தனுஷ்கோடி பற்றிய முந்தைய பகுதிகள்
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின் ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார். நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும். அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒரு விஷயம் சொன்னான்.
தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் பொழுது டெம்போவின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை நழுவ விடமாலும் அதே நேரத்தில் வண்டியின் அத்தனை குலுங்கல்களுக்கு ஈடுகொடுத்தும் கையில் பிடித்திருந்த காமிராவை நழுவ விடாமலும் நான் எடுத்த தனுஷ்கோடி செல்லும் பயண அனுபவத்தை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம். மூன்று நிமிட வீடியோவை அழகாக வெட்டி ஒட்டி கொடுத்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.
தனுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு இது போன்ற டெம்போக்களும் வேன்களும் மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய் வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது. தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார், வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை, பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால் ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால் கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொரு கொடுமையான விஷயம்.
தனுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது, எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப் போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும் ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மை இறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின் மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமே நம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.
மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. "ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
மூன்று மாதத்திற்கு முன்பு பார்த்த தனுஷ்கோடிக்கும் சமீபத்தில் பார்த்த தனுஷ்கோடிக்கும் பூகோள சுழற்சியின் காரணத்தால் நிறையவே மாற்றங்கள் இருந்தன. தனுஷ்கோடி மேல் ஈர்ப்பு வருவதற்கு இது போன்ற மாற்றங்களும் மிக முக்கியமான காரணிகள். முதன் முறை தனுஷ்கோடி வந்தபொழுது ராமேஸ்வரத்தை சேர்ந்த எனது நண்பன் சுந்தர் ராமனும் உடன் வந்திருந்தான். சுந்தர் தனுஷ்கோடி பற்றி கூறிய முக்கயமான விசயங்களைக் கூற வேண்டி இருப்பதால் அவனது வருகையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில், ராவண வதத்திற்குப் பின் ராமர் விபீடணனுக்கு இங்கு வைத்து தான் பட்டாபிசேகம் செய்து வைத்துள்ளார். நான் கூற விளைவது அதுவல்ல. கோதண்டராமர் கோவிலைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடற்கரை மணல் நிரம்பி இருக்கும். அந்த கோவிலில் தரிசனம் முடித்துத் திரும்பும் பொழுது சுந்தர் விசித்திரமாக ஒரு விஷயம் சொன்னான்.
"இப்ப இந்த இடம் எவ்ளோ காஞ்சு போய் இருக்கு, இன்னும் கொஞ்ச மாசத்துல இந்த இடம் முழுசும் கடல் உள்ள வந்தரும், இப்பவாது கோவிலுக்கு போறதுக்கு ரோடு போட்ருகாங்க, சின்ன வயசுல கடல் தண்ணி இருக்குற சமயம் கோவிலுக்கு போகவே முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் போவோம்".
இந்த வார்த்தைகளை சத்தியமாக நாங்கள் யாரும் நம்பி விடவில்லை. இந்த முறை தனுஸ்கோடி சென்றிருக்கா விட்டால் நிச்சயமாக அவன் வார்த்தைகளை நம்பியும் இருக்க மாட்டேன், சுந்தர் ஏதோ கதை விடுவதாகத் தான் நினைத்திருப்பேன்.
