17 Dec 2012

கும்கி - கொம்பனையும் மனோகரனையும் மறந்த கதை


மிழ் சினிமா ரசிகன் என்றுமே வித்தியாசமான திரைப்படங்களை விரும்புபவன். ஒரு இயக்குனரிடம் ஏதேனும் ஒன்று பிடித்துபோய் விட்டால் அந்த இயக்குனர் இயக்கும் அடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்புகள் அவனுக்குள் அதிகரித்துவிடும். தமிழனின் விருப்பப் பட்டியலில் இருக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை பத்தையும் தாண்டும். 'மைனா படத்தில் நடிக்க தனக்கொரு வாய்ப்பு கிடைக்கவில்லையேரஜினியின் ஏக்கமும் பாராட்டுக்களும் நிறைந்த கடிதம்வித்தியாசமான கதைகளம்ரசிகனின் விருப்பப் பட்டியலில் தனக்கொரு இடம் பிடித்துக் கொண்டார் பிரபு சாலமன்

யானைகளைப் பிடிக்காதவர்களைப் பார்ப்பது மிக அரிது, சிறு வயதில் அத்தனை பெரிய உருவம் ஆடி ஆடி அசைந்து வரும் அழகைப் பார்த்து பிரம்மிப்பதற்கே தெருவெல்லாம் பெருங்கூட்டம் கூடும். யானைகளும் மலை சார்ந்த இடமும் தான் தனது அடுத்த கதைக்களம் என்று கும்கி பற்றிய எதிர்பார்ப்பை துவக்க விழா அன்றே ஏற்படுத்திவிட்டார். படத்தின் ட்ரைலர் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. தென்காசியின் சத்யம் என்று வர்ணிக்கப்படும் பி எஸ் எஸ் திரை அரங்கில் முதல்நாள் மாலைக் காட்சி அரங்கம் நிறைந்தது. தென்காசியில் அரங்கம் நிறைந்த காட்சியைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, தென்காசி ரசிகர்கள் இன்னும் அதே துடிப்புடன் தான் இருகிறார்கள்.

கும்கி - காட்டு யானைகளை விரட்டுவதற்குப் பயிற்சி பெற்ற யானைகளின் பெயர் கும்கி என்ற வாசகங்களுடன் படம் தொடங்குகிறது. கொம்பன் என்ற வில்லன் யானைக்கும், மாணிக்கம் என்ற ஹீரோ யானைக்கும் இடையில் நடக்கும் யுத்தமும், நகரத்து மனிதர்களுக்கும், இருநூறு வருட பாரம்பரியம் மிக்க மலைவாழ் இனத்தவர்களுக்கும் இடையில் நடைபெறும் பாசப் போராட்டங்களும் கலந்த கலைவை கும்கி. கொம்பன் என்னும் யானையின் அறிமுகம் அத்தனை மிரட்சியாக ஆரம்பிகிறது, மூன்று பெண்களை கொன்றுவிட்டு வந்தவழி செல்கிறான் கொம்பன்.இந்த முதல் காட்சியே நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறதுகொம்பனின் அட்டூழியத்தை அலட்சியமாகக் கையாளும் கையாலாகாத அரசாங்கம், தங்களை காப்பாற்றிக் கொள்ள வழிதேடும் அப்பாவி மலைவாழ் மக்கள், இயல்பாக ஆரம்பிக்கிறது கதை.    


காட்டு விலங்குகளின் அட்டூழியத்தில் இருந்து தப்பிப்பதற்காக புலம்பெயரச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில் அரசாங்க அதிகாரிகளிடம் மலைவாழ் மக்கள் தலைவன் பேசும் ஒற்றை வசனத்தில் அத்தனை ஆதங்கம், அத்தனை உண்மை இருக்கிறது. நெஞ்சில் கடப்பாரையைக் கொண்டு குத்துவது போன்ற வசனம் இது

"காலங்கலாமா நாங்க இங்க தான் இருக்கோம், ஹோட்டல் லாட்ஜ் கட்டிபோட்டு யான வழித்தடத்த அழிச்சிட்டீங்கதுட்டு துட்டுன்னு விளை நிலத்த எல்லாம் கட்டிடமா கட்டி போடறீங்களே ஒரு நாள் ஒன்னும் இல்லாம போகும் பொது நெல்லுக்கு பதிலா கல்லையா திம்பிய

