18 Dec 2012

சிவாஜி 3D - ரஜினி என்னும் ஆளுமை


ஜினி தலைவனாஆளுமையா, வழிகாட்டியா என்றெல்லாம் எனக்கு தெரியாது ரஜினியால் மிகச் சிறந்த பொழுதுபோக்கு படத்தைத் தரமுடியும், அவர் படத்தைப் பார்த்தால் அதன் தாக்கம் நிச்சயம் பல மாதங்களுக்கு இருக்கும், அவர் படப் பாடல்களும் வசனங்களும் நெடுநாட்களுக்கு ஜீவித்து இருக்கும், அவரது ஸ்டைலை பயிற்சி செய்து பார்ப்பது பலரது வாடிக்கையாக மாறி இருக்கும், அவரை கிண்டல் செய்து ஜோக் அடித்தால் அது கூட ஹிட் ஆகும். விளம்பரப் படங்களில் அவர் நடித்தது இல்லை ஆனாலும் ரஜினி என்னும் மாதிரியைக் கொண்டு வெளிவந்த விளம்பரப் படங்கள் ஏராளம்


வர் அடையாள உண்ணாவிரதம் இருந்தால் தொலைகாட்சிகளுக்கு அது இறைவன் கொடுத்த வரம்அறுபது வயதைக் கடந்த பின்பும் அனைத்து தரப்பு இயக்குனர்களுக்கும் கனவு (கதா)நாயகனாக இருக்கிறார். அனைத்து கனவு கண்ணிகளுக்கும் ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்பது மட்டுமே அடிகடி வரும் கனவு. இன்று பிறக்கும் குழந்தைக்கும் ரஜினி பிடித்துப்போய் விடுகிறது என்பது தான் ஆச்சரியமான விஷயம்.     

ள்ளியில் படித்த காலம், வகுப்பு சரியாக நியாபகம் இல்லை, ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம், ரஜினியா கமலா என்ற சண்டை வரும் போதெல்லாம் கமல் ரசிகர்கள் சொல்லுவது "ரஜினி ஒரு மெண்டல் அவன் ரசிகனும் மென்டலா தான் இருப்பான்", ரஜினி ஒரு மெண்டல் இந்த வார்த்தைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது, இதை கேட்டு சில சமயங்களில் மைதானத்தில் உருண்டு புரண்டதேல்லாம் உண்டு


சமீபத்தில் தினத்தந்தியில்   படித்த பொழுத தான் உண்மை தெரிந்தது அதிகமான படங்களில் தொடர்ந்து நடித்த காரணத்தால் அவருக்கு மனசோர்வு ஏற்பட்டு இயல்புக்கு மீறி நடந்துள்ளார் என்று. இருந்தும் அவற்றை எல்லாம் கடந்தும் இன்று ஒரு வெற்றிபெற்ற மனிதனாக, பலருக்கும் தலைவனாக, வழிகாட்டியாக, ஆன்மீகவாதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது எல்லாம் ஒரு புறம் இருக்க அவர் வர வேண்டும் என்று பலரும் அவர் வரக் கூடாது என்று அதைவிடப் பலரும் இறைவனை வேண்டிக் கொண்டுள்ளார்கள். ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று பயபடுபவர்களில் பலரும் பரம்பரை அரசியவாதிகள் என்பது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ரஜினியின் அரசியல் பேச்சுக்கள் மிகவும் சூடானவை எளிதில் தீபிடிதுப் பரவக் கூடிய அபாய மிக்கவை அவை, 1996இல் திமுக சார்பில் பேசினார், சமீபத்திய தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் ஓட்டு போட்டுவிட்டு தன் விரல்களால் இரட்டை இலையை காண்பித்தார் என்றெல்லாம் சர்ச்சை எழுந்தது

தேசிய நதிநீர் இணைப்பு பற்றி ரஜினி கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம், மாநில நதிநீர் இணைபிற்காவது அவர் முயன்றிருக்கலாம் என்பது மட்டுமே எனது ஆதங்கம். ரஜினி மாநில நதிநீர் இணைப்பு பற்றி குரல் கொடுத்தால் நிச்சயம் அது நடக்கும்கர்நாடகம் பற்றிய பேச்சும், குசேலன் படமும் தமிழகத்தில் அதிரடி கிளப்பியவை, பாபாவின் வீழ்ச்சி ரஜினியை எழுந்திருக்க விடாது என்றும் குசேலன் குடுத்த அடி ரஜினியை இல்லாமல் செய்துவிடும் என்று புரளி பேசியவர்கள் அனைவரும் சந்திரமுகியையும், எந்திரனையும் கைதட்டி ரசித்திருப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.