மூன்று மாதத்திற்கு முன் சென்ற பொழுது தனுஷ்கோடி செல்லும் வழியெல்லாம் மணல் நிரம்பிய அழகான கடற்கரையைத் தான் காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் "கன்னத்தில் முத்தமிட்டால்" பாடலில் தனுஷ்கோடி கடற்கரை எவ்வளவு அழகாகக் காட்டியிருப்பர்களோ அத்துணை அழகாக இருந்தது. ஆனால் இம்முறை செல்லும் பொழுதோ தலைகீழ் மாற்றம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர் மட்டுமே காட்சியளித்தது. கடல்நீரைத் தொடர்ந்து கடல் காட்சியளித்தது. நான் அண்ணன் தம்பி மூவருமே இம்முறை அந்தக் காட்சியை வித்தியாசமாய்ப் பார்த்தோம், காரணம் எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் முதன்முறை அவ்வழியே பயணிக்கிறார்கள். சமீபத்தில் மழை பெய்திருந்ததால் அந்த மழை நீர் தான் தேங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தோம், பின்பு தான் தெரிந்து கொண்டோம், அது மழை நீர் இல்லை கடல் நீர் என்று. இதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை சற்று தாமதித்துப் பாப்போம். அதற்கு முன் வேறு சில காட்சிகளைப் பார்த்துவிடுவோம்.
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது. சீரும் இந்தியைப் பெருங்கடல் ஆண்கடலாகவும், பொறுமையாய் அலையற்றதாய் இருக்கும் வங்கக் கடலை பெண் கடலாகவும் குறிப்பிடுகிறார்கள்.
ராமேஸ்வரத்திற்கு நாங்கள் காரில் சென்றிருந்ததால் அதே காரிலேயே தனுஷ்கோடி முழுவதையும் சுற்றிப் பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் தான் தனுஷ்கோடி செல்லும் வழியின் பாதி தூரம் வரை சென்றோம். மூன்று மாதத்திற்கு முன்பு இருந்த வழிகள் இன்று இல்லை, அவை கடல் நீருக்குள் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அந்த வழியாக சென்றால் மட்டுமே இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு செல்ல முடியும். சென்ற முறை தனுஷ்கோடியின் அழிவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கவில்லை . இம்முறை அவற்றை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் களம் இறங்கியிருந்தோம். தனுஷ்கோடி செல்லும் பாதை முழுவதையும் கடல்நீர் தன் வசம் வைத்திருந்ததால் நாங்கள் சென்ற கார் அவ்வழி செல்ல முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அந்த இடத்தில இருந்து தனுஷ்கோடி வரை செல்வதற்கு ஜீப் வேன் அல்லது டெம்போ வசதி உண்டு. வேன் மற்றும் டெம்போவில் நபருக்கு நூறு ருபாய் கட்டணம். அதிக கட்டணம் வசூலித்தால்புகார் அளிப்பதற்கு என்று தொடர்பு எண்ணும் கொடுத்து இருகிறார்கள். குறைந்தது இருபது நபர் சேர்ந்தால் மட்டுமே வண்டியை நகற்றுகிறார்கள், இருபதிற்கும் மேல் ஆட்கள் சேர்ந்தால் சந்தோசத்துடன் வண்டியை சீறிக் கொண்டு கிளப்புகிறார்கள். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து தனுஷ்கோடி செல்வதற்கு முதலில் எங்கள் குடும்பம் உடன்படவில்லை.சற்று யோசிக்கத தொடங்கியது. சிறிதும் யோசிக்கக் கூடாது இவ்வளவு தூரம் வந்துவிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கமால் போவதா என்று நான் கொடி பிடிக்கவே, மற்றுமொரு குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு கிளம்பியது எங்கள் டெம்போ.
டெம்போ நிரம்பி வழிய, சாகசங்களை விரும்பும் என் போன்ற ஐந்து பேர் சர்கஸில் கயிற்றைப் பிடித்துத் தொங்குவது போல டெம்போவில் பேக்போர்ட் (பூட்போர்ட்) அடிக்கத் தொடங்கினோம். கரணம் தப்பினால் மரணம் இல்லை குட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்ற மிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு. இருந்தும் நிலமும் நீரும் சங்கமிக்கும் இடம் வழியே டெம்போவானது அம்பாரி போல் ஆடி ஆடி செல்ல ஆரம்பித்த அதே நிமிடம் சுவாரசியமான சற்றே திகில் நிறைந்த எங்களது தனுஷ்கோடி பயணமும் ஆரம்பமாகியது.
