4 Dec 2012

குறும்படம் இயக்குவது எப்படி? நாளைய இயக்குனர் இளனுடன் ஒரு சந்திப்பு

"பாஸ் எடிட்டர் மணிகுமரன் டீம ஒரு இன்டர்வியு எடுப்போமா, ஷார்ட் பிலிம் பண்ண நினைகிரவங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்", வழக்கமான ஒரு தேநீர் இடைவேளை, அலுவல் கடந்த வார்த்தைகளுக்கு இடையில் சுரேஷ் என்னிடம் கேட்ட இந்த கேள்வியை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டேன். காரணம் மணிகுமார் மற்றும் அவனது டீம் எங்களது இன்டர்வியுவிற்கு சம்மதிபார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. மேலும் நாங்கள் எடுக்கப்போவது டிவி பேட்டியோ அல்லது பத்திரிக்கைப் பேட்டியோ அல்ல, ஒருவேளை எங்களது சந்திபிற்கு சம்மத்திதாலும் முழுமனதுடன் பதிலளிப்பார்களா என்பதும் சந்தேகமே. இந்த விவாதம் பல நாட்களாக எங்களுக்குள் நடந்து கொண்டிருந்தது, சுரேஷ் என்னை விடவில்லை, அசிங்கபட்டாலும் பரவாயில்லை முயற்சி செய்து தோற்றுப்போவோம் என்றார். 

இயக்குனர் இளன்
சரவணன் - சுரேஷ் 
ரவணன் மற்றும் சுரேஷ் எனது சீனியர் ஆபீசர்கள்(!). என்ன இருந்தாலும் சீனியர் ஆபிசர்கள் என்பதால் அலுவல் கடந்த பேச்சு வார்த்தைகள் எங்களுக்குள் மிகக் குறைவு, இருந்தும் எண்ண அலைகள் ஒத்துப் போகும் இடத்தில் புதிய நட்புகள் உருவாவது சகஜம் தானே... சரவணன் புதிய வலைபூ தொடங்கியுள்ளார், அவர் பதிவு எழுதியதும் முறையான அறிமுகம் தருகிறேன்.சுரேஷ் ஆங்கில பிளாகர் (இதை வெகுகாலமாய் என்னிடம் மறைத்து விட்டார்) மற்றும் இவருக்கு வீடியோ-கிராபியில் ஆர்வம் அதிகம் அதனால் யு-ட்யுபில் சேனல் ஒன்று வைத்துள்ளார்.)

மற்றுமொரு அலுவலக நண்பர் சதீஷ் 

சென்னை சோம்பல் முறிக்கும் ஞாயிற்றுக்கிழமை நடுப்பகல் மணிகுமரன் உதவியுடன் இளம் இயக்குனர் இளன் மற்றும் அவர்களது காமெரமேன் ராஜாபட்டார்ச்சர்ஜி(ராஜா-பட்டார்ச்சர்-ஜி) ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன விதமான கேள்விகள் கேட்கப் போகிறோம் என்ற தயாரிப்புடன் தான் சுரேஷ் களத்திற்கு வந்திருந்தார். அவரது கேள்விகளைப் பார்த்ததும் முதலில் பயந்தேன் ஆனால் அவரது கேள்விகள் அனைத்திற்கும் தயக்கப்படாமல் பதிலளித்த அந்த டீமின் பெருந்தன்மையை நினைத்து வியந்தேன். காரணம் சுரேஷ் கேட்ட கேள்விகள் அனைத்தும் தொழில் ரகசியங்கள். எளிதில் ஒருவர் மற்றொருவருக்கு பகிர்ந்து கொள்ள மறுக்கும் தகவல்கள். 

இளம் இயக்குனர் இளனிடம் கேட்ட மிக முக்கியமான கேள்விகள் :

  1. குறும்பட இயக்குனர் ஆவது எப்படி?
  2. குறும்படத்திற்கு கதை எந்த அளவு முக்கியம்?
  3. கதை எழுதும் எல்லாராலும் டைரக்ட் செய்ய முடியுமா இல்லை தொழில் நுட்ப அறிவு தேவையா?
  4. கதை விவாதங்களில் டேச்னிகள் டீம் இருப்பது அவசியமா? 
  5. உங்கள் கதை விவாதம் எப்படி எந்த சூழ்நிலையில் நடைபெறும்? 
  6. குறும்படத்தில் பெண்களை நடிக்க வைப்பதில் இருக்கும் சவால்கள் மற்றும் அதை எதிர்கொள்வது எப்படி? 
  7. படத்திற்கான பட்ஜெட், லொகேஷன் மற்றும் இதர விசயங்களை கையாள்வது எப்படி?

