன்படுத்துவது போன்று இருந்தால்..அவர்களுக்கு அன்றாடம் பயன்படுவதாக இருந்தால்.
அது என்ன தளம் என்ன முகவரி என்பதை இப்போது நான் சொல்லபோவது இல்லை. ஆனால் இன்னும் 15 முதல் 20 நாட்களில் அந்த தளம் தானாக உங்கள் பார்வைக்கு வரும்.. எத்தனை நாளைக்கு தமிழையும், தமிழனையும் உதாசீனப்படுத்துவீர்கள். இனி பாருங்க தமிழின் வலிமையை...
( இது உணர்ச்சி பெருக்கு எனப்படும் over confidence காரணமாக எழுதிய வார்த்தைகள் இல்லை. உண்மை என்பதை உணருவீர்கள்)
இப்படிக்கு,
நவீன தமிழன்.
நல்லதொரு அலசல். தொடர்கிறேன்.
ReplyDeleteஎன்னது பதிவுலகம் சோம்பி விட்டதா...? சுத்தம்...
ReplyDeleteவெற்றிவேல் அவர்கள் சொன்னதிலும் உண்மை இருக்கிறது...
குடந்தையூர் சரவணன் சொன்னதில் 1) அழகான சிற்பம் பிரமாதம்... 2) சினிமாவை அழிக்க முடியாது தான்... ஆனால் சினிமா திரையரங்குகள் அழிந்து கொண்டு வருகிறதே...!
அவர்கள் உண்மைகள் : படைப்பை விமர்சிக்காமல் படைத்தவனை விமர்சிப்பது நிஜ வாழ்விலும் உண்டு... அவர்களின் அறியாமை... திருந்தவும் திருத்தவும் சிரமம்...
ஆத்மா : என்னது வலைத்தள பதிவர் திருவிழாவா...? நல்லது நடத்தலாம்... எப்போது...? அப்படி நடந்தாலும் ஒரு குறிப்போடு : (1) இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதியவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம்... (இதில் முதலில் நான் தான் - சூழ்நிலை காரணமாக...! ஹா.... ஹா....) (2) முக்கியமாக வலைத்தளம் ஆரம்பித்து ஒரு பதிவு இல்லாவிட்டாலும், அவர்களும் கலந்து கொள்ளலாம்...
என்னைப் பொருத்தவரை : வலைச்சரம் இல்லையென்றால் பல தளங்கள் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை... பல தளங்களை தொடர்வதும் அதன் மூலம் தான்... மேலே பலரும் சொன்ன எனது குழுவும் அது தான்... மூத்த பதிவர்கள் உட்பட (உங்களுக்கு நான் சொல்லணுமாக்கும்...?) முகநூலில் பலரும் மூழ்கி விட்டது உண்மை...
முகஸ்த்துதி, பெயரில்லாமல் வந்து கருத்திடுவது, இன்னும் பல - இவ்வளவு நாள் வலைத்தளம் எழுதுபவர்களுக்கு ஒரே ஒரு settings மூலம் மாற்றத் தெரியாதா...?
ஒவ்வொரு பதிவரின் எண்ணத்தையும் படிக்க முடிவதில் ஒரு ஆர்வம். ப்ளஸ் சுவாரஸ்யம். இன்றிலிருந்து வலைச்சர வாரமா? வாழ்த்துகள் சீனு!
ReplyDeleteகிட்டத்தட்ட முப்பது பதிவர்கள் பதிவுலகம் பற்றிய தங்களது பார்வையை இங்கே சொல்லப் போகிறார்களா.... நல்ல விஷயம் சீனு. படிக்க ஆவலுடன் நானும்......
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனக்குத் தெரிந்து முகநூல் வலைப்பூ இரண்டும் ஒப்பிடுவது தேவையற்றது.வலைப் பதிவில் உள்ளவர்கள் பெரும்பாலும் படைப்பாளிகள் . முகநூல் அப்படி இல்லை. அது ஒரு அரட்டை பக்கமாகவே தொடர்கிறது. அல்லது புகைப்படங்களை பகிர்வதர்காகவே.பயன்படுத்தப் படுகிறது. அதில் எழுத தனித் திறன் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் அதைப் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். வாரப் பத்திரிகை படிப்பவர்களை விட நாளிதழ் படிப்பவர்கள் அதிகம். முகநூல் அது போன்றதே.முகநூலை படைப்பாளிகளும் பயன்படுத்துவதால் கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. பொதுவாக (சினிமாவை தவிர்) படைப்புகளை ரசிப்போர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் எப்போதும் குறைவே .