கடற்கரை மணல் சூழ்ந்த பகுதிகள் அனைத்தும் கடல்நீரால் சூழப்பட்டு இருந்தது ஆச்சரியம் என்றால், சென்ற முறை ஆர்பரித்துக் கொண்டிருந்த இந்தியப் பெருங்கடலோ இம்முறை குறைவான அலைகளுடன் அமைதி காத்துக் கொண்டிருந்தது. டெம்போவின் நடத்துனரிடம்(!) இருந்து என் புலன் விசாரணை தொடங்கியது.
இந்தியப் பெருங்கடலில் காற்றடிக்கும் ஆறு மாத காலமும் இந்தியப் பெருங்கடலானது ஆக்ரோசமாகவும், வங்காளவிரிகுடா அமைதியானதாகவும் இருக்கும், வங்காள விரிகுடாவில் காற்றடிக்கும் பொழுது அகன்ற நீளமான அந்தக் கடற்கரை முழுவதுமே கடல் நீர் கொண்டு நிரப்பட்டு இருக்கும். இந்தக் காலங்களில் வங்காள விரிகுடாவிலும் அலையின் வேகம் சற்றே அதிகமாய் இருக்கும். மேலும் கடற்கரை நீரால் சூழப்பட்டு இருக்கும் இது போன்ற காலங்களில், இரு கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. (முதல்முறை சென்ற பொழுது இருகடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்ற பாக்கியவான்கள் ஆனோம் என்பது குறிப்பிடத்தக்கது).
மூன்று கி.மீ பயணம் தான், ஆனால் அதைக் கடக்கவே கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகியது. புதிதாக பரவி இருந்த கடல் நீர், வழித்தடம் அனைத்தையும் இல்லமால் செய்திருந்தது. இருந்தும் பல வருடங்களாக வண்டி ஓட்டும் ஜாம்பவான்கள் என்பதால் தங்களுக்கான பாதையை லாவகமாக ஏற்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். மணலுக்குள் புதைந்து உருளும் சக்கரங்கள் சில சமயங்களில் எப்போது வேண்டுமானாலும் நம்மை கவிழ்த்தி விடலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டே இருந்தன. நம் வாகனம் செல்லும் தடத்தின் எதிரில் ஏதேனும் வாகனம் வந்தால் டிரைவரின் நிலைமை கொஞ்சம் தான். கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியை அரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை போல் ஸ்டியரிங்கை சுற்றி சுற்றி வளைத்து தனக்கான புதிய தடத்தைப் பதித்து முன்னேறிச் செல்ல வேண்டும். உள்ளிருக்கும் நமக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றாலும் வண்டி ஓட்டும் மனிதர்களுக்கு அது தான் வாழ்க்கை.
பெரும்பாலான நேரங்களில் டெம்போவின் ஒரு பகுதி சக்கரங்கள் நீருக்குள் அமிழ்ந்து போன மணலுக்குள் தான் தான் உருளுகின்றன, எப்போது வேண்டுமானுலும் கவிழ்ந்து விடலாம் என்கிற அச்சத்திலேயே சக்கரங்கள் நம்மை தனுஷ்கோடி வரை கொண்டு செல்கின்றன. இந்த டெம்போ பயணம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் திரும்பும் பொழுது டெம்போவின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை நழுவ விடமாலும் அதே நேரத்தில் வண்டியின் அத்தனை குலுங்கல்களுக்கு ஈடுகொடுத்தும் கையில் பிடித்திருந்த காமிராவை நழுவ விடாமலும் நான் எடுத்த தனுஷ்கோடி செல்லும் பயண அனுபவத்தை கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம். மூன்று நிமிட வீடியோவை அழகாக வெட்டி ஒட்டி கொடுத்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எனது நன்றிகள்.