ந்த ஒரு கேள்விக்கும் மறுப்போ சலிப்போ இல்லமால்,சாதாரண கேள்விகளில் இருந்து மிக நுட்பமான கேள்விகள் வரை அனைத்திற்கும் பதிலளித்தார்கள். சுரேஷ் எடுத்து வைத்த முதல் படியின் முதல் வெற்றி. 

"ரொம்ப ஓவரா தான் கேள்வி கேட்டுடாரோ" என்ற எண்ணம் அந்த சந்திபிற்குப் பின் என் மனதில் எழுந்தது. இந்த சந்திப்பை எந்த அளவிற்கு அழகாக காட்சிபடுத்துவார் என்பதில் எனக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி ஒரு புதிய தகவல் சொல்லுவார், அவற்றைக் கேட்கவே மலைப்பாக இருக்கும். எவ்வளவோ கடினமான வேலைகளை எல்லாம் எளிதாக செய்தவருக்கு மிகப் பெரிய சிக்கல் என் ரூபத்தில் வரும் என்று நான் நான் சிறிதும் நினைத்திருக்க வில்லை . என்னை ஒரு காட்சியில் பேச வைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றார், நானோ முடியவே முடியாது என்று இரட்டைக் காலில் நின்றேன்.
இவன் தீ என்று புரிகிறதா(!)

ந்த வீடியோவிற்கு உண்டான எல்லா வேலைகளையும்ஒரு மாதத்திற்கு முன்பே செய்து முடித்து விட்டார். அவர் மனதில் வைத்திருந்த எனக்கான காட்சிகள் மட்டும் டிஜிட்டலில் பதிவேரமால் இருந்தது. தினமும் போன் செய்து "பாஸ் இன்னைக்கு ஷூட் பண்ணலாமா", " வார சண்டே நீங்க ப்ரீயா" என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் மனம் மாறவில்லை. என்னால் ஒரு விஷயம் தள்ளிபோவது பிடிக்கவில்லை, என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நானும் ஒரு நல்ல நாளில் சரி சொல்லி விட்டேன், ஒன்றும் உருப்படியாக வரவில்லை, "எனக்கு நடிக்கத் தெரியாது" என்ற சிம்புவின் காமெடி வசனத்தை நன் சீரியசாக சொல்லியும் அவர் நம்பவில்லை. முடியவே முடியாது என்ற எனது பழைய டேப் ரிக்காடர் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஓடத் துவங்கியது. நடிபிற்கான நோபல் பரிசை எனக்கு வாங்கித் தருவதில் சுரேசுக்கு என்ன ஆர்வமோ, அது அந்த ஆஸ்காருக்கே வெளிச்சம் ( விதி வலியது அந்த பத்து செகன்ட் கொடுமைய நீங்க அனுபவிச்சு தான் ஆகணும்) 

சுரேஷ் இவ்வளவு அழகாக ஒரு படைப்பை உருவாக்குவர் என்று நான் சிறிதும் எதிர்பார்த்து இருக்கவில்லை. குறும்படம் எடுப்பது எப்படி என்பதற்கு ஒரு இயக்குனர் வகுப்பு எடுத்தால் எப்படி இருக்குமோ அதை அப்படியே வெளிபடுத்தியுள்ளார். மிக அழகான எடிட்டிங், அதை நான் மிகவும் ரசித்தேன். இந்தப் பதிவைப் பொறுத்த வரையில் என்னுடைய உழைப்பு மிஞ்சிப்போனால் இந்த ஐநூறு வார்த்தைகள் மட்டுமே.


ஆனால் " தலைவா யு ஆர் கிரேட், என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க..."

இயக்குனர் இளனின் சந்திப்பு - கானொளியில் 






பின்குறிப்பு இளன் பற்றிய தனிபதிவு விரைவில் எழுத உள்ளதால் இப்பதிவில் அவரைப் பற்றி அதிகம் எழுதவில்லை.

40 comments:

  1. பேட்டிக்கு ஒரு முன்னோட்டமா ரைட்டு !

