28 Dec 2012

தனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 2



டிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே  வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லைவங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு எப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக் கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லைபுயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.  

ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடிபாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதியாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன்,  காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. 

ங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக் தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள்.  ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால் தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.     

னுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியதுகட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின  அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனதுகடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தனநடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்

ருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுந்த இந்த அபாய அறிவிப்பை உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.    


டைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி  இல்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.

ரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது


ர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையைஉறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது

வை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப் போக்குவரத்தும்ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள். மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.    

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டனஇந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது

டுத்த நாளும் மழை நின்றபாடில்லைதொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதுகாப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை


மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த 115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது என்று குறிப்பிடுகிறார்

னுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.      

மீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலி வாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள் குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானா நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.  


சியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக .நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ  புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது. அது பற்றியும் தனுஷ்கோடி புயல் ஏற்படுத்திய விளைவுகளையும், இன்றைய தனுஷ்கோடியின் நிலமையைப்  பற்றி அடுத்த பதிவில் பகிர்கின்றேன்



24 comments:

  1. ஒரு கெட்ட சம்பவம் குறித்த நல்ல தொகுப்பு...
    விதி வலியது..

    http://sattaparvai.blogspot.in/2012/12/blog-post_27.html

    ReplyDelete
  2. மிக அழகாகத் தொகுத்துச் சொல்லி வருகிறீர்கள் சீனு. படித்து விட்டேன்.

    ReplyDelete
  3. மனதை நெருடச் செய்யும் சம்பவம் இதுக்கு முன் அறிந்ததே கிடையாது...
    தமிழக அரசினது கவலை பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்
    சேர்ந்து பயணிக்கிறேன்

    ReplyDelete
  4. பலருக்கு தெரியாத தகவலைத் தந்திருக்கிறீர்கள். தனுஷ்கோடி புயலில் சிக்கிய அந்த திரையுலக பிரபலங்கள் திரு ஜெமினி கணேசனும் அவரது துணைவி நடிகையர் திலகம் சாவித்திரியும் தான் என நினைக்கிறேன்.பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. திகிலடிக்கும் கட்டுரை, தொடர் முடிந்ததும் ஒரு மின் புத்தகமாக போடுங்கள் சீனு!

    //அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார்.//
    :)

    ReplyDelete
    Replies
    1. நானும் இதை குறிப்பிட நினைத்தேன்..தமிழக மீனவர்கள் என்று அழைக்கும்போது இந்தியாவை நாடினார் என்பதில் தவறில்லை.நீ இப்படியே எழுத்து சீனு...வரும் காலத்தில் இப்படிதான் எழுதப்படவேண்டும் என விரும்புகிறேன்.

      Delete
  6. எத்தனை கொடுரம் ... அறிய தந்த உங்களுக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. இந்த இயற்கையின் சீற்றத்தை, சமீபத்திய சுணாமிக்கு நான்கு நாட்களுக்கு முன்,
    தீபம் தொலைகாட்சியில் ஒளிபரப்பினார்கள்.

    இப்படியும் இயற்கையின் சீற்றங்கள் இருக்குமோ.... என்று ஜீரனிக்க இயலாதிருந்தபோதே....

    கண்முன்னே அந்த துயரங்கள்...

    அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  8. அருமை சீனு....தமிழ்நாட்டுக்குள்ளேயே உள்ள தமிழர்கள் வேறு வேறு நாட்டில் வாழ்வதை போல உணர்கிறேன்.இதுதானே வரலாறு..இதை குறித்து பாடங்களில் ஏன் தருவதில்லை.இன்னும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.நண்பன் சொல்வது போல மின் புத்தகமாக கட்டாயம் வெளியிடவும்.

    ReplyDelete
  9. //இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். //

    GREAT! அருகில் புகைபடத்தில் இருப்பவர் அவர் தான் என்று நினைக்கிறேன்.அவர் உயிருடன் இருக்கிறாரா? இருந்தால் இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம். அவரை பற்றி இன்னும் சில வரிகள் குறிபிட்டு இருக்கலாம். தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. "புயல் வந்தன்னைக்கு தன் குடும்பத்தோட அடுத்தவங்க புள்ளை குட்டிகளையும் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டு நீந்தி கரை சேர்த்திருக்காரு எங்கப்பா. அதனாலேயே அவருக்கு ‘ நீச்சல்’ காளினு பேரு.. நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் இந்த தனுஷ்கோடிய விட்டு கடைசிவரைக்கும் வெளியே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்து போன வருஷம்தான் செத்துப் போனாரு. ‘மறுபடியும் தனுஷ்கோடிக்கு உயிர் வரும்டா’ன்னு நம்பிக்கையோட சொல்லிக்கிட்டிருந்தவரு, போன வருஷம்தான், தொண்ணூத்தி ரெண்டு வயசுல உசுர விட்டுட்டாரு. அவரு சொன்னமாதிரி இந்த தனுஷ்கோடிக்கு ஒரு ரோடு போடச் சொல்லி பல அதிகாரிகளச் சந்திச்சு மனு கொடுத்துக்கிட்டே இருக்கேன்" என்கிறார் தனுஷ்கோடியைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த மீனவரான காளி. நம்புராஜன்.