ங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களிடம் இருக்கும் நகைகள் பணத்தைக்கொடுத்து கும்கி யானைக் கொண்டு வர ஏற்பாடு செய்கிறார்கள். கும்கி யானைப் பாகனால் வர முடியாமல் போக, திருவிழா யானையான மனோகரனுடன் காடு வந்து சேர்கிறார்கள் ஹீரோ காமெடியன் மற்றும் அவர்கள் எடுபிடி. ஹீரோ விக்ரம் பிரபு கதைக்கு ஏற்ற நாயகன். அவரின் அடுத்த ரவுண்ட் எப்படி என்றெல்லாம் எனக்குக் கணிக்க தெரியவில்லை. தம்பி ராமையா சில தருணங்களில் ஓவர் ஆக்டிங் செய்வது போல் உள்ளது, ஆனால் பல நேரங்களில் இயல்பாக நம்மை சிரிக்க வைக்கிறார். கவுண்ட்டர் காமெடியில் அசத்துகிறார். ("அவன் இவன்" என்று தப்பாக எழுதிவிட்டேன்") பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் வரும் சிறுவன் இங்கு எடுபிடியாக நடித்துள்ளார் ஆனால் பெயர் தெரியவில்லை, இந்தப் படத்தைப் பொருத்தவரை தம்பி ராமையாவுக்கு அவன் ஒரு ஹெல்பர் அனிமல்

ஜோஸ்யக்காரன் தம்பி ராமையாவைப் பார்த்து "கஷ்டம் நஷ்டம் துக்கம் துன்பம் அவமானம் ...... எல்லாமே அம்பதி ரெண்டு வயசு வரைக்கும் இருக்கும் அதுக்கு அப்புறம் பழகிப் போயிரும்" என்று சொல்லும் காட்சி அருமையான நகைச்சுவை. மலைவாழ் மக்கள், தம்பி ராமையாவை ஹீரோவாகப் பார்க்கும் காட்சிகள் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றன, இவரிடம் உடல்மொழி அவ்வளவாக இல்லை, இருந்தும் முகமொழியில் நம்மை ஆட்கொள்கிறார். ஹீரோவிடம் காதல் பற்றி இவர் செண்டிமெண்டாக பேசும் ஒரு காட்சி மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது படத்தோடு ஒட்டவில்லை.
  
மனோகரன் - திருவிழா யானை காட்டைப் பார்த்ததும் பயந்து இறங்க மறுக்கும் காட்சி கவிதை. யானையை நன்றாகப் பழக்கியுள்ளார்கள். மனோகரனாக நடித்த யானை நிஜத்தில் ஒரு கும்கி யானை, அட் டைம் நாலு காட்டு யானைய ஹான்டில் பண்ணக் கூடிய திறமை வாய்ந்த கும்கி யானை.

பெரிதாக சொல்லிக்  கொள்ளும் படியான பின்னணி இசை இல்லை, பெரும்பாலான காட்சிகளுக்கு ஒரே மாதிரியான இசை, காட்டை காண்பிக்கும் போதெல்லாம் கொம்பன் வருவது போன்று இசை ஏற்படுத்திக் கொல்கிறார். பாடல்கள் அனைத்தும் ஹிட். காட்சி படுத்திய விதம் அருமை, சில பாடல்கள்உடனுக்குடனே வருவது போன்ற உணர்வு. சொய் சொய் பாடலுக்கு தென்காசியின் முன்பகுதி அருமையாக ஆடியது. இப்படி ஒரு ஆட்டம் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது, சென்னையில் ஆட்டம் கொஞ்சம் குறைவு தான். " நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் " அருமையான வரிகளை உடைய பாடல்.     


