1 Jan 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் 01-01-2013

னைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...




பெரும்பாலான பதிவர்கள் ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு தாங்கள் சொல்ல வரும் சின்ன சின்ன  விசயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். எத்தனையோ விஷயங்கள் நான் எழுத நினைத்ததும் பின்பு இவ்வளவு சிறிய விசயத்திற்காக யாரவது ஒரு பதிவை வீணடிப்பார்களா என்று கடந்ததும் உண்டு. அதன் பின் தான் இந்தப் பகுதிகளுக்கு இருக்கும் மகத்துவம் புரிந்தது. சரி நாமும் ஒரு பகுதி ஆரம்பித்து விடுவோம் என்று நினைத்து அதற்கான தலைப்பையும் சிந்திக்கத் தொடங்கினேன்

கடந்த இரு வாரமாக யோசித்து யோசித்து மண்டையை சூடாக்கிய ஒரு தலைப்பு, எவ்வளவோ முட்டியும் மோதியும் தலைப்பு சிக்கவேயில்லை. வாத்தியார் கணேஷ், வரலாற்று சுவடுகள், இன்னும் சிலரிடமும் கேட்டேன், இருந்தும் நான் எதிர்பார்த்த ஒரு தலைப்பு " சாரி பாஸ்" என்று விலகிக் கொண்டதே தவிர சிக்கவே இல்லை

தலைப்பு சிக்கவில்லை, முயற்சியை கைவிட்டு விடலாம் "ஜஸ்ட் ரிலாக்ஸ் பாஸ்" என்று என்னிடம் நானே சொல்லிக் கொள்ளும் பொழுது சிக்கியது "அட இது நல்லாருக்கே" என்று என்ன வைத்தது. நான் சிந்தித்த எத்தனையோ மோசமான தலைப்புகளுக்கு மத்தியில் இது ஒன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதால், எது எதையோ பொறுத்துக் கொள்ளும் நீங்கள் இதையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.   

இந்தப் பகுதியில் எது எதுவெல்லாம் இடம் பெறப் போகிறது என்று இனி தான் சிந்திக்க வேண்டும்

  1. ஒரு வலைப்பதிவு பற்றியோ அல்லது ஒரு பதிவு பற்றிய எனது பார்வையோ இடம் பெரும்
  2.  ஒரு குறும்படம் பற்றிய குறு விமர்சனம் 
  3.  ஒரு புதிர் 


இவை தவிர சிந்திக்கவோ சிரிக்கவோ செய்யும் ரிலாக்ஸ் விஷயங்கள் அடங்கிய ஜஸ்ட்  ரிலாக்ஸ் ஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்...   

வலையுலகில் நான் அறிந்த வரை பலரும் எழுதி வரும் தங்களுக்கான டைரிக் குறிப்புகள் 

மின்னல் வரிகள் - மொறுமொறு மிக்ஸர்  
மெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ் 
எங்கள் பிளாக் - பாசிடிவ் செய்திகள் 
கேபிள் சங்கர் -கொத்து பரோட்டா 
ஹாரிபாட்டர் - டைம் பாஸ் 
பிளாக்கர் நண்பன் - பிட் பைட் மெகா பைட்   
வீடு திரும்பல் - வானவில் 
கோகுல் - "பல"சரக்கு கடை  
கரைசேரா அலை - ஊர்ப் பேச்சு 
குடந்தையூர் - ஸ்வீட் காரம் காபி 
கும்மாச்சி - கலக்கல் காக்டெயில் 
ரஹீம் கசாலி - கசாலி கபே 

வாத்தியாரின் கனவு நனவாகிறது : 


ஜனவரி 6 டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து வாத்தியாரின் மின்னல் வரிகள் எழுதிய சரிதாயணம் @ சிரிதாயணம்  புத்தகமாக வெளியிட இருக்கிறது. அனைவரையும் வாத்தியார் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்

மிக்க நன்றி 

கவனம் ஈர்த்த இளம் பதிவர் திடங்கொண்டு போராடு சீனு என்று என்னைப் பற்றி தன்னுடைய விருதுகள் பதிவில் குறிப்பிட்ட வீடு திரும்பல் மோகன் குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 

25 comments:

  1. வாழ்த்துக்கள் தம்பி..."ஜஸ்ட் ரிலாக்ஸ் ப்ளீஸ்" விகடனுக்கு "டைம்பாஸ்" மாதிரியா?தம்பி கை வைச்சா ராங்கா போகாது என்பதால் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா :-)

      Delete
  2. கேபிள் சங்கர் எழுதுறதுக்கு பெயர் கோதுமை பரோட்டாவெல்லாம் இல்லை... அது கொத்து பரோட்டா...