ஜினி மீது ஈர்ப்பு வரக் காரணம் ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல், ஸ்டைல்  மட்டுமே, அவரிடம் அப்படி என்ன ஸ்டைல் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், அவர் செய்வது அனைத்துமே ஸ்டைலாகத் தான் இருக்கும் என்பது மட்டுமே நமக்கு கிடைக்கும் பதிலாக இருக்கும், அவருடைய வேகமான விறுவிறுப்பான பேச்சு, ஒற்றை சுண்டுவிரலை வாயில் வைத்து நெளிந்து கொண்டே சிரிக்கும் அவரது சிரிப்பு, சிறிய கண்களை மேலும் சுருக்கி கோபமாக வீரமாக பேசும் வசனம், கம்பீரமாக நடக்கும் நடை, எதில் இல்லை ரஜினியின் ஸ்டைல். ரஜினியை பற்றி பக்கம் பக்கமாக பேச  எவ்வளவோ இருக்கிறது இருந்தும் ரஜினி பற்றிய வாழ்த்துப்பாவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

சிவாஜி 3D

ஜினியின் எந்த படமும் முதல் காட்சி பார்த்தது இல்லை, சிவாஜி 3Dயை யாவது முதல் காட்சி பார்க்கலாம் என்றால் விதி ப்ரோஜெக்ட்டர் வடிவில் சதி செய்தது. 3D ப்ரோஜெக்ட்டர் தென்காசியில் இறக்குமதி ஆகாத காரணத்தால் சிவாஜி 3D முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு நழுவியது. தலைவரின் எந்த படம் டிவியில் போட்டாலும் சரி எத்தனையாவது முறை டிவியில் போட்டாலும் சரி நமக்கு அதை விட வேறு என்ன  போக்கு நிகழ்ச்சி வேண்டும் ராஜாதி ராஜா, மன்னன், குருசிஷ்யன் போன்ற படங்கள் ராஜ் டிவிக்கே போர் அடித்தாலும் எனக்கு போர் அடிக்காது

திருவான்மியூர் S2 திரைஅரங்கம், திங்கட்கிழமை மதிய காட்சிக்கு அரங்கம் நிறைந்திருந்தது. படம் ஆரம்பமாகியதும் அருகில் அமர்ந்திருந்த ஐந்து வயது சிறுவன் அவன் அப்பாவிடம் சொன்னான் "அப்பா ரஜினி வரபோராறு பேசமா படம்பாரு"


ற்கனவே வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படத்தை 3D தொழில்நுட்பத்தில் விருந்தளிக்க வேண்டும் என்ற ஆர்வம் தயரிபாளர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும், அதற்கான சோதனை ஓட்டமாக சிவாஜி 3Dயை வெளியிட்டு உள்ளார்கள், சோதனை ஓட்டத்திற்கும் கூட ரஜினி தான் தேவைப்படுகிறார், காரணம் ரஜினி படம் என்றால் எப்படியும் பெரும்பாலனா ரசிகர்கள் பார்க்க வருவார்கள், 3D தொழில்நுட்பம் குறித்த விவாதங்கள் பட்டிதொட்டியிலும் நடைபெறும், இதில் ஈர்க்கப்பட்டு மேலும் பல படங்களை 3Dயில் வெளியிடலாம் என்பது மட்டுமே இவர்களின் சிந்தனையாக இருக்க முடியும் இருந்தும் சிவாஜியை 3Dயில் பார்பதற்கு அருமையாக உள்ளதுசமீபத்தில் லைப் ஆப் பை படம் 3Dயில் பார்த்துவிட்டு அசந்துவிட்டேன், அவதார் படத்தை விட லைப் ஆப் பை படம் 3Dயில் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது, அவதாரும் மிக அருமையாக இருக்கும் (காடும் காடு சார்ந்த காட்சிகளும்). 