Deleteஇரண்டு ஆண்டுகளுக்கு முந்திய ஸ்டேட்டசை யாரேனும் பார்த்ததுண்டா. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வலைப் பதிவை தேடிப் படிப்போர் உண்டு.
முக நூல் ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கான களம் அல்ல. அத்தகையது வலைப் பதிவுகளே அதனால் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். என்றாலும் குறை ஒன்றுமில்லை சீனு
இன்னும் விரிவாக என் கருத்தை பதிவில் எழுது கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய ஸ்டேட்டசை யாரேனும் பார்த்ததுண்டா. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வலைப் பதிவை தேடிப் படிப்போர் உண்டு.
Deleteமுக நூல் ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கான களம் அல்ல. அத்தகையது வலைப் பதிவுகளே அதனால் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
அற்புதம்.
Thank you for the presentation .
Deleteநல்ல முயற்சி! பாராட்டு! தொடருங்கள்!
ReplyDeleteமுகநூலும், வலைப்பூவும் ஒன்றாகிவிட முடியாது! paதிவர் டி.என் முரளிதரன் கூறியிருப்பது மிகச் சரியே! அதைத்தான் இங்கு சொல்ல வந்தோம் அவரது கருத்தும் எங்களது கருத்தும் ஒன்றாகிப் போனதால் அதை மீண்டும் எழுதவில்லை.
ReplyDeleteஆனால், பொதுவாக, இந்த வேகமான காலகட்டத்தில் பலருக்கு இடுகைகளை வாசிக்கும் பொறுமை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! முகநூலில் நீங்கள் பின்னூட்டம் இடத் தேவையில்லாமல் "லைக்' என்று மட்டும் போட்டுவிட்டுப் போனால் போதும்! இங்கு அப்படி இல்லை! ஆனால் இங்கும் பலர் வாசிக்காமலேயே “அருமை” என்று சொல்லுவது உண்டுதான்!
இடுகைகள் சற்றுப் பெரிதானால் அதை வாசிக்கும் பொறுமை இல்லை என்றுதான் தோன்றுகின்றது! எங்களுக்கு பதிவர் நம்பள்கி அழகான யோசனைகள் அடிக்கடி சொல்லுவதுண்டு! வாசிப்பவர்கள் 3 நிமிடத்திற்கு மேல் வாசிப்பது இல்லை! எனவே இடுகையை அதற்கு ஏற்றார் போல் போடவேண்டும் என்று!
முக நூல் வாட்ஸப் எல்லாம் பொழுது போக்கு அம்சங்கள் தான்! ஆனால் வலைப்பூக்கல் அப்படி அல்ல! எவ்வளவு நல்ல நல்ல வலைப்பூக்கள் நல்ல பதிவுகலைக் கொடுத்து சிந்திக்க வைக்கின்றன! அழகான நகைச்சுவைப் பதிவுகளைத் தருகின்றன! எத்தனை எத்தனை நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துகின்றன! ஏன் வாசகர் கூடத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்!
வலைப்பூக்கள் சோம்பிவிட்டது என்று சொல்லமுடியாது! ஆனால் இன்னும் வளர வேண்டும்! நல்ல பல பதிவுகள் வர வேண்டும்! மதுரைத் தமிழன், குடந்தையூரார் சொல்லியிருப்பது போல!
வெற்றிவேல் போன்ற இளஞர்களின் ஆதங்கத்தையும் நாம் கருத்தில் கொள்ளலாமே! ஏன், எங்களுக்குமே, நாங்கள் புதியவர்கள் என்பதால், (எங்களைப் போன்றோருக்கும், எழுத்துக்களை இன்னும் மெருகூட்டவும், மேம்படுத்தவும், நன்றாக எழுதுவோர் எங்களுக்கு எல்லாம் அறிவுரைகள் தரலாமே! அது நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு சூழலையும், பதிவுகளையும் கொடுக்க உதவுமே! எழுத்து திறமையையும் வளர்க்க உதவும்தானே!