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன் பிரபா நன்றி :-)

      Delete
  3. அப்புறம் என்னுடைய கலவை போஸ்ட் பால்கனி அல்ல... பிரபா ஒயின்ஷாப்... பால்கனி என்பது வெளிநாட்டு விநோதங்கள் பற்றிய தொகுப்பு...

    ReplyDelete
    Replies
    1. பிரபா ஒயின் சாப் நான் இது வரை படித்தது இல்லை.. பால்கனி தான் அன்று படித்தேன்... அதனால் வந்த குழப்பம் என்று நினைக்கிறன்

      Delete
  4. ஜாக்கியுடைய சான்ட்வெஜ் எங்க பாஸு ?

    ReplyDelete
    Replies
    1. //வலையுலகில் நான் அறிந்த வரை பலரும் எழுதி வரும் தங்களுக்கான டைரிக் குறிப்புகள் // FYI

      ஜாக்கியுடைய ஒரு பதிவு கூட இது வரை படித்தது இல்லை...

      Delete
  5. ஜஸ்ட் ரிலாக்ஸுக்கு என்னுடைய வாழ்த்துகள்... சலிப்படைந்து பாதியிலேயே நிறுத்திவிட வேண்டாம்... என்னை மாதிரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரபா... நிச்சயம் முயல்கிறேன்

      Delete
  6. மிக்க நன்றி மனசாட்சி

    ReplyDelete
  7. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
    பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
    திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
    சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

    அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete
  8. தல புது வருசத்துல புது பகுதியா...கலக்குங்கோ..
    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அப்போ அடிகடி உங்க ப்ளாக் பக்கம் வரவேண்டி இருக்கும் போல!! நமக்கு தான் ரிலாக்ஸ் அதிகம் தேவைப்படுமே!!
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சீனு!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது! தொடர்ந்து கலக்குங்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பா.. நல்லபடியாக தொடரவும் :-)

    ReplyDelete
  12. புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. # //ஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்... // Congrats seenu.....

    ReplyDelete
  14. ஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்...

    ஹா....ஹா

    வாழ்த்துக்கள் சீனு

    ReplyDelete
  15. புதிய சிந்தனைகளை மனமார வரவேற்கிறேன் சீனு ...
    உங்களின் வாசகனாக நிச்சயம் பின் தொடர்கிறேன் ..

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கலக்குங்க!

    ReplyDelete
  18. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  20. என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சீனு. என்னென்னமோ யோசித்தும் சரியான படி எனக்கு எதுவும் தோன்றவில்லை. மொறு மொறு மிக்ஸர் என்பரே கடுகு ஸார் எனக்களித்த தலைப்புதான்...ஹி,., ஹி,,, ஆக ஜஸ்ட் ரிலாக்ஸ் வேண்டி இனி சீனுவை அணுகலாம். அனைவருக்கும் அது அவசியத் தேவையாகத் தானே இருக்கிறது இன்றைய நாளில். அப்புறம்... வரும் 6ம் தேதி நிகழ்வதாக இருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்வை சில தவிர்ர்ர்க்க்க்க இயலாத காரணத்தினால் கேன்சல் செய்யும் சூழல் நேர்ந்து விட்டது என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறேன். நேரே புத்தகக் கண்காட்சி விற்பனைதான். டிஸ்கவரி ஸ்டாலில் வைத்தே சிறு வெளியீடாக நடத்தி விடலாம என்றுதான் இப்போது என் எண்ணம். அவசியம் பு.கண்காட்சில நாம் சந்திக்கலாம்.

    ReplyDelete