சிவாஜி 3D மிக மிக அருமை, 2D யில்  எடுக்கப்பட்ட ஒரு படத்தை 3Dயில் மாற்றுவது மிக மிக கடினம், 3D படம் என்றால் அதற்காகவே பிரத்யேகமான காட்சிகள் இருக்க வேண்டும், கதாப்பாதிரங்களின் அங்க அசைவுகள் பார்வையாளரை நோக்குவதாக இருக்க வேண்டும், இதற்கும் மேல் எவ்வளவோ நுட்பங்கள் இருக்கலாம், இவை எதுவும் 2Dயில் திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்காது, இருந்தும் இது போன்ற காட்சிகளை வெகு நுட்பமாக கவனித்து 3Dயில் மேருகேற்றி உள்ளார்கள். ஒவ்வொரு பாடலிலும் 3D உழைப்பு கண்ணை கவருகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பிம்பங்களை 3Dயில் வெகு அழகாக காண்பித்து உள்ளார்கள். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் 3Dயில் பாருங்கள்.

படத்தின் நீளம் கருதி அரைமணி நேரப் படத்தை வெட்டி விட்டார்கள், சில முக்கியமான காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளும் வெட்டுப்பட்டு விட்டன,  மியூசிக் ஸ்டோரில் வைத்து நடைபெறும் சண்டைக் காட்சியை வெட்டிய பொழுது அருகில் இருந்த சிறுவன் " ப்பா நல்ல பைட் பா போட சொல்லுங்கப்பா " என்றான், கிட்டத்தட்ட அனைவரும் அதே பீலிங்கில் இருந்தோம். மூன்று மணி நேர படத்தை இரண்டரை மணி நேரம் ஆக்கி இருப்பது   நல்லது தான். தமிழ் சினிமாவின் புதிய முயற்சி, இது போன்ற பல நல்ல படங்களை கோலிவுட் முயன்றால் நன்றாக இருக்கும், குறிப்பாக எந்திரனை!             


16 comments:

  1. Sema class article machi..

    Nanben daa..

    kalakitta..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா :-) ஆனா என்ன கலாய்களையே

      Delete
    2. அட சூப்பரா இருக்கப்பு

      Delete
  2. "அதிகமானபடங்களில் தொடர்ந்து நடித்த காரணத்தால் அவருக்கு மனசோர்வு ஏற்பட்டுஇயல்புக்கு மீறி நடந்துள்ளார் என்று. இருந்தும் " அதுவல்ல காரணம் அதிகமான மது பாவனை (மாது உட்பட)

    "கர்நாடகம் பற்றிய பேச்சும், குசேலன் படமும் தமிழகத்தில் அதிரடிகிளப்பியவை, " அதற்க்கு பிறகு கர்நாடகா போய் அடித்த பல்டியை வசதியாக மறந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //அதுவல்ல காரணம் அதிகமான மது பாவனை (மாது உட்பட) // தெரியும் சார், நீங்கள் கருப்புப் பக்கங்களைப் பார்கிறீர்கள், நான் அது தேவை இல்லை என்று ஒதுக்குகிறேன்...

      //அதற்க்கு பிறகு கர்நாடகா போய் அடித்த பல்டியை வசதியாக மறந்து விட்டீர்கள். // நான் எங்கே சார் மறந்தேன்

      //"கர்நாடகம் பற்றிய பேச்சும்// இந்த வரிகளில் மொத்தமும் அடங்கி விட்டதே, தனித் தனித்தனியாய் சொல்ல விரும்பவில்லை என்பது மட்டுமே நிஜம்

      ரஜினி என்னும் இமயம் திரை உலகில் செய்த சாதனைகள் யாராலும் தொட முடியாது அதற்க்கு முன் நான் எல்லாம் தூசு

      Delete
  3. ரஜினி ஸ்டைல் ஸ்டைல் ஸ்டைல் சரிதான்....நானும் ரசிகன்தான்.அதை அரசியலில் கலக்கும் அளவுக்கு தேவையில்லை என்றே நினைக்கிறேன்.அவர் அரசியலுக்கு வந்தோ இல்லை தீவிரமாக தமது திட்டங்களை ரசிகர் மன்றங்கள் மூலம் செயல்படுத்தினாலோ வரவேற்கலாம்.பள்ளிகூடத்துக்கு புக் கொடுப்பது,ரத்த தானம் செய்வதுலாம் மீறி இன்னும் எதிர்பார்க்கிறோம்.அப்படி இல்லைனா பணத்துக்கு நடிக்கிறார்...பார்க்கிறோம் ரசிக்கிறோம் அவ்வளவுதான்.

