29 Nov 2012

சுஜாதா - கணேஷ் - வசந்த்


கையில் இருக்கும் காசு பேருந்தில் டிக்கெட் வாங்கவே சரியாய் போகும் காலத்தில் எங்கிருந்து காசு கொடுத்து நாவல்கள் வாங்கிப் படிப்பது. விகடனில் அவ்வப்போது வரும் சிறுகதைகளும் நூலகத்துப் புத்தகங்களும் மட்டுமே என்னிடம் சுஜாதா கதைகளை கூறி வந்தன. காரணம் சுஜாதா கூற்றில் நாங்கள் மத்யஸ்த்தர்கள். யாராவது ஒருவர் அதிசியமாக சுஜாதா புத்தகம் வாங்கி இருந்தால் அதைப் படிப்பதற்கு பெருங்கூட்டமே காத்திருக்கும். இந்த நேரதில் தான் சுஜாதா விகடனில் கணேஷ் வசந்த்தை வைத்து நாவல் ஒன்று எழுதினார், என் நியாபகம் சரி என்றால் அந்த நாவலின் பெயர் சில்வியா. ஒவ்வொரு வாரமும் விகடன் கையில் வந்ததும் அதை முதலில் படித்து விட்டு தான் மற்றதைப் படிக்கத் தொடங்குவோம்.  




சுஜாதா என்னும் பிரம்மா படைத்த வரலாற்று நாயகர்கள் தான் கணேஷ் வசந்த். இவர்களை அவ்வளவு நிஜப்படுத்தி இருப்பார், ரத்தமும் சதையும் கலந்த நம்முள் அந்த கற்பனைக் கதாபாத்திரங்களை ரத்தமும் சதையும் உள்ள வக்கீல்கள் என்று நம்ப வைத்தார். அவர்களை கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று எழுத வருத்தமாய் உள்ளது. அவர்களை நிஜம் என்றே மனம் நம்புகிறது. ஆன்மாவின் வலி உலக இன்னல்களைக் பேச வைத்தவரின் ஆன்மா அண்ட வெளியில் கலந்த பின்பு கூட கணேஷும் வசந்தும் நம் போன்றவர்களின் எண்ணங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். 



சென்னையும் இணையமும் ஒன்று கூடிய சம காலகட்டத்தில் சுஜாதாவைப் பற்றி தேடித் தேடி படிப்பேன், பாலஹனுமான் அவர்களின் தளம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, கணேஷ் வசந்த் என்றே தனி வலைபூ ஒன்று கூட உள்ளது, அதிலும் மூழ்கி முத்து இல்லை இல்லை பொக்கிசங்கள் பலவற்றை அறிந்து தெரிந்து கொண்டாயிற்று. இணைய உலகுடன் இணைந்த காலகட்டம் என்பதால் வாத்தியாரின் மின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன், அந்தத் தேடலில் சிக்கிய முதல் புத்தகம் "". வெகுநாட்களுக்குப் பின் படித்த சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல் அது. அறிவியல் உளவியல் சைக்கோ என்று விளையாடி இருப்பார். படிக்க படிக்க வெகு சுவாரசியமாக சென்று கொண்டிருந்த கதை , அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் பொழுது அதில் கணேஷ் வசந்த் வருவார்கள் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, அவர்கள் வந்ததும் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கீ போர்டின் டவுன் ஆரோ பக்கங்களை இன்னும் வேகமாகப் புரட்ட ஆரம்பித்தது. கணேஷ் வசந்தின் மீது ஈர்ப்பு வர காரணமான மிக முக்கியமான நாவல் அது.  படித்து முடித்ததும் எனது பேஸ்புக்கில் நான் போட்ட ஸ்டேடஸ் 


புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நாயகன் மண்டைக்குள் ஏற்படும் சப்தம் நம்முளும் ஏற்படும் பொழுது தொடங்குகிறது சுஜாதா என்னும் எழுத்தாளனின் வெற்றி...  ஆ!






