கண்ணா லட்டு தின்ன ஆசையா!
மைனஸ்கள்
1. இப்படத்தின் ஹீரோவாக நடித்தவர் சேது மங்காத்தாவில் நடித்த மகத் போல் இருக்கிறார். இனி ஹீரோவாக நடிப்பாரா என்று தெரியாது, வேண்டுமானால் அமெரிக்க மாப்பிளையாக நடிக்க வாய்ப்புள்ளது.
2. சந்தானம் ரியாக்சன்களில் ஓகே அவ்வவ்போது ஓகே ஓகே (ஓகே ஓகே படத்தின் பாதிப்பு அதிகமாய் இருக்கிறது).
3. அதிக வசனங்கள் என்பதால் நினைவில் ஒட்ட மறுப்பது. எப்போது சலிப்பு தட்டுமோ என்று எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதை.
4. எப்போதாவது அழகாகத் தோன்றும் ஹீரோயின். ஹீரோயின் விஷாக்கா சிங் சில சமயம் அழகாகத் தெரிகிறார், பல சமயம் ஹீரோயின் கதாபாத்திரத்தை ஏற்க நம் மனது மறுக்கிறது.
4. எப்போதுமே ஒரே மாதிரி தோன்றும் பவர் ஸ்டார் .
6. பல பாத்திரங்களின் முகத்தில் உடல் பாவனையில் செயற்கைத் தனங்கள் பளபளக்கின்றன.
7. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று சிவாவின் தமிழ்பட கிளைமாக்ஸ் எவ்வளவு மொக்கையோ அதே போன்ற ஒரு மொக்கை.
8. பவர் ஸ்டாருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை.
9. பவர் ஸ்டாருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை.
10. பவர் ஸ்டாருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை.
பிளஸ்கள்
1. பவர் ஸ்டாருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை
2. எப்போதுமே ஒரே மாதிரி தோன்றும் பவர் ஸ்டார், அதுவே அவரின் பலமாகவும் இருந்துவிடுமோ என்பது தமிழ் சினிமா கேள்விகுறி வடிவில் எழுப்பும் மிகப் பெரிய ஆச்சரியக் குறி.
3. அத்தனை மைனஸ்களையும் தூக்கி சாப்பிட்டு ஒற்றை மனிதராக படத்திற்கு பலம் சேர்கிறார் பவர் ஸ்டார். இந்தப் படத்தில் பவர் ஸ்டாருக்குப் பதிலாக வேறு யாரேனும் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தா ல் படத்திற்கு இவ்வளவு பெரிய ஓபனிங் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
4. தமிழ் சினிமாவில் இருந்து இந்திய சினிமா வரை பவர் ஸ்டார் பெற்றிருக்கும் ஒருவித வித்தியாசமான பாப்புலாரிட்டி படத்தின் பலம் அல்லது பாலம்.
5. லோ பட்ஜெட் படம் என்றாலும் சிறப்பான ஒளிபதிவு.
6.கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று சிவாவின் தமிழ்பட கிளைமாக்ஸ் எவ்வளவு மொக்கையோ அதே போன்ற ஒரு மொக்கை. இருந்தும் பவரின் சேட்டைகளால் நிமிர்ந்து நிற்கிறது.
7. அதிகமான கதாபாத்திரங்கள் அளவாய் உபயோகித்து இருகிறார்கள்.
8. பவரின் இயல்பு நிலை விளிம்பு நிலை வாழ்கையை அப்படியே ஆராய்ச்சி செய்து மனபாடம் செய்து, இம்மி பிசகமால் தெள்ளத் தெளிவாக படமாக்கி இருகிறார்கள்.
9. தமன் இசையில் முன்னேறி இருக்கிறார். இருந்தும் பவரின் முன் எல்லாமே தூசு.
10. கண்ணா லட்டு தின்ன ஆசையா பவர் தான் மாஸு.
