23 Jan 2013

டாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப்பிதழ்


வெகுளி. உடன் உழைப்பவர்கள் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள், நம்பியவனோ லட்ச ரூபாயை திருடி பழி சுமற்றி பலியாடாக்குகிறான், பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கும் உலை வைக்கிறான். அடுத்த வேலை, அங்கு நிலைமை இதைவிட மோசம். இரவு நேரத்தில் காமம், பகல் நேரத்தில் குரோதம் மற்றும் விரோதம். எல்லாவற்றில் இருந்தும் விலகி சுய தொழிலில் இறங்கும் பொழுது சுயமே தொலையும் அளவிற்கு நஷ்டம். குடும்பம் வெறுத்து ஒதுக்குகிறது, கடன் தலையை மறைக்கச் செய்து தலைமறைவாகச் சொல்கிறது, கிடைத்த பணம் கொண்டு வெளிநாடு சென்றால் எங்கும் மனம் ஒரு நிலையில் இல்லை.

னம் ஒரு நிலைக்கு வரும்பொழுது இழந்தவற்றை பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது, ஒரு புதிய பாதையை அடைய முடிவு செய்து பயணத்தைத் தொடங்குகிறது, தள்ளாடிக் கொண்டிருக்கும் தொழிற்சாலையில் களை பறிக்கும் வேலை, இந்தத் தொழிற்சாலையின் கொலை மிரட்டலில் இருந்து ஆரம்பிகிறது டாலர் நகரத்தில் ஜோதிஜியின் வெற்றிபயணம்.


ம்மைப் பொருத்தவரை திருப்பூர் என்பது நூற்பாலைகள் நடத்தும் ராஜாங்கம், சுருங்கச் சொன்னால் வைக்கிங்கில் இருந்து ஜாக்கி வரை. 

ந்தியாவின் மிக முக்கியமான ஏற்றுமதி நிறுவனத்தின் மற்றுமொரு முகத்தை, தான் கடந்து வந்த பாதையின் மூலம் அழகாகப் படைத்திருக்கிறார் ஜோதிஜி. தன்னுடைய தோல்வி, ஒவ்வொரு தோல்வியிலும் உடன் வரும் தன்னம்பிக்கை என்று ஒவ்வொரு பக்கங்களையும் தன்னம்பிக்கைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்.

4-தமிழ்-மீடியா என்னும் வலை தளத்தில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகள் இன்று டாலர் நகரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் புத்தகத்தை பிரசுரிப்பவர்களும் 4-தமிழ்-மீடியா குழுமமே. 

ஜோதிஜி 

ஜோதிஜி  - கடந்த நான்கு வருடங்களாக வலையுலகில் எழுதி வருகிறார். அறிவியல், அரசியல் ,சமூகம், ஈழம் மற்றும் சாயம் (திருப்பூர்) பற்றி தனது பார்வைகளை எழுதுகளாக்கி வருகிறார், தென் தமிழகத்தின் கிராமத்தில் பிறந்தவர், முதலில் துரத்தித் துரத்தி அடித்து பின்பு அரவணைத்துக் கொண்ட திருப்பூரைப் பற்றி இவர்  பதிவு செய்த கட்டுரைகள் வரும் இருபத்தி ஏழாம் தேதி டாலர் நகரம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.  ஜோதிஜி தொழிற்களம் தளத்தின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.


மீபத்தில் நடைபெற்ற தொழிற்களம் தளத்தின் உறவாடுவோம் சந்திப்பில் தான் முதல் முறை இவரை சந்தித்தேன். உரையாட அதிகமான நேரம் கிடைக்கவில்லை, நலம் விசாரிப்புகளோடு முடிந்து போனது எங்கள் சந்திப்பு, சமீபகாலமாக இவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருவதால் இவருடன் அளவளாவ நேரம் கிடைக்காதது சற்று வருத்தமே. இருந்தும் இனி வரும் காலங்களில் சந்திக்கும் வாய்ப்பு அமையாமலா சென்று விடப் போகிறது. 