சுத்தரபாண்டியனில் லக்ஸ்மி மேனனை எனக்குப் பிடிக்கவில்லை, இந்தப் படத்தில் மலை ஜாதி பெண்ணாகவே வாழ்ந்துள்ளார், கொஞ்சம் நடிக்கவும் வருகிறதுஎல்லாமே பொருந்திப் போக, பொருந்தமால் மிக மெதுவாக நகருகிறது திரைக்கதை. இடைவேளை வரும் நேரத்தில் கிளைமாக்ஸ்  வந்திருக்கக் கூடாதா என்று நினைக்கத் தோன்றியது, காட்டு யானை கொம்பனை நாட்டு யானை மனோகரன் எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்ற எதிர்பார்ப்பை, எதிர்பார்க்க வைத்து எதிர்பார்க்க வைத்து வீணடித்து விட்டார்கள், யானையைப் பற்றிய படம், அதற்காகவே பல ஆராய்சிகள் செய்துள்ளேன், டீடைல்டு ஸ்டடி செய்துள்ளேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார் பிரபு  சாலமன், யானையைப் பற்றி அவர் கூறிய விஷயங்கள் அனைத்தும் விக்கிபீடியாவில் தேடினாலே கிடைகிறது சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே கிடைகிறது

யானையைப் பற்றிய படமென்பதால் இன்னும் அதிகம், எதிர்பார்த்து சென்றிருந்தேன், முதலில் இருந்து இறுதி வரை யானையை நடிக்க வைப்பதற்கு  பதிலாக முதலிலும் இறுதியிலும் மட்டும் நடிக்க வைத்திருகிறார்கள், மற்ற நேரங்களில் வீட்டு விலங்காக மாறி ஹீரோவின் தோழனாக வலம் வருகிறது. காதலன் காதலி, கலாச்சாரம், கட்டுகோப்பு இதை எல்லாம் எத்தனையோ தமிழ் சினிமாவில் பார்த்துவிட்டோம் இனியும் பார்க்கப் போகிறோம், கும்கி யானையை தான் எங்கும் பார்க்க முடியாது, கும்கியைப் பார்க்க வந்த இடத்தில் கும்கியின் பாகனைக் காண்பித்து ஏமாற்றிவிடீர்கள்

மிழ்நாட்டுக்கு ஒரு பாலா ஒரு வசந்தபாலன் ஒரு அமீர் போதும் பிரபு சாலமன் சார், மைனால நீங்க மைனாவ கொன்னுடீங்கன்னு தெரிஞ்சதால நா இன்னும் அந்தப் படம் பார்க்கல, இன்னும் எத்தன பேரு தான் இப்படி படம் எடுப்பீங்க, படம் முழுவது இயல்பா கொண்டு போயிட்டு கிளைமாக்ஸ்ல அழ வைப்பீங்க, எம்பதுல பாரதிராஜாவும் பாலசந்தரும் கொடுத்த எதார்தத்த உலகு எங்களுக்கு போதும். மன அமைதி, மன நிம்மதிக்கு தான் தியேட்டர்க்கு வாரோம் அங்கயும் வந்து அழ வச்சா எப்படி, நெகடிவ் கிளைமாக்ஸ் இயக்குனர்கள் வரிசை உங்களுக்கானது இல்லன்னு தோணுது.

கும்கி கொம்பனையும் மனோகரனையும் மறந்த கதை.

  

27 comments:

  1. Agreed தல.....உங்களுடன் வரிக்கு வரி உடன் படுகிறேன்.. நேத்து தான் படம் பார்த்தேன்....என்னோட மனசுல பட்டதை அப்படியே விமர்சனமாக கொண்டு வந்து இருக்கீங்க....
    யானையை பற்றி இன்னும் கொஞ்சம் டீப்பா சொல்லி இருக்கலாமா..வலிந்து திணிக்க பட்ட சோக கிளைமாக்ஸ், அழுத்தம் இல்லாத காதல், முகத்தில் எந்த வித்தியாசமும் காட்டாத ஹீரோ என்று நிறைய குறைகள்... பிரபு அடுத்த படத்தில் விட்டதை பிடித்து விடுவார்.

    ////அவன் இவன் படத்தில் ஆர்யாவுடன் வரும் சிறுவன் இன்பு எடுபிடியாக நடித்துள்ளார் ஆனால் பெயர் தெரியவில்லை,////

    அந்த பையன் பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல வர பையன்....பால் பாண்டி என்ற கதாபாத்திரம்....அவன் இவன் படத்துல நடிச்சது வேற பையன் மாதிரி எனக்கு தோணுது..

