கடந்த சில நாட்களகாவே சிந்தித்துக் கொண்டிருந்த விஷயம் டொமைன் நேம் வாங்கலாமா வேண்டாமா என்று. பலரிடமும் இது குறித்து கேட்டேன், அனைவரும் சொன்ன ஒரே பதில் வாங்குவதால் லாபமும் இல்லை, வாங்காமல் இருப்பதால் நஷ்டமும் இல்லை. அப்படியும் லாபம் என்று பார்த்தால் blogspot.com தடை செய்யப்பட்ட பகுதிகளில் .com திறக்க வாய்ப்புள்ளது. நியாபகம் வைத்துக் கொள்வது கொஞ்சம் எளிது.
கணினி என்னும் போதி (போதை) மரத்தின் முன் தவம் செய்து கொண்டிருந்த பொழுது திடிரென்று தோன்றிய ஞானம் என்னுடைய இரண்டு மாத வெட்டிச் செலவும் (ரெண்டு படம் பார்த்த இருநூற்றி ஐம்பது ரூபா காலி) ஒரு வருட டொமைன் நேமிற்கான பணமும் ஒன்று தான் என்னும் பொழுது வாங்கிவிடலாம் என்று தீர்மானித்து மீண்டும் ஆலோசனை கேட்டகத் துவங்கினேன், வாங்கியும் விட்டேன்.
blogspot இல் இருந்து டொமைனிற்கு மாறுவதால் ஏற்படும் சில பிரச்சனைகளில் ஒன்று நாம் இடும்பதிவுகள் இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகவே பிறரை சென்று சேரும் என்பது, அதைத் தடுக்க செய்ய வேண்டியது seenuguru.blogspot.com உள் சென்று என்னை UNFOLLOW செய்து விட்டு SEENUGURU.COM உள் சென்று FOLLOW செய்வதே. சிறிது சிரமம் தான் என்றாலும் சிரமம் பார்க்காமல் அதை செய்யுங்களேன். ஒருவேளை UNFOLLOW செய்து FOLLOW செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எதற்கும் பதில் வைத்திருக்கும் நமது பிளாக்கர் நண்பனின் இந்தப் பதிவை பாருங்கள்.
பொழுதுபோக்கு, எழுத்துப்பயிற்சி, சந்தித்ததையும் சிந்தித்ததையும் எழுதும் ஒரு ஊடகம் என்பதை எல்லாம் தாண்டி வலைபூ அருமையான ஒரு நட்பு வட்டத்தைக் கொடுத்து உள்ளது.
அந்த நட்பின் நட்பில் உங்கள்
சீனு
பின் குறிப்பு 1 : எனக்கு தெரிந்து நான் எழுதிய மிக சிறிய பதிவு இது தான் என்று நினைக்கிறன்.
பின் குறிப்பு 2 :நான் கேட்ட மொக்கை சந்தேகங்களுக்கு எல்லாம் சலிப்பு தட்டாமல் பதில் அளித்த பிளாக்கர் நண்பனுக்கும் ஹாரிக்கும் திடமான நன்றிகள் ( அவிங்க காதுல ரத்தம் வருதுன்னு வசு சொன்னாரு, அப்படியா ?)
விளம்பரம்
சிறுகதை எழுதுவதைப் போல வாசிக்கவும் பிடிக்கும், சமீபத்தில் நான் ரசித்த சிறுகதை, வித்தியாசமான கதை எத்ரிபாராத முடிவு என்பதை எல்லாம் கடந்து இவை எதுவும் இல்லாமல் அழகாக ஒரு கதையை நகர்த்த முடியும் என்று என்னை எண்ண வைத்த கதை ( இதை எழுதியவர் மனநிலை எப்படி என்று எனக்குத் தெரியாது, என் மனதில் தோன்றியது)
Tweet |
வாழ்த்துகள் சீனு.
ReplyDeleteகண்மணியின் பக்கத்தில் அந்த கனமான கதையைப் படித்தேன். அருமை.
blogspot.com லிருந்து .com - வாழ்த்துகள் சீனு!.
ReplyDeleteவாங்கிடீங்க...வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்ன தப்பு பண்ணுனீங்க..இப்பிடி இம்போசிஷன் எழுதிகிட்டு இருக்கீங்க? :))
Deleteம்மொன்று முறை எழுதினா தானே உங்களுக்கு ஈசியா மனப்பாடம் செய்ய முடியும், அதான்...
Delete:D :D :D
வாழ்த்துக்கள் மச்சி..!
ReplyDeleteஅட... டாட் காம் ஆயாச்சா? குட்! அடுத்தடுத்து வளர்ச்சியான மாற்றங்களைப் பார்க்க சந்தோஷமா இருக்கு சீனு. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து அடிச்சு ஆடுங்க.
ReplyDeleteபாராட்டு விழா நடத்தியே தீரனும்!!
ReplyDeleteஅப்படியா சீனு சொல்லவே இல்ல....ஆனாலும் பாரு fb ல சீனு மேல திடங்கொண்டு பிராண்டுரான்களே ஏன்? வாழ்த்துக்கள் தம்பி....
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
வாழ்த்துகள் சீனு
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா.. தொடர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்! தொடர்கிறேன்!
ReplyDeleteயோவ்...முதல்ல இந்த இன்டலி ஓட்டு பட்டையை எடுய்யா...ஒரு மணி நேரமாகுது உம்ம ப்ளாக் ஓபனாக!
ReplyDeleteஇந்தப் பதிவு எப்போ எழுதப்பட்டது? ஃபேஸ்புக்ல நேத்தே .com பார்த்த ஞாபகம். :P
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன் கதையப் பத்தி பேசறாங்களா? :)
ReplyDeleteஒரே சந்தோஷம் எனக்கு.
ரொம்ப நன்றி :) :)
மாற்றத்திற்கு (முன்னேற்றத்திற்கு) இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இனிய வாழ்த்துகள்
ReplyDelete