தற்கு அடுத்ததாக எனக்குக் கிடைத்த மின்புத்தகம் கொலையுதிர் காலம், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மிரட்டலுடன் ஆவிகள் நிறைந்த அமானுஷ்ய நாவல் எழுதி இருப்பார் சுஜாதா, ஒவ்வொரு வரிகளும் அற்புதமாக இருக்கும், முழுவதுமாக கணேஷ் வசந்தின் ரசிகன் ஆனேன், இந்த காலகட்டத்தில் ஒரு சிறிய அலுவலகத்தில் வேலைக்கும் சேர்த்திருந்தேன், புத்தகங்கள் வாங்குவதில் இருந்த பிரச்னை விலகியது.  முதலில் வாங்கிய புத்தகம் வசந்த் வசந்த், புத்தகத்தின் பின் அட்டையிலேயே எழுதி இருப்பார்கள், கணேஷ் வசந்த் நாவலில் ஹாஸ்யம் உச்சத்தைத் தொட்ட கதை என்று, அதற்கு கொஞ்சமும் மாறமால் எழுதி இருப்பார், இப்படி ஒவ்வொரு புத்தகமாக கூறிக் கொண்டே சென்றால் நிச்சயம் இது ஒரு அரைகுறை புத்தக விமர்சனமாக மாறி விடும் அபாயம் உள்ளது, நான் படித்த அத்தனை சுஜாதா புத்தகங்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, அதனால் புத்தகங்ளில் இருந்து வெளி வருகிறேன்.






ணேஷை கட்டை பிரமசாரியாகவும், வசந்தை கட்டைகளைத் தேடும் பிரமச்சரியாகவும், இருவரின் பண்பு குண நலன்களில் அவர்களை எதிர் எதிர் துருவத்தில் வைத்தும் அழகு பார்த்திருப்பார் வாத்தியார். அமைதியை புத்தகங்களைத் தேடும் ஜீனியஸ் கணேஷ், உலகில் இருக்கும் அத்தனை கெட்ட வஸ்துவையும் பரிசோதித்துப் பார்க்கத் துடிக்கும் வசந்த். கணேஷ் வசந்த் இடையில் இருக்கும் நட்பு நகர்வுகளை அவ்வளவு  ழகாக ழமாக யல்பாக ர்ப்புடன் ற்சாகத்துடன் ட்டச்சதுடன் ழுத்தில் ற்றி வ்வொருவருக்கும் ர் ஒளடகம் ஒரு நாளைக்கு என்ற கணக்கில் பல கணேஷ் வசந்த் நாவல்களை எழுதி உள்ளார். ஒளடகம் என்றால் மருந்து. சுஜாதாவின் கணேஷ் வசந்த் கதைகள் நிச்சயம் என்னைப் பொறுத்தவரையில் அருமருந்து. எப்பொழுது எல்லாம் மனசோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் உற்சாகம் தரும் மருந்து. (மேலே எழுதி இருக்கும் அந்த வாக்கியம் உயிர் எழுத்துக்களின் தொடர்ச்சியாக முயன்று பார்த்தது, பிழை குறைந்து தான் இருக்கும், இருந்தும் கொஞ்சம் மொக்கை போன்று இருந்தால் மன்னித்து அருளவும்.)


பெரும்பாலான நேரங்களில் கணேசை புத்திசாலியாகவும், சில நேரங்களில் கணேஷே வியக்கும் அளவிற்கு புத்திசாலியாக வசந்தையும் காட்டி இருப்பார். ஒரு இடத்திற்கு சென்றால் நாம் எப்படி எல்லாம் மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்போமோ அப்படி எல்லம் கணேஷ் வசந்தை  செதுக்கி இருப்பார்.  உ.ம் காவல் நிலையங்களில் ராஜேந்திரன் பெயர் உச்சரிக்கப்படுவது. 1970களில் இருந்து கணேஷும் வசந்தும் வாசகர்களுடன் பயணிக்கத் துவங்கிவிட்டனர், காலத்திற்கு ஏற்ப தம்புசெட்டி தெருவில் இருந்த அலுவலகமும் அவர்கள் காரும் மாறியதே தவிர அவர்கள் மாறவே இல்லை அவர்களுக்கு திருமணமும் ஆகவில்லை. இன்றும் ஏதோ ஒரு இடத்தில யாரோ ஒருவருக்கு கவுண்டர் கொடுக்கும் இளைஞனைப் பார்த்தால் வசந்த் நியாபகம் தான் வருகிறது.