    ReplyDelete
    Replies
    1. //அந்த பையன் பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல வர பையன்....பால் பாண்டி என்ற கதாபாத்திரம்....அவன் இவன் படத்துல நடிச்சது வேற பையன் மாதிரி எனக்கு தோணுது..//

      கரெக்ட் தல ... நான் அத மனசுல வச்சிட்டே தப்ப எழுதிட்டேன்... எப்படி மறந்தேன்னு தெரியல விடுங்க யானைக்கும் மட்டும் இல்ல யனைய பத்தி எழுதும் பொது கூட அடி சறுக்க தான் செய்யும்....

      விசுவல் நல்லா இருந்த்தது, இருந்தும் மணி சார் கொடுத்த இராவணன் effect இதுல வரல... நன்றி தல உங்களோட விரிவான பின்னூட்டதிற்கு

      Delete
  2. நல்ல விமர்சனம்.
    பழைய படம் ஒன்றில் நாகேஷ் அடிக்கும் ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது நீங்கள் இங்கு குறிப்பிட்டு இருக்கும் ஜோக் பார்த்து.

    "இன்னும் பதினைந்து வருஷங்களுக்கு கஷ்ட ஜீவனம்தான்" - நாகேஷ்.

    "அப்புறம்" - ஆவலாக மற்றவர்.

    "அப்புறம் அப்படியே இதுவே பழகிடும்" - நாகேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்..
      நாகேஷ் படத்துல இருந்து அந்த வசனம் சுட்டுபுட்டாங்களா... என்ன கொடும ஸ்ரீ ராம் சார் இது

      Delete
  3. "படம் முழுவது இயல்பா கொண்டு போயிட்டு கிளைமாக்ஸ்ல அழ வைப்பீங்க"

    அப்படித்தான் மைனா படம் முடிவுல கொன்னான் . இதனாலதான் நான் கும்கி படத்த நான் theatreல பார்கறதா இல்ல

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உன் ஆதங்கம் புரிகிறது ரூபக்

      Delete
  4. Thuppaki nalla padangala.....nalla padam eduthurupangale...... venumna Prabhu soloman kitta solli yanaiku oru opening song... love scene..... oru sanda scene....... soga pattu.... pothuma...illa innum vera ethum vaika sollalama..........

    ReplyDelete
    Replies
    1. // venumna Prabhu soloman kitta solli yanaiku oru opening song... love scene..... oru sanda scene....... soga pattu.... pothuma...//

      தல நீங்க சொன்ன எல்லாமே அந்தப் படத்துல இருக்கு, அதன் சொன்னேனே - மற்ற நேரங்களில்வீட்டு விலங்காக மாறி ஹீரோவின்தோழனாக வலம் வருகிறது. - என்று.

      Delete
  5. அருமையான விமர்சன்ப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா

      Delete
  6. ஒரு சிறந்த விமரிசகராக உருவாகி விட்டீர்கள்! அருமை!(குற்றால அருவியில குளிச்சீங்களா?.)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குட்டன், ஆமா நா குத்தாலம் போனத உமக்கு ஆறு சொன்னாவோ... பட் குற்றாலம் ல தண்ணி ரொம்ப கம்மி..

      Delete
  7. "காலங்கலாமா நாங்க இங்க தான் இருக்கோம், ஹோட்டல் லாட்ஜ் கட்டிபோட்டு யான வழித்தடத்த அழிச்சிட்டீங்க, துட்டு துட்டுன்னு விளை நிலத்த எல்லாம் கட்டிடமா கட்டி போடறீங்களே ஒரு நாள் ஒன்னும் இல்லாம போகும் பொது நெல்லுக்கு பதிலா கல்லையா திம்பிய" #####

    இதை போல வசனங்களை மேற்கோள் காட்டும்போது மறுபடியும் மனதில் உரைக்கும்....இனி வரும் விமர்சனங்களில் இது போல சமுதாய கருத்துள்ள வசனங்களை குறிப்பிடும்படி மிக தாழ்மையோடு வேண்டிகொள்கிறேன்....