இன்னொரு விஷயம் இங்கு நாம் சொல்லியே ஆக வேண்டும்! தமிழ்மணத்தில் உள்ளவர்கள் பலரும் ராங்க் தக்க வைத்துக் கொள்ளவும், சூடான இடுகைகள் பட்டியலில் வரவும் விழைவதில் தவறில்லை, அது அவரவர் விருப்பம் என்றாலும், பல சமயங்களில், பல நல்ல பதிவுகள் ஒரே சமயத்தில் வரும் போது, அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா பதிவுகளையும் படித்து, சிந்தித்து கருத்துக்கள் சொல்ல முடிவதில்லை! அந்த சமயத்தில் நாம் அடிக்கடி செல்லும் வலைப்பூக்களுக்கு மட்டும்தான் செல்கின்றோம் இல்லையானால் நமக்கு யார் கருத்து இடுகின்றார்களோ அவர்கள் வலைபூக்களுக்குத்தான் செல்கின்றோம் அல்லாமல் unbiased நோக்கத்துடன் எந்த ஒரு நல்ல பதிவையும் வாசிக்கும் எண்ணத்துடன் செல்வதில்லை!
எல்லாப் பதிவுகளையும் படிக்க நேரம் வேண்டாமா?! மட்டுமல்ல, ஒரு சில பதிவுகளைத் தவிர பல பதிவுகளில் கருத்துப் பரிமாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை! அதாவது பின்னூட்டக் கருத்துக்கள் வெளியிடப்படும்போது அதற்கான விவாதங்களோ, இல்லை கருத்துப் பற்மாற்றமோ இருக்கிறதா? நாம் சிறிது தாமதமாக கருத்து இட நேர்ந்தால், கருத்துப் பறிமாற்றம் இல்லாமலேயே போய்விடுகின்றது! இதில் குறை கூறவும் வழியில்லைதான்! நேரம் தான் எல்லோருக்கும் இப்போது பிரச்சினை! கருத்துக்கள், அருமை, நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் இப்படித்தான் பல நேரங்களில் முடிவடைகின்றன!
வலைப்பூக்கள் இன்னும் விரிய வேண்டும்தான்! நல்ல கருத்துப் பறிமாற்றங்களும், ஆரோக்கியமான விவாதங்களும், எண்ணப் பிரதிபலிப்புகளும் வரவேண்டும். அப்போதுதான், தமிழும் வளரும், தமிழ் வலைப்பூ உலகமும் விரிவடையும், ஆரோக்கியமான சூழலும் நிலவும்!
நடத்துங்க ஜி
ReplyDeleteஇந்தக் கேள்வி எங்களுக்கு நாங்கல் வலைப்பூ ஆரம்பித்து, எப்படி வாசகர்களை நம் வலைப்பூவை பார்க்க வைப்பது என்றுத் தெரியாமல் இருந்த போது, அதன் பின் மெதுவாக மிழ் மணத்தில் இணைந்து, பின்னூட்டங்கள் வரத் தொடங்கிய போதும் பிற வ்லைத்தளகளை வாசிக்க நேர்ந்த போதும் உங்களூடைய இந்த்ச் சிந்தனைத் தியோன்றத்தான் செய்தது!
ReplyDeleteநல்ல முயற்சி சீனு! இன்னும் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்!
தக்க நேரத்தில் தக்க பகிர்வு. அனைவரையும் இப்படியாவது ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தும் இந்த பகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeleteபலரின் எண்ணங்களை தொகுத்து வெளியிடும் முயற்சி அழகு. நீங்களும் ஒரு 'இலக்கியவாதி' தான் . ஹி ஹி ஹி.
ReplyDeleteஇது "இன்ஸ்பிரேஷனா" தம்பி?
Deleteநல்ல முயற்சி. தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteஇடுகைகள் சற்றுப் பெரிதாக இருந்தாலும். அவை நல்ல இடுகைகளாக இருந்தால் அதை கொஞ்சம் பொறுமையாக வாசித்து கருத்து தெரிவிக்கும் நிலை வர வேண்டும்! கதைகள் எடுத்துக் கொண்டால் சில சமயம் கதைகள் பெரிதாகிவிட வாய்ப்புண்டு! தவிர்க்க முடியாத காரணங்களினால்! பல நல்ல ஆழ்ந்த கருத்துடைய இடுகைகள் சற்று பெரிதாகித்தான் போகும்!
ReplyDeleteஇப்படியெல்லாம் செய்தால் தான், தமிழ் வளரும்! வலைப்பூக்களும் வளரும்! குடந்தையூரார் சொல்லியிருப்பது போல இது ஒரு நல்ல மேடை! நம் எழுத்த்க்களையும் இந்த உலகமே வாசிக்கின்றதே!