தியேட்டர் குறிப்புக்கள் :
குரோம்பேட் வெற்றி, பால்கனியில் சவுண்ட் சிஸ்டம் இல்லை, அங்கு செல்வதை தவிருங்கள். மற்றபடி நல்ல திரையரங்கம். மது அருந்தியவர்களை வெளியில் துரத்தி விட்டார்கள். நல்ல பெரிய திரையரங்கு. சின்ன ஸ்க்ரீன்.
மூன்று கோக்கக் கோலா, இரண்டு பாப்கார்ன் விலை 130 ருபாய் என்பது ஆச்சரியப்பட வைத்த விஷயம், இதையே சத்தியமிலோ ஏ ஜி எஸ்சிலோ வாங்கியிருந்தால் முந்நூறு ரூபாயை பதம் பார்த்திருக்கும்.
Tweet |
//பவரின் இயல்பு நிலை விளிம்பு நிலை வாழ்கையை அப்படியே ஆராய்ச்சி செய்து மனபாடம் செய்து, இம்மி பிசகமால் தெள்ளத் தெளிவாக படமாக்கி இருகிறார்கள்.//
ReplyDeleteஅதென்ன சீனு விளிம்பு நிலை வாழ்க்கை...
அப்பறம்,,
பவரோட ஓபனிங் சீன் பத்தி சொல்லல?
சந்தானம் : என்னடா சின்ன பையன் கிட்டே பிரட்சனை?,,,, சீன்
//அதென்ன சீனு விளிம்பு நிலை வாழ்க்கை...// அதாவது விளிம்பு நிலை மக்களுக்காக அவர் அர்ப்பணித்துக்கொண்ட வாழ்க்கை...
Deleteஅவரோட ஓபனிங் சீனுக்கு கிடைத்த வரவேற்பு போல் நான் கடைசியாக எந்திரனில் ரஜினிக்கு பார்த்ததாக ஞாபகம்
/மூன்று கோக்கக் கோலா, இரண்டு பாப்கார்ன்
ReplyDelete//
உங்க ஒருத்தருக்கா ?
இல்ல கூட வந்த அந்த இரண்டு பிகருக்கா ?
//மது அருந்தியவர்களை வெளியில் துரத்தி விட்டார்கள்
ReplyDelete//
அப்புறம் நீங்க எப்படி படம் பார்த்தீங்க ???
//கண்ணா லட்டு தின்ன ஆசையா பவர் தான் மாஸு
ReplyDelete//
அலெக்ஸ் போன்டியன் பாத்தா நாம லூசு ...
மற்றபடி கதை என்று ஒன்றும் படத்தில் இல்லையாக்கும்...!
ReplyDelete+ and - லட்டுக்கள் பத்து! :)
ReplyDeleteஹா ஹா.. இனி பவர் படங்களுக்கு நாம் தனியாக விமர்சனம் எழுதாமல், லட்டு திங்க ஆசையா விமர்சனத்தையே காப்பி பேஸ்ட் செய்து விடலாம்.. அந்த அளவுக்கு இதில் தலைவர் பெர்ஃபாமென்ஸ் காட்டியுள்ளார்.. நடிப்பு என்று பார்த்தால் ஸ்கூல் டிராமாவில் பிள்ளைகள் நடிப்பது போன்று தான் செய்திருக்கிறார்.. ஆனால் அந்த வெள்ளை நிறமும், பிள்ளை மனமும் அவரின் மதிப்பை எங்கோ கொண்டு சென்றுவிட்டன..
ReplyDeleteAda Paavi, Power star kitta different acting ellam ethir partha unnai than uthaikkanum. Thalaivan vanthale visil parakkuthu. athu pothatha? Humour padangalil kathai yethiparkave koodathu. climax eppadi iruntha enna... athaiyum comedy-nnu ninaichu sirichitu vanghtuda vendiyathu than. Makkal sirikiranga illaiya.... That's enough.
ReplyDeleteபவர் படம் கூடப் பார்ப்பீங்களா? :)
ReplyDelete