    புகைப்படங்கள் எல்லாமே நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி மோகன் சார்... கெள்ள வீடியோ இருக்கு அதையும் கொஞ்சம் பாத்ருங்க சார்....

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி நண்பா

      Delete
  3. குறும்படங்களில் நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தால் விரைவில் நீங்களே ஒரு குறும்படம் இயக்கினால் ஆச்சரியப்படமாட்டேன் சீனு! :))

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார் குறும்படம் இயக்கும் ஆசை எல்லாம் இல்லை... இயக்கும் பொழுது அருகில் நின்று பார்க்கும் ஆசை மட்டுமே உள்ளது...
      ஒரு வேளை நான் இயக்கினால் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு ...சம்மதமாஆஆஆஆஆஆஆஆ .......

      Delete
  4. பதிவைப் படித்துக் கொண்டு போகும் போது எங்க டிப்ஸ்களைச் சொல்லாமல் போய்விடுவீர்களோ என்று யோசித்தேன்
    அழகாக கானொளியில் சொல்லியிருப்பது மிகவும் பிரயோசனமாக இருக்கிறது...

    எந்த வித அடிப்படை அறிவுமில்லாமல் இரண்டு குறும்படங்களை எடுத்தவன் நான் ,,,
    இப்போது குறும்படத்தின் துணுக்குகளை அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் அடுத்த படம் இயக்குனரின் துணுக்குகளுக்கு இசைவாகவே செய்யப் போகிறேன் ...

    வீடியோ எடிட்டிங்க சூப்பரோ சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. //எந்த வித அடிப்படை அறிவுமில்லாமல் இரண்டு குறும்படங்களை எடுத்தவன் நான் ,,,// அந்தக் குறும்பட லிங்க் தல

      //அழகாக கானொளியில் // எல்லாம் சுரேஷ் செயல் ... :-)

      உங்களுக்கு இது மிகவும் பயனுள்ள பதிவாக அமைந்ததில் மிக்க சந்தோசம் நண்பரே

      Delete
    2. அதோட லிங்குகள் இல்லை பாஸ்...
      அது சில சமூக செய்திகளை எடுத்துச் சொல்வதாக இருந்ததனால் முதலில் அதனைப் பார்த்தவுடனேயே என் பாஸூ...வெளிநாட்டுக் காரன் காசைத் தஙந்து வாங்கிட்டுப் போயிட்டான்..... யூடியூப்ல எங்கயாச்சும் அப்லோட் பன்னியிருப்பான் என்னு இன்னமும் தேடிக்கிட்டுத்தான் இருக்கிறேன் கிடைச்சா தாரேன் நண்பா

      Delete

  5. //இவன் தீ என்று புரிகிறதா(!)//

    புரியல.

    ReplyDelete
    Replies
    1. நம்ம "தீ" பட சுந்தர் சி.யா இருப்பாரோ

      Delete
    2. //புரியல//

      சபீனா போட்டு விளக்குனா புரியுமா

      Delete
    3. //நம்ம "தீ" பட சுந்தர் சி.யா இருப்பாரோ//

      நீ நல்ல படமே பார்க்க மாட்டியா... சுந்தர் சி, பேரரசு, இப்டியே பாரு

      Delete
  6. என்னை ஒரு காட்சியில் பேச வைத்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றார், நானோ முடியவே முடியாது என்று இரட்டைக் காலில் நின்றேன்.

    உங்களிடம் எனக்கு பிடித்தது வார்த்தைகளில் காட்டும் இந்த நகைச்சுவை

    அருமையான ஒரு பகிர்வு தங்கள் வரிகளில் ரசித்தேன்

    படத்தில் உங்களை பார்க்கிறப்ப ஒரு பெரிய இயக்குனர் சீன் யோசிக்கிற மாதிரி இருக்குது

    ReplyDelete
    Replies
    1. //படத்தில் உங்களை பார்க்கிறப்ப ஒரு பெரிய இயக்குனர் சீன் யோசிக்கிற மாதிரி இருக்குது // சும்மாவே என்ன ஓட்டுவானுங்க இதுல இது வேறயா ....
      இருந்தும் மிக அற்புதமான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் சார்... மிக்க நன்றி

      Delete
  7. Interesting boss. வீடியோ எட்டிங் சூப்பர். அந்த Template என்ன After Effects ல இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. Hi Prabhu, I used After Effects for creating the Three Dimensional View of a Place [ie where some Sparks are falling]. That Cartoon is drawn using a Online Software where we just need to select the hair style,eye, nose and mouth etc. The Movements(Jumping) are done in Editing itself.