    பதிவின் இரண்டாம் பாதிக்கு அப்படியே Harry Rushanth பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்.இப்போதும் ஒன்னும் கெட்டுடல..காவேரிக்கு அவர் போராட்டான்களை முன்னெடுக்கலாம்..உண்மையாவே அக்கற இருந்தா...

    ReplyDelete
    Replies
    1. ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது அண்ணா, அவரால் மட்டும் நல்ல தொண்டர்களை அடையாளப் படுத்த முடியுமா என்ன? அவர் ஒதுங்கி இருப்பது மட்டுமே தமிழகத்துக்கு நல்லது...

      மிக்க நன்றி அண்ணா

      Delete
  4. லிஸ்ட்டில், ரஜினி பெயர் போட்டால் பதிவின் ஹிட்டும் அதிகரிக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளவும்!
    தேசிய நதிநீர்-மாநில நதிநீர்...? விளக்கவும்!
    வெட்டிக் குறைத்திருப்பதே தெரியாது என்று விளம்பரம் செய்தார்களே...! தெரிகிறதா?
    ஆக, பார்த்து விட்டீர்கள்! எந்திரனையுமா?!!

    ReplyDelete
    Replies
    1. தேசிய நதிநீர் - கங்கா முதல் காவிரி வரை இணைப்பது, அதாவது இந்திய அளவில் இருக்கும் அத்தனை நதிகளையும் இணைத்து பசுமை இந்தியாவாக மாற்ற முயல்வது.. இது மதிய அரசு கையில் இருக்கிறது. தேசம் ஒன்று பட வேண்டும்...

      மாநில நதிநீர் இணைப்பு - காவிரியையும் தமிரபரணியையும் இணைப்பது, இது மதிய மாநில அரசு கைகளில் உள்ளது.. ஒரு மாநிலத்திற்கு விளிபுப்ணர்வு எற்படுதுவது எளிது, போராட்டம் நடத்துவது எளிது, போராடிப் பெறுவது எளிது, ஆனால் பிள்ளையார் சுழி போடுவது மட்டுமே அரிதாய் உள்ளது...

      நான் கூறியதில் பிழை இருக்கலாம், காரணம் இது என் மனதில் தோன்றிய கருத்துக்கள், இதன் பின்புலம் சட்ட சிக்கல் பற்றி தெரியவில்லை

      //லிஸ்ட்டில், ரஜினி பெயர் போட்டால் பதிவின் ஹிட்டும் அதிகரிக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளவும்!// நிச்சயம் உண்மை தன சார்

      Delete

  5. கும்பகோணத்தில் இதே நிலை தான் அங்கும் படம் வெளியாகவில்லை

    ReplyDelete
  6. அருமை அருமை அருமை !!
    பதிவு மிகவும் அருமை !!

    ReplyDelete
  7. ரஜனி புகழ் பா இன்னும் ஓயவில்லை போல...
    நல்ல மனிதர் ரஜனி சார்.....

    எனக்குக் கூட முத்து பாட்ஷா படையப்பா தளபதி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.... அலுக்கவே அலுக்காது

    ReplyDelete
  8. ரஜனி போல் வருமா!

    ReplyDelete
  9. அண்ணா, நலமா? தொழிற் களம் குழுவில் இருந்து அழைத்தார்கள், உங்களையும் என்னையும் (.....!) வரவேற்பு குழுவில் இருப்பதாக சொன்னார்கள் . என் அலை பேசி எண்ணை மின் அஞ்சல் செய்கிறேன்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. அலை பேசி எண் 7708793396
    மின் அஞ்சல் முகவரி :chezhiyan7@gmail.com

    ReplyDelete