புத்தக வெளியீட்டுடன் பதிவர் சந்திப்பும் நடைபெற இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள், வாய்ப்பு கிடைக்கும் பதிவர்கள் நிச்சயம் சென்று வாருங்கள். வழிகாட்ட மற்றும் திருப்பூர் பேருந்து/ரயில் நிலையங்களில் இருந்து புத்தக வெளியீடு நடைபெறும் இடத்திற்கு செல்ல தேவையான வாகன வசதியை நிகழ்காலத்தில் சிவா (97900 36233) ஏற்பாடு செய்து தருவார். 

ஜோதிஜிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வரும் வீடு சுரேஷ் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள்.   
  













ஜோதிஜியின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறை பதம் பார்க்க விரும்பினீர்கள் என்றால், திருப்பூர் தொழிற்சாலைகள் பற்றி புதிய தலைமுறை நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.



ஜோதிஜி உங்கள் டாலர் நகரம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 

க பதிவரின் எழுத்துக்கள் புத்தகம் ஆகிறது வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் தவறாது புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று வாருங்கள். 

டாலர் நகரம் -திருப்பூர் பற்றி நாம் அறியாதா பல தகவல்களைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

டாலர் நகரத்தைப் படிக்கும் ஆவலோடு...

டுத்த வார வலைச்சர ஆசிரியர் என்னும் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்,தேறுவேனா மாட்டேனா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் . 


14 comments:

  1. சீனு...‘டாலர் நகரம்’ வெளியீடு சமயம் பதிவர் சந்திப்பு மட்டுமில்லை... திருப்பூரில் புத்தகக் கண்காட்சியும் நடக்கிறது. இங்கே ஏதாவது வாங்கத் தவறியிருந்தால் அங்கே போய் பிடிச்சுக்கலாம். நூல் வெளியிடும் ஜோதிஜி அவர்களுக்கும், வீடு சுரேஷுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். ‘தேறுவேனா மாட்டேனா’ன்னு என்னா தன்னடக்கமா சொல்லியிருக்க... நீ நல்லாப் பண்ணுவடா தம்பி. என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் உனக்கு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பால கணேஷ்.

      பாருங்க பையன் பாட்டாசு கிளப்புறான். நாலு வருட உழைப்பை எட்டு மாதத்திற்குள் அடைந்த ஒரே நபர்.

      Delete
  2. ஆக, மொத்தத்திலே வரும் 27 ஞாயிறு அன்று சீனு அவர்களை திருப்பூரில் பார்க்க முடியாது என்று தெரிந்து போச்சி... வருவதற்கு என்னை மாதிரி நீங்களும் முயற்சி செய்யுங்க... நன்றி & ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வந்தே ஆகனும் தனபால்

      Delete
  3. நல்ல ஒரு அறிமுகம் சீனு. படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. அடேடே.. அடுத்தச் வார வலைச்சர ஆசிரியரா... வாழ்த்துகள். கலக்குங்க சீனு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஆசிரியர் சீனு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  5. டாலர் நகரத்தைப் படிக்கத்தூண்டும் பதிவு பகிர்வுக்கு நன்றி சீனு.
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் கலக்குங்க பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். ராசா ரொம்ப தெளிவாக கலந்து கட்டி கலக்குறாரு

      Delete
  6. வரும்வார ஆசிரியர் சீனுவுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. டாலர் நகரத்தைப் தொடராக படித்தேன். மிகவும் அருமை. புத்தகத்தில் மேலும் பல விசயங்கள் இருக்கும். வாங்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  8. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

    வலைச்சரத்தில் அடுத்த வாரம் - உங்கள் வாரம்... அசத்துங்க சீனு...

    ReplyDelete
  9. மனமுவந்த வாழ்த்துக்கள் ஜோதிஜி.

    ReplyDelete