    சந்தோசத்துக்கு மட்டும் சினிமா எடுத்தா பல நிகழ்வுகள் நம்மை உறுத்த போவதில்லை.நம் இயக்குனர்கள் காதல் மீறி வெளியே வந்தாலே பல நல்ல கதைகள் படங்கள் நமக்கு படைக்கப்படும்.

    ஆனா நீ சொன்ன மாதிரி வலிந்து திணிக்கப்படும் நெகட்டிவ் கிளைமேக்ஸ்கள் தேவை இல்லைதான்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துரைக்கு நன்றி அண்ணா... மனதில் தைத்த வசங்களை நிச்சயம் எழுதுகிறேன்

      Delete
  8. வித்தியாசமான அருமையான விமர்சனம்.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  9. //கும்கி - கொம்பனையும் மனோகரனையும் மறந்த கதை //

    கொய்யால அது மாணிக்கம் டா

    ReplyDelete
    Replies
    1. அட ஆமா மச்சி ரொம்ப சரி... நான் கவனிக்கல... ஏதோ ஒரு நியாபகத்துல 'எழுதிட்டேன்... ரைட்டு விடு அப்டியே இருக்கட்டும் அப்பத்தான் திரும்ப அந்த தப்பு நடக்காது

      Delete
  10. யானைக்கும் மட்டும் இல்ல யனைய பத்தி எழுதும் பொது கூட அடி சறுக்க தான் செய்யும்....

    this is seenu style

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி சார்

      Delete
  11. அலகான அலசல் பட் கொஞ்ச பதிவர்கள் கும்கி நல்லா இருக்குது என்னு சொல்லியிருக்காங்களே...
    அது சரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை + ரசனை

    ReplyDelete
    Replies
    1. //அது சரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை + ரசனை//

      நிச்சயம் உண்மை நண்பா ... நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

      Delete
  12. சதீஷ் செல்லத்துரை சொன்னது உண்மை.

    ரொம்ப அற்புதமாக எழுதியிருக்கீங்க. வேறு ஒன்னும் சொல்லத் தெரியல.

    ReplyDelete
  13. கும்கி படம் - 5 ஆஸ்கார் அவர்ட் வாங்கும் அளவுக்கு உள்ளது !!

    1. இசை
    2. ஒளிபதிவு
    3. பட தொகுப்பு
    4.இயக்கம்
    5. ஒலி (சவுண்ட் எபக்ட்ஸ் )

    முடிவு தாங்கள் எதிர் பார்த்த மாதிரி இல்லாத காரணத்தால் படம் பார்த்த சிலர்
    படம் "பரவாயில்லை" என்றே கூறுகீறர்கள்.

    -இது என் கருத்து

    ReplyDelete
  14. # // யானையைப் பற்றிய படமென்பதால் இன்னும் அதிகம், எதிர்பார்த்து சென்றிருந்தேன், முதலில் இருந்து இறுதி வரை யானையை நடிக்க வைப்பதற்கு பதிலாக முதலிலும் இறுதியிலும் மட்டும் நடிக்க வைத்திருகிறார்கள், மற்ற நேரங்களில் வீட்டு விலங்காக மாறி ஹீரோவின் தோழனாக வலம் வருகிறது. காதலன் காதலி, கலாச்சாரம், கட்டுகோப்பு இதை எல்லாம் எத்தனையோ தமிழ் சினிமாவில் பார்த்துவிட்டோம் இனியும் பார்க்கப் போகிறோம், கும்கி யானையை தான் எங்கும் பார்க்க முடியாது, கும்கியைப் பார்க்க வந்த இடத்தில் கும்கியின் பாகனைக் காண்பித்து ஏமாற்றிவிடீர்கள். // I felt too...

    ## //படம் முழுவது இயல்பா கொண்டு போயிட்டு கிளைமாக்ஸ்ல அழ வைப்பீங்க, எம்பதுல பாரதிராஜாவும் பாலசந்தரும் கொடுத்த எதார்தத்த உலகு எங்களுக்கு போதும். மன அமைதி, மன நிம்மதிக்கு தான் தியேட்டர்க்கு வாரோம் அங்கயும் வந்து அழ வச்சா எப்படி, // Exactly correct ....

    ReplyDelete
  15. பாஸ் அந்த யானை பேரு மாணிக்கம் பா...

    ReplyDelete