      Delete
    2. Can you tell me the software name. :-)

      Delete
    3. Software name is Toondoo. Editing done using Sony Vegas

      Delete
    4. தல நீங்க வேணா சரி சொல்லுங்க கற்போம் ல பதிவு போடா சொல்லிருவோம்... ஆனா அவரோட தாய் மொழி இங்ளிபீஸ் ஆச்சே என்ன பண்றது

      Delete
    5. ஹா ஹா ஹா. அதுக்கு இல்ல பாஸ், நானும் வீடியோ எடிட்டிங் துறை தான். அதான் எல்லாம் கேட்டேன் :-)

      Delete
    6. ஹா ஹா ஹா தெரியும் பாஸ்... உங்க FB PROFILE பார்த்தேன்... நான் சும்மா காமெடி தான் பணினேன்

      Delete
  8. சீனு, நீங்கள் ஒரு தீ.
    தீ பொறி போல் உள்ளது உங்கள் எழுத்து.

    இந்த வீடியோ உருவாக முக்கிய காரணமாக இருந்துவர் நீங்க தான்.
    ஆதலால், உங்களை ஒரு காட்சியிலாவது பயன்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம்.

    நான், உங்களை நடிக்க அழைக்கவில்லை. பேசத்தான் அழைத்தேன்.
    ஆனால், பிறகு தான் தெரிந்து கொண்டேன், நீங்கள் நன்றாகவும் நடிப்பீர்கள் என்று.

    நான் இது தான் முதல் முறை 'கூகுளே திருன்ச்ளிடேரடே' பயன் படுத்துவது.
    ஆதலால், இந்த சிறிய குறிப்புகளோடு இதை முடிக்கிறேன்.
    மீண்டும் வருகிறேன் இன்னும் நிறைய இருக்கிறது பேச!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாயகன் உதயமாகிறான்

      Delete
    2. தல அந்த வீடியோவில் இருக்கும் உழைப்பு முழுக்க முழுக்க உங்களுடையது.... நீங்கள் இன்றி எதுவும் நடந்திருக்காது... உங்களது அடுத்த படைபிர்காக வைடிங்

      Delete
    3. //ஒரு நாயகன் உதயமாகிறான்//
      தமிழ் சினிமாக்கு ஒரு உதயநிதி போதும் லே

      Delete
  9. அகில உலகமெல்லாம் ஒரு கலக்கு கலக்க போகும் எங்கள் மதிப்பிற்குரிய மரகதமே நீர் வாழ்க , உம் குலம் வாழ்க ...

    ReplyDelete
    Replies
    1. //அகில உலகமெல்லாம் ஒரு கலக்கு கலக்க போகும் எங்கள் மதிப்பிற்குரிய மரகதமே நீர் வாழ்க , உம் குலம் வாழ்க ...//

      சங்க காலத் தமிழ் பேசும் எங்க கால ராசா வாழ்க வாழ்க

      Delete
  10. வாழ்த்துகள் சீனு. காணொளியை விரைவில் பார்க்கிறேன். முதல் இரண்டு நிமிடங்கள் பார்த்தேன். வார இறுதியில் பார்க்க சேமித்து வைத்துவிட்டேன் உங்கள் பக்கத்தினை... :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. நிச்சயம் பாருங்கள் பகிருங்கள்

      Delete
  11. Replies
    1. மிக்க நன்றி அண்ணா .....

      Delete
  12. கலக்குங்க சீனு....மூணுமணிநேர சினிமாவில் சொல்லப்படும் விஷயத்தை பத்து நிமிச குறும்படங்கள் நேர்த்தியாக சொல்லிவிடுகிறது.பதிவுலகில் கலக்கிய நீங்கள் டைரக்டராகி கலக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. friend !!! Short flim editing pandurathu ku yantha software b est ???ple atha solluga.

    ReplyDelete
  14. friend !!! short flim editing panda, yantha soft ware use pandanum.... ple sollu g. My contact Num is 8883620543.

    ReplyDelete
  15. மிக்க நன்றி But direct very nice

    ReplyDelete