சில்வியா என்ற நாவலில் வரும் கீழ்க்கண்ட உரையாடலில் ஒற்றை வார்த்தையில் கணேசையும் வசந்தையும் வேறு படுத்திக் காட்டி இருப்பார் சுஜாதா.

கணேஷ், உங்க நேரத்தை வீணாக்க விரும்பலை. நீங்க ரிசப்ஷன்ல அவளுடைய அழகான பக்கத்தைதான் பார்த்திங்க !

க : ஸ்கூல் பையன் மாதிரி இருந்தாங்க . கூல்!

அவளுடைய மற்றொரு பக்கத்தை நீங்க பார்க்கலை

வ : ஒரு பக்கமே எதேஷ்டம் சார்

அவளுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருக்கு 


அப்படின்னா? என்றான் வசந்த் தேநீரைக் கலக்கிக் கொண்டு.

அப்படியா என்றான் கணேஷ்


அப்படின்னா? என்றான் வசந்த் தேநீரைக் கலக்கிக் கொண்டு. அப்படியா என்றான் கணேஷ். இந்த ஒற்றை வரியை மட்டும் பலமுறை படித்து மனதிற்குள் சுஜாதாவை எண்ணி வியந்து பெருமைப்பட்டு பின் அடுத்த வரிக்கு தாவினேன். இந்த நாவலில் பைபோலர் டிஸ் ஆர்டர் பற்றி பல வருசங்களுக்கு முன்பே எழுதி விட்டார் சுஜாதா, சமீப்த்தில் வெளிவந்த மூணு படத்தில் ஏதோ முதல்முறை ஒரு வியாதி பற்றி குறிபிடுவது போல கூறி இருந்தார்கள். சுஜாதா காலம் கடந்தவர் என்பது நிச்சயம் உண்மையே. 


ஒரு இடத்தில கணேஷ் வசந்தை இப்படி கூறுகிறான் "கலைந்த தலை, அழுக்கு ஜீன்ஸ், கையில் சிகரெட் மனதில் பெண்கள், வேலை என்று வந்துவிட்டால் தீவிரமாக களத்தில் இறங்கும் இந்த இளைஞனை நான் எப்படிக் கண்டுபிடித்தேன்". என்ன ஒரு ரசிப்புத் தன்மை. வசந்த் வசந்த் நாவலில் கதை எழுதிய விதமே அதிஅற்புதமாக இருக்கும், அத்தனை அற்புதமான காட்சி நகர்வுகள் மற்றும் வித்தியாசங்களை புனைந்து இருப்பார். இருவருக்கும் எதாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருக்க வேண்டும், ரிஸ்க் எடுக்க வேண்டும், மரணத்தை தொட வேண்டும், சில கதைகளில் அவர்கள் செயல் படும் விதம் ஒரே மாதிரியானதாய் இருந்தாலும் சுஜாதாவின் எழுத்துகளால் மிக அழகாக அந்த நகர்வுகளை விளக்கி இருப்பார். 





பெரும்பாலான கணேஷ் வசந்த கண்டுபிடித்த குற்றங்களைப் படித்துவிட்டேன், மொத்தம் எத்தனை கணேஷ் வசந்த் புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்ற கணக்கு தெரியவில்லை, தெரிந்தால் விட்டுப் போனதையும் படித்து முடிக்க வசதியாய் இருக்கும். கணேஷ் வசந்த் இடம் பெரும் மொத்தக் கதைகளின் தொகுப்பு உங்களிடம் இருந்தால் கொஞ்சம் தாருங்கள் உங்களுக்கு கோடி நமஸ்காரம். 