    தகவல் : http://kalyanje.blogspot.com/2011_03_01_archive.html

    ReplyDelete
  11. தகவல் : http://kalyanje.blogspot.com/2011_03_01_archive.html

    //இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் காளி ஊடகங்களிடம் தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ்கோடியின் தெற்கு மூலையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அதன் முன் உள்ள திடலில்தான் அவர் விளையாடிக் கொண்டிருப்பார். 1964 புயலின் போது ராட்சச அலைகள் தனுஷ்கோடியைத் தின்ற போது, அந்தப் பிள்ளையார் கோயிலும் கடலுக்கடியில் மூழ்கிப் போனது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிள்ளையார்கோயிலின் உச்சி வெளியே தெரிய ஆரம்பித்த்திருப்பதாகவும் அதைத் தான் கண்ணால் கண்டதாகவும் காளி தெரிவித்தார்.

    “கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
    தனுஷ்கோடி மீண்டு விட வேண்டும் என்ற ஒரு கிழவனுடைய உள்மனதின் ஆசையாக, கனவின் பிரதிபலிப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். //

    ReplyDelete
  12. தனுஷ்கோடி என்ற பெருக்கு பின்னால் இருக்கும் சோகத்தை / அவலத்தை தெரிந்து கொள்ள வித்தாக அமைந்த இந்த பதிவுக்கும் வலைதள உரிமையாளர் சீனு அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  13. இன்றுதான் முதல் பாகத்தையும்..இரண்டாம் பாகத்தையும் முழுமையாக படித்தேன், அந்த கொடூர சம்பவத்தை மிக அருமையாக தொகுத்திருக்கிறாய்...வார்த்தை உபயோகம் அருமை மச்சி...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. இப்பதான் இந்த தொடர் கண்ணில் சிக்கியது. ரொம்ப நாளாக எதிர்பார்த்தது எங்கேனும் அதிக தகவல் கிடைக்குமா என்று! உங்கள் பதிவில் தெளிவாக விளக்கங்கள் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி சகோ. சீனு

    (படங்களுக்கு கீழ் சிறுகுறிப்பு கொடுங்களேன். தெரிந்துக்கொள்ள வசதியா இருக்கும்)

    ReplyDelete
  15. \\மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று.\\
    என்ன கொடூரம்...ஒருவேளை அத்திப்பட்டி நிகழ்வு இதைவைத்துதான் சிந்தித்திருப்பார்களோ... ஒரு வரலாற்று சோகத்தை அப்படியே கண் முன் நிறுத்தியது போல் உங்கள் எழுத்து.அருமை சீனு.

    ReplyDelete
  16. “கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

    நம்பிக்கை கீற்று ...!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  17. அந்த சமயம் ஜெமினி கணேசன், சாவித்திரி இராமேஸ்வரம் சென்றிருந்தனர். அவர்கள் தனுஷ்கோடி செல்லும் பயணம் தடைப்பட உயிரிழப்பிலிருந்து தப்பினர் என்பது அந்தக் காலத்துச் சேதி!

    ReplyDelete

  18. 1964 ல் தனுஷ்கோடியில் அடித்த புயல் எனக்கு இன்னமும் நன்றாகவே நினைவில் இருக்கிறது.

    இதுவரை அடித்த புயல்களில் இதற்குப்பிறகு, நாகையில் 1977 அடித்த புயல் தான் இந்த தீவிரம் கொண்டு
    இருந்தது. பொருட்சேதங்கள் பொருத்த வரை.

    இன்றைய தேதியில் இருக்கும் தொழிற் நுட்பச் சாதனங்கள் அன்று இருந்திருந்தால் அந்த ரயிலைக்
    காப்பாற்றியிருக்கக்கூடும்.

    இயற்கையின் சீற்றத்தை யார் தவிர்க்க இயலும் ??

    சுப்பு தாத்தா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தாத்தா, இன்றைய தொழில்நுட்பம் இருந்தும் நம்மால் சுனாமியை தடுக்க முடியலையே.. நம்ம கண்ட்ரோல் எல்லாம் ஒரு எல்லை வரைக்கும் தான் இல்லையா? ;)

      Delete
  19. கண் முன்னே சம்பவம் நடப்பது போன்ற அழகான விவரிப்பு! அருமையான தொடர்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  20. அந்த நாட்களில் செய்திதாள்கள் கூட இந்த நிகழ்ச்சியைப் பற்றி இத்தனை விரிவாக செய்தி போட்டதாக நினைவு இல்லை.

    இயற்கையின் சீற்றத்திற்கு முன் மனிதன் எங்கே என்று தோன்றுகிறது.

    நல்லதொரு விளக்கமான பதிவு.
    வாழ்த்துகள் சீனு!

    ReplyDelete
  21. தனுஷ்கோடி பற்றி எப்போதோ கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே சமீபத்தில் தான் போயிருந்தேன். அதன் அழிவுச் சின்னங்களை பார்த்தபோது உண்மையில் மனம் பதைக்கவில்லை.. ஆனால் இன்று உங்கள் பதிவை படித்து விட்டு அதை மீண்டும் எண்ணத் திரையில் காணும் பொழுது வலிக்கிறது..

    அருமையான நடை. இந்தத் தொடரை நிச்சயம் எதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பவும்..!

    ReplyDelete
  22. தனுஷ்கோடிக்குப் புதிதாக சாலை போடுகிறார்கள் என்று இரண்டு மூன்று நாட்களுக்குமுன் செய்தித் தாளில் படித்தேன். அப்போதே உங்கள் இந்தப் பதிவுகள் என் நினைவில் வந்துபோயின. :)))

    ReplyDelete