மதுரைத் தமிழங்கூட எங்களுக்கு அருமையான யோசனை, அறிவுரை சொல்லியிருந்தார். இடுகை இடும் முன் அதைத் திரும்ப திரும்ப வாசித்து இட வேண்டும் அப்போதுதான் குழப்பாம் ஏற்படாது என்று! இது போன்ற கருத்துக்கள் வந்தால்தானே நாம் நமது எழுத்தையும் சொல்லும் விதத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்!
நல்ல இடுகைகள், சமூகப்பிரச்சினைகளை அலசும் நல்ல இடுகைகள் வர வேண்டும்! விவரணம் நீலவன்ணனின் இடுகைகள் பெரிதாகத்தான் இருக்கும்! ஆனால் ஆழ்ந்த, சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் நிறைய இருக்கும்!
இதெல்லாம் சாத்தியமா வலைப்பூவில்?!!! நிலைமை மாறவேண்டும்!
அருமையான ஐடியா சீனு.
ReplyDeleteசில பதிவர்களின் பக்கங்களைத் திறக்குமுன் ஊர்ப்பட்ட விளம்பரங்களைப் பார்த்துத் தொலைக்கவேண்டியுள்ளது. அதனால் தலைப்பு ஈர்த்தாலுமே அங்கே போக விருப்பமில்லை:(
முகநூல் அதுபாட்டுக்கு இருக்கட்டும். வலைப்பதிவு தன் வேலையைப் பார்க்கட்டுமே!என்ன பிரச்சனை? அவரவர் மனசுக்கு ஏத்தபடி இருந்தால்சரி.
இரண்டு குதிரை சவாரி என்பது இதுதானா? உங்கள் குதிரையை பதிவர்களை அலங்கரிக்க சொல்லிவிட்டு, வலைச்சரம் எனும் குதிரையை நீங்க அலங்கரிக்கறீங்க.. ப்ரில்லியண்ட் ஐடியா.. இப்படி எல்லாம் சிந்திக்கறதுக்கு என்ன சூரணம் சாப்பிடறீங்க.. கொஞ்சம் ஷேர் பண்ணுங்க.. ;-)
ReplyDeleteபதிவாகவே போட்டுட்டீங்களா? நல்லது! யாராவது ஒருத்தர் பூனைக்கு மணி கட்டித்தானே ஆகனும்! நடத்துங்க!
ReplyDeleteடி.என்.முரளிதரன் சார், துளசிதரன் சார் கருத்துக்கள் நல்ல அலசல்
ReplyDeleteஇது ஒரு நல்ல முயற்சி சீனு தொடரட்டும்
அனைவரும் அவரவர் பாணியில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக ஆத்மா அவர்கள் - என்னதான் பதிவு மொக்கையாக இருந்தாலும் அருமை, நன்று என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள், அல்லது மொக்கைப் பதிவுக்கு முகஸ்துதி பாடுகிறார்கள். இது பதிவு எழுதுபவரின் எழுத்துத் தரத்தை எந்த வகையிலும் மேம்படுத்தாது. பதிவு சார்ந்த வாதங்கள், விவாதங்கள் தொடருமேயானால் பதிவுலகம் ஆரோக்கியமான போக்கில் போய்க்கொண்டிருக்கும்.
ReplyDeleteஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கக் கூடியதே. மோசமான தாக்குதல் கமெண்ட் களால் பல பேர் அந்த பாக்ஸையே மூடி வைத்துள்ளார்கள். சுவாரஸியமான விவாதங்கள் காண்பது அறிதாகவே உள்ளது.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteயோவ் வ.ச வுல வேற பதிவு , இங்க வேற பதிவா நா ரெண்டும் ஒண்ணுன்னு நெனச்சு ஸ்கிப்பிட்டனப்பா...
ReplyDeleteவலையுலகின் எடிசனய்யா நீர் ....
ஆம். பலர் நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமிட முயற்சிப்பதில்லை.
ReplyDeleteமதுரைத்தமிழன் அவர்கள் கூறியதைப் போன்று சமுக பிரச்சனைகளை உணர்வுகளை வளர்ச்சியைப் பற்றி பேசாத எந்தவொரு பதிவும் குப்பையே என்று கூறிவிட இயலாது. சமூகத்தை நன்கு அலசி ஆராய்பவர்களால் மட்டுமே அவ்வாறு எழுத முடியும். மற்றவர்கள் அவரவர்களுக்கு தெரிந்ததை இடுகிறார்கள், அவ்வளவுதான்.