பதிவிற்கு சம்மந்தமில்லாத தகவல் : எனது தளத்திற்கு முதலில் பெரிதினும் பெரிதுகேள் என்று தான் பெயர் வைக்க நினைத்தேன், ஆனால் அதை விஜய் டிவி உபயோகித்துக் கொள்ளவே, திடங்கொண்டு போராட ஆரம்பித்து விட்டேன். இதை நான் ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்று எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாருக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன். 


விளம்பரம்



திருமணம் முடிந்த புது மாப்ள மீண்டும் கலக்க ஆரம்பித்து உள்ளார். மின்வெட்டு பற்றிய அவரது புலம்பல்கள், இடி அமீன் பற்றிய தகவல்கள் உங்கள் பார்வைக்காக.






13 comments:

  1. உயிர்மைப் பதிப்பகம் கணேஷ் வசந்த் சீரிஸ் மட்டுமில்லாமல் எல்லா சுஜாதா படைப்புகளையுமே பிரித்து மேய்ந்து புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். ஆனால் விலை ஜாஸ்தி! என்னிடம் கிட்டத் தட்ட எல்லா சுஜாதா புத்தகங்களும் இருக்கின்றன. நாடகங்களும்! ஒன்று திருவிழா வரைக் காத்திருங்கள். அல்லது அந்தப் சென்று பார்க்கலாம்! (என்னிடம் எல்லாப் பதிப்பகங்களின் கேட்லாக்குகளும் கூட வைத்துள்ளேன்!)

    குமரிப் பதிப்பகம் உள்ளிட்ட சில பதிப்பகங்களில் மிகக் குறைந்த விலைகளில் ஒவ்வொரு புத்தகமாகவும் வாங்க முடியும். அந்தக் கால விலையில்!

    இந்த முறை உங்கள் பதிவு மிக அவசரமாக போடப் பட்டுள்ளது போல! நிறைய பிழைகள்!

    எனக்குப் புரிந்தது! நன்றி....நன்றி...நன்றி...! :)))))))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்... தக்க சமயத்தில் காட்டியமைக்கு... ஒரு பிழை இல்லை ஓராயிரம் பிழைகள்... வார்த்தைக் கோர்வை இல்லை... முடிந்த அளவு டிங்கரிங் செய்து விட்டேன்...

      வேக வேகமாக முடிக்க வேண்டும் என்ற அவசரம் இல்லை சார். நடுப் பகலில் ஆரம்பித்து நடுநிசியில் தான் முடித்தேன். என்ன என்னவோ எழுதி விட்டேன், குறைந்த்தது இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மேல் சென்று விட்டது, அதன் பின் தான் உணர்ந்தேன் நான் இழைத்த பிழையை.. சுஜாதா என்றதும் வார்த்தைகள் அருவி போல் கொட்ட ஆரம்பித்து விட்டது....


      பின் அதிலிருந்த கணேஷ் வசந்த் பகுதிகளை மட்டும் தனித்து எடுத்துவிட்டு, பதிவேற்றிவிட்டேன்... நடுநிசியில் அசதி கூடவே பிழைகளும் கூடி விட்டது. மிக்க அன்றி சார்.

      விரைவில் சுஜாதா குறித்த இன்னுமொரு பதிவும் எதிர்பார்க்கலாம்
      //எனக்குப் புரிந்தது! நன்றி....நன்றி...நன்றி...! :))))))))) //


      ஹா ஹா ஹா நன்றி சார்... நன் படித்த புத்தக பட்டியல் தருகிறேன், இல்லாத புத்தகம் பற்றி கூறுங்கள்...

      உயிர்மை தொகுப்பில் இருக்கும் அத்தனை புத்தகங்களும் வாசித்துவிட்டேன்... இல்லை என்றால் கூட கண்டுபிடித்து இருப்பேன்

      Delete
  2. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் சுஜாதா கதைகள் அசிங்கமாக இருக்கும் என்று படிக்கவிடமாட்டார்கள். இப்போதே நிறைய படிக்கிறேன்.