தனுஷ்கோடி பூர்வகுடி மக்களுக்கு இது போன்ற டெம்போக்களும் வேன்களும் மட்டுமே போக்குவரத்து காரணிகள், இவர்களிடம் பத்திலிருந்து இருபது ரூபாய் வரை வரை பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராத காலங்களில் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாது. தனுஷ்கோடி நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் ஒன்றும் உள்ளது, தனுஷ்கோடி வாழ் மீனவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிகிறார்கள். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தினமும் வந்து செல்கிறார், வாகனங்கள் இல்லா நாட்களில் நடந்தே வந்து செல்கிறார். அவசர சிகிச்சை, பிரசவ காலங்கள் என்று எதுவாக இருந்தாலும் விடிந்ததும் தான் இவர்களால் ராமேஸ்வரம் செல்ல முடியும். திடிரென்று புயல் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டால் கூட நடந்து தான் ராமேஸ்வரம் வரவேண்டி இருக்கும் என்பது மற்றுமொரு கொடுமையான விஷயம்.
தனுஷ்கோடியின் ஒரு இடிந்த கட்டிட தரைமட்டதின் மேல் டெம்போ நின்றது, எங்களுக்கு முன் சென்ற வாகனங்களும் இனி வரப் போகும் வாகனங்களும் இங்கு தான் நிற்கும். ஒரு காலத்தில் தனுஷ்கோடி வரும் ரயில்கள் நிற்கும் அதே இடத்தில இன்று டெம்போக்கள் வந்து நம்மை இறக்குகின்றன, புயலால் கொண்டு செல்லப்பட்ட ரயில்நிலையத்தின் மிச்சம் தான் தற்போது இந்த டெம்போக்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடம். நகரத்தின் மீது நம் காலடி படும் முதல் இடமான இந்த ரயில் நிலையமே நம்முள் இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வை ஏற்படுத்துகிறது.
ரயில் நிலையத்தின் மிக அருகில் புயலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி எங்களிடம் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தக் காலத்திலோ தினமணி பேப்பர் தனுஷ்கோடி பற்றி அச்சிட்ட செய்திகளை இன்றும் மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். தனுஷ்கோடியின் பழைய கதைகளைக் கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் பதில் கூறுகிறார், தன்னிடம் இருக்கும் நாளிதழையும் காண்பிகிறார். முனீஸ்வரன் கோவிலுக்கு பின்புறமாக அவர் கைகாட்டிய திசையில் துறைமுகம் இருந்ததாகக் கூறுகிறார், அவரது தாத்தா அங்கு வேலை செய்ததை அத்தனை பெருமையாகக் குறிபிடுகிறார். புயல் அடித்த தினத்தன்று பெரும்பாலான அவரது சொந்தங்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பதையும் குறிப்பிட அவர் மறக்கவில்லை.
மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது. இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன. "ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர். சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம். சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள். மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர். வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
முதல்முறையாக ஒரு தொடரை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஊக்கம் அளித்த அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Tweet |
வணக்கம் நண்பரே.நான் தனுஷ்கோடி போனது கிடையாது.ஆனால் அந்த ஊரை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இவளவு விசயம் நடந்து இருப்பது தெரியாது.உங்கள் பதிவின் மூலம் என்னால் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது.கண்டிப்பாக பார்க்க போறேன் அந்த ஊரை.
ReplyDelete
ReplyDeleteமின்சாரம் இல்லாத நிலையிலும், இன்னும் பல கஷ்டங்கள் இருந்தும் அங்கேயே வாழ்ந்து வரும் மக்களை என்னவென்று பாராட்ட!
வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பற்றி விளக்கமாகவும் அழகாகவும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனு.
நான் ஒரு வாரம் முன்னாடி தான் போயிட்டு வந்தேன். அந்த மனல்ல ஜீப்பில் போனது ரொம்ப திகிலா இருந்தது. அங்கயே வாழுகின்ற மக்களை பார்க்கும் போது எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களொ என்று தோன்றுகிறது. ஒரு தடவை போயிட்டு வந்ததுக்கே இவ்வளவு களைப்பாக இருந்தது அந்த ஓட்டுநர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது
ReplyDeleteநான் ஒரு வாரம் முன்னாடி தான் போயிட்டு வந்தேன். அந்த மனல்ல ஜீப்பில் போனது ரொம்ப திகிலா இருந்தது. அங்கயே வாழுகின்ற மக்களை பார்க்கும் போது எப்படித்தான் இங்கே வாழ்கிறார்களொ என்று தோன்றுகிறது. ஒரு தடவை போயிட்டு வந்ததுக்கே இவ்வளவு களைப்பாக இருந்தது அந்த ஓட்டுநர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியது
ReplyDeleteGood work friend! Keep it up!
ReplyDeleteபோன மாதம் சென்றிருந்தேன்... நாங்க சும்மா கடல்ல ஆட்டம் போட்டதுடன் சரி... (என்னவர் கூப்டும் மகனுடனும் , உறவினர்குழந்தைகளுடன் கடல்நீரிலேயே 3 மணீ நேரம் கழித்தோம். அதனால் எங்கும் போகமுடியவில்லை...) 3 மணி நேர கடல்குளீயலுக்கு பின் பசி எடுக்க உடனே மீண்டும் உரப்புளி வந்தாகிடுச்சு... நீங்க சொன்ன திகில் அனுபவம் மிஸ் பண்ணிட்டேனோன்னு தோணுது!... தனுஷ்கோடி செல்லும் வழியில் ரோட்டின் இரு புறங்களிலும் சுவர் தடுப்பை மீறி வந்த மணல், ஆள் இல்லாத சாலை, இரு ஓரங்களிலும் இருக்கும் சவுக்கு மரக்காடு இவை அனைத்தும் புதுவித ஆச்சர்ய உணர்வை கொடுக்கவே செய்தது... மெதுமெதுவாக காலை தொட்டுச்செல்லும் அலை திடீரென பெரிய அலையாக உடலை அடித்து கீழே தள்ளிவிடும் போது , இன்னும் இந்த கடல் பலி வாங்க காத்திருக்கோ என்ற எண்ணத்தை வர வச்சது :-) :-) :-) வித்தியாசமான அனுபவம் தான்...
ReplyDeleteசூப்பரா தொடரை கொண்டு சென்றீங்க... வாழ்த்துக்கள் சீனு
தனுஷ்கோடியை உங்க கூட சேர்ந்து சுத்தி பார்த்த அனுபவம் கிடைச்சது ...இன்னும் அங்க வாழுற 200 குடும்பங்களை நினைச்சா வருத்தமா இருக்கு .
ReplyDeleteமேலும் சில போடோஸ் பார்க்கும் போது இந்த ஊர் நிறைய படத்துல/சீரியல் ல நடிச்ச மாதிரி தெரியுது. சத்திரியன் படத்துல வர கிளைமாக்ஸ் காட்சி, அப்புறம் ராதிகா சீரியல்ன்னு நினைக்கிறன்.
நல்ல தொடர் சீனு...!!!
அருமையான பதிவு. நான் அங்கு சென்று 10 வருடங்கள் ஆகின்றன. அப்போது இன்னும் நிறைய மணற்பரப்பைப் பார்த்த நினைவு.
ReplyDeleteஇயற்கையின் கொள்கையை யாரால் மாற்றமுடியும்:(
உங்கள் வீடியோ மிக நன்றாக இருந்தது.
தங்கள் பதிவு , என்னுள் தனுஷ்கோடி செல்லவேண்டிய ஆர்வத்தை தூண்டியுள்ளது !
ReplyDeleteநல்ல தொடரை என்ஜாய் பண்ணி படித்தேன் சீனு ...