    அப்புறம் நம்மள பத்தி விளமாபரம் கொடுத்ததுக்கு நன்றி தல

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்ற தல.. உங்கள் பதிவு படித்ததும் பிடிதிருந்தது.. சொல்ல மறந்துவிட்டேன்...ம்மொன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள் :-)

      Delete
  3. சுவாரஸ்யமாக ரசித்ததை ரசித்தேன்... உங்களுக்கும் ஸ்ரீராம் அவர்களுக்கும் உள்ள (?) புரிதல் தான் சுவாரஸ்யமான மர்மமான முறையில் உள்ளது... ஹிஹி...

    மொத்த தொகுப்பு நமது அன்பர் பாலகணேஷ் அவர்களிடமும் இருக்கும் என்று நினைக்கிறேன்... இருந்தால் திண்டுக்கல்லுக்கு ஒரு பார்சல்...

    உயிர் எழுத்துக்களின் தொடர்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ஸ்ரீராம் அவர்களின் (குமரிப் பதிப்பகம்) தகவலுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி சார்... கணேஷ் சாரிடம் நாணினும் இது குறித்து பேசிப் பார்க்கவில்லை.. அனால் அவரிடம் பேப்பர் கட்டின் கலைக்சன் நிறையவே உள்ளது.... அதில் நான் தேடும் கதைகள் இருந்தால் ஒரு காபி பார்சல் போட்டு விட வேண்டியது தான்

      Delete
  4. //நான் படித்த அத்தனை சுஜாதா புத்தகங்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, அதனால் புத்தகங்ளில் இருந்து வெளி வருகிறேன்./

    ஒரு பிரபல பதிவர் என்னை போன்ற சாதா பதிவரின் யாவாரத்தில் கை வைப்பது நீதி, நியாயம், நேர்மை, கருமை, எருமை அல்ல.. ஆகவே கை வைக்கப்படும் பட்சத்தில்.. ஏக் மா தோ துக்கடா தான்..

    ReplyDelete
    Replies
    1. எலேய் என்ன நக்கலா... நீ தான் பிரபல பதிவர்... நா உப்புக்கு சப்பாணி பதிவர் ( ஆமா நீ இந்த வார்த்தை கேள்வி பட்ருகியா)...

      ஏக் காவ் மீ ஏக் கிசான் ரகு தாத்தா கிட்ட சொல்லிருவேன்.. பீ கேர் புல்

      Delete
  5. கடவுள் படைத்த அரிய படைப்பு சுஜாதா சுஜாதாவின் அரிய படைப்பு கணேஷ் வசந்த்

    ReplyDelete
  6. ரசித்து எழுதிருக்கீங்க.

    அப்படின்னா -
    அப்படியா

    என்னமா காரக்டர் எஸ்டாப்ளிஷ் செய்றார் தலைவர். அவருக்கு நிகர் அவரே

    ReplyDelete
  7. ஏகப்பட்ட சுஜாதா ரசிகர்களில் நானும் உண்டு.
    மத்யஸ்தர்களை மத்திமர் ஆக்கிவிடுங்கள்:)
    கணேஷ் வசந்த் நன்றாகவே நடை போடுகிறார்கள். மிக் மிக நன்றி.

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வு சீனு. எத்தனை எத்தனை சுவாரஸ்யம் தலைவர் கதைகளில்.... எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதைகள்....

    ReplyDelete
  9. எதையும் ஒரு முறையில் இருந்து சில வரிகள்:

    ஆற்றில் ஒரு பெண் சவம், கணேஷ்வசந்த் உடன் வந்த நிருபமா கேட்கிறாள்
    'அவள் கழுத்தில் இருந்த தழும்பை யாராவது கவனிச்சி இருப்பாங்கன்னு நினைக்கறிங்களா? அவங்க எல்லாரும் எத பார்த்து இருப்பாங்க தெரியுமா?"

    'தெரியும்' என்றான் வசந்த்.

    கணேஷ் 'என்ன?' என்றான்.


    இது போன்ற விசயத்தில் வசந்தை புத்திசாலியாக காட்டியிருப்பார்.

    ReplyDelete