ReplyDeleteமிச்சமிருக்கும் எஞ்சிய குடும்பங்களை நினைத்தால் பெருமையாகவும் , கவலையாகவும் உள்ளது சீனு ..
ஒரு முறை கண்டிப்பாக சென்று வரவேண்டும் ...
படங்கள் அருமை!
ReplyDeleteசீனு, நீங்கள் எடுத்ததா?
##கரணம் தப்பினால் மரணம் இல்லைகுட்டிக்கரணம் மட்டுமே அடிக்க வேண்டியிருக்கும் அதுவும் பட்டு போன்றமிருதுவனா மணலில் என்பதால் அடிபடும் வாய்ப்பு குறைவு.##
ReplyDelete##கிரைண்டரில் புதிதாக போட்ட அரிசியைஅரைப்பதற்கு கஷ்டப்படும் ஆட்டுக்கல்லை
போல் ## - * ரெம்ப ரசிச்சேன் .... அழகு ...! *
** சீனு முதல்ல உங்களுக்கு ஒரு பூச்செண்டு ....
சந்தோசம் , வலி , திகில் , என எல்லா உணர்வுகளையும்; ஆச்சர்யம், அறிவியல் என விசயங்களையும் எழுத்தாக்கி தொடர ரெம்ப சுவராஸ்யமா கொண்டுபோயிருக்கீங்க ....வாழ்த்துக்கள் நண்பா .. !
மிக நேர்த்தியான அழகான எழுத்து நடை ....சபாஷ் ...!
இதைப்படிக்கும்போதே ஆர்வம்மை உள்ளது.நானும் சென்றுவர முயற்சிக்கிறேன்.தகவலுக்கு நன்றி
ReplyDeleteபோன வருடம் தனுஷ்கோடி சென்று இருந்தோம்.அங்கிருக்கும் மக்களில் சிலர் தங்கள் குழந்தைகளை ஹாஸ்ட்டலில் சேர்த்து படிக்க வைப்பதாக அங்கிருந்த ஒருவர் சொன்னார்.
ReplyDelete12-5-2013 sunday naan en manaivi 8 vayadu peethi danush kodi sendru vandom miga thril anubavam aan kadal pen kadal sangamam miga arumai angu vaazum makkalai paridabathudan paarthom
ReplyDeleteArumai.....
ReplyDeleteபாராட்டுக்கள் சீனு. தனுஷ்கோடி பற்றிய சிறுஅளவான தகவல்களை முதன்முதலாக தெரிந்துக்கொண்டேன்.
ReplyDeleteநோமியில் இதன் கடைசி பகுதிக்காக ஆவலுடன் காத்திருந்து இன்று எப்படியோ இங்கே படித்து விட்டேன் :)
ReplyDeleteதொடரை தொய்வில்லாமல் வெகு அருமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
நோமியில் இதன் கடைசி பகுதிக்காக ஆவலுடன் காத்திருந்து இன்று எப்படியோ இங்கே படித்து விட்டேன் :)
ReplyDeleteதொடரை தொய்வில்லாமல் வெகு அருமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
I'll never forget Dhanuskodi. My cousin brother died there in September 2012 when he went with his friends. He was in his final year Comp. Eng. I visited India that time and went to Rameshwaram hospital to pick up his body. That place looks very dangerous though.
ReplyDeleteநாங்களும் தனுஷ்கோடிக்குச் சென்ற நேரம் அமாவசை -கிரஹணமும் சேர்ந்தநாள்..
ReplyDeleteஅமானுஷ்யமான பயணம் ...
ஆர்ப்பரிக்கும் விநோதமான கடலலைகளின் ஓசை மறக்கமுடியாதது..!
அருமையான பதிவு.... ore fileah vendum... print pottu en libraryil vaika... mail pannungal sagothatare... plss. My mail id: mipeswara@gmail.com
ReplyDeleteContact 8870754213
சொல்ல வார்த்தை இல்லை......................
ReplyDelete